தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, February 25, 2007

ஒரு வருசம் ஓடி போச்சி!!!

இந்தியாவை விட்டு வந்து இன்னையோட சரியா ஒரு வருஷமாகுதுங்க...

ஊர்ல இருந்து வரும் போது மூணு மாசத்துல வந்துடுவன்னு அம்மாட்டயும், ஆறு மாசத்துல வந்துடுவேன்னு அக்காட்டயும், ஒரு வருஷத்துல வந்துடுவேன்னு அப்பாட்டயும் சொல்லிட்டு வந்தேன். கடைசியா ஒருத்தவங்களை மட்டும் ஏமாத்தலனு ஆயிடுச்சி.

அப்பவெல்லாம் டீவி தான் நம்ம பொழுது போக்கே... இங்க வந்து ஒரு வருசமா தமிழ் சேனலே பார்க்கல...

நான் எங்க விட்டு வந்தேனு சொல்றேன். இப்ப எப்படி இருக்குனு தெரிஞ்சவங்க சொல்லுங்க...

சன் மியூசிக்ல காலைல எழுந்தவுடனே பார்த்தா நம்ம ஹேமா சிங்கா, மகாலட்சுமி ரெண்டு பேரும் அடுத்து அடுத்து வருவாங்க... அப்பறம் நம்ம ஆனந்த கண்ணன், பிரஜன் ராத்திரி வருவாங்க... (இப்ப இதே கோஷ்டியெல்லாம் இருக்கா இல்லை வேற ஆளுங்க வந்துட்டாங்களா?)
எல்லாருமே பொதுவா மொக்கையத்தான் போடுவாங்க. (பிரஜன் மட்டும் கொஞ்சம் நல்லா பேசுவாரு)

அப்பறம் லொள்ளு சபா தான் நம்ம ஃபேவரைட் நிகழ்ச்சி. அப்பதான் சந்தானத்துக்கு பதிலா ஜீவா வர ஆரம்பிச்சாரு. சந்தானம் அளவுக்கு அவரால பண்ண முடியல. இப்ப எப்படி இருக்கு? இன்னும் மனோகர் (கைய ஆட்டி ஆட்டி பேசுவாரே) கலக்கிட்டு தான் இருக்காரா?

கடவுள் பாதி மிருகம் பாதி இன்னும் இருக்கா? (நண்டு, சிண்டு)

கலக்கப் போவது யாருனு புதுசா ஒரு ப்ரோக்ராம் ஆரம்பிச்சாங்க. நம்ம க்ரிக்கெட் ப்ளையர் ரமேஷ் கூட அதுல இருந்தாரு. அவருக்கு அதுல என்ன ரோல்னே புரியல... அது என்னாச்சி?

மதன்'ஸ் திரைப்பார்வைல மதுர மாதிரி குப்பை படத்தையும் ஏதாவது ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாரு மதன். ஒரு வேளை குப்பைல இருந்து கரெண்ட் எடுக்கலாம்னு முயற்சியானு தெரியல. இன்னும் அதையே செய்துட்டு இருக்காரா?

பெப்ஸி உமா இன்னும் அதே மாதிரி டயலாக் பேசிட்டு தான் இருக்காங்களா? (அதாங்க. ரொம்ப நாள் முயற்சி செஞ்சி உங்களுக்கு லைன் கிடைக்காம போயிருக்கலாம். ஆனா தொடர்ந்து முயற்சி செஞ்சா ஒரு நாள் கண்டிப்பா லைன் கிடைக்கும். அதனால தொடந்து முயற்சி செய்ங்க - அப்படி ஒரே அட்வைஸா இருக்கும்).

அதே மாதிரி லைன் கிடைச்ச உடனே மக்கள் எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு தான் பேசிட்டு இருக்காங்களா?

ரத்னா வழக்கம் போல கதை முழுசா திரை விமர்சனத்துல சொல்லிட்டு க்ளைமாக்ஸ் மட்டும் வெள்ளிதிரைல காண்கனு சொல்றாங்களா?

அப்பறம் நம்ம சுரேஷ் கால் மேல கால் போட்டுக்கிட்டு வீராசாமி வீரம் குறைவில்லைனு சம்பந்தமே இல்லாம எதையாவது சொல்லிட்டு இருக்காரா?

அஞ்சு பொண்ணுங்க கூட்டமா சேர்ந்து அழுவாங்களே ஒரு நாடகம். போஸ் மாமாக்கூட இருப்பாரே. அது முடிஞ்சிடுச்சா?

அபி அழுவறத நிறுத்தினாளா? அப்பா யாருனு அவுங்க கண்டுபிடிச்சிட்டாங்களா? (அதுக்குள்ள கண்டு பிடிச்சிருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்)

சுரேஷ் BEனு ஒருத்தர் நாடகத்துல நடிக்கறாரே.. இப்ப அவர் சுரேஷ் ME ஆயிட்டாரா?

குஷ்பு இன்னும் டிசைன் டிசைனா ஜாக்கெட் போட்டுக்கிட்டு ஜாக்பாட் நடத்திட்டு இருக்காங்களா? (அதுக்கு ஜாக்பாட்னு பேர் வெச்சதுக்கு பதிலா ஜாக்கெட்னு பேரு வெச்சிருக்கலாம்)

எல்லா பண்டிகைக்கும் விஜய் பேட்டி சன் டீவில வருதா???

46 comments:

Anonymous said...

ஆகா இத்தனை நிகழ்ச்சி பார்த்திங்களா? மன்னிக்கனும் உங்க கேள்வி எதுக்குமே பதில் தெரியல..நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை..

Meenapriya said...

எதுவுமே இன்னும் மாறல... கவலபடாம இன்னும் ஒரு 5 வருஷம் கழிச்சி வாங்க அப்போ தான் continuity சரியா இருக்கும்...

வெட்டிப்பயல் said...

நாடகமெல்லாம் வீட்டுக்கு போகும் போது எப்பவாது அம்மாக்கூட சண்டைல தோத்து போய் பார்த்தது :)

லொள்ளு சபா, நண்டு சிண்டு எல்லாம் நமக்கு பிடிச்சி பார்த்தது :-)

Subbiah Veerappan said...

ஒரு வருடமா டி.வி பார்க்கிறதில்லையா?

கொடுத்துவச்ச ஆளுங்க நீங்க!!!

சென்ற ஆண்டு சிறந்த தமிழ் இளைஞர் விருது உங்களுக்குத்தான்!

Yogi said...

ஆன்சைட்ல பொழுது போக்குவீங்கன்னு பார்த்தா, ஓவரா வேலை பார்க்குறிங்க போல.

இப்போ பிரஜன் இல்ல. மத்த எல்லாருமே ஒரே மாதிரி இருக்கிறதுனால யார் யாருன்னு அடையாளம் தெரியல.

லொள்ளு சபா இடையில நின்னு போயி இப்போ திரும்ப ஆரம்பிச்சுருக்காங்க.. ஜீவா தான் ஹீரோ.
மனோகரும் இருக்கார்.

நண்டு, சிண்டு இப்போ இல்ல.

கலக்கப் போவது யாரு கலக்கி எடுத்து அதுக்கப்புறம் பார்ட் 2,சேம்பியன்ஸ் னு போய்ட்டுருக்கு.இப்போ சின்னி ஜயந்தும், மதன்பாப்பும் தான் ஜட்ஜ்.

மெட்டிஒலி முடிஞ்சு, இயக்குனர் திருமுருகன் எம்டன் மகன்னு ஒரு படம் எடுத்து அதுவும் நல்லா ஓடுச்சு.

மிச்சமெல்லாம் அப்படியே !

வடுவூர் குமார் said...

என்ன பாலாஜி?
பனிப்பொழிவு இன்னும் இருக்கா? என்ன?
என்னென்னவோ சொல்றீங்க,புரியவில்லை.
அடுத்த மாநிலத்தில் ஏதாவது டிவி கலை நிகழ்ச்சி நடக்கிறதா?
:-))

துளசி கோபால் said...

ஒரு வருசம் தானே? மெகா சீரியல் எல்லாம் அப்படியே தான் இருக்கும். என்ன........
அப்ப செத்த யாருக்காவது இப்பத்தான் கருமாதி செஞ்சுக்கிட்டு இருப்பாங்க.:-)

நான் இந்தியாவை விட்டு வந்து இது வெள்ளி விழா வருஷம். நான் விட்டுவந்த டிவி
நிகழ்ச்சிகள் எப்படி இருந்திருக்குமுன்னு யாருக்காவது தெரியுமா?:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒவ்வொரு நாடகமும் இறக்கும் போது (அதாங்க முடியும் போது)
"என்னை கதையை முடித்துவிட்டீர்கள்
என்று மனக்கோட்டை கட்டாதீர்கள்.
நான் போனாலும் என்னைப்போல
நூறு வரும்" என்று சொல்லி
வீர வசனம் பேசிவிட்டுத் தான்
தலைசாய்க்கும்.
உமாவ ஞாயிற்றுக்கிழமை மாற்றியதால்
தப்பித்துவிட்டோம். இப்போது இரவு உணவு இனிமையாக இருக்கிறது.

Nazeer Ahamed said...

Still the same programs continous, i never seen serial programs, me & some of my friends are fan :) of hema sinha so we were used to watch Sun Music, then some of my roommates used to watch CNN IBN, NDTV, Times now english profiency ya improve panraen nu comedy natakum.
then i forget to say super dupper comedy pgms..
enna program, any guess..



SUN and JAYA News :)

அபி அப்பா said...

வெட்டி தம்பி!!!

1.கலக்கபோவது யாரு இப்போ சன்ல
2.அபி இன்னும் கண்டுபிடிக்கலை
3.உமா அப்டீயெ தான் இப்பவும்
4.சுரேஸ் M.E பக்கமே போகலை
5.வீராசாமி - வீரம்(இப்போ) அவர் எதிர்கட்சியா இருந்தா வீராசாமி - சோரம்
6.மெட்டி ஒலி முடிஞ்சுடுச்சு. அவசரமா 5 பொண்ணுங்க அழுவத பாக்கணும்னா மலர்கள்
7.விஜய்,ஜெயா இங்கு என் வீட்டில் தெறியலை.

இவ்வளவும் தெறிஞ்சுக்க ஜஸ்ட் 1 நாள் உடம்புக்கு முடியாம வீட்டுல இருந்தா போதும்!!!!

Anonymous said...

மஹாலட்சுமி இன்னும் வறாங்க. ஹேமா சின்ஹா இடையில சில மாதம் பிரேக் எடுத்துக்கிட்டு திரும்ப வந்துட்டாங்க. பிரஜன் அப்பப்ப வரார். கேட்டா ஷூட்டிங் அப்படிங்கிறாரு. ஆனந்த கண்ணன் சிறிது முன்னேறி இருக்கார்( Hai Kutties - ல இருந்து Sun music Special -க்கு) . நான் எப்பவும் சன் முயுசிக் சேனல் மட்டும்-தான் பாத்துக்கிட்டு இருந்ததால இவ்ளோ-தான் அப்டெட். (தப்பா எடுத்துக்காதீங்க. பாட்டு மட்டும்-தான் பாப்பேன் ) . Jodi No 1 விளைவா கவனம் விஜய் டிவி பக்கம் திரும்ப ஆரம்பிச்ச சமயத்தில எல்லாம் போச்சு இந்த காவேரி தீர்ப்பால. (காவேரி தீர்ப்பு தமிழ் நாட்டிற்கு சாதகமா வந்ததால தமிழ் சேனல் எல்லாம் கட் Bangalore -ல ). ஆறு மாத Bangalore வாசத்துக்கு பிறகு இப்ப chennai வந்துட்டேன். இப்ப Bangalore -ல தமிழ் சேனல் வருதா இல்லயா அப்படின்னு தெரியல. Chennai -ல டிவி பார்ப்பது இல்லை.


அபி அழுகை still தொடரும். அஞ்சு பொண்ணுங்க அழுவது முடிஞ்சு போச்சு. அந்த director பரத் கோபிகா வைச்சு ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணார். எம்(டன்)மகன் படம் பேரு. படம் பேரு confuse-ஆ இருக்கா? எம்டன் மகன் அப்படின்னு பேர் வைச்சாங்க. தமிழ் -ல படம் பேர் இருந்தா வரிவிலக்கு அளிக்கிறதால எம்மகன் அப்படின்னு மாதிடாங்க . தமிழ் - ஐ வளக்கிறாங்க .

(Note : Serial knowledge transferred from my Mom) .

Anonymous said...

A few weeks back "Lollu sabha" got started again.;-)

"Nandu Sendu" is stopped :(

"Madan's ..." got a new look altogether.

No significant change in the SUN TV programmes

நாகை சிவா said...

//இங்க வந்து ஒரு வருசமா தமிழ் சேனலே பார்க்கல...//

நம்ம பொழப்பும் அப்படி தான் ஆகிப் போச்சு வெட்டி. இரண்டு வருசம், அப்ப அப்ப எங்கயாச்சும் பாத்தா தான் உண்டு. ஆனா இதுக் கூட ஒரு விதத்தில் நல்லா தான் இருக்குப்பா

கார்த்திக் பிரபு said...

hi vetti

ss music la niraya attu figures ippo join panniyirukkanaga

vijay tv than topu ..sun tv nalla adi vangitu

sun tv la t rejender arattai arangam naduthararu..sun musci la veera sami paatu than eppodum poduraanga

vijay tv la nadu sindu ippo varradhillai

ramesh innum kal mela kal pottu than pesuararu

madhan rombavame compromise panni than vimarsana panraru

sun tv la nadagangal romba mosam ..orey kalla uravau ..sithi kum sithappakkum oru kulandhai pirakudhu andha kulandhai peru abi ,abikkum annalamalaikum cross connection

ippadi than poguthu hmmm

vijay tv kalakuraanga ..ss music la neha nu oru figure vandhruku ..nalla iruku ..psanga english therlanaum ava kitta ph panni pesuraanga


..idhu poduma innum venunmaaaa?

நாகை சிவா said...

சரி இருந்தாலும் நீ கேட்டுப்புட்ட எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்டேட் பண்ணுறேன்.

ஸ்டார்ட் மியூஸிக்

dubukudisciple said...

hi vetti...
ungalukana update
1) Sun music - innum appadiye thaan iruku.. ade mokkai ade makkal thaan
2) meendum lollu sabha - pudusa arambika poranganu news vanthuthu.. ana adukulla bangalorela cut pannitanga..so no updates on that
3) kadavul pathi, mirugam pathi - ippo illa
4) Kalaka povathu yaru - ippo suntv la varuthu
5) Madanum appadiye thaan
6) Pepsi Uma - Madam and call panra makkal rendu perkiteyum no diference
7)Ratna same!!!
8) Bose vantha thodar mudinju pochu
9) Abi innum azharanga.. appa yarunu nambaluku thaan theriyum avangaluku theriyathu
10) No
11) Yes
12) Ippo vera vera nadigargal varanaga.. ana enna na ella channeleyum ore nadigargal thaan ella pandigaikum

நாகை சிவா said...

//சன் மியூசிக்ல காலைல எழுந்தவுடனே பார்த்தா //

இது பெரிய கொடுமை வெட்டி. வெறும் பாடல் வரை போட்டுக் கொண்டு இருந்து போது இந்த சேனல் தான் பெரும்பாலும் பார்ப்பது. இப்ப இவங்க தொல்லை ரொம்பவே தாங்க முடியல. இவங்க பேச ஆரம்பித்தாலே வேற சானல் மாற்றி விட்டு பாட்டு போடும் தான் பாப்பது. அதனால் இந்த கோஷ்டியில் யாரு யாரு இருக்கானு தெரியல. இந்த ஆனந்த கண்ணனா அவர பாத்த மாதிரி ஞாபகம்

நாகை சிவா said...

//அப்பறம் லொள்ளு சபா தான் நம்ம ஃபேவரைட் நிகழ்ச்சி. //

நம்ம பேவரைட்ம் தான். நான் இந்தியாவில் இருந்த போது பெஸ்ட் ஆப் லொள்ளு சபா போட்டுக் கொண்டு இருந்தார்கள். இரண்டாம் பகுதி விரைவில் வரும் என்று கேள்விப்பட்டேன்.

நாகை சிவா said...

//கடவுள் பாதி மிருகம் பாதி இன்னும் இருக்கா? (நண்டு, சிண்டு)//

தெரியல......

நாகை சிவா said...

//கலக்கப் போவது யாருனு புதுசா ஒரு ப்ரோக்ராம் ஆரம்பிச்சாங்க.//

இது இன்னும் போயிக்கிட்டு இருக்கு. சில சமயங்களில் நல்லா இருக்கு. ரமேஷ் எல்லாம் வருவது இல்லை இப்ப. சின்னி, மதன்பாபு, உமா ரியாஸ் வராங்க.

நாகை சிவா said...

//மதன்'ஸ் திரைப்பார்வைல மதுர மாதிரி குப்பை படத்தையும் ஏதாவது ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாரு மதன்.//

இவரின் ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. என்னமோ புதுசா அவரும் சொல்லிக்கிட்டு தான் இருக்கார். மதன் டூன் நல்லா இருக்கு

நாகை சிவா said...

//பெப்ஸி உமா இன்னும் அதே மாதிரி டயலாக் பேசிட்டு தான் இருக்காங்களா? //

இந்த கொடுமை இன்னும் தொடர்ந்து நடந்துக்கிட்டு தான் இருக்கு. தன் புருஷன் பொண்டாட்டிக்கிட்ட கூட அப்படி பேசி இருக்க மாட்டாங்க, உமாக்கிட்ட அப்படி பொங்குறாங்க...

நீங்க எல்லாம் எப்ப தாண்டா திருந்த போறீங்க.

நாகை சிவா said...

//ரத்னா வழக்கம் போல கதை முழுசா திரை விமர்சனத்துல சொல்லிட்டு க்ளைமாக்ஸ் மட்டும் வெள்ளிதிரைல காண்கனு சொல்றாங்களா?//

அட ஆமாம்ப்பா. நான் ஷார்ஜாவில் இருக்கும் போது பார்த்தேன்(நவம்பரில்). இதுவும் என்றும் தொடரும் போல

நாகை சிவா said...

//அப்பறம் நம்ம சுரேஷ் கால் மேல கால் போட்டுக்கிட்டு வீராசாமி வீரம் குறைவில்லைனு சம்பந்தமே இல்லாம எதையாவது சொல்லிட்டு இருக்காரா?//

இது தெரியலப்பா, இவரு அதிகாலையில் வரார் இல்ல அதான் இவர் பார்க்க சந்தர்ப்பம் அமையவில்லை. இவரு மட்டும் என்ன திருந்தி இருக்கவா போறார்......

நாகை சிவா said...

//அஞ்சு பொண்ணுங்க கூட்டமா சேர்ந்து அழுவாங்களே ஒரு நாடகம். போஸ் மாமாக்கூட இருப்பாரே. அது முடிஞ்சிடுச்சா?//

அந்தக் கொடுமை முடிஞ்சு போச்சுனு கேள்விப்பட்டேன். அப்பால தான் எம்டன் மகன் எடுத்தாரே டைரக்டர்...

நாகை சிவா said...

//அபி அழுவறத நிறுத்தினாளா? அப்பா யாருனு அவுங்க கண்டுபிடிச்சிட்டாங்களா?//

யோவ் இது எல்லாம் ரொம்ப.... இந்த தொடர் இன்னும் முடியல. நான் வீட்டில் இருந்தாலும் இது டிவியில வராது. சில சமயம் தாய் பாசம் ஜெயித்து விடும் அப்ப நான் வெளியே போயிடுவேன்.

நாகை சிவா said...

//சுரேஷ் BEனு ஒருத்தர் நாடகத்துல நடிக்கறாரே.. இப்ப அவர் சுரேஷ் ME ஆயிட்டாரா?//

அது எப்படி? இப்ப தான் 1 இருந்து 2 போய் இருப்பார்.

ME - குசும்பு.........

அது சரி யாரு இவரு

நாகை சிவா said...

//குஷ்பு இன்னும் டிசைன் டிசைனா ஜாக்கெட் போட்டுக்கிட்டு ஜாக்பாட் நடத்திட்டு இருக்காங்களா? (அதுக்கு ஜாக்பாட்னு பேர் வெச்சதுக்கு பதிலா ஜாக்கெட்னு பேரு வெச்சிருக்கலாம்)//

இன்னும் நடக்குது. நான் பாத்தப்ப கூட மயில் சாமி வந்தார். பெயர் மாத்த ஆவண செய்யுறேன், நல்லா கிக்கா இருக்கும்

நாகை சிவா said...

//எல்லா பண்டிகைக்கும் விஜய் பேட்டி சன் டீவில வருதா??? //

இந்த கொடுமை நடக்காம இருக்குமா? சாமி கும்பிடும் நேரத்தை தவிர மத்த நேரத்தில் நாம எங்க வீட்டில் இருந்து இருக்கோம்

நாகை சிவா said...

இது போக விசு ஜெயால வந்து குழப்பிக்கிட்டு இருக்கார். சன் ல பாப்பைய்யா அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கார். அது போக ஜோடி நம்பர் 1 அப்படி ஒரு பெரிய ஆட்டமே போட்டு முடிச்சிட்டானுங்க விஜய் ல இது மறுபடியும் வேற ஸ்டார்ட் பண்ணி இருக்கானுங்க்.

நீயா நானா என்று விஜய் அடிச்சுக்குறங்க. நான் பாத்தப்ப பாமரன் வந்து சண்டை போட்டு இருந்தார்.

செல்வி தான் வேற பெயர் மாத்தி வரதா பேச்சு.

அம்புட்டு தான் நமக்கு தெரிஞ்சது.

அப்பால நான் ஜகா வாங்கிட்டா?

கதிர் said...

எனக்கு இதே மாதிரி கேள்வியெல்லாம் இருக்குய்யா...

நான் வந்து ஒண்ணரை வருஷம் ஆச்சி. வந்த நாளா கம்பிட்டர மட்டும்தான் பாக்கறேன்.

Anonymous said...

இந்தியாவில நாடு கடத்த பட்ட எங்களுக்கும் ஒரு மாசமா தமிழ் சேனள் கட் !!!!! :(

இம்சை அரசி said...

அங்க போயும் டிவி நினைப்புதானா??? எங்க போனாலும் மக்கள் திருந்தவே மாட்டீங்க...

Chakra said...

மூணு வருஷத்துக்குள்ள வர்றேன்னு சொல்லிட்டு வந்தேன். இப்போ 7 வருஷமாயிடுச்சு.

Arunkumar said...

//
இங்க வந்து ஒரு வருசமா தமிழ் சேனலே பார்க்கல...
//
same pinch.. irunthaalum over "out of touch"la irukkinga.

dubukudisciple and nagayaare, super updates kuduthinga.

aana vetti, ivanga yaarum tharaada oru update irukku... SUN TV Arattai Arangamla Visuku aprom Solomon Paapaya vandaaru , ippo yaaru theriyuma?

naama periya karadi TR :-)

Sun TV, TRP rating engayo pogudaam :)

Arunkumar said...

indha programs ellam naanum paapen. Abhi indha varushamaavadhu sirikkatumnu NewYear postla poturnden. enna nadakkudho andha directorukku thaan velicham !!!

Arunkumar said...

kaalaila mahalakshmi paakama office ponade ille bangalore-la...
inga konja naal remba kashtamaa pochu... epdi irukkudho ponnu ;)

apparam namma "chennai vaanilai aaivu mayyam" monica-va vittutiye vetti...

MyFriend said...

என்ன கவலை உங்களுக்கு?

நீங்க 3 வருடம் கழிச்சு பார்த்ட்தாலும், மெகா சீரியல் இன்னும் முடிஞிருக்காது!

மற்ற நிகழ்சிசிகள் சீசன் 2, சீசன் 3ன்னு வந்திருக்கும். அதை பார்க்கலாம் நீங்க!

அவசரம்ன்னா இருக்கவே இருக்கு யூ தியூப்.. :-)

Syam said...

எல்லோரும் வந்து பதில் சொல்லிட்டாங்க போல...இப்போ சன் டிவி ல உருப்படியானது அசத்த போவது யாரு (கலக்கப் போவது யாரு) :-)

Syam said...

அரட்டை அரங்கம் இப்போ வீராசாமி(T.R) நடத்தறார்...horrible :-)

Syam said...

//நீங்க எல்லாம் எப்ப தாண்டா திருந்த போறீங்க. //

பங்கு...இவிங்க எல்லாம் உமாக்கு நூறு வயசு ஆனாலும் இப்படியே தான் இருப்பாய்ங்க :-)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் பாலாஜி...

மெகா சீரியல் எல்லாம் என்னைக்கும் மாறவே மாறாது.

வெட்டிப்பயல் said...

// Meenapriya said...

எதுவுமே இன்னும் மாறல... கவலபடாம இன்னும் ஒரு 5 வருஷம் கழிச்சி வாங்க அப்போ தான் continuity சரியா இருக்கும்... //

இன்னும் 5 வருஷமா...
அவ்வளவு தான்...

இப்பவே எப்படா வருவனு வீட்ல எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்க...

வெட்டிப்பயல் said...

//SP.VR. சுப்பையா said...

ஒரு வருடமா டி.வி பார்க்கிறதில்லையா?

கொடுத்துவச்ச ஆளுங்க நீங்க!!!

சென்ற ஆண்டு சிறந்த தமிழ் இளைஞர் விருது உங்களுக்குத்தான்! //

ரொம்ப நன்றி ஐயா!!!
நீங்க கொடுக்கற விருதா சந்தோஷமா வாங்கிக்கறேன் ;)

இருந்தாலும் இதெல்லாம் பார்க்காம ஒரு நேட்டிவிட்டி இல்லாம போயிடுச்சி ;)

Anonymous said...

even after coming to US I am keeping in touch with Sun TV an K TV with help of Streambox.tv anna enna masam $20 kekuran [;)]

குமரன் (Kumaran) said...

ஒரு வருடம் ஓடிப் போனதுக்கு வாழ்த்துகள். என்ன கேக்கறீங்க? உங்களை வாழ்த்துறேனா? ஓடிப் போன வருடத்தை வாழ்த்துறேனான்னா? இது தானே வேணாங்கறது. உங்களைத் தான். உங்களைத் தான்யா வாழ்த்தறேன்.