தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, August 05, 2008

ஆடு புலி ஆட்டம் - 7

பாத்து மூணு வாரம் ஆகிடுச்சினு இப்படியா மறந்து போயிடுவீங்க. நான் தாங்க ரவி. மூணு வாரமும் வீக் எண்ட் நித்யா வீட்டுக்கு போனேன். ஊருக்கு கூட போகலை. போன வாரம் என் ரூமேட் அஷோக்கையும் கூப்பிட்டு போயிருந்தேன். அவனும் என்னோட கூகுள்ல தான் வேலை செய்யறான். ஆனா வேலை தேடறானு பொய் சொல்லி தான் கூப்பிட்டு போயிருந்தேன். அவன் எப்ப பார்த்தாலும் பேசிட்டே இருக்கற டைப்பு.

இப்பவெல்லம் ஒரு நாளைக்கு அஞ்சு ஆறு மணி நேரம் ஃபோன்ல பேசிக்கறோம். ஆனா என்ன பேசனோம்னு அடுத்த நாள் ஞாபகமிருக்க மாட்டீங்குது. ஆனா ஜாலியா இருக்குது. இந்த மாதிரி நான் எப்பவுமே சந்தோஷமா இருந்தது இல்லைனு நினைக்கிறேன்.

நமக்கு பிடிச்சி பொண்ணுக்கிட்ட பேசினாவே இவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு நான் நினைக்கல. அதுவும் மத்த பொண்ணுங்க யார்கிட்ட பேசும் போதும் நான் இவ்வளவு சந்தோஷமாவும் இருந்தது இல்லை. இந்த வாரம் ஊருக்கு போகலாம்னு ப்ளான். அவளும் வரதா சொல்லியிருக்கா. திருவண்ணாமலை போய் அங்க இருந்து அவ கள்ளக்குறிச்சி போகலாம்னு ப்ளான்.

நாளைக்கு தானே வெள்ளிக்கிழமை. அதான் நாளைக்கு இராத்திரி கிளம்பலாம்னு ப்ளான். அவ காலைல கிளம்பலாமானு கேட்டா. நான் தான் ஒரு நாள் முழுசா வீணாகிடும். அதனால ஒரு எட்டு ஒன்பது மணிக்கா கிளம்பலாம். அப்ப தான் விடிய காலைல திருவண்ணாமலைல இருந்து பஸ் கிடைக்கும்னு சொல்லியிருக்கேன். பாக்கலாம்.

இருங்க நித்யா போன் பண்றா பேசிட்டு வரேன்.

இந்த நேரத்துல எங்க கிளம்பி போயிட்டு இருக்கேனு பாக்கறீங்களா? ஏதோ முக்கியமான விஷயம் உடனே கிளம்பி வானு சொல்லி ஃபோன் பண்ணா. அவ குரல்லயும் ஏதோ பதட்டம் தெரிஞ்சிது. அதான் உடனே கிளம்பிட்டேன். அவ வீட்டுக்கு போய் சேரதுக்குள்ள எப்படியும் மணி பத்தாகிடும்னு நினைக்கிறேன்.

"என்னாச்சு?"

"ஒன்னும் இல்ல. நீ இன்னைக்கு ராத்திரி இங்க ஸ்டே பண்ண முடியுமா?"

"புரியல"

"கொஞ்சம் பிரச்சனையாகிடுச்சி. இன்னைக்கு ராத்திரி இங்க ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு காலைல சீக்கிரமா வினோதினி அக்காவையும், வினிதாவையும் கூப்பிட்டு போய் அவுங்க வீட்ல விட்டுட்டு நாம அப்படியே நம்ம ஊருக்கு போகலாம்."


உள்ள வினோதினி அக்காவும், வினிதாவும் அழற சத்தம் கேட்குது. கண்டிப்பா ஏதோ சிரியசா நடந்திருக்கு. என்னனு தெரியாம எப்படி உதவறதுனு தெரியல.

"சரி. விஷயம் என்னனு நான் தெரிஞ்சிக்கலாமா? தெரியக்கூடாதுனு நினைச்சா வேண்டாம்"

"இல்லை ரவி. கொஞ்சம் நேரமாகட்டும் சொல்றேன்"

"ஹிம்ம்ம்... சுரேஷ், செந்தில், அருண் எல்லாம் என்ன ஆனாங்க?"

"இந்த நேரம் பார்த்து பசங்க எல்லாம் எங்க காலேஜ் ஈசிஈ பையன் ஒருத்தனுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்னு நேத்து மெட்ராஸ் கிளம்பி போய்டானுங்க. அதான் உனக்கு போன் பண்ண வேண்டியதா போச்சு"

"நீ என்ன விஷயம்னு சொன்னா என்னால எப்படி உதவ முடியும்னு பார்ப்பேன். இந்த இடத்தை பார்த்தா ஏதோ பெருசா நடந்த மாதிரி இருக்கு"

"ஹிம்ம்ம்ம்.... வினோதினி அக்கா சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாங்க"

"வாட்?"

"ஆமா. ஏதோ ஒரு ஃபோன் கால் வந்துச்சு. அழுதுகிட்டே கிச்சனுக்கு போனாங்க. நான் பின்னாலயே போனேன். கத்தி எடுத்து கைல கட் பண்ண போனாங்க. நல்ல வேளை நான் தடுத்துட்டேன். வினிதாவும் சரியா வந்துட்டா. அப்ப இருந்து ரெண்டு பேரும் அழுதுகிட்டே இருக்காங்க. எனக்கு பயமா இருந்துச்சு. நீ பக்கத்துல இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும்னு நினைச்சேன். அதான் வர சொன்னேன்"

"ஹும்ம்ம்... உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?"

"இல்லை. வினிதாக்கு கூட என்னனு புரியல. அப்ப இருந்து ஏன்க்கா ஏன்க்கானு கேட்டு அழுதுட்டு இருக்கா"

"ஏதாவது லவ் மேட்டரா?"

"தெரியல. ஆனா எனக்கு தெரிஞ்சி அப்படி இருக்காதுனு தான் நினைக்கிறேன்"

"சரி. அக்காகிட்ட நான் பேசி பாக்கறேன்"

"இப்ப வேண்டாமே"

"இருக்கட்டும். அவுங்க எனக்கும் அக்கா தான். வா போய் பேசலாம்"

உள்ள வினோதினி அக்காவும், வினிதாவும் அழுது கண்ணு வீங்கியிருந்தது. எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியல. இருந்தாலும் நம்மலால உதவ முடிஞ்சா கண்டிப்பா உதவி ஆகனும்.

"அக்கா. ஏன்க்கா இப்படி பண்ணீங்க? ஏதாவது பிரச்சனைனா, நாங்க எல்லாம் இல்லை?"

"இல்லப்பா. உனக்கு எல்லாம் இது சொன்னா புரியாது"

"அக்கா. என்னை நீங்க வேற ஆளா தான பாக்கறீங்க? உங்கள நான் என் அக்கா மாதிரி தான் பாக்கறேன். என்கிட்ட சொன்னா உங்க பாரம் குறையும்னு நீங்க நினைச்சா சொல்லலாம். இல்லைனா வேணாம். ஆனா எந்த காரணத்துக்காகவும் தப்பா முடிவு எடுக்காதீங்க. வீ ஆர் தேர் ஃபார் யூ"

"ஹிம்ம்ம்"

அரை மணி நேரமா யாரும் பேசாம, ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு இருந்தோம். வினோதினி அக்கா பேச ஆரம்பிக்கறாங்க. இருங்க.

"எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகிடுச்சினா யாரும் கவலைப்படாதீங்க. எனக்கு உங்ககிட்ட சொல்லறதுக்கு ஒண்ணு தான் இருக்கு. எந்த காரணத்துக்காகவும் ஃபேக் போட்டு வேலைக்கு சேர்ந்துடாதிங்க. அவ்வளவு தான். இதுக்கு மேல என்கிட்ட எதுவும் பேசாதீங்க"

ஏதாவது லவ் மேட்டர்னு நினைச்சேன். பிரச்சனை பெருசா இருக்கும் போல இருக்கு...

(தொடரும்...)

38 comments:

ஜியா said...

:)) ஏனுங்க... இப்படி ஒரு டிவிஸ்டு??? அடுத்த பகுதி நாளைக்கா??

வெட்டிப்பயல் said...

//ஜி said...

:)) ஏனுங்க... இப்படி ஒரு டிவிஸ்டு??? அடுத்த பகுதி நாளைக்கா??//

கதையே இனிமே தான் ஆரம்பிக்குது :-))

இந்த பகுதி நாளைக்கு தான் போட வேண்டியது. யாரோ கண்ணு வெச்சிட்டாங்க. எங்க மேனஜரோட மேனஜர் வந்திருக்கார். ஆபிஸ்ல ப்ளாக் எல்லாம் பாக்க முடியாது... அதனால இந்திய நேரம்னு மாத்திட்டேன் :-)

முரளிகண்ணன் said...

கலக்கலா போயிட்டுருக்கு

கயல்விழி said...

கதை சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. லைட்டாக இருந்த கதை சீரியசாக ஆகி இருக்கிறது.

Anonymous said...

ட்விஸ்ட் நல்லாத்தான் இருக்கு. கதையின் திருப்பம் எப்படின்னு இருக்கும்ன்னு யோசிச்சிருக்கேன். பாப்போம்.

//இந்த பகுதி நாளைக்கு தான் போட வேண்டியது. யாரோ கண்ணு வெச்சிட்டாங்க. எங்க மேனஜரோட மேனஜர் வந்திருக்கார். ஆபிஸ்ல ப்ளாக் எல்லாம் பாக்க முடியாது... அதனால இந்திய நேரம்னு மாத்திட்டேன் :-)//

ஹலோ, அவிங்கல்லாம் அப்பப்போ எட்டிப் பாக்கலைன்னா, கம்பெனில ஏதோ தண்ணி தெளிச்சுவிட்ட மாதிரி ஃபீல் பண்ண மாட்டீங்க?

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...

கலக்கலா போயிட்டுருக்கு//

மிக்க நன்றி முரளிகண்ணன்

வெட்டிப்பயல் said...

//கயல்விழி said...

கதை சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. லைட்டாக இருந்த கதை சீரியசாக ஆகி இருக்கிறது.//

ஆமாம் கயல்விழி இனிமே முடியும் வரை இப்படித்தான் போகும்... இது தான் துவக்கம் :-)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

ட்விஸ்ட் நல்லாத்தான் இருக்கு. கதையின் திருப்பம் எப்படின்னு இருக்கும்ன்னு யோசிச்சிருக்கேன். பாப்போம்.//

சூப்பர்... சரியா வருதானு அப்பப்ப பார்த்து சொல்லுங்க :-)

// //இந்த பகுதி நாளைக்கு தான் போட வேண்டியது. யாரோ கண்ணு வெச்சிட்டாங்க. எங்க மேனஜரோட மேனஜர் வந்திருக்கார். ஆபிஸ்ல ப்ளாக் எல்லாம் பாக்க முடியாது... அதனால இந்திய நேரம்னு மாத்திட்டேன் :-)//

ஹலோ, அவிங்கல்லாம் அப்பப்போ எட்டிப் பாக்கலைன்னா, கம்பெனில ஏதோ தண்ணி தெளிச்சுவிட்ட மாதிரி ஃபீல் பண்ண மாட்டீங்க?//
எப்படி இருந்தாலும் வேலையை செய்யாம இருக்க போறதில்லைங்க... வேலை நடந்துட்டே தான் இருக்கும். இவுங்க வந்தா ஃபிரியா இருக்கற ஒண்ணு ரெண்டு நிமிஷமும் பிஸியா இருக்கற மாதிரி எஃபக்ட் கொடுக்கணும் :-)

ஜெகதீசன் said...

:)
அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்....

விஜய் ஆனந்த் said...

செம பிக்கப்புங்க!!!! அடுத்த பகுதி எப்போ????

Sen22 said...

ஹூரோவுக்கு வேலை வந்துடுச்சு போல...
அடுத்த பகுதில...
ஒரு சிங்கம் ஒன்று புறப்பட்டதே சாங்கோட ஆரம்பிங்க வெட்டி...


கதை நல்லா போய்ட்டுஇருக்கு வெட்டி...

Anonymous said...

Aiaiyo vetti sir,

Seekram unga manageroda managera uruku poga sollunga.

Cheers
Christo

Anonymous said...

Aiaiyo vetti sir,

Seekram unga manageroda managera uruku poga sollunga.

Cheers
Christo

Divyapriya said...

நினச்சு பாக்காத ட்விஸ்டு கதைல...போட்டு தாக்குங்க...

வெங்கட்ராமன் said...

வாட் நெக்ஸ்ட் ?

Thiyagarajan said...

சுப்ப‌ர் டிவிஸ்டு, இப்ப‌ தான் ஆட்ட‌ம் சூடு பிடிக்க ஆர‌ம்பிச்சிருக்கு.
Eager to read the upcoming parts..

தமிழினி..... said...

ஹ்ம்ம்...கஜினி லருந்து கதை கொஞ்சம் மாற ஆரம்பிக்குது னு நெனைக்குறேன்...
இருந்தாலும் இவங்க நட்ப பத்தி விவரிகிரத நிறுத்திடாதிங்க பாலாஜி...

Siva said...

விறு விறுப்பான கதை ...சூப்பர்.....

வெட்டிப்பயல் said...

//ஜெகதீசன் said...

:)
அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்....//

வெள்ளிக்காலை - இந்திய நேரம் :-)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

செம பிக்கப்புங்க!!!! அடுத்த பகுதி எப்போ????//

வெள்ளிக்காலை - இந்திய நேரம் :-)

வெட்டிப்பயல் said...

//Sen22 said...

ஹூரோவுக்கு வேலை வந்துடுச்சு போல...
அடுத்த பகுதில...
ஒரு சிங்கம் ஒன்று புறப்பட்டதே சாங்கோட ஆரம்பிங்க வெட்டி...
//
சிங்கத்துக்கு பாட்டு எல்லாம் போட்டா அசிங்கமாகிடும் :-)

அவர் கண்டுபிடிக்க நேரமாகும் :-)

// கதை நல்லா போய்ட்டுஇருக்கு வெட்டி...//
மிக்க நன்றி செந்தில்

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Aiaiyo vetti sir,

Seekram unga manageroda managera uruku poga sollunga.

Cheers
Christo//

எப்படியும் இந்த வாரம் முழுக்க இங்க தான் இருப்பாரு :-)

அதான் காலைல ஆபிஸ் போறதுக்கு முன்னாடியே எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்கேன் :-)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...

நினச்சு பாக்காத ட்விஸ்டு கதைல...போட்டு தாக்குங்க...//

நீங்களும் உங்க கதைல கல்யாணத்துக்கு ஆறு மணி நேரத்துக்கு முன்னாடி கூட ட்விஸ்டு வைக்கறீங்களே :-)

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

வாட் நெக்ஸ்ட் ?//

ஆடு புலி ஆட்டம் 8 :-)

வெட்டிப்பயல் said...

//Thiyagarajan said...

சுப்ப‌ர் டிவிஸ்டு, இப்ப‌ தான் ஆட்ட‌ம் சூடு பிடிக்க ஆர‌ம்பிச்சிருக்கு.
Eager to read the upcoming parts..//

மிக்க நன்றி... அடுத்த பகுதி சீக்கிரமே வரும் :-)

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

ஹ்ம்ம்...கஜினி லருந்து கதை கொஞ்சம் மாற ஆரம்பிக்குது னு நெனைக்குறேன்...
இருந்தாலும் இவங்க நட்ப பத்தி விவரிகிரத நிறுத்திடாதிங்க பாலாஜி...//

இனிமே நட்புக்கு நேரமிருக்குமானு தெரியலையே :-)

வெட்டிப்பயல் said...

// Siva said...

விறு விறுப்பான கதை ...சூப்பர்.....//

மிக்க நன்றி சிவா...

தமிழினி..... said...

////தமிழினி..... said...

ஹ்ம்ம்...கஜினி லருந்து கதை கொஞ்சம் மாற ஆரம்பிக்குது னு நெனைக்குறேன்...
இருந்தாலும் இவங்க நட்ப பத்தி விவரிகிரத நிறுத்திடாதிங்க பாலாஜி...//

இனிமே நட்புக்கு நேரமிருக்குமானு தெரியலையே :-)

//
ஆகா....அப்டினா லவ்வு ஒன்னு ஸ்டார்ட் ஆகிருச்சா.....ரைட்டு தல....கலக்குங்க....

Arunkumar said...

whenz next ?

மங்களூர் சிவா said...

/

ஏதாவது லவ் மேட்டர்னு நினைச்சேன். பிரச்சனை பெருசா இருக்கும் போல இருக்கு...
/
???

மங்களூர் சிவா said...

அடுத்த பகுதி நாளைக்கா??

மங்களூர் சிவா said...

கதை ஸ்பீட் எடுக்குது!

:)

ராசுக்குட்டி said...

7 பகுதியையும் ஒரே மூச்சில் படிச்சேன்... கதை சூடு பிடிக்குது...

உரையாடல் இன்னும் கொஞ்சம் இயல்பா இருக்கலாம்...

மத்தபடி கலக்கல்தான்!

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

////தமிழினி..... said...

ஹ்ம்ம்...கஜினி லருந்து கதை கொஞ்சம் மாற ஆரம்பிக்குது னு நெனைக்குறேன்...
இருந்தாலும் இவங்க நட்ப பத்தி விவரிகிரத நிறுத்திடாதிங்க பாலாஜி...//

இனிமே நட்புக்கு நேரமிருக்குமானு தெரியலையே :-)

//
ஆகா....அப்டினா லவ்வு ஒன்னு ஸ்டார்ட் ஆகிருச்சா.....ரைட்டு தல....கலக்குங்க....//

இங்க ஃபாஸ்ட் புட் சாப்பிடறதுக்கே நேரமில்லையாம் பந்திக்கு பாய விரினு சொன்னானாம்...

வெட்டிப்பயல் said...

//Arunkumar said...

whenz next ?//

Friday Morning - Indian Time :-)

நாடோடி said...

ஆஹா கதைல இப்போ தான் சூடேருது.. இந்த பகுதி நல்லாயிருக்கு பாலாஜி..
இன்னிக்கு சாயந்திரம் தானே அடுத்தது??

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

கதை ஸ்பீட் எடுக்குது!

:)//

ரொம்ப நன்றி சிவா :-)

அடுத்த பகுதி போட்டாச்சு :-)

வெட்டிப்பயல் said...

//ராசுக்குட்டி said...

7 பகுதியையும் ஒரே மூச்சில் படிச்சேன்... கதை சூடு பிடிக்குது...

உரையாடல் இன்னும் கொஞ்சம் இயல்பா இருக்கலாம்...

மத்தபடி கலக்கல்தான்!//

திரும்பவும் ப்ளாக் உலகத்துக்கு வந்தாச்சா??? சூப்பர் :)

உரையாடம் அடுத்த பகுதியில ஓரளவு இயல்பா வந்திருக்குனு நினைக்கிறேன்.. பார்த்து சொல்லுங்க :-)