தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, August 13, 2008

கடைசியாக பார்த்த சில தெலுகு படங்கள்

கடைசியாய் பார்த்த சில தெலுகு படங்களை பற்றிய எண்ணங்கள்.Happy Days:
இஞ்சினியரிங் காலேஜை கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அதிலும் அந்த சீனியரை லவ் பண்ணும் பையன் அட்டகாசமாக நடித்திருக்கிறார் (பேர் மறந்துடுச்சு). தமண்ணா சூப்பர் :-) படமும் அருமை. க்ளைமாக்ஸும் அருமை. ஜாலியாக பார்க்கலாம். பாடல்களும் படத்துக்கு ப்ளஸ். பொம்மரில்லுக்கு அப்பறம் நான் ரசிச்சி பார்த்த படம்...ஆட்டா :
One and only ILEANA. கதை எல்லாம் எதுவும் கிடையாது. இலியானாவை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பேச்சிலர் பசங்களுக்கு மட்டும் சிபாரிசு செய்கிறேன். இயற்கையை ரசிக்க தெரிந்தவர்களும் பார்க்கலாம் :-) (My Friend சித்தார்த்திற்காக பார்க்கலாம்)தீ :
ஜாலியான படம். புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான். அவ்வளவு தான் தீம். படம் நல்ல கலகலப்பா ஜாலியா போகும். ஜெனி வழக்கம் போல சூப்பர் :-). தமிழில் சிம்பு அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் (விரலை ஆட்டாம) ஹிட் ஆக சான்ஸ் அதிகம். ஆனா ஸ்ரீ ஹரி ரோலை பிரபு செய்யக்கூடாது. என் சாய்ஸ் சரத்குமார்.

எம தொங்கா :
ஜீனியர் NTR உடம்பை குறைத்து ஸ்மார்ட்டாக இருக்கிறார். படம் ஓரளவுக்கு மோசம் தான். மோகன் பாபு நல்லா நடித்திருக்கிறார். ப்ரியா மணி தெலுகு படத்துக்கு ஒத்து வர மாட்டார்.கோதாவரி:
அமைதியான அழகான படம். ரசிச்சி பார்க்கலாம். கமலினி சூப்பர். படமும் அழகா ஆர்ப்பாட்டம் இல்லாம அமைதியா போகும். நிச்சயம் பார்க்கலாம்.


ராக்கி:
ஜீனியர் NTR படம் தான். இலியானாக்காக தியேட்டருக்கு போய் பார்த்தேன். வழக்கமான NTR படம். இதுல வித்தியாசமா பாக்கெட்ல பெட்ரோல் வெச்சி, அதை முகத்துல அடிச்சி எரிச்சி கொல்றார். தப்பி தவறி கூட பார்க்க வேண்டாம் :-)ஜல்சா :
அட்டகாசமான படம். பவன் கல்யாணிற்கு ஒரு ப்ரேக் கொடுத்திருக்கிறது. டோட்டல் ஹைதிராபாத் பிரியாணி (மசாலா). இலியானா சூப்பர். பார்வதி மில்டனை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணியிருக்கலாம். காமெடி கலக்கல். விஜய் ரீ-மேக் பண்ணலாம்.

அதித்தி (Athidhi):
மகேஷ் பாபு படம். நிறைய சண்டை. படம் சுமார். மோசம்னு கூட சொல்லலாம். ஆனா சைனிக்குடுவைவிட பரவாயில்லை.

இது தவிர கொஞ்சம் பழைய படங்கள்ல இதெல்லாம் பார்க்கலாம். ஆர்யா, அனுகோக்குண்ட ஒக்க ரோஜு, அத்தடு.

32 comments:

Anonymous said...

very nice! hahahahaha

நாதஸ் said...

அத்திடி ?
u mean அதித்தி ?

SP.VR. SUBBIAH said...

என்ன பாலாஜி, இத்தனை படங்களை ஒன்றாகப் பட்டியல் இட்டு விட்டீர்களே?
எதை முதலில் பார்க்க வேண்டும்? அதைச் சொல்லுங்கள்

இலவசக்கொத்தனார் said...

மீண்டும் கொல்ட்டி!
மீண்டும் தெலுங்கு படங்கள்!!

என்னய்யா நடக்குது?

(எப்போ முதல் மேரேஜ் அனிவெர்சரி?) :)))

வெட்டிப்பயல் said...

//investing stock market advice said...

very nice! hahahahaha//

புரிஞ்சி தான் சொல்றீங்களானே தெரியல :-)

வெட்டிப்பயல் said...

//nathas said...

அத்திடி ?
u mean அதித்தி ?//

அதித்தி தான்.. என் ரூமேட் குழப்பிட்டான். தெலுகு படிக்க தெரிஞ்ச ஒருத்தரை வெச்சி வெரிஃபை பண்ணிட்டேன்... நான் சொன்னது தான் கரெக்ட்... அதித்தினா விருந்தாளி :-)

வெட்டிப்பயல் said...

// SP.VR. SUBBIAH said...

என்ன பாலாஜி, இத்தனை படங்களை ஒன்றாகப் பட்டியல் இட்டு விட்டீர்களே?
எதை முதலில் பார்க்க வேண்டும்? அதைச் சொல்லுங்கள்//

ஆஹா.. வாதியார் ஐயா.. இது எல்லாம் சின்ன பசங்களுக்கு பிடிக்கிற படங்கள்.. நீங்க கோதாவரி, தீ (கொட்டி சூடு), ஜல்சா பார்க்கலாம் :-)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

மீண்டும் கொல்ட்டி!
மீண்டும் தெலுங்கு படங்கள்!!

என்னய்யா நடக்குது?

(எப்போ முதல் மேரேஜ் அனிவெர்சரி?) :)))//

கொத்ஸ்,
கொல்ட்டி ரெண்டு வருஷமாச்சேனு போட்டேன்...

இது நேயர் விருப்பம்... விரும்பி கேட்டவர் பாஸ்டன் பாலா :-)

முதல் அனிவெர்சரி - நவம்பர் 15 :-)

Anonymous said...

Happy Days

தமண்ணா சூப்பர் :-)

இதுக்காகவே நானு இந்தப்படத்த பாக்கணும்

நாதஸ் said...

//அதித்தி தான்.. என் ரூமேட் குழப்பிட்டான். தெலுகு படிக்க தெரிஞ்ச ஒருத்தரை வெச்சி வெரிஃபை பண்ணிட்டேன்... நான் சொன்னது தான் கரெக்ட்... அதித்தினா விருந்தாளி :-)//

:)

நானும் நிறைய(அனைத்து) தெலுகு படம் பார்ப்பேன். இன்னைக்கு கூட அனுஷ்கா நடிச்ச படம் ரிலீஸ் ஆகி இருக்கு. போய் பாக்கணும் ;)

வெட்டிப்பயல் said...

//hisubash said...

Happy Days

தமண்ணா சூப்பர் :-)

இதுக்காகவே நானு இந்தப்படத்த பாக்கணும்//

சுபாஷ்,
தாராளமா இந்த படம் பார்க்கலாம் :-)

நல்ல படம்...

வெட்டிப்பயல் said...

// nathas said...

//அதித்தி தான்.. என் ரூமேட் குழப்பிட்டான். தெலுகு படிக்க தெரிஞ்ச ஒருத்தரை வெச்சி வெரிஃபை பண்ணிட்டேன்... நான் சொன்னது தான் கரெக்ட்... அதித்தினா விருந்தாளி :-)//

:)

நானும் நிறைய(அனைத்து) தெலுகு படம் பார்ப்பேன். இன்னைக்கு கூட அனுஷ்கா நடிச்ச படம் ரிலீஸ் ஆகி இருக்கு. போய் பாக்கணும் ;)//

சூப்பர் சூப்பர்...

விக்ரமார்க்குடு பார்த்துட்டு நானும் என் ரூமேட்டும் அனுஷ்கா ஃபேன்ஸ் ஆகிட்டோம் :-)

அந்த படம் பத்தியும் எழுதலாம்னு பார்த்தேன். மக்கள் டென்ஷனாகிடுவாங்கனு விட்டுட்டேன் :-)

நாதஸ் said...

//விக்ரமார்க்குடு பார்த்துட்டு நானும் என் ரூமேட்டும் அனுஷ்கா ஃபேன்ஸ் ஆகிட்டோம் :-)//

me too... :)

Boston Bala said...

கோதாவரி பார்த்தேன். நண்பர் இந்தப் படத்தை தினமும் பார்த்தால்தான் நிம்மதியான நித்திரை வருகிறது என்றார்!

பரிந்துரைகளுக்கு நன்றி

Ramya Ramani said...

வெட்டி அண்ணா

இன்னும் சில தெலுங்கு படங்கள் பார்க்கவேண்டியவை

1.அனுசுயா (பூமிகா கலக்கிருப்பாங்க)

2.அனுகோகுன்ட ஒக ரோஜு

3.ஆனந்த் - இது நீங்க பார்திருப்பீங்க..சூப்பர் படம்..கமலினி கலக்கலா நடிச்சிருப்பாங்க..


\\அமைதியான அழகான படம். ரசிச்சி பார்க்கலாம். கமலினி சூப்பர். படமும் அழகா ஆர்ப்பாட்டம் இல்லாம அமைதியா போகும். நிச்சயம் பார்க்கலாம்.
\\

ரிப்பீட்டு :))

வெட்டிப்பயல் said...

// nathas said...

//விக்ரமார்க்குடு பார்த்துட்டு நானும் என் ரூமேட்டும் அனுஷ்கா ஃபேன்ஸ் ஆகிட்டோம் :-)//

me too... :)//

அப்ப நீங்களும் நம்ம ஆளா???

தேவதாஸூ பாத்தீங்களா? இலியானா இண்ட்ரோ அதுல தான் :-)

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

வெட்டி அண்ணா

இன்னும் சில தெலுங்கு படங்கள் பார்க்கவேண்டியவை

1.அனுசுயா (பூமிகா கலக்கிருப்பாங்க)

2.அனுகோகுன்ட ஒக ரோஜு

3.ஆனந்த் - இது நீங்க பார்திருப்பீங்க..சூப்பர் படம்..கமலினி கலக்கலா நடிச்சிருப்பாங்க..


\\அமைதியான அழகான படம். ரசிச்சி பார்க்கலாம். கமலினி சூப்பர். படமும் அழகா ஆர்ப்பாட்டம் இல்லாம அமைதியா போகும். நிச்சயம் பார்க்கலாம்.
\\

ரிப்பீட்டு :))//

அனுசயா பாக்கலயே... தேடி பார்ப்போம்... இனிமே ஏதாவது நல்ல படம் வந்தா அப்படியே நமக்கும் சொல்லுமா :-)

வெட்டிப்பயல் said...

// Boston Bala said...

கோதாவரி பார்த்தேன். நண்பர் இந்தப் படத்தை தினமும் பார்த்தால்தான் நிம்மதியான நித்திரை வருகிறது என்றார்!

பரிந்துரைகளுக்கு நன்றி//

இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம் :-)

மத்த படமும் பார்த்துட்டு கருத்து சொல்லுங்க.

Ramya Ramani said...

\\அனுசயா பாக்கலயே... தேடி பார்ப்போம்... இனிமே ஏதாவது நல்ல படம் வந்தா அப்படியே நமக்கும் சொல்லுமா :-)\\

கண்டிப்பா சொல்லிடுவோம் :))

Sundar சுந்தர் said...

அட இவ்ளோ தெலுகு படம் பார்க்கறீங்களா, அவங்க கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டதா அந்த கதைல எழுதுனீங்களே, இன்னும் மனசை விட்டு போகலியா? சரி சரி. வேற யார்கிட்டேயும் சொல்லல :)

Ramya Ramani said...

பொம்மரிலு மிஸ் பண்ணிட்டீங்களா??

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

\\அனுசயா பாக்கலயே... தேடி பார்ப்போம்... இனிமே ஏதாவது நல்ல படம் வந்தா அப்படியே நமக்கும் சொல்லுமா :-)\\

கண்டிப்பா சொல்லிடுவோம் :))//

ரொம்ப டாங்ஸ்மா :-)

வெட்டிப்பயல் said...

//சுந்தர் said...

அட இவ்ளோ தெலுகு படம் பார்க்கறீங்களா, அவங்க கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டதா அந்த கதைல எழுதுனீங்களே, இன்னும் மனசை விட்டு போகலியா? சரி சரி. வேற யார்கிட்டேயும் சொல்லல :)//

ஹா ஹா ஹா...

அது கதை.. இது நிஜம் :-)

ஏதாவது புரியுதா? ;)

வெட்டிப்பயல் said...

//Ramya Ramani said...

பொம்மரிலு மிஸ் பண்ணிட்டீங்களா??//

பொம்மரில்லு, போக்கிரியெல்லாம் தமிழ்ல ரீ-மேக் பண்ணியாச்சு :-)

அதுவுமில்லாம நான் அதுக்கு எல்லாம் அப்ப விமர்சனமும் எழுதிட்டேன் :-)

நாதஸ் said...

//அப்ப நீங்களும் நம்ம ஆளா???

தேவதாஸூ பாத்தீங்களா? இலியானா இண்ட்ரோ அதுல தான் :-)//

ஆமா அண்ணாச்சி :)
இலியானா நடிச்ச எல்லா படமும் பாத்தாச்சு ;)

"A film by Aravind" - இந்த படத்தை பாருங்க நல்ல த்ரில்லர் படம்.

வெட்டிப்பயல் said...

// nathas said...

//அப்ப நீங்களும் நம்ம ஆளா???

தேவதாஸூ பாத்தீங்களா? இலியானா இண்ட்ரோ அதுல தான் :-)//

ஆமா அண்ணாச்சி :)
இலியானா நடிச்ச எல்லா படமும் பாத்தாச்சு ;)

"A film by Aravind" - இந்த படத்தை பாருங்க நல்ல த்ரில்லர் படம்.//

இது பார்த்து ரெண்டு வருஷமாகுதே... ராஜிவ் கனகாலாவும் ரிச்சர்ட்ம் நடிச்ச படம் தானே... அதுவும் சூப்பரா தான் இருக்கும் :-)

ஆனா கடைசில கொஞ்சம் மொக்கையான மாதிரி ஃபீலிங் :-)

கப்பி | Kappi said...

ithula happy days, godavari paathaachu..godavari thalaivikaaga rendu murai :))


maththathellaam note pannikiten!

MyFriend said...

ஆட்டா.. பார்த்தாச்சே. ;-)

ஹேப்பி டேய்ஸ் சப்ஸ்டைட்டிலுடன் வெளிவர காத்திருக்கிறேன். ;-)

மத்தது போர் அடிக்கும்போது தேடிப்பார்க்க வேண்டியதுதான் ;-)

மங்களூர் சிவா said...

மை ப்ரெண்டு இந்த தெலுங்கு படத்துக்கெல்லாம் டவுன் லோடு லிங்க் இருந்தா குடும்மா பாக்க முயற்சி செய்யுவோம்!!

pudugaithendral said...

எம தொங்கா மா டீவியில் போட்டாங்க பராவாயில்லை.

ஹேப்பி டேஸ் பார்த்தேன் பிடிச்சிருக்கு,

கோதாவரி எம்புட்டு தட பார்த்தோம்னு கணக்கே இல்லை. உப்பங்கலே கோதாவரி குடும்ப பாட்டு மாதிரி ஆயிடுச்சு.

நீங்க மஹேஷ் பாபு நடிச்ச அர்ஜூன் பாத்திருக்கீங்களா? ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷலா நேத்து போட்டாங்க. அதுவும் பல முறை பார்த்திருக்கிறேன்.

pudugaithendral said...

ஜெனிலியா நடிச்ச “ரெடி” நல்லா இருக்கு.

தமிழ் said...

satyabhama-shivaji,bhoomika

chandammama-navadeep,kajal agarwal