தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, August 28, 2008

ஆடு புலி ஆட்டம் - 18

தினேஷ் கிளம்பி போனதுக்கப்பறம் துரை அந்த பொண்ணு இருந்த ரூமுக்கு போனான். ஒரு மணி நேரம் கழிச்சி அவன் வந்தவுடனே குமார் போனான். அந்த பொண்ணு அரை மயக்கத்துலயே இருந்துச்சு. மறுபடியும் மயக்க மருந்து கொடுத்துட்டு கதவை பூட்டிட்டு வந்துட்டாங்க. அப்பறம் ராத்திரி அவளை ஹூசைன் லாட்ஜ்ல வேற ஒரு ரூமுக்கு எடுத்துட்டு போயிட்டாங்க.

அவ எப்ப வேணா எழுந்திரிக்கலாம்னு இருந்துச்சு. காலைல அஞ்சு மணிக்கு அலாரம் வெச்சிட்டு வந்தானுங்க. அப்படியே கதவு பக்கத்துல ஒரு லெட்டரும் வெச்சிட்டு வந்தாங்க. அந்த லெட்டர் எழுதறதுக்கு தினேஷ் உதவி பண்ணான். உதவி பண்ணானு சொல்றதைவிட அவன் தான் அதை தயார் பண்ணானே சொல்லலாம். நீங்களும் அதை படிச்சி பாருங்களேன்.

விஜயலஷ்மி,
உன்னை மாசம் மாசம் மிரட்டி காசு வாங்கறது எங்களுக்கு வெறுத்து போச்சு. இனிமே நாங்களே காசு கேக்காம நீயே கொடுக்கனும்னு இப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு. நீ போலிஸ்ல போகலாம்னு நினைச்சா, அது உனக்கு எதிரா தான் நடக்கும். போய் அந்த பெட்ல தலையணைக்கு அடில இருக்கற ஃபோட்டோவை பாரு.

என்ன அந்த ஃபோட்டோ எல்லாம் பார்த்தியா? அது நீ ரெண்டு மாசம் காசு கொடுத்தப்ப எடுத்தது. இப்ப நீ பார்த்த வரிசைல பார்த்தா நீ காசு வாங்கின மாதிரி தெரியுதா? வரிசையை மாத்தி பார்த்தா அப்படி தான் தெரியும். நீ காசு வாங்கிட்டு ஒண்ணா எழுந்திரிக்கறது. அவன் கூடவே வெளிய வரைக்கும் போறதை வெச்சி நீ இந்த ஊர்ல ப்ராத்தல் தொழில் பண்ணிட்டு இருந்தனு தாராளமா சொல்ல முடியும். கூடவே நீ பொய் சொல்லி வேலை வாங்கின, அதுக்கு தான் அந்த தொழில் பண்ணனு சொல்ல முடியும்.

நீ அரை மயக்கத்துல எங்க ஆளுக்கூட பண்ணதும் வீடீயோவா ரெக்கார்ட் ஆகி இப்ப CDல இருக்கு. நீ போலிஸுக்கு போனா அந்த CDயை நீயும், உன் அப்பா, அம்மாவும் ஒண்ணா சேர்ந்து பாக்க வேண்டியது இருக்கும். நீ தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்தா உன் அப்பா, அம்மா உன்னை கடைசியா நீ பொறந்தப்ப இருக்கற மாதிரி பார்க்க வேண்டியதா இருக்கும். அதுக்கு மேல அவுங்களும் உயிரோட இருக்க மாட்டாங்கனு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதுக்கு அப்பறம் இண்டர்நெட்லயும், எல்லார் செல்ஃபோன்லயும் உன் படம் தான் பார்ப்பாங்க.

இதுல இருந்து நீ தப்பிக்கனும்னா ஒரே வழி தான் இருக்கு. மாசா மாசம் எங்களுக்கு தர வேண்டிய காசை கொடுத்துடு. அவ்வளவு தான். இனிமே நீ நேர்ல கூட வர வேண்டாம். நாங்க சொல்ற அக்கவுண்ட்ல மூணு தேதிக்குள்ள காசை போட்டுடு. அப்படி இல்லைனா உனக்கு தான் விபரீதம். எங்களுக்கு பணம் தான் வேணும். நீ தேவையில்லை.

அந்த ஃபோட்டோவையெல்லாம் அதே இடத்துல வெச்சிட்டு எங்கயும் நிக்காம நேரா பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் பிடிச்சி வீட்டுக்கு போ. யார்கிட்டயும் பேசாம போ. இன்னும் விடியல. அதனால யாரும் உன்னை இங்க பார்க்க மாட்டாங்க. அதனால உடனே கிளம்பு. இந்த கடிதத்தையும் ஃபோட்டோக்கூடவே வெச்சிட்டு போ. தப்பான முடிவ எடுத்தா நஷ்டம் உனக்கு தான். எங்களுக்கு இருபதாயிரத்தோட போச்சு.

......

லெட்டரை பார்த்தீங்களா. எவ்வளவு அட்டகாசமா எழுதியிருக்கான் பார்த்தீங்களா. அதான் தினேஷ். இருந்தாலும் அவனை நான் நம்பல. படிச்சவங்களை எப்பவும் நம்ப கூடாதுங்கறது என்னோட எண்ணம். அப்படி நான் என்ன பண்ணேனு பாக்கறீங்களா.

தினேஷ் எழுதன லெட்டர்ல இருந்த இந்த ஒரு வரியை மட்டும் நான் மாத்தி எழுதினேன்...

"இந்த போட்டோ மட்டும் இல்லாம நீ எந்த துணியும் இல்லாம இருக்கற ஃபோட்டோவும் எங்ககிட்ட இருக்கு. நீ போலிஸுக்கு போனா அந்த போட்டோவை நீயும், உன் அப்பா, அம்மாவும் ஒண்ணா சேர்ந்து பாக்க வேண்டியது இருக்கும். "

இதைத்தான் நான் இப்படி மாத்தியிருக்கேன்

"நீ அரை மயக்கத்துல எங்க ஆளுக்கூட பண்ணதும் வீடீயோவா ரெக்கார்ட் ஆகி இப்ப CDல இருக்கு. நீ போலிஸுக்கு போனா அந்த CDயை நீயும், உன் அப்பா, அம்மாவும் ஒண்ணா சேர்ந்து பாக்க வேண்டியது இருக்கும்."

இப்ப புரிஞ்சிருக்குமே, நான் அவனுக்கு தெரியாம என்ன பண்ணனு. ஆமா, நீங்க நினைக்கிறது சரி தான். அவன் அந்த பொண்ணை பண்ணதை தான் நான் அவனுக்கு தெரியாம வீடியோ எடுத்து வெச்சிருக்கேன். அது அந்த லாட்ஜ்லயே பத்திரமா இருக்கு. நாளைக்கு எனக்கு எதுவும் தெரியாதுனு அவன் விலக சான்ஸ் இருக்கு. அவன் அறிவை வெச்சி எங்களை மாட்டிவிட்டுட்டு அவன் தப்பிச்சி போகவும் வாய்ப்பிருக்கு. அதுக்காக நாங்க மூணு பேரும் சேர்ந்து எடுத்த முன்னெச்சிரிக்கை நடவடிக்கை தான் இது. தினேஷுக்கு இது தெரியாது. இது
கடைசியா பயன்படுத்த வேண்டிய அஸ்திரம்.

ஏதோ தப்பா நடக்க போகுதுனு என் மனசுல சொல்லிட்டே இருக்கு. இருங்க நான் குமாருக்கு ஒரு ஃபோன் பண்ணிடறேன்.

"ஹலோ வெற்றி"

"குமார். நான் நாளைக்கு ஊருக்கு போகலாம்னு இருக்கேன். கைல இருக்கற காசுக்கு ஏதாவது இடம் வாங்க முடியுமானு பாக்க போறேன். இந்த முறை மச்சான் பேர்ல வாங்கலாம்னு இருக்கேன்"

"சரி. அப்படியே எங்க வீட்டுக்கு போயி ஏதாவது காசு கொடுத்துட்டு வாயேன்"

"நீ கவலைப்படாத. உன் ஆத்தாவை பார்த்து காசு கொடுத்துட்டு வரேன்"

"சரி. இப்படி நீ திடீர்னு ஊருக்கு போனா தினேஷ் எதுவும் சொல்ல மாட்டானா?"

"எனக்கு அவன்கூட ஏதாவது பிரச்சனை வந்துடுமானு பயத்துல தான் இருக்கற காசையெல்லாம் பதுக்கறேன்"

"ஏன்? ஏதாவது மிரட்டினானா?"

"இல்லை. முன்னெச்சரிக்கை தான். ஏதாவது மிரட்டினா அவனுக்கு தான் பிரச்சனை"

"ஆமாம்"

"அப்பறம் அந்த CDயை எல்லாம் எதுக்கும் இன்னொரு காப்பி போட்டு வை. நான் வந்ததும் வாங்கி அதை பத்திரமான ஒரு இடத்துல வெச்சிக்கறேன். ஏதாவது பிரச்சனையாகி ஒரு செட் போனாக்கூட இன்னொன்னு இருக்கும்"

"சரி"

"அந்த சின்ன பையன் இருக்கும் போது போய் காப்பி போடு. வேற யாராவது இருந்தா CDல என்னனு கேட்டா பிரச்சனையாகிடும். எல்லாரும் மாட்டிக்குவோம்"

"அதான் தெரியுமே. நீ பயப்படாத"

"சரி. ஜாக்கிரதை"

"இது வெச்சி அவனை மட்டும் தானே மிரட்ட போற?"

"இல்லை. அதுக்கு மட்டுமில்லை. அந்த பொண்ணுங்களையும் மிரட்டி லம்பா வாங்கலாம்னு இப்ப ஒரு திட்டமிருக்கு"

"ஏன் திடீர்னு"

"மொத்தமா வாங்கிட்டு ஊர் பக்கம் போயிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். ஊர்ல போய் ரியல் எஸ்டேட் பண்ணிக்கலாம்னு ஒரு திட்டம் இருக்கு. நம்ம மூணு பேரும் சேர்ந்தே பண்ணலாம். இதை பத்தி எல்லாம் என் மச்சான்கிட்ட பேச தான் உடனே போறேன்"

"சரி. நான் இன்னொரு காப்பி போட்டு வைக்கறேன்"

"சரி. நான் ஊருக்கு போய் கூப்பிடறேன்"

"சரி. வேற எதுவும் விஷயமில்லையே"

"இல்லை. அப்பறம் பார்க்கலாம்"

சரி. நான் தூங்க போறேன். நாளைக்கு காலைல எழுந்து ஊருக்கு கிளம்பனும்.

...........................................

என்ன மணி ரெண்டாச்சு இன்னும் இவன் தூங்கலயேனு பாக்கறீங்களா? இவ்வளவு நேரம் நித்யாக்கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். ரூம்ல எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க. அசோக் சீக்கிரமே தூங்கிட்டான். நாலு நாளா கோட் பண்ணதுல அவன் பயங்கர டயர்ட் ஆகிட்டான். நானும் தான் கோடிங் பண்ணேன். ஆனா அதெல்லாம் நித்யாகிட்ட சொல்ல முடியாது. அதுவுமில்லாம அவக்கூட பேசும் போது எனக்கு தூக்கமும் வர மாட்டீங்குது.

என்ன வந்தவுடனே லாப்-டாப்பை ஓப்பன் பண்றேனு பாக்கறீங்களா? வெற்றி யாருக்காவது ஏதாவது பேசினானு பார்த்துட்டு தூங்கலாம்.

ஏதோ ரெண்டு ஃபைல் இருக்கு. இருங்க கேட்டுட்டு வரேன்.

(ஆட்டம் தொடரும்...)

36 comments:

Anonymous said...

Samma viru viruppu indha episode. Avanga ippa audio file ketonne than soodu pidikumnu nenakiren.

Adhu epdi pasanga manasa sariya purinji vechitu eludhiringa??!! ;-)

"Nithya oda pesarche thookame vara mattendu"....

Experiencea? ;-)

-> Hermione.

இவன் said...

சூப்பரா போகுது வெட்டி அடுத்த பகுதி எப்போ??

Anonymous said...

Romba nalla irukku vetti.

விஜய் ஆனந்த் said...

சூப்பரப்பு!!!

:-)))...

Anonymous said...

Hi,

kadhai nalla interesting-aa pogudhu. but, konjam vulgar adhigama irukku. adhu reduce panna paarungalen. moreover, ravi pesara part increase panninna innum nalla irukkumnu ninaikiren.

Regards,
Nandakumar G.

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Samma viru viruppu indha episode. Avanga ippa audio file ketonne than soodu pidikumnu nenakiren.//

இருக்கலாம் :)

//

Adhu epdi pasanga manasa sariya purinji vechitu eludhiringa??!! ;-)

"Nithya oda pesarche thookame vara mattendu"....

Experiencea? ;-)

-> Hermione.//

நல்ல வேளை... இதுக்கு எக்ஸ்பீரியன்ஸானு கேட்டீங்க... இல்லைனா பெரிய பிரச்சனையாகிருக்கும் :)

எதுல இண்ட்ரஸ்ட் இருக்கோ, அது செய்யும் போது தூக்கம் வராது. இப்ப மணி 12:25. நான் உங்க பின்னூட்டத்துக்கு பதில் சொல்லலையா... அது மாதிரி தான் :)

முன்னாடி நெல்லிக்காய் னு ஒரு காதல் கதை எழுதினேன். அது விடியகாலை 4 மணி வரைக்கும் எல்லாம் உக்கார்ந்து எழுதியிருக்கேன் :)

வெட்டிப்பயல் said...

//இவன் said...

சூப்பரா போகுது வெட்டி அடுத்த பகுதி எப்போ??//

அடுத்த பகுதி முடிஞ்சா நாளை... இல்லைனா அடுத்த புதன் இந்திய நேரம் :)

வெட்டிப்பயல் said...

//Karuppiah said...

Romba nalla irukku vetti.//

மிக்க நன்றி கருப்பையா :)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

சூப்பரப்பு!!!

:-)))...//

மிக்க நன்றி விஜய் ஆனந்த் :)

வெட்டிப்பயல் said...

//Hi,

kadhai nalla interesting-aa pogudhu. but, konjam vulgar adhigama irukku. adhu reduce panna paarungalen. moreover, ravi pesara part increase panninna innum nalla irukkumnu ninaikiren.

Regards,
Nandakumar G.//

மிக்க நன்றி நந்த குமார்...

கொஞ்சம் வல்கர் இல்லை... ரொம்ப வல்கரா இருக்கு :(

இனிமே எதுவும் அப்படி இருக்காது. ரெண்டே பகுதி தான்...

Anonymous said...

kadhai bayangarama pogudhu vetti...neja kadhaya base panni ilenu neenga sonnadhuku apuram ipo konjam nimmadhiya padika mudiyudhu...

oorukku poittu vandhuttu adutha baagangala podunga...Happy long weekend :-)

Janani.

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

kadhai bayangarama pogudhu vetti...neja kadhaya base panni ilenu neenga sonnadhuku apuram ipo konjam nimmadhiya padika mudiyudhu...

oorukku poittu vandhuttu adutha baagangala podunga...Happy long weekend :-)

Janani.//

மிக்க நன்றி ஜனனி...

இது முழுக்க முழுக்க கற்பனை தான்...

Anonymous said...

ipo dhan ungaloda வலைப்பதிவர் வாத்தியார்கள் padhiva padichen..sirichu sirichu vayiru punnayiduchu...

ore nerathula serious a thodarkadhayum zhudhareenga...adhe samayam nagaichuvailayum kalakureenga...neenga cinema ku nagachuvai track e ezhudhalaamnu nenaikaren...

avlo nakkal and comedy irukku unga writing la...thodarndhu ezhudhi kalakunga :-)

Janani

Anonymous said...

naan konja naala dhaan ungaloda blog padichuttu irukken...aana ipo regular visitor aagitten..and ungaloda pazhaya padhivugalayum padichutu irukken..ellame romba arumaiya irukku vetti...all the best for all ur future writings...

Janani.

பாபு said...

கொஞ்சம் வேகம் அதிகமாகி விட்டது,கீப் இட் அப்

Divyapriya said...

ஐயோ...படு பயங்கரமா இருக்கு!

Anonymous said...

// Vetti said ...

இனிமே எதுவும் அப்படி இருக்காது. ரெண்டே பகுதி தான்...//

Can be extended more :)

திவாண்ணா said...

ம்ம்ம்... சூடாயிடுச்சு!

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

ipo dhan ungaloda வலைப்பதிவர் வாத்தியார்கள் padhiva padichen..sirichu sirichu vayiru punnayiduchu...

ore nerathula serious a thodarkadhayum zhudhareenga...adhe samayam nagaichuvailayum kalakureenga...//

தொடர்ந்து சீரியஸா எழுதனா எனக்கே கஷ்டமா இருக்கும். அதனால ரிஃப்ரெஷ் பண்ணிக்க தான் இப்படி காமெடி எழுதறது :)

இந்த மாதிரி எல்லாருமே சாதாரணமா எழுதுவாங்க :)

//neenga cinema ku nagachuvai track e ezhudhalaamnu nenaikaren...

avlo nakkal and comedy irukku unga writing la...thodarndhu ezhudhi kalakunga :-)

Janani//

மிக்க நன்றி ஜனனி :)

ஆனா சினிமாங்கறது சாதாரண விஷயம் கிடையாது. எல்லா மக்களையும் ரசிக்க வைக்கனும் :)

தமிழினி..... said...

வெட்டி அண்ணே ,கதை படு வேகமா போகுது...
ஆனா,படிக்க படிக்க மனசு வருத்தமா இருக்கு....அப்பப்போ,நித்யாவையும் ரவியையும் சந்திக்க வைங்க....மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..

ஆனாலும்,இவ்வளவு வில்லத்தனம் உடம்புக்கு ஆகாது... :)))))

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

naan konja naala dhaan ungaloda blog padichuttu irukken...aana ipo regular visitor aagitten..and ungaloda pazhaya padhivugalayum padichutu irukken..ellame romba arumaiya irukku vetti...all the best for all ur future writings...

Janani.//

மிக்க நன்றி ஜனனி...

அக்டோபர்ல இந்தியா வர வரைக்கும் தினமும் எழுதலாம்னு ப்ளான்...

வெட்டிப்பயல் said...

//பாபு said...

கொஞ்சம் வேகம் அதிகமாகி விட்டது,கீப் இட் அப்//

மிக்க நன்றி பாபு :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...

ஐயோ...படு பயங்கரமா இருக்கு!//

ஆமாம் திவ்யா... அதான் முதல் பகுதியிலே சொன்னனே...

வெட்டிப்பயல் said...

//Swaminathan said...

// Vetti said ...

இனிமே எதுவும் அப்படி இருக்காது. ரெண்டே பகுதி தான்...//

Can be extended more :)//

சீக்கிரம் முடிங்க சீக்கிரம் முடிங்கனு எல்லாரும் சொல்லிட்டு இப்ப இப்படி சொன்னா எப்படி :)

ஆனா கதைல யார் சொல்லியும் எதுவும் மாத்தல. திட்டமிட்டபடி தான் பயனிச்சிட்டு இருக்கு :)

வெட்டிப்பயல் said...

//திவா said...

ம்ம்ம்... சூடாயிடுச்சு!//

ஆமா...

வெட்டிப்பயல் said...

// தமிழினி..... said...

வெட்டி அண்ணே ,கதை படு வேகமா போகுது...
ஆனா,படிக்க படிக்க மனசு வருத்தமா இருக்கு....அப்பப்போ,நித்யாவையும் ரவியையும் சந்திக்க வைங்க....மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..

ஆனாலும்,இவ்வளவு வில்லத்தனம் உடம்புக்கு ஆகாது... :)))))//

ஹா ஹா ஹா :)

அதை தான் நான் முதல்லயே சொல்லிட்டனே :)

ஜியா said...

:((

:)) - nala poikittu irukuthu

Ramya Ramani said...

அட நீங்க கேட்டது இப்பல்ல விளங்குது !
நான் இன்னிக்கி தான் இந்த பார்ட் படிக்கறேன்..

கொஞ்சம் பயங்கரமாயில்ல போகுது :(

பாப்போம் இவங்கள ஹீரோ எப்படி ஹான்டில் பண்றாருன்னு

மங்களூர் சிவா said...

ச்சும்மா அதிருதில்ல......

MSK / Saravana said...

//தமிழினி..... said...
வெட்டி அண்ணே ,கதை படு வேகமா போகுது...
ஆனா,படிக்க படிக்க மனசு வருத்தமா இருக்கு....அப்பப்போ,நித்யாவையும் ரவியையும் சந்திக்க வைங்க....மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..

ஆனாலும்,இவ்வளவு வில்லத்தனம் உடம்புக்கு ஆகாது... :)))))//

ரிப்பீட்டேய்..
;)

Prabu Raja said...

Ultra fast..
Great explanations my dear Balaji.

Thanks for posting the next part today.

Expecting the next one.. :-)

நாடோடி said...

செம்ம ஸ்பீடு... சூப்பரா போகுது..

//
Blogger வெட்டிப்பயல் said...
//Swaminathan said...
// Vetti said ...
இனிமே எதுவும் அப்படி இருக்காது. ரெண்டே பகுதி தான்...//
Can be extended more :)//
சீக்கிரம் முடிங்க சீக்கிரம் முடிங்கனு எல்லாரும் சொல்லிட்டு இப்ப இப்படி சொன்னா எப்படி :)
//
பாலாஜி யார் சொன்னது சீக்கிரம் முடிக்க சொல்லி?? அவங்க (பழைய கமெண்ட்ஸ்ல) சொன்னது, ரொம்ப வெயிட் பண்ண வைக்காம அடுத்தடுத்தப் பகுதிகள சீக்கிறம் போட சொன்னா மாதிரி தான் தோனுச்சு..

//ஆனா கதைல யார் சொல்லியும் எதுவும் மாத்தல. திட்டமிட்டபடி தான் பயனிச்சிட்டு இருக்கு :) //
நல்லது... எதையும் கட் பண்ணி Flow'a மாத்தி அவசரமா முடிச்சிடாத.. கதை நல்லா போகுது..

மறுபடியும் எப்போதாவது, ஆறம்பத்துல இருந்து படிக்கும் போது முடிவு இன்னும் நல்லா சொல்லிருக்கலாமோனு தோனாம இருக்கற மாதிரி பாத்துக்கோ..

Syam said...

சூப்பரா ஆரம்பிச்சுது சீக்ரமா தொடரும் போட்டுட்டீங்க...

வெட்டிப்பயல் said...

//Syam said...

சூப்பரா ஆரம்பிச்சுது சீக்ரமா தொடரும் போட்டுட்டீங்க...//

நாட்ஸ்,
இப்ப படிச்சி சொல்லுங்க :)

வெட்டிப்பயல் said...

நாடோடி,
அப்படி பயப்பட தேவையில்லை.. மறுபடியும் நாலு நாள் யோசிச்சிட்டு அது தான் நல்ல முடிவுனு எழுதிட்டேன் :)

வெட்டிப்பயல் said...

//Prabu Raja said...

Ultra fast..
Great explanations my dear Balaji.

Thanks for posting the next part today.

Expecting the next one.. :-)//

பிரபு ராஜா,
தொடர்ந்து படிப்பதற்கு நன்றி :)