தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, August 28, 2008

ஆடு புலி ஆட்டம் - 17

நல்ல படியா ட்ரீட் முடிச்சி வீட்டுக்கு வந்தாச்சுங்க. பயப்படற அளவுக்கு பெருசா எதுவுமாகல. இருங்க தினேஷ்கிட்ட இருந்து ஃபோன் வருது.

"சொல்லு தினேஷ். இப்ப தான் வீட்டுக்கு வந்தேன்"

"எதுவும் பிரச்சனையில்லையே?"

"எதுவுமில்ல. எல்லாரும் ஜாலியா பேசிட்டு இருந்தாங்க"

" மறுபடியும் பசங்க எல்லார்கிட்டயும் நீ நல்லா பேசினது நல்லதுக்கு தான். பின்னாடி இந்த பசங்க எல்லாம் தேவைப்படுவாங்க"

"ஆமாம். நானும் அதனால தான் எல்லார்கிட்டயும் பழைய படியே ஜாலியா பேசிட்டு இருந்தேன்."

"எதுவும் சந்தேகப்படற மாதிரி நடக்கல இல்ல"

"இல்ல. ஐயோ ஒண்ணு மறந்துட்டேன். கிஷோர் ஒரு பொண்ணுக்கிட்ட பேசிட்டு இருந்தான். திடீர்னு அவன் ஃபோன் சார்ஜ் தீர்ந்துடுச்சினு என் ஃபோனை வாங்கிட்டு கீழ போயிட்டான். ஒரு பத்து நிமிஷம் கழிச்சி தான் வந்தான்"

"பொண்ணுகிட்ட தான் பேசினான்னு நல்லா தெரியுமா?"

"ஆமா. நான் கூட பேசினேன்"

"சரி அந்த பொண்ணு நம்பர் எனக்கு சொல்லு"

"ஏன்?"

"எதுக்கும் அந்த நம்பருக்கு பூத்ல இருந்து பண்ணி கன்ஃபர்ம் பண்ணிக்கலாம். நம்ம ஜாக்கிரதையா இருக்கறது நல்லது"

"இரு பார்த்து சொல்றேன்"

"ஹ்ம்ம்ம்"

"தினேஷ் அதுல எந்த நம்பரும் இல்லை. கால் ஹிஸ்டரி எல்லாம் டெலிட் பண்ணிட்டான் போல"

"அதக்கூட நீ நோட் பண்ணலயா?"

"அவன் ஃபோன் பேசிட்டு வந்தவுடனே எல்லாரும் அவனை ஓட்டினாங்க. நான் அதுல மறந்து போயிட்டேன்"

"ஹிம்ம்ம்... அவன் மத்தபடி எப்படி பேசினான்?"

"அவன் நல்லா தான் பேசினான். அவன் மேல எதுவும் சந்தேகப்படற மாதிரி இல்லை"

"சரி. எப்படியும் அவன் வேற ஏதாவது நம்பர் தேடிருந்தாலும் கிடைச்சிருக்காது. ஒரு வேளை அந்த பொண்ணு நம்பர் தேவையில்லாம உன் செல்ஃபோன்ல இருக்க வேண்டாம்னு டெலிட் பண்ணிருக்கலாம்"

"வேற எதுவும் பிரச்சனையிருக்காதில்ல"

"வேற எதாவது பிரச்சனை பண்ணா அந்த கிஷோரை கவனிச்சிக்கலாம்"

"என்ன சொல்ற தினேஷ்?"

"அவன் என்னைக்கு ஆன் சைட் போறேனு சொல்லியிருக்கான்?"

"இன்னும் நாலு நாள்ல கிளம்பறேனு சொல்லியிருக்கான்"

"ஒரு வாரம் கழிச்சி ஃபோன் பண்ணுவோம். அப்படி அவன் போகலைனு தெரிஞ்சா அப்பறம் அவனை கவனிச்சிக்கலாம்"

"தினேஷ், அப்படி ஏதாவதுனா நாம பேசாம எஸ்கேப்பாகி ஊருக்கு போயிடலாம்டா. எப்படியும் மாசம் ரெண்டு லட்சம் வருதில்லை. உனக்கு தேவையானதை நம்ம ஏரியாவுலயே மாசம் மாசம் ஏற்பாடு பண்றேன். கிஷோர் கொஞ்சம் பெரிய இடம்டா"

"ஒருத்தனுக்கு பயந்து ஊருக்கு ஓடறதா? பூர்ணிமா ஏற்படுத்துன காயத்துக்கு எனக்கு மருந்து வேணும் வெற்றி. அது இல்லாம என்னால இருக்க முடியாது"

"எனக்கு புரியுது தினேஷ். இருந்தாலும்..."

"எதுவும் பேசாத. பிரச்சனை வந்தா நான் பாத்துக்கறேன். உனக்கு பணம் கிடைக்குதில்லை. எனக்கு மருந்து கிடைக்கணும். அவ்வளவு தான். நம்ம ஊர்ல இருக்கறது எல்லாம் எனக்கு மருந்து இல்லை. இந்த ஊர்ல, இந்த வேலை செய்யறதுங்க தான் எனக்கு மருந்து. புரிஞ்சிதா?"

"சரி. ஏதாவது பிரச்சனைனா உனக்கு சொல்றேன். இனிமே எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கேன். நீ தூங்கு"

"சரி. நாளைக்கு பார்க்கலாம்"

"சரி"

எப்படி இருந்தவன் இப்ப எப்படி ஆயிட்டான் பார்த்தீங்களா? அவனை என கூடவே வெச்சிக்கனும்னு சொல்லி நான் அவனுக்கு கொடுத்த மருந்தே இப்ப எவ்வளவு பிரச்சனையாகிடுச்சி பாருங்க. இன்னும் அவனுக்கு முதல் தடவை கொடுத்தது ஞாபகமிருக்கு. அந்த பொண்ணு பேரு விஜயலக்ஷ்மி. குமாருக்கு பேச சொல்லி அன்னைக்கு எழுதி கொடுத்ததே நான் தான். தினேஷ்க்கு கூட தெரியாது. அவன் பேசனது இன்னும் என் கண்ணு முன்னாடியே இருக்கு.

"ஹலோ"

"ஹலோ. யார் பேசறது?"

"நாங்க தான் பேசறோம். நாங்க எல்லாரும் நாளைக்கு ஊரைவிட்டு போறோம்"

"தயவு செஞ்சி என்னை விட்டுடுங்களேன். ப்ளீஸ்"

"அதான் நானும் சொல்றேன். இது தான் உனக்கு கடைசி ஃபோன். நாளைக்கு விடிய காலைல நாங்க இந்த ஊரைவிட்டு போறோம். எங்களுக்கு அவசரமா காசு தேவைப்படுது. இதுக்கு மேல உனக்கு எப்பவுமே ஃபோன் பண்ண மாட்டோம். நீ பயப்பட வேண்டாம். நீ காசு கொடுக்கும் போது எடுத்த ஃபோட்டோ எல்லாம் கூட உனக்கு கொடுத்திடறோம். எங்களுக்கு பத்தாயிரம் இப்ப அவசரமா தேவைப்படுது"

"இந்த நேரத்துல நான் எங்க போவேன்"

"இப்ப வேணாம். நாளைக்கு காலைல ஒரு அஞ்சரை மணிக்கா நாங்க சொல்ற இடத்துல வந்து கொடுத்துடு. எங்களுக்கு ஏழு மணிக்கு ட்ரெயின். நீ காசு கொடுக்கறதை வெச்சி தான் நாங்க ஊருக்கு போக முடியும். நீ வரலைனா அப்பறம் ரெண்டு பேருக்குமே கஷ்டம். எவ்வளவோ கொடுத்துட்ட. கடைசி பத்தாயிரம் தான். இதுக்கு மேல உன்னை தொந்தரவு பண்ண மாட்டோம்"

"நிஜமா சொல்றீங்களா?"

"ஆமா. சத்தியமா சொல்றோம். நாளைக்கு காலைல ஒரு அஞ்சரை மணிக்கா கலாசிப்பாளையத்துல இருக்கற ராஜூ கௌடா தெருவுல மூணாவது ஸ்ட்ரீட்ல இருக்கற ஹூசைன் லாட்ஜ் பக்கத்துல வா. நானே வந்து உன்கிட்ட எல்லா சாட்சியையும் கொடுத்துட்டு காசு வாங்கிக்கறேன்"

"அந்த இடத்துக்கு எல்லாம் நான் வர முடியாது. நீங்க வேணா மடிவாலா வந்துடுங்களேன். நான் உங்களுக்கு பணம் எடுத்து தரேன்"

"நீ என்ன பண்ணனும்னு நான் சொல்றேன். நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லக்கூடாதுனு சொன்னது மறந்து போச்சா? நாங்க இறங்கி வந்துருக்கோம்னு மேல ஏறலாம்னு நினைச்ச உனக்கு தான் விபரீதம். ஒழுங்கா பஸ் பிடிச்சி வா. மார்க்கெட் போற எல்லா பஸ்ஸும் அங்க தான் வரும். வேற யாரையும் கூட்டிட்டு வந்தா நான் வெளியவே வர மாட்டேன். நீ காசோட வரலைனா அப்பறம் உன் வாழ்க்கைலயே பண்ற பெரிய தப்பு இது தான். மறந்துடாத. சரியா காலைல அஞ்சரை மணி"

ஹூசைன் லாட்ஜ் பக்கத்துல தான் முத்து லாட்ஜ். அதுல தான் நம்ம பசங்க குமாரும், துரையும் வேலை செய்யறானுங்க. ரெண்டுத்துக்கும் நடுவுல ஒரு ரெண்டு அடி சந்து இருக்கும். அது சாக்கடை தண்ணி வரதுக்காக ரெண்டு லாட்ஜ் காரங்களும் விட்ட இடம். அந்த சந்தை மறைக்கறதுக்கு ஒரு கதவும் இருக்கும். அது எப்பவும் பூட்டி தான் இருக்கும். அந்த சந்து வழியா போனா முத்து லாட்ஜ் பின் பக்க காம்பௌண்ட் போக முடியும். காம்பௌண்டுக்கும் பில்டிங்கும் நடுவுல நாலு அடி இடம் இருக்கும். அதுல இருந்து சுலபமா வராண்டாவுக்கு போகலாம். அங்க முதல் ரூம் காலியா தான் இருந்துச்சு.

அந்த விஜி பொண்ணு எதிர்பார்த்த மாதிரியே பயந்துக்கிட்டே அந்த லாட்ஜ் பக்கத்துல வந்துட்டு இருந்தா. அங்க இருந்த நாயிங்க கூட தூங்கிட்டு தான் இருந்துச்சு. சரியா அந்த சந்து பக்கத்துல குமார் நின்னுட்டு இருந்தான். அந்த சந்து கதவு திருந்துருந்துச்சு.

அவ பயந்துக்கிட்டே காசை ஹேண்ட் பேக்ல இருந்து எடுக்கற நேரம் பார்த்து பின்னாடி இருந்து வந்த துரை அவ முகத்துல க்ளோரோஃபார்ம் கலந்த துண்டை வெச்சி அழுத்தினான். அப்படியே குமார் அவ காலை பிடிச்சி தூக்கிட்டு சந்துக்குள்ள போயிட்டானுங்க. உள்ள போனவுடனே துரை அந்த கதவை அடைச்சிட்டான். மொத்தமா இதெல்லாம் பத்து நொடிக்குள்ள நடந்துடுச்சு


ஏழு மணிக்கு தினேஷை நான் தான் லாட்ஜிக்கு கூப்பிட்டு வந்தேன். அவனுக்கு என்னனு புரியவே இல்லை. அந்த ரூமுக்கு கூப்பிட்டு போய் கதவை மூடினேன். உள்ள கட்டில்ல விஜி அரை மயக்கத்துல இருந்துச்சு. அவனுக்கு ஒரே அதிர்ச்சி.

"எனக்கு நீ எவ்வளவோ உதவி பண்ணற. அதான் உனக்கு என் கிப்ட்"

"இல்லை வெற்றி. எனக்கு இதுல எல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லை. அந்த பொண்ணை விட்டுடு"

"தினேஷ். பூர்ணிமா உன்னை எப்படி அசிங்கப்படுத்தினா. இந்த பொண்ணுங்க எல்லாரும் இப்படி தான். உன் வலிக்கு இது தான் மருந்து. நான் சொல்றேன். கேளு. நீ ஆடா இருந்தா உன்னை அடிப்பாங்க. நீ புலியா இரு" சொல்லிட்டு அவனை உள்ள விட்டுட்டு வெளிய வந்து கதவை மூடினேன்.

ஒரு மணி நேரம் கழிச்சி தினேஷ் வந்தான்.

"நீ சொன்னது சரிதான். என் வலிக்கு இது தான் பெஸ்ட் மருந்துனு நானும் நினைக்கிறேன். இப்ப நான் உலகத்தையே ஜெயிச்ச மாதிரி சந்தோஷமா இருக்கேன்... I am the God"

அவன் முகத்துல ஒரு வெறி தெரிஞ்சிது. அது தான் எனக்கும் வேணும்.

"வெற்றி, அடுத்த ஆடு எப்ப கிடைக்கும்?"

(ஆட்டம் தொடரும்...)

65 comments:

வெட்டிப்பயல் said...

எப்பவும் கதையை ரிவ்வியூ பண்ற மக்கள்ஸ் தூங்கிட்டாங்க போல. இன்னைக்கு போட்டாகனும்னு வேகமா எழுதி போட்டுட்டேன். எதாவது புரியாத மாதிரி இருந்தா தயவு செய்து சொல்லவும்...

Anonymous said...

me the firstu

-> Hermione.

பாபு said...

நன்றாகவே போகிறது,தொடர்ந்து துரத்துங்கள்

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

me the firstu

-> Hermione.//

கதையை படிச்சிட்டு எதுவும் சொல்லவேயில்ல :(

வெட்டிப்பயல் said...

// பாபு said...

நன்றாகவே போகிறது,தொடர்ந்து துரத்துங்கள்//

மிக்க நன்றி பாபு :)

Divyapriya said...

நல்லா புரியுதே...கதை வேகமா போகுது, சீக்கரம் வில்லன்களுக்கு ட்ரெர கிளப்புங்க...அப்ப தான் சூடு பிடிக்கும் :-)

siva gnanamji(#18100882083107547329) said...

யார் சொல்றது என்பதை எழுதி அப்றம்
அவங்களைப் பேசச்சொல்லலாமெ...
முதல் பத்தி முடியறவரை கொஞ்சம்
கன்பூசனாய்டுது

Anonymous said...

very interesting
thanx for this story

Ramya Ramani said...

ஹிம்ம் ஸோ இந்த கூட்டத்தோட மெயின் ரீஸன் வெளிய வந்திருச்சு போல..

நல்லா இருக்கே உங்க Continuity. No Doubts Anna :))

Ramya Ramani said...

ஆனா கொஞ்சம் படிக்க கஷ்டமாத்தான் இருக்கு இப்படி கூட நடக்குமான்னு :(

பாப்போம் இவங்க எப்படி பிடி படறாங்கன்னு ஆனாலும் \Damage Done is Done :((

விஜய் ஆனந்த் said...

// வெட்டிப்பயல் said...
எப்பவும் கதையை ரிவ்வியூ பண்ற மக்கள்ஸ் தூங்கிட்டாங்க போல. இன்னைக்கு போட்டாகனும்னு வேகமா எழுதி போட்டுட்டேன். எதாவது புரியாத மாதிரி இருந்தா தயவு செய்து சொல்லவும்... //

நா தூங்கலீங்கோ...

எல்லாம் நல்லா தெளிவா புரியுதுங்கோ...எவ்வளவோ புரிஞ்சிக்கறோம்....இத புரிஞ்சுக்க மாட்டோமா!!!

நீங்க எழுதற வேகம் பத்தலீங்க...இன்னும் வேகமா!!!

Cheranz.. said...

Hi Vetti,
Next round of Aadu puli aatam has got serious..., and you have started copyrighting your work? Good!

Anonymous said...

kadhai top gear la padu vegama pogudhu vetti.thriller film paakara feeling...super...indha week end kulla villaingaloda aatatha mudichudunga :-)

Janani.

Anonymous said...

HI,

idhu varai naan comments eludha villaye thavira daily padithu kondu thaan irukiren. Even today morning I checked your blog before you published this part.

romba nalla eludhareenga.

Regards,
Nandakumar G.

Anonymous said...

Gr8 Going. Waiting for the next part :)

Anonymous said...

comment poturundhene..!! varalaya? :(

Anonymous said...

Thala oru attendance pottukuren.....Irunga Kathaya paduchittu Varen :)

இவன் said...

அடுத்த பகுதி எப்போ வெட்டி?? அதையும் போடுங்க waiting for that

மங்களூர் சிவா said...

நல்லா புரியுதுங்ணா!
கலக்கலா போய்கிட்டிருக்கு.

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

நல்லா புரியுதே...கதை வேகமா போகுது, சீக்கரம் வில்லன்களுக்கு ட்ரெர கிளப்புங்க...அப்ப தான் சூடு பிடிக்கும் :-)//

என் ரூமேட் படிச்சிட்டு யார் பேசறாங்கனே புரியலைனு சொன்னான். அவன் கதையை தொடர்ந்து படிக்கறதில்லை.

யார் பேசறாங்கனு முக்கியமில்லை. என்ன பண்றாங்கனு தெளிவா புரியுதானு கேட்டேன். அது புரியுதுனு சொல்லிட்டான் :)

அதான் ஒரு பயம் :)

வெட்டிப்பயல் said...

// siva gnanamji(#18100882083107547329) said...

யார் சொல்றது என்பதை எழுதி அப்றம்
அவங்களைப் பேசச்சொல்லலாமெ...
முதல் பத்தி முடியறவரை கொஞ்சம்
கன்பூசனாய்டுது//

அதை தான் நானும் யோசிச்சேன். ஆனா ரெண்டாவது பத்தி வரும் போதே புரிய ஆரம்பிச்சிடுதேனு ஃபிரியா விட்டுட்டேன் :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

very interesting
thanx for this story//

மிக்க நன்றி நண்பரே :)

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

ஹிம்ம் ஸோ இந்த கூட்டத்தோட மெயின் ரீஸன் வெளிய வந்திருச்சு போல..
//

இந்த கூட்டத்துல முக்கிய காரணம் பணம் தான்மா. ஆனா அதுல எந்த பிரச்சனையும் இருக்க கூடாதுனு தான் இதெல்லாம்...

// நல்லா இருக்கே உங்க Continuity. No Doubts Anna :))//

ரொம்ப நன்றி தங்கச்சி :)

(அவசரமா எழுதி போட்டது. அதனால தான் இதெல்லாம் :) )

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

ஆனா கொஞ்சம் படிக்க கஷ்டமாத்தான் இருக்கு இப்படி கூட நடக்குமான்னு :(
//

இப்படியெல்லாம் நடக்க கூடாதுனு தான் நானும் ஆசைப்படறேன். இந்த கதைக்கான பேக் க்ரவுண்ட் இந்த தொடர் முடிச்சவுடனே எழுதறேன்...


//
பாப்போம் இவங்க எப்படி பிடி படறாங்கன்னு ஆனாலும் \Damage Done is Done :((//

ஆமாம் :((((

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

// வெட்டிப்பயல் said...
எப்பவும் கதையை ரிவ்வியூ பண்ற மக்கள்ஸ் தூங்கிட்டாங்க போல. இன்னைக்கு போட்டாகனும்னு வேகமா எழுதி போட்டுட்டேன். எதாவது புரியாத மாதிரி இருந்தா தயவு செய்து சொல்லவும்... //

நா தூங்கலீங்கோ...

எல்லாம் நல்லா தெளிவா புரியுதுங்கோ...எவ்வளவோ புரிஞ்சிக்கறோம்....இத புரிஞ்சுக்க மாட்டோமா!!!
//
அப்பாடா.. ரொம்ப சந்தோஷம். சில சமயம் நான் எழுதி யாருக்குமே புரியாம போன கதைகள் எல்லாம் இருக்கு :)

அதுல முக்கியமானது லிப்ட் ப்ளீஸ்னு ஒரு தொடர் கதை :)

// நீங்க எழுதற வேகம் பத்தலீங்க...இன்னும் வேகமா!!!//

ஆஹா... நேத்து சமையல் கூட செய்யாம எழுதினேன்...

வெட்டிப்பயல் said...

//Cheran Parvai said...

Hi Vetti,
Next round of Aadu puli aatam has got serious..., and you have started copyrighting your work? Good!//

மிக்க நன்றி சேரன் பார்வை...

காப்பி ரைட் எல்லாம் இங்க வேலைக்கே ஆகாது.. அடுத்து ஒரு வாரம் முடிஞ்சி ஒன்னொரு வித்தியாசமான தொடர் ஆரம்பிக்கிறேன்...

அதுக்கு ஏதாவது காபி ரைட் வாங்க முடியுமானு யோசிக்கனும் :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

kadhai top gear la padu vegama pogudhu vetti.thriller film paakara feeling...super...indha week end kulla villaingaloda aatatha mudichudunga :-)

Janani.//

ஜனனி,
இந்த வாரம் லாங் வீக் எண்ட்.. ஊர் சுத்த கிளம்பிடுவேன்... அதனால வந்து தான் கதையை முடிக்கனும்னு நினைக்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

HI,

idhu varai naan comments eludha villaye thavira daily padithu kondu thaan irukiren. Even today morning I checked your blog before you published this part.

romba nalla eludhareenga.

Regards,
Nandakumar G.//

நந்தகுமார்,
மிக்க நன்றி...

காலைல நீங்க பார்த்த நேரத்துல தான் எழுதிட்டு இருந்தேன். எழுதி முடிச்சவுடனே பதிவு போட்டாச்சு :)

http://urupudaathathu.blogspot.com/ said...

புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு...
ஆனாலும் புரியுது...

Anonymous said...

//வெட்டிப்பயல் said...
எப்பவும் கதையை ரிவ்வியூ பண்ற மக்கள்ஸ் தூங்கிட்டாங்க போல. இன்னைக்கு போட்டாகனும்னு வேகமா எழுதி போட்டுட்டேன். எதாவது புரியாத மாதிரி இருந்தா தயவு செய்து சொல்லவும்...

12:53 AM //

1 manikku publish panni irkkkenga thala.....Athan thoongittom ....Kalayil Eleunthaudan attendace pottachi ...Ippa Padichachi...... Kathaya regulara padikkiravangalukku kandippa katha puriyum....

//Divyapriya said...
நல்லா புரியுதே...கதை வேகமா போகுது, சீக்கரம் வில்லன்களுக்கு ட்ரெர கிளப்புங்க...அப்ப தான் சூடு பிடிக்கும் :-)// Repeateyyy


வெட்டிப்பயல் said...
//இந்த வாரம் லாங் வீக் எண்ட்.. ஊர் சுத்த கிளம்பிடுவேன்... அதனால வந்து தான் கதையை முடிக்கனும்னு நினைக்கிறேன் :)
//

Nangalum kilamburom.....Next paguthi Eppannu Sonna or commenta pottuttu kilambiduvomm

G said...

Naan vidama padikiren, Supera poguthu.

Oru edathula confuse aanen, vetri oda paguthi vanthu kathai oda beginner Ravi thanai patri sollura mari irrunthuchu... chinna confusin than poga poga seri aiduchu..

ப்ரசன்னா said...

சூப்பரு. கொஞ்சம் வேட்டையாடு விளாயாடு வாசனை அடிக்குது. இருந்தாலும் சூப்பரா இருக்கு.

ஒரு நாளைக்கு ரெண்டு பகுதியா போடலாமே.

வெட்டிப்பயல் said...

// Anbu said...

//வெட்டிப்பயல் said...
எப்பவும் கதையை ரிவ்வியூ பண்ற மக்கள்ஸ் தூங்கிட்டாங்க போல. இன்னைக்கு போட்டாகனும்னு வேகமா எழுதி போட்டுட்டேன். எதாவது புரியாத மாதிரி இருந்தா தயவு செய்து சொல்லவும்...

12:53 AM //

1 manikku publish panni irkkkenga thala.....Athan thoongittom ....Kalayil Eleunthaudan attendace pottachi ...Ippa Padichachi...... Kathaya regulara padikkiravangalukku kandippa katha puriyum....

//Divyapriya said...
நல்லா புரியுதே...கதை வேகமா போகுது, சீக்கரம் வில்லன்களுக்கு ட்ரெர கிளப்புங்க...அப்ப தான் சூடு பிடிக்கும் :-)// Repeateyyy


வெட்டிப்பயல் said...
//இந்த வாரம் லாங் வீக் எண்ட்.. ஊர் சுத்த கிளம்பிடுவேன்... அதனால வந்து தான் கதையை முடிக்கனும்னு நினைக்கிறேன் :)
//

Nangalum kilamburom.....Next paguthi Eppannu Sonna or commenta pottuttu kilambiduvomm//

அன்பு,
உங்கள் அன்புக்கு நான் அடிமை...

இன்னைக்கு எழுதலாம்னு ப்ளான் பண்ணிருக்கேன். அப்படி இன்னைக்கு எழுதலனா அடுத்த புதன் தான் :)

Divya said...

வில்லன் தான் பண்ற தப்புக்கு தன்னிலை விளக்கம் கொடுக்கிறமாதிரி இருக்கு இந்த பகுதில.....

கதை தொடர்ந்து படிக்கிறதால, எந்த கதாபாத்திரம் பேசுவது இதுன்னு கரெக்ட்டா புரியுது, குழப்பமெல்லாம் எதும் இல்ல அண்ணா:))

வெட்டிப்பயல் said...

// Swaminathan said...

Gr8 Going. Waiting for the next part :)//

மிக்க நன்றி சுவாமிநாதன் :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

comment poturundhene..!! varalaya? :(//

வந்துடுச்சானு பார்த்து சொல்லுங்க :)

Prathees R said...

கதை பிரமாதம்... இந்த பகுதி கொஞ்சம் வேட்டையாடு விளையாடு சாயலா தெரியுது.

வெட்டிப்பயல் said...

//இவன் said...

அடுத்த பகுதி எப்போ வெட்டி?? அதையும் போடுங்க waiting for that//

இவன்,
அடுத்த பகுதி எப்பனு தெரியல...

இந்த வாரம் லாங் வீக் எண்ட்... அதனால ஊர் சுத்த போறோம்... ஒரு வாரமா சரியா தூங்கல.. இன்னைக்கு பத்து மணிக்குள்ள எழுதலனா அடுத்த வாரம் தான் :(

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

நல்லா புரியுதுங்ணா!
கலக்கலா போய்கிட்டிருக்கு.//

ரொம்ப டாங்க்ஸ் சிவா :)

வெட்டிப்பயல் said...

// உருப்புடாதது_அணிமா said...

புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு...
ஆனாலும் புரியுது...//

தெளிவா குழப்பியாச்சா :)

வெட்டிப்பயல் said...

//G said...

Naan vidama padikiren, Supera poguthu.

Oru edathula confuse aanen, vetri oda paguthi vanthu kathai oda beginner Ravi thanai patri sollura mari irrunthuchu... chinna confusin than poga poga seri aiduchu..//

அப்பாடா... அதான் வேணும்... இந்த கதை எழுதி முடிச்சவுடனே "Making of ஆடு புலி ஆட்டம்" எழுதிடலாம் :)

நிறைய தகவல் அப்ப சொல்றேன் :)

வெட்டிப்பயல் said...

// ப்ரசன்னா said...

சூப்பரு. கொஞ்சம் வேட்டையாடு விளாயாடு வாசனை அடிக்குது. இருந்தாலும் சூப்பரா இருக்கு.
//

முதல்ல இந்த கதைக்கு வே.வி தான் வைக்கலாம்னு இருந்தேன் :)

//
ஒரு நாளைக்கு ரெண்டு பகுதியா போடலாமே.//

இதுக்கே தாவூ தீருது ப்ரசன்னா :)

வெட்டிப்பயல் said...

// Divya said...

வில்லன் தான் பண்ற தப்புக்கு தன்னிலை விளக்கம் கொடுக்கிறமாதிரி இருக்கு இந்த பகுதில.....
//

அவன் பண்றதே தப்பு. இதுல தன்னிலை விளக்கம் வேற கொடுக்கறான் பாருமா.. அது தான் கொடுமை :)

// கதை தொடர்ந்து படிக்கிறதால, எந்த கதாபாத்திரம் பேசுவது இதுன்னு கரெக்ட்டா புரியுது, குழப்பமெல்லாம் எதும் இல்ல அண்ணா:))//

ரொம்ப டேங்க்ஸ் தங்கச்சி... ஏன்னா நான் படிக்க சொன்ன பையன் கதையை தொடர்ந்து படிக்கறதில்லை :)

Unknown said...

கதையில light a "வேட்டையாடு விளையாடு" சாயல் இருக்குற மாதிரி தோணுது...எது எப்படி இருந்த என்ன, super a போகுது...

Prabu Raja said...

Nice story Mr. Balaji.
Thanks for posting daily. Please continue to do that.
:-)

MSK / Saravana said...

படு பயங்கர விறுவிறுப்பு..

நீங்க சொல்றத பார்த்தா.. இந்த கதை ஒரு உண்மையான சம்பவத்தை மேற்கோள் காட்டி எழுதபடுவதை போலிருக்கு..

நிஜங்கள் எப்போதுமே பயங்கரமானவை.

MSK / Saravana said...

அந்த விஜி பொண்ணு??

வெட்டிப்பயல் said...

// Saravana Kumar MSK said...

அந்த விஜி பொண்ணு??//

விஜயலஷ்மி தான் விஜினு சொல்றான் :)

MSK / Saravana said...

கடந்த பகுதிக்கு வேலை பளு காரணமாக பின்னூட்டமிட முடியவில்லை..
:(

வெட்டிப்பயல் said...

// Saravana Kumar MSK said...

படு பயங்கர விறுவிறுப்பு..

நீங்க சொல்றத பார்த்தா.. இந்த கதை ஒரு உண்மையான சம்பவத்தை மேற்கோள் காட்டி எழுதபடுவதை போலிருக்கு..

நிஜங்கள் எப்போதுமே பயங்கரமானவை.//

இது உண்மை சம்பவம் இல்லை.. நான் முன்னாடி பனி விழும் மலர்வனம்னு எழுதும் போது வேற ஒரு உண்மை சம்பவத்தை பேஸ் பண்ணி எழுத நினைச்சேன்...

அது பின்னாடி சொல்றேன் :)

வெட்டிப்பயல் said...

//Prabu Raja said...

Nice story Mr. Balaji.
Thanks for posting daily. Please continue to do that.
:-)//

மிக்க நன்றி பிரபு ராஜா...

இனிமே தினமும் போடறது கஷ்டம் தான் :)

வெட்டிப்பயல் said...

//Raja said...

கதையில light a "வேட்டையாடு விளையாடு" சாயல் இருக்குற மாதிரி தோணுது...எது எப்படி இருந்த என்ன, super a போகுது...//

வேட்டையாடு விளையாடு சாயலைவிட அஞ்சாதே சாயல் தான் அதிகம்னு நினைக்கிறேன் :)

MSK / Saravana said...

அண்ணா.. அது தெரியுதுங்க்னா.. தொடர்ந்து படிக்கிறேனே..

அந்த விஜி பெண் என்ன ஆனாள், இக்கொடூர சம்பவதிற்க்குபின்??
(கதையோடு ஒன்றி விட்டேனோ..?? அதுவும் நீங்கள் இத்தொடர்கதைக்கு பின் ஒரு கதை இருப்பதாக சொன்னதால், இன்னும் யோசிக்க வைக்கிறது, அந்த விஜி பெண்ணும் மற்ற பெண்களின் வாழ்கையும் என்ன ஆனதோ என்று..)

வெட்டிப்பயல் said...

//Saravana Kumar MSK said...

அண்ணா.. அது தெரியுதுங்க்னா.. தொடர்ந்து படிக்கிறேனே..

அந்த விஜி பெண் என்ன ஆனாள், இக்கொடூர சம்பவதிற்க்குபின்??
(கதையோடு ஒன்றி விட்டேனோ..?? அதுவும் நீங்கள் இத்தொடர்கதைக்கு பின் ஒரு கதை இருப்பதாக சொன்னதால், இன்னும் யோசிக்க வைக்கிறது, அந்த விஜி பெண்ணும் மற்ற பெண்களின் வாழ்கையும் என்ன ஆனதோ என்று..)//

இதெல்லாம் நிஜமில்லை... ரொம்ப பயப்படற நிலைமைக்கு எதுவுமில்லை...

ஃபிரஷ்யர்ஸ்க்கு வேலை வாங்கி தரேனு என் மெயில் ஐடிக்கு ரெஸ்யூம் அனுப்புங்கனு சொல்லி ஒரு நாதாரி நிறைய பேர் ரெஸ்யூம் வாங்கியிருக்கு.

இந்த yahoogroupsல நிறைய groupsla Freshersக்கு இருக்கு. அதுல அப்படி சொல்லி வாங்கியிருக்கான்.

அதுல இருக்குற பொண்ணுங்களுக்கு மட்டும், மெயில் அனுப்பறது ஃபோன் பண்றதுனு அலும்பு பண்ணிட்டு இருந்தான்.

மெயில் அனுப்பும் போது நான் Oracleல வேலை செய்யறேன், உங்களுக்கு வேலை வாங்கி தரேன். ஆனா நீங்க என் கூட ஃபிரெண்ட்லியா பழகனும்னு மெயில் அனுப்புவான். நான் கார் வெச்சிருக்கேன். நாம மைசூர் எல்லாம் சுத்தி பார்க்கலாம்னு அனுப்பினான்.

அதை பேஸ் பண்ணி தான் எழுத ஆரம்பிச்சேன்.

ப்ரசன்னா said...

//இந்த கதை எழுதி முடிச்சவுடனே "Making of ஆடு புலி ஆட்டம்" எழுதிடலாம் :)

நிறைய தகவல் அப்ப சொல்றேன் :)//

ஆஹா சூப்பர்... காத்திருக்கிறேன்

ஜியா said...

:))) gud flow....

Anonymous said...

யார் சொல்றது என்பதை எழுதி அப்றம்
அவங்களைப் பேசச்சொல்லலாமெ...
முதல் பத்தி முடியறவரை கொஞ்சம்
கன்பூசனாய்டுது//

Me the repeate, made me to read the first para twice

Deepak

பாபு said...

இந்த பகுதிக்கு கமெண்ட் முதலிலேயே போட்டுவிட்டேன்.ஊர் சுற்ற கிளம்புவதாக எழுதியிருக்கிறீர்கள்,வந்தவுடன் அதைப்பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்

Anonymous said...

konjam vettaiyadu vilayadu style vara mathiri irukku, illai?

Regards,
Nandakumar G.

வெட்டிப்பயல் said...

//ஜி said...

:))) gud flow....//

மிக்க நன்றி ஜி :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

யார் சொல்றது என்பதை எழுதி அப்றம்
அவங்களைப் பேசச்சொல்லலாமெ...
முதல் பத்தி முடியறவரை கொஞ்சம்
கன்பூசனாய்டுது//

Me the repeate, made me to read the first para twice

Deepak//

தீபக்,
மன்னிக்கவும். இன்னும் மூன்று பாகமே இருக்கும் நிலையில் கதையோட்டத்தை (Flow) மாற்ற விரும்பவில்லை.

ஒவ்வொருத்தரும் பேசும் போது நான் தான் "இன்னார்"னு சொல்றதை விட கதையோட்டத்துலயே நீங்க புரிஞ்சிக்கிற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். சில நேரங்கள்ல அதை இரண்டாவது பத்தியில் தான் கொண்டு வர முடிகிறது :(

வெட்டிப்பயல் said...

//பாபு said...

இந்த பகுதிக்கு கமெண்ட் முதலிலேயே போட்டுவிட்டேன்.ஊர் சுற்ற கிளம்புவதாக எழுதியிருக்கிறீர்கள்,வந்தவுடன் அதைப்பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்//

அடுத்த பகுதியும் போட்டாச்சு பாபு :)

ஊர் சுத்திட்டு வந்து எழுதறேன் :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

konjam vettaiyadu vilayadu style vara mathiri irukku, illai?

Regards,
Nandakumar G.//

வே.வி,
கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம்... அஞ்சாதே பார்க்கலையா?

Anonymous said...

//
வே.வி,
கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம்... அஞ்சாதே பார்க்கலையா?

//

parkaleengo...adhu vera irukka? neriya padam ungalai paadhichu irukku, pola?

Regards,
Nandakumar G.

Syam said...

சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கூடிகிட்டே போகுது...சூப்பர்