தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, August 13, 2008

கொல்ட்டி

"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க??? மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாதா???"

நான் சொல்லி முடிச்சதும் சுமாவுக்கு பயங்கர கோபம் வந்திடுச்சி.

ஆமாம் என்ன இருந்தாலும் அத்தனை பேர் முன்னாடி நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அதுவும் எல்லோரும் அவ டீமெட்ஸ்.

சாயந்திரம் 7 மணிக்கு எக்ஸ்டென்ஷனுக்கு கால் வந்தது.

"ரமேஷ் ஹியர்"

"சுமா பேசறேன்"

"ஹிம் சொல்லு"

"சாப்பிட போகலாம்"

"சாப்பிட போகலாமா??? மணி என்ன ஆகுது... இன்னும் புட் கோர்ட்ல சாப்படே ரெடி ஆகியிருக்காது. இன்னும் எப்படியும் அரை மணி நேரமாகும்"

"நான் என் சீட்டில இருந்தா இந்த குங்குமப் பொட்டு வேலை ஏதாவது கொடுக்கும். நீ வா. நம்ம சும்மா வாக்கிங் போயிட்டு அப்பறமா சாப்பிட போகலாம் "

"சரி... நீ என் பில்டிங் கிட்ட வந்து மிஸ்ஸுடு கால் கொடு. நான் வரேன்"

வழக்கம் போல் என்ன பேசினோம்னே தெரியாம பேசினோம்... 8 மணிக்கு அவள் மட்டும் சாப்பிட்டாள். அவளை மல்லேஸ்வரம் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, நான் கோரமங்களா பஸ் பிடித்து வீட்டிற்கு சென்றேன்.

"டேய் ரமேஷ், அந்த அம்மா சப்பாத்தி செஞ்சிருக்காங்க!!! உனக்கு ஹாட் பாக்ஸ்ல இருக்கு"

"ஏன்டா, சப்பாத்திக்கு தொட்டுக்க குருமாவையே காணோம்???"

"கரு வாயந்தான் கடைசியா சாப்பிட்டான்... அவந்தான் தீர்த்திருப்பான்"

"ஏன்டா சொல்லிருந்தா நான் ஆபிஸ்லயே சாப்பிட்டிருப்பேன்... சரி விடு நான் ஜாம் தொட்டு சாப்பிட்டுக்கறேன்"

சப்பாத்தி சாப்பிட ஆரம்பிக்கும் பொது... மிஸ்டு கால் வந்தது.
சுமா வீட்டிக்கு போய் சேர்ந்துட்டா. சரினு ஜெர்கின் போட்டுட்டு போனை எடுத்துட்டு மொட்டை மாடிக்கு போனேன். கீழே வரும்போது மணி 12:15.

ரூம்ல எல்லோரும் மும்மரமாக ஒருவரை ஒருவர் ஓட்டிக் கொண்டிருந்தனர்.
சப்பாத்தி ஆறிப் போய் அப்பளமாக இருந்தது. ஒருவழியாக சாப்பிட்டு முடித்து கூட்டத்தோடு சேர்ந்து அனைவரையும் ஓட்டிவிட்டு 1 மணிக்கு படுக்கைக்கு சென்றேன்.

தூக்கம் வரவில்லை. என்ன இருந்தாலும் இன்னைக்கு அவளை அத்தனை பேருக்கு முன்னால ஓட்டியிருக்க கூடாது. அதைப் பற்றி அவள் போன்ல கூட ஒரு வார்த்தை பேசல. குற்ற உணர்ச்சியாக இருந்தது.

சுமாவை முதன்முதலாக ட்ரெயினிங்கில் பார்த்தது. அவளை எப்போதும் ஆந்திரா கோஷ்டியுடன் தான் பார்க்க முடியும். ஒண்ணு, ரெண்டு முறை பேசியிருப்போம். அவ்வளவுதான்.

பிறகு ட்ரெயினிங் முடித்து, ஒவ்வொருவரையும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பிராஜக்டில் போட்டார்கள்.

நானும், சுமாவும் ஒரே பிராஜக்ட்டில் சேர்ந்தோம். அவளுக்கு தமிழ் தெரியாது, எனக்கு தெலுகு புரியாது. எப்பவுமே இங்கிலிஸில் தான் பேசிக் கொள்வோம். ரெண்டு பேரும் ஒரே மாட்யுல். அடிக்கடி டெட்லைன் மீட் பண்ணுவதற்காக நைட் வேலை செய்ய வேண்டியது வரும்.

பொண்ணுங்க நைட் cabla தனியா போறது எனக்கு எப்பவுமே பிடிக்காது. பல சமயங்களில் அவளை 9:15 பஸ்ஸில் வீட்டிற்கு போக சொல்லிவிட்டு, அவளுடைய மாட்யூலையும் நானே பார்த்துக் கொள்வேன். அந்த மாதிரி சமயங்களில் சில சமயம் எதுவும் புரியாம அவளுக்கு போன் செய்து பேசிக்கிட்டே வேலை செய்வேன். அவளும் எனக்கு போர் அடிக்குமே என்று 2-3 மணி வரைக்கும் கூட பேசிக்கிட்டே இருப்பா... நான் தூங்குனு சொன்னாலும் இல்லை எனக்கு தூக்கம் வரலைனு சொல்லிடுவா.
(நைட் பொதுவாக ஆன் - சைட்டில் Code Review செய்வார்கள். ஏதாவது தவறு இருந்தால் நாம் அதை சரி பண்ண அவர்களுக்கு உதவ வேண்டும்... அதனால் எங்களுக்கு பொதுவாக அதிக வேலை இருக்காது. ஆனால் நாங்கள் அங்கு இருக்க வேண்டும்)

இப்படியே ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். அவள் தங்கி இருந்த PGயில் நிறைய தமிழ் பெண்கள் இருப்பதாக சொல்வாள்.

எனக்கு யாரையாவது இண்ட்ரடியூஸ் பண்ணிவிடுனு சொன்னா, எப்பவுமே முறைப்பாள். திடிர்னு ஒரு நாள் புட் கோர்டில் அவள் ரூம் மெட் ராதிகாவை அறிமுகப்படுத்தினாள். ராதிகா அன்று எங்களுடன் தான் சாப்பிட்டாள்.

"ரமேஷ், உனக்கு ஒன்னு தெரியுமா??? சுமா இப்பல்லாம் விழுந்து விழுந்து தமிழ் கத்துக்கிறா!!! "

எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. எப்பவுமே தெலுகுதான் தமிழவிட பெருசுனு என்கிட்ட சண்டை போட்ற சுமாவா தமிழ் கத்துக்கிறா??? ஆனால் இதை என்கிட்ட சொல்லவே இல்லையேனு ஒரு வருத்தம். ஜாவால எல்லாம் டவுட் கேக்கறா, எனக்கு நல்லா தெரிஞ்ச தமிழை யார்கிட்டயோ கத்துக்கிறாளே!!!

ஆனால் இதை ராதிகா சொன்னவுடன், சுமா அவளை முறைத்துவிட்டு "அதெல்லாம் ஒண்ணும் இல்லை... அவள் சும்மா விளையாட்டுக்கு சொல்றா"னு வேக வேகமாக சொன்னாள்.

ராதிகாவைப் பார்த்ததும் நல்லதாப் போச்சினு தோனுச்சி.

3 மாசம் கழித்து என்னுடைய பிறந்த நாள்... சனி கிழமையன்று வந்தது...

வெள்ளிக்கிழமை நைட் 9 மணிக்கு போன் செய்தாள். என்னடா இவ்வளவு சீக்கிரமா பண்ணிட்டாளேனு பார்த்தால், 12 மணி வரை பேசிக்கிட்டே இருந்தாள். (எங்கே 12 மணிக்கு சரியாகப் போன் செய்தால் பிஸியாக இருக்குமோனு சந்தேகத்தால் 9 மணிக்கே போன் செய்துவிட்டாள்).

சரியாக பனிரெண்டு மணிக்கு,

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"சுமா நீயா பேசறது", ரமேஷால் அவன் காதை நம்ப முடியவில்லை.

"இல்லை உங்க அம்மா"

மறுபடியும் அதிர்ச்சி.

"ரமேஷ், இனிமே நான் உன்கிட்ட தமிழ்ல தான் பேசுவேன். ஓகேவா???"

ரமேஷ்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தெளிவா தமிழ்ல பேசறா. எப்படி இவ்வளவு சீக்கிரத்துல கத்துக்கிட்டா.

"அப்பறம் நாளைக்கு உன் பிளான் என்ன???"

"எதுவும் பெருசா இல்லை"

"நம்ம படத்துக்கு போவோமா???"

"என்ன படம்"

"அதை நாளைக்கு PVR போய் முடிவு பண்ணிக்கலாம்"

"சரி... காலைல எனக்கு ஒரு பதினோரு மணிக்கா போன் பண்ணு"

"ஏன்???"

"நான் எழுந்திரிக்க வேணாமா?"

"அடப்பாவி!!! பதினோரு மணிக்கு எழுந்திரிக்க உனக்கு போன் பண்ணனுமா???"

"கேள்வியெல்லாம் கேக்காத எனக்கு புடிக்காது. சொன்னா கேக்கனும் புரியுதா???"

"சரிங்க சார்... நான் பண்றேன்"

போனை வைக்கும் போது மணி 2.

ரூம்ல யாருக்கும் என் பிறந்த நாள் தெரியாது. என்ன செய்ய எங்க ரூம்ல தங்கியிருக்கிற யாரும் நிரந்தரம் கிடையாது. அதனால் யாருக்கும் பெரிய பற்றுதல் இல்லை.

காலையில் 6 மணிக்கு வீட்டில் இருந்து போன்...

"Happy Birthday to u"

"thx மா"

"பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"thxப்பா"

"கண்ணு நானும், அப்பாவும் எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு கெளம்பிட்டு இருக்கோம். சரி நீ எழுந்திரிச்சிருக்க மாட்டேனுதான் இவ்வளவு நேரம் கழிச்சி பண்றோம். சரி நீயும் குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வா"

"சரிம்மா... நான் இன்னும் எழுந்திரிக்கவே இல்லை.. நைட் ஆபிஸ்ல வேலை அதிகம்... 2 மணி ஆகிடுச்சி"

"சரி கண்ணு... நீ தூங்கு... கோவிலுக்கு போகும் போது மறக்காமல் ஸ்வீட் வாங்கிட்டு போய்... கோவில்ல வயசானவங்க இருந்தா கொடு... அவுங்க மனசால வாழ்த்தனா நீ நல்லா இருப்ப... சரியா???"

"சரிம்மா... நான் உங்களுக்கு போன் பண்றேன்"

செல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பதினொரு மணிக்கு செல்போன் சிணுங்கியது.

Suma Calling....

"ஹாய்...
சொல்லு"

"என்னா...இன்னும் எழுந்திரிக்கலையா???"

"இல்ல... இப்பத்தான் ஏழுந்திரிக்கிறன்"

"அடப்பாவி!!! எத்தனை மணிக்கு சாப்பிட வர???"

"என்ன சாப்பிடவா??? படத்துக்குத் தான சொன்ன???"

"இங்க PGல மதியம் சாப்பாடு கேவலமா இருக்கும். கிருஷ்ணா கபேல மதியம் உன்கூட சாப்பிடலாம்னு பார்த்தேன்"

"சரி வரேன்"

மதியம் 12 மணிக்கு கிருஷ்ணா கபே வந்து சேர்ந்தாள். எனக்கு பிடிச்ச நேவி ப்ளூவில் சுடிதார் போட்டிருந்தாள்.

"என்ன... பர்த்-டேக்கு புது துணியெல்லாம் போடலையா???"

"வீட்ல அம்மா எடுத்து கொடுத்தாங்க... நாந்தான் அதை எடுத்துட்டு வரலை. புது துணியிலெல்லாம் எனக்கு இப்ப இன்ட்ரெஸ்ட் இல்லை. அதுதான் எனக்கு பதில் நீ போட்ருக்கியே அப்பறமென்ன"

"ஏ!!! இது புதுசு இல்ல... நான் காலேஜ்ல போட்டிருந்தது. பெங்களூர் வந்து இப்பதான் பர்ஸ்ட் டைம் போடறேன்."

"சரி வா... சாப்பிட போகலாம்"

நல்ல சாப்பாடு.

பிறகு இருவரும் PVR சென்றோம்.

"என்ன படம் பார்க்கலாம்"

"உனக்கு ரஜினிதான பிடிக்கும், சந்திரமுகி போகலாம்"

"ஏன் தெலுகு படமெல்லாம் கேவலமாக இருக்கனும்னு இப்படி சொல்றியா???"

அவள் கண் கலங்கிவிட்டது.

"ஏ... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... சந்திரமுகியே போகலாம் வா"

ரெண்டு பேரும் சந்திரமுகி சென்று பார்த்தோம்.

ஒருவழியாக சந்திரமுகி பத்தாவது முறைப் பார்த்தேன். ஆனால் முதல் முறை பார்த்த மாதிரி இருந்தது.

பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், Forumல் கொஞ்ச நேரம் சுற்றினோம்.
லேண்ட் மார்க் சென்றோம். அங்கே எனக்கு கல்கியின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு" மூன்றும் சேர்ந்த ஒரு பேக்கை வாங்கி பிறந்த நாள் பரிசாக வழங்கினாள்.

எனக்கு கல்கி பிடிக்கும்னு அவளுக்கு எப்படி தெரியும். அதுவும் நான் சொல்லாமலே அவளே எப்படி அந்த தொகுப்பை சரியாக எடுத்தாள்.

"சுமா, தமிழ் படிக்க கத்துக்கிட்டியா???"

"ஏ!!! அதெல்லாம் இல்லை... பேச கத்துக்கிட்டதே ரொம்ப கஷ்டம். எனக்கு சொல்லி கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க... நீ தான் எனக்கு படிக்க சொல்லி தரனும்"

"அப்பறம் எப்படி புக்கை கரெக்ட்டா எடுத்த???"

"நான் நேத்தே என் பிரெண்டோட வந்து பாத்து வெச்சிக்கிட்டேன். அதுதான்"

சிரித்தாள். என்னுமோ தெரியல.. திடிர்னு எனக்கு அவள் தேவதை மாதிரி தெரிந்தாள்.

அப்படியே சுத்திட்டு டின்னரை Forum Transitல் உள்ள சேலம் கிட்சனில் சாப்பிட்டோம்.

அவளை மல்லேஸ்வரத்திற்கு என்னுடைய டூ-வீலரில் அழைத்து சென்று விட்டு வந்தேன்.

இந்த பிறந்த நாளை என் வாழ்வில் மறக்கவே முடியாது.

பிறகு ஒரு மாதத்தில் இருவரையும் வெவ்வேறு பிராஜக்ட்டிற்கு மாற்றினார்கள்.

அப்படியும் காலை பிரேக் பாஸ்ட், மதியம் லன்ச், சாயந்திரம் ஸ்னாக்ஸ், இரவு டின்னர் எல்லாம் ஒன்றாகவே சாப்பிட்டோம்.

பிறகு அவள் வீட்டிற்கு சென்ற பின் போன் செய்து 12 மணி வரை பேசுவோம்.

ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்...

அப்படியிருக்கும் நிலையில் அவளை நான் இன்று அப்படி ஓட்டியிருக்க தேவையில்லை. ஒரு வழியாக தூங்கிவிட்டேன்.

தீபாவளிக்கு 3 நாள் லீவு போட்டால் 10 நாள் லீவு கிடைக்கும் போலிருந்தது. ரெண்டு பேரும் 3 நாள் லீவ் போட்டு அவரவர் ஊருக்கு போகலாம் என்று தீர்மானித்திருந்தோம்.

திடிர்னு பத்து நாள் பிரிய போறோம்னு தெரிந்தவுடன், ஏதோ மனசை அழுத்துவதை போல் இருந்தது...

11 மணிக்கு அவளுக்கு டிரெயின்.

மணி 6.

சுமாவின் extensionக்கு போன் செய்தேன்.

"ஏ!!! என்ன சொல்லு...
அந்த குங்குமம் வேற இன்னைக்குனு பாத்து வேலை நிறைய கொடுத்திருக்கு"

"இல்லை... உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசனும்"

"என்ன... சொல்லு
நான் வேற இன்னைக்கு 7:15 பஸ்ஸாவது பிடிக்கனும்"

"சரி... ரயில்-வே ஸ்டஷனுக்கு எத்தனை மணிக்கு வரணும்"

"ஏ!!! அதெல்லாம் தேவையில்லை... நானே போயிக்குவன்"

"நான் உன்கிட்ட வரட்டுமா, வேணாமானு கேக்கல... எத்தனை மணிக்கு நீ ரெயில்-வே ஸ்டெஷன்ல இருப்பனு கேட்டேன்"

"நான் வீட்டில இருந்து புறப்படும் போது உனக்கு போன் பண்றனே... ஓகே வா???"

"சரி"

சுமா அடிக்கடி சொல்லுவா இந்த குங்குமம் வைக்கிற ஆம்பிளைகளையே நம்பக் கூடாதுனு. இன்னைக்கு அவனால எனக்கு பிரச்சனை.

சரி ரயில்வே ஸ்டெஷன்ல பார்த்து பேசிக்கலாம்.

வேலை செய்யவே முடியவில்லை. வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

8 மணிக்கு போன் அடித்தது. எந்த நம்பர்னே தெரியல... இந்த நேரத்துக்கு எவன்டா பண்றது.

"இது ரமேஷா???"

"ஆமாம்... நீங்க யார் பேசறது"

"நாங்க இங்க வாட்டர் டேங்க் பக்கத்துல இருந்து பேசறோம்... இங்க குமார்னு யாரோ ஒருத்தருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு. அவர் உங்க பிரண்டுங்களா???"

"ஆமாம்... அவர் எப்படி இருக்காரு??? எதுவும் பெருசா பிரச்சனையில்லையே"

"இல்லைங்க... தலைல ஹெல்மெட் போட்டீருந்ததால எதுவும் பெருசா இல்லை... இருந்தாலும் கை கால்ல எல்லாம் நல்லா அடிப்பட்டிருக்கு.. இங்க பக்கத்துலதான் St.John's hospitalல சேத்துருக்காங்க... நீங்க யாராவது வந்திங்கனா நல்லா இருக்கும்"

"இதோ உடனே வரேன்"

ஹாஸ்பிட்டல்... எனக்கு பிடிக்காத முதல் இடம். சின்ன வயசுல எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிடும். அதனால் மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு மருந்து வாடையே பிடிக்காமல் போய்விட்டது.

குமார் எமெர்ஜென்ஸி வார்டில் இருந்தான். போனில் சொன்னது போல் லேசான அடியில்லை. கொஞ்சம் அதிகமாகவே அடிப்பட்டிருந்தது.

"நீங்க அவர் பிரண்டா???"

"ஆமாம்"

"அவருக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுது... நீங்க ரத்தம் கொடுக்க முடியுமா???"

"கண்டிப்பா...நான் ஏற்கனவே 2 தடவை கொடுத்திருக்கேன்"

"உங்க பிளட் குருப் என்ன???"

"B +ve"

"கடைசியா எப்ப பிளட் கொடுத்தீங்க???"

"காலேஜ் படிக்கும் போது. 2 வருஷமிருக்கும்"

"சரி வாங்க"

உள்ளே ஹைட், வெயிட் எல்லாம் செக் பண்ணாங்க... அப்பறம் இரத்தம் எடுக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்கள்.

என் செல் சிணுங்கியது...

Suma Calling....

"செல் போனெல்லாம் ஆப் பண்ணிடுங்க"

சரிங்க... செல் போனை ஆப் செய்தேன்.

பிறகு வெளியே வருவதற்குள் அரை மணி நேரம் ஆகிவிட்டது.

மணி பத்து...

நண்பர்கள் எல்லாம் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

"டேய்... பெரிய பிரச்சனை எதுவும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க!!! இன்னும் 10-15 நாள்ல சரியாயிடுமாம்" கருவாயன் சொன்னான்.

"பணம் ஒரு 10,000 வேணுமாம். நான் போயி எடுத்துட்டு வரேன். ரமேஷ் நீ கொஞ்சம் உன் வண்டி சாவியை தர முடியுமா??? "

"இந்தா பத்திரம்... அப்படியே பெட்ரோல் போட்டுக்கோ"

அப்போழுதுதான் நியாபகம் வந்தது. செல் போனை இன்னும் ஆன் செய்யவில்லை. சரி... எப்படியும் இது செல் போன்ல பேசற விஷயமில்லை.

10 நாள் தானே...

குமாரின் பெற்றோர் வந்தவுடன் ஊருக்கு சென்றேன்...

தீபாவளி ... மனதிற்கு வலியைத்தான் தந்தது... அவள்ட முன்னாடியே பேசியிருக்கலாம்.

சே!!! அவளை ஒழுங்கா, ரோமிங்கோட வாங்குனு சொன்னேன். இப்ப பாரு போன் பேசனும்னு நினைச்சாக் கூட முடியல.

"ஏன் கண்ணு ஒரு மாதிரியா இருக்க???"

"இல்லம்மா... குமார்க்கு அடிப்பட்டுடுச்சி அதனாலத்தான்"

"நீ ஒன்னும் கவலைப்படாதே!!! எல்லாம் சரியாயிடும்"

பத்து நாள் பத்து யுகங்களாக கடந்தது.

திங்கள் கிழமை காலையில் 8 மணிக்கெல்லாம் என் சீட்டில் இருந்தேன்.

சுமாவின் காலுக்காக எதிர்பார்த்து...
அவளுக்கு போன் செய்தாலும் "The number u r trying is currently not reachable"ஏ வந்தது.

செவ்வாய் கிழமை காலை 5:30 மணிக்கு கால் வந்தது...

Suma calling...

"ஏ!!! என்ன இவ்வளவு சீக்கிரம் கூப்பிடற"

"ரமேஷ்! நீ இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் ஆபிஸுக்கு வர முடியுமா???"

"ஏன் என்னாச்சி???"

"நீ நேர்ல வா!!! நான் சொல்றேன்"

"சரி...நான் 7:15க்கு சீட்ல இருப்பேன்"

"வேணாம் 8 மணிக்கு வா!!! போதும்"

"சரி"

அதுக்கு அப்பறம் தூக்கமே வரலை.

8 மணிக்கு அவளோட பில்டிங் லாபில வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

நேராக பஸ்ஸில் இருந்து வந்தவள். என்னைப் பார்த்தவுடன், லேசாக கண் கலங்கினாள்.

"இரு!!! நான் போய் என் சீட்ல என் ஹாண்ட் பேகை வெச்சிட்டு வந்துடரேன்... அப்பறம் சாப்பிட போகலாம்"

"சரி"

2 நிமிடத்திற்குள் வந்தாள்...

"வா!!! போகலாம்"

"என்ன விஷயம் சொல்லு..."

"எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க!!!"

ஒரு நிமிடம் பூமி சுற்றவது நின்றுவிட்டது போல் ஆகிவிட்டது...

"என்ன சொல்ற???"

"ஆமாம் ரமேஷ்!!! எங்க அப்பாவோட பிரண்ட் பையனாம்... USல இருக்கிறானாம்"

"அதுக்கு நீ என்ன சொன்ன???"

"நான் என்ன சொல்லனும்னு நீ எதிர்ப்பார்க்கிற???"

என்னிடம் பதில் இல்லை...

"ஒரு வாரம் உட்கார்ந்து அழுதேன்... உன்னை ரீச் பண்ணவும் முடியலை. உன் மனசுல என்ன இருக்குனும் எனக்கு தெரியல... நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கிற ரமேஷ்"

இதற்கும் பதில் இல்லை...

"உன்னைப் பற்றி என் அம்மாட்ட சொன்னேன்... எங்கம்மா என் கால்ல விழுந்து அழுதாங்க!!! என்னால மறுக்க முடியல"

இதை சொல்லவா என்னை 8 மணிக்கு வர சொன்ன???

"ரமேஷ்... நீ எதுவும் சொல்ல வேண்டாம். என்னை பொருத்தவரை நீ எதுவுமே சொல்லமலே இருந்த மாதிரி இருக்கட்டும்..நாம இனிமே பார்க்க வேண்டாம்... நான் இன்னைக்கு பேப்பர் போட போறேன்... நீ நல்லா இருக்கனும் ரமேஷ்"

அழுதுகிட்டே வேகமா திரும்ப போயிட்டா...

அவள் பிறந்த நாளுக்கு மூன்று நாட்களே இருந்தது. நான் உனக்காக தெலுகு பெசவும், எழுதவும் கத்துக்கிட்டேனே... அது எல்லாமே உனக்கு தெரியாமலே போயிடுச்சே???

உனக்கு நான் தெலுகுல என் கையால எழுதி வெச்ச அந்த கார்ட் என்னைக்கும் என் பெட்டியிலே இருக்கும்...

எப்படியோ ஒரு வருடம் ஓடிவிட்டது... நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கன்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது

"டேய் மச்சான் ... குமாருக்கு பிரோமோஷன் வந்திருக்கு... அதனால இன்னைக்கு அவனோட ட்ரீட்... வா PVR போவோம்"

எல்லோரும் PVR சென்றோம்...

முதலில் என் கண்ணில் பட்டது... பிரின்ஸ் மகேஷ் பாபு in "போக்கிரி".

அங்கே கருவாயன் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது "அங்க பாருடா நம்ம கொல்டிய... நேரா தெலுகு பட போஸ்டரை பார்க்க போயிட்டான்"

88 comments:

வெட்டிப்பயல் said...

இந்த கதை தான் நான் முதல்ல எழுதின கதை. இதை எழுதி ரெண்டு வருஷமாகுது. அதான் மறுபதிப்பு :)

இப்ப நான் எழுதற கதைகளை விட இது ரொம்ப இயல்பா இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங் :-)

என்னை கதை எழுத உற்சாகப்படுத்திய கப்பிக்கும், பே.மகேந்திரனுக்கும் நன்றி :-)

கப்பி | Kappi said...

அட! :)

அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிருச்சா..அவ்வ்வ்வ்

வெட்டிப்பயல் said...

// கப்பி | Kappi said...

அட! :)

அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிருச்சா..அவ்வ்வ்வ்//

ஆமாப்பா... நாள் ஓடறதே தெரியல. இப்பக்கூட இந்த கதை யோசிச்ச ஞாபகம் அப்படியே இருக்கு. க்ளைமாக்ஸ்ல அந்த பையன் ப்ரபோஸ் பண்ற மாதிரி வைக்கனுமானு தூங்கிட்டு இருந்த என் ரூமேட்டை எழுப்பி கேட்டேன். அவன் தூக்க கலக்கத்துல வேண்டாம், விட்டுடுனு சொல்லிட்டு படுத்தான்.

நான் அதை வேற வேண்டாம்னு நினைச்சி கதை எழுதிட்டேன் :-))))

ஆனா அதுவே நல்லா அமைஞ்சிடுச்சி :-)

MSK / Saravana said...

செம டச்சிங் கதை..

MSK / Saravana said...

உன்னை நினைவுபடுத்த வேண்டுமென்று எதுவுமே நடப்பதில்லை..
ஆனால் நடப்பது எல்லாமும் உன்னையே நினைவுப்படுத்துகிறது..

என்ற கவிதைதான் ஞாபகம் வருகிறது
:[

வெட்டிப்பயல் said...

//M.Saravana Kumar said...

செம டச்சிங் கதை..//

மிக்க நன்றி சரவண குமார்...

வெட்டிப்பயல் said...

//M.Saravana Kumar said...

உன்னை நினைவுபடுத்த வேண்டுமென்று எதுவுமே நடப்பதில்லை..
ஆனால் நடப்பது எல்லாமும் உன்னையே நினைவுப்படுத்துகிறது..

என்ற கவிதைதான் ஞாபகம் வருகிறது
:[//

கவிதை சூப்பர் :-)

Boston Bala said...

என்னவா இருந்தாலும் உண்மை (போல்) இருக்கும் கதைக்கு இருக்கும் இம்பாக்ட் தனிதான் ;) :)

Sundar சுந்தர் said...

ரொம்ப டச்சிங்!. கிருஷ்ணா கபே எனக்கு இப்ப ஞாபகம் வந்துடுச்சி. சொல்லாமல் விட்ட ஈர்ப்புகளும் ஞாபகம் வந்துடுச்சி. :(

வெட்டிப்பயல் said...

// Boston Bala said...

என்னவா இருந்தாலும் உண்மை (போல்) இருக்கும் கதைக்கு இருக்கும் இம்பாக்ட் தனிதான் ;) :)//

இன்னும் கொலவெறி அடங்கலயா???

பிரேம்ஜி said...

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த கதை படித்தவர்களில் நானும் ஒருவன். நல்ல கதை.

வெட்டிப்பயல் said...

//சுந்தர் said...

ரொம்ப டச்சிங்!. கிருஷ்ணா கபே எனக்கு இப்ப ஞாபகம் வந்துடுச்சி. சொல்லாமல் விட்ட ஈர்ப்புகளும் ஞாபகம் வந்துடுச்சி. :(//

மிக்க நன்றி சுந்தர்...

கிருஷ்ணா கஃபேயை பேஸ் பண்ணி நிறைய கதைகள் இருக்கும்னு நினைக்கிறேன் :-)

இலவசக்கொத்தனார் said...

வெட்டி, இதை மறுபதிப்பு செஞ்ச தேதிக்கு எதாவது முக்கியத்துவம் இருக்கா?

பாபா, உண்மை போல் இருக்கும் என்று சொல்லி இது உண்மை இல்லையோ என சந்தேகப்படும் உங்கள் நுண்ணரசியலை நான் வன்முறையாகக் கண்ணடிக்கிறேன்.

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

வெட்டி, இதை மறுபதிப்பு செஞ்ச தேதிக்கு எதாவது முக்கியத்துவம் இருக்கா? //

அப்படியெல்லாம் எதுவும் இல்லை கொத்ஸ். அப்ப ஆகஸ்ட் 15க்கு கதை போட்டேன். இப்ப நாளைக்கு ஆடு புலி ஆட்டத்துக்காக ஒரு நாள் முன்னாடியே போட்டுட்டேன்.

ஆகஸ்ட் 15 எங்க நாட்டோட சுதந்திர தினம் :-)

SathyaPriyan said...

//
அருமையாக இருந்தது தங்களது கதை. இன்ஃபோஸிஸ் நிறுவனம், பெங்களூர் வாழ்க்கை, PVR சினிமா மூன்றும் என் வாழ்வில் மறக்க முடியாதவை ஆகும். தங்களது இந்த கதை அவற்றை மீண்டும் நினைவூட்டியது.
//
இது நான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் உங்கள் கதையில் இட்ட பின்னூட்டம். இந்தக் கதை 'கதை' என்பதையும் கடந்து எனது மனதில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

It makes me feel nostalgic.

ஒவ்வொரு முறை பெங்களூர் வாழ்க்கை நியாபகம் வரும் போதும் இந்தக் கதையினை நான் படிப்பதுண்டு.

மற்றபடி வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அட்டகாசமான கதை இது என்பதை தவிர.

மொக்கைச்சாமி said...

கதை flow ரொம்ப நல்ல இருக்கு... ரசித்தேன்...

Ramya Ramani said...

என்னடா ஆடு புலி ஆட்டம் அடுத்த பார்ட் ரிலீஸ் ஆகிடிச்சோன்னு வந்தா..ஒருஅற்புதமான் "மீள்பதிவு" .

மென்மேலும் நீங்கள் நல்ல கதைகள் எழுத வாழ்த்துக்கள் :)

ரெண்டு வருஷமா தொடர்ந்து கலக்கறீங்க அண்ணா சூப்பரு !!

Raghav said...

என்ன சொல்றதுன்னே தெரியல.. அது என்னமோ கிருஷ்ணா கபே, PVR, இதெல்லாம் பெங்களூர்ல இருக்குற ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு விதமான அனுபவத்தை கொடுக்கும் போல..

கதை ரொம்ப இயல்பா, மனசில ஒட்டிருச்சு...

ILA (a) இளா said...

உங்களுக்கு என்னை ரசிகனாக அறிமுகமாக்கிய கதை :)

//என்னவா இருந்தாலும் உண்மை (போல்) இருக்கும் கதைக்கு இருக்கும் இம்பாக்ட் தனிதான் ;) //
ரிப்பீட்டேய்ய்ய்

இப்படிக்கு உண்மையும் அறிந்தவன்

வெட்டிப்பயல் said...

முதல்ல இளாவுக்கு

// ILA said...

உங்களுக்கு என்னை ரசிகனாக அறிமுகமாக்கிய கதை :)

//என்னவா இருந்தாலும் உண்மை (போல்) இருக்கும் கதைக்கு இருக்கும் இம்பாக்ட் தனிதான் ;) //
ரிப்பீட்டேய்ய்ய்

இப்படிக்கு உண்மையும் அறிந்தவன்//

இது என்ன உண்மைனு எனக்கே தெரியாது... இது முழுக்க முழுக்க கற்பனை கதை தான்....

கயல்விழி said...

மீள்பதிவு? ரொம்ப நல்ல கதை.

கயல்விழி said...

மீள்பதிவு? ரொம்ப நல்ல கதை.

Divya said...

உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த, மனதை கணமாக்கிய கதை இது,

வருடங்கள் கழித்து இந்த கதையை மீண்டும் படித்தாலும்.....இப்போதும் அதே தாக்கத்தை ஏற்படுத்துகிறது,
அருமை :))

Divya said...

\\க்ளைமாக்ஸ்ல அந்த பையன் ப்ரபோஸ் பண்ற மாதிரி வைக்கனுமானு தூங்கிட்டு இருந்த என் ரூமேட்டை எழுப்பி கேட்டேன். அவன் தூக்க கலக்கத்துல வேண்டாம், விட்டுடுனு சொல்லிட்டு படுத்தான்.

நான் அதை வேற வேண்டாம்னு நினைச்சி கதை எழுதிட்டேன் :-))))

ஆனா அதுவே நல்லா அமைஞ்சிடுச்சி :-)\\


:)))

யு.எஸ்.தமிழன் said...

சே முதல்லயே கடசி வரியப் படிச்சிருக்கனும். எங்கயோ படிச்சமாதிரியே இருந்துச்சு. அப்பறம் இந்த கதைக்கு ஒரு எக்ஸ்ட்ரா ட்விஸ்ட் வைச்சீங்களே... நாந்தான் தெலுகு அந்தப்பொண்ணு தமிழ்னு... அதே கததானே இது?

பெத்தராயுடு said...

அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஆயிடுச்சா?
ஆனாலும், மறக்க முடியுமா இந்தக் கதையை?

வெட்டிப்பயல் said...

//பிரேம்ஜி said...

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த கதை படித்தவர்களில் நானும் ஒருவன். நல்ல கதை.//

மிக்க நன்றி பிரேம்ஜி :-)

வெட்டிப்பயல் said...

// SathyaPriyan said...

//
அருமையாக இருந்தது தங்களது கதை. இன்ஃபோஸிஸ் நிறுவனம், பெங்களூர் வாழ்க்கை, PVR சினிமா மூன்றும் என் வாழ்வில் மறக்க முடியாதவை ஆகும். தங்களது இந்த கதை அவற்றை மீண்டும் நினைவூட்டியது.
//
இது நான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் உங்கள் கதையில் இட்ட பின்னூட்டம். இந்தக் கதை 'கதை' என்பதையும் கடந்து எனது மனதில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

It makes me feel nostalgic.

ஒவ்வொரு முறை பெங்களூர் வாழ்க்கை நியாபகம் வரும் போதும் இந்தக் கதையினை நான் படிப்பதுண்டு.

மற்றபடி வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அட்டகாசமான கதை இது என்பதை தவிர.//

மிக்க நன்றி அண்ணா...

எனக்கும் இந்த கதை அந்த விதத்துல ரொம்ப பிடிக்கும். இதை விட தூறல் ஹிட் ஆனது எனக்கு ஆச்சரியம் தான்.

வெட்டிப்பயல் said...

//மொக்கைச்சாமி said...

கதை flow ரொம்ப நல்ல இருக்கு... ரசித்தேன்...//

மிக்க நன்றி மொக்கைச்சாமி :-)

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

என்னடா ஆடு புலி ஆட்டம் அடுத்த பார்ட் ரிலீஸ் ஆகிடிச்சோன்னு வந்தா..ஒருஅற்புதமான் "மீள்பதிவு" .

மென்மேலும் நீங்கள் நல்ல கதைகள் எழுத வாழ்த்துக்கள் :)

ரெண்டு வருஷமா தொடர்ந்து கலக்கறீங்க அண்ணா சூப்பரு !!//

ரொம்ப நன்றிமா...

இப்ப எல்லாம் ஏதோ எழுதிட்டு இருக்கேன். என்னோட நல்ல பதிவுகள் படிக்கனும்னா 2006 பதிவுகள் தான் படிக்கனும்.

இப்ப அந்த ஃபிரெஷ்னஸ் இல்லை :-(

வெட்டிப்பயல் said...

//Raghav said...

என்ன சொல்றதுன்னே தெரியல.. அது என்னமோ கிருஷ்ணா கபே, PVR, இதெல்லாம் பெங்களூர்ல இருக்குற ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு விதமான அனுபவத்தை கொடுக்கும் போல..

கதை ரொம்ப இயல்பா, மனசில ஒட்டிருச்சு...//

ஆமா ராகவ்...

இருந்தாலும் நான் PVRஐ விட பாலாஜி தியேட்டர்ல தான் அதிகமா படம் பார்ப்பேன். அமைதியா படம் பார்க்கறது எனக்கு பிடிக்காது :-)

ஆனா கிருஷ்ணா கஃபே என்னால மறக்க முடியாது...

வெட்டிப்பயல் said...

//கயல்விழி said...

மீள்பதிவு? ரொம்ப நல்ல கதை./

ஆமாம் கயல்விழி. நான் எழுதிய முதல் கதை :-)

வெட்டிப்பயல் said...

// Divya said...

உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த, மனதை கணமாக்கிய கதை இது,

வருடங்கள் கழித்து இந்த கதையை மீண்டும் படித்தாலும்.....இப்போதும் அதே தாக்கத்தை ஏற்படுத்துகிறது,
அருமை :))//

ரொம்ப நன்றிமா...

எனக்கு இந்த கதையை படிக்கறதுனா கொஞ்சம் பயம்... மனசை ரொம்ப கனமாக்கற மாதிரி :-(

பாவம் ரமேஷ்னு. இன்னைக்கு படிக்கும் போது எனக்கும் கஷ்டமா இருந்தது :-))

வெட்டிப்பயல் said...

//யு.எஸ்.தமிழன் said...

சே முதல்லயே கடசி வரியப் படிச்சிருக்கனும். எங்கயோ படிச்சமாதிரியே இருந்துச்சு. அப்பறம் இந்த கதைக்கு ஒரு எக்ஸ்ட்ரா ட்விஸ்ட் வைச்சீங்களே... நாந்தான் தெலுகு அந்தப்பொண்ணு தமிழ்னு... அதே கததானே இது?//

கரெக்டா சொன்னீங்க யூ.எஸ் தமிழன் :-)

வெட்டிப்பயல் said...

//பெத்தராயுடு said...

அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஆயிடுச்சா?
ஆனாலும், மறக்க முடியுமா இந்தக் கதையை?//

ஆமாம் பெத்தராயுடு...

நாட்கள் ஓடுவதே தெரியமாட்டீங்குது :-)

Anonymous said...

Naan Blog padikka arambitha puthithil paditha Kathai .....Innum Oru murai porumaiyaga paditha pothu meendum negilnthu ponen. Thala kalakkunga..

ஆயில்யன் said...

வெளியில நட்புகளிடமிருந்து வரும் பிறந்த நாள் ரெஸ்பான்ஸ்
வீட்டிலிருந்து வரும் வாழ்த்துக்கள் என நிஜமாக போக்கிக்கொண்டிருக்கும் போது பிரிவு சூழ்நிலை பேசிக்கொள்ளாத தருணங்கள் - இந்த இடங்கள் ரொம்ப டச்சிங்க எதிர்பார்ப்புக்களை அதிகப்படுத்தி கடைசியில் கொஞ்சம் மனதுக்கு பாரமாய் முடிந்திருக்கிறீர்!

ரொம்ப அருமையான கதை!

நன்றி!

Sathiya said...

அதானே, இதை ஏற்கனவே படிச்சிருக்கேனேன்னு நெனச்சேன். நல்ல மறுபதிவு!

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...

வெளியில நட்புகளிடமிருந்து வரும் பிறந்த நாள் ரெஸ்பான்ஸ்
வீட்டிலிருந்து வரும் வாழ்த்துக்கள் என நிஜமாக போக்கிக்கொண்டிருக்கும் போது பிரிவு சூழ்நிலை பேசிக்கொள்ளாத தருணங்கள் - இந்த இடங்கள் ரொம்ப டச்சிங்க எதிர்பார்ப்புக்களை அதிகப்படுத்தி கடைசியில் கொஞ்சம் மனதுக்கு பாரமாய் முடிந்திருக்கிறீர்!

ரொம்ப அருமையான கதை!

நன்றி!//

மிக்க நன்றி ஆயில்ஸ்...

முதல் கதைனு கொஞ்சம் சோகமா எழுதிட்டேன். அடுத்து கொஞ்ச நாளைக்கு சந்தோஷமான கதைகள் எழுதினேன் :-)

வெட்டிப்பயல் said...

//Anbu said...

Naan Blog padikka arambitha puthithil paditha Kathai .....Innum Oru murai porumaiyaga paditha pothu meendum negilnthu ponen. Thala kalakkunga..//

மிக்க நன்றி அன்பு :-)

கவிநயா said...

//இந்த கதை தான் நான் முதல்ல எழுதின கதை. இதை எழுதி ரெண்டு வருஷமாகுது. அதான் மறுபதிப்பு :)//

அதானே பார்த்தேன், எங்கயோ படிச்ச மாதிரியே இருக்கேன்னு நெனச்சுக்கிட்டே படிச்சேன்.. :) நல்லா எழுதியிருக்கீங்க.

Sen22 said...

ரொம்ப யதார்த்தமா இருக்கு வரிகள்....
நல்லா இருக்கு கதை...

Anonymous said...

Last linela engayo poite machi!

-> Hermione

PS: ella storylinem konja onnave iruke.... unga real life storya?? ;-)

ambi said...

மனசுகுள்ள ஆயிரம் இருக்கு பெரியப்பா!னு சொல்ற மாதிரி இருக்கு. :p

ரெண்டு நாளைக்கு முன்பே மீள்பதிவு வேற செஞ்சு இருக்கீங்க, :)

சரி, சரி, சுந்திர தினத்தன்னிக்கு வீட்டுல போர் நடக்காம இருந்தா சரி. :))

SurveySan said...

yes. this is a good story, indeed :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த கதையைப்படிச்சுட்டுத்தான் .. நான் ப்ளாக்கர் கணக்கே ஆரம்பிச்சேன்.. மீள்பதிவுக்கு நன்றி..

Vijay said...

ஆடு புலி ஆட்டத்துக்கு நடுவுல இப்படி ஒரு சூப்பர் கதையா? வெளுது கட்டறீங்க.


\\பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், Forumல் கொஞ்ச நேரம் சுற்றினோம்.
லேண்ட் மார்க் சென்றோம். அங்கே எனக்கு கல்கியின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு" மூன்றும் சேர்ந்த ஒரு பேக்கை வாங்கி பிறந்த நாள் பரிசாக வழங்கினாள்.\\

Landmark'ல இதெல்லாம் எங்க பஸ் கிடைக்குது?எல்லாம் சமையல் புஸ்தமாத்தான் வச்சிருக்காங்க.

பாலராஜன்கீதா said...

//"ஆமாம் ரமேஷ்!!! எங்க அப்பாவோட பிரண்ட் பையனாம்... USல இருக்கிறானாம்" //
அவன் எவளையும் காதலிக்கவில்லையா ?
;-)

Thiyagarajan said...

Super story.

Divyapriya said...

ஏற்கனவே படித்த கதை தான்...இருந்தாலும், மறுமுறை படிக்கும் போது தென்றல் வருடினா மாதிரி ஒரு ஃபீலிங் :))

திவாண்ணா said...

//இந்த கதை தான் நான் முதல்ல எழுதின கதை. இதை எழுதி ரெண்டு வருஷமாகுது. அதான் மறுபதிப்பு :)//

முதல்பாராலேந்தே, என்னடா இத எங்கேயோ படிச்சு இருக்கப்பல இருக்கேன்ன்னு நினைச்சேன்! மறு பதிவா!
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........

http://urupudaathathu.blogspot.com/ said...

Blogger கப்பி | Kappi said...

அட! :)

அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிருச்சா..அவ்வ்வ்வ்////

ரிப்ப்ப்பீபீபீட்ட்ட்டுடு..
மறு முறை கூவுகிறேன்.

இவன் said...

அடடா நான் உங்க ப்லொக்ல வாசிச்ச முதல் கதை இது இன்னமும் ஞாபகம் இருக்குது.....

Thamira said...

மறுபதிப்பு போடறது நல்லதுதான். என்ன மாதிரி ஆளுங்க படிக்க ஒரு வாய்ப்பா இருக்கும்.

உண்மையிலேயே மனதைத்தொட்ட கதை.!

(ஆமா.. இதை கதைன்னு சொல்லி என்ன கதை விடறீங்களா?)

வெட்டிப்பயல் said...

// Sathiya said...

அதானே, இதை ஏற்கனவே படிச்சிருக்கேனேன்னு நெனச்சேன். நல்ல மறுபதிவு!//

மிக்க நன்றி சத்யா :-)

வெட்டிப்பயல் said...

// கவிநயா said...

//இந்த கதை தான் நான் முதல்ல எழுதின கதை. இதை எழுதி ரெண்டு வருஷமாகுது. அதான் மறுபதிப்பு :)//

அதானே பார்த்தேன், எங்கயோ படிச்ச மாதிரியே இருக்கேன்னு நெனச்சுக்கிட்டே படிச்சேன்.. :) நல்லா எழுதியிருக்கீங்க.//

மிக்க நன்றி கவிநயா :-)

வெட்டிப்பயல் said...

//Sen22 said...

ரொம்ப யதார்த்தமா இருக்கு வரிகள்....
நல்லா இருக்கு கதை...//

செந்தில்,
இந்த கதை இதுக்கு முன்னாடி படிக்கலையா???

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

Last linela engayo poite machi!

-> Hermione
//

ரொம்ப டாங்க்ஸ்டா மாமா :-)

//
PS: ella storylinem konja onnave iruke.... unga real life storya?? ;-)//

//

அடப்பாவி... என்னோட கதைல நிறைய சாப்ட்வேர் பேஸ் பண்ண மாதிரி இருக்கும். ஆனா சாப்ட்வேரே இல்லாம எழுதியிருக்கும் கதைகள்

1. தீயினால் சுட்ட புண்
2. ஏன்
3. லிப்ட் ப்ளீஸ் (வித்தியாசமான தொடர் கதை)
4. எங்கிருந்தாலும் வாழ்க!!!
5. பொறந்த வீடா? புகுந்த வீடா???
6. தாய்ப்பால்

வெட்டிப்பயல் said...

//ambi said...

மனசுகுள்ள ஆயிரம் இருக்கு பெரியப்பா!னு சொல்ற மாதிரி இருக்கு. :p
//
இது என்ன படம்?

// ரெண்டு நாளைக்கு முன்பே மீள்பதிவு வேற செஞ்சு இருக்கீங்க, :)
//
இந்திய நேர கணக்கு படி தான் பதிவு போடறேன் :-) அதனால ஒரு நாள் முன்னாடி போட்டிருக்கேன். இன்னைக்கு ஆடு புலி ஆட்டம் போடனும். அதான் ;)

// சரி, சரி, சுந்திர தினத்தன்னிக்கு வீட்டுல போர் நடக்காம இருந்தா சரி. :))//
கண்டிப்பா இந்த கதையால நடக்காது. ஏற்கனவே படிச்சிருக்காங்கனு நினைக்கிறேன் :-)

வெட்டிப்பயல் said...

// SurveySan said...

yes. this is a good story, indeed :)//

மிக்க நன்றி சர்வேஸ் ;)

வெட்டிப்பயல் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

இந்த கதையைப்படிச்சுட்டுத்தான் .. நான் ப்ளாக்கர் கணக்கே ஆரம்பிச்சேன்.. மீள்பதிவுக்கு நன்றி..//

ஆஹா... இந்த மாதிரி கதை எழுதறவனே ப்ளாக் வெச்சிருக்கும் போது... அப்படினா :-)))

Tech Shankar said...




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

//விஜய் said...

ஆடு புலி ஆட்டத்துக்கு நடுவுல இப்படி ஒரு சூப்பர் கதையா? வெளுது கட்டறீங்க.
//
மிக்க நன்றி விஜய்... இதெல்லாம் பழைய கதை... நீங்க எல்லாம் சொல்றதை பார்த்தா ஆடு புலி ஆட்டத்துக்கு நடுவுல தினமும் ஒரு பழைய கதை போடலாம் போல :-))

//

\\பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், Forumல் கொஞ்ச நேரம் சுற்றினோம்.
லேண்ட் மார்க் சென்றோம். அங்கே எனக்கு கல்கியின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு" மூன்றும் சேர்ந்த ஒரு பேக்கை வாங்கி பிறந்த நாள் பரிசாக வழங்கினாள்.\\

Landmark'ல இதெல்லாம் எங்க பஸ் கிடைக்குது?எல்லாம் சமையல் புஸ்தமாத்தான் வச்சிருக்காங்க.//

நான் அங்க இருக்கும் போது கிடைச்சுது விஜய். Some where around 600Rs.

உள்ள நுழைந்தவுடனே வலது கை பக்கம் இருக்கற இடத்துல இருந்ததே...

வெட்டிப்பயல் said...

//பாலராஜன்கீதா said...

//"ஆமாம் ரமேஷ்!!! எங்க அப்பாவோட பிரண்ட் பையனாம்... USல இருக்கிறானாம்" //
அவன் எவளையும் காதலிக்கவில்லையா ?
;-)//

அது அந்த கொல்ட்டி பையனை கேட்டா தான் தெரியும் ;)

வெட்டிப்பயல் said...

// Thiyagarajan said...

Super story.//

மிக்க நன்றி தியாகராஜன் :-)

Sanjai Gandhi said...

//சரி விடு நான் ஜாம் தொட்டு சாப்பிட்டுக்கறேன்"//

2 வருஷத்துக்கு முன்னாடியும் IT மக்கள் இப்டி தானா? நான் இப்போ தான் சமீபமா (கிமு 2548ல் இல்ல) இப்டி ஆய்ட்டாங்க போலனு நெனைச்சேன்.கொய்யால சப்பாத்திக்கு ஜாமாம்ல :))

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

ஏற்கனவே படித்த கதை தான்...இருந்தாலும், மறுமுறை படிக்கும் போது தென்றல் வருடினா மாதிரி ஒரு ஃபீலிங் :))//

மிக்க நன்றி திவ்யப்ரியா :-)

வெட்டிப்பயல் said...

// திவா said...

//இந்த கதை தான் நான் முதல்ல எழுதின கதை. இதை எழுதி ரெண்டு வருஷமாகுது. அதான் மறுபதிப்பு :)//

முதல்பாராலேந்தே, என்னடா இத எங்கேயோ படிச்சு இருக்கப்பல இருக்கேன்ன்னு நினைச்சேன்! மறு பதிவா!
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........//

திவா,
இது முன்னாடி படிக்காம விட்டவங்களுக்கும், கதையை மறந்தவங்களுக்கும் :-))

வெட்டிப்பயல் said...

//yogbal_anima said...

Blogger கப்பி | Kappi said...

அட! :)

அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிருச்சா..அவ்வ்வ்வ்////

ரிப்ப்ப்பீபீபீட்ட்ட்டுடு..
மறு முறை கூவுகிறேன்.//

ஆமாப்பா... நாள் ஓடறதே தெரியல :-)

வெட்டிப்பயல் said...

/ இவன் said...

அடடா நான் உங்க ப்லொக்ல வாசிச்ச முதல் கதை இது இன்னமும் ஞாபகம் இருக்குது.....//

ரொம்ப சந்தோஷம் இவன்... அதுக்கு முன்னாடி நிறைய மொக்கை பதிவுகள் எல்லாம் போட்டிருக்கேன் :-)

வெட்டிப்பயல் said...

//தாமிரா said...

மறுபதிப்பு போடறது நல்லதுதான். என்ன மாதிரி ஆளுங்க படிக்க ஒரு வாய்ப்பா இருக்கும்.

உண்மையிலேயே மனதைத்தொட்ட கதை.!
//

சொல்லிட்டீங்க இல்ல.. இனிமே நிறைய போட்டுடுவோம் ;)

// (ஆமா.. இதை கதைன்னு சொல்லி என்ன கதை விடறீங்களா?)//
அப்ப கவுஜைனு சொன்னா நம்புவீங்களா ;)

வெட்டிப்பயல் said...

// SanJai said...

//சரி விடு நான் ஜாம் தொட்டு சாப்பிட்டுக்கறேன்"//

2 வருஷத்துக்கு முன்னாடியும் IT மக்கள் இப்டி தானா? நான் இப்போ தான் சமீபமா (கிமு 2548ல் இல்ல) இப்டி ஆய்ட்டாங்க போலனு நெனைச்சேன்.கொய்யால சப்பாத்திக்கு ஜாமாம்ல :))//

இதுக்கும் ITக்கும் என்ன எழுவு சம்பந்தம்னே எனக்கு புரியல.. நான் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்ல படிச்சேன். சேர்ந்த புதுசுல எனக்கு ஹாஸ்டல் குருமா பிடிக்காதுனு வீட்ல இருந்து ஜாம் வாங்கி கொடுத்தாங்க. ஜாம் சீக்கிரம் கெடாது. அப்ப பழகனது. அப்ப எல்லாம் நான் கம்ப்யூட்டரே பார்த்தது இல்லை... எதுக்கு எடுத்தாலும் சாப்ட்வேர் இஞ்சினியரை குறை சொல்றது ஒரு ஃபேஷனா போயிடுச்சு.

Sanjai Gandhi said...

//எதுக்கு எடுத்தாலும் சாப்ட்வேர் இஞ்சினியரை குறை சொல்றது ஒரு ஃபேஷனா போயிடுச்சு//

குறையா சொல்லலை வெட்டி.. நான் உங்களை குறிப்பிட்டு சொல்லலை. சப்பாத்திக்கு ஜாம் எப்டிணே நல்லா இருக்கும்? கதை நாயகன் ஐடி பய்யனா இருக்கிறதால அப்டி சொன்னேன்.. சில ஐடி பசங்கள பாத்திருக்கேன்... ரொம்ப வினோதமா இருக்கும் அவங்க பழக்க வழக்கங்கள்... அதுக்கு தான் அப்டி சொன்னேன். மத்தபடி எதுகெடுத்தாலும் ஐடி பசங்கள குறை சொல்ற கட்சியில நான் உறுப்பினர் இல்லைபா.. :))

வெட்டிப்பயல் said...

// SanJai said...

//எதுக்கு எடுத்தாலும் சாப்ட்வேர் இஞ்சினியரை குறை சொல்றது ஒரு ஃபேஷனா போயிடுச்சு//

குறையா சொல்லலை வெட்டி.. நான் உங்களை குறிப்பிட்டு சொல்லலை. சப்பாத்திக்கு ஜாம் எப்டிணே நல்லா இருக்கும்? கதை நாயகன் ஐடி பய்யனா இருக்கிறதால அப்டி சொன்னேன்.. சில ஐடி பசங்கள பாத்திருக்கேன்... ரொம்ப வினோதமா இருக்கும் அவங்க பழக்க வழக்கங்கள்... அதுக்கு தான் அப்டி சொன்னேன். மத்தபடி எதுகெடுத்தாலும் ஐடி பசங்கள குறை சொல்ற கட்சியில நான் உறுப்பினர் இல்லைபா.. :))//

சஞ்சய்,
நல்லா இருக்கும்னா குருமா இருக்கும் போதே அவன் அப்படி சாப்பிட்டிருப்பானே.. ஏதாவது தொட்டுட்டு சாப்பிட்டா போதும்னு தானே அவன் அப்படி சாப்பிடறான்.

வீட்ல நல்ல ருசியான சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்திருப்பீங்க போல. நான் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல். அதனால எப்படியாவது உள்ள போனா போதும்னு சாப்பிட்டோம். இப்பவும் அப்படி தான் :-)

சக்கரை தொட்டும் சாப்பிடலாம். ஆனா ஜாம் அதை விட சப்பாத்திக்கு நல்லா இருக்குங்கறது என் ஃபீலிங் :-)

மருதநாயகம் said...

நல்ல கதை, இதை வைத்தே நான் பல பேரை கலாய்ச்சிருக்கேன்.
நீங்கள் முதல் முறை பதித்த போதே படித்தேன். அப்போ போட்டீங்க சரி, இப்போ மறுபதிப்பு செய்தது தங்கமணிக்கு தெரியுமா

திவாண்ணா said...

//திவா,
இது முன்னாடி படிக்காம விட்டவங்களுக்கும், கதையை மறந்தவங்களுக்கும் :-)) //

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் இன்ப்ளூயன்ஸா இருக்கும். எத்தனைதரம் அதை கல்கில போட்டாங்கன்னு மறந்து போச்சு!
:-)

கிரி said...

கதை நல்லா இருந்தது பாலாஜி. கடைசியில சேர விடாம சோகமாக்கிட்டீங்க :-(

வெட்டிப்பயல் said...

//மருதநாயகம் said...

நல்ல கதை, இதை வைத்தே நான் பல பேரை கலாய்ச்சிருக்கேன்.
நீங்கள் முதல் முறை பதித்த போதே படித்தேன். அப்போ போட்டீங்க சரி, இப்போ மறுபதிப்பு செய்தது தங்கமணிக்கு தெரியுமா//

நான் ப்ளாக் பத்தி வீட்ல அதிகமா பேசறது இல்லை :-)

வெட்டிப்பயல் said...

// திவா said...

//திவா,
இது முன்னாடி படிக்காம விட்டவங்களுக்கும், கதையை மறந்தவங்களுக்கும் :-)) //

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் இன்ப்ளூயன்ஸா இருக்கும். எத்தனைதரம் அதை கல்கில போட்டாங்கன்னு மறந்து போச்சு!
:-)//

இது உங்களுக்கே ஓவரா தெரியல :-)

வெட்டிப்பயல் said...

//கிரி said...

கதை நல்லா இருந்தது பாலாஜி. கடைசியில சேர விடாம சோகமாக்கிட்டீங்க :-(//

கிரி,
என்ன செய்யறது??? அவுங்களுக்கு கொடுத்து வெச்சது அவ்வளவு தான் ;)

(ரொம்ப கொடுத்து வெச்சவங்கனு மனசு சொல்லுது :P)

Anonymous said...

whenever i think about ur blog,immediately i remember this story...it makes my heart heavy :-(

Thamira said...

// (ஆமா.. இதை கதைன்னு சொல்லி என்ன கதை விடறீங்களா?)// என்னா தில்லாலங்கடி வேலையா? அனுபவமான்னு கேக்கவந்தேன் ஓய்.! (இவுரு கவுஜையான்னு கேட்டு திசைதிருப்பி உடுறாராம்..)

வெட்டிப்பயல் said...

//malar said...

whenever i think about ur blog,immediately i remember this story...it makes my heart heavy :-(

6:16 AM//

மிக்க நன்றி மலர்... நான் நிறைய காமெடி போஸ்டும் எழுதியிருக்கேன். அதை நினைச்சி சந்தோஷப்படுங்க :-)

வெட்டிப்பயல் said...

// தாமிரா said...

// (ஆமா.. இதை கதைன்னு சொல்லி என்ன கதை விடறீங்களா?)// என்னா தில்லாலங்கடி வேலையா? அனுபவமான்னு கேக்கவந்தேன் ஓய்.! (இவுரு கவுஜையான்னு கேட்டு திசைதிருப்பி உடுறாராம்..)//

இன்னைக்கு ஒரு இடத்துல திசை திருப்பி உட்டானுங்கனு நான் 20 மைல் சுத்தி வந்திருக்கேன். நீங்க என்னனா நான் திசை திருப்பறேனு சொல்றீங்க :-))

அனுபவமானு கேட்டீங்க இல்ல.. பெங்களூர்ல ரூமேட் ஒருத்தனை கொல்ட்டி பொண்ணை வெச்சி ஓட்டுவோம். அந்த பொண்ணு யூ எஸ் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிச்சி. மத்ததெல்லாம் நம்ம கற்பனை. இந்த டயலாக்ஸ், சிச்சுவேஷன் எல்லாம் நம்ம கற்பனை தான் :-)

ராமய்யா... said...

Hi Vetty,
Flow of story was excellent and it will suit to all time periods. autograph padam mathiri irukku...

I am not a good writer but i tried to write my first love in my blog..

Wish u can check this link..
http://nizhalpadam.blogspot.com/2008/08/blog-post_19.html

Raam

நாடோடி said...

//வெட்டிப்பயல் said...
// SanJai said...//
சஞ்சய்,
நல்லா இருக்கும்னா குருமா இருக்கும் போதே அவன் அப்படி சாப்பிட்டிருப்பானே.. ஏதாவது தொட்டுட்டு சாப்பிட்டா போதும்னு தானே அவன் அப்படி சாப்பிடறான்.

வீட்ல நல்ல ருசியான சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்திருப்பீங்க போல. நான் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல். அதனால எப்படியாவது உள்ள போனா போதும்னு சாப்பிட்டோம். இப்பவும் அப்படி தான் :-) //

"நான் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல். அதனால எப்படியாவது உள்ள போனா போதும்னு சாப்பிட்டோம். இப்பவும் அப்படி தான் :-) "
பாலாஜி இதுல ஏதும் டபுள் மீனிங்'லாம் இல்லீயே.. கமெண்ட்ல போட்டா யாருக்கும் (யாருனு வேற சொல்லனுமா என்ன) தெரியாதுங்கிற தைரியமா? :-)))

வேறென்ன, நாமெல்லாம் தலைவரின் விசிறிகள்: அன்னிக்கு சொன்னதுதான் இன்னிக்கும், இன்னிக்கு சொல்றதுதான் என்னிக்கும்! கதை சூப்பர்!! இது மறக்க முடியாத ஒரு கதை. மறுபதிவாப் போட்டு படிக்க வைத்ததிற்கு நன்றி..

ஆமா இத கதைனு சொன்னா யாரும் நம்பவா போறாங்க! :-P

Raj said...

கதை நிஜமாகவே நல்லா இருந்தது. ஆமாம் வெட்டி.....இது கதைதானா...இல்லை தங்கள் சொந்த (பெங்களூர்) அனுபவமா? ஆனாலும் முடிவு டச்சிங் ஆ இருந்தது.....ராஜ்

வாழவந்தான் said...

மிஸ்டர் வெட்டி
சொன்னால்தான் காதலா??
சூப்பரப்பு!!!