தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, August 28, 2008

வலைப்பதிவர் வாத்தியார்கள்!!!

நம்ம பதிவர்கள் எல்லாம் இப்பவே இந்த ஆட்டம் போடறாங்களே, சின்ன வயசுல எப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணியிருப்பாங்க. சரி எப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணிருப்பாங்கனு தெரிஞ்சிக்கனும்னா யாரை கேட்கலாம்? வேற யாரை அவுங்களுக்கு பாடம் எடுத்த வாத்தியார்களை தான். அஞ்சாம் க்ளாஸ்ல எல்லாம் என்ன பண்ணாங்கனு இப்ப ஒவ்வொரு வாதியாருங்களா சொல்ல போறாங்க.

லக்கி லுக் வாத்தியார்:
இவனுக்கு Question Paper கொடுத்தா, நீங்க கேக்கற கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னா தாவூ தீர்ந்து, நீங்க அடிக்கிற அடில டவுசர் கிழிஞ்சிடும். நானே கேள்வி! நானே பதில்னு சொல்லி அவனுக்கு தெரிஞ்ச கேள்வி எல்லாம் எழுதி அவனே பதில் எழுதிட்டான்பா.

பாஸ்டன் பாலா வாத்தியார்:
கேள்விக்கு பதில் எழுத சொல்லி கேள்வி தாளை கொடுத்தா, எந்த எந்த பதிலுக்கு யார் யார் பேப்பரை பார்க்கனும் பதில் எழுதி கொடுத்தான்.

உண்மைத்தமிழன் வாத்தியார்:
Choose the Best Answerக்கு நாப்பது பக்கத்துக்கு விடை எழுதி என்னை திக்கு முக்காட வெச்சிட்டான்பா. முழு ஆண்டு பரிட்சை எழுதி முடிக்க நேரம் பத்தலனு, கோடை விடுமுறை முழுக்க உக்கார்ந்து நாலாயிரம் பக்கத்துக்கு விடை எழுதிட்டு வந்தான். அதை மியூசியம்ல வைக்க சொல்லி கொடுத்துட்டோம். இப்பவே இப்படி எழுதறான்னா இவன் படிச்சி முடிக்கும் போது இந்தியால ஒரு மரம் கூட மிஞ்சாதுனு அப்ப இருந்த வனத்துறை அமைச்சர் சொன்னாரு.

சுப்பையா ஐயா வாத்தியார்:
சுப்பையா முதல் பெஞ்ச்ல வந்து உக்காருனு சொன்னா, குரு நாலாம் இடத்துல இருக்கான், புதன் எட்டாம் இடத்துல இருக்கான், சுக்கிரம் ஒன்பதாம் இடத்துல இருக்கான். அதனால நான் நாலாவது பெஞ்ச்ல இரண்டாம் இடத்துல தான் இருப்பேனு சொல்லுவான்

ஜ்யோவ்ராம் சுந்தர் வாத்தியார்:

இவன்கிட்ட ஆம கத சொல்லுனு சொன்னா எனக்கு ஆம கதை எல்லாம் தெரியாது "கா"ம கதை தான் தெரியும்னு சொல்லி என்னை கதி கலங்க வெச்சிட்டான். அப்பறம் பசங்க எல்லாம் போனுதுக்கப்பறம் அந்த கதையெல்லாம் நான் தனியா கேட்டுக்கிட்டேன்.

மங்களூர் சிவா வாத்தியார்:
ஒவ்வொருத்தரா மெமரி போயம்ஸ் சொல்லுங்கனு சொன்னா, "முதல் பையன் சொன்னதுக்கு ரீப்பீட்டு"னு சொல்லி அப்பீட்டு ஆகிடுவான். எந்த கேள்வி கேட்டாலும் ஜெர்மனினு தான் பதில் சொல்லுவான். ஒரு தடவை இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தப்ப, இவனை ஏதாவது கேள்வி கேக்க சொன்னாங்க. ஹிட்லர் எந்த நாடுனு நான் கேட்க அவன் ஜெர்மனினு சொல்ல, இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த வாத்தியார் இவனுக்கு வாரமலர் பரிசு கொடுத்துட்டு போனாரு.

சர்வேசன் வாத்தியார்:
இவன் ஆரம்பிக்கற தொடர் விளையாட்டால பள்ளி கூடமே கதி கலங்கி போயிடும்பா. ஒண்ணுக்கு போயிட்டு வரதுல ஆரம்பிச்சி லீவ் போடற வரைக்கும் தொடர் விளையாட்டு நடத்திருக்கான்.

பரிசல்காரன் வாத்தியார்:
ஒரு வாத்தியார் திட்டிட்டாரு நான் பள்ளி கூடத்துல இருந்து விலக போறேனு பள்ளிக்கூட சுவத்துல எழுதி இவன் அடிச்ச லூட்டியை இன்னும் பள்ளிக்கூடத்துல யாரும் மறக்கலைங்க.

My Friend வாத்தியார்:
ஒரு வகுப்பு முடிஞ்சி அடுத்த வகுப்பு தொடங்கறதுக்கு வாத்தியார் வந்தா முதல் ஆளா எழுந்து வணக்கம் ஐயானு வேகமா சொல்லிட்டு "மீ தி ஃபர்ஸ்ட்டு"னு குதிப்பா.

கோவி கண்ணன் வாத்தியார்:
எந்த வகுப்பெடுத்தாலும் கடைசியா ஏதாவது கருத்து சொல்லனும்னு சொல்லுவான். நல்ல விஷயம் தானே நினைக்கறீங்களா? கணக்கு பாடத்துல கூட கருத்து கேட்டா எப்படிங்க? அப்படி நாங்க எதுவும் சொல்லலனா அவனே ஏதாவது கண்டுபிடிச்சி சொல்லுவான்.

அய்யனார் வாத்தியார்:
இவன் இது வரைக்கும் எழுதன பதில் எதுவும் ஒரு வாதியாருக்கு கூட புரிஞ்சதில்லைனு எங்க எல்லாருக்கும் சந்தோஷம். கோடிட்ட இடத்தை நிரப்புக கூட புரியாத மாதிரி தான் விடை எழுதுவான்.

குசும்பன் வாத்தியார் :
பள்ளி ஆண்டுவிழால கலந்துகிட்டது குத்தமாய்யா? அதுல எடுத்த ஃபோட்டோல நானும் கணக்கு டீச்சர் கனகாவும் பக்கத்துல நிக்கற மாதிரி ஒரு படம் இருந்துச்சு. நாங்க என்ன பேசிருப்போம் இவன் எழுதன கமெண்டால கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போன என் பொண்டாட்டி இன்னும் வீட்டுக்கு வரலைய்யா.

லதானந்த் அங்கிள் வாத்தியார்:
இவன் திடீர்னு "ஆசிரியருக்கு ஒரு பகிரங்க கடிதம்"னு க்ளாஸ் போர்ட்ல எழுதி வெச்சிட்டான்பா. வகுப்பறை ஒரு மாய உலகம்னும், நான் அதிகமா பாடம் எடுக்கறதாவும், அதனால என் தொண்டை கிழியறதை தவிர கிஞ்சித்தும் எந்த பயனும் இல்லைனும், இனிமே நான் அதிகமா பாடம் எடுக்க கூடாதுனும் எழுதி வெச்சிட்டான்.

இதுக்கு மேல உங்களுக்கு தோன்றதை நீங்க பின்னூட்டத்துல சொல்லுங்க :)

பி.கு: இது எல்லாம் வாத்தியாருங்க சொல்ற மாதிரி இருக்கறதால கொஞ்சம் அவன், இவனு இருக்கும். யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. தப்பா நினைச்சா சொல்லிடுங்க... நீக்கிடறேன் :)

71 comments:

நாதஸ் said...

ஜுப்பர்... :)

வெட்டிப்பயல் said...

// nathas said...

ஜுப்பர்... :)//

மிக்க நன்றி நாதஸ் :)

(என்னடா பதிவு போட்டு ஒரு மணி நேரமா யாருமே வரலையேனு பார்த்துட்டு இருந்தேன்)

ப்ரசன்னா said...

சூப்பர்

//சர்வேசன் வாத்தியார்:
இவன் ஆரம்பிக்கற தொடர் விளையாட்டால பள்ளி கூடமே கதி கலங்கி போயிடும்பா. ஒண்ணுக்கு போயிட்டு வரதுல ஆரம்பிச்சி லீவ் போடற வரைக்கும் தொடர் விளையாட்டு நடத்திருக்கான்.//

இது டாப்பு

சங்கர் said...

வெட்டிவாத்தியார்
இவன் 'பதில் சொன்னா கேட்கனும் ஆராயக்கூடாது' என்பான்.

வெட்டிப்பயல் said...

//ப்ரசன்னா said...

சூப்பர்

//சர்வேசன் வாத்தியார்:
இவன் ஆரம்பிக்கற தொடர் விளையாட்டால பள்ளி கூடமே கதி கலங்கி போயிடும்பா. ஒண்ணுக்கு போயிட்டு வரதுல ஆரம்பிச்சி லீவ் போடற வரைக்கும் தொடர் விளையாட்டு நடத்திருக்கான்.//

இது டாப்பு//

மிக்க நன்றி ப்ரசன்னா :)

வெட்டிப்பயல் said...

//சங்கர் said...

வெட்டிவாத்தியார்
இவன் 'பதில் சொன்னா கேட்கனும் ஆராயக்கூடாது' என்பான்.//

இது இப்படி இருக்கலாமோ

பதில கேட்டா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :)

சங்கர் said...

ஆமாங்க, அப்படித்தான் சொல்லியிருப்பான்..

Anonymous said...

Hi Vetti,

Adiphozhi!! Super thambi!!!
Expecting more posts like this.

Deepak

வெட்டிப்பயல் said...

// சங்கர் said...

ஆமாங்க, அப்படித்தான் சொல்லியிருப்பான்..//

இருந்தாலும் க்ரெடிட் உங்களுக்கு தான் சங்கர் :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

Hi Vetti,

Adiphozhi!! Super thambi!!!
Expecting more posts like this.

Deepak//

மிக்க நன்றி தீபக்...

அக்டோபர் வரைக்கும் கண்டிப்பா இப்படி அடிக்கடி எழுதிட்டு இருப்பேன் :)

Anonymous said...

//குசும்பன் வாத்தியார் :
பள்ளி ஆண்டுவிழால கலந்துகிட்டது குத்தமாய்யா? அதுல எடுத்த ஃபோட்டோல நானும் கணக்கு டீச்சர் கனகாவும் பக்கத்துல நிக்கற மாதிரி ஒரு படம் இருந்துச்சு. நாங்க என்ன பேசிருப்போம் இவன் எழுதன கமெண்டால கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போன என் பொண்டாட்டி இன்னும் வீட்டுக்கு வரலைய்யா.
//

Ithu Super! This is my first comment and I used to check Kusumban's blog daily......

Reading all your post's in the last 2 days... Nalla ezhuiyirukeenga! Vazhutkkkal!

குட்டிபிசாசு said...

***வகுப்பில் வெட்டியா அல்லாரையும் கவுண்டர் கணக்கா கலாய்ப்பான். கேள்வி கேட்டு பதில் தெரியாட்டி கொல்ட்டினு சொல்லி தெலுகுல மாட்லாடுவான். ஒரு தேர்வில் கேட்கப்பட்ட வினாவிற்கான பதிலை பல தேர்வில் தொடராக எழுதி பதில் தருவான்....!****

இவர் யாருனு சரியான பதில் சொல்லுரவங்க, அவங்களே அவங்க தலையில் ஓங்கி ஒரு குட்டு வச்சிக்குங்க!!

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

//குசும்பன் வாத்தியார் :
பள்ளி ஆண்டுவிழால கலந்துகிட்டது குத்தமாய்யா? அதுல எடுத்த ஃபோட்டோல நானும் கணக்கு டீச்சர் கனகாவும் பக்கத்துல நிக்கற மாதிரி ஒரு படம் இருந்துச்சு. நாங்க என்ன பேசிருப்போம் இவன் எழுதன கமெண்டால கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போன என் பொண்டாட்டி இன்னும் வீட்டுக்கு வரலைய்யா.
//

Ithu Super! This is my first comment and I used to check Kusumban's blog daily......

Reading all your post's in the last 2 days... Nalla ezhuiyirukeenga! Vazhutkkkal!//

மிக்க நன்றி நண்பரே...

முடிந்த வரை நல்லா எழுத முயற்சி பண்றேன் :)

வெட்டிப்பயல் said...

//குட்டிபிசாசு said...

***வகுப்பில் வெட்டியா அல்லாரையும் கவுண்டர் கணக்கா கலாய்ப்பான். கேள்வி கேட்டு பதில் தெரியாட்டி கொல்ட்டினு சொல்லி தெலுகுல மாட்லாடுவான். ஒரு தேர்வில் கேட்கப்பட்ட வினாவிற்கான பதிலை பல தேர்வில் தொடராக எழுதி பதில் தருவான்....!****

இவர் யாருனு சரியான பதில் சொல்லுரவங்க, அவங்களே அவங்க தலையில் ஓங்கி ஒரு குட்டு வச்சிக்குங்க!!//

ஆஹா.. குட்டி பிசாசு.. கலக்கறீங்களே :)

MSK / Saravana said...

கொலைவெறி..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Boston Bala said...

கேயாரெஸ், கொத்ஸ் எல்லாம் விட்டுட்டீங்களே ;))

வெட்டிப்பயல் said...

//Ramya Ramani said...

:))//

டாங்க்ஸ் தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

//Saravana Kumar MSK said...

கொலைவெறி..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

:)))

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

கேயாரெஸ், கொத்ஸ் எல்லாம் விட்டுட்டீங்களே ;))//

புதியவர்கள் நிறைய பேருக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால க்ரீமி லேயரை தூக்கியாச்சு :)

SurveySan said...

///Choose the Best Answerக்கு நாப்பது பக்கத்துக்கு விடை எழுதி என்னை திக்கு முக்காட வெச்சிட்டான்பா///

வயிறு புண்ணாயிருச்சு ;)

ஹ்ம். பள்ளிக்கூடத்துல நான் வெளையாடிய ஒரே தொடர் விளையாட்டு, சைக்கிள் டயர்ல காத்து எறக்கி விடரதுதான். :(

கோவி.கண்ணன் said...

பாலாஜி........மூளையில் இரத்தத்திற்குப் பதிலாக ... நகைச்சுவை ஊற்று இருக்கிறதா ?

ஆல்டைம் நகைச்சுவையில் கலக்குறிங்க... !

இங்கே தனியாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டு இருக்கிறேன்

பாஸ்டன் பாலாவைப் பற்றிய கலாய்த்தல் வெகு அருமை !

கோவி.கண்ணன் said...

//அப்பறம் பசங்க எல்லாம் போனுதுக்கப்பறம் அந்த கதையெல்லாம் நான் தனியா கேட்டுக்கிட்டேன்.//

டாப் கியர்.....நகைச்சுவை !

விஜய் ஆனந்த் said...

:-)))

VSK said...

செம செம செம!!:))

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

///Choose the Best Answerக்கு நாப்பது பக்கத்துக்கு விடை எழுதி என்னை திக்கு முக்காட வெச்சிட்டான்பா///

வயிறு புண்ணாயிருச்சு ;)
//
மிக்க நன்றி சர்வேஸ் :)

// ஹ்ம். பள்ளிக்கூடத்துல நான் வெளையாடிய ஒரே தொடர் விளையாட்டு, சைக்கிள் டயர்ல காத்து எறக்கி விடரதுதான். :(//

இதுக்கு நான் சொன்னதே பரவாயில்லை போல... சைக்கிள் டயர்ல காத்து எறக்கறதுல தொடர் விளையாட்டாம்... சின்னப்புள்ள தனமா இருக்கு :)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

பாலாஜி........மூளையில் இரத்தத்திற்குப் பதிலாக ... நகைச்சுவை ஊற்று இருக்கிறதா ?

ஆல்டைம் நகைச்சுவையில் கலக்குறிங்க... !

இங்கே தனியாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டு இருக்கிறேன்

பாஸ்டன் பாலாவைப் பற்றிய கலாய்த்தல் வெகு அருமை !//

ஆஹா... கோவி
நானே வெக்கப்படற அளவுக்கு புகழறீங்களே :)

ஒரு மோசமான தொடர்கதை எழுதிட்டு இருக்கேன். கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ண இந்த மாதிரி காமெடி எழுத வேண்டியதா இருக்கு :)

Anonymous said...

நல்லா இருக்குங்க. இதுல யாரும் எனக்கு தெரியாது. ஆனா, நல்ல காமெடியா இருக்கு.

நந்தகுமார்

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

//அப்பறம் பசங்க எல்லாம் போனுதுக்கப்பறம் அந்த கதையெல்லாம் நான் தனியா கேட்டுக்கிட்டேன்.//

டாப் கியர்.....நகைச்சுவை !//

மிக்க நன்றி :)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

:-)))//

டாங்ஸ் விஜய் ஆனந்த்...

இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல ஆடு புலி ஆட்டம் வந்துடும் :)

வெட்டிப்பயல் said...

//VSK said...

செம செம செம!!:))//

மிக்க நன்றி டாக்டர் ஐயா :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

நல்லா இருக்குங்க. இதுல யாரும் எனக்கு தெரியாது. ஆனா, நல்ல காமெடியா இருக்கு.

நந்தகுமார்//

நந்தகுமார்,
மிக்க நன்றி... இதுல இருக்கறவங்க எல்லாம் பெரிய ஆளுங்க தான் :)

Athisha said...

சுப்பையா வாத்தியார் சூப்பர் தலைவா

நினைச்சு நினைச்சு சிரிச்சிட்டருக்கேன்

சிவமுருகன் said...

சூப்பரா எழுதிருக்கீங்க பாலாஜி!

Note: வெட்டியோட ஆசிரியர் தேடப்படுவதாக செய்தி நிலவுகிறது!

வெட்டிப்பயல் said...

//அதிஷா said...

சுப்பையா வாத்தியார் சூப்பர் தலைவா

நினைச்சு நினைச்சு சிரிச்சிட்டருக்கேன்//

மிக்க நன்றி அதிஷா :)

வெட்டிப்பயல் said...

// சிவமுருகன் said...

சூப்பரா எழுதிருக்கீங்க பாலாஜி!
//

மிக்க நன்றி சிவமுருகன் :)

// Note: வெட்டியோட ஆசிரியர் தேடப்படுவதாக செய்தி நிலவுகிறது!//

தேடினாலும் கிடைக்காது :)

வெட்டிப்பயல் said...

// சரவணகுமரன் said...

:-)//

:)

ramachandranusha(உஷா) said...

துள்சி டீச்சர்-
இன்னைக்கு என்ன சொல்கிறது, பிள்ளைங்க எல்லாம் (பதிவு போடாமேலேயே) ஆஜர்.
(இந்த மாதிரி சிஷய் கோடிகள் அமைவது டீச்சர் செய்த புண்ணியம்) கோபால் சார், நேத்து
தோட்டத்திலே காட்டினாரே அந்த புல்லின் நுனியை போட்டோ எடுத்த்ப் போடலாமா?
நேத்து வெச்ச ரச குறிப்பு போடலாமா? ஓண்னுமே தோணலையே? சரி, இன்னைக்கு ஒண்ணும் பதிவு
போடலைன்னு பதிவு போட்டுட வேண்டியதுதான் :-)

துளசி கோபால் said...

ஐடியாவுக்கு தேங்க்ஸ் உஷா.

அந்தப் புல்லை படம் எடுக்கறதுக்குள்ளே,
லான் மோவ் பண்றவர் 'வெட்டி'ட்டுப்போயிட்டார்ப்பா:-)))

லக்கிலுக் said...

தலைவா!

வாத்தியார்கள் வலைப்பதிவர்கள் பற்றி சொல்வது இருக்கட்டும். அவரவர் பொண்டாட்டிகள் என்ன சொல்வார்கள் என்பதையும் சொல்லுங்க :-)

Anonymous said...

// பரிசல்காரன் வாத்தியார்:
ஒரு வாத்தியார் திட்டிட்டாரு நான் பள்ளி கூடத்துல இருந்து விலக போறேனு பள்ளிக்கூட சுவத்துல எழுதி இவன் அடிச்ச லூட்டியை இன்னும் பள்ளிக்கூடத்துல யாரும் மறக்கலைங்க.//

இது சூப்பர்!!!!!!!!

மணிவண்ணன் said...

அசத்துங்க அசத்துங்க!

Anonymous said...

சுப்பையா ஐயா வாத்தியார்:
//சுப்பையா முதல் பெஞ்ச்ல வந்து உக்காருனு சொன்னா, குரு நாலாம் இடத்துல இருக்கான், புதன் எட்டாம் இடத்துல இருக்கான், சுக்கிரம் ஒன்பதாம் இடத்துல இருக்கான். அதனால நான் நாலாவது பெஞ்ச்ல இரண்டாம் இடத்துல தான் இருப்பேனு சொல்லுவான்//

வாத்தியார் பதிவு போட்டு வாத்தியாரையே கலாய்க்கிறீங்களே.

உண்மைத்தமிழன் said...

ஏன் ராசா இம்புட்டு கொலை வெறி..?

போட்டுத் தாக்கீட்ட போ..

எனக்கு ரொம்ப, ரொம்பப் புடிச்சது இதுதான்பா..

//சுப்பையா ஐயா வாத்தியார்:
சுப்பையா முதல் பெஞ்ச்ல வந்து உக்காருனு சொன்னா, குரு நாலாம் இடத்துல இருக்கான், புதன் எட்டாம் இடத்துல இருக்கான், சுக்கிரம் ஒன்பதாம் இடத்துல இருக்கான். அதனால நான் நாலாவது பெஞ்ச்ல இரண்டாம் இடத்துல தான் இருப்பேனு சொல்லுவான்.//

வாத்தியார் சொன்னாலும் சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன்..

அசத்திட்ட..

புதுகை.அப்துல்லா said...

அண்ணே! சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி முட்டுது :)))))

கைப்புள்ள said...

சூப்பரப்பு. செம கற்பனை. ரசிச்சிப் படிச்சேன்.
:)

உண்மைத்தமிழன் said...

///SurveySan said...
//Choose the Best Answerக்கு நாப்பது பக்கத்துக்கு விடை எழுதி என்னை திக்கு முக்காட வெச்சிட்டான்பா//
வயிறு புண்ணாயிருச்சு;)///

ஆகும்ல..

இருங்கப்பா எனக்கொரு சான்ஸ் கிடைக்காமயா போகும்.. அப்ப வைச்சுக்குறேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) எல்லாமே நல்லா வந்திருக்கு...

வெட்டிப்பயல் said...

// ramachandranusha(உஷா) said...

துள்சி டீச்சர்-
இன்னைக்கு என்ன சொல்கிறது, பிள்ளைங்க எல்லாம் (பதிவு போடாமேலேயே) ஆஜர்.
(இந்த மாதிரி சிஷய் கோடிகள் அமைவது டீச்சர் செய்த புண்ணியம்) கோபால் சார், நேத்து
தோட்டத்திலே காட்டினாரே அந்த புல்லின் நுனியை போட்டோ எடுத்த்ப் போடலாமா?
நேத்து வெச்ச ரச குறிப்பு போடலாமா? ஓண்னுமே தோணலையே? சரி, இன்னைக்கு ஒண்ணும் பதிவு
போடலைன்னு பதிவு போட்டுட வேண்டியதுதான் :-)//

:)))

வெட்டிப்பயல் said...

//துளசி கோபால் said...

ஐடியாவுக்கு தேங்க்ஸ் உஷா.

அந்தப் புல்லை படம் எடுக்கறதுக்குள்ளே,
லான் மோவ் பண்றவர் 'வெட்டி'ட்டுப்போயிட்டார்ப்பா:-)))//

நல்ல வேளை டீச்சர்... வெட்டி எடுத்துட்டு போயிட்டார்னு சொல்லாம விட்டீங்களே :)

வெட்டிப்பயல் said...

//லக்கிலுக் said...

தலைவா!

வாத்தியார்கள் வலைப்பதிவர்கள் பற்றி சொல்வது இருக்கட்டும். அவரவர் பொண்டாட்டிகள் என்ன சொல்வார்கள் என்பதையும் சொல்லுங்க :-)//

வாங்க தல...

அதையெல்லாம் மறக்க தானே ப்ளாக் எழுதறோம் (படிக்கறோம்) இங்கயும் அதையே எழுதினா எப்படினு நம்ம ஆளுங்க கேட்டுட்டா என்ன பண்ண :)

வெட்டிப்பயல் said...

//வெயிலான் said...

// பரிசல்காரன் வாத்தியார்:
ஒரு வாத்தியார் திட்டிட்டாரு நான் பள்ளி கூடத்துல இருந்து விலக போறேனு பள்ளிக்கூட சுவத்துல எழுதி இவன் அடிச்ச லூட்டியை இன்னும் பள்ளிக்கூடத்துல யாரும் மறக்கலைங்க.//

இது சூப்பர்!!!!!!!!//

மிக்க நன்றி வெயிலான் :)

வெட்டிப்பயல் said...

//மணிவண்ணன் said...

அசத்துங்க அசத்துங்க!//

மிக்க நன்றி மணிவண்ணன் :)

வெட்டிப்பயல் said...

//பரிசல்காரன் said...

:-)//

மிக்க நன்றி பரிசல் :)

வெட்டிப்பயல் said...

//வடகரை வேலன் said...

சுப்பையா ஐயா வாத்தியார்:
//சுப்பையா முதல் பெஞ்ச்ல வந்து உக்காருனு சொன்னா, குரு நாலாம் இடத்துல இருக்கான், புதன் எட்டாம் இடத்துல இருக்கான், சுக்கிரம் ஒன்பதாம் இடத்துல இருக்கான். அதனால நான் நாலாவது பெஞ்ச்ல இரண்டாம் இடத்துல தான் இருப்பேனு சொல்லுவான்//

வாத்தியார் பதிவு போட்டு வாத்தியாரையே கலாய்க்கிறீங்களே.//

ஹி ஹி ஹி

வாத்தியாரோட வாத்தியார் வாத்தியாரை பத்தி என்ன சொல்லிருப்பாருனு மக்கள்ஸ் தெரிஞ்சிக்கனும் இல்லை. அதுக்கு தான் :)

வெட்டிப்பயல் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஏன் ராசா இம்புட்டு கொலை வெறி..?

போட்டுத் தாக்கீட்ட போ..

எனக்கு ரொம்ப, ரொம்பப் புடிச்சது இதுதான்பா..

//சுப்பையா ஐயா வாத்தியார்:
சுப்பையா முதல் பெஞ்ச்ல வந்து உக்காருனு சொன்னா, குரு நாலாம் இடத்துல இருக்கான், புதன் எட்டாம் இடத்துல இருக்கான், சுக்கிரம் ஒன்பதாம் இடத்துல இருக்கான். அதனால நான் நாலாவது பெஞ்ச்ல இரண்டாம் இடத்துல தான் இருப்பேனு சொல்லுவான்.//

வாத்தியார் சொன்னாலும் சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன்..

அசத்திட்ட..//

கொலை வெறியோட ஒரு தொடர் கதை எழுதிட்டு இருக்கேன் அண்ணே... அதுக்கு தான் இப்படி எழுதி இளைப்பாறிக்கறேன் :)

தொடர்ந்து ஒரு வேளையே பண்ணிட்டு இருந்தா போர் அடிச்சிடும் இல்ல. அதுக்கு தான் இப்படி ஒரு ரெஸ்ட் :)

வெட்டிப்பயல் said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே! சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி முட்டுது :)))))//

மிக்க நன்றி அப்துல்லா :)

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...

சூப்பரப்பு. செம கற்பனை. ரசிச்சிப் படிச்சேன்.
:)//

வாங்க தல... ரொம்ப டாங்க்ஸ் :)

வெட்டிப்பயல் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///SurveySan said...
//Choose the Best Answerக்கு நாப்பது பக்கத்துக்கு விடை எழுதி என்னை திக்கு முக்காட வெச்சிட்டான்பா//
வயிறு புண்ணாயிருச்சு;)///

ஆகும்ல..

இருங்கப்பா எனக்கொரு சான்ஸ் கிடைக்காமயா போகும்.. அப்ப வைச்சுக்குறேன்..//

உங்களுக்கு சான்ஸ் இல்லாம போகுமாணே... நான் விரும்பி பார்த்த ரமணி Vs ரமணியே எடுத்தவர் நீங்க... உங்களுக்கு சொல்லனுமா.

மக்களை சிரிக்க வைச்சா சந்தோஷம் தான் :)

வெட்டிப்பயல் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) எல்லாமே நல்லா வந்திருக்கு...//

மிக்க நன்றி முத்துலெட்சுமி அக்கா :)

மங்களூர் சிவா said...

அண்ணாத்த ஜெர்மனில இருந்து இப்பதான் சிக்னல் கிடைச்சது பின்னூட்டம் போட, போட்டுட்டேன்!!
:))

கலக்கல் பதிவு

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

அண்ணாத்த ஜெர்மனில இருந்து இப்பதான் சிக்னல் கிடைச்சது பின்னூட்டம் போட, போட்டுட்டேன்!!
:))

கலக்கல் பதிவு//

ஜெர்மனில இருந்து சிக்னல் கொடுத்தவருக்கு என் நன்றி ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்த லிஸ்ட்டில் ஒரிஜினல் வாத்தியார், எங்க டீச்சர் எங்கே பாலாஜி?

குடுகுடுப்பை said...

இந்த வாத்தியாருக்கெல்லாம் ஹெட்மாஸ்டர் வெட்டிப்பயலோ

Syam said...

ROTFL...

அதிலும் லக்கி, சர்வேசன் வாத்தியார்கள் சூப்பர் :-)

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இந்த லிஸ்ட்டில் ஒரிஜினல் வாத்தியார், எங்க டீச்சர் எங்கே பாலாஜி?//

அப்ப சுப்பையா வாத்தியார் டூப்ளிகேட் வாத்தியாரா????

வெட்டிப்பயல் said...

// குடுகுடுப்பை said...

இந்த வாத்தியாருக்கெல்லாம் ஹெட்மாஸ்டர் வெட்டிப்பயலோ//

ஹி ஹி ஹி...

நாம எல்லாம் இன்னும் ஸ்டுடெண்ட் தான் :)

வெட்டிப்பயல் said...

//Syam said...

ROTFL...

அதிலும் லக்கி, சர்வேசன் வாத்தியார்கள் சூப்பர் :-)//

டாங்க்ஸ் நாட்ஸ் :)

இனியா said...

wow!!! it is good!!!

வெட்டிப்பயல் said...

//இனியா said...

wow!!! it is good!!!//

மிக்க நன்றி இனியா :)

Anonymous said...

super

vellayan said...

// பரிசல்காரன் வாத்தியார்:
ஒரு வாத்தியார் திட்டிட்டாரு நான் பள்ளி கூடத்துல இருந்து விலக போறேனு பள்ளிக்கூட சுவத்துல எழுதி இவன் அடிச்ச லூட்டியை இன்னும் பள்ளிக்கூடத்துல யாரும் மறக்கலைங்க.//

அட்டகாசம் போங்க சார். ஆனா பரிசல்காரர் பள்ளிக்கு உள்ளேயெ
இருந்திருப்பாரெ?