தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, September 28, 2008

முருங்கை காய் சாம்பார், Eagle Eye, எங்க சின்ன ராசா, சர்வேசன்

வெள்ளிக்கிழமை பாட் லக் போயிட்டு வந்தாச்சு. Pot Luckனா என்னனு தெரியாதவங்களுக்கு, ஆளுக்கு ஒரு ஐட்டம் சமைச்சி எடுத்துட்டு போய் கலந்து கட்டி சாப்பிடறதுக்கு பேரு தான் பாட் லக். முன்ன எல்லாம் திருப்பதி போகும் போது அப்படித்தான் எடுத்துட்டு போவோம். எங்க வீட்ல இட்லி வெங்காய சட்னி, எங்க மாமா வீட்ல பூரி மசாலா, அப்பறம் இன்னும் ஒருத்தவங்க புளி சாதம் இப்படி எடுத்துட்டு வருவாங்க. கடைசியா எல்லாரும் கலந்து சாப்பிட்டுக்குவோம். இப்ப எல்லாம் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்னு சொல்லி புறப்பட்டுடறாங்க. யாருக்கும் செய்யறதுக்கு தெம்போ, மனசோ இல்லை :(

சரி அதை விடுங்க. அன்னைக்கு நான் காலி ஃபிளவர் செய்யலாம்னு பார்த்தா என் ரூமேட் தமிழ் நாடு ஐட்டம் ஏதாவது செய்டானு சொல்லிட்டான். சரினு சாம்பார் செஞ்சி எடுத்து போனேன். அதுவும் முருங்க காய் சாம்பார். எல்லாரும் ஃபோர்க்ல சாப்பிட்டு முருங்கை காயை அப்படியே விட்டுட்டாங்க (என்ன கொடுமை சரவணன் இது?). சாம்பார் எல்லாம் நல்லா கைல பிசைஞ்சி சாப்பிட்டா தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். 

அப்பறம் மீதமானதை கொண்டு வந்து ரெண்டு நாளா தோசைக்கு தோட்டு சாப்பிட்டு இருக்கோம்.


.......................


படத்துக்கு போயே ரொம்ப நாள் ஆகுதுனு நேத்து எப்படியும் போறதுனு முடிவு பண்ணிட்டோம். கடைசியா நான் பார்த்தது டார்க் நைட். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதுவும் அந்த ஜோக்கர் சான்சே இல்லை. ரெண்டாவது தடவை பார்க்கனும்னு முடிவு பண்ணிருந்தோம். நேரம் கிடைக்கல. 

நேத்து Eagle Eye போயிருந்தோம். படத்துல நிறைய சீன் மத்த படங்கள்ல பார்த்த மாதிரியே இருந்தது. முதல் சீன் “Iron Man"ல வர மாதிரி ஆப்கானிஸ்தான்ல ஆரம்பிக்கிறது. அப்பறம் வாடகை குடுக்காம வீட்டு ஓனர்கிட்ட நாயகன் பேசறது "Spider Man”ஐ நினைவு படுத்தியது. அடுத்து ஃபோன் கால் வந்து ஓடுனு சொல்றது "Matrix"ஐ நினைவு படுத்தியது. அடுத்து ட்ராஃபிக் சிக்னலை எல்லாம் கட்டு படுத்தறது, F-16 எல்லாம் கொண்டு வந்து சேஸ் பண்றது “Die Hard"ஐ நினைவு படுத்தியது. கடைசியா க்ளைமாக்ஸ் "iRobot"வை நினைவு படுத்தியது. மொத்தத்துல எல்லாத்தையும் கலந்து கட்டி அடிச்சிருக்கானுங்க. மசாலா பிரியர்கள் பார்க்கலாம். 


.........................


நேத்து மதியம் எங்க சின்ன ராசா படம் பார்த்தேன். நிறைய தடவை பார்த்தாலும் பார்க்க அலுக்காத படம். ஒரு சின்ன ஸ்டோரி லைனை எவ்வளவு அழகான ஸ்க்ரின் ப்ளேவா மாத்திருக்காரு பாக்யராஜ். படத்துல ஆரம்பமும் முடிவும் பார்த்திபனோட குரல் கனீர்னு ஒலிக்குது. அப்ப பார்த்திபன்னு யாருக்கும் தெரிஞ்சிருக்காது இல்ல. 

இந்த படத்துல நிறைய பாடல்கள் இருந்தாலும் எல்லாமே அருமையான பாடல்கள். படத்துல நிறைய இடங்கள் அடல்ஸ் ஒன்லி தான். S J சூர்யா எங்க இருந்து எல்லாம் படிச்சிருக்காருனு பாக்யராஜ் படங்கள் பார்த்தா தெரியுது. பாக்யராஜ் படங்களை ரீ ரிலிஸ் பண்ணா டீசண்டா ஓடும்னு நினைக்கிறேன்.


.........................


சிறுகதை போட்டி வெச்சி ரொம்ப நாளாகுது. சர்வேசன், சிறில் அலெக்ஸ் ரெண்டு பேரும் (ரெண்டா?) ரொம்ப பிஸி போல. அடுத்து ஏதாவது போட்டி வெச்சா கொஞ்சம் சுவாரஸ்யமா போகும்னு நினைக்கிறேன். என்னோட சாய்ஸ் ”டீனேஜ்” கதைகள். அந்த வயசுல நடந்த பல விஷயங்களை சுவாரஸ்யமா சொல்றதுக்கு இங்க நிறைய பேர் இருக்காங்க. சில கிளு கிளுப்பு கதைகள் வரதுக்கும் சான்ஸ் இருக்கு. படிக்க குஜாலா இருக்கும் ;)

என்ன சர்வேஸ் ஓகேவா?

28 comments:

தமிழன்-கறுப்பி... said...

me the first ?

தமிழன்-கறுப்பி... said...

அதான சாம்பார்லாம் கையால சாப்பிட்டாத்தான் ருசியே ...

தமிழன்-கறுப்பி... said...

"போர்க்கில" சாப்பிடறதுக்கு எதுக்கு "பொட்லக்" போகணும்...:)

வெட்டிப்பயல் said...

//தமிழன்... said...
me the first ?//

yessu...

வெட்டிப்பயல் said...

//தமிழன்... said...
அதான சாம்பார்லாம் கையால சாப்பிட்டாத்தான் ருசியே ...

//

அதானே... நமக்கு எல்லாம் நல்ல பிசைஞ்சி சாப்பிட்டா தான் சாம்பார் சாதமெல்லாம் சாப்பிட்ட மாதிரியே இருக்கும் :)

வெட்டிப்பயல் said...

//தமிழன்... said...
"போர்க்கில" சாப்பிடறதுக்கு எதுக்கு "பொட்லக்" போகணும்...:)//

எல்லாம் வட இந்தியர்கள்... கூப்பிட்டு போகலைனா தப்பா ஃபீல் பண்ணுவாங்க. அவுங்களுக்கு பிடிச்ச மாதிரி சாப்பிடட்டும்னு விட்டுடுவேன் :)

அப்பறம் போக்கர், 29 எல்லாம் விளையாடுவோம். 29 - 4 பேர் விளையாடற சீட்டு விளையாட்டு. பின்னாடி நேரமிருக்கும் போது எழுதறேன் :)

ஆயில்யன் said...

//சாம்பார் எல்லாம் நல்லா கைல பிசைஞ்சி சாப்பிட்டா தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கும்.
/

ம்ம்! கட்டுச்சோறு கட்டிகிட்டு போய் சாப்பிடற ஸ்டைல்லுதானே இது!

முருங்கைகாய் புளிக்குழம்பு வைச்சு நல்லா பிசைஞ்சு வைச்சுக்கிட்டு உருட்டி,உருட்டி தின்னு,(கெட்ட பழக்கம்ன்னு சொன்ன பின்னால அதை விட்டுட்டேன்:(_)
சாப்பிட்டா ஆஹா அற்புதமா இருக்கும்!

இலவசக்கொத்தனார் said...

நீரோ ஊருக்குப் போகப் போறீரு. அப்புறம் இணையமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. அப்புறம் என்ன போட்டி? வேலையைப் பாரும்வோய்!

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//சாம்பார் எல்லாம் நல்லா கைல பிசைஞ்சி சாப்பிட்டா தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கும்.
/

ம்ம்! கட்டுச்சோறு கட்டிகிட்டு போய் சாப்பிடற ஸ்டைல்லுதானே இது!
//
அதே அதே ;)

//முருங்கைகாய் புளிக்குழம்பு வைச்சு நல்லா பிசைஞ்சு வைச்சுக்கிட்டு உருட்டி,உருட்டி தின்னு,(கெட்ட பழக்கம்ன்னு சொன்ன பின்னால அதை விட்டுட்டேன்:(_)
சாப்பிட்டா ஆஹா அற்புதமா இருக்கும்!

//

ஆமாம் உருட்டி சாப்பிடக்கூடாதுனு சொல்லுவாங்க. ஏன்னு தெரியல...

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...
நீரோ ஊருக்குப் போகப் போறீரு. அப்புறம் இணையமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. அப்புறம் என்ன போட்டி? வேலையைப் பாரும்வோய்!//

ஊருக்கு போற வரைக்கும் படிக்க நல்லா இருக்குமில்ல கொத்ஸ். அப்படியே நாமலும் ஒரு கதை எழுதலாமில்லையா. அதான் ;)

rapp said...

////இலவசக்கொத்தனார் said...
நீரோ ஊருக்குப் போகப் போறீரு. அப்புறம் இணையமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. அப்புறம் என்ன போட்டி? வேலையைப் பாரும்வோய்!//

ஊருக்கு போற வரைக்கும் படிக்க நல்லா இருக்குமில்ல கொத்ஸ். அப்படியே நாமலும் ஒரு கதை எழுதலாமில்லையா. அதான் ;)

//

அச்சச்சோ, அப்போ ஊருக்குப் போனப்புறம் எழுத மாட்டீங்களா:(:(:(

சின்னப் பையன் said...

சரி சரி. கையிலே ரெண்டு மூணு கிளுகிளு கதைகள் இருக்குன்னு நினைக்கிறேன்...

நாளைக்குள்ளே போட்டி எதுவும் வரலேன்னா, நாளன்னிக்கு அதை போட்டுடுங்க!!!!

Anonymous said...

பிசைந்து உண்பது கேவலமா?

வெட்டிப்பயல் said...

//rapp said...
////இலவசக்கொத்தனார் said...
நீரோ ஊருக்குப் போகப் போறீரு. அப்புறம் இணையமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. அப்புறம் என்ன போட்டி? வேலையைப் பாரும்வோய்!//

ஊருக்கு போற வரைக்கும் படிக்க நல்லா இருக்குமில்ல கொத்ஸ். அப்படியே நாமலும் ஒரு கதை எழுதலாமில்லையா. அதான் ;)

//

அச்சச்சோ, அப்போ ஊருக்குப் போனப்புறம் எழுத மாட்டீங்களா:(:(:(
//

அதனால தானே இப்ப கண்டதும் எழுதிட்டு இருக்கேன் :))

அங்க இண்டர்நெட் வசதியெல்லாம் இருக்காது. எப்படியும் மூணு மாசத்துக்காவது எழுத முடியாது...

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
சரி சரி. கையிலே ரெண்டு மூணு கிளுகிளு கதைகள் இருக்குன்னு நினைக்கிறேன்...

நாளைக்குள்ளே போட்டி எதுவும் வரலேன்னா, நாளன்னிக்கு அதை போட்டுடுங்க!!!!

//

வாங்க. வந்து இப்படி பக்கத்துல உட்காருங்க. நானும் அப்படி யாராவது எழுதுவாங்கனு தான் போட்டியெல்லாம் வைக்க சொல்லிட்டு இருக்கேன் :)))

வெட்டிப்பயல் said...

// anonymous said...
பிசைந்து உண்பது கேவலமா?

//

இருங்க போய் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி என்னோட பதில் கிடையவே கிடையாது. அடுத்தவன் சாப்பாட்டை அடிச்சி பிடிங்கி சாப்பிடறது தான் கேவலம்...

SurveySan said...

முருங்கைக்காய் அப்படியே விட்டாங்களே, அதாவது பரவால்ல.

நான் ஒரு தடவ மு.காய் கொண்டு போனபோது, ஒரு தொர,அத அப்படியே வாய்ல போட்டு, கடிச்சு, முழுங்கி, இருமி, கண்ணுல தண்னி வந்து, தொண்ட அடச்சுக்கிட்டூ, ரணகளமாயிடுச்சு ;)


கதைப் போட்டிதான? வச்சிட்டாப் போவுது.
இதப் பாக்கலியா? இந்த தடவ ஒரு படி மேல போலாம்னு ஐடியா :)
http://surveysan.blogspot.com/2008/09/blog-post_23.html

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

முருங்கைக்காய் அப்படியே விட்டாங்களே, அதாவது பரவால்ல.

நான் ஒரு தடவ மு.காய் கொண்டு போனபோது, ஒரு தொர,அத அப்படியே வாய்ல போட்டு, கடிச்சு, முழுங்கி, இருமி, கண்ணுல தண்னி வந்து, தொண்ட அடச்சுக்கிட்டூ, ரணகளமாயிடுச்சு ;)
//
ஆஹா...

அங்க வந்திருந்தது வட இந்திய பசங்க தானே. எஸ்கேப் ஆகிட்டாங்க :)


//
கதைப் போட்டிதான? வச்சிட்டாப் போவுது.
//
சீக்கிரம் வைங்க ;)

//
இதப் பாக்கலியா? இந்த தடவ ஒரு படி மேல போலாம்னு ஐடியா :)
http://surveysan.blogspot.com/2008/09/blog-post_23.html//

இது ஒரு லெவல் மேல தான். ஆனா நம்ம லெவலுக்கு ஒத்து வராது :(

முரளிகண்ணன் said...

murunkakkkaai bhagyaraj good combination

:-)))))))))))))))))

G.Ragavan said...

முருங்கைக்காய்ச் சாம்பாரைப் பெசஞ்சுதானே திங்கனும். பாவம் வடக்கத்திப் பயக. திங்கத்தெரியாம தின்னுட்டு முருங்கைக்காயை மதிக்காமப் போய்ட்டாங்க.

முருங்கைன்னு சொன்னதும்... ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருது. எங்கூடப் படிச்ச நண்பன் ஒருவனோட பாட்டி எப்பவும் முருங்கைச் சமாச்சாரங்களை மரத்துக்காய், மரத்து எலை, மரத்துப்பூன்னுதான் சொல்வாங்க. என்னன்னு விசாரிச்சா..அந்தத் தாத்தாவோட பேரு முருகப்பச் செட்டியாராம்.

தெனமும் முருங்கைக்காய்ச் சாம்பார் சாப்டதன் பலன்..கிளுகிளுகதைப் போட்டீல வந்து நிக்குது.நடக்கட்டும். நடக்கட்டும்.

G.Ragavan said...

// இலவசக்கொத்தனார் said...
நீரோ ஊருக்குப் போகப் போறீரு. //

நீரோவோட ஊரு ரோமாபுரி. ஆக...வெட்டி பாலாஜி இத்தாலிக்குப் போறாரா....ஐரோப்பாவுக்கு வர்ராரா! சூப்பரப்பு.

மங்களூர் சிவா said...

:)

நல்ல காக்டெய்ல்

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
murunkakkkaai bhagyaraj good combination

:-)))))))))))))))))
//

ஹா ஹா ஹா...

கடைசியா சொன்ன கிளுகிளுப்பு கதைகளை விட்டுட்டீங்களே :)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...
முருங்கைக்காய்ச் சாம்பாரைப் பெசஞ்சுதானே திங்கனும். பாவம் வடக்கத்திப் பயக. திங்கத்தெரியாம தின்னுட்டு முருங்கைக்காயை மதிக்காமப் போய்ட்டாங்க.
//
ஆமாம் ஜிரா ஆமாம்.. இதுக்கு நீங்க ஏதாவது பண்ணியே ஆகனும் :)

//முருங்கைன்னு சொன்னதும்... ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருது. எங்கூடப் படிச்ச நண்பன் ஒருவனோட பாட்டி எப்பவும் முருங்கைச் சமாச்சாரங்களை மரத்துக்காய், மரத்து எலை, மரத்துப்பூன்னுதான் சொல்வாங்க. என்னன்னு விசாரிச்சா..அந்தத் தாத்தாவோட பேரு முருகப்பச் செட்டியாராம்.
//
இது சூப்பரா இருக்கே :)

//
தெனமும் முருங்கைக்காய்ச் சாம்பார் சாப்டதன் பலன்..கிளுகிளுகதைப் போட்டீல வந்து நிக்குது.நடக்கட்டும். நடக்கட்டும்.
//
யாருமே இதை சொல்லலையேனு பார்த்தேன்...

முருங்கைக்காய் -> பாக்யராஜ் -> கிளுகிளுப்பு கதைகள் :)

வெட்டிப்பயல் said...

// G.Ragavan said...
// இலவசக்கொத்தனார் said...
நீரோ ஊருக்குப் போகப் போறீரு. //

நீரோவோட ஊரு ரோமாபுரி. ஆக...வெட்டி பாலாஜி இத்தாலிக்குப் போறாரா....ஐரோப்பாவுக்கு வர்ராரா! சூப்பரப்பு.
//

ஐரோப்பா வந்து தான் போறேன் ஜிரா. ஆனா ரோமா புரியா இருக்காது ஹிட்லர் ஊரா இருக்கும் :)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
:)

நல்ல காக்டெய்ல்
//

டாங்கிஸ் சிவா :)

SurveySan said...

என்னய்யா, முருங்கைக்காய் தான், கிளு கிளு கதையில கொண்டு வந்து நிக்க வெக்குதா? என்ன கொடுமைங்க இது?


ஸ்க்ரீன் ப்ளே, ஒத்திகை பாக்க ஒரு வழி பண்ணிருக்கேன்.
http://surveysan.blogspot.com/2008/09/blog-post_29.html

:)

சிறில் அலெக்ஸ் said...

அதென்ன 'ரெண்டா'ண்ணு ஒரு கேள்வி?

ஒரு போட்டிக்கே முடிவு தெரிய வழி இல்ல. முடிவு தெரியிற வரைக்கும் பதிவெழுதறதில்லைண்ணு வெட்டியா உக்காந்திட்டிருக்கேன்.