தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, December 10, 2006

நெல்லிக்காய் - 8

ஒரு மணி நேரமான பின்பும் அருணும் தீபாவும் வராததால் ராஜிக்கு கொஞ்சம் பயம் எட்டிப்பார்த்தது.

"என்ன இவ்வளவு நேரமாகியும் அவுங்க ரெண்டு பேரையும் காணோம். நீ எதுக்கும் அருணுக்கு போன் பண்ணி பாரு"

"சரி நம்மல டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு பொறுமையா வருவான். நீ ஒண்ணும் கவலைப்படாத" கார்த்திக் சொல்லி கொண்டிருக்கும் போதே தீபாவின் செல் போனிலிருந்து அழைப்பு வந்தது.

"ஏய் சொல்லு எங்க இருக்கீங்க?"

""

"ஏய் என்னாச்சு? ஏன் இவ்வளவு பதட்டமா பேசற?"

""

"என்ன ஆக்ஸிடெண்டா? யாருக்கும் எதுவுமாகலையே?"

""

"மலர் ஹாஸ்பிட்டல்ல இருக்கியா? இதோ நாங்க உடனே வரோம். நீ எதுக்கும் பயப்படாத"


கார்த்திக் டென்ஷனாக பேசிக்கொண்டிருந்ததை கேட்டு ராஜிக்கும் பயம் அதிமானது.

"கார்த்திக் என்னாச்சு? யார் பேசனா?"

"அருண் பேசினான். அவுங்க வண்டி ஏதோ ஆக்ஸிடண்டாயிடாச்சாம். தீபாக்கு நல்ல அடியாம். மலர் ஹாஸ்பிட்டல்ல அட்மீட் பண்ணியிருக்காங்களாம். சரி வா முதல்ல நம்ம அங்க போவோம். அவனுக்கு தனியா என்ன செய்யறதுனே தெரியாம டென்ஷான இருக்கான்"

"அவளுக்கு எதுவும் ஆகலை இல்லை"

"தெரியல. வா போகலாம்" சொல்லிவிட்டு வேகமாக பைக் நோக்கி சென்றான்.

அவர்கள் ஹாஸ்பிட்டல் ரிசப்ஷனில் விசாரித்து கொண்டிருக்கும் போதே அருண் வந்து சேர்ந்தான். அருண் கையில் ஒட்டியிருந்த ப்ளாஸ்திரிகள் அவனுடைய காயத்தை மறைத்திருந்தன.

"டேய் என்னாச்சு? தீபா எங்க?" பதட்டமாக விசாரித்தான் கார்த்திக்.

"தீபா ஐ.சி.யூல இருக்கா. தலைல அடிப்பட்டிருக்கு. கையும் ஃப்ராக்ச்சர் ஆகியிருக்கலாம்னு சொன்னாங்க. எக்ஸ் ரே எடுக்க வேண்டியிருக்கு. பயப்பட வேண்டாம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க"

"ஆக்ஸிடெண்ட் எப்படியாச்சு?"

"ஒரு லாரிக்காரன் ராங் சைட்ல வந்து இடிச்சிட்டு நிறுத்தாம போயிட்டான். அக்கம் பக்கத்துல இருக்கவங்க தான் வந்து உதவி செஞ்சாங்க. என் வண்டிய பக்கத்துலயே ஒரு மெக்கானிக் ஷாப்ல நிறுத்திட்டு வந்திருக்கோம். வண்டிலயிருந்து விழுந்ததுல என் மொபைலும் காணோம்"

"ஓ! அதுதான் நீ அவ மைபல்ல இருந்து கூப்பிட்டயா? சரி உனக்கு ஒண்ணும் பெருசா அடிப்படலையே?" அக்கறையாக விசாரித்தாள் ராஜி

"நான் மட்டும் ஹெல்மட் போடலைனா இந்நேரம் மார்ச்சுவரில தான் இருந்திருப்பேன்" சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த ஹெல்மட்டை காட்டினான். அதில் இரண்டு இடங்களில் உடைந்து தன் எஜமானரின் உயிரை காப்பாற்றிய சந்தோஷத்தில் பல்லிளித்து கொண்டிருந்தது.

"ஓ காட்...நல்ல வேளை நீ ஹல்மெட் போட்டிருந்த... இல்லைனா நினைச்சு பார்க்கவே முடியல" வேதனை கலந்த முகத்துடன் சொன்னாள் ராஜி.

சரியாக அந்நேரம் அங்கே வந்த நர்ஸ், "ஏம்பா அந்த பொண்ண கூப்பிட்டு வந்தது நீதான?" அருணை பார்த்து கேட்டார்

"ஆமாங்க" டென்ஷனாக சொன்னான் அருண்

"நீங்க அவருக்கு என்ன வேணும்?"

"ஃபிரெண்ட்ஸ்" வேகமாக சொன்னாள் ராஜி.

"அவுங்களோட அப்பா, அம்மா இல்லையா?"

"அவளுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான்" வார்த்தைகளை விழுங்கி விழுங்கி சொன்னாள் ராஜி. அருணுக்கு இதை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அப்பா இல்லாத ஒரு பொண்ணு கூட இத்தனை நாள் சண்டை போட்டு அவ மனச சங்கடப்படுத்திருக்கிறோம் என்ற எண்ணம் அவன் மனதில் முள் போல் குத்தியது.

"அவளுக்கு அவசரமா ஒரு சர்ஜரி செய்ய வேண்டியிருக்கு"

"மேடம் எவ்வளவு செலவானாலும் பண்ணுங்க. நாங்க பார்த்துக்கறோம்" பதற்றமாக சொன்னான் அருண்.

"இல்லைங்க. ரிலேட்டிவ்ஸ் யாராவது கையெழுத்து போடணும். இல்லை கார்டியன் யாராவது கையெழுத்து போடணும். அப்பத்தான் நாங்க ப்ரொஸிட் பண்ண முடியும். அவுங்க கார்டியன் யாராவது இங்க இருந்தா சீக்கிரம் வர சொல்லுங்க. அத சொல்லத்தான் வந்தேன்" சொல்லிவிட்டு வேகமாக ஐ.சி.யூ நோக்கி நடந்தார் நர்ஸ்.

மூவருக்கும் என்ன செய்வதேன்றே புரியாத நிலையில், கார்த்திக்கிற்கு திடீரென்று ஏதோ தோன்ற அவனுடைய செல்போன் எடுத்து யாருக்கோ போன் செய்தான்.

இருவரும் அவனை பார்க்க அவன் அதிர் முனையிலிருப்பவரிடம் பேசியதிலிருந்து புரிந்து கொண்டனர்.

அடுத்த 5 நிமிடத்தில் நர்ஸ் அவர்களிடம் வந்தார். "நீங்க xxxxx கம்பெனில வேலை செய்யறீங்களா? இப்பதான் உங்க ஹெச்.ஆர் மேனஜர் போன் பண்ணார். அவர் பொறுப்பேத்துக்கறேன்னு சொல்லிட்டார். நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துக ஆப்பரேஷன் செய்ய போறோம். அவுங்க அம்மாவை வர சொல்லி போன் பண்ணிடுங்க" சொல்லிவிட்டு நகர்ந்தார்.

"ராஜி, ப்ளீஸ் தீபா அம்மாக்கு நீயே போன்ல பேசிடேன். எதுவும் பயப்பட வேண்டாம்னு சொல்லு" அருண் கவலையுடன் சொல்லி கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு தீபா அம்மா ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்த போழுது தீபாவிற்கு ஆப்பரேஷன் முடிந்து அவளுக்காக ஒதுக்கப்பட்ட ரூமில் மயக்கமான நிலையில் இருந்தாள். அவள் அருகில் அருணும், ராஜியும் அம்ர்ந்திருந்தனர்.

(தொடரும்...)

பி.கு: மக்களே! ஒரு சின்ன அட்வைஸ். கதையோட சொல்லிட்டாலும் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லிடறேன்.
1) வண்டியிலே போகும் போது தயவு செஞ்சு ஹெல்மட் போட்டுட்டு போங்க!!!
2) HR நம்பர் மொபைல்ல வெச்சிக்கோங்க. ஏதாவது பிரச்சனைனா அவருக்கு கூப்பிட்டீங்கனா உடனே வந்து உதவி செய்வார். இது வெளியூர் போயி மொழி தெரியாத இடத்தில இருக்கவங்களுக்கு ரொம்ப உதவும்.

சரி நான் அப்பீட் ஆயிக்கறேன்...

அடுத்த பகுதி

55 comments:

Anonymous said...

நாந்தான் ஃபஸ்ட்டா?

ஒவ்வொரு வாரமும் சஸ்பென்ஸ கூட்டிட்டே போறீங்களே வெட்டி.

ஆப்ரேசன் சக்ஸஸ்தானே?

Arunkumar said...

அச்சச்சோ தீபாவுக்கு ஒன்னும் ஆயிடலியே?

Arunkumar said...

helmet போடலினா "meet hell" தான்னு நச்சுனு சொல்லியிருக்கீங்க.

கதை சூப்ப்பரா போகுது. கலக்குங்க

Anonymous said...

இதுக்கப்புறம் நடக்கப்போறது நான் கொஞ்சம் யூகிக்க முடியுது. ஏன்னா, எனக்குத் தெரிஞ்சவங்க ரெண்டு பேர் கத இந்த எடத்துல தொடங்குச்சு...

நாமக்கல் சிபி said...

//ஜி said...

நாந்தான் ஃபஸ்ட்டா?

ஒவ்வொரு வாரமும் சஸ்பென்ஸ கூட்டிட்டே போறீங்களே வெட்டி.

ஆப்ரேசன் சக்ஸஸ்தானே?//
ஆமாம் ஜி... நீங்க தான் முதல் ஆள்;)

அதை நான் எப்படி சொல்ல முடியும்??? அதுக்குத்தானே டாக்டர்ஸ் இருக்காங்க :-)

Anonymous said...

வெட்டி கதை சூப்பராகப் போயிக்கிட்டு இருக்கு மெய்ண்டெய்ன் செய்யுங்கோ ........

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

அச்சச்சோ தீபாவுக்கு ஒன்னும் ஆயிடலியே?//

டாக்டர்தான் அதை சொல்லனும் :-)

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

helmet போடலினா "meet hell" தான்னு நச்சுனு சொல்லியிருக்கீங்க.

கதை சூப்ப்பரா போகுது. கலக்குங்க//

அருண்,
நச்சுனு பாயிண்ட பிடிச்சீங்க...
இந்த மாதிரி என் ஃபிரெண்ட் ஒருத்தவனுக்கு அடிப்பட்டப்ப அவன் ஹெல்மட் போட்டிருந்ததாலத்தான் உயிரோட இருக்கான்...
என்னோட 100வது பதிவுல கேள்வி கேட்டதும் அவந்தான்...

சரி கதையோட லைட்டா கருத்தையும் சொல்லிடுவோமேனுதான் :-)

நாமக்கல் சிபி said...

//பெத்த ராயுடு said...

இதுக்கப்புறம் நடக்கப்போறது நான் கொஞ்சம் யூகிக்க முடியுது. ஏன்னா, எனக்குத் தெரிஞ்சவங்க ரெண்டு பேர் கத இந்த எடத்துல தொடங்குச்சு...//

கதை இதுக்கு மேல நீங்க நினைக்கிற மாதிரி தான் இருக்கும்...

சரி அந்த கதையை சொல்லுங்க.. கேக்கறதுக்கு நாங்க ரெடியா இருக்கோம் ;)

நாமக்கல் சிபி said...

//சுப்பு said...

வெட்டி கதை சூப்பராகப் போயிக்கிட்டு இருக்கு மெய்ண்டெய்ன் செய்யுங்கோ ........//

மிக்க நன்றி சுப்பு...
அப்படியே மெயிண்டெயின் செய்ய முயற்சி செய்யறேன் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சரி கதையோட லைட்டா கருத்தையும் சொல்லிடுவோமேனுதான் :-)//

லைட்டா இல்லீங்க பாலாஜி!நல்லா
வெயிட்டாவே சொல்லி இருக்கீங்க!!

//கையில் வைத்திருந்த ஹெல்மட்டை காட்டினான். அதில் இரண்டு இடங்களில் உடைந்து தன் எஜமானரின் உயிரை காப்பாற்றிய சந்தோஷத்தில் பல்லிளித்து கொண்டிருந்தது.//

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒவ்வொரு பதிவுலயும் ஒரு நல்ல மனுசன் வர்றாரு! இந்தப் பதிவுல HR மேனேஜர்!

//மேடம் எவ்வளவு செலவானாலும் பண்ணுங்க. நாங்க பார்த்துக்கறோம்" பதற்றமாக சொன்னான் அருண்//
-சினிமாட்டிக்???

Anonymous said...

ஒவ்வொரு முறையும் ஒவரா பொறுமையை சோதிக்கிறீங்கய்யா......... ஏதோ நடத்துங்க வேற வழி???

இவன்
ஆதவன்

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சரி கதையோட லைட்டா கருத்தையும் சொல்லிடுவோமேனுதான் :-)//

லைட்டா இல்லீங்க பாலாஜி!நல்லா
வெயிட்டாவே சொல்லி இருக்கீங்க!!
//
ஊதற சங்க ஊதுவோம் :-)

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஒவ்வொரு பதிவுலயும் ஒரு நல்ல மனுசன் வர்றாரு! இந்தப் பதிவுல HR மேனேஜர்!
//
கார்த்துக் தான் HR மேனேஜருக்கு போன் போட்டது...

//

//மேடம் எவ்வளவு செலவானாலும் பண்ணுங்க. நாங்க பார்த்துக்கறோம்" பதற்றமாக சொன்னான் அருண்//
-சினிமாட்டிக்???//
அவனுடைய குற்றவுணர்ச்சிதான் காரணம்னு நான் நினைக்கிறேன் :-)

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

ஒவ்வொரு முறையும் ஒவரா பொறுமையை சோதிக்கிறீங்கய்யா......... ஏதோ நடத்துங்க வேற வழி???

இவன்
ஆதவன்//

ஆதவன்,
வாழ்க்கையில பொறுமை வேண்டும்...
ஒரு காதல்னா சும்மாவா???

Anonymous said...

சீக்கிரம் அடுத்த பகுதிய போடுப்பா.

Unknown said...

கதை ஓரளவிற்கு யூகிக்கக் கூடிய பாதையில் பயணம் ஆகிறதோன்னு யோசிக்கத் தோணுது பாலாஜி..

இந்தப் பகுதி ரொம்பவே சின்னதா இருக்கு..!!!

அடுத்து எப்போ?

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

சீக்கிரம் அடுத்த பகுதிய போடுப்பா.//
சீக்கிரம் போடறேனுங்க...

நாமக்கல் சிபி said...

//தேவ் | Dev said...

கதை ஓரளவிற்கு யூகிக்கக் கூடிய பாதையில் பயணம் ஆகிறதோன்னு யோசிக்கத் தோணுது பாலாஜி..
//
ஆமாம் தேவ்...
வித்யாசமா கொடுக்கறேன்னு கதையோட கருவை கலைக்க விரும்பவில்லை.

// இந்தப் பகுதி ரொம்பவே சின்னதா இருக்கு..!!!

அடுத்து எப்போ?//
வேலை ரொம்ப அதிகமா இருந்ததால சின்னதா போட வேண்டியதா போச்சு. அடுத்த பகுதில நிறைய மேட்டரை கொண்டு வர முயற்சி செய்கிறேன் :-)

Divya said...

வெட்டி, தீபா க்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க டென்ஷனா இருக்கிறது, சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க.

[ பயனுள்ள பாதுகாப்புக்குத் தேவையான விஷயத்தை உங்கள் பதிவில் வலியுறுத்தியிருப்பதை பாராட்டுகிறன் வெட்டி]

Anonymous said...

Naan arun'ku thaan edhavadhu aagumonu ninaichen!Thanks helmet!
Eppadiyo Deepa thappichitaanu ninaikaren.
Inime arun deepa relationship different'a irukum'nu thonudhu.
Sandhadi saakule advice vera panniteengale!
kalakunganna kalakunga....

G.Ragavan said...

நான்கு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நான் விபத்துக்குள்ளானது பற்றியும் வலைப்பூவில் சொல்லியிருந்தேன். அப்பொழுதும் ஹெல்மெட் என்னைக் காப்பாற்றியது. விழுந்த பொழுது என்னுடைய பின்னந்தலை சாலையோரத்தில் இடித்தது. அந்த இடத்தில் மண்ணரித்து சாலையும் சேதமாக இருந்தது. ஆனால் ஹெல்மெட்டில் பட்டதால் தப்பித்தேன். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கண்டிப்பாக அணியுங்கள்.

Anonymous said...

வெட்டி, கதை மிக அருமையாக போகிறது!! வாழ்த்துக்கள்!!! நான் பல மாதங்களாக ப்ளாக் படித்து வந்தாலும், உங்களிடமிருந்துதான் என் முதல் கமெண்டை ஆரம்பம் செய்கிறேன்...

தீபாவுக்கு என்ன ஆச்சு..? தாமதிக்காமல் அடுத்த பகுதியை போடுவீர்களா..?

ராம்குமார் அமுதன் said...

தல.... கதை சூப்பரா போய்ட்டு இருக்கு..... கதையோடு கருத்தும் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க..... ஹ்ம்ம்ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்..... சாப்ட்வேர் கதை குடும்பக்கதையா மாறுது போலயே....

//"அவளுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான்" வார்த்தைகளை விழுங்கி விழுங்கி சொன்னாள் ராஜி. அருணுக்கு இதை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அப்பா இல்லாத ஒரு பொண்ணு கூட இத்தனை நாள் சண்டை போட்டு அவ மனச சங்கடப்படுத்திருக்கிறோம் என்ற எண்ணம் அவன் மனதில் முள் போல் குத்தியது.//


சில நேரங்களில் எல்லார்க்குமே இப்படி ஆவது உண்டு....

கப்பி | Kappi said...

கதை நல்லா போயிட்டிருக்கு வெட்டி!
ஆப்ரேசன் நடக்கும்போது அருண் கையை பிசைஞ்சுகிட்டு குறுக்கும் நெடுக்குமா நடந்ததை சொல்லலையே? :)))

இராம்/Raam said...

பாலாஜி,

நல்லா இருக்குப்பா இந்த பகுதி.. ஆனா கொஞ்சம் சின்னதா இருக்குன்னு நினைக்கிறேன்.


ஹெல்மெட் அறிவுரைகளுக்கு என்னுடைய பாரட்டுக்கள்... :)

கதிர் said...

கதையில இப்பதான் சுவாரசியம் கூடுது! டைரக்டர் பாலா ரேஞ்சுக்கு கதைய முடிச்சிடாதப்பா!

Sumathi. said...

ஹாய் வெட்டி,

இந்த ஹெல்மெட் போடாததால என் கணவரும் இது போல ஒரு விபத்துல மாட்டி தன் சய நினைவையே இழந்து போதாத குறைக்கு தன்னோட வலது பக்கமும் இழந்து அப்பப்பபாஆஆஆ
3 வருஷமா நான் பட்ட பாடு என் காலனியே (colony) அழுதது. இன்னமும் அந்த பாதிப்புல இருந்து நான் மீளல.Good advice u did.

Anonymous said...

Very interesting story so far.


-Unmai

Priya said...

கதையோட சேர்த்து அட்வைசுமா? நல்ல காரியம் பண்றிங்க. நீங்க சொல்லியிருக்கர அட்வைஸ் எல்லாரும் follow பண்ண வேண்டியது.

கதை நல்லா போகுது. தீபாவ சீக்கிரம் பழய படி ஆக்குங்க.

tamizhppiriyan said...

அருமையா போகுது ஜி!, அடுத்த பதிவை எதிர்நோக்கி

நாமக்கல் சிபி said...

//Divya said...

வெட்டி, தீபா க்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க டென்ஷனா இருக்கிறது, சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க.
//
சீக்கிரம் போடறேனுங்க ;)
டாக்டர்ங்க என்ன சொல்றாங்கனு பார்ப்போம் :-)

நாமக்கல் சிபி said...

//bomMAI said...

Naan arun'ku thaan edhavadhu aagumonu ninaichen!Thanks helmet!
Eppadiyo Deepa thappichitaanu ninaikaren.
Inime arun deepa relationship different'a irukum'nu thonudhu.//
பார்க்கலாங்க எப்படி போகுதுனு ;)

// Sandhadi saakule advice vera panniteengale!//
ஹி ஹி ஹி

// kalakunganna kalakunga.... //
அண்ணாவா??? ஒத்துக்க முடியாது :-X

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

நான்கு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நான் விபத்துக்குள்ளானது பற்றியும் வலைப்பூவில் சொல்லியிருந்தேன். அப்பொழுதும் ஹெல்மெட் என்னைக் காப்பாற்றியது. விழுந்த பொழுது என்னுடைய பின்னந்தலை சாலையோரத்தில் இடித்தது. அந்த இடத்தில் மண்ணரித்து சாலையும் சேதமாக இருந்தது. ஆனால் ஹெல்மெட்டில் பட்டதால் தப்பித்தேன். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கண்டிப்பாக அணியுங்கள். //
ஆஹா.. நல்ல வேளை.

நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு...

நாமக்கல் சிபி said...

//கத்துக்குட்டி said...

வெட்டி, கதை மிக அருமையாக போகிறது!! வாழ்த்துக்கள்!!! நான் பல மாதங்களாக ப்ளாக் படித்து வந்தாலும், உங்களிடமிருந்துதான் என் முதல் கமெண்டை ஆரம்பம் செய்கிறேன்...
//
மிக்க நன்றி...
நானும் கத்துக்குட்டிதான் :-)

//
தீபாவுக்கு என்ன ஆச்சு..? தாமதிக்காமல் அடுத்த பகுதியை போடுவீர்களா..? //
முயற்சி செய்கிறேன் கத்துக்குட்டி...
எல்லாரையும் காக்க வைக்கணும்னு ஆசையில்லை. வேலை கொஞ்சம் அதிகமாயிடுச்சு :-(

நாமக்கல் சிபி said...

//அமுதன் said...

தல.... கதை சூப்பரா போய்ட்டு இருக்கு..... கதையோடு கருத்தும் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க..... ஹ்ம்ம்ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்..... சாப்ட்வேர் கதை குடும்பக்கதையா மாறுது போலயே....
//
மிக்க நன்றி அமுதா...
அப்பப்ப வெளிய தெளிவா சொல்லாம கருத்து சொல்லிட்டுத்தான் இருப்பேன்.

பிரிவுல பொண்ணுங்க முடிஞ்ச அளவுக்கு லேட் நைட் வேலை செய்ய வேண்டாம். அப்பறம் ஊர்ல இருந்து வரும் போது கொஞ்சம் சீக்கிரம் புறப்படுங்கள் இப்படி இருக்கும். ஆனா நிறைய பேர் அதை புரிஞ்சிக்கறதில்லை. ரொமான்ஸ்ல மத்த விஷயங்கள் அடிப்பட்டு போய்விடுகின்றன.

//
//"அவளுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான்" வார்த்தைகளை விழுங்கி விழுங்கி சொன்னாள் ராஜி. அருணுக்கு இதை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அப்பா இல்லாத ஒரு பொண்ணு கூட இத்தனை நாள் சண்டை போட்டு அவ மனச சங்கடப்படுத்திருக்கிறோம் என்ற எண்ணம் அவன் மனதில் முள் போல் குத்தியது.//


சில நேரங்களில் எல்லார்க்குமே இப்படி ஆவது உண்டு.... //
ஆமாம். கூட இருந்தாலும் நம்ம பர்சனல் விஷயங்களை பேசறதில்லை :-(

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

கதை நல்லா போயிட்டிருக்கு வெட்டி!
ஆப்ரேசன் நடக்கும்போது அருண் கையை பிசைஞ்சுகிட்டு குறுக்கும் நெடுக்குமா நடந்ததை சொல்லலையே? :))) //

அது வேற சீன்ப்பா...
நம்ம கதைல வராது ;)

நாமக்கல் சிபி said...

//ராம் said...

பாலாஜி,

நல்லா இருக்குப்பா இந்த பகுதி.. ஆனா கொஞ்சம் சின்னதா இருக்குன்னு நினைக்கிறேன்.


ஹெல்மெட் அறிவுரைகளுக்கு என்னுடைய பாரட்டுக்கள்... :) //
மிக்க நன்றி...
அடுத்த பகுதி கொஞ்சம் பெருசா போட்டுடறேன் :-)

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

கதையில இப்பதான் சுவாரசியம் கூடுது! டைரக்டர் பாலா ரேஞ்சுக்கு கதைய முடிச்சிடாதப்பா! //

மிக்க நன்றி தம்பி ;)
கவலை வேண்டாம்...
நான் அந்த அளவுக்கு சைக்கோ இல்லை ;)

நாமக்கல் சிபி said...

//sumathi said...

ஹாய் வெட்டி,

இந்த ஹெல்மெட் போடாததால என் கணவரும் இது போல ஒரு விபத்துல மாட்டி தன் சய நினைவையே இழந்து போதாத குறைக்கு தன்னோட வலது பக்கமும் இழந்து அப்பப்பபாஆஆஆ
3 வருஷமா நான் பட்ட பாடு என் காலனியே (colony) அழுதது. இன்னமும் அந்த பாதிப்புல இருந்து நான் மீளல.Good advice u did. //

கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு சின்ன விஷயம் நம்ம வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடுகிறது.

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

Very interesting story so far.


-Unmai //

மிக்க நன்றி உண்மை...

நாமக்கல் சிபி said...

//Priya said...

கதையோட சேர்த்து அட்வைசுமா? நல்ல காரியம் பண்றிங்க. நீங்க சொல்லியிருக்கர அட்வைஸ் எல்லாரும் follow பண்ண வேண்டியது.

கதை நல்லா போகுது. தீபாவ சீக்கிரம் பழய படி ஆக்குங்க. //
கண்டிப்பா..
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான் ;)

Syam said...

நல்லா வெச்சீங்க சஸ்பென்ஸ்...யாரு பெத்த புள்ளயோ இப்படி அடிபட்டு கிடக்குதே :-)

Syam said...

//வண்டியிலே போகும் போது தயவு செஞ்சு ஹெல்மட் போட்டுட்டு போங்க!!!//

ஆமாங்க அப்பதான் குடிச்சிட்டு போனாலும் போலீஸ்காரன் பாத்தா...இவன் ரொம்ப நல்லவன்னு நினைச்சு விட்டுறுவாங்க..நான் அப்படிதான் நிறைய தடவ தி எஸ்கேப்பு :-)

Syam said...

நானும் ஒரு கவித கிறுக்கீருக்கேன்...எட்டி பாத்து துப்பிட்டு போங்க :-)

Anonymous said...

வெட்டி நீ எழுதுன திரில்லர் ஸ்டோரி எங்களுக்கு புரியலைனு சொன்னதுக்கு, புரியற மாதிரி கதையை திரில்லிங்கா சொல்லி பழி வாங்கறீயா??
சீக்கிறம் அடுத்தப் பகுதியை போடுங்கப்பா! அநியாதுக்கு டென்ஷன கெளப்புறீங்களே!!

-விநய்

நாமக்கல் சிபி said...

//Syam said...

நல்லா வெச்சீங்க சஸ்பென்ஸ்...யாரு பெத்த புள்ளயோ இப்படி அடிபட்டு கிடக்குதே :-) //

நாட்டாமை,
என்ன பண்ண???
நல்லதே நடக்கும்னு நம்புவோம் ;)

நாமக்கல் சிபி said...

//Syam said...

//வண்டியிலே போகும் போது தயவு செஞ்சு ஹெல்மட் போட்டுட்டு போங்க!!!//

ஆமாங்க அப்பதான் குடிச்சிட்டு போனாலும் போலீஸ்காரன் பாத்தா...இவன் ரொம்ப நல்லவன்னு நினைச்சு விட்டுறுவாங்க..நான் அப்படிதான் நிறைய தடவ தி எஸ்கேப்பு :-) //

ஆஹா... நல்லதையே நல்ல விதமா சொன்னா யாரும் கேக்க மாட்டாங்கனு இப்படி சொல்லி எல்லோரையும் கேட்க வைக்கிற உங்க திறமை யாருக்கு வரும் ;)

நாமக்கல் சிபி said...

//Syam said...

நானும் ஒரு கவித கிறுக்கீருக்கேன்...எட்டி பாத்து துப்பிட்டு போங்க :-) //

வாழ்த்தியாச்சு ;)

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

வெட்டி நீ எழுதுன திரில்லர் ஸ்டோரி எங்களுக்கு புரியலைனு சொன்னதுக்கு, புரியற மாதிரி கதையை திரில்லிங்கா சொல்லி பழி வாங்கறீயா??
சீக்கிறம் அடுத்தப் பகுதியை போடுங்கப்பா! அநியாதுக்கு டென்ஷன கெளப்புறீங்களே!!

-விநய் //

கவலை வேண்டாம் விநய்...
நல்லவங்களுக்கு நல்லது நடக்கும் :-)

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
//G.Ragavan said...
என்னுடைய பின்னந்தலை சாலையோரத்தில் இடித்தது. அந்த இடத்தில் மண்ணரித்து சாலையும் சேதமாக இருந்தது. ஆனால் ஹெல்மெட்டில் பட்டதால் தப்பித்தேன். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கண்டிப்பாக அணியுங்கள். //
ஆஹா.. நல்ல வேளை.

நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு... //

வெட்டி...அது மட்டுமல்ல...விழுந்ததும் எனக்கு சட்டுன்னு ஒரு அதிர்ச்சி...ஒடனே சுத்திக் கூட்டம் கூடீட்டாங்க. கூட்டத்துல ஒருத்தரு சொன்னாரு. "பெத்தவங்க செஞ்ச புண்ணியம். ஒன்னோட தலைக்கு நாலு இஞ்சுல ஒரு பஸ் போச்சு." கேட்ட எனக்கு திக்குன்னு இருந்தாலும் சுதாரிச்சிக்கிட்டேன். என்னோட அப்பாவையும் அம்மாவையும் அன்னைக்குப் பாத்த அளவுக்கு கவலையா நான் வேறென்னைக்கும் பாத்த நினைவில்லை. கதையில சொல்லியிருக்கியே மலர் மருத்துவமனை...அங்கதான் என்னையக் கூட்டீட்டுப் போனாங்க. ஆக்சிடெண்ட்டுக்குன்னு ஒரு வார்டு இருக்கு. அங்க ஒருத்தர் லேசா சிராய்ப்போட உக்காந்திருந்தாரு. அவர விட எனக்கு நல்ல அடி. திடீர்னு ஒரு சத்தம். உள்ள ஒருத்தரக் கொண்டாராங்க. பைக்தான். ஆனால் லாடி இடிச்சிருக்கு. ஹெல்மெட் இல்லை. அவருக்கு எங்கெங்க அடிபட்டுச்சுன்னு எனக்குத் தெரியாது. நடுவுல தெர போட்டிருந்தாங்க. அவரோட ஓலம்...அப்பப்பா! எனக்குள்ள சில்லுன்னு ஒரு இது வந்துச்சு. மாடிக்கு எக்ஸ்ரே எடுக்கக் கூட்டீட்டுப் போனாங்க. அங்க ஒருத்தர ஆப்ரேஷனுக்கு உள்ள கொண்டு போறாங்க. அது வரைக்கும் சும்மா இருந்த அவரோட பொண்ணு நானா நானான்னு அழத் தொடங்குனாங்க. போதும் சாமி போதும். சித்தார்த்தன் புத்தனா மாறுனதுக்குக் காரணங்கள் இல்லாம இல்லை.

நாமக்கல் சிபி said...

ஜி.ரா,
நீங்க சொல்றத படிக்கும் போதே திக்குனு இருக்கு.

கதைல நான் முதல்ல கதா நாயாகனுக்கு அடிப்படற மாதிரி சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனா ஹெல்மெட்டோட முக்கியத்துவம் தெரிய வைக்கனும்னு தான் கொஞ்சம் மாத்திட்டேன்... தீபாவை வண்டீல அவன் ஏத்திட்டு போற மாதிரி அதுக்கு அப்பறம் தான் மாத்தினேன்.

இல்லைனா ரெண்டு பேரும் ஆட்டோல போயிருப்பாங்க...

Syam said...

//நல்லதையே நல்ல விதமா சொன்னா யாரும் கேக்க மாட்டாங்கனு இப்படி சொல்லி எல்லோரையும் //

அது ஒன்னும் இல்லீங்க புரியர மாதிரி பிராக்டிக்கலா சொன்னா எல்லோரும் கேட்டுக்குவாங்க :-)))))

Anonymous said...

//பி.கு: மக்களே! ஒரு சின்ன அட்வைஸ். கதையோட சொல்லிட்டாலும் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லிடறேன்.
1) வண்டியிலே போகும் போது தயவு செஞ்சு ஹெல்மட் போட்டுட்டு போங்க!!!
2) ஃற் நம்பர் மொபைல்ல வெச்சிக்கோங்க. ஏதாவது பிரச்சனைனா அவருக்கு கூப்பிட்டீங்கனா உடனே வந்து உதவி செய்வார். இது வெளியூர் போயி மொழி தெரியாத இடத்தில இருக்கவங்களுக்கு ரொம்ப உதவும்.//

நல்ல அட்வைஸ்.. ;-)