தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, August 21, 2008

ஆடு புலி ஆட்டம் - 13

அட என்னடா திங்கள் கிழமை ராத்திரி இந்த நேரத்துல நித்யா வீட்ல நாங்க எல்லாம் இருக்கோம்னு பாக்கறீங்களா? எப்படியும் இனிமே ஒரு நாள் கூட க்ளாஸ் தவறவிடக்கூடாதுனு தான் போயிட்டு இங்க வந்திருக்கோம். வினோதினி அக்கா பக்கத்துல யாரோ புதுசா ஒரு பையன் உக்கார்ந்திருக்கானு பாக்கறீங்களா?

அண்ணாத்த பேரு கிஷோர். அவர் தான் வினோதினி அக்காவை அங்க இன்ஸ்டிடியூட்ல சேர சொன்ன நல்ல நண்பர். அவரும் அதே இன்ஸ்டிடியூட்ல ஒரு எட்டு ஒன்பது மாசத்துக்கு முன்னாடி படிச்சிருக்காரு. அதான் அவர்கிட்ட இதை பத்தி பேசி பார்க்கலாம்னு நானும் அசோக்கும் இங்க வந்திருக்கோம். வினோதினி அக்கா திரு திருனு முழிச்சிட்டு இருக்காங்க. அவரே பேச ஆரம்பிக்கறாரு. இருங்க

"வினு யாரோ உன்னை மிரட்டினாங்கனு சொல்ற. காசு கொடுத்தேனும் சொல்ற. இவ்வளவு பெரிய பிரச்சனையிருக்கும் போது ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை"

"கிஷோர். எனக்கு என்ன பண்றதுனே தெரியல. நேரமும் அதிகமா கொடுக்கல. காசு கொடுத்துட்டு வந்தவுடனே தப்பு பண்ணிட்டமோனு பயத்துல யார்கிட்டயும் சொல்லலை. அதுவுமில்லாம அவன் உன் ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தர் சொல்லி தான் நாங்க வந்திருக்கோம்னு வேற மிரட்டினான்"

"சரி. இப்ப பிரச்சனை எங்கனு தெரிஞ்சிடுச்சி இல்லை. நம்ம பசங்க ஒரு நாலஞ்சி பேர் போய் அங்க இருக்கவனுங்க எல்லாத்தையும் நாலு தட்டு தட்டினா ஒத்துக்க போறானுங்க"

ஆஹா. இவரு இன்னும் பெருசாக்கிடுவார் போல. இருங்க அவரை கண்ட்ரோல் பண்றேன்.

"அண்ணா. ஒரு நிமிஷம். இந்த மாதிரி அடிதடில இறங்கினா பிரச்சனை திசை மாறிடும். இது பண்றவங்க கொஞ்சம் டேஞ்சர் பார்ட்டிங்களா தான் தெரியறாங்க"

"அவனுங்களா? அந்த ப்ரேம், தினேஷ், வெற்றி எல்லாம் டேஞ்சர் பார்ட்டிங்களா? நாலு சாத்து சாத்தனா ஒத்துக்க போறானுங்க"

"எப்படி இவுங்க மூணு பேர் தானு சொல்றீங்க?"

"ஆமாம். இது பெரிய ரகசியம். தினேஷும் வெற்றியும் ஒரே ஊர்காரனுங்க. தினேஷையே அந்த வெற்றி தான் சேர்த்துவிட்டான். அந்த ப்ரேம் அப்பல இருந்து பொண்ணுங்க பின்னாடியே சுத்திட்டு இருப்பான். இவனுங்க தான் அப்ப இருந்து இருக்கானுங்க. இப்ப எவனாவது புதுசா இவனுங்க கூட சேர்ந்திருந்தாலும் இவனுங்க மூணு பேர் இல்லாம அவனுங்களால எதுவும் பண்ண முடியாது"

"தினேஷும் வெற்றியும் ஒரே ஊர்க்காரவங்களா? அதிகம் பேசி நாங்க பார்த்ததே இல்லை"

"தினேஷ் யார்கிட்டயுமே அதிகம் பேச மாட்டான். வெற்றி எல்லார்கிட்டயும் அதிகமா பேசுவான். நாங்க சேர்ந்த புதுசுல எல்லாம் நூறு இருநூறுனு எல்லார்கிட்டயும் காசு வாங்கிட்டு இருப்பான். நான் அங்க மூணு மாசமா போயிட்டிருந்தேன். சும்மா லேப் யூஸ் பண்றதுக்காவது போவேன். கடைசியா பார்க்கும் போது வெற்றி செயின், புது நோக்கியா N- Series போன் எல்லாம் வெச்சிருந்தான்"

"ஹிம்ம்ம்... ஆனா இப்ப அப்படியெல்லாம் இல்லை. ரொம்ப சாதாரணமா தான் இருக்காரு. ஃபோன் கூட Motorazr தான் வெச்சிருக்காரு. அது கூட பழசு மாதிரி தான் தெரியுது. கைல காசு வந்தவுடனே ஆட்டம் போட்டிருப்பார்னு நினைக்கிறேன். அப்பறம் அவனை அடக்கி வெச்சிருப்பாங்க"

"இருக்கலாம். அவனுக்கு அவ்வளவா விவரம் பத்தாதுனு தான். எப்படியும் தனியா மடக்கி நாலு சாத்து சாத்தினா கண்டுபிடிச்சிடலாம்"

"அதெல்லாம் வேண்டாம். எல்லாரும் இவனை மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிடப்போறாங்க. அதனால மொத்தமா பிடிக்கலாம். அதுக்கு முன்னாடி நீங்க இன்னொரு ஹெல்ப் பண்ணனும்"

"சொல்லுப்பா பண்றேன்."

" இந்த லிஸ்ட்ல காசு கொடுத்த பொண்ணுங்க எல்லார் பேரும் இருக்கு. உங்க பேட்ச்ல படிச்ச ராஜேஸ்வரிங்கற பொண்ணும் காசு கொடுத்திருக்காங்க. அவுங்ககிட்ட நாம பேச ஏற்பாடு பண்ண முடியுமா?"

"ராஜேஸ்வரியா? நல்லா பார்த்து தான் மிரட்டறானுங்க. அந்த பொண்ணு அதிகமா பசங்ககிட்டயே பேச மாட்டா. எனக்கும் பழக்கமெல்லாம் எதுவுமில்லை. நான் கூப்பிட்டா பேச வருவாளானு தெரியல"

"ட்ரை பண்ணி பார்க்கலாமே. அசோக் நீ என்ன நினைக்கிற?"

"மச்சி. எப்படியும் வெற்றியும் இதுல இன்வால்வ் ஆகிருக்கானு தெரியுது. பேசாம அவனை யூஸ் பண்ணியே பிடிக்கலாம்னு நான் நினைக்கிறேன்"

"எப்படிடா?"

"கிஷோர்! நீங்க ஏதாவது பார்ட்டினு கூப்பிட்டா வெற்றி வருவானா?"

"தெரியலை. ட்ரை பண்ணி பார்க்கலாம். ஏன்?"

"அவனை அப்படி வர வெச்சா அவனை வெச்சி மொத்தமா பிடிக்கறதுக்கு நான் வழி பண்றேன்"

"டேய் அடி தடி எல்லாம் வேண்டாம்னு நினைக்கிறேன்"

"ஏன்டா என்னை பார்த்தா அடிதடி பண்றவன் மாதிரியா இருக்கு. அவனை டெக்னாலாஜியை வெச்சியே நாம பிடிக்கலாம். நான் அதுக்கு வழி பண்றேன்"

அசோக் சொல்ல சொல்ல எல்லாரும் அவனை அதிசயமாக பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எப்படியும் அவன் இதுல தான் வந்து நிப்பானு நினைச்சேன். அவனை சொல்லி குத்தமில்லை. அவன் பிராஜக்ட் அப்படி.

என்னங்க, கடைசியா வெற்றி மாட்றதுக்கு முன்னாடி நித்யாக்கிட்ட நான் மாட்டிக்குவேன் போல. அந்த அளவுக்கு ஐடியா சொல்லிட்டு இருக்கான்.

"அசோக் நீ சொல்றது எனக்கு ஓகேனு படுது. அவனை எப்படியும் பார்ட்டினு சொல்லி எங்கயாவது தள்ளிட்டு வரது என் பொறுப்பு. அதுக்கப்பறம் ஒரு வாரத்துல அவன் மாட்டலனா அடுத்த வாரம் எங்க பசங்ககிட்ட சொல்லி அவனை அடிச்சி நாங்க உண்மையை வாங்கறோம். உங்களுக்கு ஓகேவா"

"சரி. என்னடா ரவி. ஓகே தானே?"

இது ஒர்க் அவுட் ஆகுமா? சரி எதுக்கும் நாமளும் சரினு சொல்லுவோம். எப்படியும் அவர் பார்ட்டினு கூப்பிட்டு வந்துதுக்கப்பறம் ஒரு வாரம் இருக்குல்ல. அப்ப பார்த்துக்குவோம்.

"எனக்கும் ஓகே"

(ஆட்டம் தொடரும்...)

31 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))....

இன்னும் எத்தன எபிசோட் பாக்கியிருக்கு???

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

:-)))....

இன்னும் எத்தன எபிசோட் பாக்கியிருக்கு???//

யாருக்கு தெரியும் :)

இதுவே எழுதி 15 நிமிஷம் தான் இருக்கும் :)

(எப்படியும் இன்னும் குறைஞ்சது ஏழு எட்டாவது இருக்கும்)

siva gnanamji(#18100882083107547329) said...

வேகம் பிக் அப் ஆய்டுச்சி
ஆனா, திங்கள் புதன் வெள்ளி ன்றதிலேதான் தொய்வு விழுது

திங்கள் பதிவு செவ்வாய் காலையில்,
புதன் பதிவு இப்பொழுதுதான் தெரிகின்றது

பாபு said...

இன்னும் ஏழு எட்டு எபிசோட் இருக்கா?அவ்வளவு நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது.சீக்கிரம் முடிங்க சார்.

வெட்டிப்பயல் said...

// siva gnanamji(#18100882083107547329) said...

வேகம் பிக் அப் ஆய்டுச்சி//

மிக்க நன்றி :)

//
ஆனா, திங்கள் புதன் வெள்ளி ன்றதிலேதான் தொய்வு விழுது

திங்கள் பதிவு செவ்வாய் காலையில்,
புதன் பதிவு இப்பொழுதுதான் தெரிகின்றது//


இதை எப்படியும் சரி செய்ய பார்க்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//பாபு said...

இன்னும் ஏழு எட்டு எபிசோட் இருக்கா?அவ்வளவு நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது.சீக்கிரம் முடிங்க சார்.//

சீக்கிரம் முடிக்க பார்க்கிறேன் :)

Santhosh said...

//இன்னும் ஏழு எட்டு எபிசோட் இருக்கா?அவ்வளவு நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது.சீக்கிரம் முடிங்க சார்.//

ஆமாம் பாலாஜி, இல்லாட்டி தினசரி தொடரா மாத்திடு ;)

Divyapriya said...

//"உனக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?"

"ஆமாம்"

" "

நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா//

ஏனுங்ணா, யாரு மேல doubt ன்னு சொல்லவே இல்ல :-((

Ramya Ramani said...

சூப்பரு ஸோ இப்போ ஒரு வழியா யாருன்னு டிரேஸ் பண்ணியாச்சா? டாப் கியர்னா இது தானா!!

நல்லா இருக்கு நீங்க கதை சொல்ற விதம்..உங்க Characters மேதாவித்தனம் எல்லாம் காட்டாம சாதாரண மனுஷங்க போல யோசிச்சே கலக்கறாங்க..இப்படி இருக்கறதுனால தான் உங்க கதைகெல்லாம் நல்ல ரீச்

வெட்டிப்பயல் said...

//Blogger சந்தோஷ் = Santhosh said...

//இன்னும் ஏழு எட்டு எபிசோட் இருக்கா?அவ்வளவு நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது.சீக்கிரம் முடிங்க சார்.//

ஆமாம் பாலாஜி, இல்லாட்டி தினசரி தொடரா மாத்திடு ;)//

நாளைக்கு முடிஞ்சா அடுத்த பகுதியை போடறேன். வீக் எண்ட் எழுதிட்டு முடிஞ்சா அடுத்த வாரம் தினமும் போட்டுடலாம் :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...

//"உனக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?"

"ஆமாம்"

" "

நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா//

ஏனுங்ணா, யாரு மேல doubt ன்னு சொல்லவே இல்ல :-((//

அது பின்னாடி கன்ஃபர்ம் ஆனவுடனே வரும். நித்யா கேக்காமலா போயிடுவா? எப்படி சரியா கெஸ் பண்ணனு :)

இந்த பாகத்தை பத்தி எதுவும் சொல்லல :)

இவன் said...

வெட்டி முடிஞ்சா ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நாளும் போட்டாலும் நாங்க படிப்போம்

ராமய்யா... said...

ஹாய் வெட்டி..
நல்ல வேகமா போகுது கதை...
எட்டு பாகம் பத்து பாகம் எல்லாம் பொறுமையா இருக்க முடியாது,, நீங்க கொஞ்சம் சீக்கிரம் முடிப்பிங்கன்னு நினைக்குறேன்

பின்: என் வலை பூவில் நானும் என் முதல் சிறுகதை எழுதி இருக்கிறேன் பார்த்து படித்து பின்னூட்டம் இடவும்...

www.nizhalpadam.blogspot.com

ராம்ஜி

Vijay said...

மொத்தமா எல்லா பாகத்தையும் ஒரே நாளுல போடுங்க. இந்த torture தாங்க முடியலை.

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

சூப்பரு ஸோ இப்போ ஒரு வழியா யாருன்னு டிரேஸ் பண்ணியாச்சா? டாப் கியர்னா இது தானா!!
//
இது டாப் கீர் இல்லமா... அடுத்து வரும் டாப் கீர் :)

// நல்லா இருக்கு நீங்க கதை சொல்ற விதம்..உங்க Characters மேதாவித்தனம் எல்லாம் காட்டாம சாதாரண மனுஷங்க போல யோசிச்சே கலக்கறாங்க..இப்படி இருக்கறதுனால தான் உங்க கதைகெல்லாம் நல்ல ரீச்//

ஆஹா... இனிமே மேதாவித்தனம் வந்தா யாரும் படிக்க மாட்டாங்கனு சொல்றீயாமா?

இது வரைக்கும் சமாளிச்சாச்சு :)

வெட்டிப்பயல் said...

// இவன் said...

வெட்டி முடிஞ்சா ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நாளும் போட்டாலும் நாங்க படிப்போம்//

இவன்,
முயற்சி செய்யறேன்... இன்னும் எதுவும் எழுதல :(

எழுதிட்டு சொல்றேன் :)

வெட்டிப்பயல் said...

//Raam said...

ஹாய் வெட்டி..
நல்ல வேகமா போகுது கதை...
எட்டு பாகம் பத்து பாகம் எல்லாம் பொறுமையா இருக்க முடியாது,, நீங்க கொஞ்சம் சீக்கிரம் முடிப்பிங்கன்னு நினைக்குறேன்
//
ராம்,
இப்படி சொன்னவங்க நிறைய பேர் கதை முடிஞ்சவுடனே ஃபீல் பண்ணிருக்காங்க. இது நான் எழுதற நாலாவது தொடர். அதனால முன்னாடி மாதிரி அவசரப்பட்டு முடிக்க மாட்டேன். எப்ப போர் அடிக்குதோ அப்ப படிக்கறதை நிறுத்திடுங்க :)

// பின்: என் வலை பூவில் நானும் என் முதல் சிறுகதை எழுதி இருக்கிறேன் பார்த்து படித்து பின்னூட்டம் இடவும்...

www.nizhalpadam.blogspot.com//

கண்டிப்பா வரேன் ராம் :)

வெட்டிப்பயல் said...

//விஜய் said...

மொத்தமா எல்லா பாகத்தையும் ஒரே நாளுல போடுங்க. இந்த torture தாங்க முடியலை.//

இன்னும் எழுதலப்பா...
சீக்கிரம் எழுதி போடறேன் :)

Anonymous said...

Mubellam Kumudam , Vikatanla thodar padikka ippadithan wait pannuvom...

MSK / Saravana said...

இன்னும் ஏழு எட்டு பகுதியெல்லாம் கஷ்டம்.. எல்லாத்தையும் ஒரே பாகமா எழுதி முடிங்க..

MSK / Saravana said...

// நல்லா இருக்கு நீங்க கதை சொல்ற விதம்..உங்க Characters மேதாவித்தனம் எல்லாம் காட்டாம சாதாரண மனுஷங்க போல யோசிச்சே கலக்கறாங்க..இப்படி இருக்கறதுனால தான் உங்க கதைகெல்லாம் நல்ல ரீச்//

இதுக்கு ஒரு ரிபீட்டு ..

Divya said...

டயலாக்ஸ் வழக்கம்போல் மிக மிக யதார்த்தமாக....பதிவோடு ஒன்றிபோக வைத்தது:))

\\ கடைசியா வெற்றி மாட்றதுக்கு முன்னாடி நித்யாக்கிட்ட நான் மாட்டிக்குவேன் போல. அந்த அளவுக்கு ஐடியா சொல்லிட்டு இருக்கான்.\\

அந்த பயம் இருக்கிற மாதிரி தெரிலீயே:)
அடுத்த பகுதில நித்யாக்கிட்ட ரவி மாட்டிக்கிற ஸீன....கொஞ்சம் நீளமா....சூப்பரா போடுங்கண்ணா!

கதை ஜெட் வேகத்துல போகுது அண்ணா, சூப்பர், தொடருங்கள்:)

திவாண்ணா said...

உள்ளேன் ஐயா!

Ramkumar said...

வெட்டிப்பயல் அண்ணே, ஆட்டம் நல்ல போய்ட்ருக்கு... நல்ல முடிவா சொல்லுங்க...

வெட்டிப்பயல் said...

//Anbu said...

Mubellam Kumudam , Vikatanla thodar padikka ippadithan wait pannuvom...//

அந்த ரேஞ்ச்ல எல்லாம் நமக்கு எழுத வராதே அன்பு :)

வெட்டிப்பயல் said...

// M.Saravana Kumar said...

இன்னும் ஏழு எட்டு பகுதியெல்லாம் கஷ்டம்.. எல்லாத்தையும் ஒரே பாகமா எழுதி முடிங்க..//

ஆஹா...

இன்னும் நாலு பகுதி எழுத வேண்டியதிருக்குப்பா... ரெண்டு எழுதிட்டாக்கூட போதும். அடுத்த ரெண்டு சீக்கிரம் எழுதிடலாம்...

வெட்டிப்பயல் said...

// M.Saravana Kumar said...

// நல்லா இருக்கு நீங்க கதை சொல்ற விதம்..உங்க Characters மேதாவித்தனம் எல்லாம் காட்டாம சாதாரண மனுஷங்க போல யோசிச்சே கலக்கறாங்க..இப்படி இருக்கறதுனால தான் உங்க கதைகெல்லாம் நல்ல ரீச்//

இதுக்கு ஒரு ரிபீட்டு ..//

மிக்க நன்றி சரவணா :)

வெட்டிப்பயல் said...

// Divya said...

டயலாக்ஸ் வழக்கம்போல் மிக மிக யதார்த்தமாக....பதிவோடு ஒன்றிபோக வைத்தது:))//

ரொம்ப டாங்க்ஸ் தங்கச்சி :)

//

\\ கடைசியா வெற்றி மாட்றதுக்கு முன்னாடி நித்யாக்கிட்ட நான் மாட்டிக்குவேன் போல. அந்த அளவுக்கு ஐடியா சொல்லிட்டு இருக்கான்.\\

அந்த பயம் இருக்கிற மாதிரி தெரிலீயே:)
அடுத்த பகுதில நித்யாக்கிட்ட ரவி மாட்டிக்கிற ஸீன....கொஞ்சம் நீளமா....சூப்பரா போடுங்கண்ணா!
//

ஆஹா... அது இப்ப வராதே. அடுத்த பகுதி கொஞ்சம் சின்னது தான்... இனிமே தினமும் ஒரு பகுதி போடறேன்மா...

//
கதை ஜெட் வேகத்துல போகுது அண்ணா, சூப்பர், தொடருங்கள்:)

ரொம்ப டேங்ஸ் தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

//திவா said...

உள்ளேன் ஐயா!//

அட்டெண்டன்ஸ் போட்டதுக்கு நன்றி திவா :)

வெட்டிப்பயல் said...

// போக்கிரி பையன் said...

வெட்டிப்பயல் அண்ணே, ஆட்டம் நல்ல போய்ட்ருக்கு... நல்ல முடிவா சொல்லுங்க...//

மிக்க நன்றி போக்கிரி பையன்...

இந்த வாரத்துக்குள்ள முடிவு தெரிஞ்சிடும் :)

Anonymous said...

Good Going. innamum 8 episode. Dharalamaga Wait pannalam