தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, August 04, 2008

ஆடு புலி ஆட்டம் - 6

என்னடா இப்பவெல்லாம் இவன் ஃபோன்லயே அதிக நேரம் பேசிட்டு இருக்கானு பாக்கறீங்களா? என்னங்க பண்ண? தினமும் அவளுக்கு சும்மா என்ன பண்றனு கேக்கலாம்னு ஃபோன் பண்றேன். அது ரெண்டு மூணு மணி நேரமாகிடுது. இதுல வேற இந்த கம்பெனிகாரனுங்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கட் பண்ணிடறானுங்க. யார் எவ்வளவு நேரம் பேசினா இவுங்களுக்கு என்னங்க வந்துச்சு? பாதி பேசிட்டு இருக்கும் போதே கட் ஆகிடும். அப்பறம் மறுபடியும் பேச வேண்டியதா போயிடுது.

என் மேல சந்தேகமா இருந்தா நீங்களும் கேட்டுப்பாருங்க.

"என்ன பண்ணிட்டு இருக்க?"

"நாங்க இன்னைக்கு நல்லா ஊர் சுத்திட்டு வந்தோம். உனக்கு ஒண்ணு தெரியுமா? எனக்கு ஊர் சுத்தறதுனா ரொம்ப பிடிக்கும்"

"எனக்கும் வண்டில ஊர் சுத்தறதுனா பிடிக்கும். ஐன்ஸ்டீன் கூட சொல்லிருக்காரு 'I love to travel, but hate to arrive'னு "

"ஹே ஹே... இப்படி ஐன்ஸ்டீன் பேர் சொல்லி ஃபிகரை பிக் அப் பண்றதெல்லாம் பழைய காலம். இப்பவெல்லாம் பொண்ணுங்களுக்கு பசங்க போக்கிரியா இருந்தா தான் பிடிக்கும்"

"பராவாயில்லை பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் முன்னேறிட்டீங்க போல. முன்னாடியெல்லாம் போக்கிரி ராஜாங்கள தான் பிடிக்கும்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்பவெல்லாம் ஒரு படி கீழ இறங்கி போக்கிரிகளையும் பிடிக்கும்னு ஆரம்பிச்சிட்டீங்க"

"ஆமாம். அப்படியே பசங்க மட்டும் ஒழுங்கு. நார்மலா பேசற பொண்ணுங்களை விட்டுட்டு மாடர்ன் டைப் பொண்ணுங்க பின்னாடி தானே சுத்துவீங்க"

"மாடர்ன் பொண்ணுங்களை சைட் வேணா அடிப்பாங்க. ஆனா மனசை கொடுக்கறது ஹோம்லி பொண்ணுங்கள்ட தான். பத்ரிலக்கூட பாரு மோனல் பின்னாடி சுத்தனாலும் கடைசியா பூமிகாவைத்தான் கல்யாணம் பண்ணிக்குவார். பசங்களுக்கு எப்பவுமே நல்லா பழகற பொண்ணுங்களை கைப்பிடிக்க தான் பிடிக்கும்"

"பிடிக்கும் பிடிக்கும் கைய உடைச்சா எல்லாம் சரியாகிடும்"

சரி இதுக்கு மேலயும் எங்க மொக்கையை கேட்டா நீங்க டென்ஷனாகிடுவீங்க. இந்த வீக் எண்ட் அவ வீட்டுக்கு என்னை வர சொல்லியிருக்கா. சனிக்கிழமை போகலாம்னு இருக்கேன். அங்க அவ க்ளாஸ் மேட்ஸ் எல்லாம் இண்ட்ரடியூஸ் பண்ணிவிடறேனு சொல்லியிருக்கா...

என்னங்க சனிக்கிழமை காலைல எங்க கிளம்பிட்டு இருக்கேனு பாக்கறீங்களா? அதான் அன்னைக்கே சொன்னேனே. நித்யா வீட்டுக்கு தான்.

இன்னைக்கு அங்கு வந்து சேர்ந்து படிக்கலாம்னு சொல்லியிருக்கா. வீக் டேஸ்ல நிறைய நாள் வர சொன்னா. நான் வேற ஃபிரெண்ட் வீட்டுக்கு போறேன், அது இதுனு பொய் சொல்லி வெச்சிருக்கேன். இன்னைக்கு எப்படியும் உண்மையை சொல்லிடலாம்னு ப்ளான்.

அவ ஃபிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு டீலிங் இருக்காம். ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு நல்ல கம்பெனில வேலை செய்யறவங்க ஒருத்தராவது தெரிஞ்சிருக்கனும்னு. அப்ப தான் ரெஃபர் பண்றதுக்கும், ஓப்பனிங் இருந்தா சொல்றதுக்கும் வசதியா இருக்கும்னு அப்படி ஒரு திட்டமாம். எனக்கு யாரையும் தெரியாதுனு சொன்னேன். சும்மா அடிச்சி விடு அப்பறமா பார்த்துக்கலாம்னு சொல்லியிருக்கா. ஒரு வழியா BTMலே அவுட்க்கு வந்தாச்சுங்க. இப்ப அவ ரூமை கண்டுபிடிச்சு போகனும். இன்னைக்கே சொல்லலாமா இல்லை அடுத்த முறை பார்க்கும் போது சொல்லலாமானு இப்ப ஒரே யோசனையா இருக்கு. இருங்க செல்ஃபோன் அடிக்குது நித்யாவா தான் இருப்பா.

"ஏ எங்க இருக்க?"

"நான் BTM வந்துட்டேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல உங்க வீட்ல இருப்பேன்"

"சாருக்கு காலைல எழுந்திரிச்சி வரதுக்கு இவ்வளவு நேரமாகிடுச்சா?"

"இல்லை. நான் ஒன்பது மணிக்கு எல்லாம் கிளம்பினேன். இங்க வந்து சேரதுக்கு ரெண்டு மணி நேரமாகிடுச்சு"

"சரி. எங்கயும் வேடிக்கை பார்க்காம வந்து சேரு"

"அதெல்லாம் பத்திரமா வந்துடுவோம். நீ எதுவும் பயப்பட வேண்டாம்"

"ஐயோ. இவர் அப்படியே குழந்தை. இவருக்கு ஏதாவது ஆகிடும்னு பயப்படறோம். பொண்ணுங்களை பார்த்துட்டு அங்க இங்க நின்னுடாதனு சொன்னேன். இங்க என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க"

"இதோ வந்துட்டேன். நீ கொஞ்சம் வெளிய வந்தா வீடு ஈசியா கண்டுபிடிச்சிடலாம்"

என்ன புறப்படறதுக்கு இவ்வளவு நேரமாகிடுச்சினு பாக்கறீங்களா? என்ன பண்ண? எல்லாரும் இப்ப தான் கிளம்பறாங்க. மதியம் போனவுடனே அவ ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் அறிமுகப்படுத்தி வெச்சா. மூணு பசங்க நாலு பொண்ணுங்க. எல்லாரும் நல்லா பேசனாங்க. அப்பறம் சாப்பிட ஆரம்பிச்சோம். அட்டகாசமா சமைச்சிருந்தாங்க. வெல்லம் போடாத சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல், மிளகு ரசம், சக்கரை போடாம தயிரை சாப்பாட்ல போட்டு சாப்பிட்டது. எல்லாமே சூப்பரா இருந்தது. நித்யா இவ்வளவு சூப்பரா சமைப்பானு நீங்களும்
எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. நானும் உங்களை மாதிரியே எதிர்பார்க்கலை.

அப்பறம் சாப்பிட்டு எல்லாருக்கும் தூக்க கலக்கம். அப்படியே பேசிக்கிட்டே பொழுது ஓடிடுச்சி. ஒரு அஞ்சு மணிக்கா சுரேஷ் தான் எல்லாருக்கும் C சொல்லி தர ஆரம்பிச்சான். பையனுக்கு ஓரளவுக்கு தெரிஞ்சிருந்தது. ஆனா நிறைய விஷயம் மிஸ் பண்ணான். எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அப்படியே நான் கொஞ்ச கொஞ்சமா கேள்வி கேக்கற மாதிரி கேட்டு, அவன் வாய்லயே சொல்லி கொடுக்க வெச்சேன்.

ரொம்ப கஷ்டமா போயிடுச்சிங்க. ஒரு சில இடத்துல நான் கேள்வி கேட்டும் அவனுக்கு புரியல. அப்பறம் எங்க காலேஜ்ல இப்படி சொல்லி கொடுத்தாங்கனு நான் சொல்லி கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். நித்யாக்கு என் மேல சந்தேகம் வந்திருக்குமானு தெரியல.

கொஞ்ச நேரத்துல அங்க வந்த வினோதினி அக்கா சொல்லி கொடுக்க ஆரம்பிச்சி என்னை காப்பாத்தினாங்க. வினோதினி அக்கா பெங்களூர்ல தான் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கறாங்க. அவுங்க தங்கச்சி வினிதா தான் நித்யாவோட காலேஜ் மேட். மூணு பேரும் சேர்ந்து தான் ரூம் எடுத்து தங்கியிருக்காங்க. அவுங்க ஓரளவுக்கு நல்லா சொல்லி தந்தாங்க. அவுங்க பண்ண சின்ன சின்ன தப்பை மட்டும் நான் திருத்தினேன். ஒரு மாதிரி சிரிச்சிக்கிட்டே பார்த்தாங்க. இதை தான் அப்பவே "ரவி"யை கை மறைப்பார் இல் னு சொன்னாங்க போல.

அப்பறம் எட்டு மணிக்கா சமைக்க ஆரம்பிச்சிட்டாங்க. முடிக்க ஒன்பதரைக்கு மணிக்கு மேல ஆச்சு. அதான் சாப்பிட்டு பஸ் ஏறதுக்குள்ள மணி பத்துக்கு மேல ஆச்சு. இன்னைக்கும் அவக்கிட்ட சொல்ல வாய்ப்பு கிடைக்கல. இதுக்கு மேல சொன்னா ஒரு கும்பல்கிட்டயே தர்ம அடி வாங்க வேண்டியது இருக்கும் போல.

இனிமே நாம சந்திக்க கொஞ்ச நாள் ஆகும் போல.. அது வரைக்கும் என்னை ஞாபகம் வெச்சிக்கோங்க... நான் தான் ரவி சங்கர்...

(ஆட்டம் தொடரும்...)

33 comments:

Mukil said...

அய்யோ, யாருமே இல்லயா? அப்ப நான்தான் பர்ஷ்டா???

அப்ப சொல்லிடுவோம்....

மீ த பர்ஷ்ட்டு....

-முகிலரசிதமிழரசன்

மங்களூர் சிவா said...

me the 2nd

மங்களூர் சிவா said...

/
Mukilarasi said...

அய்யோ, யாருமே இல்லயா? அப்ப நான்தான் பர்ஷ்டா???

அப்ப சொல்லிடுவோம்....

மீ த பர்ஷ்ட்டு....

-முகிலரசிதமிழரசன்
/

யாருய்யா இது புதுமுகமா இருக்கு!?!?

மீ தி பர்ஸ்ட்டுக்கு இவ்ளோ போட்டியா???

:)))

வெட்டிப்பயல் said...

மொத்தத்துல யாரும் கதையை படிக்கல :-)

மங்களூர் சிவா said...

/
வெட்டிப்பயல் said...

மொத்தத்துல யாரும் கதையை படிக்கல :-)
/

என்ன ரவி சங்கர் ச்ச பாலாஜி இப்பிடி சொல்லிட்டீங்க (நீங்க) C சொல்லிகுடுத்த பையனை கலாய்ச்சது எல்லாம் படிச்சிட்டோம்.

பதிவு போட்ட 10வது நிமிசமே வந்திருக்கோம்னா எவ்ளோ எதிர்பார்ப்பு இருக்கும் பாத்துக்கங்க!

:))

திவாண்ணா said...

ஜோசியம் சொல்லட்டா? :-))
உண்மையை இப்ப சொல்லவே போறதில்லை. தள்ளி தள்ளி போகும், டாமேஜ் அதிகமாறவரை!
:-))

வெங்கட்ராமன் said...

இனிமே நாம சந்திக்க கொஞ்ச நாள் ஆகும் போல.. அது வரைக்கும் என்னை ஞாபகம் வெச்சிக்கோங்க... நான் தான் ரவி சங்கர்...

தல என்ன இப்படி குண்ட போடுறீங்க...
சீக்கிரம் நம்ம ரவிய வரவைக்கிற வேலைய பாருங்க.

Anonymous said...

Calenderla Reminder pottu dinamum kalayila padikkuren .... Katha nalla poguthu....Sila neram nanum ravikooda baglorela suthra feeling ....

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...

/
வெட்டிப்பயல் said...

மொத்தத்துல யாரும் கதையை படிக்கல :-)
/

என்ன ரவி சங்கர் ச்ச பாலாஜி இப்பிடி சொல்லிட்டீங்க (நீங்க) C சொல்லிகுடுத்த பையனை கலாய்ச்சது எல்லாம் படிச்சிட்டோம்.

பதிவு போட்ட 10வது நிமிசமே வந்திருக்கோம்னா எவ்ளோ எதிர்பார்ப்பு இருக்கும் பாத்துக்கங்க!

:))//

ஆஹா.. ரொம்ப டாங்கிஸ் சிவா :-)

வெட்டிப்பயல் said...

// திவா said...

ஜோசியம் சொல்லட்டா? :-))
உண்மையை இப்ப சொல்லவே போறதில்லை. தள்ளி தள்ளி போகும், டாமேஜ் அதிகமாறவரை!
:-))//

அப்படியா நினைக்கறீங்க??? :-))

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

இனிமே நாம சந்திக்க கொஞ்ச நாள் ஆகும் போல.. அது வரைக்கும் என்னை ஞாபகம் வெச்சிக்கோங்க... நான் தான் ரவி சங்கர்...

தல என்ன இப்படி குண்ட போடுறீங்க...
சீக்கிரம் நம்ம ரவிய வரவைக்கிற வேலைய பாருங்க.//

ஹி ஹி ஹி...

அடுத்த பாகத்துலயே வந்துடுவாரு... ஆனா அதுக்கு இடைப்பட்ட காலம் கொஞ்சம் அதிகம்.. அவ்வளவு தான் :-)

வெட்டிப்பயல் said...

// Anbu said...

Calenderla Reminder pottu dinamum kalayila padikkuren .... Katha nalla poguthu....Sila neram nanum ravikooda baglorela suthra feeling ....//

அன்பு,
இனிமே ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான். பேசாம திங்கள், புதன், வெள்ளி போடலாம்னு ப்ளான்...

விஜய் ஆனந்த் said...

:-)))....

// வெட்டிப்பயல் said...
மொத்தத்துல யாரும் கதையை படிக்கல :-) //

நா படிச்சிட்டேங்கோ!!!!!!!!!!!

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

:-)))....

// வெட்டிப்பயல் said...
மொத்தத்துல யாரும் கதையை படிக்கல :-) //

நா படிச்சிட்டேங்கோ!!!!!!!!!!!//

மிக்க நன்றி ஹை :-)

Anonymous said...

நானும் படிச்சாச்சு..கதைல நேட்டிவிட்டி ரொம்ப நல்லா இருக்கு..

ஆனா ஏன்னு தெரியல படிச்சு முடிச்சதும் எதுவுமே மனசுல நிக்கல :-?

-கணேஷ்

மடல்காரன்_MadalKaran said...

ஏங்க பாலாஜி நீங்க திங்கள், புதன், வெள்ளி மட்டும் இருக்கற காலண்டரா வாங்கல் ... தற்போது எல்லா கடைகளிலும் கிடைக்குது..
செவ்வாய் மற்றும் வியாழன அப்புறமா கணக்கு வச்சுகலாமே..!

சில மெகா சீரியல் போல சொல்லாம கொள்ளாம சட்டுனு நிறுத்திடாதீங்க..

அன்புடன், கி.பாலு

Sen22 said...

நல்லா போய்ட்டுஇருக்கு வெட்டி கதை.....

மீ தி பர்ஸ்ட்டுக்கு இவ்ளோ போட்டியா???

:)))

மொத்தத்துல யாரும் கதையை படிக்கல :-)

:)))))

Rajkumar said...

Excellent Story. Seekiram adutha part release pannungappa. Rendu naal wait pannanum. Enna kodumai Saravanan idhu???

தமிழினி..... said...

//"மாடர்ன் பொண்ணுங்களை சைட் வேணா அடிப்பாங்க. ஆனா மனசை கொடுக்கறது ஹோம்லி பொண்ணுங்கள்ட தான். பத்ரிலக்கூட பாரு மோனல் பின்னாடி சுத்தனாலும் கடைசியா பூமிகாவைத்தான் கல்யாணம் பண்ணிக்குவார். பசங்களுக்கு எப்பவுமே நல்லா பழகற பொண்ணுங்களை கைப்பிடிக்க தான் பிடிக்கும்"
//
சூப்பர்...........தல!!!

கதை சூடு பிடிக்குது....

// வெல்லம் போடாத சாம்பார்,//
மைசூர் ல வெல்லம் போடாத சாம்பார் சாப்பிட வாய்ப்பே இல்ல... :(((
சொல்லிருந்தா நானும் போயிருப்பேன்..சாப்பிடுறதுக்கு... :)))

Divyapriya said...

//தினமும் அவளுக்கு சும்மா என்ன பண்றனு கேக்கலாம்னு ஃபோன் பண்றேன். அது ரெண்டு மூணு மணி நேரமாகிடுது. //

LOL :-D

//இனிமே நாம சந்திக்க கொஞ்ச நாள் ஆகும் போல.. அது வரைக்கும் என்னை ஞாபகம் வெச்சிக்கோங்க... நான் தான் ரவி சங்கர்.//

why why why?

இந்த பார்ட் ஃபுல்லா நல்லா வறு, வறுன்னு வறுத்திருக்கீங்க போல ;-)

manikandan said...

தலைவா, நாளைக்கு அடுத்த பகுதி வரணும்...இல்லாட்டி நித்யா கோச்சிப்பாங்க

கயல்விழி said...

//அது ரெண்டு மூணு மணி நேரமாகிடுது. இதுல வேற இந்த கம்பெனிகாரனுங்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கட் பண்ணிடறானுங்க.//

பாவம் கூகிள் கம்பனிகாரர்கள் :)

கதை நல்லா போகுது.

அடுத்த பகுதியில் எங்கோ போயிடுமென்றீர்களே?

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

நானும் படிச்சாச்சு..கதைல நேட்டிவிட்டி ரொம்ப நல்லா இருக்கு..

ஆனா ஏன்னு தெரியல படிச்சு முடிச்சதும் எதுவுமே மனசுல நிக்கல :-?

-கணேஷ்//

மொத்த கதையும் படிச்சி பார்த்துட்டு சொல்லுங்க :-)

வெட்டிப்பயல் said...

//மடல்காரன் said...

ஏங்க பாலாஜி நீங்க திங்கள், புதன், வெள்ளி மட்டும் இருக்கற காலண்டரா வாங்கல் ... தற்போது எல்லா கடைகளிலும் கிடைக்குது..
செவ்வாய் மற்றும் வியாழன அப்புறமா கணக்கு வச்சுகலாமே..!

சில மெகா சீரியல் போல சொல்லாம கொள்ளாம சட்டுனு நிறுத்திடாதீங்க..

அன்புடன், கி.பாலு//

ஆஹா...
ஒவ்வொரு பகுதிக்கும் போதிய இடைவெளி வேண்டும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களே :-)

வெட்டிப்பயல் said...

// Sen22 said...

நல்லா போய்ட்டுஇருக்கு வெட்டி கதை.....

மீ தி பர்ஸ்ட்டுக்கு இவ்ளோ போட்டியா???

:)))

மொத்தத்துல யாரும் கதையை படிக்கல :-)

:)))))//

மிக்க நன்றி செந்தில்...

அடுத்த பகுதி சீக்கிரமே போடலாம்னு ப்ளான்...

வெட்டிப்பயல் said...

//Rajkumar said...

Excellent Story. Seekiram adutha part release pannungappa. Rendu naal wait pannanum. Enna kodumai Saravanan idhu???//

மிக்க நன்றி ராஜ்குமார்
அடுத்த பகுதியும் சீக்கிரமே வரும் :-)

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

//"மாடர்ன் பொண்ணுங்களை சைட் வேணா அடிப்பாங்க. ஆனா மனசை கொடுக்கறது ஹோம்லி பொண்ணுங்கள்ட தான். பத்ரிலக்கூட பாரு மோனல் பின்னாடி சுத்தனாலும் கடைசியா பூமிகாவைத்தான் கல்யாணம் பண்ணிக்குவார். பசங்களுக்கு எப்பவுமே நல்லா பழகற பொண்ணுங்களை கைப்பிடிக்க தான் பிடிக்கும்"
//
சூப்பர்...........தல!!!
//

ஆஹா... இதை கேட்டு எந்த பொண்ணாவது சண்டைக்கு வந்தா என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன் :-))

//
கதை சூடு பிடிக்குது....
//
இது வரைக்கும் கதை சுமாராத்தான் போச்சு.. இனிமே பிடிக்கும் சூடு :-)

//
// வெல்லம் போடாத சாம்பார்,//
மைசூர் ல வெல்லம் போடாத சாம்பார் சாப்பிட வாய்ப்பே இல்ல... :(((
சொல்லிருந்தா நானும் போயிருப்பேன்..சாப்பிடுறதுக்கு... :)))//

சொந்தமா சமைச்சி சாப்பிடறது தான் நல்லது :-))

ஆஹா... நானும் மைசூர் டிசில ஒரு மாசம் இருந்திருக்கேன். 2004 நியூ இயர் அங்க தான். சாப்பாடு கிடைக்காம ஃபுட் கோர்ல வேலை செய்யற மக்களோட சாப்பாடு வாங்கி சாப்பிட்டோம். அது காசுக்கொடுத்து வாங்கி சாப்பிடறதை விட ரொம்ப அருமையா இருந்துச்சு...

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...

//தினமும் அவளுக்கு சும்மா என்ன பண்றனு கேக்கலாம்னு ஃபோன் பண்றேன். அது ரெண்டு மூணு மணி நேரமாகிடுது. //

LOL :-D

//இனிமே நாம சந்திக்க கொஞ்ச நாள் ஆகும் போல.. அது வரைக்கும் என்னை ஞாபகம் வெச்சிக்கோங்க... நான் தான் ரவி சங்கர்.//

why why why?

இந்த பார்ட் ஃபுல்லா நல்லா வறு, வறுன்னு வறுத்திருக்கீங்க போல ;-)//

ஏன் இந்த கொல வெறி???

ரவி வறுத்தா நான் வறுத்தன்னு அர்த்தமா???

திவாண்ணா said...

//அது காசுக்கொடுத்து வாங்கி சாப்பிடறதை விட ரொம்ப அருமையா இருந்துச்சு... //

ஆமாமாம்! ஓசி சாப்பாடு எப்பவுமே ரொம்ப டேஸ்டிதான்!
;-))))))))))))))))))

தமிழினி..... said...

//சொந்தமா சமைச்சி சாப்பிடறது தான் நல்லது :-))
//
வாய்ப்பே இல்ல தல...இருக்குறது PG ல.....

//ஆஹா... நானும் மைசூர் டிசில ஒரு மாசம் இருந்திருக்கேன். 2004 நியூ இயர் அங்க தான். சாப்பாடு கிடைக்காம ஃபுட் கோர்ல வேலை செய்யற மக்களோட சாப்பாடு வாங்கி சாப்பிட்டோம். அது காசுக்கொடுத்து வாங்கி சாப்பிடறதை விட ரொம்ப அருமையா இருந்துச்சு...//

ரைட்டு...அடுத்த நியூ இயர் நான் ஆபீஸ் ல தான் கொண்டாட போறேன்.....information is wealth....!!!!!!

வெட்டிப்பயல் said...

//திவா said...

//அது காசுக்கொடுத்து வாங்கி சாப்பிடறதை விட ரொம்ப அருமையா இருந்துச்சு... //

ஆமாமாம்! ஓசி சாப்பாடு எப்பவுமே ரொம்ப டேஸ்டிதான்!
;-))))))))))))))))))//

ஓசி சாப்பாடுங்கறது மட்டும் காரணமில்லை... நல்ல மனசோட பசில இருக்கறவங்ககிட்ட காசு வாங்காம கொடுத்தாங்க. அதுவும் ஒரு காரணம் தான்.

சாப்பிட்டு நாங்க காசு தரோம்னு சொல்லும் போதும் வேண்டாம் தம்பினு சொல்லிட்டாங்க :-)

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

//சொந்தமா சமைச்சி சாப்பிடறது தான் நல்லது :-))
//
வாய்ப்பே இல்ல தல...இருக்குறது PG ல.....
//
அப்ப ரைட்டு... சீக்கிரமே கல்யாணமாகி வூட்டுக்காரரை வெல்லம் போடாம சமைக்க சொல்லவும் :-)

//
//ஆஹா... நானும் மைசூர் டிசில ஒரு மாசம் இருந்திருக்கேன். 2004 நியூ இயர் அங்க தான். சாப்பாடு கிடைக்காம ஃபுட் கோர்ல வேலை செய்யற மக்களோட சாப்பாடு வாங்கி சாப்பிட்டோம். அது காசுக்கொடுத்து வாங்கி சாப்பிடறதை விட ரொம்ப அருமையா இருந்துச்சு...//

ரைட்டு...அடுத்த நியூ இயர் நான் ஆபீஸ் ல தான் கொண்டாட போறேன்.....information is wealth....!!!!!!//

அப்ப அங்க மக்கள் ரொம்ப குறைவு. இப்பவெல்லாம் சான்ஸே இல்லை. அதுவுமில்லாம அந்த மாதிரி எப்பவுமே பகிர்ந்துக்குவாங்களானு சொல்ல முடியாது. எனக்கு அந்த மாதிரி வாங்கி சாப்பிட்டு பழக்கம் அதிகம். சின்ன வயசுல ஹாஸ்டல்ல மெஸ்ல வேலை செய்யற பசங்க எல்லாம் கூட எனக்கு ஃபிரெண்ட்ஸ் தான் :-)

திவாண்ணா said...

சும்மாதான் சொன்னேன் பாலாஜி!
:-))