தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, August 01, 2008

ஆடு புலி ஆட்டம் - 5

என்னங்க ஃபோரம்ல சுத்த போறேன், படத்துக்கு போக போறேன், சீட்டு விளையாடப்போறேனு சொல்லிட்டு இப்படி காலங்காத்தால கைல ரெஸ்யூமோட இங்க வந்திருக்கேனு பார்த்தீங்களா? சும்மா விளையாட்டுக்கு தான். அவள் என்னை எப்படி நாலு கம்பெனில வேலை கிடைச்சிருக்குனு ஏமாத்தனாலோ, அதை விட நான் அவளுக்கு பல்ப் கொடுக்கனும்னு தான் இந்த ஐடியா. நீங்க என்னை எதுவும் தப்பா நினைக்க மாட்டீங்கனு எனக்கு தெரியும்.

இந்த ரெஸ்யூம்ல என்னோட பேரை தவிர எல்லாமே பொய் தான். இந்த பெங்களூர்ல, இந்த சின்ன கம்பெனில எவனுக்கு என்னை தெரிய போகுது. இருங்க மொபைல் அடிக்குது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பேசிட்டு வந்துடறேன்.

"ஹேய் நித்யா. சொல்லுங்க. எங்க இருக்கீங்க?"

"நான் இண்டர்வியூ அண்டெண்ட் பண்ண போறேன். நீங்க வரீங்களா? இல்லையா?"

"நான் இன்னும் சரியா ப்ரிப்பேர் பண்ணல. அடுத்து ஏதாவது பெரிய கம்பெனியா இருந்தா சொல்லுங்க. சின்ன கம்பெனி எல்லாம் வேண்டாம்"

"பில் கேட்ஸ் ரிட்டயர்ட் ஆகறாராம். நீங்க வேணா அந்த வேலைல சேர்ந்துக்கறீங்களா?"

"இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? இந்த சின்ன கம்பெனி விட்டா அது ஒண்ணுல தான் வேலை இருக்கா?"

"சரி டென்ஷனாகாதீங்க. நீங்க எங்க தங்கியிருக்கீங்க?"

"நான் பக்கத்துல விவேக் நகர்ல தான் தங்கியிருக்கேன்."

"அப்ப அப்படியே வந்தீங்கன்னா, இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு, ரெண்டு பேரும் பக்கத்துல ஏதாவது ஒரு நல்ல ஓட்டல்ல சாப்பிடலாம் இல்லை?"

"நீங்க இண்டர்வியூ முடிச்சிட்டு கூப்பிடுங்க. நான் வரேன்"

"சரிங்க"

ஏன் இப்ப எல்லாரும் என்னை அப்படி முறைக்கறீங்க? எத்தனை பொய் தான் சொல்வேனு எண்ணிட்டு இருக்கீங்களா? நான் சொன்னது ஒரு தாய் பொய் தான். மீதியெல்லாம் அதோட குட்டி பொய்.

எப்படியும் இன்னைக்கு இவனுங்க இண்டர்வியூல தப்பி தவறிக்கூட செலக்ட் ஆகிடக்கூடாதுங்கறது தாங்க என்னோட வேண்டுதலே. இதோ அந்த வாயாடி படிக்கெட்ல வந்துட்டு இருக்கா பாருங்க. அன்னைக்கு பார்த்ததை விட இன்னைக்கு இன்னும் கொஞ்சம் அழகா தெரியறா பாருங்க. அழகா சுடிதார் போட்டு, துப்பாட்டாவை எதுக்கு போடணுமோ அதுக்காக போட்டு, மேட்சிங் மேட்சிங்கா பொட்டு தோடுனு இல்லாம, காண்ட்ராஸ்டிங்கா போட்டுட்டு அழகா வந்திருக்கா. ஸ்டூல் போடாமா செருப்பு போட்டுறக்கறது இன்னும் அழகா இருக்கு. இவ இண்டர்வியூக்கு வந்தாளா இல்லை பொண்ணு பார்க்க வந்திருக்காங்கனு நினைச்சிட்டு வந்தாளானே தெரியல. ரவி! ரொம்ப அலையாதனு நீங்க சொல்றது எனக்கு கேக்குது. அதனால இதோட நிப்பாட்டிக்குவோம்.

"அடப்பாவமே. நீங்க இங்க எனக்கு முன்னாடியே வந்துட்டீங்களா? சேர்ந்து சாப்பிடலாம்னு சொன்னவுடனே அதுக்குள்ள வந்துட்டீங்க. நான் இண்டர்வியூ முடிச்சிட்டு தான் வருவேன்"

"ஆமாங்க நீங்க சொல்லி பத்து நிமிஷத்துல நான் ரெஸ்யூம் டை ப் பண்ணி, ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு, பறந்து வந்துட்டேன்"

"அப்ப, நான் ஃபோன் பண்ணும் போது நீங்க இங்க தான் இருந்துருக்கீங்க"

"ஆமா. சும்மா ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு தான் நான் சொல்லல"

"இதெல்லாம் ஒரு சர்ப்ரைஸா. நீங்க இந்த இண்டர்வியூ க்ளியர் பண்ணா அது சர்ப்ரைஸ்"

"நீங்க நாலு கம்பெனில ஆஃபர் லெட்டர் வாங்கனவங்களாச்சே. நீங்க தாராளமா பேசலாம்"

"கிண்டல் பண்றீங்க பார்த்தீங்களா?"

"இல்லை சும்மா சொன்னேன். ஆமா நீங்க தனியா வந்திருக்கீங்களே. உங்க கூட வேலை தேடற ஃபிரெண்ட்ஸ் யாரும் வரலையா?"

"இல்லைங்க.
நான் என் க்ளாஸ் மேட் வினிதாகாவும், அவ அக்காவும் சேர்ந்து தங்கியிருக்கோம். வினிதா ஊருக்கு போயிருக்கா. அவ அக்கா இங்க ஒரு கம்பெனில வேலை பார்க்கறாங்க."

"ஹிம்ம்ம்"

"சரி, உங்க ஃபிரெண்ட்ஸ் யாரும் வரலையா?"

"இல்லைங்க. அவனுங்க எல்லாம் தூங்கிட்டு இருக்காங்க. முன்னாடியே சொல்லியிருந்தா ப்ரிப்பேர் பண்ணியிருப்பாங்க"

"ஆமா. இதுக்கு இவுங்களுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே சொல்வாங்களாக்கும். சும்மா ட்ரை பண்ணி பார்க்கலாம்னு வரதில்ல"

"அவுங்க அப்படி தான். நீங்க விடுங்க"

இப்பல்லாம் கேள்வியாங்க கேக்கறானுங்க. இதுக்கு கோடிஸ்வரன்ல சித்தில சிவக்குமார்க்கு ராதிகா என்ன வேண்டும்னு சரத்குமார் கேட்டாரே, அதையே கேட்டிருக்கலாம். நானும் தப்பா எழுதனும்னு கஷ்டப்பட்டு எழுதிட்டு வந்திருக்கேன். இவனுங்க எல்லாம் எதுக்கு கம்பெனி நடத்தறாங்கனு தெரியலை. அதோ நித்யா வெளிய வந்துட்டா. மெயிண்டைன் பண்ணனும்.

"எப்படி எழுதனீங்க?"

"என்னங்க இவ்வளவு கஷ்டமா கேட்டிருக்காங்க. எனக்கு ஒண்ணுக்கூட தெரியல"

"அப்பா.. எனக்கு பரவால. பாதிக்கு மேல கரெக்டுனு நினைக்கிறேன். ரொம்ப கஷ்டமில்லை. ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்"

"உங்க அளவுக்கு படிப்ஸா இருந்தா பரவாயில்லை"

"என்னங்க. நீங்க இஞ்சினியரிங் படிச்சி தானே வந்தீங்க. உங்களுக்கு வேலை கிடைக்கறது ரொம்ப கஷ்டம் போல"

"என்னங்க இப்படி சொல்றீங்க"

"சரி கவலைப்படாதீங்க. எங்க ரூம்ல நிறைய பேர் சேர்ந்து தான் படிப்போம்.நீங்க வாங்க உங்களுக்கு நாங்க சொல்லி தரோம்"

"ரொம்ப தேங்க்ஸுங்க. ஆனா பொண்ணுங்க தங்கியிருக்கற வீட்டுக்கு நான் வரது நல்லா இருக்காது."

"அய்யோ.. ரொம்ப தான்.. அங்க எங்க க்ளாஸ் பசங்களும் வருவாங்க. நிறைய பேர் சேர்ந்து தான் படிப்போம். பயப்படாம வாங்க"

"சரி.."

"மணி பனிரெண்டே காலாச்சு.. பக்கத்துல எங்கயாவது நல்ல ஓட்டல் இருக்கா?"

"பக்கத்துல தான் கிருஷ்ணா காபே இருக்கு.. மதியம் சாப்பாடு சூப்பரா இருக்கும்"

"இதெல்லாம் தெரிஞ்சி வெச்சிக்கோங்க. ஆனா இண்டர்வியூல கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் தெரிஞ்சிக்காதீங்க"

"என்னங்க பண்றது... உங்களை மாதிரி ஆளுங்களுக்கு அதிக மூளையை எடுத்து ஊத்திட்டு எங்களுக்கு குறைச்சிட்டான் போல"

"என்னுமோ பந்தில பாயசம் ஊத்தற மாதிரி சொல்றீங்க. சரி வாங்க சாப்பிட போகலாம்"

கிருஷ்ணா கபேல சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சுங்க. எப்பவும் போல வெளுத்து கட்டியாச்சு. எங்க நித்யாவை காணோம்னு பார்க்கறீங்களா? அவளை பஸ் ஏத்தி அனுப்பிட்டேன். ஃபோரம் போகலாமானு கேக்கலாம்னு யோசிச்சேன். அப்பறம் அது சரியில்லைனு தோணுச்சு. அதான் பஸ்ல ஏத்திவிட்டாச்சு. அது எப்படிங்க பொண்ணுங்க வாய திறந்து பேச ஆரம்பிச்சா நிறுத்தாம பேசறாங்க?

சீக்கிரம் உண்மையை சொல்லிடனும்னு தோனுதுங்க. இல்லைனா ஏதாவது பிரச்சனையாக வாய்ப்பிருக்குனு தோனுது. சான்ஸ் கிடைக்கும் போது சொல்லிடுடா ரவினு என் மனசும் அடிக்கடி சொல்லுது. பார்க்கலாம்...

(ஆட்டம் தொடரும்)

42 comments:

வெட்டிப்பயல் said...

அடுத்த பகுதி திங்கள் காலை EST 10 AM :-)

கயல்விழி said...

கதை ரொம்ப தூரம் போகவில்லை. :(

ஆனால் நல்ல எழுத்து நடை.

வெட்டிப்பயல் said...

//கயல்விழி said...

கதை ரொம்ப தூரம் போகவில்லை. :(
//
இன்னும் 3 பகுதில எங்கயோ இருக்கும் :-))

// ஆனால் நல்ல எழுத்து நடை.//

மிக்க நன்றி :-)

Anonymous said...

அடுத்து ஒரு Chapter...கொஞ்சம் சின்னதா இருந்த மாதிரி ஒரு feeling..
ஆனா இன்னைக்கே படிச்சுட்டதுனால ஒரு சின்ன சந்தோஷம்.. :)
நல்லாயிருக்கு இந்த conversation style approach.. திங்கட்கிழமை வந்து எட்டிப் பார்க்கிறேன்..

Good weekend!

-கணேஷ்

Anonymous said...

Weekend enna vettiya thana iruka poringhina ? kadhai eluthina naangha ellam padikalam illae.
Ennaku oru doubtu, ungha office la blog yedhula evaloo neram tharangha. Engha office la eppavum work panna solrangha pa. 'Enna kodumai sir idhu'..
It feels good when reading the story. Have a nice weekend.

Indian said...

//கதை ரொம்ப தூரம் போகவில்லை. :(

ஆனால் நல்ல எழுத்து நடை.

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்!!!

விஜய் ஆனந்த் said...

ம்ம்ம்ம்ம்ம்....கத அவ்வளவா pick-up ஆவலியே..

// அடுத்த பகுதி திங்கள் காலை EST 10 AM :-) //

plaaaaan பண்ணிதான் இத இன்னிக்கே போட்டீங்களா!!! திங்கள் காலை EST 10 AM-க்கு எனக்கு இன்னும் முழுசா 3 days, 2 nights இருக்கு...இது நியாயமில்லைங்கோ....

நல்ல எழுத்து நடை, நகைச்சுவை அப்படின்னெல்லாம் சொல்ல முடியாது!!(பின்ன என்னங்க...எத்தன தடவ!!!)

ஆனா ஒண்ணு, உங்க கதைய படிச்சா....bengaluru-வ ரொம்ப மிஸ் பண்றேனோன்னு தோணுது...

TBCD said...

தனித் தனியாக படிப்பதை விட மொத்தமா படிச்சா ரொம்ப சுவாரசியமாக இருக்கு..

நித்யாவை ரொம்ப பிடிச்சியிருக்குங்க..

தொடர்ந்து கலக்குங்க

Divyapriya said...

//ஸ்டூல் போடாமா செருப்பு போட்டுறக்கறது இன்னும் அழகா இருக்கு//

நக்கல் நல்லா தான் இருக்கு :-)

//என்னுமோ பந்தில பாயசம் ஊத்தற மாதிரி சொல்றீங்க.//

LOL :-D

//அது எப்படிங்க பொண்ணுங்க வாய திறந்து பேச ஆரம்பிச்சா நிறுத்தாம பேசறாங்க?//

அதெல்லாம் ஒரு கலைங்க...கண்ணு வெக்காதீங்க :-)

மங்களூர் சிவா said...

/
இதோ அந்த வாயாடி படிக்கெட்ல வந்துட்டு இருக்கா பாருங்க. அன்னைக்கு பார்த்ததை விட இன்னைக்கு இன்னும் கொஞ்சம் அழகா தெரியறா பாருங்க. அழகா சுடிதார் போட்டு, துப்பாட்டாவை எதுக்கு போடணுமோ அதுக்காக போட்டு, மேட்சிங் மேட்சிங்கா பொட்டு தோடுனு இல்லாம, காண்ட்ராஸ்டிங்கா போட்டுட்டு அழகா வந்திருக்கா. ஸ்டூல் போடாமா செருப்பு போட்டுறக்கறது இன்னும் அழகா இருக்கு. இவ இண்டர்வியூக்கு வந்தாளா இல்லை பொண்ணு பார்க்க வந்திருக்காங்கனு நினைச்சிட்டு வந்தாளானே தெரியல.
/

ஹா ஹா வர்ணனை சூப்பர்

:))

மங்களூர் சிவா said...

/
TBCD said...

நித்யாவை ரொம்ப பிடிச்சியிருக்குங்க..

/

டிபிசிடி

ரவி சங்கர் ஹீரோ அவனை வில்லனாக்கீடாதீங்க!!

:)))))))))

மங்களூர் சிவா said...

/
Divyapriya said...

//அது எப்படிங்க பொண்ணுங்க வாய திறந்து பேச ஆரம்பிச்சா நிறுத்தாம பேசறாங்க?//

அதெல்லாம் ஒரு கலைங்க...கண்ணு வெக்காதீங்க :-)
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Ramya Ramani said...

\\ஏன் இப்ப எல்லாரும் என்னை அப்படி முறைக்கறீங்க? எத்தனை பொய் தான் சொல்வேனு எண்ணிட்டு இருக்கீங்களா? நான் சொன்னது ஒரு தாய் பொய் தான். மீதியெல்லாம் அதோட குட்டி பொய்.\\

ROTFL :))

\\பக்கத்துல தான் கிருஷ்ணா காபே இருக்கு.. மதியம் சாப்பாடு சூப்பரா இருக்கும்"\\

இங்கேயுமா கிருஷ்ணா கபே!! அது என்ன அவ்வளவு சூப்பர் ரெஸ்டாரண்டா??


உங்க ஹீரோக்கு ரொம்பத்தான் நக்கலு!!

வெட்டிப்பயல் said...

//அடுத்து ஒரு Chapter...கொஞ்சம் சின்னதா இருந்த மாதிரி ஒரு feeling..
ஆனா இன்னைக்கே படிச்சுட்டதுனால ஒரு சின்ன சந்தோஷம்.. :)
நல்லாயிருக்கு இந்த conversation style approach.. திங்கட்கிழமை வந்து எட்டிப் பார்க்கிறேன்..

Good weekend!

-கணேஷ்//

நிச்சயம் எட்டிப்பாருங்க :-)

வெட்டிப்பயல் said...

// Karuppiah said...

Weekend enna vettiya thana iruka poringhina ? kadhai eluthina naangha ellam padikalam illae.//
அதனால தாங்க உக்கார்ந்து எழுதிட்டு இருக்கேன் :-)

// Ennaku oru doubtu, ungha office la blog yedhula evaloo neram tharangha. Engha office la eppavum work panna solrangha pa. 'Enna kodumai sir idhu'..//
எங்க ஆபிஸ்லயும் ஆணி அதிகம் தான். இது எல்லாம் வீட்ல இருந்து எழுதனதுங்க. இங்க இருந்து பப்ளிஷ் பண்ணிட்டு இருக்கேன் :-)

// It feels good when reading the story. Have a nice weekend.//
மிக்க நன்றி... தங்களுக்கும் இனிய வார இறுதிகள் :-)

வெட்டிப்பயல் said...

// Indian said...

//கதை ரொம்ப தூரம் போகவில்லை. :(

ஆனால் நல்ல எழுத்து நடை.

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்!!!//

மிக்க நன்றி :-)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

ம்ம்ம்ம்ம்ம்....கத அவ்வளவா pick-up ஆவலியே..
//

சீக்கிரமே பிக் அப் ஆகும் :-)

//
// அடுத்த பகுதி திங்கள் காலை EST 10 AM :-) //

plaaaaan பண்ணிதான் இத இன்னிக்கே போட்டீங்களா!!! திங்கள் காலை EST 10 AM-க்கு எனக்கு இன்னும் முழுசா 3 days, 2 nights இருக்கு...இது நியாயமில்லைங்கோ....
//
முன்னாடி எல்லாம் வாரத்துக்கு ஒண்ணுனு போட்டுட்டு இருந்தேன். இது அதைவிட பரவாயில்லை தானே :-))

//
நல்ல எழுத்து நடை, நகைச்சுவை அப்படின்னெல்லாம் சொல்ல முடியாது!!(பின்ன என்னங்க...எத்தன தடவ!!!)

ஆனா ஒண்ணு, உங்க கதைய படிச்சா....bengaluru-வ ரொம்ப மிஸ் பண்றேனோன்னு தோணுது...//

மீ டூ...

இதெல்லாம் எனக்கும் மூணு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த பேங்களூர் தான் :-)

வெட்டிப்பயல் said...

//TBCD said...

தனித் தனியாக படிப்பதை விட மொத்தமா படிச்சா ரொம்ப சுவாரசியமாக இருக்கு..

நித்யாவை ரொம்ப பிடிச்சியிருக்குங்க..

தொடர்ந்து கலக்குங்க//

கதையெல்லாம் கூட படிப்பீங்களா???

மிக்க நன்றி :-)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

//ஸ்டூல் போடாமா செருப்பு போட்டுறக்கறது இன்னும் அழகா இருக்கு//

நக்கல் நல்லா தான் இருக்கு :-)
//

ஹி ஹி ஹி

//
//என்னுமோ பந்தில பாயசம் ஊத்தற மாதிரி சொல்றீங்க.//

LOL :-D

//அது எப்படிங்க பொண்ணுங்க வாய திறந்து பேச ஆரம்பிச்சா நிறுத்தாம பேசறாங்க?//

அதெல்லாம் ஒரு கலைங்க...கண்ணு வெக்காதீங்க :-)//

கண்ணு வெச்சிட்டா மட்டும் ஏதாவது மாறிடவா போகுது :-))

Prabu Raja said...

//
இங்கேயுமா கிருஷ்ணா கபே!! அது என்ன அவ்வளவு சூப்பர் ரெஸ்டாரண்டா??//

Madurai style hot idly, Sambar without sugar :-)
10th Place in TOI dosa coffee contest
Ilai pottu full meals..

Nijamave Koramangala la ithuthan best

வெட்டிப்பயல் said...

//ஹா ஹா வர்ணனை சூப்பர்

:))//

சிவா,
டேங்ஸ்...

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

\\ஏன் இப்ப எல்லாரும் என்னை அப்படி முறைக்கறீங்க? எத்தனை பொய் தான் சொல்வேனு எண்ணிட்டு இருக்கீங்களா? நான் சொன்னது ஒரு தாய் பொய் தான். மீதியெல்லாம் அதோட குட்டி பொய்.\\

ROTFL :))

\\பக்கத்துல தான் கிருஷ்ணா காபே இருக்கு.. மதியம் சாப்பாடு சூப்பரா இருக்கும்"\\

இங்கேயுமா கிருஷ்ணா கபே!! அது என்ன அவ்வளவு சூப்பர் ரெஸ்டாரண்டா??
//
இப்படி கேட்டுடீங்களே... ஒரு காலத்துல எங்களுக்கு அது எவ்வளவு பெரிய சேவை செஞ்சிருக்கு தெரியுமா? இப்பவெல்லாம் நிறைய தமிழ்நாடு ஸ்டைல் ஹோட்டல்ஸ் இருக்கு. அப்பவெல்லாம் இந்த மாதிரி வெல்லம் இல்லாத சாம்பார் சாப்பிடறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம்னு சொன்னா உங்களுக்கு புரியாது.

அதுவும் வாழை இலை போட்டு சாப்பிடறது எல்லாம் எவ்வளவு சுகம் தெரியுமா? அதெல்லாம் மிஸ் பண்ணும் போது தான் தெரியும்.


// உங்க ஹீரோக்கு ரொம்பத்தான் நக்கலு!!//

ஹீரோயின் மட்டும் அமைதியாக்கும் :-)

ஜியா said...

:)))

தலைப்பு பனிவிழும் மலர்வளம்னுதானே வச்சிருந்தீங்க? ஏன் ஆடு புலி ஆட்டம்??

[இதே தலைப்புல நான் ஒரு கத எழுதிட்டு இருக்கேன்.. அதான் :(((]

Syam said...

கதை இப்போதான் சூடு புடிக்க ஆரம்பிச்சு இருக்கு...நடக்கட்டும் :-)

Syam said...

கதைக்கு ஒரு சின்ன பிரேக் குடுத்திட்டு குசேலனுக்கு ஒரு டெவில் ஷோ போடுங்களேன் :-)

rapp said...

சூப்பரா எடுத்துக்கிட்டு போறீங்க, வாழ்த்துக்கள்.

rapp said...

பொண்ணுங்க ஜாஸ்தி பேசினாலும் ரசிக்க முடியும், இதே ஆண்கள் பேசினா லொட லொட கேஸ்னு ஓடிடமாட்டாங்க எல்லாரும்????:):):)

rapp said...

//mangalore siva said:
//
TBCD said...

நித்யாவை ரொம்ப பிடிச்சியிருக்குங்க..

/

டிபிசிடி

ரவி சங்கர் ஹீரோ அவனை வில்லனாக்கீடாதீங்க!!
//

:):):)

Naveen Kumar said...

as usual gr8 going dude:-)


\என்னங்க பண்றது... உங்களை மாதிரி ஆளுங்களுக்கு அதிக மூளையை எடுத்து ஊத்திட்டு எங்களுக்கு குறைச்சிட்டான் போல"

"என்னுமோ பந்தில பாயசம் ஊத்தற மாதிரி சொல்றீங்க. சரி வாங்க சாப்பிட போகலாம்"\

ROTLFL:)

திவாண்ணா said...

ம்ம்ம்
ஒரு தாய் பொய். இதிலிருந்து எவ்வளொ கிளைக்கப்போகுதோ! சேஸ் கதைல.. சரி அத உடுங்க.

வெட்டிப்பயல் said...

// Prabu Raja said...

//
இங்கேயுமா கிருஷ்ணா கபே!! அது என்ன அவ்வளவு சூப்பர் ரெஸ்டாரண்டா??//

Madurai style hot idly, Sambar without sugar :-)
10th Place in TOI dosa coffee contest
Ilai pottu full meals..

Nijamave Koramangala la ithuthan best//

அதானே... இதெல்லாம் பெங்களூரூல இருந்து அனுபவிச்சா தான் தெரியும் :-)

வெட்டிப்பயல் said...

//ஜி said...

:)))

தலைப்பு பனிவிழும் மலர்வளம்னுதானே வச்சிருந்தீங்க? ஏன் ஆடு புலி ஆட்டம்??

[இதே தலைப்புல நான் ஒரு கத எழுதிட்டு இருக்கேன்.. அதான் :(((]//

ஜியா,
நீயும் எழுதுப்பா. இதுல என்ன இருக்கு. இந்த கதைக்கு இந்த பேர் நல்லா சூட் ஆகும்னு இப்ப தோனிடுச்சு. முதல்ல எழுதற கதை வெறும் லவ் ஸ்டோரி. இப்ப கதை கொஞ்சம் மாறிடுச்சி. அதான் :-)

வெட்டிப்பயல் said...

// Syam said...

கதை இப்போதான் சூடு புடிக்க ஆரம்பிச்சு இருக்கு...நடக்கட்டும் :-)//

ரொம்ப நன்றி நாட்டாமை :-)

வெட்டிப்பயல் said...

// Syam said...

கதைக்கு ஒரு சின்ன பிரேக் குடுத்திட்டு குசேலனுக்கு ஒரு டெவில் ஷோ போடுங்களேன் :-)//

படம் பார்க்கலையே :-))

டெவில் ஷோ இன்னும் நிறைய பேருக்கு இருக்கு :-)

வெட்டிப்பயல் said...

// rapp said...

பொண்ணுங்க ஜாஸ்தி பேசினாலும் ரசிக்க முடியும், இதே ஆண்கள் பேசினா லொட லொட கேஸ்னு ஓடிடமாட்டாங்க எல்லாரும்????:):):)//

அப்படியா சொல்றீங்க???
பொண்ணுங்க பேசினா ரசிக்க முடியும்னு பசங்க தானே சொல்லணும் :-)

வெட்டிப்பயல் said...

//Naveen Kumar said...

as usual gr8 going dude:-)


\என்னங்க பண்றது... உங்களை மாதிரி ஆளுங்களுக்கு அதிக மூளையை எடுத்து ஊத்திட்டு எங்களுக்கு குறைச்சிட்டான் போல"

"என்னுமோ பந்தில பாயசம் ஊத்தற மாதிரி சொல்றீங்க. சரி வாங்க சாப்பிட போகலாம்"\

ROTLFL:)//

மிக்க நன்றி நவீன் குமார்

வெட்டிப்பயல் said...

//திவா said...

ம்ம்ம்
ஒரு தாய் பொய். இதிலிருந்து எவ்வளொ கிளைக்கப்போகுதோ! சேஸ் கதைல.. சரி அத உடுங்க.//

பார்க்கலாம். இன்னும் எத்தனை பொய் வருதுனு :-)

Vijay said...

கதை சூப்பரா போகுதே. பெங்களூரைக் கதைக்களமா வைத்து இன்னொரு கதை. வாழ்த்துக்கள். அதென்னங்க, நம்மூர் பசங்க சாப்பிடணும்னா கிருஷ்ணா கஃபே தான் கிடைச்சதா? அஞ்சப்பர் மெஸ், அடையார் ஆனந்த பவனெல்லாம் வந்தாச்சுங்க. சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க.

அன்புடன்,
விஜய்

தமிழினி..... said...

எனக்கு நாலாம் பாகத்தை விட இந்த பாகம் பிடிச்சுருந்தது....
ஆமாம்....திங்கள் கிழமை காலை EST யா??இல்ல IST யா???
:))))))))))))))))))))))))))))))))))

தமிழினி..... said...

//அழகா சுடிதார் போட்டு, துப்பாட்டாவை எதுக்கு போடணுமோ அதுக்காக போட்டு, மேட்சிங் மேட்சிங்கா பொட்டு தோடுனு இல்லாம, காண்ட்ராஸ்டிங்கா போட்டுட்டு அழகா வந்திருக்கா. ஸ்டூல் போடாமா செருப்பு போட்டுறக்கறது இன்னும் அழகா இருக்கு.//

அடங்கப்பா......என்ன வர்ணனை டா சாமி.................................
ஹ்ம்ம்.....கலக்குங்க...!!!

வெட்டிப்பயல் said...

//விஜய் said...

கதை சூப்பரா போகுதே. பெங்களூரைக் கதைக்களமா வைத்து இன்னொரு கதை. வாழ்த்துக்கள். அதென்னங்க, நம்மூர் பசங்க சாப்பிடணும்னா கிருஷ்ணா கஃபே தான் கிடைச்சதா? அஞ்சப்பர் மெஸ், அடையார் ஆனந்த பவனெல்லாம் வந்தாச்சுங்க. சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க.

அன்புடன்,
விஜய்//

விஜய்,
என்ன பண்ண? நான் 2006 பிப் வரைக்கும் தான் இருந்தேன். அப்ப இருந்த பெங்களூரை வெச்சி ஒப்பேத்திட்டு இருக்கேன்...

சீக்கிரமே பெங்களூர் வருவேன்... அப்ப அடுத்த கதைக்கு நெட்டிவிட்டி இன்னும் நல்லா கொடுக்கலாம் :-)

வெட்டிப்பயல் said...

// தமிழினி..... said...

//அழகா சுடிதார் போட்டு, துப்பாட்டாவை எதுக்கு போடணுமோ அதுக்காக போட்டு, மேட்சிங் மேட்சிங்கா பொட்டு தோடுனு இல்லாம, காண்ட்ராஸ்டிங்கா போட்டுட்டு அழகா வந்திருக்கா. ஸ்டூல் போடாமா செருப்பு போட்டுறக்கறது இன்னும் அழகா இருக்கு.//

அடங்கப்பா......என்ன வர்ணனை டா சாமி.................................
ஹ்ம்ம்.....கலக்குங்க...!!!//

என் கதைல வர்ணனையே வராதுனு எல்லாரும் சொல்றதால வர்ணனை வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். இது தானாவே வந்துடுச்சு :-)