----------------------------------------------
இந்த சந்திப்பு இலக்கியத் தரமாக இல்லை என்று குற்றஞ்சாட்டி விடக்கூடாது என்பதற்காக, பதிவை இலக்கியத்தரமாக்கும் முயற்சியாக இரு கவிதைகள்:
சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் - எஸ்.பாபு : ஈ - தமிழ் | பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சந்திப்புகள்
பத்மா அரவிந்த் பாஸ்டன் வரப்போவதாக தெரிய வந்ததுதான் இந்த சந்திப்புக்கு கால்கோள். பத்மா அரவிந்தை சந்திக்க பலரும் பிரியப்படவே, அதையே பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பாக ஆக்கலாம் என்னும் எண்ணம் எழுந்தது.
பத்மா வரப்போகிறார் என்று அறிந்தவுடன் இந்த வார நட்சத்திரம் (வெட்டிப்பயல்) பாலாஜியை தொடர்பு கொண்டு, நத்தார் தினத்தை முன்னிட்டு வரவேற்பு கொடுக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்தேன். அங்கிருந்து வி.பி. பாலாஜி மற்ற ஒருங்கிணைப்புகளை முழுவதுமாக கவனித்துக் கொண்டார். நியூ ஜெர்சியில் இருந்து கண்ணபிரான் ரவி ஷங்கரை வரவழைத்தார். சந்திப்பு களை கட்டியது.
யாரெல்லாம் வந்திருந்தார்கள்?
1. தேன் துளி பத்மா அரவிந்த்
2. மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவி ஷங்கர்
3. வெயிலில் மழை ஜி
4. வெட்டிப்பயல் பாலாஜி
5. பாடும் நிலா பாலு! சுந்தர்
6. Navan's weblog நவன்
7. பார்வை மெய்யப்பன்
8. வேல்முருகன்
9. 'பிரக்ஞை' ரவி ஷங்கர்
10. அரை பிளேடு
கடைசி நேரத்தில் வர இயலாதவர்கள்:
1. Blogger: User Profile: சனியன்
2. வெற்றியின் பக்கம் வெற்றி
ஆத்திகம் எஸ்கே, செல்வன், சிகாகோவில் இருந்து தேன் சிறில் அலெக்ஸ், அட்லாண்டாவில் இருந்து சந்தோஷ்பக்கங்கள் சந்தோஷ் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துக்களைப் பகிர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாக டானிக்காகவும் இருந்தது.
என்ன பேசினோம்?
மதியம் 1 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், பின்னிரவு இரண்டு மணி வரை தொடர்ந்தது. இதனாலேயே பேசிய பலதும் மறந்து போகுமளவு ஆயிற்று. விளையாட்டுப் போட்டியை நேரடியாக, லைவ் ரிலேவாக ரசிப்பதுதான் சுகம். ஆடி முடித்து, முடிவு தெரிந்தபிறகு ஹைலைட்ஸ் பார்ப்பது பிடிக்கும் என்றாலும், ஆட்டத்தை, இருக்கை நுனியில் அமர்ந்து, நகம் பிய்த்துக் கொண்டு, ரீப்ளே கடுப்பாகி சுவைப்பது போல் வராது. வித்தியாசமான பந்துவீச்சுகளும், முக்கிய திருப்பங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடுவதில்தான் வல்லுநர் பார்வையே அடங்கியிருக்கிறது.
எனக்கு ஆரம்பத்தில் பேசின விஷயங்கள் மட்டுமே மனதில் நிற்கும் எனபதற்கேற்ப துவக்கத்தில் பிரக்ஞை ரவி பகிர்ந்த இரு கட்டுரைகளை சொல்லலாம்.
சோமாலியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுகிறார்கள். அன்னிய தேசம்; புரியாத மொழி. தங்கள் மொழி பேசுபவர்கள் மெயிண் (Maine) மாகாணத்தின் கிராமமொன்றில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு படையெடுக்கிறார்கள். ஏற்கனவே அங்கு வசிப்பவர்களும் சோமாலியர்கள்தாம் என்றாலும், அவர்கள் வேறொரு இனம். அவர்களை அடக்கியாண்ட இனத்தை சேர்ந்த அகதிகள் இப்போது தங்கள் மொழி பேசுபவர் அருகாமையை நாடி அந்த இடத்திற்கு அடைக்கலம் கோருகிறார்கள்.
ஏற்கனவே தங்களை அடக்கியாண்டவர்களுடன் என்ன உறவு வேண்டிக் கிடக்கிறது என்று ஒரு சாரார் கோபம் கொள்கிறார்கள். 'இவர்கள் அடிமைகளாக இருக்க வாய்க்கப்பட்டவர்கள்தானே... இப்படிப்பட்டவர்கள் இன்றைய சூழ்நிலையிலும் மேலோர் ஆகிய நமக்கு உதவ வேண்டும்' என்று காரசாரமான மாற்றுக் கருத்துடன் இன்னொரு சாரார்.
சமகாலப் பிரச்சினைகளுக்கு இது ஒரு தேர்ந்த ஒப்புமையாக இருக்கும் என்பதை நான் இங்கு எழுதியதை விட இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக விளக்கினார்.
பேச்சு சுவாரசியத்தில் அறிவார்ந்த முடிவெடுக்கும் திறனுக்கு திரும்பினோம். Rationale என்னும் பதமே கேள்விக்குறியது. வாழ்க்கையே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக artificial intelligence வல்லுநரும் அறிபுனை எழுத்தாளருமான எம்.ஐ.டி. பேராசிரியர் கருதுகிறார்.
'தண்ணீர் மேலே விழுந்தால் குடை பிடிக்க வேண்டுமா?' என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறது ரோபோ.
'ஆம்'
'மழைக்கு சரி. ஆனால், காலையில் நீங்களே பூத்துவாலைக்கடியில் போய் நிற்கிறீர்களே! அப்போதும் நான் குடை பிடிக்கத்தானே வேண்டும்?' மீண்டும் ரோபோவின் வினயமான லாஜிக்கலான கேள்வி.
சமீபத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தருவதற்கு முதியோரை விட இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைப்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. கிட்னி மாற்றினாலும், அறுவை சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்பு (இளமையை விடக்) குறைவு; மேலும் வாழ்ந்து முடித்தவர்கள் என்று rational-ஆக வயதானோரை தீர்த்துக் கட்டலாமா என்று விவாதம் சென்றது.
வலைப்பதிவுகள்
பெரும்பாலான பேச்சு இதை சுற்றியே அமைந்தது. பிடித்த வலைப்பதிவுகள் எது? ஏன் பிடிக்கிறது? எது பிடிக்கவில்லை?
எப்பொழுது படிப்பீர்கள்? எத்தனை நேரம் செலவிடுவீர்கள்? நண்பர் எழுதினால் படித்தே தீருவீர்களா? எப்படி 'அதிகம் பார்வையிடப்பட்டவை' ஆவது? எவ்வாறு வாசகர் பரிந்துரை நட்சத்திரங்களை ஏற்றுவது? பூங்கா, கில்லி பரிந்துரைகள் எவ்வாறு இருக்கிறது? புதிய பதிவர்களுக்கு உதவி எவ்வாறு கிடைக்கிறது?
வெளிப்படையாக எழுதுதல் அவசியமா? சாத்தியமா? வலைப்பதிவை எவ்வாறு மதிப்பிடுவது? எது சிறந்த பதிவாகக் கருதப்படும்? பார்வையாளர் எண்ணிக்கை முக்கியமா? பின்னூட்டங்களுக்கு மயங்கலாமா?
பதிவுகளில் என்ன எழுதுவது என்பது குறித்து எவருக்கும் சந்தேகங்கள் இல்லை.
பத்மா அரவிந்த்
சனி மாலையின் நட்சத்திர விருந்தினரான பத்மா மிகக் குறைவாகவே பேசினார். நல்ல எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், சிறப்பான மேடைப் பேச்சாளராக இருக்க வேண்டாம் என்பது போல், அவ்வப்போது சன்னமான குரலில் எண்ணங்களை ஓடவிட்டார்.
கேம்பஸ் இண்டர்வ்யூ நேர்காணலில் நடக்கும் க்ரூப் டிஸ்கசன் போன்ற அடிதடி சூழலில், கவர்ச்சிகரமான தலைப்புகளும், புரட்சிகரமான தடாலடிகளும் மேலெழுந்தது. இன்னும் கொஞ்சம் பத்மாவை கேள்வி கேட்டு, அனைவரின் வினாக்களும் பதிலளிக்குமாறு அமைத்திருக்கலாம்.
பிரக்ஞை ரவி
தேர்ந்த சினிமா விமர்சகர்; மானுடவியலாளர் என்பதற்கு ஒப்ப, பல இடங்களில் விவாதங்களை ஒழுங்குப்படுத்தினார். பெண் வலைப்பதிவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். அமெரிக்க இதழியலில் வெளிவரும் சினிமா விமர்சனங்களின் கூறுகளை சுவையாக விளக்கினார்.
'எந்த ஒரு ஊடகமுமே ஆரம்பத்தில் தரத்தை கொண்டிருப்பதில்லை; உச்ச நிலையையும் எளிதில் அடைவதில்லை' என்னும் கருத்து வலைப்பதிவுகளில் நிலவும் க்வாலிடி குற்றத்திற்கு சிறப்பான சமாதானமாக இருந்தது.
கண்ணபிரான் ரவி கேயாரெஸ்
விளையாட்டாக சென்ற தருக்கங்களையும் கிண்டல்களையும் பல இடங்களில் நேர்படுத்தினார். திடீரென்று உணர்ச்சிவேகமாகப் போய்விடும் தருணங்களில் ஸ்பாண்டேனியஸ் நகைச்சுவையால் இயல்பாக்கினார்.
என்று பல சேரியமான வித்துக்களைத் தூவி உரையாடலை உற்சாகமாக்கினார்.
மற்றவர்கள்
'வெயிலில் மழை' ஜி ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார். 'வெட்டிப்பயல்' பாலாஜி தன் கருத்துக்களை தெளிவாக முன்வைத்து ஜோராக உரையாடினார். கொஞ்சம் தாமதமாக வந்ததாலோ என்னவோ, நைட் வாட்ச்மேன் போன்று ஒரமாக நின்று கொண்டே 'பாடும் நிலா பாலு' சுந்தர் அமைதி காத்தார். அதிகம் வலைப்பதியாததால் ஒவர் ஹெட் ட்ரான்ஸ்மிஷன் ஆன சில நிகழ்வுகளை விழிப்புடன் நவன் கேட்டுக் கொண்டிருந்தார்.
'பார்வை' மெய்யப்பன் இன்னும் பல இடங்களில் தன் விரிவான வாசிப்பையும் பரந்துபட்ட அவதானிப்புகளையும் முன்வைத்திருக்கலாம் என்று எண்ணினேன். சபாநாயகராக வேல்முருகன் அதிகம் அறியாத தகவல்களை முன்வைத்து தன் கருத்துக்களை காரசாரமாக விவாதித்து சந்திப்புக்கு உரமூட்டினார். அரை பிளேடு பல மறுமொழிகளுடன் தருக்கங்களுக்கு பொருள் கூட்டினார்.
கேட்க மறந்த கேள்விகள்
ஏன் வலைப்பதிகிறோம்? எப்படி பதிவுகளை உருவாக்குகிறோம்? பதிவினால் என்ன சாத்தியாமாகும் என்று நம்புகிறோம்? வலைப்பதிவதால் என்ன கிடைக்கிறது? தொடக்கத்தில் கிட்டும் என்று நினைத்ததற்கும், தற்போதைய நிலைக்கும் உள்ள தூரம் என்ன? இன்றைய நிலையில் ஏன் தொடர்கிறோம்?
அடுத்த சந்திப்புகளில் கருத்தில் கொள்ள சில ஆலோசனைகள்
விவாதங்களை மூன்றாக பிரிக்கலாம். முதல் பகுதியில் அனைவரும் பங்கு கொள்ள அவசியம் வாய்ப்பு தரப்படும். கலந்துகொள்பவர்களின் கேள்விக்கு அனைவரும் தங்கள் எண்ணங்களைப் பகிர வேண்டும். ஒரு பதிவர் குறைந்தது ஒரு கேள்வியாவது கேட்க வேண்டும். ஒரு கேள்விக்காவது முதல் ஆளாக பதில் தர வேண்டும். ஆம்/இல்லை போன்று இல்லாமல் பதில்கள் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது பகுதியாக வலைப்பதிவு சுவாரசியங்கள்: என்னுடைய பதிவில் வந்த ரசமான பின்னூட்டம், அதிக மறுமொழிகள் பெறுவது, வார்ப்புரு மாற்றுவது, மறுமொழி பெறுவது போன்ற அவசியமான துப்புகள். சந்தேக விளக்கங்கள். பல காலமாக எழுதித் தள்ளுபவரின் அனுபவ ஆலோசனைகள்.
மூன்றாவதாக இலக்கியம், அரசியல், நாட்டுநடப்பு குறித்த விவாதங்கள்: கடந்த வருடத்தில் எந்தப் புத்தகம் முக்கியமானது? ரெஹ்மான் தமிழுக்கு துரோகம் இழைக்கிறாரா? ஈழம் குறித்து என்ன செய்கைகள் செய்யலாம்? எவ்வாறு நமது தொண்டு ஆர்வங்களை ஒருங்கிணைத்து பலப்படுத்தலாம்?
கடைசியாக...
என் மனைவிக்கு நன்றி.
எங்களின் ஆழ்ந்த வலைப்பதிவர் வாக்குவாதத்தின் நடுவே 'அடுத்து நான் என்னப்பா செய்யலாம்?' என்று குதித்த குழந்தையை மேய்த்தது; சமோசா, சல்ஸா என்று விதம் விதமாகப் பரிமாறியது; சந்திப்புக்கு உறுதுணையாக நின்று, உவகையுடன் செயல்பட்டது. நன்றிகள் பல!
அடுத்து...
விட்டதை பங்கு கொண்ட மற்றவர்கள் தங்கள் பார்வையில் பகிர வேண்டும். நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்.
- பாலாஜி
பாஸ்டன்
36 comments:
ரொம்ப நாளா எதிர்பார்த்துக்கொண்டு இருந்த பதிவு. நல்லபடியா சந்திப்பு நிகழ்ந்தது என்று அறிந்த பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.
//நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்.//
எப்போ போடலாம்? :))
நல்ல படியா நடந்திருக்குங்க உங்க வலைப்பதிவர் சந்திப்பு. அதை நல்லாவே படம்பிடிச்சு காட்டியிருக்கீங்க. நன்றி பாலாஜி & பாலாஜி.
//சந்தோஷ் said...
ரொம்ப நாளா எதிர்பார்த்துக்கொண்டு இருந்த பதிவு. நல்லபடியா சந்திப்பு நிகழ்ந்தது என்று அறிந்த பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. //
சந்தோஷ்,
மன்னிச்சிடுங்க.. திரும்ப கூப்பிட முடியாம போயிடுச்சு.. இந்த வார இறுதில கூப்பிடறேன்...
//இலவசக்கொத்தனார் said...
//நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்.//
எப்போ போடலாம்? :)) //
கொத்ஸ் ரெடினா எப்ப வேணாலும் :-)
//குமரன் (Kumaran) said...
நல்ல படியா நடந்திருக்குங்க உங்க வலைப்பதிவர் சந்திப்பு. அதை நல்லாவே படம்பிடிச்சு காட்டியிருக்கீங்க. நன்றி பாலாஜி & பாலாஜி. //
மிக்க நன்றி குமரன்...
இன்னும் நான் என்னுடைய பார்வையில ஒரு பதிவு போடணும் :-)
//விட்டதை பங்கு கொண்ட மற்றவர்கள் தங்கள் பார்வையில் பகிர வேண்டும். நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்//
ஆகா! வாங்க!
அலை கடல் எனத் திரண்டு வருக!
பத்மா, கொத்ஸ்
தூள் கிளப்பிடலாம்; என்ன சொல்றீங்க! :-)
நன்றி பாலாஜி & பாலாஜி.//
இல்லை குமரன்.நன்றி பாலாஜி & பாலசுப்ரமணியம்:-)
பீட்டாவுக்கு ஏன் மாறினேன்னு பேட்டாவாலயே அடிச்சுக்கலாம் போலருக்கு. பின்னூட்டம் போடுறதுலயும் பிரச்சினை. நிற்க.
தாமதமான வருகைக்கு மன்னிக்க. தவிர்க்க இயலாத காரணங்கள்.
எல்லாம் ரவுண்டு கட்டி ஒக்காந்திருந்ததப் பாத்து எங்க பாடச்சொல்லி ரவுண்டுகட்டிருவீங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தது எனக்குத்தானே தெரியும்.
சாப்பாடு தூள்!
நான் லேட்டா வந்ததால நெறய விட்டுப்போச்சு. இருந்தாலும் மக்கள்ளாம் அருமையாப் பேசினாங்க. கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலருந்தது.
வேணும்ன்ட்டே போட்டோல்லாம் மங்கலா எடுத்ததைக் கண்டிக்கறேன் :-)
அடுத்த தடவை இன்னும் திட்டமிட்டு நல்லாப் பண்ணலாம்.
நன்றி.
//சமோசா, சல்ஸா என்று விதம் விதமாகப் பரிமாறியது;//
பாபா, இப்படிச் சுருக்கமா சொன்னா எப்படி?
கொஞ்சம் இலக்கியத் தரமாக நீட்டி முழக்கிச் சொன்னாத் தானே உணவின் வாசனை பாஸ்டனில் இருந்து சென்னையை எட்டும்? :-))
தட்டு நிறைய வெள்ளைப் பொன் முறுவல் சமோசா
வடிவான கிண்ணத்தில் நாசோஸ், சால்சா, மிளகாய்ச் சட்னி
கோப்பையில் கோலாகல ? (அரைபிளேடு, ஜீ..என்னங்க அது? :-)
இரவுப் பெரு விருந்து...இந்த லிஸ்டை நம்ம நட்சத்திரம் வந்து சொல்லட்டும்!
திகட்டாத டிசர்ட்
ரசனை உள்ள ரசகுல்லா
ஆகா ஒகோ!...
நன்றி திருமதி பாலா!
செவிக்கு உணவு என்று பாபாவைப் போல் டபாய்க்காமல், அருமையான விருந்துணவு! குழந்தைக்கும் நன்றி!
சந்திப்பு நல்ல விதமாக நடந்திருக்கிறது. பதிவுக்கு நன்றி.
சந்தித்த பத்துப் பேர்களும்
சேர்ந்து பகைப்படம் எடுத்துக்
கொண்டீர்களா - இல்லையா?
வெட்டி,
நடந்த ஒன்றுகூடலை மிகவும் சுவையாகச் சொல்லியிருந்தீர்கள். ஒன்றுகூடல் நடந்த வார இறுதியில் நான் New York இல் இருந்தேன். அங்கே குறுகிய காலத்தில் பல அலுவல்களை முடிக்க வேண்டி இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு நல்ல ஒன்று கூடலில் பங்கு பற்றி , நல்ல பண்பாளர்களைச் சந்திக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், இன்னுமொரு ஒன்றுகூடலில் இப் பண்பாளர்களைச் சந்திக்கலாம் எனும் நம்பிக்கையில் மனம் ஆறுதலாக இருக்கிறது.
மிக்க நன்றி.
//ஒன்றுகூடல் நடந்த வார இறுதியில் நான் New York இல் இருந்தேன்//
அடுத்த முறை வரும் போது மறக்காம சொல்லுங்க வெற்றி! சந்திக்கலாம்! சிந்திக்கலாம்!
பந்திக்கும் முந்திக்கலாம்! :-)
நியூஜெர்சி மாநாட்டுக்கு உங்களுக்கு இப்பவே அழைப்பு வைச்சிட்டேன்! :-))
நள்ளிரவில் கண்கள் 'பனி'க்க விடைபெற்றீர்களா? :))
போட்டோ எங்கே??
---சந்தித்த பத்துப் பேர்களும்
சேர்ந்து பகைப்படம் எடுத்துக்
கொண்டீர்களா ---
ஓ... எடுத்துக் கொண்டோமே... 36 ஃபிலிம் கொண்ட சுருளில் பாக்கி சில இருப்பதால், எடுத்து முடித்தவுடன், டெவலப் செய்து வெளியிடப் போவதாக நண்பர் வாக்குறுதி கொடுத்தார்.
இதைப் படிக்கும் அன்பர்கள் உடனடியாக எனக்கு தோயல் ஒளிக்கூட்டை அஞ்சல் செய்யுமாறு பணிக்கப்படுகிறார் : )
---நான் என்னுடைய பார்வையில ஒரு பதிவு போடணும் ---
போன பதிவு அதைப் பற்றிதான் என்று நினைத்தேன் ; )
---அலை கடல் எனத் திரண்டு வருக!---
போன தடவை இப்படித்தான் அறிவிப்பு வைத்திருந்தோம். பாஸ்டன் சந்திப்பு முடிந்த அடுத்த நாள், சென்னையில் நிஜ சுனாமி சோகம் நிகழ்ந்தது. அந்த மாதிரி கடலன்னை பொங்கி வந்துடப் போறாங்க
(காமெடியானப் பின்னூட்டத்தை சேரியமாக்குவது எப்படி என்று வி.பி. எழுதுவாரா : )
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//விட்டதை பங்கு கொண்ட மற்றவர்கள் தங்கள் பார்வையில் பகிர வேண்டும். நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்//
ஆகா! வாங்க!
அலை கடல் எனத் திரண்டு வருக!
பத்மா, கொத்ஸ்
தூள் கிளப்பிடலாம்; என்ன சொல்றீங்க! :-) //
ஆரம்பிச்சிட்டீங்களா???
நடத்துங்க நடத்துங்க...
//கோப்பையில் கோலாகல ? (அரைபிளேடு, ஜீ..என்னங்க அது? :-)//
அது புதுவிதமான சூப். பல காய்கறிகள் போட்ட சூப். எல்லாமே வெஜ் ஐட்டமா இருந்ததால நமக்கு பேர் தெரியாம போயிடிச்சி.
சாப்பாட்டப் பத்தி சுருங்க சொல்லனும்னா
'கல்யாண வீட்டு
சமையல்கட்டு...'
//செல்வன் said...
நன்றி பாலாஜி & பாலாஜி.//
இல்லை குமரன்.நன்றி பாலாஜி & பாலசுப்ரமணியம்:-) //
செல்வன்,
யாருங்க அந்த பாலசுப்ரமணியம்???
//சுந்தர் said...
பீட்டாவுக்கு ஏன் மாறினேன்னு பேட்டாவாலயே அடிச்சுக்கலாம் போலருக்கு. பின்னூட்டம் போடுறதுலயும் பிரச்சினை. நிற்க.
//
நீங்களும் மாறியாச்சா?
சீக்கிரமே நாங்களும் மாற வேண்டியதிருக்கும்னு நினைக்கிறேன்...
// தாமதமான வருகைக்கு மன்னிக்க. தவிர்க்க இயலாத காரணங்கள்.
எல்லாம் ரவுண்டு கட்டி ஒக்காந்திருந்ததப் பாத்து எங்க பாடச்சொல்லி ரவுண்டுகட்டிருவீங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தது எனக்குத்தானே தெரியும்.
//
ஏற்கனவே வாக்கு கொடுத்ததால விட்டாச்சு ;)
//
சாப்பாடு தூள்!
//
ரொம்ப சரி...
//
நான் லேட்டா வந்ததால நெறய விட்டுப்போச்சு. இருந்தாலும் மக்கள்ளாம் அருமையாப் பேசினாங்க. கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலருந்தது.
//
ஆமாங்க... நீங்களும் கடைசியா களமிறங்கினாலும் பட்டைய கிளப்பினீங்க :-)
//
வேணும்ன்ட்டே போட்டோல்லாம் மங்கலா எடுத்ததைக் கண்டிக்கறேன் :-)
அடுத்த தடவை இன்னும் திட்டமிட்டு நல்லாப் பண்ணலாம்.
நன்றி. //
அடுத்த தடவை பட்டையை கிளப்பிடலாம் :-)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சமோசா, சல்ஸா என்று விதம் விதமாகப் பரிமாறியது;//
பாபா, இப்படிச் சுருக்கமா சொன்னா எப்படி?
கொஞ்சம் இலக்கியத் தரமாக நீட்டி முழக்கிச் சொன்னாத் தானே உணவின் வாசனை பாஸ்டனில் இருந்து சென்னையை எட்டும்? :-))
தட்டு நிறைய வெள்ளைப் பொன் முறுவல் சமோசா
வடிவான கிண்ணத்தில் நாசோஸ், சால்சா, மிளகாய்ச் சட்னி
கோப்பையில் கோலாகல ? (அரைபிளேடு, ஜீ..என்னங்க அது? :-)
இரவுப் பெரு விருந்து...இந்த லிஸ்டை நம்ம நட்சத்திரம் வந்து சொல்லட்டும்!
திகட்டாத டிசர்ட்
ரசனை உள்ள ரசகுல்லா
ஆகா ஒகோ!...
நன்றி திருமதி பாலா!
செவிக்கு உணவு என்று பாபாவைப் போல் டபாய்க்காமல், அருமையான விருந்துணவு! குழந்தைக்கும் நன்றி! //
அந்த லிஸ்ட் தானே...
மதியம் சாப்பிட்டதா? இல்லை இரவு சாப்பிட்டதா??? ;)
// Anonymous said...
சந்திப்பு நல்ல விதமாக நடந்திருக்கிறது. பதிவுக்கு நன்றி. //
மிக்க நன்றி நண்பரே...
//SP.VR.சுப்பையா said...
சந்தித்த பத்துப் பேர்களும்
சேர்ந்து புகைப்படம் எடுத்துக்
கொண்டீர்களா - இல்லையா? //
ஐயா,
புகைப்படம் எடுத்து கொண்டோம்...
ஆனால் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை...
//அந்த லிஸ்ட் தானே...
மதியம் சாப்பிட்டதா? இல்லை இரவு சாப்பிட்டதா??? ;)//
இரண்டுமே சொல்லுப்பா! சொல் சொல் சொல்!
//ஜி said...
//கோப்பையில் கோலாகல ? (அரைபிளேடு, ஜீ..என்னங்க அது? :-)//
அது புதுவிதமான சூப். பல காய்கறிகள் போட்ட சூப்.//
கோப்பையிலே என் குடியிருப்புன்னு சொல்லுவீங்கன்னு பாத்தா ஜீ, இப்படிச் சூப் என்று சொல்லி கவுத்துட்டீங்களே!....
ஜீ, நான் கேட்டது,
பிளாஸ்டிக் டம்ப்ளரில்
"பக்குவமாய்" வந்ததே,
அது! அது! :-))
//ஜீ, நான் கேட்டது,
பிளாஸ்டிக் டம்ப்ளரில்
"பக்குவமாய்" வந்ததே,
அது! அது! :-)) //
ஓ அதுவா? அது பேரு எனக்கும் தெரியாதே!!!...
//விட்டதை பங்கு கொண்ட மற்றவர்கள் தங்கள் பார்வையில் பகிர வேண்டும்.//
தாங்ஸ் பாலா, வெட்டி, கண்ணபிரான் மற்றும் கலந்துக்கொண்ட எல்லாருக்கும்.
எயுதிக்னே இருக்கோம்... கூடிய சீக்கிரத்துல ரிலீஸ்...
---பிளாஸ்டிக் டம்ப்ளரில்
"பக்குவமாய்" வந்ததே,---
: )
; )
(இதற்குப் பெயர் கண்ணால் பேசுவது : P )
ரிலீஸ்டு...
பாஸ்டன் வலைபதிவர் சந்திப்பில் அரைபிளேடு
Boston பாலா,
/* இதைப் படிக்கும் அன்பர்கள் உடனடியாக எனக்கு தோயல் ஒளிக்கூட்டை அஞ்சல் செய்யுமாறு பணிக்கப்படுகிறார் : ) */
தோயல் ஒளிக்கூடு என்றால் என்னய்யா? film சுருளைச் சொல்லுறீங்களா?
கண்ணபிரான் ரவிசங்கர்,
/* அடுத்த முறை வரும் போது மறக்காம சொல்லுங்க வெற்றி! சந்திக்கலாம்! சிந்திக்கலாம்!
பந்திக்கும் முந்திக்கலாம்! :-)
நியூஜெர்சி மாநாட்டுக்கு உங்களுக்கு இப்பவே அழைப்பு வைச்சிட்டேன்! :-)) */
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. நியூ ஜெர்சி மாநாடு(?) எப்போ வைக்க திட்டமிட்டிருக்கிறீங்கள்?
Digital camera - தோயல் ஒளிக்கூடு
வேறு நல்ல சொல்லாக்கம் இருந்தால் அவசியம் சொல்லுங்க!
//புகைப்படம் எடுத்து கொண்டோம்...
ஆனால் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை...//
ஆமாங்க. சாப்பிடும்போது ஒரு பருக்கைகூடா தட்டுல மிச்சம் வைக்காமச் சாப்பிடற ஆள் நான். அன்னிக்குப் பாத்து அமர்களமா இருந்த சாப்பாடு எல்லாத்தையும் ஒரு கை பாத்துட்டோம்.
இளைஞர்களா காட்டிக்கணும்ங்கறதுக்காக மூச்சை அடக்கி தொப்பை தெரியாம போட்டோவுக்கு நின்னாலும் கேமரா களுதைக்கு அதெல்லாம் தெரியுமா. காட்டித் தள்ளிடுச்சி. அந்தக் கோராமைய நீங்களும் பாத்துக் கஷ்டப்பட வேணாம்னுதான... ஹிஹி.
//Digital camera - தோயல் ஒளிக்கூடு
//
தோயல்னா என்னவோ துவையல் மாதிரி தோணுதே! :-(
பிலிம் ரோல் போட்டு எடுக்கறது புகைப்படக் கருவி
மின்னணுப் பதிவா படம் எடுக்கறத மின்படக் கருவி! :-)
வளவு: Digital - 1
Post a Comment