தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, December 13, 2006

நெல்லிக்காய் - 9

தீபா கண் திறந்து பார்க்கும் போழுது அழுது அழுது வீங்கிய அவள் அம்மாவின் முகமே அவள் கண்களில் முதலில் பட்டது. அவள் அருகில் ராஜி அமர்ந்திருந்தாள். அருணையோ, கார்த்திக்கையோ அங்கு காணவில்லை.

அவள் மெதுவாக அம்மா என்று கூப்பிட்டதை கேட்டு இருவரும் அவளை பார்த்து மகிழ்ச்சியும் பதற்றமும் நிறைந்த நிலையில் அவள் அருகில் வந்தனர்.

"அம்மா, தங்கம்! நாங்க பேசறது உனக்கு கேக்குதாமா?" அவள் அம்மா பரிதாபமாக கேட்டாள்.

ஏற்கனவே பல முறை கண் திறந்தும் மயக்க நிலையிலே இருந்தாள் தீபா. அதனால் அவள் அம்மா அவள் குரலை கேட்டதும் மகிழ்ச்சியுற்றாள்.

"கேக்குதும்மா! அருணுக்கு என்னாச்சு? அவனுக்கு ஒண்ணுமாகலையே?" திக்கி திணறி கேட்டாள் தீபா

"இல்லைமா. அந்த தம்பிக்கு ஒண்ணுமாகலை. உனக்கும் இனிமே எந்த பிரச்சனையுமில்லைனு டாக்டர் சொல்லிட்டாரு. ஒரு வாரத்துல நம்ம வீட்டுக்கு போயிடலாம்டா சாமி. உனக்கு எதுவும் வலிக்குதாடா?"

"பேசனா வலிக்குதும்மா"

"தலைல அடிப்பட்டதால கட்டு போட்ருக்காங்கடா. அதனால அப்படித்தான்டா இருக்கும். இன்னும் ஒரு ரெண்டு நாள்ல சரியாப் போயிடும்னு டாக்டர் சொல்லியிருக்காருடா. நீ பேசாமா தூங்கு சாமி"

சொல்லிவிட்டு அவள் அம்மா டாக்டரை கூப்பிட சென்றாள்.

"ராஜி! அருண் எங்க?"

"அவன் காலைல இருந்து இங்க தான் இருந்தான். ஒரு வாரம் முழுக்க அவன் லீவ் போட்டு காலைல இருந்து சாயந்தரம் வரைக்கும் அம்மாக்கூடத்தான் இருக்கான். சாயந்தரமானா நான் வந்தவுடனே அவன் போயிடுவான்"

"ராஜி அவனை கஷ்டப்பட வேண்டாம்னு சொல்லு. அவன் வேண்டாம்னு சொல்லியும் நான் தான் வண்டில போகலாம்னு சொன்னேன். நாளைக்கு காலைல அவன் வரும் போழுது நான் முழிச்சிட்டு இருப்பனானு தெரியாது. இப்பவே நான் அவன்ட ஒரு வார்த்தை பேசிடறதா?"

"வேணாம்பா. நீ தூங்கு. அவன்ட நான் சொல்லிக்கறேன்"

"சரி மறக்காம சொல்லிடு" சொல்லிவிட்டு மீண்டும் கண்ணசந்துவிட்டாள்.

அடுத்த இரண்டு நாட்களில் அவளால் நன்றாக பேச முடிந்தது.அருணோடு தனியாக பேசும் சந்தர்ப்பங்களே அவளுக்கு அமையவில்லை. பெரும்பாலும் அவள் அம்மா அங்கே இருந்ததால் அவளால் எதுவும் பேச முடியவில்லை. அப்போழுது அவள் அம்மா ஊரிலிருக்கும் மாமாவிற்கு போன் செய்ய வெளியே போனாள். சரியாக அந்த நேரம் பார்த்து அங்கே வந்து சேர்ந்தான் அருண்.

"தீபா! ஹவ் ஆர் யூ ஃபீலிங் நவ்? தெரியாம அந்த மாதிரி ஆயிடுச்சு. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி"

"உனக்கெல்லாம் எவன் லைசன்ஸ் கொடுத்தான். நேரா போயி லாரில விட்டுட்டு என்ன ஸாரி பூரினு சொல்லிட்டு இருக்க?"

"என்னது நான் தப்பா லாரில விட்டனா? அவன் ராங் சைட்ல வந்தான்"

"லாரினா ராங் சைட்ல தான் வருவான். நீ தான் பார்த்து ஓட்டணும்."

"இந்த கதை நல்லா இருக்கு. உன்னைய நேரா போயி விட்ருக்கணும். என் தப்புதான்"

"முதல்ல வண்டில ஒரு அழகான பொண்ண ஏத்திட்டு போகும் போது, நிதானமா ஓட்டணும்னு தெரியனும்"

"தீபா! மண்டைல அடிப்பட்டதால உனக்கு பழசெல்லாம் மறந்து போச்சினு நினைக்கிறேன். அழகான பொண்ணுனு யாரப்பத்தியோ பேசிக்கிட்டு இருக்க. நான் வண்டில ஏத்திட்டு போனது உன்னயத்தான்"

"நக்கலா? நான் அழகா, இல்லையானு போய் உனக்கு பக்கத்து க்யூபிக்கல்ல உக்கார்ந்திருப்பானே ராஜிவ். அவனை போயி கேட்டு பாரு"

"நான் அவனை கேக்கறது இருக்கட்டும் முதல்ல நீ ஒழுங்கா கண்ணாடிய பாரு. போதும்"

அந்த நேரம் பார்த்து அவள் அம்மா சரியாக வந்து சேர்ந்தாள்.

"என்ன தம்பி ஏதோ கண்ணாடினு சொல்லிட்டு இருந்தீங்க போலருக்கு"

"அது ஒண்ணுமில்லை ஆண்ட்டி! ஆக்ஸிடெண்ட்ல கண்ணுக்கு ஏதாவது பிரச்சனையாயிருக்குமா? கண்ணாடி போடனுமானு கேட்டா. நான் அதெல்லாம் தேவையில்லைனு சொல்லிட்டு இருந்தேன்"

"ஏன் கண்ணு... எல்லாம் நல்லா தெரியுது இல்லை. ஏதாவது மங்களா தெரியுதா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைமா. சும்மா தான் கேட்டேன்"

"ஏன் தம்பி, உங்களுக்கு இத்தனை நாள் லீவு எப்படி கொடுத்தாங்க?"

"அது ஒண்ணுமில்லைங்க ஆண்ட்டி. ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சினு மெடிக்கல் லீவு போட்டுட்டேன்"

மெடிக்கல் லீவ் என்று ஒரு லீவே இல்லையென்று தீபாவிற்கு நன்றாக தெரிந்திருந்தது. அருண் சம்பளமில்லாத விடுமுறையில் (லாஸ் ஆப் பே) இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.

"அம்மா, நான் தான் இப்ப நல்லா ஆயிட்டனே. இதுக்கு மேல இங்க துணைக்கு ஒரு ஆள் வேணுமா?"

அருணுக்கு அவள் சொல்லியது நன்றாக புரிந்தது.

"ஆமாமா. இந்த தம்பிக்கு தான் ரொம்ப கஷ்டத்த கொடுத்துட்டோம். தம்பி நீங்க எதுக்கு தம்பி இனிமே கஷ்டப்பட்டுக்கிட்டு. நானே பாத்துக்கறம்பா. அவ வேற கஷ்டப்படறா"

"இன்னும் ரெண்டு நாள் தானே ஆண்ட்டி. அதனால ஒண்ணும் பிரச்சனையில்லை. நீங்க இங்க இருக்கற வரைக்கும் கூட இருந்து பாத்துக்கிட்டோம்னு ஒரு திருப்தி இருக்கும். அதனால தான். அதுவும் இல்லாம நான் ஏற்கனவே லீவுக்கு சொல்லிட்டேன். இனிமே ஆபிஸிம் போக முடியாது" ஒரு வழியாக சமாளித்தான் அருண்.

"சரிப்பா. நீ இருக்கறதும் ஒரு துணைக்கு நல்லாதான் இருக்கு. எங்க ஊர்னா என் தம்பி எப்படியும் ஏன் கூடவே இருப்பான். இவ அப்பாரு மட்டும் இந்நேரமிருந்தா இவளை ராணி மாதிரி பாத்துக்குவாரு" சொல்லிவிட்டு லேசாக கண் கலங்கினாள்.

இரண்டு நாளும் அவளுடனே இருந்தான் அருண்.அவளை டாக்டர் பதினைந்து நாட்கள் வீட்டில் நன்றாக ரெஸ்ட் எடுக்குமாறு கூறியிருந்தார்.

தீபாவிற்கு இப்படியானதற்கு தன் கவனக்குறைவே காரணமென்று அருண் மிகவும் கவலைப்பட்டு கொண்டிருந்தான். தினமும் அவளுக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தான். பாதி நேரம் அவர்கள் பேச்சு சண்டையிலே முடிந்தது. இருந்தாலும் அடத்த நாள் யாராவது ஒருவர் மற்றவரை அழைத்து பேசி கொண்டிருந்தனர்.

ஒரு வாரம் முடிந்த நிலையில் வார இறுதி நாளில் வெளியே சென்றிருந்த கார்த்திக் வீட்டிற்குள் வந்து நேராக கட்டிலில் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தை பார்த்து அருண் திடுக்கிட்டான்.

(தொடரும்...)

அடுத்த பகுதி

67 comments:

கதிர் said...

first?

Divya said...

ஆஹா வெட்டி கதை சூப்பரா போகுது,

தீபா க்கு உடம்பு சரியானது சந்தோஷமே,
சஸ்பன்ஸோட முடிச்சிருக்கிறீங்க, சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க வெட்டி ,ஆவலுடன் வெயிடிங்.........

Divya said...

நான் தான் முதல் கமண்ட்.....வாவ்!!!

ஆஸ்பத்திரியிலும் அவங்க சண்டை போட்டுக்கிறது சூப்பர்!
வழக்கம்போல் உரையாடல்கள் அனைத்தும் ரொம்ப யதார்த்தம் , பாராட்டுக்கள் வெட்டி!!

G3 said...

Ellavaatiyum chamatha padichittu poiduven.. indha vaati commentaama irukka mudiyala.

//தீபா கண் திறந்து பார்க்கும் போழுது//

Kanden seethaiyainnu aanjaneyar raamar kitta sonna effectla irundhudhu.. indha linea padichappo :)

habbada moochu vidaradhukkkulla adutha suspensea? Paavanga naanga.. :(

கதிர் said...

இந்த பகுதிதாம்பா டச்சிங்கா இருக்கு.
ரெண்டு பேரும் பேசுற வசனங்கள் பச்சக்குன்னு
மனசுல ஒட்டிக்கிச்சு. சூப்பர்.

//அந்த தம்பிக்கு ஒண்ணுமாகலை.//

//"என்ன தம்பி ஏதோ கண்ணாடினு சொல்லிட்டு இருந்தீங்க போலருக்கு"//

//சரிப்பா. நீ இருக்கறதும் ஒரு துணைக்கு நல்லாதான் இருக்கு. எங்க ஊர்னா என் தம்பி எப்படியும் ஏன் கூடவே இருப்பான்.//

அம்மான்னா இவங்கதான் அம்மா எப்படி
நேர்க்குத்தா பேசிட்டாங்க!
அப்பால என்ன டும் டும் டும்தான்!

G.Ragavan said...

என்னய்யா இது...போன வாரம் தீபாவோட அம்மா அழுதாங்க..இந்த வாட்டி கார்த்திக். ஏன்? ராஜிக்கு வேற எடத்துல மாப்பிள்ளை பாத்துட்டாங்களா? அதுக்காக மூசுமூசுன்னு உக்காந்து அழுகுறதா? இதில்லைன்னா இன்னொன்னு.

Unknown said...

வெட்டி இந்த எபிசோட் நல்லாப் போச்சுப்பா.. ஆனா கொஞ்சம் கதையை இழுக்கற மாதிரி தெரியுது...

dubukudisciple said...

என்ன வெட்டியாரே...
ஏதோ வெட்டியா எழுதுவீஙனு பார்த்தா சூப்பரா எழுதி இருக்கிங்களே... கலக்குங்க..
என்ன இது எப்போ பார்த்தாலும் சண்டை போட்டா எப்படி...
சீக்கிரம் சமாதானம் பண்ணி சேர்த்து வைங்க...

Anonymous said...

//"தீபா! மண்டைல அடிப்பட்டதால உனக்கு பழசெல்லாம் மறந்து போச்சினு நினைக்கிறேன். அழகான பொண்ணுனு யாரப்பத்தியோ பேசிக்கிட்டு இருக்க. நான் வண்டில ஏத்திட்டு போனது உன்னயத்தான்"//

இருந்தாலும் அருணுக்கு இம்புட்டு லொள்ளு கூடாது! :)

//பாதி நேரம் அவர்கள் பேச்சு சண்டையிலே முடிந்தது. இருந்தாலும் அடத்த நாள் யாராவது ஒருவர் மற்றவரை அழைத்து பேசி கொண்டிருந்தனர்.//

இது தான்யா லவ்வுன்றது!!

//ஒரு வாரம் முடிந்த நிலையில் வார இறுதி நாளில் வெளியே சென்றிருந்த கார்த்திக் வீட்டிற்குள் வந்து நேராக கட்டிலில் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தை பார்த்து அருண் திடுக்கிட்டான்.//

ஒவ்வொரு பகுதியிலும் அருணோடு சேர்த்து எங்களுக்கும் B.P. ஏறுது.. வெட்டி! கலக்கற மச்சி..

Anonymous said...

முரட்டுக் காதல் னு இதுக்கு தலைப்பு வச்சிருக்கலாம். இன்னும் எத்தினி நாளு....

// தம்பி said...
அம்மான்னா இவங்கதான் அம்மா எப்படி
நேர்க்குத்தா பேசிட்டாங்க!
அப்பால என்ன டும் டும் டும்தான்! //

தம்பி. தீபாவோட அம்மா, தம்பின்னு சொன்னது அருண்ன, உங்கள இல்ல. ஏதொ உங்கள சொன்ன மாதிரி சந்தோஷப் படுறிய... :)

கைப்புள்ள said...

வழக்கம் போல சூப்பர். நெக்ஸ்ட்....எப்போ?

Anonymous said...

//ஒரு வாரம் முடிந்த நிலையில் வார இறுதி நாளில் வெளியே சென்றிருந்த கார்த்திக் வீட்டிற்குள் வந்து நேராக கட்டிலில் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தை பார்த்து அருண் திடுக்கிட்டான்.//

ஆஹா..திரும்பவும் சஸ்பென்ஸா!!
waiting for ur next post ;-)

மு.கார்த்திகேயன் said...

நெல்லிக்காய் உருவாகிக் கொண்டிருப்பதாக நேற்று தான் படித்தேன் உங்கள் ஸ்டேட்டஸில் இப்போது.. சாப்பிடவே போறேன்..வெட்டிப்பயலே

கப்பி | Kappi said...

கலக்கலா போயிட்டிருக்கு..போட்டுத் தாக்குங்க ;)

Anonymous said...

Going great so far. Please DO NOT end the story in next few episodes.

- Unmai

Arunkumar said...

வழக்கம்போல யதார்த்தமான உரையாடல்கள்... கொஞ்ச சீக்கிரமா அடுத்ததையும் போடுங்க... வெயிட்டிங்ங்ங்ங்ங்ங்ங்...

கதிர் said...

//தம்பி. தீபாவோட அம்மா, தம்பின்னு சொன்னது அருண்ன, உங்கள இல்ல. ஏதொ உங்கள சொன்ன மாதிரி சந்தோஷப் படுறிய... :)//

ஜி,

நான் எனக்கு சொல்லலியே ஜி, அருணுக்குதான் சொன்னேன். இந்த உலகத்தில ஒரே ஒரு ஆளத்தவிர எல்லாருமே எனக்கு அக்கா, தங்கச்சிதான். :))

இராம்/Raam said...

பாலாஜி,

இந்த பாகம் ரொம்ப நல்லாயிருக்குப்பா...

அப்பிடியே மெயிண்டேண் பண்ணி கொண்டு போ.... :-)))))

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

first? //

ஆமாம்பா...
ரொம்ப நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//Divya said...

ஆஹா வெட்டி கதை சூப்பரா போகுது,

தீபா க்கு உடம்பு சரியானது சந்தோஷமே,
சஸ்பன்ஸோட முடிச்சிருக்கிறீங்க, சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க வெட்டி ,ஆவலுடன் வெயிடிங்......... //

மிக்க நன்றி திவ்யா...
சீக்கிரமே போடறேன் :-)

நாமக்கல் சிபி said...

//Divya said...

நான் தான் முதல் கமண்ட்.....வாவ்!!!
//
தம்பி முதல்ல வந்துட்டாரே!!!

// ஆஸ்பத்திரியிலும் அவங்க சண்டை போட்டுக்கிறது சூப்பர்!
வழக்கம்போல் உரையாடல்கள் அனைத்தும் ரொம்ப யதார்த்தம் , பாராட்டுக்கள் வெட்டி!! //
மிக்க நன்றி திவ்யா!!!

நாமக்கல் சிபி said...

//G3 said...

Ellavaatiyum chamatha padichittu poiduven.. indha vaati commentaama irukka mudiyala.
//
சமத்தா படிச்சிட்டு போயிடுவீங்களா? இது அநியாயம் :-)
படிச்சா ஒரு கமெண்ட் கண்டிப்பா போடணும் ;)

// //தீபா கண் திறந்து பார்க்கும் போழுது//

Kanden seethaiyainnu aanjaneyar raamar kitta sonna effectla irundhudhu.. indha linea padichappo :)

habbada moochu vidaradhukkkulla adutha suspensea? Paavanga naanga.. :(

1:39 PM, December 13, 2006 //

தீபா கஷ்டப்படறதெல்லாம் சொல்ல விரும்பல :-(

சஸ்பென்ஸ் இருந்தா தானே சீக்கிரம் வருவீங்க ;)

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

இந்த பகுதிதாம்பா டச்சிங்கா இருக்கு.
ரெண்டு பேரும் பேசுற வசனங்கள் பச்சக்குன்னு
மனசுல ஒட்டிக்கிச்சு. சூப்பர்.
//
அப்ப இதுக்கு முன்னாடி எதுவும் நல்லா இல்லையா? ;)

//அம்மான்னா இவங்கதான் அம்மா எப்படி
நேர்க்குத்தா பேசிட்டாங்க!
அப்பால என்ன டும் டும் டும்தான்!//
அப்படிங்கற???

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

என்னய்யா இது...போன வாரம் தீபாவோட அம்மா அழுதாங்க..இந்த வாட்டி கார்த்திக். ஏன்? ராஜிக்கு வேற எடத்துல மாப்பிள்ளை பாத்துட்டாங்களா?
//
அடுத்த பகுதியில் பார்க்க ;)

//
அதுக்காக மூசுமூசுன்னு உக்காந்து அழுகுறதா? இதில்லைன்னா இன்னொன்னு. //
அவனவன் கஷ்டம் அவனவனுக்கு தான் தெரியும்...

நாமக்கல் சிபி said...

//Alien said...

The story is going on nicely. Hope you will keep it up till the end. Thanks. //

Thx a lot Alien...
please keep visiting...

நாமக்கல் சிபி said...

//தேவ் | Dev said...

வெட்டி இந்த எபிசோட் நல்லாப் போச்சுப்பா.. ஆனா கொஞ்சம் கதையை இழுக்கற மாதிரி தெரியுது... //

மிக்க நன்றி தேவ்...
எனக்கு என்னுமோ கொஞ்சம் ஸ்பீடா போன மாதிரி தான் தெரிஞ்சிது...
அடுத்த பகுதில முடிக்க முயற்சி செய்யறேன் :-)

நாமக்கல் சிபி said...

//dubukudisciple said...

என்ன வெட்டியாரே...
ஏதோ வெட்டியா எழுதுவீஙனு பார்த்தா சூப்பரா எழுதி இருக்கிங்களே... கலக்குங்க..
//
மிக்க நன்றிங்க...

//
என்ன இது எப்போ பார்த்தாலும் சண்டை போட்டா எப்படி...
சீக்கிரம் சமாதானம் பண்ணி சேர்த்து வைங்க... //
சீக்கிரம் சேர்த்து வைக்கறேங்க ;)

நாமக்கல் சிபி said...

கத்துக்குட்டி said...
//
இருந்தாலும் அருணுக்கு இம்புட்டு லொள்ளு கூடாது! :)//
எல்லாம் இருக்கறதுதான்... அவுங்களுக்குள்ள ஓட்டிக்கிட்டாதானே நல்லா இருக்கும் ;)

//இது தான்யா லவ்வுன்றது!!//
ஓ!!! அப்படியா? நமக்கி இதுல அவ்வளவா ஞானமில்லை :-(

//
ஒவ்வொரு பகுதியிலும் அருணோடு சேர்த்து எங்களுக்கும் B.P. ஏறுது.. வெட்டி! கலக்கற மச்சி..//
அப்பதானே அடுத்த பகுதி போட்டா உடனே வருவீங்க ;)

நாமக்கல் சிபி said...

//ஜி said...

முரட்டுக் காதல் னு இதுக்கு தலைப்பு வச்சிருக்கலாம். இன்னும் எத்தினி நாளு....
//
சீக்கிரமே முடிஞ்சிடும்...

//
// தம்பி said...
அம்மான்னா இவங்கதான் அம்மா எப்படி
நேர்க்குத்தா பேசிட்டாங்க!
அப்பால என்ன டும் டும் டும்தான்! //

தம்பி. தீபாவோட அம்மா, தம்பின்னு சொன்னது அருண்ன, உங்கள இல்ல. ஏதொ உங்கள சொன்ன மாதிரி சந்தோஷப் படுறிய... :) //
நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க :-)

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ள said...

வழக்கம் போல சூப்பர். நெக்ஸ்ட்....எப்போ? //
மிக்க நன்றி தல...
அடுத்த பகுதி விரைவில்...

நாமக்கல் சிபி said...

//aparnaa said...

//ஒரு வாரம் முடிந்த நிலையில் வார இறுதி நாளில் வெளியே சென்றிருந்த கார்த்திக் வீட்டிற்குள் வந்து நேராக கட்டிலில் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தை பார்த்து அருண் திடுக்கிட்டான்.//

ஆஹா..திரும்பவும் சஸ்பென்ஸா!!
waiting for ur next post ;-) //
சீக்கிரமே வரும்...

Syam said...

வெட்டி கதய நம்ம தமிழ் சினிமா டைரக்டர்ஸ் சொல்ற மாதிரி டிபரண்டா கொண்டு போறீங்க போல இருக்கு...சஸ்பெண்ஸ் மேல சஸ்பெண்ஸ் தாங்காது பிளாக்கு :-)

நாமக்கல் சிபி said...

//சூப்பரோ சூப்பர் வெட்டி...

நல்லா ஜாலியா போகுது...

கலக்குங்கோ.........//
ரொம்ப நன்றி ஜெயந்தி...

எல்லாம் உங்க ஊக்கம்தான் ;)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

கலக்கலா போயிட்டிருக்கு..போட்டுத் தாக்குங்க ;) //

ரொம்ப நன்றி கப்பி...

நாமக்கல் சிபி said...

//மு.கார்த்திகேயன் said...

நெல்லிக்காய் உருவாகிக் கொண்டிருப்பதாக நேற்று தான் படித்தேன் உங்கள் ஸ்டேட்டஸில் இப்போது.. சாப்பிடவே போறேன்..வெட்டிப்பயலே //

நேத்து ஒரு மணிக்கு மேலதான் எழுதவே ஆரம்பிச்சேன்... சரினு ஸ்டடஸ் அந்த மாதிரி போட்டுடேன்.. அப்பதானே எல்லாரும் ஆர்மா காத்திருப்பாங்க ;)

சரி சாப்பிட்டு எப்படினு சொல்லவேயில்லை???

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

Going great so far. Please DO NOT end the story in next few episodes.

- Unmai //
உண்மை,
மிக்க நன்றி
ஏற்கனவே ரொம்ப இழுக்கறனு மக்கள் எல்லாம் வருத்தப்படறாங்க... இன்னும் ஒண்ணு ரெண்டு பகுதில முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்...

அடுத்து இதைவிட அருமையான ஒரு கதை வருது :-)

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

வழக்கம்போல யதார்த்தமான உரையாடல்கள்... கொஞ்ச சீக்கிரமா அடுத்ததையும் போடுங்க... வெயிட்டிங்ங்ங்ங்ங்ங்ங்... //

மிக்க நன்றி அருண்...
அடுத்த பகுதி விரைவில்...

நாமக்கல் சிபி said...

//
ஜி,

நான் எனக்கு சொல்லலியே ஜி, அருணுக்குதான் சொன்னேன். இந்த உலகத்தில ஒரே ஒரு ஆளத்தவிர எல்லாருமே எனக்கு அக்கா, தங்கச்சிதான். :))//

அந்த ஒரு ஆள் யாரு??? ஆமாம் பசங்களும் உனக்கு அக்கா, தங்கச்சிதானா?

அப்பறம் அம்மா, பாட்டி, அத்தை இவுங்களை எல்லாம் எப்படி கூப்பிடுவ???

என்ன சொல்றதுனே தெரியல...

நாமக்கல் சிபி said...

//ராம் said...

பாலாஜி,

இந்த பாகம் ரொம்ப நல்லாயிருக்குப்பா...

அப்பிடியே மெயிண்டேண் பண்ணி கொண்டு போ.... :-))))) //

ரொம்ப டாங்க்ஸ் ராமண்ணா.,,..

நாமக்கல் சிபி said...

//Syam said...

வெட்டி கதய நம்ம தமிழ் சினிமா டைரக்டர்ஸ் சொல்ற மாதிரி டிபரண்டா கொண்டு போறீங்க போல இருக்கு...சஸ்பெண்ஸ் மேல சஸ்பெண்ஸ் தாங்காது பிளாக்கு :-) //

நாட்டாமை சீக்கிரம் முடிய போகுது... அதனால நோ பீலிங்ஸ் ;)

Arunkumar said...

//
"லாரினா ராங் சைட்ல தான் வருவான். நீ தான் பார்த்து ஓட்டணும்."
//
இந்த பதிவ மறுபடியும் படிச்சேன். இந்த வரிகள் LOL :)

கதிர் said...

//அடுத்து இதைவிட அருமையான ஒரு கதை வருது :-)//

அய்யயோ...
எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்

:)))

கதிர் said...

//அந்த ஒரு ஆள் யாரு??? ஆமாம் பசங்களும் உனக்கு அக்கா, தங்கச்சிதானா?//


அந்த ஒரு ஆளத்தான் தேடிட்டு இருக்கேன்!
பசங்கள எல்லாம் அண்ணன், தம்பின்னு கூப்பிடுவேன்.

//அப்பறம் அம்மா, பாட்டி, அத்தை இவுங்களை எல்லாம் எப்படி கூப்பிடுவ???//

அம்மா, பாட்டி, அத்தைன்ன்னு கூப்பிடுவேன். இதெல்லாம் ஒரு கேள்வியா? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!

//என்ன சொல்றதுனே தெரியல... //

இம்புட்டயும் சொல்லிட்டு என்ன சொல்றதுன்னு தெரியலயா?

நல்லா இருலேய்ய்ய்...

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

//
"லாரினா ராங் சைட்ல தான் வருவான். நீ தான் பார்த்து ஓட்டணும்."
//
இந்த பதிவ மறுபடியும் படிச்சேன். இந்த வரிகள் LOL :) //

ஆஹா.. ஒரு தடவைக்கு மேல படிச்சிட்டு கமெண்ட்டும் போட்ட அருண் வாழ்க!!!

Divya said...

\"கார்த்திக் வீட்டிற்குள் வந்து நேராக கட்டிலில் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தை பார்த்து அருண் திடுக்கிட்டான்.\"

வெட்டி, ஏன் கார்த்திக்கும் ராஜியும் அடிக்கடி அழுவுறாங்க???[ இரண்டு பேருக்கும் அழுவதிலும் பொருத்தமா!]

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

//அடுத்து இதைவிட அருமையான ஒரு கதை வருது :-)//

அய்யயோ...
எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்

:))) //

மக்களே!!!
நான் கதை எழுதி உங்களை ரொம்ப போர் அடிக்கிறேனா?

உண்மையா சொல்லுங்க.. வேணும்னா கொஞ்ச நாளைக்கு நிறுத்திடறேன் :-(

கதிர் said...

//தம்பி said...

first? //

ஆமாம்பா...
ரொம்ப நன்றி!!! //

ஹ்ஹேய்ய் வாட் ஈஸ் திஸ்?

ஸ்மால் பாய்த்தனமா இருக்கு!

Anonymous said...

இங்க யாராச்சும் கயமை பண்ணிட்டு இருக்கீங்களா?

நாமக்கல் சிபி said...

தம்பி,
தெளிவா பேசுப்பா...

உலகத்துல ஒருத்தவங்களை தவிற மீத எல்லாம் அக்கா தங்கச்சினா இன்னா அர்த்தம்???

நாமக்கல் சிபி said...

//Divya said...

\"கார்த்திக் வீட்டிற்குள் வந்து நேராக கட்டிலில் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தை பார்த்து அருண் திடுக்கிட்டான்.\"

வெட்டி, ஏன் கார்த்திக்கும் ராஜியும் அடிக்கடி அழுவுறாங்க???[ இரண்டு பேருக்கும் அழுவதிலும் பொருத்தமா!] //
அழுவதில் தவறில்லையே!!!
மனசுலயே வெச்சி புழுங்கவதை விட அதை வெளிப்படுத்தி மனதை லேசாக்கி கொள்ளலாமே!!!

காரணமில்லாம அழுதா தான் தப்பு :-)

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

//தம்பி said...

first? //

ஆமாம்பா...
ரொம்ப நன்றி!!! //

ஹ்ஹேய்ய் வாட் ஈஸ் திஸ்?

ஸ்மால் பாய்த்தனமா இருக்கு! //

என்ன சொல்றதுனு தெரியல...
பதிவ படிச்சு ஒண்ணும் போடாம யாரும் இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடலையானு நக்கல் பண்ணிருக்க...

நாமக்கல் சிபி said...

// போலீஸ்கார் said...

இங்க யாராச்சும் கயமை பண்ணிட்டு இருக்கீங்களா? //

அப்படி யாரையும் தெரியலையே ;)

கதிர் said...

//உலகத்துல ஒருத்தவங்களை தவிற மீத எல்லாம் அக்கா தங்கச்சினா இன்னா அர்த்தம்??? //

இந்த உலகத்தில நான் மட்டும்தான் நல்லவன்னு அர்த்தம். :)))

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

//உலகத்துல ஒருத்தவங்களை தவிற மீத எல்லாம் அக்கா தங்கச்சினா இன்னா அர்த்தம்??? //

இந்த உலகத்தில நான் மட்டும்தான் நல்லவன்னு அர்த்தம். :))) //

அப்படினா ப்ளாக் எழுதற எல்லாரும் கெட்டவங்களா????

ஏன் மத்தவங்க மேல உனக்கு இப்படி ஒரு கொலை வெறி!!! :-X

Anonymous said...

சூப்பரோ சூப்பர் வெட்டி...

நல்லா ஜாலியா போகுது...

கலக்குங்கோ.........

Anonymous said...

//உண்மை,
மிக்க நன்றி
ஏற்கனவே ரொம்ப இழுக்கறனு மக்கள் எல்லாம் வருத்தப்படறாங்க... இன்னும் ஒண்ணு ரெண்டு பகுதில முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்...

அடுத்து இதைவிட அருமையான ஒரு கதை வருது :-)
//

அடுத்த பிள்ளையும் நல்லா பெதுக்கலாம்னு இந்த புள்ளைய குறை பிரசவம பெத்தா எப்படி ?

- உண்மை

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

//உண்மை,
மிக்க நன்றி
ஏற்கனவே ரொம்ப இழுக்கறனு மக்கள் எல்லாம் வருத்தப்படறாங்க... இன்னும் ஒண்ணு ரெண்டு பகுதில முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்...

அடுத்து இதைவிட அருமையான ஒரு கதை வருது :-)
//

அடுத்த பிள்ளையும் நல்லா பெதுக்கலாம்னு இந்த புள்ளைய குறை பிரசவம பெத்தா எப்படி ?

- உண்மை //

உண்மை,
கதைல எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே முடிவு செய்ததுதான் :-)

குறை பிரசவமாக இருக்காது :-)

Anonymous said...

kalakara baa nee

நாமக்கல் சிபி said...

//Kittu said...

kalakara baa nee //

மிக்க நன்றி கிட்டு!!!

Anonymous said...

நல்லா போகுது வெட்டி..Nextக்கு வெயிட்டிங்!!

-விநய்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நக்கலா? நான் அழகா, இல்லையானு போய் உனக்கு பக்கத்து க்யூபிக்கல்ல உக்கார்ந்திருப்பானே ராஜிவ். அவனை போயி கேட்டு பாரு"//

பாலாஜி
கதைக்கு டிவிஸ்டு கொடுக்கறேன் பேர்வழின்னு ராஜிவை வில்லன் எல்லாம் ஆக்காதீங்க சொல்லிப்புட்டேன்!
ஆமாம்!!

வில்லன் இல்லாத ஒரே காதல் கதை நெல்லிக்காய் என்று பேர் வாங்கிக் கொள்ளுங்க!! :-)

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

நல்லா போகுது வெட்டி..Nextக்கு வெயிட்டிங்!!

-விநய்//

மிக்க நன்றி விநய்...

சீக்கிரமே வரும்...

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நக்கலா? நான் அழகா, இல்லையானு போய் உனக்கு பக்கத்து க்யூபிக்கல்ல உக்கார்ந்திருப்பானே ராஜிவ். அவனை போயி கேட்டு பாரு"//

பாலாஜி
கதைக்கு டிவிஸ்டு கொடுக்கறேன் பேர்வழின்னு ராஜிவை வில்லன் எல்லாம் ஆக்காதீங்க சொல்லிப்புட்டேன்!
ஆமாம்!!

வில்லன் இல்லாத ஒரே காதல் கதை நெல்லிக்காய் என்று பேர் வாங்கிக் கொள்ளுங்க!! :-)//
அப்படியெல்லாம் வராதுங்க...

பயப்பட வேண்டாம்...

Anonymous said...

// தம்பி said...
ஜி,

நான் எனக்கு சொல்லலியே ஜி, அருணுக்குதான் சொன்னேன். இந்த உலகத்தில ஒரே ஒரு ஆளத்தவிர எல்லாருமே எனக்கு அக்கா, தங்கச்சிதான். :)) //

டச் பண்ணிட்டீங்க தம்பி...

Adiya said...

அடுத்த கனி எப்பொ வரும்

நாமக்கல் சிபி said...

//Adiya said...

அடுத்த கனி எப்பொ வரும் //

சீக்கிரம் போட முயற்சி செய்யறேங்க...

Anonymous said...

really good going. Maintain the same tempo