காய் 5
அருண் நேராக அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று கார்த்திக் அருகில் அமர்ந்தான்.
"ராஜி என்ன உன் முகத்த பார்த்தா அழுத மாதிரி தெரியுது. கார்த்திக் எதாவது திட்னானா? என்கிட்ட பயப்படாம சொல்லு நான் பார்த்துக்கறேன்"
ராஜி அருணை முறைக்க முயன்று முடியாமல் அவளையும் மீறி சிரித்துவிட்டாள்.
கார்த்திக் முகத்தை கடுமையாக வைக்க முயற்சி செய்து கொண்டு அருணிடம் பேசினான். "டேய்! ராஜிக்கிட்ட என்ன சொன்ன?"
"ஏன்டா இப்ப உன் முன்னாடித்தானே சொன்னேன்? காதுல விழலய?"
"இப்ப இல்லை. முன்னாடி காபி குடிக்கும் போது என்ன சொன்ன?"
"நேத்து நைட் நடந்தத சொன்னேன்"
"நேத்து நைட் என்ன நடந்ததுனு சொன்ன?"
என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு நிதானமாக பேசினான்.
"அது இருக்கட்டும். நான் உன்னை பத்தி என்ன சொல்லிருந்தாலும் அவ ஏன் அழுவனும்?"
அனைவரும் மௌனமாக இருந்தனர். இதற்கு ராஜியாலோ, கார்த்தியாலோ பதில் சொல்ல முடியவில்லை. அருண் மீண்டும் பேச துவங்கினான்.
"ஏன்டா இது என்ன தமிழ் சினிமாவா? லவ் பண்ணிட்டு கடைசி வரைக்கும் யார்ட்டயும் சொல்லாம, கடைசியா ரெயில்வே ஸ்டேஷன்ல சொல்றதுக்கு. எனக்கு இந்த மாதிரி சொன்னா ஈஸியா அவ மனசுல இருக்கறத கண்டுபிடிக்கலாம்னு தோனுச்சு. நான் சொன்னேன். இப்ப என்ன நான் அவள்ட சாரி சொல்லனுமா? ராஜி, நான் சொன்னதெல்லாம் விளையாட்டுக்கு. ஐ யம் ஸாரி. போதுமா?"
ராஜி பதட்டமாக பேச துவங்கினாள், "ஐயய்யோ அதெல்லாம் இல்லை அருண். நீ மட்டும் இந்த மாதிரி பண்ணலைனா நாங்க ரெண்டு பேரும் இப்படியேத்தான் கடைசி வரைக்கும் இருந்திருப்போம். ரொம்ப தேங்க்ஸ் அருண்"
"தேங்ஸ் எல்லாம் இருக்கட்டும். சீட்ல இருந்து நம்ம வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது. அங்க மேனஜர் கேட்டா இன்கம்டேக்ஸ் டிப்பார்ட்மெண்ட்கு போயிருக்கோம் சொல்ல சொல்லிருக்கேன். நீங்க உங்க லவ்வ ஈவனிங் கண்டினியூ பண்றீங்களா? இப்ப சீட்டுக்கு போவோம்" அருண் சொல்லி முடிக்கவும் கார்த்திக் கோபமாக பார்த்தான்.
"டேய் உன்னய மாதிரி நாங்க என்ன பெஞ்ச்லயா இருக்கோம்? திட்டறதா இருந்தா மதியம் திட்டு. அப்ப தான் ஒருத்தவங்க சந்தோஷப்படுவாங்க. நாங்க இப்ப கிளம்பறோம்" சொல்லிவிட்டு அருண் எழுந்திரிக்க ராஜியும் எழுந்திரித்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் கார்த்திக்கும் எழுந்திரித்தான்.
"நான் உங்க கூட பில்டிங் வரைக்கும் வரனே" அவன் பரிதாபமாக சொன்னதை கேட்டு ராஜி சிரித்துவிட்டாள்.
"உன்னய வராதனு சொன்னா கேக்கவா போற... வா" அருண் சொல்லிவிட்டு இருவருக்கும் காத்திருக்காமல் அவன் பில்டிங் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
வார இறுதியன்று காலை 7 மணிக்கே எழுந்து வேகமாக கிளம்பினான் கார்த்திக்.
அருண் படுக்கையிலிருந்தே கண்களை பாதி திறந்த நிலையிலே பேசினான்.
"எங்கடா இவ்வளவு சீக்கிரம் கிளம்பற? யாராவது சொந்தக்காரவங்களை பார்க்க போறீயா?"
"இல்லடா மச்சான். இன்னைக்கு நாங்க படத்துக்கு போறோம்டா. அவ காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்"
"சரி என்ன படம்டா?"
"வேட்டையாடு விளையாடு போகலாம்னு ப்ளான். ராஜி கமல் ஃபேன் தெரியும் இல்ல. என் ராசி எப்படியோ கமல் படம் ரிலிஸாயிடுச்சு"
"வேட்டையாடு விளையாடா?" அவசரமாக படுக்கையிலிருந்து எழுந்திரித்தான் அருண்.
"டேய்! நீ எதுக்கு எழுந்திரிக்கற? தூங்கு. வேணும்னா நான் உனக்கு நாளைக்கு ஷோக்கு டிக்கட் எடுத்துட்டு வரேன். நம்ம திரும்ப போகலாம்"
கார்த்திக் சொன்னதை புரிந்து கொண்டு, "நாங்களும் இன்னைக்கு தான் பார்ப்போம். நான் ஒன்னும் உன் கூட வரலை. தனியா போறேன்" சொல்லிவிட்டு மீண்டும் படுத்துகொண்டான் அருண்.
அரை மணி நேரத்திற்கு பிறகு அருணை எழுப்பினான் கார்த்திக்.
"டேய் ராஜி இப்ப தான் போன் பண்ணா. அவ தனியா வரதுக்கு பயப்படறாடா. யாராவது பார்த்தா பிரச்சனையாயிடும்னு. அதனால தீபாவையும் கூப்பிட்டு வரனு சொல்லிருக்கா"
"சரி அதுக்கென்ன இப்ப?" கோபமாக கேட்டான் அருண்.
"இல்லடா. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கும் போது தீபாக்கு போர் அடிக்கும். அதனால நீயும் எங்கூட வரணும். ப்ளீஸ்டா. நீ கண்டிப்பா வருவேனு சொல்லிட்டேன்டா"
"அவளுக்காக எல்லாம் என்னால வர முடியாது"
"நீ அவளுக்காக வர வேண்டாம்டா. எனக்காக வாடா. ப்ளீஸ்! நீ எனக்கு பெஸ்ட் ஃபிரெண்ட் இல்லை. ப்ளீஸ்டா"
"அதெல்லாம் முடியாதுடா. எனக்கு இப்ப தூக்கம் வருது" சொல்லிவிட்டு போர்வையால் தலையை மூடிக்கொண்டு தூங்கினான்.
"நீ என் கூட இன்னைக்கு வந்தா உனக்கு படத்துக்கு டிக்கெட், லஞ்ச் எல்லாம் நான் ஸ்பான்சர். ஓ.கேவா?" இதை கேட்டதும் சந்தோஷமாக எழுந்து உட்கார்ந்தான் அருண்.
"நைட் டின்னரும்னா ஓ.கே"
"சரி வா. எழுந்து கிளம்பு"
கார்த்திக் சொல்லியவுடன் எழுந்து வேகமாக கிளம்பினான் அருண்.
ஜெமினி ஃபிளை ஓவர் அருகிலிருக்கும் சரவண பவனின் கிளையான ஸ்வாதிஸில் அனைவரும் சந்தித்தனர்.
"ஸாரி லேட்டாயிடுச்சு" ராஜி பதட்டத்துடன் சொன்னாள்.
"அதெல்லாம் பரவாயில்லை" வழிந்து கொண்டே சொன்னான் கார்த்திக்.
அதை பார்த்த அருண்"ரொம்ப வழியாதடா! நாங்க டிக்கெட் ரிசர்வ் பண்ணியாச்சு. சீக்கிரம் சாப்பிட்டு போகலாம். வாங்க"
உள்ளே சென்று அனைவரும் சாப்பிட துவங்கினர்.
"கமல் எப்படியும் பட்டைய கிளப்பிருப்பாரு. போலிஸ் ட்ரெஸ்ல சான்சே இல்லாம இருக்காரு. பாரேன் இன்னும் வயசான மாதிரியே தெரியால" அருண் ஆர்வமாக சொல்லி கொண்டிருந்தான்
"என்ன இருந்தாலும் எங்க மூன்று முகம் ரஜினி மாதிரி வருமா? இல்லை கொடி பறக்குது மாதிரி ஸ்டைல் வருமா?" தீபா நக்கலாக சொன்னாள்.
"கொடி பறக்குதெல்லாம் ஒரு படம். அதை போய் வேட்டையாடி விளையாடோட கம்பேர் பண்றா பாரு. போலிஸ் ட்ரெஸ்ல எங்க தலைவரு குருதிப் புனல்ல வருவாரு பாரு. அந்த ரெஞ்சுக்கு வருமா?" கொஞ்சம் சீரியசாக பதில் சொன்னான் அருண்.
"ஹலோ என்ன இருந்தாலும் எங்க சந்திரமுகி ரெக்கார்டா உங்க வேட்டையாடு விளையாடு ப்ரேக் பண்ண முடியுமா? இல்லை அதுல பாதியாவது வருமானு பாருங்க" தீபாவும் விட்டு கொடுக்காமல் வாதாடினாள்.
"என்ன பேசற 4 நேஷனல் அவார்டு, 18 பிலிம் பேர் அவார்ட் வாங்கிருக்காரு. அவரோட 6 படம் ஆஸ்கருக்கு அனுப்பியிருக்காங்க. சொல்ல போனா முதல் படத்துலயே நேஷனல் அவார்ட் வாங்கிருக்காரு. உங்க ரஜினிய முதல்ல ஒரு நெஷனல் அவார்ட் வாங்க சொல்லு பார்க்கலாம்" தீபாவின் வாயை மூடுமளவுக்கு புள்ளி விவரங்களுடன் பேசினான் அருண்
"இங்க பாரு. அவார்ட் முக்கியமில்ல. இதுல பணம் தான் முக்கியம். கமல வெச்சி படம் எடுத்து யாரும் பெரியாளானதா வரலாறில்லை. ஆனா எங்க தலைவர பாரு. எத்தனை நடிகர்கள் அவரை வெச்சி படம் எடுத்துருக்காங்க. எங்க தலைவர் பிளாப் படம் பாபா அளவுக்கு கூட உங்க தலைவர் ஹிட் படம் வசூலாகாது" அருணால் பேச முடியாத அளவுக்கு பேசினாள் தீபா.
சரியாக அந்த நேரம் அவர்கள் சொல்லியிருந்ததை கொண்டு வந்து வைத்தார் ஹோட்டல் சப்ளையர்.
"சரி சும்மா சண்டை போடாம சாப்பிடுங்க.ரெண்டு பேரும் பெரிய ஆளுங்க தான். அதுவும் இல்லாம ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்தாதான் அவுங்களுடைய உண்மையான ரசிகர்கள்" நச்சென்று சொல்லிமுடித்தான் கார்த்திக்...
"சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" வேகமாக சொன்னாள் தீபா...
அருண் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்...
(தொடரும்...)
அடுத்த பகுதி
56 comments:
////என்ன பேசற 4 நேஷனல் அவார்டு, 18 பிலிம் பேர் அவார்ட் வாங்கிருக்காரு. அவரோட 6 படம் ஆஸ்கருக்கு அனுப்பியிருக்காங்க. சொல்ல போனா முதல் படத்துலயே நேஷனல் அவார்ட் வாங்கிருக்காரு. உங்க ரஜினிய முதல்ல ஒரு நெஷனல் அவார்ட் வாங்க சொல்லு பார்க்கலாம்///
சூப்பர்ப் :)
//"சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" வேகமாக சொன்னாள் தீபா...
அருண் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்...//
நானும் தான்!
அவளை மட்டும் அல்ல!
பாலாஜி, உங்களையும் தான் ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்! :-))
//"சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" வேகமாக சொன்னாள் தீபா...
அருண் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்...//
வெட்டிப் பயலோட கொடி பறக்குதுமா தமிழ்மணம் பூரா. தூள்.
இன்னொரு திரைக்கதை வசனகர்த்தா உருவாகுறாருடோய்!
//"சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" வேகமாக சொன்னாள் தீபா...
அருண் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்...//
நல்லா வந்திருக்குங்க... தொடரட்டும் இந்த சண்டை...
//அனுசுயா said...
சூப்பர்ப் :) //
முதல் கமெண்ட்க்கு நன்றி!!!
//ரெண்டு பேரும் பெரிய ஆளுங்க தான். அதுவும் இல்லாம ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்தாதான் அவுங்களுடைய உண்மையான ரசிகர்கள்//
இதுக்கு ஒன்னும் சொல்லல ;)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//நானும் தான்!
அவளை மட்டும் அல்ல!
பாலாஜி, உங்களையும் தான் ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்! :-)) //
ஆஹா... எந்த அர்த்ததுல சொல்றீங்கனே புரியலையே :-/
நல்லா இருக்கா? இல்லை சன் டீவி நாடகம் மாதிரி போரடிக்குதா?
//கைப்புள்ள said...
//"சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" வேகமாக சொன்னாள் தீபா...
அருண் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்...//
வெட்டிப் பயலோட கொடி பறக்குதுமா தமிழ்மணம் பூரா. தூள்.
இன்னொரு திரைக்கதை வசனகர்த்தா உருவாகுறாருடோய்!
//
தல! சரிவிடு என்ன சொல்றதுனே தெரியல.. இப்போதுக்கு நன்றி மட்டும் சொல்லிக்கறேன்...
Udhayakumar said...
//நல்லா வந்திருக்குங்க... தொடரட்டும் இந்த சண்டை... //
மிக்க நன்றி உதய்!!!
ம்ம்ம்....
மேல சொல்லுங்க..
//
"சண்டை போட்டா ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?"
//
சூப்பர் :)
மோதல்,நட்பு... அடுத்த ஸ்டேஜ் எப்போ? ஆவளுடன் வெயிட்டிங் :)
-அருண்
//பெத்த ராயுடு said...
ம்ம்ம்....
மேல சொல்லுங்க..
//
சீக்கிரமே அடுத்த பகுதி வரும்!!!
//Arunkumar said...
//
"சண்டை போட்டா ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?"
//
சூப்பர் :)
மோதல்,நட்பு... அடுத்த ஸ்டேஜ் எப்போ? ஆவளுடன் வெயிட்டிங் :)
-அருண்
//
அடுத்த ஸ்டேஜ்தானே சீக்கிரமே வரும்!!!
திருமதி.ராஜி கார்த்திக்?
திருமதி.தீபா அருண்?
//"சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" வேகமாக சொன்னாள் தீபா...//
ரைட்டேய்!!! ;)
Vetti,
Intha episode konjam dull than(except last part).
P.S: Mail marupadiyum forward panni irukken.
ஏன்யா இந்த கொலவெறி உமக்கு?
கொஞ்ச நேரத்துல ரஜினி ரசிகரான எனக்கும், கமல் ரசிகரான என்னோட நண்பனுக்கும் சண்டை வரப் பாத்திச்சு. நல்ல வேளை கடைசில ஒரு பஞ்ச் டயலாக் சொன்னதால நின்னுப்போச்சு.
//"நேத்து நைட் என்ன நடந்ததுனு சொன்ன?"
என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு நிதானமாக பேசினான்.
"அது இருக்கட்டும். நான் உன்னை பத்தி என்ன சொல்லிருந்தாலும் அவ ஏன் அழுவனும்?"//
Nice...
//தம்பி said...
திருமதி.ராஜி கார்த்திக்?
திருமதி.தீபா அருண்?//
ஹா.. ஹா.. ஹா
//கப்பி பய said...
//"சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" வேகமாக சொன்னாள் தீபா...//
ரைட்டேய்!!! ;)//
சரியா புரிஞ்சிக்கிட்ட கப்பி...
//Simply Senthil said...
Vetti,
Intha episode konjam dull than(except last part).
P.S: Mail marupadiyum forward panni irukken//
கடைசியா கொஞ்சம் த்ரில்லிங்க போகும்னு நினைக்கிறேன்!!!
//Zia said...
ஏன்யா இந்த கொலவெறி உமக்கு?
கொஞ்ச நேரத்துல ரஜினி ரசிகரான எனக்கும், கமல் ரசிகரான என்னோட நண்பனுக்கும் சண்டை வரப் பாத்திச்சு. நல்ல வேளை கடைசில ஒரு பஞ்ச் டயலாக் சொன்னதால நின்னுப்போச்சு.//
அதுதான் மேட்டர்...
ரசிகர்கள்னு சும்மா நம்ம சண்டை போட்டுக்க கூடாது... அவுங்களே நண்பர்களா இருக்கும் போது நமக்கு என்ன ;)
//பெத்த ராயுடு said...
//"நேத்து நைட் என்ன நடந்ததுனு சொன்ன?"
என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு நிதானமாக பேசினான்.
"அது இருக்கட்டும். நான் உன்னை பத்தி என்ன சொல்லிருந்தாலும் அவ ஏன் அழுவனும்?"//
Nice...//
மிக்க நன்றி பெ.ரா
சூப்பரப்பு..... எப்பய்யா அடுத்த பகுதி வரும்?? இந்த் பகுதிக்கே ரொம்ப நாள் காக்க வைச்சுட்டாய்..... அடுத்த பகுதியை ஆவலுடல் எதிர்பார்க்கும் இவன் ஆதவன்
சூப்பரப்பு..... எப்பய்யா அடுத்த பகுதி வரும்?? இந்த் பகுதிக்கே ரொம்ப நாள் காக்க வைச்சுட்டாய்..... அடுத்த பகுதியை ஆவலுடல் எதிர்பார்க்கும் இவன் ஆதவன்
//ஆதவன் said...
சூப்பரப்பு..... எப்பய்யா அடுத்த பகுதி வரும்?? இந்த் பகுதிக்கே ரொம்ப நாள் காக்க வைச்சுட்டாய்..... அடுத்த பகுதியை ஆவலுடல் எதிர்பார்க்கும் இவன் ஆதவன்//
மிக்க நன்றி ஆதவன்..
அடுத்த பகுதி சீக்கிரம் போட்டுடறேங்க :-)
hi vettipayal
im back.
oru doubt.
how do you reply to the comments?
is there any option for that?
i cant reply to any of my comments :(
i just accept or reject.
super blog..//
happy blogging..
//Anonymous said...
hi vettipayal
im back.
oru doubt.
how do you reply to the comments?
is there any option for that?
i cant reply to any of my comments :(
i just accept or reject.
super blog..//
happy blogging..//
Hi Friend,
If I am not wrong its publish or reject.
You can reply to the person if he has given you the comment with his blogger id through ur mail (which u have given for ur blog).
If you dont mind, can u give me ur blog url?
நல்லா இருக்குங்க. சீக்கிரமே அடுத்த பகுதியைப் போடுங்க.
தல கத சூப்பரா போகுது.... பொண்ணுங்க மனச நல்லாவே புரிஞ்சு வச்சுரூக்கீங்க போல.... ம்ம்ம்ம் தொடரட்டும்... நல்லா போகுது... எல்லா பகுதிலையும் கடைசி வரில அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்ப ஏற்படுத்துறீங்க... கலக்கல்....
o dhaaraalamaa....
this is my url.
http://narumugaiy.blogspot.com/
happy blogging.....
//இலவசக்கொத்தனார் said...
நல்லா இருக்குங்க. சீக்கிரமே அடுத்த பகுதியைப் போடுங்க. //
கொத்ஸ்,
மிக்க நன்றி
நீங்களும் தொடர்ந்து படிக்கறீங்களா?
கண்டிப்பா சீக்கிரம் பொடறேன் :-)
//அமுதன் said...
தல கத சூப்பரா போகுது....
//
மிக்க நன்றி அமுதா
//
பொண்ணுங்க மனச நல்லாவே புரிஞ்சு வச்சுரூக்கீங்க போல....
//
ஏன்? இல்லை ஏன்னு கேக்கறன்?
பொண்ணுங்க மனசுனு இல்லை.. உலகத்துல யாரும் மனசுல என்ன நினைக்கிறாங்கனு கண்டுபிடிக்க முடியாது. எல்லாம் சும்மா கெஸ் வொர்க்தான். முதல்ல நம்மல மதிச்சி பேசறாங்களா இல்லை சும்மா மொக்கைய போடறானு நினைக்கிராங்களானே தெரியாது. இதுல நீ வேற!!! :-)
//ம்ம்ம்ம் தொடரட்டும்... நல்லா போகுது... எல்லா பகுதிலையும் கடைசி வரில அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்ப ஏற்படுத்துறீங்க... கலக்கல்.... //
ஆஹா. எல்லாம் சும்மா முயற்சி செய்யறதுதான் :-)
\""சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" \"
வெட்டி, சும்மா நச்சுன்னு இருக்குது dialogue. அடுத்த நெல்லிக்காய் எப்போ??
நல்லா போகுது பாலாஜி..
ம்ம்ம்..அப்புறம்??
// Anonymous said...
o dhaaraalamaa....
this is my url.
http://narumugaiy.blogspot.com/
happy blogging..... //
மிக்க நன்றி...
உங்க பேர்லயே கமெண்ட் போடலாமே?
//Divya said...
\""சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" \"
வெட்டி, சும்மா நச்சுன்னு இருக்குது dialogue. அடுத்த நெல்லிக்காய் எப்போ?? //
மிக்க நன்றி திவ்யா...
சீக்கிரமே வரும் :-)
//தமிழ்ப்பிரியன் said...
நல்லா போகுது பாலாஜி..
ம்ம்ம்..அப்புறம்?? //
மிக்க நன்றி சங்கர்...
அப்பறமென்ன... அடுத்த பகுதிதான் :-)
hi vets
story super pa. full storya padichittu comment panalamnu thaan irunthen, but aarva kolarula ipove comment panren. kathai thodara en vazhthukkal.
yogen
சூப்பர் அப்பு. கலக்கல்.
- உண்மை
சரளமாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உரையாடல்கள் இயல்பாக இருக்கிறது
// Anonymous said...
hi vets
story super pa. full storya padichittu comment panalamnu thaan irunthen, but aarva kolarula ipove comment panren. kathai thodara en vazhthukkal.
yogen //
மிக்க நன்றி யோகன்...
பொறுமையா எல்லா பகுதியும் படிச்சிட்டு சொல்லுங்க :-)
// Anonymous said...
சூப்பர் அப்பு. கலக்கல்.
- உண்மை //
மிக்க நன்றி உண்மை!!!
//பத்மா அர்விந்த் said...
சரளமாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உரையாடல்கள் இயல்பாக இருக்கிறது //
மிக்க நன்றி பத்மா அர்விந்த்!!!
தொடர்ந்து படித்து தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும் :-)
நல்லாயிருக்கு பாலாஜி! ம்ம்..தொடரட்டும் சண்டை. லைட்டா ரூட் மாற ஆறம்பிச்சிருச்சு போல.. ;)
-விநய்
என்னது அண்ணா மேம்பாலம் பக்கத்துல சரவணபவன் கிளையா? அதுக்குப் பேரு ஸ்வாதீசா? எங்கப்பா இருக்கு அது? நான் கேளிப்பட்டதேயில்லையே! கதைக்காக நீயா எழுதிக்கிட்டியா!
கமல் ரஜினி சண்டைல...வேட்டையாடு விளையாடு படத்துல கமல் பேரு ராகவன். சிவாஜி படத்துல ரஜினி பேரு ராகவனான்னு கேட்டிருக்கலாம். தீபாவால பேசவே முடியாமப் போயிருக்கும்.
//G.Ragavan said...
என்னது அண்ணா மேம்பாலம் பக்கத்துல சரவணபவன் கிளையா? அதுக்குப் பேரு ஸ்வாதீசா? எங்கப்பா இருக்கு அது? நான் கேளிப்பட்டதேயில்லையே! கதைக்காக நீயா எழுதிக்கிட்டியா!
//
இல்லைங்க... நல்லா தெரியும்
ஆயிரம் விளக்கு மசூதி பின்னாடி, சத்யம் தியேட்டர் பக்கம்
நல்லா விசாரிச்சுதாங்க எழுதினேன்...
இல்லைனா கதைக்கான களமா பெங்களூரையே வெச்சிருப்போமில்ல.
(அட்ரஸ் வேணும்னா செந்திலை கேட்டு கொள்ளவும் ;))
//
கமல் ரஜினி சண்டைல...வேட்டையாடு விளையாடு படத்துல கமல் பேரு ராகவன். சிவாஜி படத்துல ரஜினி பேரு ராகவனான்னு கேட்டிருக்கலாம். தீபாவால பேசவே முடியாமப் போயிருக்கும்.
//
பாலாஜியா இருந்தா விவரமா கேட்டுருப்பான். அருணுக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தல ;)
//Anonymous said...
நல்லாயிருக்கு பாலாஜி! ம்ம்..தொடரட்டும் சண்டை. லைட்டா ரூட் மாற ஆறம்பிச்சிருச்சு போல.. ;)
-விநய்
//
ஆமாம் விநய்!!!
அப்படித்தான் நினைக்கிறேன் ;)
ஜி.ரா உங்களுக்காக,
சரவண பவன் பாஸ்ட் புட்க்கு மேல ஸ்வாதிஸ் இருக்கிறதாம். நீங்க எல்லாம் சாப்பிடற மாதிரி ஹை-கிளாஸ் ஹோட்டலாம் ;)
//// வெட்டிப்பயல் said...
//G.Ragavan said...
என்னது அண்ணா மேம்பாலம் பக்கத்துல சரவணபவன் கிளையா? அதுக்குப் பேரு ஸ்வாதீசா? எங்கப்பா இருக்கு அது? நான் கேளிப்பட்டதேயில்லையே! கதைக்காக நீயா எழுதிக்கிட்டியா!
//
இல்லைங்க... நல்லா தெரியும்
ஆயிரம் விளக்கு மசூதி பின்னாடி, சத்யம் தியேட்டர் பக்கம்
நல்லா விசாரிச்சுதாங்க எழுதினேன்...
இல்லைனா கதைக்கான களமா பெங்களூரையே வெச்சிருப்போமில்ல.
(அட்ரஸ் வேணும்னா செந்திலை கேட்டு கொள்ளவும் ;)) //
அடடா! பாலாஜி...சத்யம் தேட்டருக்கும் அண்ணா மேம்பாலமும் எவ்வளவு பக்கத்துல தெரியுமா? இதுல...அந்த சத்யம் தேட்டர் பக்கத்துலயே ஒரு மேம்பாலம் இருக்குது தெரியுமா? செந்தில் தப்பாத்தான் சொல்லீருக்கனும். சரவணா பாஸ்ட் புட் கமலா தேட்டர் வளாகத்துல இருக்குது. அதுவும் அண்ணா சாலை. ஆனா அந்த எடத்துல மத்துரா ஓட்டல் நல்ல பிரபலம்.
// //
கமல் ரஜினி சண்டைல...வேட்டையாடு விளையாடு படத்துல கமல் பேரு ராகவன். சிவாஜி படத்துல ரஜினி பேரு ராகவனான்னு கேட்டிருக்கலாம். தீபாவால பேசவே முடியாமப் போயிருக்கும்.
//
பாலாஜியா இருந்தா விவரமா கேட்டுருப்பான். அருணுக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தல ;) //
அதெல்லாம் சரிதான். ஆனாலும் விவரம் தெரிஞ்ச பாலாஜி...நடுவுல ராகவன்னு ஒரு வரி எழுதீருக்கலாம். சரி. போகட்டும். :-(
Hi Vettipayal, I am another vetti payal sitting here at New Jersey at office.
I am not a blogger. But I read your post regularly. Come on fast..please post the next chapter of this story....it is good ..... :-)). Somehow I remembered Kushi movie Vijay and Jothika for this chemistry...
(Office la vera vela enna enakku).
//அடடா! பாலாஜி...சத்யம் தேட்டருக்கும் அண்ணா மேம்பாலமும் எவ்வளவு பக்கத்துல தெரியுமா? இதுல...அந்த சத்யம் தேட்டர் பக்கத்துலயே ஒரு மேம்பாலம் இருக்குது தெரியுமா? செந்தில் தப்பாத்தான் சொல்லீருக்கனும். சரவணா பாஸ்ட் புட் கமலா தேட்டர் வளாகத்துல இருக்குது. அதுவும் அண்ணா சாலை. ஆனா அந்த எடத்துல மத்துரா ஓட்டல் நல்ல பிரபலம்.//
லவ்வர்ஸ் எல்லாம் அங்க தான் சாப்பிடுவாங்கனு தனா வேற சொல்றான். சரி அத விடுங்க புதுசா பெங்களூர்ல இருந்து வந்ததால கதா நாயகனுக்கு விவரம் பத்தலனு வெச்சிக்குவோம்... கதை எப்படி போகுது?
பீட்டர்ஸ் ரோட்ல இருக்காம்.. மேப் வேற காட்டறாங்க ;)
//Anonymous said...
Hi Vettipayal, I am another vetti payal sitting here at New Jersey at office.
I am not a blogger. But I read your post regularly. Come on fast..please post the next chapter of this story....it is good ..... :-)). Somehow I remembered Kushi movie Vijay and Jothika for this chemistry...
(Office la vera vela enna enakku).
//
Dear Friend,
Thx a lot for your comments :-)
Will post it tonight... Till then you can read my previous posts ;)
//அதெல்லாம் சரிதான். ஆனாலும் விவரம் தெரிஞ்ச பாலாஜி...நடுவுல ராகவன்னு ஒரு வரி எழுதீருக்கலாம். சரி. போகட்டும். :-( //
சரி... அடுத்த கதைல நாயகன் பேரு ராகவன் ;)
//அடடா! பாலாஜி...சத்யம் தேட்டருக்கும் அண்ணா மேம்பாலமும் எவ்வளவு பக்கத்துல தெரியுமா? இதுல...அந்த சத்யம் தேட்டர் பக்கத்துலயே ஒரு மேம்பாலம் இருக்குது தெரியுமா? செந்தில் தப்பாத்தான் சொல்லீருக்கனும். சரவணா பாஸ்ட் புட் கமலா தேட்டர் வளாகத்துல இருக்குது. அதுவும் அண்ணா சாலை. ஆனா அந்த எடத்துல மத்துரா ஓட்டல் நல்ல பிரபலம்.//
Kamala Theater is in Vadapalani. You have Confused a lot. When you are travelling in Anna Salai towards Flyover, After TVS stop the White's road comes first, then comes the Peters road. a Fly over is there in Peters road. The Hotel is there as soon as you take the left at Peters road from the Anna salai. If you still confused
Click this Link
http://wikimapia.org/#y=13055326&x=80256119&z=18&l=0&m=s
// Senthil Kumar S P said...
//அடடா! பாலாஜி...சத்யம் தேட்டருக்கும் அண்ணா மேம்பாலமும் எவ்வளவு பக்கத்துல தெரியுமா? இதுல...அந்த சத்யம் தேட்டர் பக்கத்துலயே ஒரு மேம்பாலம் இருக்குது தெரியுமா? செந்தில் தப்பாத்தான் சொல்லீருக்கனும். சரவணா பாஸ்ட் புட் கமலா தேட்டர் வளாகத்துல இருக்குது. அதுவும் அண்ணா சாலை. ஆனா அந்த எடத்துல மத்துரா ஓட்டல் நல்ல பிரபலம்.//
Kamala Theater is in Vadapalani. You have Confused a lot. When you are travelling in Anna Salai towards Flyover, After TVS stop the White's road comes first, then comes the Peters road. a Fly over is there in Peters road. The Hotel is there as soon as you take the left at Peters road from the Anna salai. If you still confused
Click this Link
http://wikimapia.org/#y=13055326&x=80256119&z=18& //
யாரு செந்தில்குமாரா! ம்ம்ம்....சாந்தித் தேட்டர கமலான்னு வாய் தவறிச் சொல்லீட்டேன். ஒடனே என்னைய கொழப்பவாதி ஆக்கப் பாக்குறீங்க போல இருக்கு. இப்பத்தான் எனக்கும் நினைவு வருது. சத்யம் பிளைஓவர் ஏறும் முன்னாடி வலப்பக்கம் ஒரு சரவணபவன் புதுசா இருக்கு. பாத்திருக்கேன். ஆனா அதை ஆயிரம் விளக்குச் சரவணபவன்னு சொல்லீருக்கனும். அண்ணா மேம்பாலச் சரவணபவன்னா எப்படி? அண்ணா மேம்பாலம்னாலே உட்லண்ட்ஸ் டிரைவ் இன் தான். இல்லைன்னா இஸ்பஹானி.
//யாரு செந்தில்குமாரா! ம்ம்ம்....சாந்தித் தேட்டர கமலான்னு வாய் தவறிச் சொல்லீட்டேன். ஒடனே என்னைய கொழப்பவாதி ஆக்கப் பாக்குறீங்க போல இருக்கு.
//
வாய் தவறி சொன்னாலும் கை தவறி எழுதனாலும் நீங்க சொன்னது தப்புனு இங்க மக்கள் சொல்றாங்க :-)
// இப்பத்தான் எனக்கும் நினைவு வருது. சத்யம் பிளைஓவர் ஏறும் முன்னாடி வலப்பக்கம் ஒரு சரவணபவன் புதுசா இருக்கு. பாத்திருக்கேன். ஆனா அதை ஆயிரம் விளக்குச் சரவணபவன்னு சொல்லீருக்கனும். அண்ணா மேம்பாலச் சரவணபவன்னா எப்படி? அண்ணா மேம்பாலம்னாலே உட்லண்ட்ஸ் டிரைவ் இன் தான். இல்லைன்னா இஸ்பஹானி.//
அண்ணா மேம்பாலம் பக்கத்துல இருக்கற சரவண பவன்னு தான் சொன்னேன். சென்னைக்காரவங்களுக்கு எல்லாம் கரெக்டா புரிஞ்சிதாம்...
சரி அடுத்த தடவை ராகவனை வெச்சி எழுதும் போது ஆயிரம் விளக்கு சரவண பவன்ல சாப்பிடற மாதிரி வெச்சிடலாம் ;)
Post a Comment