இன்னைக்கு எங்கயே ஆன்லைன்ல மேஞ்சிட்டு இருக்கும் போது (மேயறதுக்கு நீ என்ன மாடானு கேட்டு புடாதீங்க) ராஜ் டீவி திரை விமர்சனம் பார்க்க வாய்ப்பு கிடைச்சிது. அதுல அ, ஆ, இ, ஈ விமர்சனமும், காதல்னா சும்மா இல்லை விமர்சனமும் பார்த்தேன். ரெண்டு படமும் நல்லா இருக்குற மாதிரி ஒரு எண்ணம். சரி இன்னைக்கு எப்படியும் பார்த்துடுவோம்னு களம் இறங்கினேன். காதல்னா சும்மா இல்லை பார்க்க வாய்ப்பு கிடைச்சிது.
”காதல்னா சும்மா இல்லை” இந்த படத்துக்கு பெரிய மைனஸா நான் நினைக்கிறது படத்தோட பேர் தான். எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. கமிலினியைத் தேடி கதாநாயகன் புறப்படும் இடத்தில் ஆரம்பிக்கும் படம் ரயில்வே ஸ்டேஷனில் கண்டுபிடிக்கும் போது முடிகிறது. கதாநாயகியைத் (கமிலினி) தேடும் படலத்தில் வாழ்க்கையை புரிந்து கொள்கிறார் பணக்கார நாயகன். அவருடைய இருபது லட்ச ரூபாய் பைக்கை ஆட்டயைப்போட (திண்டிவனம் ஏரியால இந்த வார்த்தை எல்லாம் புழங்குவாங்களானு தெரியல) அவருக்கு உதவுவது போல சேருகிறார் ரவி கிருஷ்ணா. பிறகு அவரே நாயகனுக்கு நாயகியைக் கண்டுபிடிக்க உதவுகிறார்.
காதல்ல மொத்தம் மூணு வகை இருக்காம், லவ், பிக் லவ், க்ரேட் லவ். லவ் ரெண்டு மாசம் எஃபக்ட் இருக்குமாம், பிக் லவ் ரெண்டு வருஷம் எஃபக்ட் இருக்குமாம். க்ரேட் லவ்னா மொத்த வாழ்க்கையையே மாத்திடுமாம். இந்த படம் மூணாவது வகை காதலைப் பத்தி தான் பேச போகுதுனு படத்து பேரை வெச்சே சொல்லிடலாம்.
படத்துல எனக்கு பிடித்த விஷயங்களை சொல்லிடறேன்.
படம் பார்க்கவே ஜாலியா இருந்தது. ரவி கிருஷ்ணா இப்படி எல்லாம் கூட நடிப்பாரானு ஒரு சந்தேகம். ஒரு வகைல அவருக்கு ஏத்த கேரக்டர் தான். அதை அழகா செய்திருந்தார். அவர் பேசற தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்சது. டயலாக்ஸும் அருமை. “உங்க பைக்கு சும்மா பறக்குது பாஸு. ஜப்பான்காரன்னா சும்மாவா? அவன் மூக்கு தான் சப்பை. மூளை செம்ம ஷார்ப்பு” இந்த மாதிரி பல வசனங்கள் எனக்கு பிடிச்சிருந்தது. ரவி கிருஷ்ணா படத்துக்கு பெரிய ப்ளஸ். 7G படத்துக்கு பிறகு அவர் நல்லா பண்ண படமா இது தான் எனக்கு தெரிஞ்சிது.
கமிலினி வழக்கம் போல ரொம்ப அழகு, ரொம்ப அமைதி. செம ஹோம்லி.
அடுத்து கதாநாயகனா அறிமுகமான ஷர்வானந்தும் குறை சொல்ற மாதிரி இல்லை. முதல் படத்துக்கு நிறைவா செஞ்சிருக்காருனே சொல்லலாம். குறிப்பா ஆக்ஷன் சீன்ல அவரோட பாடி லேங்வேஜ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சரியா அழ வரலை. ஆனா முதல் படம்னு மன்னிச்சிடலாம்.
படத்துல டச்சிங் சீன்ஸ் நிறைய இருக்கு. கமிலினி அறிமுகமே அப்படி ஒரு டச்சிங் சீன்ல தான்.
”ஜெய் சம்போ சம்போ சம்போ” பாட்டு எனக்கு பிடிச்சிருந்தது.
படத்துல சில குறைகளும் இருக்கு. அநேகமா இது தெலுகு படம் காப்பியா இருக்கும்னு நினைக்கிறேன். நக்சலைட் சீன்ஸ் எல்லாம் அப்படி தான் தெரியுது. திண்டீவனம் ஏரியால எங்க நக்சலைட்ஸ் இருக்காங்க? அந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் தெலுகு படத்துக்கு தான் ஒத்து வரும். அதையெல்லாம் தூக்கிட்டு தமிழ் படத்துக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கனும்.
அதே மாதிரி படத்தை இன்னும் ரொம்ப அழகா கவிதை மாதிரி சொல்லியிருக்கலாம்னு தோணுது. கொஞ்சம் வெட்டியிருக்கணும். அப்பறம் ரசிக்கிற மாதிரியான காட்சிகளை இன்னும் அதிகமாக்கியிருக்கலாம்.
பார்க்க வாய்ப்பு கிடைத்தா தவறாம பார்க்கலாம்.
15 comments:
me the first
படம் எனக்கும் நல்லாவே பிடிச்சிருந்தது.... அதிலும் ரவிகிருஷ்ணாவின் comedy ரொம்ப நல்லாவே இருந்தது......
தெலுங்கு படமேதான்.... கம்யம்னு நெனக்கிறேன்.. அதுல அதே நாயகன்... ரவிகிருஷ்ணா கேரக்டர தெலுங்கு வினோத் பண்ணான்னு நெனக்கிறேன் :))
நீங்க நெனைச்சது சரிதான். தெலுகு படத்தோட ரீமேக்தான். நம்ம மலர்வனம் லஷ்மியோட விமர்சனம் படிச்சுட்டு dvd வாங்கினப்போ கடைக்காரர்(அவரும் தெலுகு) சொன்னார். தெலுகுல ஹிட்டாம். ரவி கிருஷ்ணா ரோலை வேற யாரோ செய்ததா சொன்னார். நீங்க எப்படி மிஸ் செஞ்சிங்க? ரவி கிருஷ்ணா நல்லா பண்ணியிருந்தார்.ஆனா படம் கொஞ்சம் வள வள .
சித்ரா
படத்திலே ரவி கிருட்டினா வரும் பகுதி மட்டுமே மீண்டும் படமாக்கப்பட்டதாம்..மற்றதெல்லாம், தெலுங்கின் மூலமும், டப்பிங்கில் மொழி மாற்றியதாம்..
ஃஃஃஃஃஃஃஃஃ
ரவி கிருட்டினா நடந்த பொன்னியின் செல்வன் படமும் நிறைவாகவே இருக்கும்...
மற்றபடி...படம் எனக்கும் பிடித்திருந்தது...மரண மொக்கைகளுக்கு இந்தப் படம் எவ்வளவோ தேவலை !
கம்யம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். ஆனா பாதிப்படம் அப்படியே உபயோக படுத்தி இருப்பார்கள். அதில் நம்ம குறும்பு நரேஷ் பின்னி பெடலெடுத்திருப்பார். அவரைப் பார்த்தால் ரவிகிருஷ்ணா ..ம்ம்ம்
தெலுங்கில் பார்த்தபோது தனுஷ் செய்தால் நல்லாயிருக்கும்னு நினைச்சேன்..அல்லது ஜீவா.. பட்டய கிளப்பி இருக்கும்
// இவன் said...
me the first//
ஆமாம் பாஸ் நீங்க தான் ஃபர்ஸ்ட் :)
// இவன் said...
படம் எனக்கும் நல்லாவே பிடிச்சிருந்தது.... அதிலும் ரவிகிருஷ்ணாவின் comedy ரொம்ப நல்லாவே இருந்தது......
//
ஆமாம்.. அது தான் படத்துக்கு பெரிய ப்ளஸ் :)
// ஜியா said...
தெலுங்கு படமேதான்.... கம்யம்னு நெனக்கிறேன்.. அதுல அதே நாயகன்... ரவிகிருஷ்ணா கேரக்டர தெலுங்கு வினோத் பண்ணான்னு நெனக்கிறேன் :))//
ஓ... எப்படி மிஸ் பண்ணனு தெரியலையே :(
அல்லரி நரேஷ் பொல.. கார்க்கி கீழ சொல்லிருக்காரு :)
//Anonymous said...
நீங்க நெனைச்சது சரிதான். தெலுகு படத்தோட ரீமேக்தான். நம்ம மலர்வனம் லஷ்மியோட விமர்சனம் படிச்சுட்டு dvd வாங்கினப்போ கடைக்காரர்(அவரும் தெலுகு) சொன்னார். தெலுகுல ஹிட்டாம். ரவி கிருஷ்ணா ரோலை வேற யாரோ செய்ததா சொன்னார். நீங்க எப்படி மிஸ் செஞ்சிங்க? ரவி கிருஷ்ணா நல்லா பண்ணியிருந்தார்.ஆனா படம் கொஞ்சம் வள வள .
சித்ரா//
நான் எப்படி மிஸ் பண்ணேனு தெரியலை. லஷ்மி அக்காவோட ரிவியுவூம் படிக்கலை :(
கடைசி அந்த நக்சலைட்ஸ் சீன் எல்லாம் தூக்கியிருக்கலாம்னு நினைக்கிறேன்...
படம் பேரை ஒழுங்கா வெச்சிருந்தா இன்னும் நாலு நாள் சேர்ந்து ஓடியிருக்கும்னு நினைக்கிறேன் :)
என் ஃபிரெண்ட் ஒருத்தனுக்கு இப்ப தான் இந்த படத்தைப் பத்தி சொன்னேன். படம் பேரைக் கேட்டாலே கேவலமா இருக்கேடானு சொல்லிட்டான் :)
//TBCD said...
படத்திலே ரவி கிருட்டினா வரும் பகுதி மட்டுமே மீண்டும் படமாக்கப்பட்டதாம்..மற்றதெல்லாம், தெலுங்கின் மூலமும், டப்பிங்கில் மொழி மாற்றியதாம்..
//
ஓ! எனக்கு அப்படி தெரியலையே. சரியா கவனிக்காம விட்டுட்டேன் போல :)
ஃஃஃஃஃஃஃஃஃ
//ரவி கிருட்டினா நடந்த பொன்னியின் செல்வன் படமும் நிறைவாகவே இருக்கும்...
//
பொன்னியின் செல்வன் கொஞ்சம் ஓகே...
//மற்றபடி...படம் எனக்கும் பிடித்திருந்தது...மரண மொக்கைகளுக்கு இந்தப் படம் எவ்வளவோ தேவலை //
ஆமாம் நிச்சயமாக :)
//கார்க்கி said...
கம்யம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். ஆனா பாதிப்படம் அப்படியே உபயோக படுத்தி இருப்பார்கள். அதில் நம்ம குறும்பு நரேஷ் பின்னி பெடலெடுத்திருப்பார். அவரைப் பார்த்தால் ரவிகிருஷ்ணா ..ம்ம்ம்
தெலுங்கில் பார்த்தபோது தனுஷ் செய்தால் நல்லாயிருக்கும்னு நினைச்சேன்..அல்லது ஜீவா.. பட்டய கிளப்பி இருக்கும்
//
ஓ! அல்லரி நரேஷா? மிஸ் பண்ணிட்டனே...
ஜீவா பண்ணியிருந்தா படம் கிளப்பியிருக்கும். ரவி கிருஷ்ணா கூட ஓகே தான். ஆனா ஜீவாக்கு சூப்பரா இருந்திருக்கும் :)
இந்த படம் வந்ததே தெரியலை :)
பாக்கலாம்கறிங்க??
பாத்துருவோம்.
பார்த்திடறேன்:)
Post a Comment