அன்புள்ள பர்மி குட்டிக்கு,
இது நான் உனக்கு எழுதும் இரண்டாவது கடிதம். நம்ம நைனாக்கு வேற வேலையே இல்ல போல, சும்மா லெட்டரே எழுதிட்டு இருக்காருனு நீ நினைக்கலாம். நீ என் பக்கத்துல இருந்தா இது எல்லாம் எழுத நிச்சயம் எனக்கு நேரம் கிடைக்காது. நீ அவ்வளவு அட்டகாசம் பண்றதா உங்க அம்மா கம்ப்ளைண்ட் பண்றாங்க. இருந்தாலும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காம ரொம்ப சமத்தா இருக்கனு இது வரைக்கும் வந்த ரிப்போர்ட்ஸ் சொல்லுது. நீ எங்க போனாலும் அங்க இருக்குற எல்லாரையும் அட்ராக்ட் செஞ்சிடறனு எல்லாருமே சொல்லிட்டாங்க. உனக்கு தினமும் திருஷ்டி சுத்தி போட சொல்லி தான் சொல்றாங்க. இதைப் படிக்கும் போதும் அதே மாதிரி எங்களுக்கு பேர் வாங்கி தர மாதிரி இருந்தா சந்தோஷம்.
இது என் லாப்டாப்பில் இருக்கும் படம்.
சரி, நான் ரொம்ப் ப்ளேட் போட விரும்பலை. இன்னைக்கு ஒரு கதை சொல்லப் போறேன். இந்தக் கதையைப் படிக்கும் போது ரொம்ப வித்யாசமா இருக்கும். இந்த மாதிரி ஒரு கதையை நான் எங்க நைனா டயரில படிச்சிருக்கேன். 1982வது வருஷ டைரி அது. அந்த வருஷம் தான் நான் பொறந்தேன். அது படிச்சிட்டு உன் பாட்டிக்கிட்ட திட்டு வாங்கினேன். படிச்ச பையன் தானே நீ, என்ன இருந்தாலும் அப்பா டைரியைப் படிக்கலாமானு? அந்த மாதிரி எல்லாம் நீ திட்டு வாங்க வேண்டாம்னு தான் நானே அதை உனக்கு எழுதி வெச்சிடறேன்.
குழந்தை பிறக்கப் போகுதுனு தெரிந்தவுடனே, நிச்சயம் அது இந்தியாவில் தான் பிறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, இன்று அனைவரையும் வரவேற்று நல்வாழ்வு கொடுக்கும் அமெரிக்கா கடைசி வரை அப்படி இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. சிறுபான்மையினராக இந்த இடத்தில் என் சந்ததியினர் வாழ்வதில் விருப்பமும் இல்லை. பிற்காலத்தில் எனக்கு பிறகு நீங்கள் வந்து இங்கே வாழலாம். அதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் இதை நான் ஆரம்பிக்க வேண்டாம் என்ற ஒரு எண்ணம் தான். மேலும் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்லயே படிச்சிட்டேன், அம்மா, அப்பாவோட கொஞ்ச நாளாவது சந்தோஷமா இருக்கணும் என்ற எண்ணமும் இருக்கிறது.
உன் பாட்டி சமையலுக்கு ஈடு இணையே இல்லை. நான் சும்மா சொல்லல. இது நம்ம சொந்தக்காரவங்க எல்லாருமே சொல்ற ஒரு விஷயம் தான். ஆனா அதை தொடர்ந்து சாப்பிடும் கொடுப்பினை எனக்கு இல்லை. அவர்களை இந்த நாட்டிற்கு கொண்டு வர முடியாது. என் அம்மாவால் ஒரு வாரம் கூட இங்கு தங்க முடியாது. அவர்களை இங்கு அழைத்து வரும் எண்ணமும் இல்லை. இங்கே பணம் சம்பாதிக்க வந்திருக்கிறேன். ஓரளவு சம்பாதித்தவுடன் இந்தியா வந்துவிடுவேன். இப்படி பல காரணம். அதனால் உனக்கு இந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. நான் எடுத்த இந்த முடிவு முட்டாள் தனமாக இருக்கலாம். அப்படி இருந்தால் என் முட்டாள் தனத்தை நீ உன் புத்திசாலித்தனத்தால் ஈடுகட்டி கொள்ளவும்.
உன் அம்மா 2008 ஜூன் மாதம் இந்தியா சென்றாள். என்னை 2008 அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியா அனுப்பி விட்டார்கள். அது என் விருப்பத்தின் பேரில் தான். நீ பிறக்கும் போது உன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை. அதை விட என் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம். வந்தவுடன் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தேன். நீ நவம்பர் இருபத்தி நாலு அன்று பிறப்பாய் என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதனால் அப்பொழுது ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.
சென்னையில் மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு, கள்ளக்குறிச்சி சென்றுவிட்டேன். திங்கள் அன்று பெங்களூரில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். என்னுடைய திட்டம் சனி இரவு புறப்பட்டு, ஞாயிறு காலை பெங்களூர் சென்று, ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்த நாள் அலுவலகம் செல்லலாம் என்று. அது மட்டுமில்லாமல் ஞாயிறன்று நண்பர்களுடன் ஊர் சுற்றலாம் என்றும் ஒரு திருட்டு எண்ணம்.
சனிக்கிழமை காலையில் வந்த என் மாமா (பக்தவச்சலம்), ”ஏன் பாலாஜி சனிக்கிழமையே போற? ஞாயிறு காலைல இட்லி கறிக்குழம்பு எல்லாம் சாப்பிட்டு புறப்படலாம் இல்லைனு” சொன்னாரு. எனக்கு பகல்ல ட்ராவல் பண்றது சுத்தமா புடிக்காது. ஒரு நாள் முழுக்க வீணாகிவிடும் என்ற எண்ணம் வேறு. அதனால் அவர் பேச்சை நான் கேட்கவில்லை. அவர் பல முறை சொல்லியும் நான் கேட்கவில்லை. பொதுவாக அவர் சொன்னால் நான் கேட்பேன். அன்றும் கேட்டிருக்கலாம்.
சனிக்கிழமை புறப்பட்டு பெங்களூர் சென்றுவிட்டேன். 2006 பிப்ரவரில தான் நான் பெங்களூர்ல இருந்து பாஸ்டன் புறப்பட்டேன். 2008 நவம்பர் 2 அன்று நான் பெங்களூர் சென்ற பொழுது எனக்கு நான் இறங்க வேண்டிய இடமே தெரியவில்லை. எலக்ட்ரானிக் சிட்டிக்கு நான் வைத்திருந்த அடையாளங்கள் முழுதும் அழிக்கப்பட்டிருந்தன. ரோடிலிருந்து இன்ஃபோஸிஸ் பில்டிங்கே தெரியவில்லை. மடிவாளா சென்று அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு ஆட்டோவில் வந்து சேர்ந்தேன். ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்லா பேசினார். சார் காலைல நாலரை மணிக்கு வந்து விடறேன், ஒரு பத்து ரூபாய் சேர்த்து கொடுங்க சார்னு கேட்டாரு. மத்த எல்லாரும் ஆட்டோ ஸ்டாண்ட்ல அடாவடியா விலை பேசிய போது இவர் அன்பாக பேசினார். அதற்காக அவர் கேட்டதை விட பத்து ரூபாய் சேர்த்தே கொடுத்தேன். ஆல்பம்னு ஒரு படத்துல க்ளைமாக்ஸ்ல விஜயகுமார் சொல்வது, ஒருத்தன் நல்லது பண்ணும் போது அதற்குரிய பலனை நாம அவனுக்கு கொடுக்கணும். அப்ப தான் நல்ல விஷயங்கள் பரவும்னு. அது எனக்கு மறக்கவே இல்லை.
கெஸ்ட் அவுஸ்ல போய் நான் என் ரூமில் செட்டில் ஆகும் பொழுது மணி ஐந்து. தூக்கம் வரவில்லை. டீவி பார்த்து கொண்டிருந்தேன். ஒரு ஏழரை மணி வாக்கில் என் நண்பன் பரட்டைக்கு ஃபோன் செய்தேன் (அவன் பெயர் அருள் மாதரசன். One of my Best Friend). என்னிடம் செல்ஃபோன் இருந்தது, ஆனால் சிம் கார்ட் இல்லை. அன்று தான் சென்று வாங்க வேண்டும் என்பது திட்டம். பத்திரமாக ஊர் போய் சேர்ந்தேனா என அம்மா, நைனா பயந்து கொண்டே இருப்பார்கள். அதனால் அவனுக்கு ஃபோன் செய்து, கள்ளக்குறிச்சிக்கு ஃபோன் செய்து சொல்லிவிட சொன்னேன். அவனுக்கு அன்று MBA க்ளாஸ் இருந்ததால் மதியம் ஒரு மணிக்கு வந்து என்னை வெளியே அழைத்து சொல்வதாக சொல்லியிருந்தான். அவனால் என்னை அழைக்க முடியாது. அதனால் அவனை மதியம் நான் அழைப்பதாக சொல்லியிருந்தேன்.
கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். பிறகு பத்து மணி வாக்கில் எழுந்து குளித்துவிட்டு, கம்பெனியை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்து சென்றேன். என்னடா சுத்திப் பாக்கற அளவுக்கு என்ன இருக்குது நினைக்காதே. நடந்து சென்றால் இன்போஸிஸை சுற்றிப் பார்க்க குறைந்தது முப்பது நிமிடமாவது எடுக்கும், நன்றாக சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால் இரண்டு மணி நேரம் கூட ஆகலாம். உள்ளே STD செய்ய ஒரு டெலிஃபோன் பூத் இருந்தது. அதைப் பிடித்தால் உன் அம்மாவிற்கும், என் அம்மாவிற்கும் ஃபோன் செய்யலாம் என்ற திட்டமும் இருந்தது. அன்று ஞாயிறு என்பதால் கடை மூடியிருந்தது.
மீண்டும் கெஸ்ட் அவுஸ் வந்து சேரும் போது மணி பதினொன்று முப்பது ஆகியிருந்தது. ஒரு அரை மணி நேரம் டீவி பார்த்து கொண்டிருந்தேன். பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. பரட்டைக்கு ஃபோன் செய்துவிட்டு அவனுடைய திட்டத்தை தெரிந்து கொண்டு சாப்பிட செல்லலாம் என்ற எண்ணத்தில் அவனை அழைத்தேன். அவனுடைய காலர் ட்யூன் “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா” என்ற பாடல். இரண்டாவது ரிங்கில் எடுத்துவிட்டான்.
”பாலாஜி, நானே உனக்கு எப்படி ரீச் பண்றதுனு ரொம்ப நேரமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன். உன் வீட்ல பெயின் வந்துடுச்சினு, ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்களாம். உடனே கிளம்பு. நான் எலக்ட்ரானிக் சிட்டி தான் வந்துட்டு இருக்கேன். எந்த கேட்டுக்கு வரதுனு சொல்லு நான் இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்”னு சொன்னான்.
எனக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரியவில்லை. உடனே அனைத்தையும் பேக் செய்துவிட்டு கிளம்பினேன். மூன்று வருடத்திற்கு முன்பு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் ஐந்து வழிகள் இருந்தன. பாதுகாப்பு காரணமாக அதை இரண்டாக்கி விட்டார்கள். பரட்டைக்கு அதில் ஒரு கேட் தான் தெரியும். அதனால் அவனுக்கு தெரிந்த கேட் ஒன்றிற்கு வர சொல்லிவிட்டு, சைக்கிளில் புறப்பட்டேன். நான் வெளியே சென்று பத்து நிமிடத்தில் அவன் வந்து சேர்ந்துவிட்டான். உடனே அவனிடமிருந்து ஃபோன் வாங்கி உன் அம்மாவிற்கு அழைத்தேன். உன் தாத்தா தான் எடுத்தார்.
”மாப்பிளை, காலைல அஞ்சு மணிக்கு எல்லாம் பெயின் வர ஆரம்பிச்சிடுச்சி. உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு வந்துட்டோம். எப்படியும் சுகப்பிரசவம் ஆகிடும்னு டாக்டர் சொல்றாங்க. நீங்க உடனே புறப்பட்டு வாங்க மாப்பிளை”னு சொன்னாரு. அப்படியே உன் அம்மாவிற்கும் பேசினேன். ரொம்ப வலிப்பதாக கூறினாள். சுமார் நான்கு மணி நேரமாக இப்படி வலி இருப்பதாக கூறினாள். பொறுத்து கொள்டா, பாப்பா வந்துட்டா எல்லாம் சரியாகிடும். நான் உடனே புறப்பட்டு வரேனு சொன்னேன். நான் சொன்னது சரியா தப்பானு கூட எனக்கு தெரியாது. ஏதாவது சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக சொன்னேன்.
என் அம்மா, நைனாவும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்கள். நான் ஃபோன் செய்யும் போது அவர்கள் தாம்பரத்தில் இருந்தார்கள். நான் டென்ஷனாக இருப்பதைப் புரிந்து கொண்ட பரட்டை, என்னை ஊருக்கு எப்படி சீக்கிரம் அனுப்புவது என்று வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். ஊருக்குள் சென்று டிராவல்ஸ் வண்டியை பிடித்து செல்வதை விட, ஓசூர் சென்று அங்கிருந்து செல்வதே நல்ல திட்டமாகப்பட்டது. எலக்ட்ரானிக் சிட்டியிலே என் பெயரில் லீஸ் எடுத்த வீடு ஒன்று இருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு எடுத்த வீடு, ஆள் மாறி ஆள் வந்து கொண்டிருந்தார்களே தவிற அதை யாரும் காலி செய்யவில்லை. அங்கே சென்று என் பெட்டியை எல்லாம் வைத்துவிட்டு, பரட்டையின் பல்சரில் ஓசூருக்கு புறப்பட்டோம்.
வழி முழுதும் ஃபோன் மேல் ஃபோன். எப்படியும் ஒரு மணி நேரத்தில் நீ பிறந்துவிடுவாய் என்பது தெரிந்தவுடன், அதைத் தெரிந்து கொண்டு புறப்படலாம் என்று திட்டமிட்டேன். ஓசூர் சரவண பவனில் சென்று இருவரும் நன்றாக சாப்பிட்டோம். பிறக்க போவது பையனா பெண்ணா என்பது எங்களுக்கு தெரியாது. அமெரிக்காவில் சொல்கிறோம் என்று சொல்லியும் நாங்கள் கேட்கவில்லை. அனைவரும் பையன் என்றே நினைத்திருந்தோம். அதற்கு முக்கிய காரணம் எனது நாடி ஜோதிடம். அதுவரை அதில் சொல்லியது எல்லாம் துல்லியமாக நடந்து வந்தது. எங்களுக்கு தெரிந்து நாங்கள் சொல்லவில்லை என்பது என் அம்மாவின் எண்ணம்.
சாப்பிட்டு விட்டு ஓசூர் பேருந்து நிலையம் வந்தோம். அது தற்காலிகமாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம். சென்னை பேருந்துகள் அங்கே நிறைய இருந்தன. ஆனால் பஸ் ஏறிவிட்டால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என்று, நீ பிறக்கும் வரை அந்த பேருந்து நிலையத்தில் காத்திருக்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். என் வாழ்வில் மிகவும் பரபரப்பாக இருந்த நிமிடங்கள் அவை. அதை எதனுடனும் ஒப்பிட எனக்கு தெரியவில்லை.
இந்த நிமிடங்கள் என் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தியாவே வந்திருந்தேன். ஆனால் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு இடத்தில் இருந்தேன், அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சில் சில பிச்சைக்காரர்கள் படுத்திருந்தார்கள். நான் போய் அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டேன். என் டென்ஷன் எதுவும் அவர்களை தொற்றி கொள்ளாமல் அவர்கள் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தார்கள்.
என்னுடைய டென்ஷனைப் பார்த்து பரட்டை என் அருகே வந்து அமர்ந்து கொண்டான். ”டென்ஷன் ஆகாதடா பாலாஜி. எல்லாம் நல்லபடியா நடக்கும்”னு சொன்னான். அது எனக்கும் தெரிந்திருந்தது. உடனே என் மாமனாரிடமிருந்து அழைப்பு. “சிசேரியன். பெண் குழந்தை மாப்பிளை. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. எந்த பிரச்சனையும் இல்லை”னு சொன்னாரு. உடனே பரட்டையிடம் சொன்னேன், “மகாலஷ்மியே வந்து பிறந்திருக்காடா. கங்கிராட்ஸ்”னு சொன்னான். எனக்கு கண் கலங்கிவிட்டது (பரட்டை ரோமன் காத்தலிக். இருந்தாலும் அவன் மகாலஷ்மினு தான் சொன்னான். இதை எதுக்கு இங்க சொல்றேனு பாக்கறியா? நீ என்னை மாதிரி இருந்தா, அவர் க்ரிஸ்டியனாச்சே, அவர் நிஜமாலுமே மகாலஷ்மினு தான் சொன்னாரானு நீ கேட்டாலும் கேட்கலாம்). சென்னை செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸில் ஏற்றிவிட்டான்.
நான் சென்னை வந்து சேரும் பொழுது மணி எட்டரை இருக்கும். உதயம் தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கினேன். உன் தாத்தா வந்து என்னை அழைத்து சென்றார். வழியெல்லாம் உன்னைப் பற்றிய புராணம் தான். நீ பிங் கலரில் இருப்பதாகவும் அங்கே இருந்த டாக்டர்கள் அனைவரும் உன்னைப் பற்றி பெருமையாக பேசியதாகவும் சொன்னார். அந்த மருத்துவமனையில்
முதல் மாடியில் உங்கள் அறை இருந்தது. நீ என் அம்மா மடியில் இருந்தாய். நேராக உள்ளே வந்த நான், உன்னைப் பார்க்காமல் என் மனைவியைப் பார்க்க சென்றேன். அவள் கையைப் பிடித்து நெற்றியில் ஒரு முத்தம் வைத்தேன். என் அம்மா, நைனா, மாமா, மாமியார் இருந்ததைப் பற்றி கவலைப்படவில்லை. அனைவரது கண்ணும் என் மேல் தான்.
என் அம்மா தான் பேச ஆரம்பித்தார்கள். ”நான் சொன்னேன் இல்லை. நேரா உன்னைப் பார்க்க தான் வருவான்னு” அப்படினு. நான் வருவதற்கு முன்பே அங்கே ஒரு வாக்குவாதம் நடந்ததாம், நான் வந்ததும் யாரை முதலில் பார்ப்பேன் என்று. உன்னைத்தான் பார்ப்பேன் என்று உன் தாத்தா சொல்லியிருந்தாராம். ”இல்லை, அவன் பொண்டாட்டியைத் தான் முதல்ல பார்ப்பானு” எங்க அம்மா சொல்லியிருந்தாங்களாம். அம்மா சொல்லைக் காப்பாற்றிய பிள்ளை. “சிசேரியனா இல்லாம நார்மல் டெலிவரியா இருந்திருந்தா நான் முதல்ல பாப்பாவைப் பார்த்திருக்கலாம்” அப்படினு சொன்னேன். அப்பவும் பார்த்திருப்பேனானு தெரியல.
இது செல்ஃபோன்ல எடுத்தது. உன்னோட முதல் ஃபோட்டோ. நீ பிறந்த இரண்டு நாட்கள் கழித்து எடுத்தது. உன் பாட்டி மடியில் இருக்கிறாய். நீ பிறக்கும் போது இந்த துணில இருக்கும் கலரை விட பிங்காக இருந்தாய்.
ஒரு நிமிடத்தில் உன்னை வந்து பார்த்தேன். இவ்வளவு பிங் நிறத்தில், இவ்வளவு அழகாக ஒரு குழந்தையை நான் பார்த்ததில்லை. இது பொய் இல்லை. சத்தியம். அவ்வளவு அழகு நீ. உன் கையை தொட்டுப் பார்த்தேன். என் வாழ்வின் மிகவும் சந்தோஷமான தருணம் அது. I was proud. அப்படியே உன்னையே கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்தேன்.
எனக்கு தூக்க தெரியாது. இருந்தாலும் என் அம்மா உன்னை என் மடியில் படுக்க வைத்தார்கள். அப்ப நான் எப்படி உணர்ந்தேனு எனக்கு வார்த்தைல எழுத தெரியலை. ரொம்ப சந்தோஷமா இருந்தேனு மட்டும் சொல்லலாம். நீ பிறந்து ஒரு மணி நேரம் வரை உன்னை வெளியே கொண்டு வரவில்லையாம். சரியாக உன் தாத்தா, பாட்டி இருவரும் கள்ளக்குறிச்சியிலிருந்து வந்த பிறகு தான் கொண்டு வந்தார்களாம். முதலில் உன் அம்மாவின் பாட்டியிடம் கொடுக்க சொல்லி என் அம்மா சொல்லிவிட்டார்களாம். வயதில் பெரியவர் கையில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கலாம் என்ற எண்ணத்தில். அடுத்து உன் பாட்டி கைகளில் நீ வந்தாய். ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பினேன். என் அம்மாவும், மாமியாரும் அங்கு இருந்து உன்னைப் பார்த்துக் கொண்டார்கள்.
இது ஒரு மாதத்திற்குள் எடுத்தது. நீ உன் அம்மாவின் பாட்டி கையில் இருக்கிறாய்.
அன்று இரவு நீ சரியாக தூங்காமல் அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசியை கொடுத்தாயாம். நான் அடுத்த நாள் காலை வந்தவுடன் உன் மேல் வந்த முதல் கம்ப்ளைண்ட் அது தான். அன்று முழுதும் உன்னுடன் தான் இருந்தேன். உன் தாத்தாவிற்கு தான் அலைச்சல் அதிகம். அன்று இரவு நான் வீட்டிற்கு செல்வதற்கு முன்,
“குட்டி. இன்னைக்கு ஒழுங்கா தூங்கணும். அவ்வாக்கு எல்லாம் கஷ்டம் கொடுக்க கூடாது. நல்ல பொண்ணுனு பேர் வாங்கணும். சரியா” அப்படினு சொல்லிட்டு போனேன். அடுத்த நாள் வந்தா ஆச்சரியம். நீ அன்னைக்கு சமத்தா தூங்கினயாம். நைனா சொன்னவுடனே கேட்டுட்டாளேனு எங்க அம்மாக்கு ஆச்சரியம். எனக்கு பெருமை.
அன்பு முத்தங்களுடன்,
நைனா...
35 comments:
என்னங்க குட்டிப்பாப்பாக்கு கதை சொல்றேன்னு உண்மைதமிழன் ரேஞ்சுக்கு எழுதி தள்ளீட்டீங்க. அப்பால வந்து மொத்தமா படிக்கறேன்.
படிச்சு முடிச்சுட்டேன். என்னாங்க ஒரே சென்டியா ஆக்கிட்டீங்க.
அந்த சில மணிநேர டென்ஷனோடு அங்கோ\எங்கோ உங்காந்திருப்பது தாங்க ஆம்பிளைகளோட பிரசவ வலி.
தல,
இது பாப்பாக்காக எழுதியது. உண்மையா எழுதணும்னு எழுதும் போது சுவையா எனக்கு எழுத வரலை. எல்லா தகவலையும் இதுல கொண்டு வர வேண்டும் என்பதும் என் விருப்பம். பிற்காலத்தில் படிக்கும் போது இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் தான் முக்கியமா தேவைப்படும் :)
//அந்த சில மணிநேர டென்ஷனோடு அங்கோ\எங்கோ உங்காந்திருப்பது தாங்க ஆம்பிளைகளோட பிரசவ வலி.
//
என்ன சொல்றதுனு எனக்கு தெரியல :)
பர்மிதா க்யூட்... :-)
உன் டென்ஷன் புரியுது...
நிச்சயம் அது இந்தியாவில் தான் பிறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்//
சரியான முடிவு....
எல்லா தகவலையும் இதுல கொண்டு வர வேண்டும் என்பதும் என் விருப்பம்//
100% ஒத்துக்கொள்கிறேன்.
குழந்தைக்கு தேவையான பதிவு... இன்னும் நிறைய எழுதிவையுங்கள்...privateஆக..
பாலாஜி! குட்டிம்மாவுக்கு என் அன்பு முத்தங்கள்!
good one :)
//// இங்கே பணம் சம்பாதிக்க வந்திருக்கிறேன். ஓரளவு சம்பாதித்தவுடன் இந்தியா வந்துவிடுவேன். ///
i think you are going behind false goals. life is too short Mr.
ippadi $ pinnaadi odinavanga yaarum, thirumbi poi naan paakkala.
குட்டிபாப்பா அழகா இருக்கு...
//சரவணகுமரன் said...
பர்மிதா க்யூட்... :-)
உன் டென்ஷன் புரியுது...
//
மிக்க நன்றி சரவணகுமரன் :)
//ஆ! இதழ்கள் said...
நிச்சயம் அது இந்தியாவில் தான் பிறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்//
சரியான முடிவு....
எல்லா தகவலையும் இதுல கொண்டு வர வேண்டும் என்பதும் என் விருப்பம்//
100% ஒத்துக்கொள்கிறேன்.
குழந்தைக்கு தேவையான பதிவு... இன்னும் நிறைய எழுதிவையுங்கள்...privateஆக..
//
நிச்சயம் இனிமே ப்ரைவேட் தான் :)
//அபி அப்பா said...
பாலாஜி! குட்டிம்மாவுக்கு என் அன்பு முத்தங்கள்!
1:08 AM//
ரொம்ப நன்றிண்ணா :)
// SurveySan said...
good one :)
//// இங்கே பணம் சம்பாதிக்க வந்திருக்கிறேன். ஓரளவு சம்பாதித்தவுடன் இந்தியா வந்துவிடுவேன். ///
i think you are going behind false goals. life is too short Mr.
ippadi $ pinnaadi odinavanga yaarum, thirumbi poi naan paakkala.
//
சர்வேஸ்,
என்னை நீங்க பார்ப்பீங்க :)
சூப்பர் போஸ்ட் வெட்டி!
வெட்டிப்பையலுக்கு ஒரு சுட்டிப் பொண்ணுன்னு சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க. :)
கண்டிப்பா பர்மிதா பெரியவளா வளர்ந்து இதை படிப்பாள். மிக அருமையா எழுதியிருக்கீங்க பாலாஜி.
பர்மிதா குட்டிக்கு அன்பு முத்தங்கள்.
தந்தையர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
வெட்டி சார்,
அருமையான பதிவு, நிச்சயம் உங்கள் பர்மிதா வளர்ந்து இதை படித்தால் பெருமை கொள்வார்கள்.
வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலோனோர் தங்களை போல் குறுகிய விடுமுறை காலத்தில் வந்து மனைவி பிரசவிக்கும் பொன்னான சமயத்தில் அருகில் இல்லாமல் வருத்தப்பட நேர்கின்றது. அது காலத்தின் கொடுமை என்றே தோன்றுகிறது.
குட்டிபாப்பா அழகா இருக்கு...
பாலாஜி,
இன்னும் எவ்வளவு நாளைக்கு என் கூட இல்லாம இதுமாதிரி லெட்டர் எழுதி ஏமாத்துவேன்னு பாப்பா உதை கொடுக்க போகுது.
யூ எஸ் ல பொறந்து இந்திய குடியுருமை நேரடியா பெற முடியாதா ? (18 வயசுக்கு பிறகு இல்லாம )
Wow ! Super Thala !
We can feel ur emotions !
//Sridhar Narayanan said...
சூப்பர் போஸ்ட் வெட்டி!
வெட்டிப்பையலுக்கு ஒரு சுட்டிப் பொண்ணுன்னு சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க. :)
//
நன்றி தல :)
சீக்கிரமே அவுங்க இங்க வந்தவுடனே போட்டுடலாம் :)
//Divyapriya said...
குட்டிபாப்பா அழகா இருக்கு...
//
ரொம்ப நன்றிமா :)
// மங்களூர் சிவா said...
கண்டிப்பா பர்மிதா பெரியவளா வளர்ந்து இதை படிப்பாள். மிக அருமையா எழுதியிருக்கீங்க பாலாஜி.
//
ரொம்ப நன்றி சிவாண்ணே!!!
//
பர்மிதா குட்டிக்கு அன்பு முத்தங்கள்.
தந்தையர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
//
இதற்கும் நன்றி :)
//ஜானி வாக்கர் said...
வெட்டி சார்,
அருமையான பதிவு, நிச்சயம் உங்கள் பர்மிதா வளர்ந்து இதை படித்தால் பெருமை கொள்வார்கள்.//
மிக்க நன்றி பாஸ் :)
//வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலோனோர் தங்களை போல் குறுகிய விடுமுறை காலத்தில் வந்து மனைவி பிரசவிக்கும் பொன்னான சமயத்தில் அருகில் இல்லாமல் வருத்தப்பட நேர்கின்றது. அது காலத்தின் கொடுமை என்றே தோன்றுகிறது.
//
விடுமுறைக்குனு வந்திருந்தா இருந்திருக்கலாம். வேலைக்குனு வந்தாச்சு. அதான் பிரச்சனையாகிடுச்சி பாஸ் :(
/ச்சின்னப் பையன் said...
குட்டிபாப்பா அழகா இருக்கு...
//
அப்படியே என்னை மாதிரி இருக்குனு எல்லாரும் சொல்றாங்க :-))
// மணிகண்டன் said...
பாலாஜி,
இன்னும் எவ்வளவு நாளைக்கு என் கூட இல்லாம இதுமாதிரி லெட்டர் எழுதி ஏமாத்துவேன்னு பாப்பா உதை கொடுக்க போகுது.
//
சீக்கிரமே வந்துடுவாங்க பாஸ் :)
//யூ எஸ் ல பொறந்து இந்திய குடியுருமை நேரடியா பெற முடியாதா ? (18 வயசுக்கு பிறகு இல்லாம )
//
பிறந்தவுடனே வாங்க முடியாது. ஐந்து வயதுல வாங்கலாம்னு நினைக்கிறேன்...
//nathas said...
Wow ! Super Thala !
We can feel ur emotions !
//
மிக்க நன்றி தல :)
romba azhaga ezhudhi irukeenga balaji...
//“சிசேரியன். பெண் குழந்தை மாப்பிளை. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. எந்த பிரச்சனையும் இல்லை”னு சொன்னாரு. உடனே பரட்டையிடம் சொன்னேன், “மகாலஷ்மியே வந்து பிறந்திருக்காடா. கங்கிராட்ஸ்”னு சொன்னான். எனக்கு கண் கலங்கிவிட்டது//
இதைப் படிக்கும்போது நிஜமாகவே எனக்கும் கண்கலங்கிவிட்டது.. உங்க பர்மிதா குட்டிக்கு நீங்க சேர்த்து வைக்கும் முக்கியமான சொத்து இந்த மாதிரி கடிதங்கள்தான்..
குட்டிப்பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்!! ரொம்ப அக்கறையுடந்தான் எழுதி இருக்கீங்க. (ப்ளேட் பொடலைனு சொல்லிட்டு......)
ஃபோட்டோஸ் சூப்பர், சுத்தி போடச் சொல்லுங்க...
மேட்டரும் சூப்பரு.. நீங்களும் ஒருதடவை சுத்தி போட்டுகுங்க, ஐ மீன் ஆணி அடிக்கிற சுத்தி.. :))))
:)))
அழகு!
எல்லாமே!
படிச்சு முடிச்சிட்டு எனக்கு ஒரு நிமிஷம் கண்ணு கலங்கிடுச்சுப்பா பாலாஜி. ஒரு அப்பாவோட ஃபீலிங்ஸ் இந்த பதிவு முழுக்க. நல்லா புரியுது.
அருமையான விவரிப்பு.
//தல,
இது பாப்பாக்காக எழுதியது. உண்மையா எழுதணும்னு எழுதும் போது சுவையா எனக்கு எழுத வரலை. எல்லா தகவலையும் இதுல கொண்டு வர வேண்டும் என்பதும் என் விருப்பம். பிற்காலத்தில் படிக்கும் போது இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் தான் முக்கியமா தேவைப்படும் :)//
இதை நான் படிக்கும்போதே உணர்ந்தேன்.
:)
பாலஜி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. அப்பாவனாவர்களுக்கு மட்டுமே இதன் அருமை தெரியும்..!! வாழ்த்துக்கள் குட்டி, தாய், தந்தை அனைவருக்கும்.. எனக்கும் அடுத்து எழுத நல்ல ஒரு தலைப்பை தந்திருக்கிறீர்கள்..
நிஜமாகவே எனக்கும் கண்கலங்கிவிட்டது.
Post a Comment