”பசங்க படத்தை நிச்சயம் மிஸ் பண்ணிடாத” இதை தேவ் அண்ணா, கைப்ஸ் அண்ணா ரெண்டு பேருமே சாட் பண்ணும் போது சொன்னாங்க.
நேத்து தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. என் ரூமெட்கிட்ட பயங்கர பில்ட் அப் கொடுத்துட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். இந்த வருஷத்துலயே இதை சிறந்த படம்னு வேற சொல்றாங்க. இன்னொரு அஞ்சலினு சொல்றாங்க அப்படி இப்படினு பயங்கர பில்ட் அப்.
பெயர் போடும் போதே ஓரளவு கிரியேட்டிவிட்டி தெரிஞ்சிது. சின்ன பசங்க விளையாட்டு எல்லாம் பேக் க்ரவுண்ட்ல வரும், பெயர் அப்படியே ப்ளாக் ஸ்கிரின்ல ஓடிட்டு இருக்கும். அதுக்கு அப்பறம் அந்த மூணு வாண்டுகளைப் பத்தி போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கும் போதும் அந்த பசங்களைக் காட்டும் போதும் ஓவர் பில்ட் அப்பா தெரிஞ்சிது.
அதே மாதிரி அன்புக்கரசு அறிமுகமும் செம பில்ட் அப். அவன் வண்டி ஓட்டறதும், எக்ஸர்சைஸ் செய்யறதும் ஏதோ பத்ரி படம் பார்க்கற எஃபக்ட்ல இருந்தது. எனக்கு அதைப் பார்க்கும் போது செம கடுப்பு. இந்த படத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பானு. அதுவும் சின்ன பசங்களுக்குள்ள கேங் வார்னு காட்டும் போது அதைவிட எரிச்சல். ஆனா அதுவே போக போக அந்த பசங்களால பெற்றோர்களுக்கிடைய ஆரம்பிக்கும் பிரச்சனைனு களம் மாறும் போது சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
அதுக்கப்பறம் அப்பா, அம்மாக்கிடைய நடக்கும் பிரச்சனை பசங்கள எப்படி பாதிக்குதுனு பார்க்கும் போது ஏதோ மனசைக் குத்த ஆரம்பித்துவிட்டது. அன்புக்கரசு அப்பாவும் வாத்தியாரும் பேசிக் கொள்ளும் இடம் மிகவும் ரசித்தேன். இந்த மாதிரி கணவன், மனைவி சண்டை நான் நிறைய பார்த்திருக்கேன். அதனால பாதிக்கப்பட்ட பசங்களும் எனக்கு தெரியும்.
என் அப்பா, அம்மா கூட நாங்க சின்ன வயசுல இருக்கும் போது இப்படி நிறைய சண்டைப் போட்டிருக்காங்க. அன்புக்கரசு அழுத மாதிரி நான் கூட அழுதிருக்கேன். அப்பறம் நான் பெருசாக பெருசாக சண்டை ஓரளவு குறைந்தது. இப்பக்கூட எப்பவாது சண்டைப் போட்டா ”ஆமாம் புது மணத் தம்பதிகள். சண்டை போடறீங்க. நிறுத்துங்க” அப்படினு நான் கிண்டல் பண்றதுல ரெண்டு பேரும் சண்டையை நிறுத்திடுவாங்க.
அப்பறம் அன்புக்கரசு சித்தப்பாக்கும், ஜீவா அக்காக்கும் நடுவுல ஓடற காதல் ட்ராக் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரசிக்கும்படியா இருந்தது. அதுவும் பல நாடுகள்ல இருந்து ஃபோன் பண்ற கான்செப்ட் அட்டகாசம். நல்லா சிரிக்க வைத்தது.
ஜீவா, அன்பரசு ரோல் பண்ண சின்ன பசங்க ரெண்டு பேருமே அட்டகாசமா நடிச்சிருந்தாங்க. குறிப்பிட்டு சொல்லனும்னா எனக்கு ஜீவா ரோல்ல பண்ண குட்டிப் பையன் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. அதே போலவே பகோடா, குட்டிமணி, அப்பத்தா ரோல்ல நடிச்ச பசங்களும் அருமை. படத்துல நடிச்ச யாருமே குறை சொல்ற மாதிரி நடிக்கல. எல்லாமே இயல்பான நடிப்பு தான்.
சில காட்சிகள்ல இயல்புக்கு மீறி, பிஞ்சிலே முத்தின மாதிரி காட்டியிருந்தாலும் ரசிக்கும் படியாவே இருந்தது. இந்த படத்தை பசங்களுக்கு ரெக்கமெண்ட் பண்றதை விட பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நான் ரெக்கமெண்ட் செய்வேன். நிச்சயம் பாருங்க. முதல் பாதியை இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருந்தா மிகச் சிறந்த படமா வந்திருக்கும். சசிக்குமார் நல்ல இயக்குனர் மட்டுமில்ல நல்ல தயாரிப்பாளரும் கூடனு நிருபிச்சிருக்காரு. இயக்குனர் பாண்டிராஜுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும்.
தியேட்டரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும்.
சும்மா கடைசியா ஒரு பஞ்ச் : “பசங்க” - பசங்களுக்கான படமல்ல. பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக
17 comments:
படத்தின் ஆரம்ப காட்சிகளில் எனக்கும் என்னடா ஓவர் பில்டப்பா இருக்கேன்னுதான் தோனுச்சு,ஆனால் அதன் பிறகு இது படமா இல்ல நிஜமாங்கிற மாதிரி அப்படி ஒரு இயல்பான திரைக்கதை அமைப்பு.இயக்குனர் பாண்டியராஜனின் அடுத்த படத்திற்கு இப்போதே வெயிட்டிங்...
பசங்க படத்தைப் பற்றிய என்னுடைய பார்வை இங்கே:
//பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக//
அவ்வ்வ் அப்ப நான் பார்க்ககூடாதா?
வெட்டி, புஜ்ஜிமா கேரக்டர் பத்தி எதுவுமே சொல்லாம விட்டுடீங்க :)
கொஞ்ச சீன்ல வந்தாலும் எனக்கு அவன ரொம்ப பிடிச்சுது .
அப்புறம் சோப்பிகண்ணு ஹீரோவோட வீட்டுல போன் பண்ணி கலாய்கிற சீனும் ரொம்ப நல்ல இருந்துச்சு.
உங்களது 'பஞ்ச்' தான் சற்று தொம்பைபோல் உள்ளது.
நானும் படம் பார்க்கணும்னு காத்திட்டு இருக்கேன். பக்கத்து தியேட்டருக்கு வரட்டும்... :))))
அப்புறம் படத்தின் தலைப்பைப் பற்றி ஒரு சந்தேகம்.
'பசங்க' என்ற வார்த்தை ஒன்லி 'சிறுவயது பையன்களை' மட்டும் குறிக்கும் சொல்லா? அப்படியென்றால் இந்தப் படத்தில் சிறுவயதுப் 'பொண்ணுங்க' இல்லையா?
நான் இன்னிக்கு பாக்க போறேன் :)
விமர்சனங்களை படிக்க படிக்க எரிச்சலாகுது. இன்னும் இந்த படம் பார்க்கலையேன்னு :((((
அருமையான அறிமுகம். இந்த ஊர்ல ரிலீஸ் ஆகுமான்னு தெரியலை டிவிடி கிடைத்தால் பார்க்கிறேன்.
//நாடோடி இலக்கியன் said...
படத்தின் ஆரம்ப காட்சிகளில் எனக்கும் என்னடா ஓவர் பில்டப்பா இருக்கேன்னுதான் தோனுச்சு,ஆனால் அதன் பிறகு இது படமா இல்ல நிஜமாங்கிற மாதிரி அப்படி ஒரு இயல்பான திரைக்கதை அமைப்பு.இயக்குனர் பாண்டியராஜனின் அடுத்த படத்திற்கு இப்போதே வெயிட்டிங்...
பசங்க படத்தைப் பற்றிய என்னுடைய பார்வை இங்கே://
நாடோடி இலக்கியன்,
உங்க விமர்சனம் அருமை :)
//குசும்பன் said...
//பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக//
அவ்வ்வ் அப்ப நான் பார்க்ககூடாதா?
//
இன்னும் ஒரு நாலஞ்சி மாசம் கழிச்சிப் பார்க்கலாம் :)
//மனுநீதி said...
வெட்டி, புஜ்ஜிமா கேரக்டர் பத்தி எதுவுமே சொல்லாம விட்டுடீங்க :)
கொஞ்ச சீன்ல வந்தாலும் எனக்கு அவன ரொம்ப பிடிச்சுது .
அப்புறம் சோப்பிகண்ணு ஹீரோவோட வீட்டுல போன் பண்ணி கலாய்கிற சீனும் ரொம்ப நல்ல இருந்துச்சு//
ஆஹா.. அதை மிஸ் பண்ணிட்டனே... அந்த குழந்தையும் பட்டையைக் கிளப்பியிருக்கும் :)
அந்த ட்ராக் முழுசுமே அருமை :)
//ஊர்சுற்றி said...
உங்களது 'பஞ்ச்' தான் சற்று தொம்பைபோல் உள்ளது.
நானும் படம் பார்க்கணும்னு காத்திட்டு இருக்கேன். பக்கத்து தியேட்டருக்கு வரட்டும்... :))))
//
ஹி ஹி ஹி :)
வந்தவுடனே நிச்சயம் பாருங்க பாஸ் :)
//அப்புறம் படத்தின் தலைப்பைப் பற்றி ஒரு சந்தேகம்.
'பசங்க' என்ற வார்த்தை ஒன்லி 'சிறுவயது பையன்களை' மட்டும் குறிக்கும் சொல்லா? அப்படியென்றால் இந்தப் படத்தில் சிறுவயதுப் 'பொண்ணுங்க' இல்லையா?//
முக்கியமான கேரக்டர் நாலு பசங்க தான். அதனால தான் பசங்கனு வைச்சிருக்காங்க :)
//Divyapriya said...
நான் இன்னிக்கு பாக்க போறேன் :)//
தவறாம பாரும்மா :)
//சென்ஷி said...
விமர்சனங்களை படிக்க படிக்க எரிச்சலாகுது. இன்னும் இந்த படம் பார்க்கலையேன்னு :(((//
ஆன்லைன்ல தான் இருக்கே...
//மங்களூர் சிவா said...
அருமையான அறிமுகம். இந்த ஊர்ல ரிலீஸ் ஆகுமான்னு தெரியலை டிவிடி கிடைத்தால் பார்க்கிறேன்.
4:50 AM//
நிச்சயம் தவறாம பாருங்க சிவாண்ணே!!!
//பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக//
Sooooooper punch!
உன்னால நான் கேட்டேன், என்னால நீ கேட்ட
//உங்களது 'பஞ்ச்' தான் சற்று தொம்பைபோல் உள்ளது. //
இந்த எனது முந்தைய பின்னூட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இப்போது நான் படத்தைப் பார்த்துவிட்டேன்.
உங்கள் பஞ்ச்சை நூறு சதவீதம் வழிமொழிகிறேன்.
அப்புறம்,
எனது காதில் இப்போது எப்போதும் ஒலித்துக்கொண்டிருப்பது 'ஒரு வெட்கம் வருதே வருதே'... :)
Post a Comment