தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, August 30, 2006

பிரிவு - 4

பிரிவு-1 பிரிவு-2 பிரிவு-3

"திவ்யா, நான் வர வாரம் இல்லாம அடுத்த வாரம் சனிக்கிழமை சிக்காகோ கிளம்பறன்"

"ஹிம்... இப்பதான் ஐஸ் சொன்னா"

"இப்ப சந்தோஷமா???"

"என் ஃபிரெண்ட் ஆன் சைட் போனா எனக்கு சந்தோஷம்தான். ஏன் உனக்கு இல்லையா???"

"ஹிம்... அதெல்லாம் எதுக்கு. இந்த வாரம் ஷாப்பிங் போகனும்"

"ஆமாம் நிறைய வாங்க வேண்டியதிருக்கும். என் பிராஜக்ட் மேட் சவ்ரவ் இந்த வீக் என்ட் கிளம்பறான். அவன் ஒரு செக் லிஸ்ட் வெச்சிருந்தான். நான் அதை நாளைக்கு உனக்கு மெயில்ல அனுப்பறேன். இந்த சனிக்கிழமை போய் எல்லாம் வாங்கலாம்"

"சரி... "

..................

அடுத்த நாள் செக் லிஸ்ட் அனுப்பி 10 நிமிடத்திற்குள் போன் செய்தாள்.

"செக் லிஸ்ட் பாத்தியா???"

"ஹிம்.. பாத்துட்டே இருக்கேன்"

"நீ இன்னும் அதை பாத்திருக்க மாட்டன்னு எனக்கு தெரியும்... கதை விடாத"

"சரி... அனுப்பிட்ட இல்ல! அப்பறம் என்ன???"

"இரு... நாளைக்கு என்ன என்ன வாங்கலாம்னு முடிவு பண்னிக்கலாம். மீதியெல்லாம் நீ உன் ஃபிரெண்ட்ஸோட போய் சன்டே வாங்கிக்கோ"

"ஏன் சன்டே உன் பிளான் என்ன???"

"நான் உன்கிட்ட சொல்லலையா எங்க கிளாஸ் கெட்-டுகெதர் இருக்கு"

"சன்டே முழுசா ஒன்னா இருக்க போறீங்களா???"

"மதியம் லன்ச் சாப்பிட்டு, படத்துக்கு போயிட்டு அப்படியே சுத்திட்டு நைட் டின்னர் சாப்பிட்டு வரலாம்னு இருக்கோம்"

"நீ அவசியம் போகனுமா?"

"ஏய்!!! நாந்தான் பொண்ணுங்க சைட் ஆர்கனைசர்... நான் கண்டிப்பா போயாகனும்... ஏன் கேக்கற???"

"ஒன்னுமில்லை... அப்பறம் நாளைக்கு நீ வர தேவையில்லை. ஏற்கனவே என் ஃபிரண்ட்ஸ் ஷாப்பிங் வரன்னு சொல்லியிருக்காங்க"

"ஏன் வீணா டென்ஷன் ஆகற"

"அதெல்லாம் ஒன்னுமில்லை. நாங்க 4 பேர் ஏற்கனவே பிளான் பண்ணி வெச்சிட்டோம். எப்படியும் நீ வந்தா பெட்டியெல்லாம் வாங்க வசதியா இருக்காது. நிறையா வாங்க வேண்டியிருக்கும். நீ தான் லிஸ்ட் அனுப்பனியே அதுவே போதும். தேங்ஸ்"

"ஏன் இப்படியெல்லாம் பேசற"

"அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்ப எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் நைட் கூப்பிடறேன்"

"சரி"

............................

"சொல்லு"

"நைட் கூப்பிடறன்னு சொன்ன... ஏன் கூப்பிடல???"

"இன்னும் நைட் முடியலைனு நினைக்கிறேன்"

"மணி 10. எப்பவும் நீ 9 மணிக்கெல்லாம் கூப்பிடுவ இல்ல???"

"திவ்யா, வேலை அதிகமா இருக்கு. ஆன் சைட் போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் முடிச்சிட்டு போக சொல்லியிருக்காங்க. அடுத்த வாரம் எப்படியும் 2 நாள் தான் வேலை செய்ய முடியும். மீதி நேரமெல்லாம் knowledge Transferலையும், லேப் டாப், செக்யுர் ஐடி வாங்கறதலையும் போயிடும். இதுக்கு நடுவுல நிறைய ட்ரெயினிங் வேற இருக்கும். எப்படி டிரெஸ் போடனும், எப்படி சாப்பிடனும்னு வேற சொல்லி கொடுப்பானுங்க... முன்ன பின்ன நம்ம இதெல்லாம் பண்ணாத மாதிரி. அப்பறம் எக்கசக்க ட்ரீட் வேற கொடுக்க வேண்டியதிருக்கும்... போதுமா?"

"இப்ப எங்க இருக்க?"

"ஆபிஸ்லதான்"

"சரி நீ வேலை பாரு... அப்பறமா கூப்பிடு..."

"சரி... நான் உனக்கு வீட்டுக்கு போய் போன் பண்றேன்"

"ஓ.கே.... பை"

..........................................

"தனா, ஏன் வீக் என்ட் போன் பண்ணல???"

"சனிக்கிழமை ஷாப்பிங் போயிட்டு வரத்துக்கு டைம் ஆகிடுச்சு. ஞாத்திக் கிழமை நீ உன் ஃபிரண்ட்ஸ் கூட இருப்பன்னு கூப்பிடல"

"நைட்டாவது கூப்பிட்டிருக்கலாம் இல்ல"

"நீ எப்ப வருவன்னு யாருக்கு தெரியும்... ஏன் நீ கூப்பிட்டு இருக்கலாம் இல்ல"

"நீ கூப்பிட்றயா இல்லையானு பாத்துட்டு இருந்தேன்"

"நீங்களா கூப்பிட மாட்டீங்க நாங்க தான் கூப்பிடனும்... இல்ல"

"சரி திட்டாத... இப்ப நாந்தானே கூப்பிட்டேன்... நீ ஒன்னும் கூப்பிடல இல்ல"

"சரி விடு... அப்பறம் நான் இந்த வாரம் லன்ச்க்கு வர முடியாது. வேலை அதிகமா இருக்கு... உள்ளையே சாப்பிட்டுக்கறேன்"

"சரி... நீ ஃபிரியா இருக்கும் போது கூப்பிடு"

"ஓகே... பை"

"பை"

...............................

வெள்ளி இரவு 11 மணி

"நான் தனா பேசறேன்"

"தெரியுது சொல்லு"

"நான் நாளைக்கு கிளம்பறேன். அதான் உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன்"

"சரி. எல்லாம் வாங்கிட்டயா"

"எல்லாம் பேக் பண்ணியாச்சு. கிளம்ப வேண்டியதுதான் மிச்சம்"

"எப்ப திரும்ப வருவ???"

"தெரியல... இது வரைக்கும் போன எவனும் திரும்ப வரல... நான் மட்டும் என்ன லூசா???"

"அப்ப எங்களை எல்லாம் மறந்துடுவ இல்ல"

"உங்களை எல்லாம் மறப்பனா???"

"இந்த ஒரு வாரத்தில எனக்கு ஒரு தடவை கூட போன் பண்ணல... நீ தான் அமெரிக்கா போய் எனக்கு போன் பண்ணுவயா???"

"உனக்கு நானா முக்கியம். உன் ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்... "

"ஏன் இப்படி பேசற??? எனக்கு நீ முக்கியம் இல்லனு யார் சொன்னா???"

"இங்க இருக்கற ஃபிரெண்ட்ஸ அடுத்த வாரம் கூட நீ பாத்துக்கலாம். ஆனால் எனக்காக நீ அதை கூட விட்டுக்கொடுக்கல இல்ல?"

"நான் கெட் டூகெதர் போனனானு உனக்கு தெரியுமா???"

"நீ போகலயா???""

""அதை கேக்க கூட உனக்கு பொறுமையில்லை"

"அத நீ தான் சொல்லியிருக்கனும்"

"எப்ப தனா என்ன சொல்லவிட்ட??? உனக்கு போன வெள்ளி கிழமை நைட் நான் போன் பண்ணப்ப திரும்ப பண்றனு சொன்ன... ஆனால் பண்ணவே இல்லை. நீ போன் பண்ணுவனு நான் ரெண்டு நாளா வெளியவே போகலை. ஆனால் கடைசி வரைக்கும் நீ எனக்கு போன் பண்ணவே இல்ல"

"திவ்யா... இந்த ஒரு வாரம் எப்படி இருந்துச்சு திவ்யா????"

"ஏன் கேக்கற???"

"சொல்லு"

"எனக்கு தெரியல..."

"இந்த ஒரு வாரம் முழுசா நீ மதியம் சாப்பிடல. எனக்கு தெரியும். ஐஸ் என்கிட்ட சொன்னா... அது ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா???"

"எனக்கு சாப்பிட பிடிக்கல"

"ஏன் திவ்யா பொய் சொல்ற? ரெண்டு நாளா நீ அழுதுட்டு இருக்கறதும் எனக்கு தெரியும்."

"தெரிஞ்சும் நீ எனக்கு போன் பண்ணல.... என்ன விட்டுட்டு நீ போற... எப்படி உன்னால முடியுது தனா??? என்ன விட்டுட்டு நீ இருந்துடுவ இல்ல??? "

"எனக்கு தெரியல திவ்யா!!! உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியுமானு எனக்கு தெரியல. அதுக்காக நானா ஏற்படுத்திக்கிட்ட ஒரு பிரிவுதான் இது. ஆனால் இந்த ஒரு வாரம் எனக்கு ஒரு யுகமா இருந்துச்சு... நீ வாழ்க்கை முழுசா என் கூடவே இருக்கனும் போல இருக்கு திவ்யா! இருப்பியா?"

"தனா என்ன சொல்ற???"

"எனக்கு உன்ன பிடிச்ச்சிருக்குனு சொல்றன். நீ வாழ்க்க முழுசா என் கூடவே இருக்கனும்னு சொல்றன். என்ன கல்யாணம் பண்ணிக்குவியானு கேக்கறன்"

"நல்ல நேரம் பாத்து கேக்கற தனா... இவ்வளவு நாள் ஆச்சா இத கேக்கறதுக்கு?"

"அப்படினா... என்னை உனக்கு புடிச்சிருக்கா திவ்யா???"

"நான் எந்த பசங்க கூடயாவது இந்த அளவுக்கு பேசி பாத்திருக்கயா??? யார் கூடவாவது நான் வண்டில போய் பாத்திருக்கயா??? வேற எந்த பிரண்ட்ஸ்கிட்டயாவது ஐஸ்வர்யா பேசும் போது அவளை சீக்கிரம் பேச சொல்ல்லிருக்கனா???
உன் கூட இருக்கும் போதுதான் நான் சேஃபா இருக்கற மாதிரி ஃபீல் பண்றன். ஏன்னு எனக்கே தெரியல"

"திவ்யா நான் இப்ப உன்ன பாக்கனும்... நான் புறப்பட்டு வரன்"

"ஏய் லூசு... மணி 11:30... நான் வெளில வர முடியாது. நாளைக்கு பாக்கலாம்"

"சரி காலைல 6 மணிக்கு மீட் பண்ணலாம். போனை வைக்காத... நைட் ஃபுல்லா நான் உன்ட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு"

"முதல்ல நீ போய் தூங்கு. நம்ம காலைல மீட் பண்ணலாம். நான் ஏர்போர்ட்க்கு வர முடியாது"

"ஏன்???"

"உங்க அப்பா, அம்மா வருவாங்க இல்ல"

"யாரு உங்க மாமா, அத்தையா???
நீ வா... நான் இன் ட்ரடியூஸ் பண்ணி வெக்கறேன். உங்க மருமகளை பாருங்கனு சொல்றன்"

"ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகற???
நான் கண்டிப்பா வர முடியாது. எனக்கு பயமா இருக்கு"

"லூசு... பயப்படாம வா. எங்க அப்பா, அம்மா இங்க வரலை. எல்லாம் சென்னை வராங்க. இங்க ஃபிரெண்ட்ஸ் மட்டும் தான்"

"அப்ப சரி... நான் ஐஸ்வர்யாவையும் கூப்பிட்டு வரேன். யாருக்கும் சந்தேகம் வராது"

"சரி. நீ போயிட்டு எப்ப வருவ???"

"நான் போறது பைலட் பிராஜக்ட். சரியா பண்ணலைனா 1 மாசத்துல தொறத்தி விட்டுடுவாங்க... "

"அப்படினா???"

"1 மாசத்துல நான் இங்க இருப்பனு அர்த்தம் ;)"

.............................

ஒரு வழியாக யு.எஸ் வந்து சேர்ந்து 6 மாசமாகிவிட்டது. 1 மாசத்துல ஊத்திக்கும்னு நினச்ச பிராஜக்ட் நல்ல படியா போயிடுச்சு. சிக்காகோவி்லிருந்து பாஸ்டன் வந்து சேர்ந்து 5 மாசமாகிவிட்டது. GTalk ஆல் மாத சம்பளம் ஓரளவிற்கு சேமிக்க முடிகிறது.

"சாப்பிட்டயா???"

" "

"திட்டாத... அடுத்த மாசம் கண்டிப்பா வந்துடுவன்... பாலாஜிக்கு எல்லா Trainingம் முடிஞ்சிது.. ."

" "

"நிஜமாதான் சொல்றேன்...
நாயி வேணும்னே பொறுமையா கத்துக்கிறான்"

" "

"'சும்மா சொன்னேன்... அவன் நல்ல பையன் தான்...
அப்பறம் ஓரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.... அவன் நம்ம கதையை அவன் பிளாக்ல பிரிவுனு ஒரு தலைப்புல எழுதறான்... இது தான் அவன் பிளாக் URL : http://vettipaiyal.blogspot.com/ "

" "

"ஏய் திட்டாத!!! நான் தான் சும்மா விளையாட்டுக்கு எழுத சொன்னேன். இது அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து எங்க மாமா, அத்தைக்கிட்ட கொடுத்துடு"

" "

(முற்றும்...)

பி.கு:
இது நிஜமா, கதையானு கேக்கறவங்களுக்கு என் பதில் "No Comments"...

62 comments:

லதா said...

திவ்யாவிற்கு பாஸ்போர்ட், யு.எஸ்.விசா ஏற்பாடு செய்தாயிற்றா?

:-)))

நாமக்கல் சிபி said...

H-1ஆ H-4ஆனு இன்னும் முடிவாகல...

:-))

H-4ல வர சொல்லி தனா சொல்றான் H-1ல தான் வருவன்னு திவ்யா சொல்றதா கேள்வி ;)

நாமக்கல் சிபி said...

என்னங்க கதை யாருக்கும் பிடிக்கலையா??? ஆளுகளையே கானோம்???

கார்த்திக் பிரபு said...

yaru sonna pidikalainu ..nall iruku thalai ..mudivai innum konjam varthaigalal alangarithirukkalam..

Anonymous said...

உன் கிட்ட சார்டிங்கு எல்லாம் நல்லாதான் இருக்கு,
ஆனா பினிஸ்ங்குதான் சரியாயில்ல...

தலைவா தனாட்டா ஒரு கேள்வி,
இந்த ஆம்பிளை பசங்க ரொம்ப மோசம். இந்த ஆம்பிளை பசங்க மத்த ஆம்பிளை பசங்களுக்கு ஹெல்ப் பண்ணமாட்டேன்றான்களே ஏன் தனா?

macroஉடன்,
மேக்ரோமண்டையன்...

வேந்தன் said...

உண்மையா இருந்தா என்ன, பொய்யா இருந்தா என்ன. நல்லா இருக்கு.
That is...

வேந்தன் said...

உண்மையா இருந்தா என்ன, பொய்யா இருந்தா என்ன. நல்லா இருக்கு.
That is...

Anonymous said...

I never thought you will finish this one so soon.
Kadaichiya sappunu ana mathiri iruku. Inum konjam kathaiya valarthu irukalam.

Any ways your writing flow is simple and sweet. Keep it up

நாமக்கல் சிபி said...

கார்த்திக் பிரபு said...
//
yaru sonna pidikalainu ..nall iruku thalai ..mudivai innum konjam varthaigalal alangarithirukkalam..
//
கார்த்திக் ரொம்ப யோசிச்சி பார்த்தேன். எழுத வரல.

கதை முடிய வேண்டிய இடம் இது இல்லை. நிறைய பேர் சீக்கிரம் முடிங்கனு சொன்னதால இந்த மாதிரி ஆகிடுச்சு. அடுத்த முறை ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

மேக்ரோமண்டையன் said...
//
உன் கிட்ட சார்டிங்கு எல்லாம் நல்லாதான் இருக்கு,
ஆனா பினிஸ்ங்குதான் சரியாயில்ல...
//
உங்களுக்கும் அதேதான்... எனக்கும் முடிவுல பெருசா திருப்தியில்ல... அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன்.

//
தலைவா தனாட்டா ஒரு கேள்வி,
இந்த ஆம்பிளை பசங்க ரொம்ப மோசம். இந்த ஆம்பிளை பசங்க மத்த ஆம்பிளை பசங்களுக்கு ஹெல்ப் பண்ணமாட்டேன்றான்களே ஏன் தனா?
//
மேக்ரோ,
உங்களுக்கு நல்ல நண்பர்கள் இல்லைனு நான் நினைக்கிறேன்.
நான் US வந்த நாளன்று நியூ ஜெர்சியில் 6 மணி நேரம் பிளைட் டிலே. மேன்சிஸ்டர் வந்து சேரும் போது மணி இரவு 12:30, அடுத்த நாள் ஆபிஸுக்கும் செல்ல வேண்டும். வெளில "-12 டிகிரி". அப்படி இருந்தும் 25 மைல்ல இருந்து தனா வந்து என்னை கூப்பிட்டு சென்றான். என்ன அதுக்கு முன்னாடி ஒரு 2-3 தடவைதான் பார்த்திருப்பான். டாக்ஸில வான்னு சுலமா சொல்லி இருக்கலாம். இந்த மாதிரி நிறைய இருக்கு.

நீங்க முதல்ல பசங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க... உங்களுக்கு தான உதவி செய்ய நிறைய பேர் வருவாங்க...

"For every action, there is an equal and opposite reaction"

நாமக்கல் சிபி said...

Mathi said...
//
நண்பரே..ரொம்பவும் அருமை..! நீங்க கதைய சொல்ற விதம் அப்படியே நேர்ல பாக்கற மாதிரி இருந்துச்சு.. ஆக, எப்ப தான் திவ்யாவும் தனாவும் இனிமே பாக்க போறாங்க. இடையில திவ்யா தன் மாமா அத்தைகிட்ட அறிமுகம் ஆயிட்டாங்களா..?
//
தனாவும், திவ்யாவும் சீக்கிரமே பாக்க போறாங்க ;)
இன்னும் அறிமுகமாகலைனு நினைக்கிறேன். அதெல்லாம் பெரிய பிரச்சனை இல்லை தனா ஈஸியா சமாளிச்சிடுவாரு... (நமக்கென்ன ;))

நாமக்கல் சிபி said...

வேந்தன் said...
//
உண்மையா இருந்தா என்ன, பொய்யா இருந்தா என்ன. நல்லா இருக்கு.
That is...
//
இது!!!
மிக்க நன்றி வேந்தன்.

Anonymous said...
//
I never thought you will finish this one so soon.
Kadaichiya sappunu ana mathiri iruku. Inum konjam kathaiya valarthu irukalam.
//
Poana partla vanthu seekiram mudi seekiram mudinu solla vendiyathu... ippa vanthu ippadi.
inime yaar pechayum keakka koodathu.

//
Any ways your writing flow is simple and sweet. Keep it up
//
Thx a lot

கப்பி | Kappi said...

தமிழ் சினிமா பார்த்து மக்கள் ரொம்பத்தான் கெட்டுபோயிட்டாங்க :))

தனா-திவ்யா>> வாழ்க வளமுடன்!! ;)

நாமக்கல் சிபி said...

கப்பி பய said...
//
தமிழ் சினிமா பார்த்து மக்கள் ரொம்பத்தான் கெட்டுபோயிட்டாங்க :))
//
என்ன பண்றது... கலி முத்தி போச்சு (சும்மா... வயித்தெரிச்சல் எல்லாம் இல்லப்பா... என்ன நம்பு கப்பி ;))

தனா-திவ்யா>> வாழ்க வளமுடன்!! ;)
தகவல் சொல்லிவிட்டேன்...
தனா உனக்கு நன்றி சொல்ல சொன்னார் ;)

Anonymous said...

//
உங்களுக்கு நல்ல நண்பர்கள் இல்லைனு நான் நினைக்கிறேன்.
//

என் நண்பர்கள் கூட்டம் மிக பெரியது(shoolல இருந்து கடைசி comapny வரைக்கும்). ஆனா நான்தான் workல கவனம் செலுத்தி நிறைய பேரை இழந்துவிட்டேன்.

//
நீங்க முதல்ல பசங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க... உங்களுக்கு தான உதவி செய்ய நிறைய பேர் வருவாங்க...
//

நான் படிச்சது mechanical engg. அதனால எந்த பொண்ணுங்களுக்கு நான் help பண்ணதில்லை. பண்ணுரதும் இல்ல( என்னை அண்ணா அழைச்ச ஓரு சில பொண்ணுங்களுக்குதான் help பண்ணிருக்கேன்(இருந்தாலும் பொண்ணுங்களை பார்த்து ஜொல் விடுரதுல என் கூட யாரும் போட்டிக்கு வரமுடியாது அட்டு பிகரா இருந்தா கூட (நான் ஒன்னும் ஆண்ழகன் இல்ல))).
என்னோட நண்பர்கள் வட்டமே due to our helping tendency மற்றும் கலாயத்தல்லல தான்.

உங்கள் நண்பர் தனாவுக்கு என் வாழ்த்துக்கள்.

(நீங்க என்ன மானங்கெட்டவனேனு திட்டினாலும்் கூட நான் காலாய்க்கிறத விடமாட்டேன்).

macroஉடன்,
மேக்ரோமண்டையன்...

நாமக்கல் சிபி said...

மேக்ரோமண்டையரே
//என் நண்பர்கள் கூட்டம் மிக பெரியது(shoolல இருந்து கடைசி comapny வரைக்கும்). ஆனா நான்தான் workல கவனம் செலுத்தி நிறைய பேரை இழந்துவிட்டேன்.//
எல்லாருக்கும் இருக்கிற பிரச்சனைதான். ஆனால் நமக்குனு இண்டிமேட் ஃபிரெண்ட்ஸ் ஒன்னு, ரெண்டு பேராவது இருக்கனும். அதுவே போதும்... இப்ப எனக்கு நிறைய பேர் வலைப்பூ மூலமா நட்பாகறாங்க... உங்களையும் சேத்துதான் சொல்றேன்.

//என்னோட நண்பர்கள் வட்டமே due to our helping tendency மற்றும் கலாயத்தல்லல தான்.//

காலேஜ்ல பண்ணதெல்லாம் விடுங்க... இப்ப பண்றீங்களா???
அப்படி பண்றன்னு சொன்னீங்கனா...
//இந்த ஆம்பிளை பசங்க ரொம்ப மோசம். இந்த ஆம்பிளை பசங்க மத்த ஆம்பிளை பசங்களுக்கு ஹெல்ப் பண்ணமாட்டேன்றான்களே ஏன் தனா?
//

இந்த கேள்வி அடிப்பட்டு போயிடுது ;)

பண்ணலனா, இனிமே பண்ணுங்க ;)

//உங்கள் நண்பர் தனாவுக்கு என் வாழ்த்துக்கள்.
//
சொல்லிவிட்டேன்... அவர் பதில் - "நன்றி"


//(நீங்க என்ன மானங்கெட்டவனேனு திட்டினாலும்் கூட நான் காலாய்க்கிறத விடமாட்டேன்).//
நம்ம விளையாடலாம்... நீங்க வாங்க... நான் ரெடி

கதிர் said...

படிக்க ஆரம்பிச்சதும் உங்க கதையோன்னு நினைச்சேன்.

தனா, திவ்யாவிற்க்கு தம்பியின் பேரன்பு கொண்ட வாழ்த்துக்கள்.

Anonymous said...

எனக்கு இரண்டு நாளா ஒரு வேலையும் இல்லாதலால சும்மா கலால்க்கலாமுனு தமிழ்மணத்தில் எல்லாரையும் கலாய்ச்சுட்டு இருந்தேன்.
(அனானிகள் முன்னேற்றக் கழகம்,
ஆஸ்திரேலியா
அது நாந்தான், இன்னும பல).

சும்மா கலாக்கலானு தான் கலாய்சேன்.யாரையும் புண்படுத்தனுன்றது என் நோக்கம் அல்ல.அப்படி இருந்தால் மன்னிக்கவும்.(ஆப்பு வைக்கனமுனு மட்டும் நினைக்காதிங்கபா).

//
//என்னோட நண்பர்கள் வட்டமே due to our helping tendency மற்றும் கலாயத்தல்லல தான்.//

காலேஜ்ல பண்ணதெல்லாம் விடுங்க... இப்ப பண்றீங்களா???
//

"our helping tendency" இது இல்லை எனில் நாங்கள்் தற்போது வரை கொண்டிருக்கும், நட்பு உண்மையல்ல.
நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் நான் நிறைய நண்பர்களுக்கு help செய்து, முயன்று கற்று கொள்ள வேண்டும் என்ற கருத்தை அறிய விடாமல் அவர்கள் வாழ்க்கையை நான் வீணடித்துள்ளேன். 8 வருடம் ஆன பின்னும் அந்த ரணம் இன்னும் அப்படியே இருக்கிறது.

ஆன்சைட்டில் இருந்து ராடு மெயிலில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
(அம்மா...அப்பா...)

நேரம் கிடைத்தால் மீண்டும் வந்து கலாய்க்கிறேன்.


macroஉடன்,
மேக்ரோமண்டையன்...

கதிர் said...

பாபாஜி,

ROFL னா என்ன அர்த்தம்,

அங்கன ஒரு அனானி என் சிண்டை புடிச்சி உலுக்கறார், சீக்கிரம் சொல்லுங்கப்பு.

அய்யா வைட்டிங்!!

நாமக்கல் சிபி said...

தம்பி said...
//
படிக்க ஆரம்பிச்சதும் உங்க கதையோன்னு நினைச்சேன்.
//
எத்தனை பேரு இந்த மாதிரி கெளம்பியிருக்கீங்க???
"அது நானில்லிங்கோனு" சொல்லி சொல்லியே 'கொல்ட்டி' கதைக்கு 100 பின்னூட்டமாயிடுச்சு

//
தனா, திவ்யாவிற்க்கு தம்பியின் பேரன்பு கொண்ட வாழ்த்துக்கள்.
//
தனா - நன்றி

நாமக்கல் சிபி said...

மேக்ரோ மண்டையரே,
//எனக்கு இரண்டு நாளா ஒரு வேலையும் இல்லாதலால சும்மா கலால்க்கலாமுனு தமிழ்மணத்தில் எல்லாரையும் கலாய்ச்சுட்டு இருந்தேன்.
(அனானிகள் முன்னேற்றக் கழகம்,
ஆஸ்திரேலியா
அது நாந்தான், இன்னும பல).

சும்மா கலாக்கலானு தான் கலாய்சேன்.யாரையும் புண்படுத்தனுன்றது என் நோக்கம் அல்ல.அப்படி இருந்தால் மன்னிக்கவும்.(ஆப்பு வைக்கனமுனு மட்டும் நினைக்காதிங்கபா).//

நீர்தானா அது... கலக்குங்க கலக்குங்க

//"our helping tendency" இது இல்லை எனில் நாங்கள்் தற்போது வரை கொண்டிருக்கும், நட்பு உண்மையல்ல.
நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் நான் நிறைய நண்பர்களுக்கு help செய்து, முயன்று கற்று கொள்ள வேண்டும் என்ற கருத்தை அறிய விடாமல் அவர்கள் வாழ்க்கையை நான் வீணடித்துள்ளேன். 8 வருடம் ஆன பின்னும் அந்த ரணம் இன்னும் அப்படியே இருக்கிறது.
//

இவ்வளவு நல்லவரா இருந்துட்டு ஏன் இந்த கேள்வி...

பசங்களுக்குள்ள இருக்கற நட்பு வேற... தனாக்கும் திவ்யாக்கும் நடுவுல இருக்கற உறவு வேறன்னு புரிஞ்சிக்காதவரா நீங்க??? ;)

Syam said...

ரொம்ப நல்லா இருந்தது...தொடரும் போடும் போது எப்ப முடிபீங்கனு இருந்தது...இப்போ என்னது அதுகுள்ள முடிச்சுட்டீங்களேனு இருக்கு...வேந்தன் சொல்ற மாதிரி உண்மையோ பொய்யோ ஆனா நல்லா இருந்தது...உண்மயா இருந்தா தனா,திவ்யாக்கு வாழ்த்துக்கள் :-)

நாமக்கல் சிபி said...

Syam said...
//
ரொம்ப நல்லா இருந்தது...தொடரும் போடும் போது எப்ப முடிபீங்கனு இருந்தது...இப்போ என்னது அதுகுள்ள முடிச்சுட்டீங்களேனு இருக்கு...//
நீங்க எல்லாம் சொன்னதாலதான் சீக்கிரமா முடிச்சிட்டேன்... இல்லனா இன்னும் 2-3 பகுதி வந்திருக்கும்...
அடுத்த தடவை பாத்துக்கலாம்.

//
வேந்தன் சொல்ற மாதிரி உண்மையோ பொய்யோ ஆனா நல்லா இருந்தது...உண்மயா இருந்தா தனா,திவ்யாக்கு வாழ்த்துக்கள் :-)
//
:-))

Syam said...

//நீங்க எல்லாம் சொன்னதாலதான் சீக்கிரமா முடிச்சிட்டேன்... இல்லனா இன்னும் 2-3 பகுதி வந்திருக்கும்...//

அடடா இப்படி ஆகி போச்சே... :-)

நாமக்கல் சிபி said...

//அடடா இப்படி ஆகி போச்சே... :-) //

கவலைய விடுங்க காதல் இல்லாம அடுத்து ஒரு கதை எழுதலாம்...

1 வாரம் போகட்டும்... லாங் வீக் எண்ட் வேற வந்துடுச்சு... அதுவும் ஒரு முக்கிய காரணம்

Unknown said...

பாலாஜி...கதை நன்றாக இருக்கிறது.இன்று முழுக்க வலைப்பக்கம் வர முடியவில்லை.இப்போதுதான் வந்து முழுமூச்சில் கதையை படித்து முடித்தேன்.உரையாடல் பகுதிகள் உங்களுக்கு மிகவும் இயல்பாக எழுத வருகின்றன.தேன்கூடு போட்டிக்கு அருமையான கதை ஒன்றை அனுப்பவும்.

வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

//பாலாஜி...கதை நன்றாக இருக்கிறது.இன்று முழுக்க வலைப்பக்கம் வர முடியவில்லை.இப்போதுதான் வந்து முழுமூச்சில் கதையை படித்து முடித்தேன்
//
செல்வன்,
பார்த்தேன். காலையில் இருந்து உங்களை காணவில்லை... சரி படிக்கிறீர்கள் என்று எதுவும் கேட்கவில்லை.

//
உரையாடல் பகுதிகள் உங்களுக்கு மிகவும் இயல்பாக எழுத வருகின்றன.தேன்கூடு போட்டிக்கு அருமையான கதை ஒன்றை அனுப்பவும்//
மிக்க நன்றி செல்வன். தலைப்பு சொல்லட்டும் இந்த முறை கலக்கிடலாம் ;)

Porkodi (பொற்கொடி) said...

சூப்பர்ங்க:) எனக்கு வார்த்தையே வரல.. இதே மாதிரி (வசனம் எல்லாம் ரொம்ப ஒத்துப் போகுது!) நானும் என் நண்பனும் ஒரு வாரம் முன்னாடி கூட பேசினோம்.. (அதுக்காக நான் அவன் கூட இருக்கப் போறேனானு கேட்டுடாதீங்க.. அவன் என்னிக்கும் என் நண்பன் தான்.. )

Anonymous said...

பாபாஜி,

ROFL னா என்ன அர்த்தம்,

rolling on (the) floor laughing

நாமக்கல் சிபி said...

பொற்கொடி said...
// சூப்பர்ங்க:) எனக்கு வார்த்தையே வரல.. இதே மாதிரி (வசனம் எல்லாம் ரொம்ப ஒத்துப் போகுது!) நானும் என் நண்பனும் ஒரு வாரம் முன்னாடி கூட பேசினோம்.. (அதுக்காக நான் அவன் கூட இருக்கப் போறேனானு கேட்டுடாதீங்க.. அவன் என்னிக்கும் என் நண்பன் தான்.. )//
நேத்து உக்காந்து 2 மணி நேரம் யோசிச்சிட்டு இருந்தப்ப சோல்லியிருக்க கூடாதா????

அப்பறம் நம்ம தனாவை விசாரிச்சதா சொல்லுங்க...

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

பாபாஜி,

ROFL னா என்ன அர்த்தம்,

rolling on (the) floor laughing//

அனானி மிக்க நன்றி...

தம்பி ரொம்ப அவசரமா கேட்டாருனு அவர் பதிவுல பதில் சொல்லிட்ட்டேன்...

Anonymous said...

இன்னிக்கு தான் இந்த கதை முழுதையும் படித்தேன். அருமையாக எழுதியிருக்கிறீங்க! உயிரோட்டமுள்ள துள்ளலான நடை. சினிமா துறையிலேர்ந்து பார்த்தாங்கன்னா வசனத்தையெல்லாம் காப்பியடிச்சிருவாங்க.
தனா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்!!

நானும் ஒரு காதல் கதை எழுதனும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருக்கேன். இதப் படிச்சதும் அந்த ஆர்வம் மேலோங்குகிறது.

Jazeela said...

கதை எழுதினாக்கூட இது நிகழ்வான்னு அனானி வருதுப்பா. நான் சமீபத்தில் எழுதிய கதைக்கு அந்த கதிதான் ;-(

நல்ல கதை.

நாமக்கல் சிபி said...

Dubukku said...
//
இன்னிக்கு தான் இந்த கதை முழுதையும் படித்தேன்.
//
கொடுத்த வாக்க காப்பாத்திட்டீங்க :-)

//
அருமையாக எழுதியிருக்கிறீங்க! உயிரோட்டமுள்ள துள்ளலான நடை. சினிமா துறையிலேர்ந்து பார்த்தாங்கன்னா வசனத்தையெல்லாம் காப்பியடிச்சிருவாங்க.
//
தன்யனானேன்!!!

//
தனா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்!!
//
தனா அவர் நன்றியை உங்களுக்கு தெரிவிக்க சொன்னார்.


//நானும் ஒரு காதல் கதை எழுதனும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருக்கேன். இதப் படிச்சதும் அந்த ஆர்வம் மேலோங்குகிறது. //
உங்க கதையை படிக்க எல்லோரும் ஆவலாக இருக்கிறோம்!!! சீக்கிரம் ஆரம்பிங்க

நாமக்கல் சிபி said...

ஜெஸிலா said...
//
கதை எழுதினாக்கூட இது நிகழ்வான்னு அனானி வருதுப்பா. நான் சமீபத்தில் எழுதிய கதைக்கு அந்த கதிதான் ;-(
//
அது நம்ம கதைக்கான வெற்றியல்லவா?
செல்வராகவன் முதல்ல எடுத்த மூணு படமும் என் சொந்த கதைனு சொல்லியே தான எடுத்தாரு... அதுவும் அந்த படங்களோட வெற்றிக்கு ஒரு காரணம் ;)

//
நல்ல கதை.
//
மிக்க நன்றி

tamizhppiriyan said...

கதை நல்லா வந்திருக்கு பாலாஜி...குறிப்பா, உரையாடல்கள் அருமை!,
இது மாதிரி எதாவது நடக்கும்ன்னு யுகிச்சேன், என்ன பன்றது..சினிமால எவ்வளவு பார்த்திருப்போம்..:)
பாராட்ட வேண்டிய ஒன்று என்னவென்றால், சாப்ட்வேர் துறைய பேஸா வச்சு நான் படிக்கிற முதல் கதை இது தான்!..அருமையா இருந்தது!..

நாமக்கல் சிபி said...

தமிழ்ப்பிரியன் said...
//
கதை நல்லா வந்திருக்கு பாலாஜி...குறிப்பா, உரையாடல்கள் அருமை!,
//
மிக்க நன்றி


//இது மாதிரி எதாவது நடக்கும்ன்னு யுகிச்சேன், என்ன பன்றது..சினிமால எவ்வளவு பார்த்திருப்போம்..:)
//
வேற எப்படிங்க முடிக்கிறது. ஒரே மாதிரி இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் அது புதுசுதான ;)

//பாராட்ட வேண்டிய ஒன்று என்னவென்றால், சாப்ட்வேர் துறைய பேஸா வச்சு நான் படிக்கிற முதல் கதை இது தான்!..அருமையா இருந்தது!..
//
நம்ம ஃபீல்ட் அதனால சுலபமா எழுத வந்துடுச்சு ;)

Santhosh said...

பாலாஜி,
கதை நல்லா இருந்தது. நீங்க ஏன் இந்த பகுதியோட துவக்கம்/முடிவில் இந்த கதையின் முந்தைய பதிவுக்களுக்கும் லிங்க் குடுக்கக்கூடாது.என்னைய மாதிரி சோம்பேறிப் பயலுங்க நோவாம நோம்பு கும்பிடலாம் இல்ல :)))

G.Ragavan said...

:-)

நாமக்கல் சிபி said...

சந்தோஷ் said...
//
பாலாஜி,
கதை நல்லா இருந்தது. நீங்க ஏன் இந்த பகுதியோட துவக்கம்/முடிவில் இந்த கதையின் முந்தைய பதிவுக்களுக்கும் லிங்க் குடுக்கக்கூடாது.என்னைய மாதிரி சோம்பேறிப் பயலுங்க நோவாம நோம்பு கும்பிடலாம் இல்ல :)))
//
நன்றி சந்தோஷ். லிங்தான கொடுத்துட்டாப் போச்சு


ஜி.ரா,
இதுக்கு என்ன அர்த்தம்... நல்லா இருக்கா இல்ல நக்கலா சிரிக்கிறீங்களா??? புரியலையே!!!

ராம்குமார் அமுதன் said...

தல நான் வேற மாதிரி முடிவு எதிர்பார்த்தேன். ஆனா இந்த முடிவு கூட வித்தியாசமாகத்தான் இருந்தது. நெறைய தொடர்கள் எழுதுங்க.

நாமக்கல் சிபி said...

அமுதன் said...
//தல நான் வேற மாதிரி முடிவு எதிர்பார்த்தேன். ஆனா இந்த முடிவு கூட வித்தியாசமாகத்தான் இருந்தது. நெறைய தொடர்கள் எழுதுங்க.
//
அமுதா,
முடிவை முடிவு பண்ணிதான் எழுதவே ஆரம்பித்தேன்...
அடுத்த தொடர் விரைவில் ஆரம்பம்...

G.Ragavan said...

// ஜி.ரா,
இதுக்கு என்ன அர்த்தம்... நல்லா இருக்கா இல்ல நக்கலா சிரிக்கிறீங்களா??? புரியலையே!!! //

நான் ஏம்ப்பா நக்கலடிக்கனும்..நம்மள நாலு பேரு நக்கலடிக்காம இருந்தாப் பத்தாதா!

நாமக்கல் சிபி said...

//நான் ஏம்ப்பா நக்கலடிக்கனும்..நம்மள நாலு பேரு நக்கலடிக்காம இருந்தாப் பத்தாதா!//

கதை எப்படி இருக்குனு சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம்???

இத லொள்ளுல போட்டுருந்தீங்கனா சரினு சொல்லலாம். கதைல சிரிச்சா அதுக்கு என்ன அர்த்தம்???

........

நேத்து முழுக்க நியூ யார்க்ல மழை... இன்னைக்கு பரவாயில.. மேட்ச் பாத்துடலாம்னு நினைக்கிறேன்.
இப்ப ஜெர்சில இருக்கேன் ;)

நாமக்கல் சிபி said...

//நான் ஏம்ப்பா நக்கலடிக்கனும்..நம்மள நாலு பேரு நக்கலடிக்காம இருந்தாப் பத்தாதா! //
உங்கள யார் நக்கலடிக்க முடியும்... அதி ஜி.ரா ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போறதா கேள்விப்பட்டேன் ;)

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
//நான் ஏம்ப்பா நக்கலடிக்கனும்..நம்மள நாலு பேரு நக்கலடிக்காம இருந்தாப் பத்தாதா!//

கதை எப்படி இருக்குனு சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம்???

இத லொள்ளுல போட்டுருந்தீங்கனா சரினு சொல்லலாம். கதைல சிரிச்சா அதுக்கு என்ன அர்த்தம்??? //

அது சிரிப்பு இல்ல...புன்னகை. புன்னகை தெரியுந்தானே?

........

// நேத்து முழுக்க நியூ யார்க்ல மழை... இன்னைக்கு பரவாயில.. மேட்ச் பாத்துடலாம்னு நினைக்கிறேன்.
இப்ப ஜெர்சில இருக்கேன் ;) //

அங்க போய் என்ன ஒளறி வெச்சியோ! மழ வந்துருச்சு....ஜெர்சியில இருந்து ரெண்டு பசுமாடு வாங்கீட்டு வா....

////நான் ஏம்ப்பா நக்கலடிக்கனும்..நம்மள நாலு பேரு நக்கலடிக்காம இருந்தாப் பத்தாதா! //
உங்கள யார் நக்கலடிக்க முடியும்... அதி ஜி.ரா ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போறதா கேள்விப்பட்டேன் ;) //

அப்பா சாமி....ஆள விடுங்க....ரசிகர் மன்றமெல்லாம் நமக்கெதுக்கு! நாம உண்டு.....வேலை உண்டுன்னு மூனு வேளையும் உண்டு வருவோம்.

நாமக்கல் சிபி said...

//அது சிரிப்பு இல்ல...புன்னகை. புன்னகை தெரியுந்தானே?
//
ஓ... உங்க புகைப்படத்துல இருக்கே அதுவா???

//அங்க போய் என்ன ஒளறி வெச்சியோ! மழ வந்துருச்சு....//
உளறி வெச்சா எல்லாம் மழை வராது... அதுக்கு எல்லாம் அதிகமா புண்ணியம் பண்ணியிருக்கனும். இனிமே நான் வேற புண்ணியம் பண்றதை குறைக்கனும் ;)

//
ஜெர்சியில இருந்து ரெண்டு பசுமாடு வாங்கீட்டு வா....
//
மழை பெய்யறதால சந்தையை மூடிட்டாங்க ;)

//அப்பா சாமி....ஆள விடுங்க....ரசிகர் மன்றமெல்லாம் நமக்கெதுக்கு! நாம உண்டு.....வேலை உண்டுன்னு மூனு வேளையும் உண்டு வருவோம்.
//
சரிதான்...

Unknown said...

//ப்பா சாமி....ஆள விடுங்க....ரசிகர் மன்றமெல்லாம் நமக்கெதுக்கு! நாம உண்டு.....வேலை உண்டுன்னு மூனு வேளையும் உண்டு வருவோம்//

கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு?
காலத்தின் கையில் அது இருக்கு.

கனியட்டும் காலம் நேரம் அதுக்கு
என்னவோ திட்டம் இருக்கு:)

நாமக்கல் சிபி said...

//கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு?
காலத்தின் கையில் அது இருக்கு.

கனியட்டும் காலம் நேரம் அதுக்கு
என்னவோ திட்டம் இருக்கு:)
//
காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் ;)

Anonymous said...

Romba Touch pannidchu... intha mathiri katha iruntha konjam a_sankarmcse@yahoo.com anupi veigalen..

yove Vetti... nee vetti illa ketti payalnnu nirupikara..

நாமக்கல் சிபி said...

சங்கர்,
இதுவரைக்கும் 2 கதைதான் எழுதியிருக்கேன்... நம்ம கொல்ட்டி கதை படிச்சீங்களா??? அதுவும் இதே மாதிரிதான்... ஆனால் முடிவு மட்டும் வேற!!!

//yove Vetti... nee vetti illa ketti payalnnu nirupikara.. //
மிக்க நன்றி

கோழை said...

ஏன்யா கடைசில கதையை இப்படியா இழுத்தடிப்பீங்க டென்சன் அகீட்டமில்ல.... ஹார்ட் பீட் ஏறிக்கிட்டே போயி ஒரு மாதிரி நார்மலுக்கு வந்திருச்சு

Anonymous said...

Padichenga.. athuvum super.. konja nalla ithuthan velai. Intha mathiri padikum pothu ennakum intha mathiri ethavathu pannum polla irruku.. But, ennaku antha alavuku arivu ellam illainga..

நாமக்கல் சிபி said...

ஆதவன் said...
//
ஏன்யா கடைசில கதையை இப்படியா இழுத்தடிப்பீங்க டென்சன் அகீட்டமில்ல....//
இதுவே சீக்கிரம்னு நான் ஃபீல் பண்றேன் ;)

//
ஹார்ட் பீட் ஏறிக்கிட்டே போயி ஒரு மாதிரி நார்மலுக்கு வந்திருச்சு
//
அதுதான நமக்கு வேணும் ;)

நாமக்கல் சிபி said...

Anonymous said...
//
Padichenga.. athuvum super..
//
மிக்க நன்றி சங்கர்

// konja nalla ithuthan velai. Intha mathiri padikum pothu ennakum intha mathiri ethavathu pannum polla irruku.. But, ennaku antha alavuku arivu ellam illainga..
//
ஐயய்யோ இத எழுதறதுக்கு எல்லாம் அறிவே வேண்டாங்க... சத்தியமாதான் சொல்லறன். நம்புங்க!!!

எது எழுதனாலும் நல்லா இருக்குனு நாலு பேர் சொல்லுவாங்க நல்லா இல்லனு நாலு பேர் சொல்லுவாங்க. அதனால தோன்றதை எல்லாம் எழுதுங்க ;)

பாத்திங்கனா, நான் போட்டவுடனே "-" குத்தறதுக்கு யாரோ ஒரு ஆள் வெயிட் பண்ணிக்கிட்டே இருக்காங்க... அதுக்காக நம்ம எழுதாம விட்டுடுவோமா ;)

Anonymous said...

matrumoru aumayana kadhai.

நாமக்கல் சிபி said...

// dany said...

matrumoru aumayana kadhai. //

மிக்க நன்றி டேனி...

இந்த கதையின் நாயகனையும் நான் டேனினுதான் கூப்பிடுவேன் ;)

Anonymous said...

true story???
cooooooooooooool!! :D

நாமக்கல் சிபி said...

//CVR said...

true story???
cooooooooooooool!! :D //

Nope :-)
its also a fiction...
all my stories are fiction :-)

Anonymous said...

Hello,

sooper story ponga...(unmai thane if so covey my wishes to yr frnd)

நாமக்கல் சிபி said...

// kala said...

Hello,

sooper story ponga...(unmai thane if so covey my wishes to yr frnd) //

மிக்க நன்றி!!!

இது உண்மை இல்லைங்க.. கதை தான் :-)

Anonymous said...

உங்கள் பிரிவு தொடரையும் படித்து முடித்து விட்டேன் வெட்டி. ;-)