தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, September 01, 2006

லொள்ளு - 2

திருமலை படத்துல வர டயலாக்

விஜய்: யார்டா இங்க அரசு???
(முதல் நபரை பார்த்து): நீ அரசா?
(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???
(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???

அந்த நபர்: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு...

..........................

நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

..........................

ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....

கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

...........................

சுள்ளான்:

தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்

அடியாள் : ஓ அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்...

.........................

மாயாவி:

சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???

சத்யன்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???


.........................

படையப்பா

ரஜினி: அழகேசன்னே பொண்ணுங்கள்ல மொத்தம் மூணு வகை. முதல் வகை சாத்வீகம், அடுத்து ப்ரஜோதகம், மூணாவது பயானகம்

செந்தில்: இஞ்சினியரிங்ல உனக்கு இத்தனை கப் எப்படி விழுந்துச்சினு இப்ப புரியுது...

39 comments:

Anonymous said...

நல்ல காமெடி.

லொள்ளு part 1 விட part 2 super

குமரன் (Kumaran) said...

//நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...
//

ஆகா. நாரதர் வேலைக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கே. விடலாமா?

என்ன பாலாஜி? நீங்க ரஜினி ரசிகரா இருக்கலாம். அதுக்காக போன பதிவுல ரஜினின்னு சொல்லாம தலைவர்ன்னு சொல்லியிருக்கலாம். அது சரி. தப்பு இல்லை. ஆனா அதுக்காக கமலை விளக்கெண்ணைன்னு திட்டணுமா என்ன? என்ன நெனைச்சுக்கிட்டிருக்கீங்க மனசுல? எங்க ஊரு பெருசு தருமி ஐயாவை கூட்டிக்கிட்டு வந்து 'வாழ்த்தச்' சொல்றேன்.

:-))

குமரன் (Kumaran) said...

//படையப்பா

ரஜினி: அழகேசன்னே பொண்ணுங்கள்ல மொத்தம் மூணு வகை. முதல் வகை சாத்வீகம், அடுத்து ப்ரஜோதகம், மூணாவது பயானகம்

செந்தில்: இஞ்சினியரிங்ல உனக்கு இத்தனை கப் எப்படி விழுந்துச்சினு இப்ப புரியுது...//

ஹாஹாஹாஹா

Boston Bala said...

:-)))

நாமக்கல் சிபி said...

நிர்மல் said...
//
நல்ல காமெடி.

லொள்ளு part 1 விட part 2 super
//

நன்றி... இருந்தாலும் லொள்ளு பார்ட் - 1 நல்லாதாங்க இருந்தது...

நாமக்கல் சிபி said...

//ஆகா. நாரதர் வேலைக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கே. விடலாமா? //

குமரன்,

யூ டூ...

//ஆனா அதுக்காக கமலை விளக்கெண்ணைன்னு திட்டணுமா என்ன? என்ன நெனைச்சுக்கிட்டிருக்கீங்க மனசுல? //
அது நான் திட்டலைங்க... போலிஸ் கான்ஸ்டேபிள் அப்படித்தான் மரியாதை இல்லாமல் பேசுவாங்கனு சொன்னேன் ;)

எனக்கு கமலையும் பிடிக்குங்க மைக்கெல் மதன காமராஜன் '50' தடவையாவது பாத்திருப்பேன்...

ரஜினி கொஞ்சம் அதிகமா பிடிக்கும்... அதுவும் நடிகராத்தான் ;)


பாபா,
வருகைக்கு நன்றி

கதிர் said...

//சாத்வீகம், அடுத்து ப்ரஜோதகம், மூணாவது பயானகம்//

சாத்வீகம், பச்சோதகம், பயரகம் இப்படித்தான் கேள்விப்பட்டுருக்கேன்.

இதென்ன புதுசா இருக்கு!!

நாமக்கல் சிபி said...

தம்பி,
ஜோக் சொன்னா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது...

புரியுதா???

கதிர் said...

ஆறு லொள்ளுல இரண்டு லொள்ளு எங்கள் தலவரின் படத்தில் வரும் காட்சியை நக்கல் பண்ணும் விதமாக இருப்பதால்.

துபாய் குறுக்கு சந்து, நாலாவது பொட்டிக்கடை கீழ் அமைந்துள்ள ரசிகர் மன்றத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

கப்பி | Kappi said...

:))

நாமக்கல் சிபி said...

தம்பி said...
//ஆறு லொள்ளுல இரண்டு லொள்ளு எங்கள் தலவரின் படத்தில் வரும் காட்சியை நக்கல் பண்ணும் விதமாக இருப்பதால்.

துபாய் குறுக்கு சந்து, நாலாவது பொட்டிக்கடை கீழ் அமைந்துள்ள ரசிகர் மன்றத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
//
மனசுல யார் டயலாக் அதிகமா பதிஞ்சி இருக்கோ அந்த டயலாக்தான்பா அதிகமா வரும் ;)

Anu said...

Good One
Full fun

Unknown said...

Ha..ha..super.:)))

Dont listen to naradhar Mr.Kumaran:))))

Syam said...

as usual ROTFL......

கலக்குங்க ராசா :-)

நாமக்கல் சிபி said...

கப்பி,
அட்டென்டெண்ஸ் போட்டாச்சு ;)
இந்த மாதிரி வந்தா ஒன்னு, ரெண்டு டயலாக் எடுத்துவிட்டு போப்பா...


Anitha Pavankumar said...
//Good One
Full fun
//
Thx a lot

நாமக்கல் சிபி said...

செல்வன் said...
//
Ha..ha..super.:)))

Dont listen to naradhar Mr.Kumaran:))))
//
thx a lot $elvan...

Narathar kalakam Naarayananta (Balaji) sellumaa ;)

நாமக்கல் சிபி said...

Syam said...
//
as usual ROTFL......

கலக்குங்க ராசா :-)
//
மிக்க நன்றி

-L-L-D-a-s-u said...

;) ;) :)

Anonymous said...

// நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

:)

நாமக்கல் சிபி said...

தாஸ்/விக்னேஷ்,
மிக்க நன்றி

Nakkiran said...

//நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...
//

Too good.. :-) :-) :-)

நாமக்கல் சிபி said...

nakkiran,
thx a lot

Unknown said...

//Narathar kalakam Naarayananta (Balaji) sellumaa ;)//

அப்படி ஏதும் நினைச்சுகிட்டு ஏமாந்துடாதீங்க.நாரதர் திரிலோகத்திலும் தன் வேலையை காட்டுவார்.:)

Porkodi (பொற்கொடி) said...

எப்படிங்க.. ஒரு பக்கம் கதை எழுதறீங்க இன்னொரு பக்கம் லொள்ளுனு குரைக்க சீ கலாய்க்கறீங்க?!

வேந்தன் said...

கலக்குங்கண்ணா!, 3 பார்ட் எப்ப போடுவீங்க???

Anonymous said...

//படையப்பா

ரஜினி: அழகேசன்னே பொண்ணுங்கள்ல மொத்தம் மூணு வகை. முதல் வகை சாத்வீகம், அடுத்து ப்ரஜோதகம், மூணாவது பயானகம்

செந்தில்: இஞ்சினியரிங்ல உனக்கு இத்தனை கப் எப்படி விழுந்துச்சினு இப்ப புரியுது...//

ரொம்ப நல்ல காமெடி.

பெத்தராயுடு said...

இதுவும் சூப்பர்...

நாமக்கல் சிபி said...

//அப்படி ஏதும் நினைச்சுகிட்டு ஏமாந்துடாதீங்க.நாரதர் திரிலோகத்திலும் தன் வேலையை காட்டுவார்.:)
//
செல்வன்,
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரி

நாமக்கல் சிபி said...

//எப்படிங்க.. ஒரு பக்கம் கதை எழுதறீங்க இன்னொரு பக்கம் லொள்ளுனு குரைக்க சீ கலாய்க்கறீங்க?!//

பொற்கொடி,
எதோ நம்மால முடிஞ்சது அவ்வளவுதான்;)

நாமக்கல் சிபி said...

வேந்தன் said...
//கலக்குங்கண்ணா!, 3 பார்ட் எப்ப போடுவீங்க???
//
நன்றி... பொறுமையா எழுதுவோம் :)

ஷோபன்/பெத்தராயுடு,
மிக்க நன்றி

கார்த்திக் பிரபு said...

kalakkal.great.sooper..innum ennalam solli valthuradhu ungalai!!!

Prasanna Parameswaran said...

nalla ezhudhirukeenga! thodarndhu ezhudungal

நாமக்கல் சிபி said...

//கார்த்திக் பிரபு said...

kalakkal.great.sooper..innum ennalam solli valthuradhu ungalai!!!//

உனக்கு எப்படி நன்றி சொலறதுனு எனக்கு தெரியலையே ;)

நாமக்கல் சிபி said...

இந்தியன் ஏஞ்சல்,
மிக்க நன்றி

Anonymous said...

Ungallukku "LOLLU THILAGAM "nu pattam kodukkalam :-)

நாமக்கல் சிபி said...

// C.M.HANIFF said...

Ungallukku "LOLLU THILAGAM "nu pattam kodukkalam :-) //

நமக்கு எதுக்குங்க பட்டம், பதவியெல்லாம்... அதெல்லாம் இருந்தா இந்த மாதிரி ஜாலியா நினைச்சதெல்லாம் எழுத முடியாதுங்க :-)

இருந்தாலும் பாசத்துக்கு நன்றி!!!

பினாத்தல் சுரேஷ் said...

சூப்பர் காமெடி வெட்டிப்பயல்.

மேலேயே வைச்சிருங்க@!

நாமக்கல் சிபி said...

//சுரேஷ் (penathal Suresh) said...

சூப்பர் காமெடி வெட்டிப்பயல்.

மேலேயே வைச்சிருங்க@! //

மிக்க நன்றிங்கோ!!!
அது நம்ம கைல மட்டுமா இருக்கு... மக்கள் மனசு வெக்கனுமே ;)

Anjalu said...

ungaludaya vettipayal super.