தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, September 10, 2006

லிப்ட் ப்ளீஸ் -2

பாகம்-1
----------------------------------------------4--------------------------------------------

"இப்பவே மணி 5 ஆச்சு... சீக்கிரம் போங்க. வீட்டுக்கு போய் சேரதுக்குள்ள எப்படியும் 8 ஆயிடும்"

"ஏய்!!! ஐயா டிரைவிங் பத்தி என்ன நினைச்ச!!! 6:30க்கு எல்லாம் வீட்ல இருக்கலாம்"

"ஐயோ சாமி !!! நீங்க பொறுமையாவே போங்க... லேட்டா போனாலும் பிரச்சனையில்லை"

"என்ன சீக்கிரம் போன்னு சொல்லற... பொறுமையா போனு சொல்லற... மனஷன பைத்தியமாக்கறதுன்னு முடிவு பண்ணிட்ட"

"உங்க இஷ்டத்துக்கு ஓட்டுங்க!!! நான் எதுவும் சொல்லல"

.....

"என்னங்க இப்படி தூறல் போட ஆரம்பிச்சிடுச்சு... மழை பெய்யறதுக்குள்ள சீக்கிரம் போங்க"

"கவலைப்படாத சீக்கிரம் போய் சேந்துடலாம்..."

பத்தாவது ஹேர் பின் வளைவில் வண்டி அதன் கட்டுப்பாட்டை இழந்தது. மழையில் நனைந்து வழுவழுப்பாக இருந்த ரோட்டை பிரேக்கால் வெற்றி கொள்ள முடியவில்லை. வண்டி எதிரில் வந்த காரில் மோதியது.

----------------------------------------------5--------------------------------------------

"என்னங்க இரத்தம்னா பிடிக்குமா??? "

"ஆமாங்க... அதுவும் பாவம் செய்றவங்க இரத்தம்னா ரொம்ப பிடிக்கும்"

அவள் கையில் மின்னிய கத்தி அந்த இருளிலும் அவன் கண்களில் பயத்தை உண்டாக்கி அதன் கடமையை செய்தது.

"ஏ...என்ன செய்யப்போற நீ... நான் எந்த தப்பும் பண்ணல"

"என்ன நீ எதுவும் தப்பு பண்ணலையா??? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊட்டில நடந்தது உனக்கு நியாபகமில்ல" அவள் வார்த்தைகள் மிக கடுமையாக இருந்தன.

"ஊட்டிலயா??? நான் எந்த தப்பும் செய்யலையே"

"ஊட்டில இருந்து இறங்கற ஒரு வண்டில மோதிட்டு வந்தியே நியாபகமில்ல???" அவள் கண்கள் சிவந்திருந்தன.

"அது என் தப்பு இல்ல.. அந்த டூ-வீலர்தான் ராங் சைட்ல வந்தான்"

"இருக்கட்டும்... ரெண்டு உயிர் அடிப்பட்டு துடிச்சிட்டு இருக்கும் போது... உனக்கு வண்டிய நிறுத்தி காப்பாத்தனும்னு தோனல... இல்ல"

"போலிஸ் கேஸாகிடும்னு பயந்து நிறுத்தாம வந்துட்டேன்... என்ன மன்னிச்சிடு" அவன் வார்த்தைகள் பயத்தில் குழறின.

"அன்னைக்கு நீ மட்டும் நிறுத்தியிருந்தா நான் என் புருஷன இழந்திருக்கமாட்டேன்..."

"வேணாம் என்ன எதுவும் பண்ணிடாத... ப்ளீஸ்.... என்ன எதுவும் பண்ணிடாத ஆஆஆஆஆஆஆஆஆ.........."

----------------------------------------------6--------------------------------------------

"என்ன எஸ்.ஐ சார்... காலைலே ஆக்ஸிடெண்ட் கேஸா"

"ஆமாம்... நம்ம தாலி அறுக்கறத்துக்குனே வரானுங்க.
நானும் இந்த ஏரியா வேணாம்... மாத்திக்குடுங்கனா அந்த டி.எஸ்.பி வேற விடமாட்றான்... வாரத்துக்கு ஒரு பொணம் பாக்க வேண்டியதா இருக்கு"

"இன்னைக்கு எத்தன???"

"ஒன்னுதான்... தண்ணியடிச்சிட்டு ஓட்டிருப்பான்னு நினைக்கறேன். மரத்துல போய் மோதியிருக்கான்...
சரி... டாக்டர் எப்ப வருவாரு???"

"போன் பண்ணிட்டன் சார்... வந்துடுவாரு. ஷிப்ட் முடிஞ்சி அஞ்சி நிமிஷத்துக்கு முந்திதான் மூர்த்தி சார் போனாரு"

"சரி... நான் ஒரு கான்ஸ்டெபுல இங்க போட்டுட்டு போறேன். போஸ்ட்மார்டம் முடிஞ்சவுடனே ரிப்போர்ட்ட அவர்ட குடுத்துடுங்க. இன்னைக்கு வேற என் மச்சான் ஊர்ல இருந்து வரான். நான் 7 மணிக்குள்ள கறி வாங்காம போனா என் வூட்டுக்காரி என்ன வீட்லயே சேத்துக்க மாட்டா... நான் ரொம்ப நேரம் இங்க வெயிட் பண்ண முடியாது"

"சரி சார்..."

"மாரிமுத்து... நான் எஸ்.ஐதான் பேசறன். உடனே புறப்பட்டு ஜி.எச் வந்துடுங்க. ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸ். நீங்க பக்கத்துல இருந்து போஸ்ட் மார்ட்டம் ரிப்போட்ட வாங்கிட்டு வந்துடுங்க.. நீங்க வர வரைக்கும் நான் இங்க வெயிட் பண்றேன்"

(தொடரும்...)

பாகம்-3

19 comments:

Machi said...

ம்ம் அப்புறம் ... எப்ப அடுத்த பதிவு???

நாமக்கல் சிபி said...

குறும்பரே,
நாளைக்கு போட்டுடறேன் ;)

அப்பறம் கதை எப்படி போகுதுனு சொல்லவேயில்லயே!

கோழை said...

என்னய்யா இப்படி பாதிலேயே நிறுத்தீட்டிங்க? மீதி எப்ப வரும்??

நாமக்கல் சிபி said...

ஆதவன்,
கதை எப்படினு சொல்லாம இப்படி ஃபீல் பண்ணா எப்படி?

நாளைக்கு போட்டுடறேன்

Udhayakumar said...

ஏற்கனவே 2 டிராக்கை லிங்க் பண்ணீட்டீங்க.... சீக்கிரம் சொல்லுங்க, யோசிச்சா இருக்கற கொஞ்ச நஞ்சமும் கொட்டிரும்...

நாமக்கல் சிபி said...

உதய்,
நீங்க யோசிக்க வேண்டியதில்ல... கண்டிப்பா கெஸ் பண்ண முடியாது ;)

Anonymous said...

அருந்ததி ராய்., ஆட்டையாம்பட்டி ராய் ஏதாவது எழுதி இருந்தா அதை காப்பி அடிச்சி ஒரு பதிவு போடுவது பலனளிக்கும்.

கார்த்திக் பிரபு said...

நல்லா போகுது ..என்ன ஆக போகுதோ

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
அருந்ததி ராய்., ஆட்டையாம்பட்டி ராய் ஏதாவது எழுதி இருந்தா அதை காப்பி அடிச்சி ஒரு பதிவு போடுவது பலனளிக்கும்.
//

அனானி,
நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் புத்திசாலி தனம் இல்ல ;)

ஏதோ நமக்கு தெரிஞ்சத வெச்சி காலத்த ஓட்டறோம்...

நாமக்கல் சிபி said...

கார்த்திக் பிரபு said...
//நல்லா போகுது ..என்ன ஆக போகுதோ
//
மிக்க நன்றி... நாளைக்கு தெரியும் ;)

கப்பி | Kappi said...

குறும்பன் said...
ம்ம் அப்புறம் ... எப்ப அடுத்த பதிவு???


Udhayakumar said...
ஏற்கனவே 2 டிராக்கை லிங்க் பண்ணீட்டீங்க.... சீக்கிரம் சொல்லுங்க, யோசிச்சா இருக்கற கொஞ்ச நஞ்சமும் கொட்டிரும்...


கார்த்திக் பிரபு said...
நல்லா போகுது ..என்ன ஆக போகுதோ

நானும் டிட்டோ :)

நாமக்கல் சிபி said...

கப்பி,
அப்ப உனக்கும் அதே பதில்தான்

குறும்பரே,
நாளைக்கு போட்டுடறேன் ;)

உதய்,
நீங்க யோசிக்க வேண்டியதில்ல... கண்டிப்பா கெஸ் பண்ண முடியாது ;)

மிக்க நன்றி... நாளைக்கு தெரியும் ;)

Porkodi (பொற்கொடி) said...

நாளை நாளைனு பில்ட் அப் எல்லாம் ஜோரா தரீங்க.. அப்போ பெரிஅ குண்டுனு அர்த்தம் :)

நாமக்கல் சிபி said...

பொற்கொடி said...
//நாளை நாளைனு பில்ட் அப் எல்லாம் ஜோரா தரீங்க.. //
நம்ம வாழ்க்கையே பில்ட் அப்லதாங்க போகுது ;)

//
அப்போ பெரிஅ குண்டுனு அர்த்தம் :)
//
நான் குண்டுனு தான் நெனிச்சிட்டு இருக்கேன்... நீங்க எல்லாம் புஸ்ஸாக்காம இருந்தா சரிதான் ;)

Syam said...

நல்லா விறுவுறுப்பாதான் போகுது...அதிலும் அந்த போலீஸ் மேட்டர் ரொம்ப யதார்த்தம்...தொடருங்க...போன தடவை மாதிரி அவசரபட்டு முடிச்சிடாதீங்க :-)

நாமக்கல் சிபி said...

Syam said...
//
நல்லா விறுவுறுப்பாதான் போகுது...அதிலும் அந்த போலீஸ் மேட்டர் ரொம்ப யதார்த்தம்...
//
மிக்க நன்றி Syam

//
தொடருங்க...போன தடவை மாதிரி அவசரபட்டு முடிச்சிடாதீங்க :-)
//
இல்ல... இல்ல இந்த தடவை இந்த பாகத்துலயே முடிய வேண்டியது கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கட்டுமேனு முடிக்கல ;)

Sumathi. said...

aaaah, naalaikku eppa varumunu kaathiruken, mmmm seekaram naan padikkanum please?

Sumathi. said...

aaaah, naalaikku eppa varumunu kaathiruken, mmmm seekaram naan padikkanum please?

நாமக்கல் சிபி said...

sumathi said...
//aaaah, naalaikku eppa varumunu kaathiruken, mmmm seekaram naan padikkanum please? //
சுமதி,
அடுத்த பாகம் போட்டாச்சுங்க...
படிச்சுட்டு புரியுதானு சொல்லுங்க ;)