பாகம்-1 பாகம்-2
--------------------------------------7--------------------------------------
"என்னங்க சகல... இன்னைக்கு உங்க ஃபிரெண்ட்ஸ் யாரும் லன்ச்க்கு கூப்பிடலயா???"
"அன்னைக்கு சாப்பிட்ட லன்ச்சே இன்னும் செரிக்காம இருக்கு"
"உங்களுக்கு மட்டுமா??? எனக்கும்தான்... நீங்க ஏன் வண்டி சாவிய குடுத்திங்கனு என்ன புடிச்சி திட்டிக்கிட்டே இருந்தா"
"பின்ன... இவரே யூஸ் பண்ணாத வண்டிய குடுத்தா திட்டாம என்ன செய்வாங்க??"
"பரவால விடுக்கா... எல்லாம் இவர சொல்லனும்.
இப்ப நெனச்சாலும் எனக்கு கொல நடுங்குது.
நல்ல வேள புண்ணியவான் ஒருத்தன் கார நிறுத்தி ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போனான்... இல்லனா... நெனிச்சுப்பாக்கவே பயமா இருக்கு"
--------------------------------------8--------------------------------------
"என்ன சரவணன்... ஏதோ ரொம்ப சிக்கலான கேஸ்னு சொன்னீங்க!!! பாத்தா அப்படி ஒண்ணும் தெரியலையே"
"சார்... நீங்க இது என்னவா இருக்கும்னு ஃபீல் பண்றீங்க???"
"உங்க குழப்பம் என்னனு சொல்லுங்க... நான் அப்பறம் சொல்றேன்"
"நான் டெஸ்ட் பண்ணத வெச்சி பாக்கும் பொது அவருக்கு Schizophreniaவா இருக்குமோனு சந்தேகப்படறேன்"
"எத வெச்சி அப்படி சொல்றீங்க???"
"முதல் காரணம்... அவர் பேச்சு சில சமயம் சம்பந்தமே இல்லாம இருந்துச்சு"
"அடுத்து..."
"அவர ஹிப்னாடிக் ட்ரிட்மெண்ட் பண்ணும் போது அவர் ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஏதோ ஆக்ஸிடெண்ட் பண்ணியிருக்கார். அதுல வண்டி ஓட்னவர் இறந்துட்டார். அவர் மனைவி விதவையாகிட்டாங்கனு தீர்க்கமா நம்பறார். அதுவும் இல்லாம அவுங்க இவர பழிவாங்க தேடறாங்கனு பரிபூர்ணமா நம்பறார்"
"வேற..."
"அவருக்கு நிறைய உருவங்கள் நகரமாதிரி தெரிஞ்சிருக்கு... ஆனா அதெல்லாம் போட்டோல இருக்குற உருவங்கள்... இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கு"
"சரி... இப்ப உங்க சந்தேகம் என்ன??? சொல்லுங்க"
"போதுவா Schizophrenia பேஷண்ட்டுக்கு ஆடியோ ஹாலோஸினேஷன் தான இருக்கும்... இவருக்கு எப்படி விஷ்வல் ஹாலோஸினேஷன் இருக்குன்றதுதான்"
"சரவணன்!!! யு ஹேவ் ப்ருவ்ட் யுவர் பிரில்லியன்ஸி. பட் நீங்க பண்ண தப்பு நீங்க முதல்ல ஒரு விஷயத்தை திர்மானிச்சிட்டு அப்பறம் ஆராய ஆரம்பிச்சிருக்கிங்க. சரி Schizophreniaனா என்ன சொல்லுங்க?"
"அது ஒருவகையான மன நோய். அது இதனாலதான் வருதுனு சொல்ல முடியாது. ஆனால் அதனுடைய அறிகுறிகள் ஒரு விஷயத்தில் தீவிர நம்பிக்கை, மாய ஒலிகள், நேர்த்தியற்ற பேச்சு, தீவிரமடையும் நிலையில் செயல்பட முடியாத நிலை"
"சரியா சொன்னீங்க... ஆனா அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு.. அத கவனிச்சீங்களா???"
"சார்... யூ மீன் டு சே... இட்ஸ் பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ்" (Peduncular Hallucinosis)
"யு ஆர் அப்சல்யூட்லி ரைட்... பொதுவா இந்த டிஸிஸால பாதிக்கப்பட்டவங்க கண்ணுக்கு இந்த மாதிரி பல மாய தோற்றங்கள் தெரியும். முதல்ல சொன்னதுக்கும் இதுக்கும் வித்தியாசம்... இதுல மாய உருவங்கள் தெரியும் ஆனா Schizophreniaல மாய ஒலிகள் மட்டும் கேக்கும்."
"ஆனா பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ் மாய குரல் எதுவும் கேக்காதே... "
"அங்க தான் நீங்க தப்பு பண்ணறீங்க... Caplan 1980ல பண்ண முக்கியமான தீஸிஸ்ல இது இருக்கு... இந்த நோயால பாதிக்கப்பட்டங்களுக்கு சில சமயம் உருவங்களுடன் சத்தங்களும் கேட்கும்னு சொல்லி ப்ரூஃப் கொடுத்துருக்காரு"
"சார்... ஆனா அவர் பண்ண அந்த ஆக்ஸிடெண்ட் பயம்... அந்த பொண்ணு பழி வாங்குவானு அவர் கொண்டிருந்த தீவிர நம்பிக்கை"
"அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே பயம்னு... அவ்வளவுதான்.
அதுக்குத்தான் மனசாட்சினு பேர்"
"எனக்கு என்னுமோ அவர் Schizophreniaவாலயும் அஃபக்ட் ஆகியிருப்பார்னு இன்னமும் தோனுது சார்...
எனக்கு இருந்த அந்த ஒரு சின்ன சந்தேகத்தால தான் நான் அவர்ட எதையும் சொல்லல..."
"குட்... டெஸ்ட்க்கு எப்ப வருவார்னு சொன்னீங்க???"
"நாளைக்கு சாயந்திரம் 7 மணிக்கு அப்பாயின்மெண்ட்"
"அப்ப நாளைக்கு தெரிஞ்சிடும்..."
---------------------------------------9---------------------------------------
"என்னது!!! ஹார்ட் பீட் முதல்ல நின்னதுக்கப்பறம்தான் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கா???"
"ஆமாம் சார்... டாக்டர் அப்படிதான் சொன்னாரு. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்லயும் ஹார்ட் அட்டாக்னு தான் எழுதியிருக்காறாம். எதுக்கும் உங்கள ஒரு தடவ போன் பண்ண சொன்னாரு"
"இந்த போனை கண்டுபிடிச்சவன முதல்ல உள்ள தூக்கி போடனும்யா. எதுக்கு எடுத்தாலும் போன் பண்ண சொல்லிடுவானுங்க... அதுதான் ஹார்ட் அட்டாக்னு ரிப்போர்ட் கொடுத்துட்டாரில்ல. கேஸ க்ளோஸ் பண்ண வேண்டியதுதான்"
(முற்றும்)
49 comments:
wow, great. atlast you too didn't kill anybody in the story.
chinnathambi
யப்போவ், மறுபடியும் முதல்ல இருந்து படிக்கணும்.... குழப்பீட்டீங்களே :-)
நிறைய ஹோம் வொர்க் பண்ணிருக்கீங்கன்னு தெரியுது... மறுபடியும் முதல்ல இருந்து படிச்சிட்டு வரேன்...
சின்ன தம்பி,
இதுல எதாவது உள்குத்து இருக்கா???
யார்கிட்ட இருந்தும் ரெஸ்பான்ஸே இல்ல :(
Udhayakumar said...
//யப்போவ், மறுபடியும் முதல்ல இருந்து படிக்கணும்.... குழப்பீட்டீங்களே :-)//
என்னங்க நீங்களே இப்படி சொல்லிட்டீங்க!!!
விஷயம் ஒண்ணும் பெருசு இல்ல...
கார்ல லிப்ட் எல்லாம் யாரும் வாங்கல. அது அவரோட மனநோயால வந்த பிரச்சனை. கத்தியால குத்தறானு பயத்துல அவன் இதயம் நின்னுடுச்சு. அதனால மரத்துல கார் மோதி ஆக்ஸிடண்ட்...
இப்ப படிங்க புரியும் ;)
//நிறைய ஹோம் வொர்க் பண்ணிருக்கீங்கன்னு தெரியுது... மறுபடியும் முதல்ல இருந்து படிச்சிட்டு வரேன்...
//
இந்தியால இருந்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும்... இங்க யாரும் டாக்டர் ஃபிரெண்ட்ஸ் இல்லாததால கூகுலாண்டவரின் துணைக்கொண்டு எழுதினேன் ;)
உதய்,
இன்னும் புரியலையா???
Oh no!!!
பேசாம பேய் கதையே எழுதியிருக்கலாம் ;)
//"குட்... டெஸ்ட்க்கு எப்ப வருவார்னு சொன்னீங்க???"
"நாளைக்கு சாயந்திரம் 7 மணிக்கு அப்பாயின்மெண்ட்"
"அப்ப நாளைக்கு தெரிஞ்சிடும்..."//
இங்கதான் கொஞ்சம் புரியலே! யாரு testkku வர்றாங்க, மத்தபடி நீங்க முன்னாடி படிச்ச ராஜேஸ் குமார் ன் எபெக்ட் கதையில் நல்லாவே தெரியுது.
hi thalai enakum thaliyum puriyalai mudivum puriyalai..marubadiyum padichituu comments podurane..office la net connection illa ..cybercafe la irundhu comments poduranes so only englishla comments mannikanum
வேந்தன்,
நாளைக்கு வருவார்னு அவுங்க காத்திருக்காங்க... ஆனால் அதுக்குள்ள அவர் இந்த நோயின் பாதிப்பால இறந்து விடுகிறார்.
கார்த்திக் பிரபு said...
//hi thalai enakum thaliyum puriyalai mudivum puriyalai..marubadiyum padichituu comments podurane..office la net connection illa ..cybercafe la irundhu comments poduranes so only englishla comments mannikanum
//
பொறுமையா படிச்சுட்டு சொல்லு
கொஞ்சம் கன்பீஸ்டா தான் கமெண்ட் போட வந்தேன்...இங்க உங்க விளக்கம் புரிய வச்சுடுச்சு....nice job...ஆன இவளே சீக்கிரம் முடியும்னு எதிர் பார்க்கல :-)
Syam said...
//
கொஞ்சம் கன்பீஸ்டா தான் கமெண்ட் போட வந்தேன்...இங்க உங்க விளக்கம் புரிய வச்சுடுச்சு....
//
கடைசில யாருக்குமே புரியாத மாதிரி எழுதிட்டேன்... ஸாரி அடுத்த தடவை கொஞ்சம் நல்லா எழுத முயற்சி பண்றேன்.
//
nice job...ஆன இவளே சீக்கிரம் முடியும்னு எதிர் பார்க்கல :-)
//
மிக்க நன்றி... ரொம்ப பெருசா எழுதனா போட்டிக்கு அனுப்ப முடியாதுனு முடிச்சிட்டேன் ;)
இப்ப பார்த்தா அனுப்பவே வேணாம்னு தோனுது :(
ஆனா கண்டிப்பா அனுப்புவேன்
anuppunga.. nalla thaan irukku aana padikravangaluku purium padiya irukanum to an extent enbadhu en opinion. irundhum vidyasama try panirukinga.. :) rajeshkumar effect vandadhu ninga virumbiya illa teriyamala?
நல்லா வந்திருக்கு 'டாக்டர்' வெட்டி...ஆனா கதை முழுக்க வசனங்களாகவே இருக்கறதால கொஞ்சம் குழப்புது :)
பொற்கொடி said...
//
anuppunga.. nalla thaan irukku aana padikravangaluku purium padiya irukanum to an extent enbadhu en opinion.
//
மிக்க நன்றி...
கமலோட ஆளவந்தான் எஃபக்ட்ல பிளாப் ஆயிடுச்சு... பரவால நாங்க தெனாலி குடுத்து மார்க்கெட்ட சரி பண்ணிக்குவோம்.
// irundhum vidyasama try panirukinga.. :) rajeshkumar effect vandadhu ninga virumbiya illa teriyamala?
//
தெரியாம வந்ததுதாங்க!!! யாரையும் பின்பற்ற வேண்டாம்னு பாக்கறேன் ;)
கப்பி பய said...
//
நல்லா வந்திருக்கு 'டாக்டர்' வெட்டி...
//
ஆஹா... என்ன விளையாட்டு இது??
நீ சொன்னத கேட்டு நான் பாட்டுக்கு யாருக்காவது ஊசி போட்டுட போறேன் ;)
//
ஆனா கதை முழுக்க வசனங்களாகவே இருக்கறதால கொஞ்சம் குழப்புது :)
//
சரி பண்ணிக்கலாம்... அடுத்த கதைல
என்ன பாலாஜி இவ்ளோ ஹை-டெக்-கா கதை எழுதறீங்க எனக்கெல்லாம் கேன்சர் தாண்டி வியாதி பேரே தெரியாது அது கூட தமிழ் சினிமா புண்ணியத்துல
நீங்க விளக்கினதுக்கு அப்புறம்தான் கதை புரிஞ்சது, ஆனா அது உங்க கதையில் உள்ள குறைபாடு இல்லை!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ராசுக்குட்டி said...
//
என்ன பாலாஜி இவ்ளோ ஹை-டெக்-கா கதை எழுதறீங்க எனக்கெல்லாம் கேன்சர் தாண்டி வியாதி பேரே தெரியாது அது கூட தமிழ் சினிமா புண்ணியத்துல
//
இது கூட நம்ம "குடைக்குள் மழை" எஃபக்ட்தான்... ஆனால் "மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ்ஸார்டர் இல்ல" (ஐ மீன் "அந்நியன்" இல்ல)
//
நீங்க விளக்கினதுக்கு அப்புறம்தான் கதை புரிஞ்சது, ஆனா அது உங்க கதையில் உள்ள குறைபாடு இல்லை!
//
அதுக்காகத்தான் விளக்கி ஒரு பதிவே போட்டுட்டேன். இதுல ஒரு காமெடி என்னனா நான் எழுதனா கமெடி கதையாத்தான் இருக்கும்னு அவனவன் நக்கல் பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க ;)
//போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
//
மிக்க நன்றி!!!
கதையை மறுபடியும் படிச்சாத்தான் புரியும் போல இருக்கே.
என்ன கொடுமை - பின்னூட்டத்தில் கதையை விளக்க வேண்டிய நிலைமை வந்துருச்சே வெட்டி. :-((
/(முற்றும்)/
அப்பாடி :-))
மூன்று பாகத்தையும் படித்தேன். ராஜேஷ்குமார் (செக்ஸ் இல்லாததால் ராஜேந்திர குமார் நஹி; காதல் மிளிராததால் ப.கோ.பி. டச்சும் லேது) நடையில் கட்டிப் போடும் ஆரம்பம். முடிவை என்னால், கண்டுபிடிக்க முடியவேயில்லை. சப்பென்று தமிழ்ப்படம் போல் தெரிந்த பாதையில் கொண்டு போகாமல், உருப்படியாக ஆராய்ந்து, அதை சுஜாதா ஸ்டைலில் இளக்கி, பின்னிப் பிணைத்ததற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
மிகவும் சுவாரசியமான படைப்பு.
Boston Bala said...
//மூன்று பாகத்தையும் படித்தேன். ராஜேஷ்குமார் (செக்ஸ் இல்லாததால் ராஜேந்திர குமார் நஹி; காதல் மிளிராததால் ப.கோ.பி. டச்சும் லேது) நடையில் கட்டிப் போடும் ஆரம்பம். முடிவை என்னால், கண்டுபிடிக்க முடியவேயில்லை. சப்பென்று தமிழ்ப்படம் போல் தெரிந்த பாதையில் கொண்டு போகாமல், உருப்படியாக ஆராய்ந்து, அதை சுஜாதா ஸ்டைலில் இளக்கி, பின்னிப் பிணைத்ததற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
//
பாபா,
நீங்க தமிழ் சினிமா மாதிரி இருக்குனு நக்கல் அடிப்பேங்கனு தான் இந்த மாதிரி எழுதினேன்.
நீங்க என்ன மைக்ரோஸ்கோப் வெச்சி படிப்பீங்களா???
ஸ்டார்ட்டிங்ல அந்த கார்ல ஏற வரைக்கும் ராஜேஷ் குமார் டச் இருக்கும். அதுலயே ஒரு சின்ன மிஸ்டேக் என்னனா முடிக்கும் போது அவ கைல கத்தி இருந்திருக்கனும். அதுதான் ராஜேஷ் குமார் டச்.
அது போக போக ராஜேஷ் குமார் டச் இல்லாம போயிடுச்சு (அது தெரிந்தே செய்தது).
//மிகவும் சுவாரசியமான படைப்பு.//
மிக்க நன்றி. வழக்கம் போல உங்க விமர்சனத்துல நல்லா தாளிப்பீங்கனு தெரியும். பராவால பண்ணுங்க. அப்பத்தான் நான் என்ன திருத்திக் கொள்ளமுடியும் ;)
//கதையை மறுபடியும் படிச்சாத்தான் புரியும் போல இருக்கே.
//
படிங்க குறும்பன். இது என்ன சினிமாவா காசு குடுத்து பார்க்க...
ஃப்ரீதானே அப்பறம் என்ன?
//
என்ன கொடுமை - பின்னூட்டத்தில் கதையை விளக்க வேண்டிய நிலைமை வந்துருச்சே வெட்டி. :-((
//
இதுக்கே இப்படி ஃபீல் பண்றீங்களே!!! இதுக்காக தனியா ஒரு பதிவே போட்டுட்டேன் ;)
//
/(முற்றும்)/
அப்பாடி :-))
//
குறும்பு ;)
//
பாபா,
கேக்க மறந்துட்டேன்...
இந்த முறை விமர்சனமெல்லாம் இல்லையா???
தேன்கூடுல உங்க கதைக்கு எப்படி ஓட்டு போடறது?
*
*
*
அதாவது Steps / Links. ஓட்டு பெட்டி கண்ணுக்கு தெரியலயே.
குறும்பன் said...
//
தேன்கூடுல உங்க கதைக்கு எப்படி ஓட்டு போடறது?
*
*
*
அதாவது Steps / Links. ஓட்டு பெட்டி கண்ணுக்கு தெரியலயே.
//
குறும்பரே,
ஓட்டெடுப்பு 21 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும்.
அப்போது நீங்கள் அங்கே உங்களுக்கு பிடித்த ஆக்கங்களுக்கு எல்லாம் ஓட்டு போடலாம். அதற்கு முன்னால் தேன்கூடில் இணையவும்.
நம்ம கதை 44வதுல இருக்கு. அதுக்கும் மறக்காம போடவும்...
என் அருமை வாசகர்களே,
மறக்காம 44க்கு ஓட்டு போடுங்க!!!
அப்படியே மற்ற நல்ல படைப்புகளுக்கும் ஓட்டு போடுங்க (I beleive those 2 events are not mutually exclusive ;))
-----மறக்காம 44க்கு ஓட்டு போடுங்க----
வாக்கு கோர நல்ல முறையாக இருக்கிறதே! :-D
-----இந்த முறை விமர்சனமெல்லாம் இல்லையா---
நானும் பயன்படுத்திக் கொள்ள நினைப்பதால், இந்த முறை (அனேகமாக) விமர்சனம் செய்ய முடியவில்லை. ;-)
தல 3 பாகத்தையும் ஒரே மூச்சா படிச்சேன். எல்லாமே புரிஞ்சுது. உங்க பின்னூட்ட விளக்கம் இன்னுங் கொஞ்சம் தெளிவுப்படுத்தியது. அவ்ளோதான். வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Boston Bala said...
//-----மறக்காம 44க்கு ஓட்டு போடுங்க----
வாக்கு கோர நல்ல முறையாக இருக்கிறதே! :-D
//
இப்ப எல்லாம் இந்த மாதிரி ஓட்டு கேட்டதான் ஓட்டு விழும் போல இருக்கு...
//நானும் பயன்படுத்திக் கொள்ள நினைப்பதால், இந்த முறை (அனேகமாக) விமர்சனம் செய்ய முடியவில்லை. ;-) //
வாங்க!!! வாங்க!!!
அப்ப களம் சூடாத்தான் இருக்கும்.
முதல் 10க்குள்ள வந்தாலே போதும்.
நீங்க விமர்சனம் செய்ய மாட்டீங்கனு தெரிஞ்சிருந்தா ஒரு லவ் ஸ்டோரி எழுதியிருப்பேனே!!!
சரி இந்த வாரத்துக்குள்ள முடிஞ்சா எழுதறேன் ;)
அமுதன் said...
//
தல 3 பாகத்தையும் ஒரே மூச்சா படிச்சேன். எல்லாமே புரிஞ்சுது. உங்க பின்னூட்ட விளக்கம் இன்னுங் கொஞ்சம் தெளிவுப்படுத்தியது. அவ்ளோதான்.
//
அமுதா,
எல்லோரும் உன்ன போலவே சொல்லியிருந்தா எனக்கு இன்னொரு பதிவு குறைஞ்சிருக்கும் ;)
//
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
//
மிக்க நன்றி!!!
கதை எப்படினு சொல்லவே இல்லையே ;)
பாலாஜி,
இதை வெளியிட வேண்டாம்.ஓட்டு பாதிக்கலாம்.
கதையின் நல்ல விஷயங்கள்
உரையாடல் பாணியிலேயே முழு கதையையும் கொண்டு சென்றது.பி.கே.பி இதை ஒரு முழு நாவலில் செய்து காட்டியிருப்பார்.மிகவும் கடினமான விஷயத்தை நன்றாக கொண்டு சென்றீர்கள்
சஸ்பென்ஸ் கடைசிவரை மெயின்டைன் செய்தது.அருமையாக இருந்தது.
கணவனை கொன்றாய் என கத்தியால் குத்தும் இடம்,அதன்பின் அது மனநோய் என தெரியும் இடம் மிஉக அருமையான திருப்பங்கள்.
நெகடிவ் பாயின்ட்ஸ்
கதையில் திருப்பமே அந்த ஷிசோபெர்னியா விஷயம் தான்.ஆனால் அது கிளைமேக்சுக்கு முன்னரே உடைந்து விடுகிறது.லேசாக குழப்பமும் இருக்கிறது.பின்னூட்டத்தை படித்தால் அது தெரிகிறது.ஆக்சிடென்டுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று எதிர்கேள்வி எழுகிறது.
மொத்தத்தில் மிகவும் நல்ல கதை.வாழ்த்துக்கள்.
அய்யா, கதை நல்லா போய்கிட்டே இருந்ததுனு பார்த்தா திடீரென்னு குழப்பிடீங்கலே,புதுசு புதுசா பேரெல்லாம் சொல்லி .... சரி கதை
எப்படியோ முடிஞ்சுது.போனா போகுது உங்களுக்கே ஓட்டு போட்டுடரேன். போதுமா?!!!!!
அடுத்த கதெயாவது நல்லா வரட்டும்.சரியா..
அய்யா, கதை நல்லா போய்கிட்டே இருந்ததுனு பார்த்தா திடீரென்னு குழப்பிடீங்கலே,புதுசு புதுசா பேரெல்லாம் சொல்லி .... சரி கதை
எப்படியோ முடிஞ்சுது.போனா போகுது உங்களுக்கே ஓட்டு போட்டுடரேன். போதுமா?!!!!!
அடுத்த கதெயாவது நல்லா வரட்டும்.சரியா..
யெதோ நீங்களும் நம்ம ராஜேந்திர குமார் மாதிரி டிரைப் பண்ணி இருக்கீங்க, இப்படியே போனா அவர பிடிச்சுடலாம். முயர்ச்சி பண்ணுங்க சரியா?
sumathi said...
//
அய்யா, கதை நல்லா போய்கிட்டே இருந்ததுனு பார்த்தா திடீரென்னு குழப்பிடீங்கலே,புதுசு புதுசா பேரெல்லாம் சொல்லி .... சரி கதை
எப்படியோ முடிஞ்சுது.
//
என்னங்க உங்களுக்கு புரியலனா புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க ;)
நம்ம நினைக்கிற மாதிரியே எல்லாம் நடக்குமா???
//போனா போகுது உங்களுக்கே ஓட்டு போட்டுடரேன். போதுமா?!!!!!
அடுத்த கதெயாவது நல்லா வரட்டும்.சரியா..
//
தயவு செஞ்சி நீங்க போனா போகுதுனு ஓட்டு போட வேணாங்க!!! நல்லா இருக்குற கதைக்கு மட்டும் ஓட்டு போடுங்க!!! அடுத்த கதை உங்களுக்கு புடிச்ச மாதிரி லவ் ஸ்டோரியா எழுத ட்ரை பண்றேன் ;)
sumathi said...
//
யெதோ நீங்களும் நம்ம ராஜேந்திர குமார் மாதிரி டிரைப் பண்ணி இருக்கீங்க, இப்படியே போனா அவர பிடிச்சுடலாம். முயர்ச்சி பண்ணுங்க சரியா?
//
யார மாதிரியும் நான் ட்ரை பண்ணலைங்க... ராஜேஷ்குமார் இந்த மாதிரி எல்லாம் முடிக்க மாட்டாருங்க. அவர் எல்லாருக்கும் புரிய மாதிரி விளக்கிதான் முடிப்பாரு... நான் நீங்களா புரிஞ்சிக்கனும்னு முதல்ல ரொம்ப விளக்காம விட்டுட்டேன்.
செல்வன் said...
//
இதை வெளியிட வேண்டாம்.ஓட்டு பாதிக்கலாம்.
//
பரவாயில்லை!!! நல்ல விமர்சனங்களை வெளியிடுவதில் தப்பில்லை ;)
தோத்தாலும் பரவாயில்லை. அடுத்த மாசம் பாத்துக்கலாம் ;)
//
கதையின் நல்ல விஷயங்கள்
உரையாடல் பாணியிலேயே முழு கதையையும் கொண்டு சென்றது.பி.கே.பி இதை ஒரு முழு நாவலில் செய்து காட்டியிருப்பார்.மிகவும் கடினமான விஷயத்தை நன்றாக கொண்டு சென்றீர்கள்
சஸ்பென்ஸ் கடைசிவரை மெயின்டைன் செய்தது.அருமையாக இருந்தது.
கணவனை கொன்றாய் என கத்தியால் குத்தும் இடம்,அதன்பின் அது மனநோய் என தெரியும் இடம் மிஉக அருமையான திருப்பங்கள்.
//
மிக்க நன்றி... கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. அதனால தான் நிறைய பேருக்கு புரியாம போயிடுச்சு. ரெண்டாவது தடவை கொஞ்சம் கவனமா படிச்சா நிச்சயம் புரியும்னுதான் நினைக்கிறேன் ;)
//
நெகடிவ் பாயின்ட்ஸ்
கதையில் திருப்பமே அந்த ஷிசோபெர்னியா விஷயம் தான்.ஆனால் அது கிளைமேக்சுக்கு முன்னரே உடைந்து விடுகிறது.லேசாக குழப்பமும் இருக்கிறது.பின்னூட்டத்தை படித்தால் அது தெரிகிறது.
//
இல்லையே கடைசி பாகத்துல ரெண்டு டாக்ரர்ஸும் பேசும் போது தானே அது வெளியே தெரிகிறது. அப்பவும் சொல்லாம இருக்க முடியுமா???
இரண்டு முறை கவனித்து படித்தும் குழப்புகிறதா???
கண்டிப்பா இருக்காதுனு நினைக்கிறேன்.
//
ஆக்சிடென்டுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று எதிர்கேள்வி எழுகிறது.
//
இது நியாயமான கேள்வி. அவன் மனசுல அவனை அறியாமலே ஏற்பட்ட பயமும், அந்த பயத்தை அவன் இரண்டு வருடங்களாக சுமந்ததும்தான் காரணம்.
உதாரணத்திற்கு, இரண்டு கையையும் நேராக நீட்டி, ஒரு குச்சியை (மிகவும் குறைந்த எடை கொண்டதாக இருக்கட்டும்) அதன் மேல் வைக்கவும்.
முதலில் வலி தெரியாது. போக போக கையை அவ்வாறே நீட்டிக் கொண்டிருந்தால் மரண வலி எடுக்கும்.
அதே தான் இங்கேயும், அந்த பெண் அவனை பழி வாங்க வருவாள் என்ற அந்த எண்ணம் அவன் மனதில் பல நாட்கள் இருந்ததன் விளைவே அது. அவன் அன்றே போலீஸிடம் சென்றிருந்தால், அவன் பயம் நீங்கியிருக்கும்.
//
மொத்தத்தில் மிகவும் நல்ல கதை.வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி!!!
நல்ல முயற்சி,
வாழ்த்துக்கள் !!
***
"அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு" போன்றவைக்கு உழைத்திருப்பது தெரிகிறது :-))
***
பகுதிகளை சரியான முறையில் தெளிவாக முடிக்காதது சிறுகுறை. க்ளைமேக்ஸ் வாசகர்களை சற்று குழப்புகிறது. கதையை விட, முடிவை விளக்கம் சொல்லி போட்ட பதிவு சூப்பர்.
***
விமர்சனத்தை பாருங்கள்....
// சோம்பேறி பையன் said...
நல்ல முயற்சி,
வாழ்த்துக்கள் !!
***
"அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு" போன்றவைக்கு உழைத்திருப்பது தெரிகிறது :-))
***
//
மிக்க நன்றி!!!
//
பகுதிகளை சரியான முறையில் தெளிவாக முடிக்காதது சிறுகுறை. க்ளைமேக்ஸ் வாசகர்களை சற்று குழப்புகிறது. கதையை விட, முடிவை விளக்கம் சொல்லி போட்ட பதிவு சூப்பர்.
//
எப்பவும் படிக்கிற தமிழ் நாவல் மாதிரி முடிக்க வேண்டாம்னு தான் அப்படி முடிச்சேன்... பேர் வெச்சி ஈஸியா எழுதியிருக்க முடியும்... கொஞ்சமாவது வித்தியாசம் வேண்டாமா?
//
***
விமர்சனத்தை பாருங்கள்....
//
காணமே!!!
//கதை எப்படினு சொல்லவே இல்லையே ;) //
தல, நான் திகில் கதைன்னு சொன்னா நக்கல் பண்றியானு கேக்குறீங்க! :-((... அதான் சொல்லல. நம்ம கதைக்கு விளக்கப்பின்னூட்டம் போடுறேன்னு சொல்லிட்டு போடவே இல்ல. ஏன் தல?
அமுதா,
மன்னிக்கவும்.... வீட்டுக்கு போனவுடனே மறந்தே போயிட்டேன்..
இதோ வரேன் ;)
படிச்சுப் பார்த்தேன். நல்லா இருந்திச்சு உங்க கதை. (பின்னூட்டங்களின் துனையோட நல்லாவே புரிஞ்சுச்சு.) ஒரு வரியில சொல்லணும்னா ... இங்கே பாருங்க
முரட்டுக்காளை said...
//படிச்சுப் பார்த்தேன். நல்லா இருந்திச்சு உங்க கதை. (பின்னூட்டங்களின் துனையோட நல்லாவே புரிஞ்சுச்சு.) ஒரு வரியில சொல்லணும்னா ...
//
மிக்க நன்றி!!! முரட்டுக்காளை
முரட்டுத்தனமா எல்லா பதிவுகளையும் படிச்சிருக்கீங்க!!! புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க ;)
Nice effort .... why not sequence order before publishing !!!
//Anonymous said...
Nice effort ....
//
Hi,
Thx a lot.
// why not sequence order before publishing !!!
//
Sorry! I am not sure what do u mean by this...
Hi Vetti,
Crime story.......good effort,
Got thrilled and astonished by the way of your writing too!
Ithu mathry thriller ellam ezhutha try panunga, innum super aa ungala ezhutha mudiyum, just go for it buddy!
Divya
//Anonymous said...
Hi Vetti,
Crime story.......good effort,
Got thrilled and astonished by the way of your writing too!
Ithu mathry thriller ellam ezhutha try panunga, innum super aa ungala ezhutha mudiyum, just go for it buddy!
Divya
//
Hi Divya,
Thx a lot...
Will try for one soon...
It may take 1 or 2 months to start that.. need to collect lot of data :-)
pls validate if my observations is right.
one guy crashes on a couple n escapes. the couple is rescued by someone else and they survive.
the guy who escaped starts suffering from hallucinaitons n die of heart attack.
right?
Very good work.
// dany said...
pls validate if my observations is right.
one guy crashes on a couple n escapes. the couple is rescued by someone else and they survive.
the guy who escaped starts suffering from hallucinaitons n die of heart attack.
right?
Very good work. //
Dany,
You are absolutely right...
Thank god.. atleast few people can get the story :-)
Thx a lot Dany...
ரொம்ப நல்லா இருக்கு வெட்டி!!!
கதை எனக்கு தெளிவா புரிஞ்சுது!!
நல்ல நடை,கற்பனை!!
வாழ்த்துக்கள்!! :-)
//CVR said...
ரொம்ப நல்லா இருக்கு வெட்டி!!!
கதை எனக்கு தெளிவா புரிஞ்சுது!!
நல்ல நடை,கற்பனை!!
வாழ்த்துக்கள்!! :-) //
மிக்க நன்றி CVR ...
Post a Comment