தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, September 27, 2006

நன்றி! நன்றி!! நன்றி!!!

என் அன்பிற்குரிய வாசக நண்பர்களே!!! உங்கள் பாசத்திற்குரிய வெட்டியின் மனமார்ந்த நன்றிகள்!!!

எனது இரண்டு படைப்புகளுக்கும் (தீயினால் சுட்ட புண் (30), லிப்ட் ப்ளீஸ்(21) )ஓட்டு போட்ட அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற
1. அசாத்
2. ராசுக்குட்டி
3. யோசிப்பவர்
4. முரட்டுக் காளை

ஆகியோருக்கு என் பாராட்டுக்கள்!!!

வித்தியாசமான/அருமையான தலைப்பை கொடுத்த எங்கள் கொங்கு ராசாவிற்கும் என் நன்றி!!!

36 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வெற்றி பெற்றவர்க்கும், வெற்றி தொட்டவர்க்கும், வாழ்த்துக்கள்!

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் நண்பா!

கதிர் said...

பெரிய மன்சுபா ஒனக்கு, நமக்கு கெடிக்காட்டியும் அடுத்தவங்கள வாய்த்தணும்னு தோணுதே!

நாமக்கல் சிபி said...

KRS/ILA,
மிக்க நன்றி!!!

தம்பி,
நமக்கு ஓட்டு போடாதவங்களை பத்தி கவலைப்படறத விட நம்மல மதிச்சவங்களுக்கு நன்றி சொல்றது ரொம்ப முக்கியம்னுபட்டுது.

அப்பறம் வெற்றி பெற்றவர்களும் நம்ம நண்பர்கள் தானே!!! அவுங்களோட வெற்றிய நம்ம பகிர்ந்துக்கலனா எப்படி? இந்த மாசம் விட்ட அடுத்த மாசம் பாத்துக்கலாம். ரைட்டா???

நாமக்கல் சிபி said...

//Suresh Babu R said...
வாழ்த்துகள்.

உஙகள் தொகுப்புகள் அனைத்தும் அருமை.

தின‌மும் உஙகள் ப‌திவை அவலுடன் எதிர் பார்க்கும்.

சுரெஷ் பாபு.
//
மிக்க நன்றி சுரேஷ்!!! நீங்க எல்லாம் கொடுக்கற உற்சாகம்தான் நம்மல எழுத வெக்குது ;)

Sud Gopal said...

//சுதர்சன்.கோபால் said...
இந்த வாட்டி உங்களுக்கு ரெண்டு கள்ள ஓட்டு போடச் சொல்லி கனவில வந்த பாட்டி சொன்னாங்க.
//
அன்றே சொன்னார்..அறிஞர் அன்றே சொன்னார்...

வாழ்த்துகள் தும்பீ.

நாமக்கல் சிபி said...

//சுதர்சன்.கோபால் said...
//சுதர்சன்.கோபால் said...
இந்த வாட்டி உங்களுக்கு ரெண்டு கள்ள ஓட்டு போடச் சொல்லி கனவில வந்த பாட்டி சொன்னாங்க.
//
அன்றே சொன்னார்..அறிஞர் அன்றே சொன்னார்...

வாழ்த்துகள் தும்பீ.
//
பரவாயில்ல விடுங்க!!! ஒரு ஓட்டுதானே அடுத்த தடவை பாத்தக்கலாம்.

நமக்கு ஒரு ஓட்டு விழுந்திருந்தா அந்த ஒரு ஓட்டுல இன்னொருத்தர் அடுத்த இடத்துக்கு போயிருப்பார்.

அப்பறம் ஒரு முக்கியமான கேள்வி,
அறிஞர் அண்ணா உங்க பாட்டியா??? அது எப்படி?

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் வெட்டி!!

நாமக்கல் சிபி said...

// கப்பி பய said...
வாழ்த்துக்கள் வெட்டி!!
//
மிக்க நன்றி!!!

Syam said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும்...அடுத்த எலக்சன்ல கண்டிப்பா உங்களுக்கு மந்திரி பதவி உண்டு :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...
வாழ்த்துக்கள் உங்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும்...அடுத்த எலக்சன்ல கண்டிப்பா உங்களுக்கு மந்திரி பதவி உண்டு :-)
//
மிக்க நன்றி syam.
ஆனால் மந்திரி பதவி எல்லாம் நமக்கு தேவையில்ல. மக்கள் ஆதரவு இருந்தாலே போதும் ;)

ராசுக்குட்டி said...

இந்த மாத போட்டி முடிவுகள், உலகக் கோப்பை கால் பந்து போட்டி முடிவுகள் போல் ஆகி விட்டது. எனினும் பாலாஜி, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி,

பரிசு கிடைக்காட்டி என்னா நீதான்யா மக்கள் திலகம்!

நாமக்கல் சிபி said...

//ராசுக்குட்டி said...
இந்த மாத போட்டி முடிவுகள், உலகக் கோப்பை கால் பந்து போட்டி முடிவுகள் போல் ஆகி விட்டது. எனினும் பாலாஜி, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி,

பரிசு கிடைக்காட்டி என்னா நீதான்யா மக்கள் திலகம்!
//
ஆஹா, இதுவே ஜெயிச்ச சந்தோஷத்த தருது.

இருந்தாலும் நீங்க எல்லாம் வாங்கனது ரொம்ப சந்தோஷம்தான். அதுவும் சயின்ஸ் பிக்ஷன் கதைக்கு கிடைச்சது ரொம்ப சந்தோஷத்த கொடுத்தது. நம்மளும் அடுத்த முறை முயற்சி செய்யனும்னு தோனுச்சு.

ஆனா யோசிப்பவர் இந்த மாதிரி சொல்லி கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டார் :-(. எனக்கு என்னுமோ அவருடையது பரிசுக்கு ஏற்றதுனு இன்னும் தோனுது.

அடுத்த முறை கலக்கிடலாம் ;)

ராசுக்குட்டி said...

எனக்கும் யோசிப்பவர் விஷயத்தில் வருத்தம்தான், அவருடையதும் நல்ல கதைதான், நான்காம் பரிசும் சயின்ஸ் பிக்ஷன்தானே

முரட்டுக்காளை அவருடைய கதையைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார், சுவாரசியமான தகவல்... அவரே பதிவிடப் போவதால் இன்னும் ஒரு நாள் நான் ரகசியம் காக்கிறேன்

அடுத்தமுறை கலக்கிடலாம்... கண்டிப்பா

நாமக்கல் சிபி said...

// ராசுக்குட்டி said...
எனக்கும் யோசிப்பவர் விஷயத்தில் வருத்தம்தான், அவருடையதும் நல்ல கதைதான், நான்காம் பரிசும் சயின்ஸ் பிக்ஷன்தானே

முரட்டுக்காளை அவருடைய கதையைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார், சுவாரசியமான தகவல்... அவரே பதிவிடப் போவதால் இன்னும் ஒரு நாள் நான் ரகசியம் காக்கிறேன்

அடுத்தமுறை கலக்கிடலாம்... கண்டிப்பா
//
ஆமாம் அந்த கதையும் படிச்சேன். அதனாலதான் ஒரு ஆர்வமே வந்துச்சு. ரெண்டு கதை சயின்ஸ் ஃபிக்ஷனா இருக்கேனு.

முரட்டு காளை பட்டைய கிளப்பியிருந்தாரு. என்னங்க அந்த தகவல்... சீக்கிரம் சொல்ல சொல்லுங்க!!!

நிஜமாலுமே அவர்ட யாராவது நிலவுக்கு லிப்ட் கேட்டாங்களா? இல்ல லிப்ட் கொடுக்கறன்னு சொன்னாங்களா? ;)

மணி 4 ஆச்சு தூங்கலையா?

Anonymous said...

பாசத்திற்குரிய வெட்டி... மனமார்ந்த்த நன்றிகள் பல..

// அவரே பதிவிடப் போவதால் இன்னும் // அப்படீன்னு நம்மளைப் பத்தியா பேசிக்கிட்டு இருந்தீங்க.. (அதுவும் அதிகாலை 4 மணி வரைக்கும்..)

ஆகா !!

ஆகவே, பதிப்பு போட்டுத்தான் ஆகணும் போல.. போட்டுடலாம்..

வர்ரேனுங்க..

நாமக்கல் சிபி said...

//முரட்டுக்காளை said...
பாசத்திற்குரிய வெட்டி... மனமார்ந்த்த நன்றிகள் பல..
//
வாழ்த்துக்கள் மு.கா (மு.க இல்லப்பா ;) )

//
// அவரே பதிவிடப் போவதால் இன்னும் // அப்படீன்னு நம்மளைப் பத்தியா பேசிக்கிட்டு இருந்தீங்க.. (அதுவும் அதிகாலை 4 மணி வரைக்கும்..)
//
நமக்கு மாலை 4 மணி... தலைவருக்கு தான் அதிகாலை 4!!!

//ஆகா !!

ஆகவே, பதிப்பு போட்டுத்தான் ஆகணும் போல.. போட்டுடலாம்..

வர்ரேனுங்க..
//
கண்டிப்பா போட்டுதான் ஆகனும்... உங்களுக்கு எப்படி இந்த மாதிரி கதையெல்லாம் தோனுதுனு நாங்களும் தெரிஞ்சிக்கனும் ;)

Sud Gopal said...

--- பரவாயில்ல விடுங்க!!! ஒரு ஓட்டுதானே அடுத்த தடவை பாத்தக்கலாம்.நமக்கு ஒரு ஓட்டு விழுந்திருந்தா அந்த ஒரு ஓட்டுல இன்னொருத்தர் அடுத்த இடத்துக்கு போயிருப்பார்.-----

அட...அட...புல்லரிக்க வைக்குறீரே....

--- அப்பறம் ஒரு முக்கியமான கேள்வி,அறிஞர் அண்ணா உங்க பாட்டியா??? அது எப்படி? ---

"பெரியார்" படத்தில மணியம்மையா ஆகிட் கொடுக்குற குஷ்பூ எனக்கு ஒண்ணு விட்ட சித்தப்பான்னா அறிஞர் அண்ணா என்னோட பாட்டி தானே???

கார்த்திக் பிரபு said...

ungal kadhaigaluku kidaikum vote ennikai adigamagitey poguthu..nall kadhaigal politics nala first prize vangama ponalum pinootangalum,andha kadhai earpaduthina padhippum ennaikum ella blogers manasilayum irukum..so neenga prize kaga kadhai eluthadeenga..engalukugaga,ungalukkaga eludhunga.

valthukal .

நாமக்கல் சிபி said...

//அட...அட...புல்லரிக்க வைக்குறீரே.... //
எல்லாம் சும்மா ஒரு பில்ட் அப்தான் ;)

இது மேட்டுக்குடில நம்ம கவுண்டர்கிட்ட நீங்களும் போட்டில கலந்துருந்தக்கலாம்னு சொல்ற மாதிரி தான்...

நியாபகம் இல்லனா சொல்லுங்க... டயலாக்க சொல்றேன் ;)

//"பெரியார்" படத்தில மணியம்மையா ஆகிட் கொடுக்குற குஷ்பூ எனக்கு ஒண்ணு விட்ட சித்தப்பான்னா அறிஞர் அண்ணா என்னோட பாட்டி தானே??? //
அப்ப குஷ்பூ நடிக்கறது உறுதியாகிவிட்டதா???

அப்ப சீக்கிரமே நீங்களும் அரசியல்ல எறங்குவீங்கனு சொல்லுங்க ;)

நாமக்கல் சிபி said...

// கார்த்திக் பிரபு said...
ungal kadhaigaluku kidaikum vote ennikai adigamagitey poguthu..nall kadhaigal politics nala first prize vangama ponalum pinootangalum,andha kadhai earpaduthina padhippum ennaikum ella blogers manasilayum irukum..so neenga prize kaga kadhai eluthadeenga..engalukugaga,ungalukkaga eludhunga.

valthukal .
//
Karthik,
Y feelings??? No feelings ;)

தகுதியுள்ள கதைகள்தான் வென்றிருக்கின்றன... நமக்கு பிடிக்கலனு ஒரு படைப்பு நல்லா இல்லனு சொல்ல கூடாது. புரியுதா?

Boston Bala said...

எனக்கு வழிமொழிவது ரொம்பப் பிடித்திருக்கிறது :)

ராசுக்குட்டியின் ---பரிசு கிடைக்காட்டி என்னா நீதான்யா மக்கள் திலகம்! ---
அதே... அதே...

அமெரிக்கத் துணை கண்டத்தில் நீங்கதான் #1 என்பதால், 'ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமிழ் வலைப்பதிவர்கள் முற்போக்கு திராவிட (அண்ணா, எம்.ஜி.ஆர்.) மக்கள் முன்னேற்ற கழகம்' சார்பாக வாழ்த்துக்கள் ;)

நாமக்கல் சிபி said...

// Boston Bala said...
எனக்கு வழிமொழிவது ரொம்பப் பிடித்திருக்கிறது :)

ராசுக்குட்டியின் ---பரிசு கிடைக்காட்டி என்னா நீதான்யா மக்கள் திலகம்! ---
அதே... அதே...
//
அப்ப நானும் அதையே சொல்லிடுறேன்...

ஆஹா, இதுவே ஜெயிச்ச சந்தோஷத்த தருது

//
அமெரிக்கத் துணை கண்டத்தில் நீங்கதான் #1 என்பதால், 'ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமிழ் வலைப்பதிவர்கள் முற்போக்கு திராவிட (அண்ணா, எம்.ஜி.ஆர்.) மக்கள் முன்னேற்ற கழகம்' சார்பாக வாழ்த்துக்கள் ;)
//
'ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமிழ் வலைப்பதிவர்கள் முற்போக்கு திராவிட (அண்ணா, எம்.ஜி.ஆர்.) மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரிடமிருந்து பாராட்டை பெற இந்த தொண்டன் என்ன தவம் செய்தேனோ??? ;-)

கார்த்திக் பிரபு said...

neenga unga perundhanmaiya katureenga...ennala aniyanagalai othukka mudiyalai ivvalavu than diffrence....

Anonymous said...

//உங்களுக்கு எப்படி இந்த மாதிரி கதையெல்லாம் தோனுதுனு நாங்களும் தெரிஞ்சிக்கனும் ;) //

வெட்டி, பெரிசா ஒன்றுமில்லை இதோ பதிவு. !

அதே வேளையில் 'ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமிழ் வலைப்பதிவர்கள் முற்போக்கு திராவிட (அண்ணா, எம்.ஜி.ஆர்.) மக்கள் முன்னேற்ற கழகம்'

சார்பாக வாழ்த்துக்கள் பெற்றதிற்கு

'தென்கிழக்கு ஆசிய நாடுகள் தமிழ் வலைப்பதிவர்கள் திராவிட முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகம்'

சார்பாகவும் வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

//வெட்டி, பெரிசா ஒன்றுமில்லை இதோ பதிவு. !
//
வந்துட்டேன் இருங்க...

//அதே வேளையில் 'ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமிழ் வலைப்பதிவர்கள் முற்போக்கு திராவிட (அண்ணா, எம்.ஜி.ஆர்.) மக்கள் முன்னேற்ற கழகம்'

சார்பாக வாழ்த்துக்கள் பெற்றதிற்கு

'தென்கிழக்கு ஆசிய நாடுகள் தமிழ் வலைப்பதிவர்கள் திராவிட முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகம்'

சார்பாகவும் வாழ்த்துக்கள். //
மிக்க நன்றி மு.கா!!!

இன்னும் யாருப்பா பாக்கி... நீங்களும் வந்து வாழ்த்திடுங்க!!!

ஜெயிச்சவங்க எல்லாம் அமைதியா இருக்கும் போது தோத்தவனுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா???

மக்களே!!! இதுக்கெல்லாம் நான் காரணமில்ல... ஆமா சொல்லிட்டேன்!!!

Unknown said...

//இன்னும் யாருப்பா பாக்கி... நீங்களும் வந்து வாழ்த்திடுங்க!!!//

நான் தான் பாக்கி.இதோ ஓடி வந்துட்டேன்.லேட்டா வந்தாலும் லேடஸ்டா வந்திருக்கேன்:-))

//ஜெயிச்சவங்க எல்லாம் அமைதியா இருக்கும் போது தோத்தவனுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா???

மக்களே!!! இதுக்கெல்லாம் நான் காரணமில்ல... ஆமா சொல்லிட்டேன்!!! //

ஒண்ணுமில்லை பாலாஜி.கலைஞர் வழக்கமா எம்ஜிஆர் கிட்ட தோத்தவுடன் ஓட்டு போட்ட 80 லட்சம் பேருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை விடுவார்.நீங்களும் அந்த பாலிசியை கடைபிடிக்கிறீர்கள் போல:-))))

நாளை நமதே.அடுத்த முறை முதல் பரிசு உங்களுக்கு தான்.எங்க ஓட்டுக்கு ஒரு டிவி மறக்காம வந்துடனூம்:-)))))

நாமக்கல் சிபி said...

//செல்வன் said...
//இன்னும் யாருப்பா பாக்கி... நீங்களும் வந்து வாழ்த்திடுங்க!!!//

நான் தான் பாக்கி.இதோ ஓடி வந்துட்டேன்.லேட்டா வந்தாலும் லேடஸ்டா வந்திருக்கேன்:-))
//
எங்கடா ஆளையே நம்ம பக்கத்துல காணோமேனு பாத்தேன்!!! (முஷாராப் மேட்டர்ல பிஸியாயிட்டீங்கனு விட்டுட்டேன் ;))

//ஒண்ணுமில்லை பாலாஜி.கலைஞர் வழக்கமா எம்ஜிஆர் கிட்ட தோத்தவுடன் ஓட்டு போட்ட 80 லட்சம் பேருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை விடுவார்.நீங்களும் அந்த பாலிசியை கடைபிடிக்கிறீர்கள் போல:-))))
//
அவரளவுக்கு எல்லாம் நமக்கு சாமர்த்தியம் பத்தாது. என்ன இருந்தாலும் நம்ம முகம் தெரியாத 29 பேர் போட்டிருக்காங்கனா அவுங்களுக்கு கூட நன்றி சொல்லாம நம்ம பிளாக் எதுக்கு?

நம்ம எழுத ஊக்கப்படுத்தறதே அவுங்க தானே!!!

//
நாளை நமதே.அடுத்த முறை முதல் பரிசு உங்களுக்கு தான்.எங்க ஓட்டுக்கு ஒரு டிவி மறக்காம வந்துடனூம்:-)))))
//
இல்லைங்க செல்வன். இனிமே தேன்கூடு போட்டியில எல்லாம் பங்கெடுத்துக்க போறதில்லைங்க.

இப்ப என் பிளாக் எல்லாம் என் ஃபிரெண்ட்ஸ் நிறைய பேருக்கு தெரிஞ்சி போச்சு. அதுவும் ஒரு ஓட்டுல மிஸ் பண்ணிட்டன்னு ஒருத்தவன் எல்லாரிடமும் சொல்லிட்டான். அதனால எல்லாம் அடுத்த முறை ஓட்டு போட போறோம்னு சொல்லியிருக்காங்க.

இந்த முறை மாதிரி அடுத்த தடவை சுமாராவாது எழுதுவனானு நிச்சயமில்லை. அந்த பட்சத்தில் அவுங்க எல்லாம் ஓட்டு போட்டா உண்மையிலும் நல்லா எழுதறவங்க பாதிக்கப்படுவார்கள்.
அதனால இனிமே நான் கலந்துகிட்டா அது நியாயமா இருக்காது.

மத்தப்படி யார் மேலையும் எந்த வருத்தமுமில்லை. கண்டிப்பா கதை எழுத முயற்சி செய்வேன் ;)

நாமக்கல் சிபி said...

கார்த்திக்,
இதோட நம்ம வாழ்க்கை முடிஞ்சி போகல... போட்டில வெற்றி தோல்வி ரொம்ப சாதாரணம்...

நல்லா எழுதன பரிட்சைல எத்தன தடவை மார்க் குறைஞ்சிருக்கு... அந்த மாதிரி தான் இதுவும்... வருத்தப்படாதே!!!

Unknown said...

பாலாஜி

என்ன இது?தேர்தல் என்று வந்தால் அதில் சில ஓட்டைகள் இருக்க தான் செய்யும்.எல்லாரும் எல்லா கதையையும் படித்தா ஓட்டு போடுகிறார்கள்?நான் படித்த கதைகளில் பிடித்தவைக்கு மட்டும் தான் ஓட்டு போட்டேன்.மற்ற பலரின் கதையை படிக்காததால் ஓட்டு போடவில்லை.

உங்கள் கதை சிறப்பாக இருக்கிறது என்பதால் தான் ஓட்டு போட்டேன்.நண்பர்கள் ஆர்வத்தில் ஓட்டுபோடுவதால் எல்லாம் போட்டியில் பங்கேற்காமால் இருக்க வேண்டியதில்லை.உங்கள் லிப்ட் கதையும் ,கோல்டி கதையும் முதல் பரிசை பெற்றிருக்க வேண்டியவை.நீங்கள் தொடர்ந்து கலந்துகொள்ளுங்கள்.நாள்போக்கில் தேன்கூடு குழுவினர் பல மாற்றங்களை செய்வார்கள் என நம்பலாம்

நாமக்கல் சிபி said...

செல்வன்,
மிக்க நன்றி...
கண்டிப்பா கதை எழுத முயற்சி செய்வேன்...

உண்மைய சொல்லனும்னா எனக்கு என் கதைய விட நம்ம கதையைவிட நிறைய பேர் நல்லா தான் எழுதியிருந்தாங்க...அதனால தோத்ததால வருத்தமில்லை.

நல்லா எழுதற நிறைய பேர் இந்த மாதிரி காரணங்களால போட்டில கலந்துக்கமாட்றாங்க. அதுக்கு நாமும் காரணமாகிவிட வேணாம்னுதான் இப்படி ஒரு முடிவு.

தேன்கூடுக்காகவா நம்ம பிளாக் ஆரம்பிச்சோம்... ஜாலியா தோன்றதை எழுதுவோம்... நம்ம கைய நம்மலே கட்டிக்க வேணாம். தப்பா எடுத்துக்க மாட்டீங்கனு நம்பறேன்!!!

Anonymous said...

//

நல்லா எழுதற நிறைய பேர் இந்த மாதிரி காரணங்களால போட்டில கலந்துக்கமாட்றாங்க. அதுக்கு நாமும் காரணமாகிவிட வேணாம்னுதான் இப்படி ஒரு முடிவு.//

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. உங்களை மாதிரி நிறைய பேர் எழுதினாத்தான் அடுத்தவங்களுக்கும் எழுதணும்னு ஆர்வம் வரும். நல்லா எழுதறவங்க, எங்க வேணாலும், எப்ப வேணாலும் எழுதலாம். படைப்பு நல்லா இருந்தா நிச்சயம் முதல் 20 க்குள்ளாற வந்துரும்.

கைப்புள்ள said...

//அப்பறம் வெற்றி பெற்றவர்களும் நம்ம நண்பர்கள் தானே!!! அவுங்களோட வெற்றிய நம்ம பகிர்ந்துக்கலனா எப்படி? இந்த மாசம் விட்ட அடுத்த மாசம் பாத்துக்கலாம். ரைட்டா???//

சூப்பரப்பு! உங்க நல்ல மனசுக்கு அடுத்த மாசப் போட்டியில உங்களுக்குப் பரிசு கெடக்கனும்னு வாழ்த்தறேன்.

Unknown said...

//தேன்கூடுக்காகவா நம்ம பிளாக் ஆரம்பிச்சோம்... ஜாலியா தோன்றதை எழுதுவோம்... //

இது..இது..இது..பாயிண்ட்

தொடர்ந்து பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்.சீக்கிரம் அட்லாஸ் வாலிபனாகவும்,தமிழ்மணம் நட்சத்திரமாகவும் மின்ன வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ள said...
//அப்பறம் வெற்றி பெற்றவர்களும் நம்ம நண்பர்கள் தானே!!! அவுங்களோட வெற்றிய நம்ம பகிர்ந்துக்கலனா எப்படி? இந்த மாசம் விட்ட அடுத்த மாசம் பாத்துக்கலாம். ரைட்டா???//

சூப்பரப்பு! உங்க நல்ல மனசுக்கு அடுத்த மாசப் போட்டியில உங்களுக்குப் பரிசு கெடக்கனும்னு வாழ்த்தறேன்.
//

தல,
மிக்க நன்றி தல!!!

நாமக்கல் சிபி said...

//இது..இது..இது..பாயிண்ட்

தொடர்ந்து பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்.சீக்கிரம் அட்லாஸ் வாலிபனாகவும்,தமிழ்மணம் நட்சத்திரமாகவும் மின்ன வாழ்த்துக்கள் //
எல்லாம் உங்க ஆசிகளால்தான்...
அட்லாஸா நம்ம ஆக முடியாது... நம்மதான் மெம்பராச்சே ;)