தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, August 27, 2006

பிரிவு - 2

பிரிவு-1 பிரிவு-3 பிரிவு-4

பவித்ரா ஹோட்டல், எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூர்

"ஐஸு ட்ரீட் எனக்குதான்... நீ சாப்பிடறதுக்கு நீ தான் பில் கட்டணும் புரியுதா???"

"டேய்! போனா போது, தனியா வரதுக்கு கூச்சப்பட்டயேனு வந்தா, ரொம்ப ஓவரா பேசற"

"யாரு நாங்க கூச்சப்பட்டமா???"

"வெக்கம், மானம் எதுவும் உனக்கு கிடையாதுனு எனக்கு தெரியும். திவ்யாவும் என்னை வர சொன்னா. அதனாலதான் நான் வந்தேன். பில் யாரு கட்றதுன்னு நாங்க முடிவு பண்ணிக்கறோம். நீங்க சாப்பிடுங்க சார்."

"சரி... ஏங்க நீங்க எதுவும் பேசாம உக்காந்திருக்கீங்க??? சாப்பிடும் போது வேற எதுக்கும் வாய திறக்கக்கூட்டாதுனு யாராவது சொல்லியிருக்காங்களா?"

"எல்லாருக்கும் சேர்த்துதான் நீங்க பேசிகிட்டு இருக்கீங்களே!"

"இது கொஞ்சம் ஓவர். சரி நீங்களும், ஐஸ்வர்யாவும் ஒரே காலேஜா?"

"ஆமாம். ஆனால் வேற வேற டிப்பார்ட்மென்ட். ஹாஸ்ட்டல்ல ஒரே ரூம்"

"ஆச்சர்யமா இருக்குங்க"

"ஏன்???"

"ஐஸ்வர்யாகூட இத்தனை வருஷம் இருந்துட்டு இப்படி அமைதியா இருக்கீங்களே!!!"

"டேய்... ரொம்ப பேசற.. நீ நினைக்கிற மாதிரி இவ ஒண்ணும் அமைதி கிடையாது. என்னைவிட அதிகமா பேசுவா"

"உங்களை பத்தி ஐஸ் சொல்லி இருக்கா. ஆனால் அவ சொன்னதைவிட அதிகமாவே பேசறீங்க"

"தலைவரே பாட்ஷால சொல்லி இருக்காருங்க, "இந்தியாக்க்காரன் பேசலனா செத்து போயிடுவான்னு". நான் உண்மையான இந்தியங்க."

ஒரு வழியாக பேசி சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வருவதற்குள் மணி 2 ஆனது.

...........................

10 நாட்களுக்க்கு பிறகு

"தனா. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்"

"சொல்லு"

"திவ்யா VB புக் கேட்டிருந்தா. நேத்தே எடுத்துட்டேன். ரூமுக்கு எடுத்துட்டு போக மறந்துட்டேன். இன்னைக்கு மதியம் கொண்டு போய் கொடுக்கலாம்னு பாத்தா வேலை அதிகமாகிடுச்சி. நான் இன்னைக்கு ஊருக்கு போறேன். நேரா இங்க இருந்தே புறப்படறேன். அவள்ட இந்த புக்கை நீ கொடுத்துடறயா ப்ளீஸ்"

"சரி கொடுத்துட்டு போ. நான் அவள்ட எப்படியாவது கொடுத்தடறேன்"

.......................................

"ஹலோ... திவ்யா???"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"நான் சஞ்சய் ராமசாமி பேசறன்"

"ஓ! தனாவா??? சொல்லுங்க நான் கல்பனாதான் பேசறன்"

"பரவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கீங்களே"

"உங்களை மறக்க முடியமா?"

"சரிங்க. ஐஸ் கிட்ட ஏதோ VB புக் கேட்டுருந்தீங்களாம். அதை உங்ககிட்ட கொடுக்க சொல்லி அவ என்கிட்ட கொடுத்துட்டு போயிட்டா. உங்களை எங்க மீட்ட் பண்ணலாம்னு சொன்னீங்கனா நான் வந்து கொடுத்துடுவேன்"

"நீங்க எங்க தங்கி இருக்கீங்க?"

"நான் இங்கதான் எலக்ட்ரானிக் சிட்டிலதான் தங்கி இருக்கேன்"

"சரிங்க. எனக்கு இப்ப பிராஜக்ட் பார்ட்டி. இன்னும் 5 நிமிஷத்துல கிளம்பிடுவேன். எப்படியும் நாளைக்கு வந்து வேலையை முடிக்க வேண்டியிருக்கும். நீங்க எனக்கு நாளைக்கு கொடுக்க முடியுமா?"

"சரிங்க. நாளைக்கு ஆபிஸ் வந்து போன் பண்ணுங்க. நான் வந்து கொடுக்கறேன்"

"சரிங்க ரொம்பா தேங்ஸ்ங்க"

"ஓகே... நாளைக்கு பாக்கலாம். நீங்க பார்ட்டிக்கு கிளம்புங்க"

"சரிங்க... பாக்கலாம். பை"

...........................................

சனி கிழமை காலை 10 மணி.
செல் போன் சிணுங்கியது.

"ஹலோ. தனா ஹியர்"

"நான் திவ்யா பேசறேன்"

"சொல்லுங்க. ஒரு 11 மணிக்கா புக் எடுத்துட்டு வந்து கொடுக்கறதா??"

"தூங்கிட்டு இருக்க்கீங்களா?"

"ஆமாங்க. இப்பதான் எழுந்திருக்கிறேன்..."

"நீங்க ஒரு 12 மணிக்கா பவித்ரா வரீங்களா? எனக்கு தனியா சாப்பிடறதுக்கு ஒரு மாதிரி இருக்கு. நீங்க அப்படியே புக்கையும் எடுத்துட்டு வந்துடுங்க!"

"சரிங்க. நீங்க புறப்படறதுக்கு முன்னாடி ஒரு கால் பண்ணுங்க"

........................................

12:15, பவித்ரா ஹோட்டல்

"நான் உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கறேன்னு நினைக்கிறேன். சாரிங்க"

"எதுக்கு???"

"இல்லை... நான் ஜஸ்ட் உங்க ஃபிரண்டோடா ஃபிரண்டு. எனக்காக இவ்வளவு ஹெல்ப் பண்றீங்களேனு சொன்னேன். பொதுவா எனக்கு யாருக்கும் தொந்தரவு கொடுக்கறதுக்கு பிடிக்காது"

"ஏங்க இப்படி பேசறீங்க. நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட். அதுவும் இல்லாம இன்னைக்கு சனிக்கிழமை எனக்கு எதுவும் பிரோக்ராமும் இல்லை. சாப்பிடறதுக்கு ஒரு கம்பெனிக்காவது ஆள் இருக்கேனு நான் சந்தோஷமாத்தான்ன் இருக்கேன்"

"நான் இதுக்காக மட்டும் சொல்லல.. போன தடவை எனக்காக சனிக்கிழமை உக்காந்து அந்த வேலையை முடிச்சியிருக்கீங்க. நான் அதை அப்ப கவனிக்கல. நேத்துதான் நீங்க அதை எப்படி பண்ணியிருக்கீங்கனு பாக்கலாம்னு பாக்கும் போது உங்க மெயில்ல சென்ட் டேட் பாத்தேன்"

"ஏங்க இந்த மாதிரி பேசி என்னை பேசவிடாம பண்ணிடுவீங்க போல இருக்கு. நீங்க கொடுத்த அன்னைக்கு கஜினி ரிலீஸ். சூர்யா படம் ஃபர்ஸ்ட் டே பாக்கலைனா நமக்கு அவ்வளவுதான். அதனாலதான் சனிக்கிழமை வந்து பண்ண வேண்டியதா போச்சு. இந்த மாதிரி இனிமே பேசாதீங்க"

"சரிங்க"

தீடீர்னு நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது.

"ஐயய்யோ... என்னங்க இப்படி மழை பெய்யுது"

"இதுக்கு தாங்க... நான் இனிமே புண்ணியம் செய்யறதையே குறைச்சிக்கனும். நான் எங்க போனாலும் மழை பெய்யுது"

முறைத்தாள்.

"கண்டிப்பா இப்ப வெளிய போக முடியாது. மழை நின்ன உடனே கிளம்பலாம்"

"சரிங்க... இன்னைக்கு பாத்து இப்படியாயிடுச்சே. நான் வேற இதுக்கு அப்பறம் போய் வேலை செய்யனும்"

"VB கத்துக்கறீங்க போல இருக்கு"

"ஆமாங்க. உங்களை எவ்வளவு நாள்தான் தொந்தரவு பண்றது"

"சரி கத்துக்கோங்க.... அதுதான் உங்களுக்கும் நல்லது"

நாலு மணி வரை மழை பெய்தது. இருவரும் 4 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திவ்யா அதிகமாக பேசாதவள் என்று நான் நினைத்திருந்தது தவறு என்று எனக்கு புரிந்தது.

......................................

திங்கள் காலை 10 மணி.

"ஹாய் தனா" ஜிடாக் விண்டோ மாணிட்டரில் மின்னியது.

"ஹே திவ்யா. என் ஐடி எப்படி கிடைச்சுது உனக்கு???"

"ஐஸ்வர்யா கொடுத்தா"

"ஹிம்... அப்பறம் அன்னைக்கு ஆபிஸ்ல இருந்து எப்ப கிளம்பின???"

"நான் போய் ஒரு மணி நேரத்துல கிளம்பிட்டேன். வீட்ல போயி படிச்சேன்"

"ஹிம்"

இப்படியே தினமும் மெசஞ்சரிலும், போனிலும் பேசிக் கொண்டோம்.

அப்படியே ஒரு மாதத்திற்கு பிறகு தினமும் மதியம் மூவரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தோம்.

................................

"டேய் தனா! நீங்க பண்றது ஓவர்டா"

"என்ன பண்றோம்"

"அவ முன்னாடி எல்லாம் ஒழுங்கா இருந்தா... இப்ப ரூம்க்கு வந்து சாப்பிட்டு முடிச்சவுடனே உனக்கு போன் பண்ணிடறா... எனக்கு தனியா இருக்க போர் அடிக்குது"

"அதுக்கு நான் என்ன பண்றது? வேணும்னா நல்ல புக் வாங்கி தரன்... படி"

"டேய்! ஓவரா பேசாதடா"

"சரி இனிமே நான் அவள்ட பேசல போதுமா???"

"ஏய் டென்ஷன் ஆகாத!!! நான் சும்மா சொன்னேன்... நீங்க ஏதோ பண்ணிக்கோங்க எனக்கு என்ன???"

.......................

இரவு 9 மணி. செல்போன் சிணுங்கியது. வழக்கம் போல் திவ்யா கூப்பிட்டிருந்தாள்.

"ஏய்! சொல்லு"

"சாப்பிட்டியா"

"இல்ல... ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு"

"ஒன்னுமில்லை"

"அழுதயா??? எனக்கு தெரியும்... உன் குரல் ஒரு மாதிரி இருக்கு"

" "

"ஏன் அமைதியா இருக்க சொல்லு? என்னாச்சு???"

"என் கிளாஸ் மேட் ராஜேஷ் இன்னைக்கு என்கிட்ட ப்ரபோஸ் பண்ணான் "

"என்னது??? உன்னை ஒருத்தன் லவ் பண்றானா??? என்னால நம்பவே முடியலையே!!!"

செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அவசரமாக கூப்பிட்டேன். 3 முறை கட் செய்து 4வது முறை வேறு வழியில்லாமல் எடுத்தாள்.

"ஏய் சாரி... ப்ளீஸ் நான் விளையாட்டுக்கு சொல்லிட்டேன். என்ன நடந்துச்சு சொல்லு"

"அவன் என்னை 5 வருஷமா லவ் பண்றானாம். என்னை லவ் பண்ணுனு கெஞ்சறான். இதுக்கு எங்க கிளாஸ்ல இருக்கற 4-5 பசங்க சப்போர்ட் வேற"

"உன் பிரச்சனை என்ன??? அவன் உனக்கு நல்ல ஃபிரண்டுன்னு சொல்லி இருக்க"

"நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா? ஏன் இந்த பசங்க எல்லாம் இப்படி இருக்காங்க???"

" "

"ஏன் அமைதியா இருக்க??? ஏதாவது சொல்லு"

"நீ என்ன சொன்ன?"

"இந்த மாதிரி பேசறதா இருந்தா இனிமே பேச வேண்டாம்னு சொல்லிட்டேன்"

"இப்ப நான் என்ன செய்யனும்"

" நீ எதுவும் செய்ய வேணாம். உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சி அதனால சொன்னேன்"

"சரி எதுவும் கவலைப்படாம தூங்கு...குட் நைட்"

அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை....
"நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா?" என் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.

(தொடரும்.....)

18 comments:

நாமக்கல் சிபி said...

வினையூக்கி,
நன்றி

வேந்தன் said...

என்னது அப்படியே சோகத்திற்கு ரூட் மாறற மாதிரி இருக்கு

நாமக்கல் சிபி said...

வேந்தன்,
சோகம் இல்லாமல் காதல் கதையா??? சந்தோஷம் எந்த அளவுக்கு இருக்கோ அதே அளவுக்கு வலியும் இருக்கத்தான் செய்யும் ;)

கப்பி | Kappi said...

மக்கா..இந்த கதைலயும் ஹீரோவுக்கு பல்பு தானா??

வாழ்க உம் தொண்டு :)))

நாமக்கல் சிபி said...

கப்பி,
அவசரப்படாதப்பா...

தனா என்ன திவ்யாவை லவ் பண்றானா? அவுங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ்.

பிகு:
இப்படிதான்பா இது வரைக்கும் என்கிட்ட தனா சொல்லி இருக்கான். இன்னைக்கு நைட் அவன்ட அடுத்த பாகத்தை கேட்டு போடறேன். அது வரைக்கும் எதுவும் யோசிக்காத ;)

tamizhppiriyan said...

கதை நல்லா போகுது.. அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க பாஸ்

வெறும் கதையா இல்ல நிஜக் கதைய எழுதீறங்களா??

நாமக்கல் சிபி said...

//கதை நல்லா போகுது.. அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க பாஸ்//

தமிழ்ப்பிரியன்,
நன்றி. முடிஞ்சா இன்னைக்கு நைட் போடறேன்.

//வெறும் கதையா இல்ல நிஜக் கதைய எழுதீறங்களா?? //
நிஜம் இல்லைங்க கதைதான். கதையை முடிக்கும் போது உங்களுக்கே புரிஞ்சிடும்.

Syam said...

ரொம்ப நல்லா கதை எழுதறீங்க...ஆரம்பத்துல பெரிய போஸ்ட் மாதிரி தெறிஞ்சுது படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அட அதுக்குள்ள முடிஞ்ச்சு போச்சான்னு இருக்கு :-)

நாமக்கல் சிபி said...

Syam,
//ரொம்ப நல்லா கதை எழுதறீங்க...ஆரம்பத்துல பெரிய போஸ்ட் மாதிரி தெறிஞ்சுது படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அட அதுக்குள்ள முடிஞ்ச்சு போச்சான்னு இருக்கு :-) //

மிக்க நன்றி. சின்னதா முடிக்கலாம்னு பாத்தா நம்ம தனா பேச ஆரம்பிச்சா நிப்பாட்டவேமாட்றான். என்ன பண்றது???

Anonymous said...

Very nice story
I have read only "Pirivu" and "Pirivu 2", could you please give the link for other parts? Very eager to read the entire story

Udhayakumar said...

vetti, even I wrote a story in the same line and it is sleeping in my computer. But definitely the same end, I am sure about it:-)

ella pasangalukkum ore maathirithaan adi vizukuthu :-)

நாமக்கல் சிபி said...

Anony,
sorry, I didnt finish the story.
Will try to finish it in next 2 parts.

Udhay,
I am really sorry to say this. the end wont be same for sure. I beleive the end will be a surprise...
(ennada too mucha build up koadukaranenu paakathinga. I am sure)

கார்த்திக் பிரபு said...

thlaiva pesama nan eludhradhai niruthiralaamnu pakureane..ungal kadhaiyai thodarndhu padikka porane..thinamum oru part eludthunga..andnadha vikatan vaanga friday vara wait panra madhri agi pochu unga kadhia yai padika..valthukkal

நாமக்கல் சிபி said...

கார்த்திக்,
இதெல்லாம் ஓவர். நான் கதைல எழுதறத நிஜமாலுமே சாதிச்ச ஆளுப்பா நீ. இந்த கதையை விரைவில் முடித்துவிட்டு சாப்ட்வேர் இல்லாமல் ஒரு கதை எழுதனும் ;)

Anonymous said...

//"நான் இதுக்காக மட்டும் சொல்லல.. போன தடவை எனக்காக சனிக்கிழமை உக்காந்து அந்த வேலையை முடிச்சியிருக்கீங்க. நான் அதை அப்ப கவனிக்கல. நேத்துதான் நீங்க அதை எப்படி பண்ணியிருக்கீங்கனு பாக்கலாம்னு பாக்கும் போது உங்க மெயில்ல சென்ட் டேட் பாத்தேன்" //

//திங்கள் காலை 10 மணி.

"ஹாய் தனா" ஜிடாக் விண்டோ மாணிட்டரில் மின்னியது.

"ஹே திவ்யா. என் ஐடி எப்படி கிடைச்சுது உனக்கு???"

"ஐஸ்வர்யா கொடுத்தா"//


yetho muranpatta mathiri theriyala! eppadi macro annupi vachingalam!

நாமக்கல் சிபி said...

Anony,
//yetho muranpatta mathiri theriyala! eppadi macro annupi vachingalam! //

மேக்ரோ அனுப்பி வெச்சது சனிக்கிழமைதான்.

அதுக்கு அடுத்து ஒரு வாரம் கழித்துதான் ட்ரீட்டே கேட்டிருந்தார். ஆனால் ட்ரீட் பிளான் மாறி மூன்றாவது நாளே லன்ச் சாப்பிட்டார்கள். அடுத்து 10 நாள் கழித்து வெள்ளிக்கிழமை ஐஸ்வர்யா புக் கொடுக்க சொன்னாள். அடுத்த நாள் சனி கிழமை மதியம் ஒன்றாக சாப்பிட்டார்கள். அன்றுதான் மழை பெய்தது. அன்றுதான் அந்த நன்றி சொல்லும் படலமும் நடந்தது.

அதற்கு அடுத்த 2வது நாள் திங்கள் GTALK ;)

Anonymous said...

//
மேக்ரோ அனுப்பி வெச்சது சனிக்கிழமைதான்.

அதுக்கு அடுத்து ஒரு வாரம் கழித்துதான் ட்ரீட்டே கேட்டிருந்தார். ஆனால் ட்ரீட் பிளான் மாறி மூன்றாவது நாளே லன்ச் சாப்பிட்டார்கள். அடுத்து 10 நாள் கழித்து வெள்ளிக்கிழமை ஐஸ்வர்யா புக் கொடுக்க சொன்னாள். அடுத்த நாள் சனி கிழமை மதியம் ஒன்றாக சாப்பிட்டார்கள். அன்றுதான் மழை பெய்தது. அன்றுதான் அந்த நன்றி சொல்லும் படலமும் நடந்தது.

அதற்கு அடுத்த 2வது நாள் திங்கள் GTALK ;)
//

Nan athai sollala, eppadi en mail id kidachithu appadinu dhana ketkirar, appuram eppadi macro anupi vachar, maila thana..

நாமக்கல் சிபி said...

//Nan athai sollala, eppadi en mail id kidachithu appadinu dhana ketkirar, appuram eppadi macro anupi vachar, maila thana.. //
அனானி,
நீங்க ஏதோ பெரிய விஷயம் கேக்கறீங்கனு நினைத்தேன்.

பொதுவாக ஆபிஸ்ஸில் இருந்து மெயில் அனுப்புவது அங்கே பயன்படுத்தும் அவுட் லுக்கில் இருந்து அதில் கம்பெனி ஐடிதான் இருக்கும்.
GTalk ஐடி வேறு பெயரில் இருக்கும்.

(என்னுடைய யாஹி ஐடிக்கும் என் பெயருக்கும் சம்பந்தமே இருக்குது ;))