நான் போன அன்னைக்கு ஊரே பரபரப்பா இருந்ததுக்கு காரணம் "சிவாஜி" ரிலிஸ். நான் இங்க கிளம்பற அப்ப கூகுள் ஸ்டேடஸ்ல கூட "அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கானு" பில்ட் அப் கொடுத்துட்டு தான் கிளம்பினேன். எங்க ஊர்ல ராத்திரி முழுக்க முழுக்க தேங்காய் உடைச்சிருக்காங்கனு சொல்லிட்டு (எவன் எல்லாத்தையும் அள்ளிட்டு போனானோனு புலம்பிட்டு) இருந்தாங்க. முதல் நாள் டிக்கெட் நூறு ரூபாயாம். அவ்வளவு கொடுத்து எத்தனை பேர் பார்த்திருப்பாங்கனு தெரியல. ஆனா ரெண்டு தியேட்டர்ல போட்டாங்க. ஈஸியா டிக்கெட் கிடைச்சிதுனும் பேசிக்கிட்டாங்க. நான் தியேட்டர் பக்கம் போகலை.
மொக்கை படமா இருந்தாலும் முதல் நாள் பார்க்கற ரகம் நான். ஆனா அன்னைக்கு போனா வீட்ல செம திட்டு விழும்னு முதல் நாலு நாள் போகவேயில்லை. அப்பறம் போனா தியேட்டர்ல ஒரு முப்பது நாப்பது பேர் தான் இருந்திருப்போம். நாப்பது ரூபாய் டிக்கெட் கொடுத்து எவன் பார்ப்பானு பேசிக்கிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. நம்மலும் பார்க்காம இருந்திருக்கலாம்னு தோனுச்சி. யாருமே வரலைனா அடுத்த நாளே இருபது ரூபா ஆக்கிடுவான் இல்லை.
வீட்டுக்கு போனவுடனே அம்மா காப்பி போட்டு கொடுத்தாங்க. ஆஹா... இந்த கேப்பசினோ குடிச்சி குடிச்சி நல்ல காப்பி எப்படா கிடைக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். அம்மா போட்டு கொடுத்த காப்பி எப்பவும் போல அருமையா இருந்துச்சு. பொதுவா நான் டிபன் சாப்பிட்டு தான் காப்பி குடிப்பேன். சீக்கிரமா போனதால ஒரு காப்பி தேவைப்பட்டுச்சு.
அப்பறம் பொட்டியில இருந்ததையெல்லாம் எடுத்து அம்மாக்கிட்ட கொடுக்க ஆரம்பிச்சேன். சாக்லேட் எல்லாம் எடுத்து ஃபிரிட்ஜ்ல வைக்க கொடுத்தேன். ஒவ்வொன்னும் விலை எவ்வளவுனு கேட்டு ஏன் இவ்வளவு காசு செலவு பண்ணி வாங்கிட்டு வந்தனு கேட்டுட்டு இருந்தாங்க. ஒரு காப்பி 3$ பக்கம் ஆகும்னு சொன்னவுடனே, என்ன ஒரு காப்பி 130 ரூபாயா?னு சொல்லி சொல்லி ஆச்சரியப்பட்டாங்க. அப்படியே இட்லி தோசையெல்லாம் எவ்வளவுனு கேட்டு ஆச்சர்யப்பட்டாங்க. இவ்வளவு காஸ்ட்லியாவா அங்க இருக்கும்னு அப்பாவும் கேட்டுட்டு இருந்தாரு. (இதையே ஒவ்வொருத்தவங்க வரும் போதும் சொல்லிட்டே இருந்தது வேற கதை).
அப்பறம் காலைல சுட சுட இட்லி, மல்லாட்டை சட்னி. மல்லாட்டைனா என்னனு யோசிக்கறீங்களா? அது தான் நிலக்கடலை. எங்க ஊர் பக்கமெல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. எனக்கு அந்த சட்னி தான் ரொம்ப பிடிக்கும் (மல்லாட்டை வறுத்து, தோல் நீக்கிட்டு, அப்பறம் கொஞ்சம் தேங்காய், காஞ்ச மிளகாய், உப்பு, கொஞ்சம் புளி வைச்சி அரைக்கனும்). அப்பறம் ஒரு வழியா சாப்பிட்டு ஒவ்வொரு சொந்தக்காரவங்க வீட்டுக்கும் சாக்லேட் பிரிச்சி எடுத்துட்டு கிளம்பியாச்சு. ஒவ்வொருத்தவங்க வீட்டுக்கா போய் நல்லா மொக்கையை போட்டுட்டு வந்தேன்.
மதியம் தூங்க வேணாம்னு பார்த்தேன். கண்ணெல்லாம் சிவந்திருக்கு ஒரு அஞ்சு நிமிஷமாவது படுத்து எழுந்திரினு கம்பெல் பண்ணி படுக்க வைச்சாங்க. ரெண்டு மணிக்கு படுத்துட்டு ராத்திரி 9 மணிக்கு எழுந்திரிச்சேன். என்னை எழுப்ப எவ்வளவோ முயற்சி செஞ்சாங்களாம். பழசெல்லாம் மறந்துட்டாங்க போலனு நினைச்சிக்கிட்டேன். சின்ன வயசுல இருந்து என்னை எழுப்பறதுக்கு எங்க வீட்ல ரொம்ப கஷ்டப்படுவாங்க. பாலாஜி எழுந்திரி, பாலாஜி எழுந்திரினு சொல்லிக்கிட்டே இருங்கம்மா உங்களுக்கு புண்ணியம் அதிகமா சேர்ந்துடும் எப்பவும் கிண்டல் பண்ணிட்டு இருப்பேன். அப்பறம் ஒன்பது மணிக்கு மேல தூக்கம் வரலை. வீட்ல இண்டர்நெட்டுல் செம ஸ்லோ. என்ன பண்றதுனு தெரியல. நான் அமெரிக்கா வரதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி நிறைய சாண்டில்யன், அகிலனோட நாவல் எல்லாம் வாங்கி வெச்சது நியாபகத்துக்கு வந்துச்சு.
ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சி முதல்ல என் கைல வந்தது யவன ராணி. அப்படியே யவன ராணில முழுகிட்டேன். அடுத்த நாள் வீட்டுக்கு வந்தவங்க யார்கிட்டயும் சரியா பேச விடாம என்னை யவன ராணி பிடிச்சிக்கிட்டா. அப்பறம் வந்த அடுத்த நாள் எங்க அக்கா குழந்தைக்கு மொட்டை அடிச்சி காது குத்த திருச்சி கிளம்பியாச்சி. நான் எங்க அக்கா குழந்தையை முதல் முறை அங்க தான் பார்த்தேன். பதினோரு மாசம் கழிச்சி பார்த்ததுல ஒரு வகைல வருத்தம்னா இன்னொரு வகைல சரியா தாய் மாமன் பேரை காப்பாத்த வந்தாச்சேனு ஒரு சந்தோஷம் (ஒரு மாசம் கழிச்சி போயிருந்தா வேற யார் மடியிலயாவது உக்கார வெச்சி பண்ணிருப்பாங்க). முதல் முறை என் மடில உக்காரும் போது மொட்டையடிச்சாங்க. அடுத்த முறை உக்காரும் போது காது குத்தினாங்க. இவன் சரியான வில்லன் போலனு நினைச்சிதோ என்னுமோ தெரியல. அப்பறம் என்கிட்ட வரவேயில்லை :-((((
யவன ராணி படிச்சிக்கிட்டே திருச்சி போனப்ப காவிரி நிலையை பார்த்துக்கிட்டே போனேன். ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அப்ப இங்க எப்படி ஓடியிருப்பா இந்த காவிரி. இன்னைக்கு வெறும் மண்ணா இருக்கேனு வருத்தமா இருந்துச்சு. வண்டில போகும் போதும் யவன ராணி படிச்சிக்கிட்டே போனேன். அம்மா, அப்பா ரெண்டு பேரும் சேர்ந்து திட்டினாங்க. ஏன்டா அங்க இருந்து புக் படிக்கவா வந்தனு. நமக்கு தான் திட்டு வாங்கி வாங்கி பழகி போச்சே. அப்படியே திட்டு வாங்கிட்டே படிச்சி முடிச்சிட்டேன்.
அப்பறம் ஊருக்கு போய் ஒரு நாலு நாள் அம்மா, அப்பாவோட மட்டும் டைம் ஸ்பெண்ட் பண்ணேன். அதனால யாருக்கும் போன் பண்ணவுமில்லை. நான் போன் எடுத்தா ஒரு மணி நேரமாவது மொக்கை போடற டைப். ஒரு வாரம் கழிச்சி கப்பி நிலவனுக்கு போன் பண்ணப்ப தான் தெரிஞ்சிது வ.வா.ச பத்தி திணமணில வந்திருக்குனு. ஆஹா நம்ம போட்டோவெல்லாம் வந்திருக்கு, பார்க்காம போயிட்டமேனு ஃபீல் ஆயிட்டேன். அப்பறம் ஒரு வழியா பேப்பரை கண்டு பிடிச்சி பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
அடுத்த நாள் ஒரு ஃபோன் வந்துச்சு. எங்க அப்பாதான் ஃபோன் எடுத்தாரு. ஏதோ சிங்கப்பூர்ல இருந்து ஃபோனு சொல்லி கொடுத்தாரு. வாங்கி பார்த்தா "சிங்கப்பூர்ல இருந்து கோவி.கண்ணன் பேசறனு". சொல்லுங்க தள கலாய்த்தல் எல்லாம் எப்படி போகுதுனு பேச ஆரம்பிச்சிட்டேன். அப்படியே ராயல், தேவ் எல்லாருக்கும் போன் பண்ணி நான் வந்த விஷயத்தை சொன்னேன். அடுத்து ஒருத்தர் போன் பண்ணாரு. பேரை சொல்லாம ஒரு மணி நேரம் பேசினாரு.
அப்பா போன் எடுத்ததால நான் நம்பர் பார்க்கல. ஹைதிராபாத்ல இருந்து பேசறேனு சொன்னாரு. எவ்வளவு கேட்டும் பேர் சொல்லலை. அனானிமஸ்கிட்ட பேச மாட்டீங்களானு கேட்டாரு. நம்ம எல்லாம் பேர் தெரியலைனாலும் மொக்கை போடுவோம்னு சொல்லிட்டு ஒரு மணி நேரம் பேசிட்டு இருந்தேன். வலை அரசியல் எல்லாம் சொன்னாரு. நமக்கு அந்த அளவுக்கு ஞானமில்லைனு கொஞ்ச நேரத்துல புரிஞ்சிக்கிட்டாரு. ஃபோன் வெச்சதுக்கு அப்பறம் நம்பர் பார்த்தேன். பெண்களூர்னு தெரிஞ்சிது. உடனே புரிஞ்சிடுச்சி அது நம்ம புரட்சி குட்டி ஆணியவாதினு ;). அடுத்து நம்ம சென்ஷி போன் பண்ணார்.
அந்த வாரம் வலைப்பதிவர் சந்திப்புக்கு போக முடியுமானு சந்தேகமா இருந்துச்சு. முதல் நாள் ராத்திரி கோவை பயணம் ரத்தானதுல சென்னை கிளம்பிட்டேன்...
(தொடரும்...)
11 comments:
நாப்பது ரூவாயா அந்தப் படத்துக்கு... இங்க இருவது யூரோன்னாங்க...எப்படியோ நல்லவேளை தட்டிப் போயிருச்சு...இல்லைன்னா அதுக்குத் தண்டம் அழுதிருக்கனும். அந்த இருவது யூரோவக் காப்பாத்தி மாசத்துல நாலு இங்கிலீஷ் படம் பாத்துட்டேன்.
யவன ராணியா... யவனம்னா எந்த ஊருன்னு சொல்லு பாக்கலாம்? ;)
நல்லா எஞ்சாய் பண்ணி இருக்கீங்க போல!!
போட்டுக்கொடுத்தாச்சா? இப்ப திருப்தியா? ;)
//பாலாஜி எழுந்திரி, பாலாஜி எழுந்திரினு சொல்லிக்கிட்டே இருங்கம்மா உங்களுக்கு புண்ணியம் அதிகமா சேர்ந்துடும் எப்பவும் கிண்டல் பண்ணிட்டு இருப்பேன்//
அட, சுப்ரபாதம் பதிவுல நாங்களும் அதே தான் சொல்லுறோம் பாலாஜி! கொஞ்சம் புண்ணியம் எங்களுக்கும் கொடுங்க! :-))
//மல்லாட்டைனா என்னனு யோசிக்கறீங்களா? அது தான் நிலக்கடலை//
மல்லாக்கொட்டை ன்னு சொல்லுவாங்க வேர்க்கடலை / நிலக்கடலையை! அதான் திரிஞ்சி மல்லாட்டை-ன்னு ஆயிடிச்சி!
//சிங்கப்பூர்ல இருந்து ஃபோனு சொல்லி கொடுத்தாரு. வாங்கி பார்த்தா "சிங்கப்பூர்ல இருந்து கோவி.கண்ணன் பேசறனு".//
ஒடனே code word எல்லாம் கேக்க வேணாமா? என்னப்பா நீ இப்பிடி வெட்டிப்பயலா இருக்கலாமா? :-)
//யவன ராணி படிச்சிக்கிட்டே போனேன். அம்மா, அப்பா ரெண்டு பேரும் சேர்ந்து திட்டினாங்க. ஏன்டா அங்க இருந்து புக் படிக்கவா வந்தனு.//
சரி பாலாஜி...இதச் சொல்லுங்க!
அது எதுக்கு சாண்டில்யன் நாவலா மட்டும் தேர்ந்தெடுத்து படிச்சீங்க! அதுவும் கதையை விட வர்ணனை தான் படிச்சீங்களாமே?
அடுத்த புதிரா புனிதமா? : யவன ராணி! (நீங்க ஊரில் இல்லாத சமயமாப் பாத்து :-)
//அப்பறம் காலைல சுட சுட இட்லி, மல்லாட்டை சட்னி. மல்லாட்டைனா என்னனு யோசிக்கறீங்களா? அது தான் நிலக்கடலை. //
நம்மோட ஃபேவரைட் சட்னி. போன வாரம் தான் கிடைச்சது. பொளந்து கட்டிட்டோம்ல
//கேட்டும் பேர் சொல்லலை. அனானிமஸ்கிட்ட பேச மாட்டீங்களானு கேட்டாரு. //
ஆஹா, அந்த அனானி அவர்தானா?
இண்டெரஸ்டிங்கா இருக்குங்கண்ணா உங்க பயணக் கட்டுரை,
\\ இந்த கேப்பசினோ குடிச்சி குடிச்சி நல்ல காப்பி எப்படா கிடைக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். அம்மா போட்டு கொடுத்த காப்பி எப்பவும் போல அருமையா இருந்துச்சு. \\
இன்னுமா கேப்பசினோ குடிக்கிறீங்க, ஏன் 'Tasters choice -instant coffee' ட்ரை பண்ணலாமே!!
வீட்டுல 'என்னடா எப்பவும் போன்ல பேசிட்டே இருக்க'ன்னு திட்டு விழுந்ததை சொல்லல? :)))
மெட்ராஸ் வந்துடுச்சா..ரை ரை :))
\\நான் எங்க அக்கா குழந்தையை முதல் முறை அங்க தான் பார்த்தேன். \\
சேம் பிளேட் வெட்டி...திருப்பதியில நம்ம மடியில வச்சி தான் மொட்டை..;))
3 $ காபி நம்ம ஊருக்கு பெரிசு தான்.. ஆனா உங்க சம்பளமும் அந்த அளவுக்கு பெரிசுல ;)
ஊருல இருந்து வாங்கிட்டு வந்த அயிட்டம் எல்லாம் சொன்னீங்க... கட்டுட்டு வந்த டாலர் முட்டைய பத்தி ஏதுமே சொல்லையே... :)
Post a Comment