தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, October 19, 2007

பயணக் கட்டுரை...

சின்ன வயசுல ரொம்ப ஆசைப்படற விஷயங்கள் கிடைத்த பிறகு வெறுத்து போய்விடவதுண்டு. அதுல எனக்கு தெரிஞ்சி முதலிடம் இந்த விமானப்பயணம் தான். சின்ன வயசுல இருக்கும் போது ஒரு தடவையாவது ஃபிளைட்ல போகனும்கறது என் வாழ்க்கையின் லட்சியமாக இருந்திருக்கிறது.

விட்டில இருக்கும் போது ஃபிளைட் போச்சுனா வெளிய வந்து வேடிக்கை பார்ப்போம், டாட்டா காட்டுவோம் (ஆமாம் இந்த கை ஆட்டறதுக்கு டாட்டா காட்டறதுனு எப்படி பேர் வந்துச்சுனு யாருக்காவது தெரியுமா?). அந்த சத்தமே ஒரு மகிழ்ச்சியை கொடுத்துவிடும். க்ளாஸ்ல இருக்கும் போது ஃபிளைட் போச்சுனா ஜன்னல் வழியா தெரியாதுனு வானத்தை பார்த்து க்ளாஸ் முழுக்கும் வாத்தியாரிடம் திட்டு வாங்கும். அந்த அளவுக்கு பிடித்த விஷயம் இப்ப சுத்தமா பிடிக்காம போயிடுச்சி.

பஸ்ல போகறது ரொம்பவும் பிடிக்கும். வித விதமான மனிதர்கள் ஏறி இறங்குவதை பார்ப்பதற்கு ஒரு விதமான சந்தோஷம் இருக்கும். ஆனா இந்த ஃபிளைட்ல தொடர்ந்து 10 மணி நேரம் உக்கார்ந்து போகறது மரண கடி. இந்த ஜீலைல நான் இந்தியா போன போது அப்படித்தான் இருக்கும்னு நினைச்சிட்டு பயணத்தை ஆரம்பித்தேன்.

கிளம்ப வேண்டிய நாளன்று WFH (Working From Home) போட்டுவிட்டு வேலை பார்த்துக்கொண்டே(செய்து கொண்டேனு சொல்லல. நல்லா கவனிச்சிக்கோங்க) கிளம்பினேன். கிளம்ப வேண்டியதற்கு 10 நிமிடத்திற்கு முன்னால் சங்கத்து சிங்ககளுக்கு நான் இந்தியா வரேனு சொல்லி ஒரு மெயில் தட்டிவிட்ட வந்தேன். நான் கிளம்புவது கடைசி வரை கேள்விக்குறியாகவே இருந்தது. நான் ஊருக்கு கிளம்புவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்னால் என் டீம் லீட் பேப்பர் போட்டுட்டாரு. என் நல்ல நேரம் (??? இந்த கேள்விக்குறிக்கு விடை கடைசி பாகத்தில் தெரியலாம்) எனக்கு லீவ் கொடுத்து அனுப்பினாங்க.

நான் தங்கியிருக்குமிடத்திலிருந்து பாஸ்டன் லோகன் ஏர்போர்ட் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாகும். என் டீம் லீட் எனக்காக லீவ் போட்டு, அவருடையை புது ப்ரையஸ் காரில் என்னை அழைத்து வந்து ஃபிளைட் ஏற்றிவிட்டார். அமெரிக்கா வந்து முதல் முறையாக செல்வதால் எக்கச்சக்கமாக போருட்கள் எடுத்து சென்றேன். குறிப்பிட்ட அளவைவிட 5 கிலோ அதிகமிருந்ததால் 50$ தண்டம் கட்டி எடுத்து சென்றேன்.

ஏர் ஃபிரான்ஸில் எப்பவும் போல் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அழகாக இருந்தார்கள். எங்க இருந்து தான் பிடிக்கிறானுங்னு தெரியல. நல்லா சிரிச்சி வர வேற்றார்கள். ஒரு வழியா என் இடத்துல போய் உக்கார்ந்துட்டேன். புக் பண்ணும் போது Aisle சீட் தான் வேணும்னு சொல்லி புக் பண்ணிருந்தேன். நான் தான் முதல்ல போய் உக்கார்ந்தேன். பக்கத்துல யார் வர போறாங்களோனு ஆவலா பார்த்துட்டு இருந்தேன்.

எப்பவுமே ஃபிளைட்ல என் பக்கத்துல ஏதாவது பொண்ணுங்கதான் உக்காரனும்னு விதி போல. இந்த முறையும் ஒரு வெள்ளைக்கார அக்கா வந்து உக்கார்ந்தாங்க. இங்கிலிஸ்ல கடலை போடறதுக்கு பேசாம தூங்கலாம்னு தூங்கிட்டேன். அப்ப அப்ப சாப்பிட கொண்டுவரும் போது என்னையறியாமல் என் கண்கள் திறந்து கொண்டன. நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிட்டு இருந்தேன். ஏதாவது படம் பார்க்கலாம்னு பார்த்தா என் விதி என்னோட டீவி மட்டும் வேலை செய்யல. இது தான் சாக்குனு நானும் ஏர் ஹோஸ்டஸ் ஒருத்தங்களை கூப்பிட்டு சொன்னேன். என்னனு பார்த்துட்டு வரேனு எங்கயோ போனாங்க. போயிட்டு வந்து எதுவும் செய்ய முடியாதுனு சாரி சொல்லிட்டு போயிட்டாங்க.

ஒரு வழியா ஃபிரான்ஸ் போய் சேர்ந்தேன். அங்க ஏர்போர்ட் அட்டகாசமா இருந்துச்சு. சென்னை போற ஃபிளைட்டுக்கு 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. என்ன செய்யறதுனே தெரியல. நமக்குள்ள இருந்த வலைப்பதிவன் முழிச்சிக்கிட்டான். சரினு பாரிஸ் ஏர்போர்ட்ல உக்கார்ந்து எழுத ஆரம்பிச்சிட்டேன். அப்ப எழுதிட்டிருந்த ஆப்பரேஷன் கில்மா நாலாவது பகுதி பாதி எழுதினேன். அடுத்து அலைபாயுதே படத்து விமர்சனம். அப்பறம் பெரியார் பட விமர்சனம். இதெல்லாம் ஊர்லயே விட்டுட்டு வந்தது வேற கதை. பெரியார் படத்துக்கு எழுதன விமர்சனத்தோட முதல் 4 வரிகள் இதோ (வார்த்தைகள் மாறலாம். நாலு மாசமாயிடுச்சி இல்லையா?)...

"நிறைய படிச்சிவங்க இருக்கும் போது வெறும் நாலாவது வரைக்கும் படிச்சிருக்கிற உனக்கு எதுக்கு இந்த வேலைனு நீங்க கேக்கலாம். ஆனா இதையெல்லாம் அவுங்க யாரும் செய்யல. அதனால தான் நான் செய்யறேன்- இது சாக்ரடீஸ் முன்னாடி பெரியார் பேசற வசனம். இதையே தான் நான் படத்தோட இயக்குனர் ஞான.ராஜசேகரனுக்கும் சொல்றேன். பெரியார் படம் சரியில்லைனு நொட்டை சொல்றவங்களுக்கும் இது தான் பதில்..."

அப்ப நான் தீவிரமா எழுதிட்டு இருக்கறதை பார்த்து ஒருத்தர் பக்கத்துல வந்து உட்கார்ந்து "என்ன சார் கவிதை எழுதறீங்களானு கேட்டாரு". சென்னை ஃபிளைட் வர இடங்கறதால அங்க தமிழர்கள் நிறைய பேர் இருந்தாங்க. நான் முன்னாடியே வந்துட்டதால யாரையும் கவனிக்காம எழுத ஆரம்பிச்சிட்டேன். என் பக்கத்துல இருக்கவர் வந்து கேட்ட பிறகு தான் சுத்தி இருந்தவங்களையே பார்த்தேன். அதுலயும் நம்மல பார்த்து கவிதை எழுதறீங்களானு கேட்கும் போது அவர் ரொம்ப அப்பாவியாத்தான் இருக்கனும்னு ஒரு முடிவுக்கு வந்து அந்த பேப்பரையெல்லாம் உள்ள வெச்சிட்டு ஒரு மணி நேரம் அவர்ட மொக்கை போட்டுட்டிருந்தேன்.

அப்பறம் ஒரு வழியா ஃபிளைட் வந்து வழக்கம் போல என் Aisle சீட்ல போய் உட்கார்ந்து என் பக்கத்துல வர போற பொண்ணு யாருனு பார்த்துட்டு இருந்தேன். Wipro Bag எடுத்துட்டு ஒருத்தவங்க வந்து என் சீட் பக்கத்துல நின்னு நம்பர் சரி பண்ணாங்க. தமிழ் பேசறவங்கனு முகத்துலயே நல்லா எழுதி ஒட்டியிருந்தது. வந்தவுடனே என்னுடன் பேச ஆரம்பித்தாள்...

(தொடரும்...)

37 comments:

நாகை சிவா said...

ஆஹா... கரெக்டா போடுறாங்கய்யா பிரேக்க... சீரியல் ரொம்ப பாக்காதனு சொன்னா கேட்டா தானே...

எம்புட்டு நாள் காத்து இருக்கனும் ...

CVR said...

appuram??? :-)

CVR said...

appuram??? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தமிழ் பேசறவங்கனு முகத்துலயே நல்லா எழுதி ஒட்டியிருந்தது. வந்தவுடனே என்னுடன் பேச ஆரம்பித்தாள்...
//

வாழ்த்துக்கள் பாலாஜி!

//ஃபிளைட்ல போகனும்கறது என் வாழ்க்கையின் லட்சியமாக இருந்திருக்கிறது.//

சரியாச் சொல்லுங்க!
லட்சியமா? திருப்பு முனையா??? :-)))

Unknown said...

பாலாஜி

கட்டுரை நல்லா வந்திருக்கு...தொடருங்கள். (பாரிஸ் விமான நிலையத்தில் ஆங்கிலம் பேசமாட்டார்கள் என்பது உண்மையா?)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பொடி வச்சி நிறுத்த, பொடியனுக்குச் சொல்லியா கொடுக்கணும்? :-) விப்ரோ வந்து என்ன பொடி போடப் போறாளோ?
நல்லா இருக்கு பாலாஜி, சுவாரஸ்யமா!

//ஏர் ஃபிரான்ஸில் எப்பவும் போல் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அழகாக இருந்தார்கள். எங்க இருந்து தான் பிடிக்கிறானுங்னு தெரியல//

எல்லாம் orkut தான் :-))

நம்பளுக்கேவா?
ராயலாரைக் கேட்டாக்காத் தெரியும்! அதுல எத்தினி ஏர் ஹோஸ்டஸ் வெட்டிக்கு ஆர்க்குட்டுல ஸ்கிராப் பண்ணி இருக்காங்கன்னு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Aisle சீட் தான் வேணும்னு சொல்லி புக் பண்ணிருந்தேன்//

//எப்பவுமே ஃபிளைட்ல என் பக்கத்துல ஏதாவது பொண்ணுங்கதான் உக்காரனும்னு விதி போல//

ரெண்டுத்துக்கும் ஏதோ கனெக்சன் இருக்கு! அதான் Aisle சீட் தான் வேணும்னு அடம் புடிக்கறீங்க போல!
என்ன கனெக்சன் பாலாஜி அது? சொல்லுங்க! மக்களே....பாலாஜிய வுடாதீங்க....கேளூங்க!

பயணக் கட்டுரைன்னா ட்ராவெல் டிப்ஸ் எல்லாம் கொடுக்கணும்!
அதான் நியாயம், தர்மம், நேர்மை எல்லாம்! :-)

ஃபோட்டோ கூடப் போடணுமே பயணக் கட்டுரை-ன்னா?

இலவசக்கொத்தனார் said...

இந்த பதிவு யாரு படிக்க அனுப்பப்படும் அப்படின்னு தெரியுமுல்ல. அப்புறமும் இந்த மாதிரி எல்லாம் ப்ரேக் விட்டா... ரொம்பத்தான் தைரியமய்யா உமக்கு. :))

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

ஆஹா... கரெக்டா போடுறாங்கய்யா பிரேக்க... சீரியல் ரொம்ப பாக்காதனு சொன்னா கேட்டா தானே...
//
புலி இப்படி ஏதாவது ஒரு இடத்துல பிரேக்கை போட்டா தான் அடுத்து தவறாம வருவீங்க ;)//

நான் சீரியலே பார்க்க மாட்டேன்... எப்பவாது வீட்ல அம்மா பார்க்கும் போது தப்பி தவறி பார்க்கறதுண்டு...

இதுல கோகிலா எங்கே போகிறாள்?னு ஒரு நாடகம். நான் கூடா ஏதோ Quizனு நினைச்சிக்கிட்டேன். கடைசியா அதை பார்த்தவங்க தான் கீழ்ப்பாக்கம் போகனும்னு புரிஞ்சிது ;)

//
எம்புட்டு நாள் காத்து இருக்கனும் ...//
முடிஞ்சா நாளைக்கே போடறேன் ;)

வெட்டிப்பயல் said...

//CVR said...

appuram??? :-)//

ஆங்... விழுப்புரம்...

ஏன்யா மெயில் அனுப்பி நல்லா இருக்கானு கேட்டா பதில் சொல்லாம இங்க வந்து நல்லா கேள்வி கேளு...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தமிழ் பேசறவங்கனு முகத்துலயே நல்லா எழுதி ஒட்டியிருந்தது. வந்தவுடனே என்னுடன் பேச ஆரம்பித்தாள்...
//

வாழ்த்துக்கள் பாலாஜி!
//
இதுல என்ன வாழ்த்துக்கள் வேண்டி இருக்கு?

// //ஃபிளைட்ல போகனும்கறது என் வாழ்க்கையின் லட்சியமாக இருந்திருக்கிறது.//

சரியாச் சொல்லுங்க!
லட்சியமா? திருப்பு முனையா??? :-)))//

சின்ன வயசுல லட்சியம் தான் :-)

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...

பாலாஜி

கட்டுரை நல்லா வந்திருக்கு...தொடருங்கள். //
மிக்க நன்றி அண்ணா...

//
(பாரிஸ் விமான நிலையத்தில் ஆங்கிலம் பேசமாட்டார்கள் என்பது உண்மையா?)//
ஓரளவு பேசுவார்கள். நான் அதிகமா யாரிடமும் பேசவில்லை. தேவையும் ஏற்படவில்லை. Flight Details எல்லாம் தெளிவாக ஆங்கிலத்தில் தான் சொன்னார்கள்...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பொடி வச்சி நிறுத்த, பொடியனுக்குச் சொல்லியா கொடுக்கணும்? :-) விப்ரோ வந்து என்ன பொடி போடப் போறாளோ?
//
அடுத்த பகுதியில தெரியும் ;)

//
நல்லா இருக்கு பாலாஜி, சுவாரஸ்யமா!
//
மிக்க நன்றி...

// //ஏர் ஃபிரான்ஸில் எப்பவும் போல் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அழகாக இருந்தார்கள். எங்க இருந்து தான் பிடிக்கிறானுங்னு தெரியல//

எல்லாம் orkut தான் :-))
//
இது வேறையா?
ஆர்குட் எது எதுக்கெல்லாம் யூஸாகுதுப்பா...

//
நம்பளுக்கேவா?
ராயலாரைக் கேட்டாக்காத் தெரியும்! அதுல எத்தினி ஏர் ஹோஸ்டஸ் வெட்டிக்கு ஆர்க்குட்டுல ஸ்கிராப் பண்ணி இருக்காங்கன்னு! :-)//
முதல்ல அவருக்கு இருக்கறதுக்கு ரிப்ளை பண்ணட்டும் ;)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Aisle சீட் தான் வேணும்னு சொல்லி புக் பண்ணிருந்தேன்//

//எப்பவுமே ஃபிளைட்ல என் பக்கத்துல ஏதாவது பொண்ணுங்கதான் உக்காரனும்னு விதி போல//

ரெண்டுத்துக்கும் ஏதோ கனெக்சன் இருக்கு! அதான் Aisle சீட் தான் வேணும்னு அடம் புடிக்கறீங்க போல!
என்ன கனெக்சன் பாலாஜி அது? சொல்லுங்க! மக்களே....பாலாஜிய வுடாதீங்க....கேளூங்க!
//
Aisle Seatல இருந்தா எப்ப வேணும்னாலும் எழுந்து போகலாம். கொஞ்சம் Comfortableஆ இருக்கும். அவ்வளவு தான்...

//
பயணக் கட்டுரைன்னா ட்ராவெல் டிப்ஸ் எல்லாம் கொடுக்கணும்!
அதான் நியாயம், தர்மம், நேர்மை எல்லாம்! :-)
//
ஏதோ எனக்கு தெரிஞ்சதை அப்பப்ப எடுத்துவிடறேன் ;)

//
ஃபோட்டோ கூடப் போடணுமே பயணக் கட்டுரை-ன்னா?//
யார் ஃபோட்டோ? "Complex KRS" ஃபோட்டோவா? ;)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

இந்த பதிவு யாரு படிக்க அனுப்பப்படும் அப்படின்னு தெரியுமுல்ல.//
இதெல்லாம் யாருக்கும் அனுப்ப எழுதல ;)

//
அப்புறமும் இந்த மாதிரி எல்லாம் ப்ரேக் விட்டா... ரொம்பத்தான் தைரியமய்யா உமக்கு. :))//
ஹி ஹி ஹி...
ரொம்ப தூரம் தள்ளி இருக்கோமில்லை...

தூரமும் தைரியமும் Directly Propotional :-)

ILA (a) இளா said...

அப்படி போடு பிரேக்கை. சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
சரி, நமக்கு உண்மை தெரியும், அதனால ஒன்னும் சுவாரசியமா இருக்காது.(வெட்டி மேல ஒரு நம்பிக்கைதான்)

ராஜ நடராஜன் said...

வணக்கம் பாலாஜி.எப்படி இருக்கீங்க!

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

அப்படி போடு பிரேக்கை. சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
சரி, நமக்கு உண்மை தெரியும், அதனால ஒன்னும் சுவாரசியமா இருக்காது.(வெட்டி மேல ஒரு நம்பிக்கைதான்)//

என்ன உண்மை??? உங்க அளவுக்கு சுவாரசியமா எனக்கு எழுத தெரியாதுங்கறதா?

வெட்டிப்பயல் said...

// நட்டு said...

வணக்கம் பாலாஜி.எப்படி இருக்கீங்க!//

ரொம்ப நல்லா இருக்கேன் நட்டு. நீங்க எப்படி இருக்கீங்க?

CVR said...

இங்கே பின்னூட்டம் போடும் முன்னரே உங்களுக்கு மின்மடல் அனுப்பிவிட்டேன்!
:-)

MyFriend said...

ஆஹா.. இப்படி சஸ்பென்ஸ் வச்சிட்டு போயிட்டீங்களே???? சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க அண்ணா.. :-)

கப்பி | Kappi said...

அப்பாலிக்கா என்னாச்சு நைனா? :)))

சென்னை வந்து சேருகிற வரைக்கும் நடந்த கதை தான் எனக்கு தெரியாது ;)

ஜொள்ளுப்பாண்டி said...

என்னாங்க பாலா முக்கியமான இடத்திலே கொண்டாந்து ப்ரேக்கை போட்டுட்டா எப்படி ?? சீக்கிரம் சொல்லுங்கப்பூ... :)))))

ஜி said...

//ஏர் ஃபிரான்ஸில் எப்பவும் போல் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அழகாக இருந்தார்கள். எங்க இருந்து தான் பிடிக்கிறானுங்னு தெரியல. //

இதனை நான் வன்மையா கண்டிக்கிறேன். இதுவரை நாலு தடாவ இந்த வண்டில போயிருக்கேன். ஒரு தடவ கூட நல்ல ஃபிகர்ஸ் வரவே இல்ல... நீங்க வரும்போது மட்டும் அழகானவங்க வந்தாங்களா??? :)))

கோபிநாத் said...

வெட்டிக்காரு சூப்பர் பிரேக்...;)

நாமக்கல் சிபி said...

ஸ்டார்ட்டுங்க சீக்கிரம்!

வெட்டிப்பயல் said...

//CVR said...

இங்கே பின்னூட்டம் போடும் முன்னரே உங்களுக்கு மின்மடல் அனுப்பிவிட்டேன்!
:-)//

அது கொஞ்சம் லேட்டா தான் வந்துச்சு தல...

சாரி ஃபார் தி திட்டு ;)

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. இப்படி சஸ்பென்ஸ் வச்சிட்டு போயிட்டீங்களே???? சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க அண்ணா.. :-)//

சீக்கிரம் போடறேன் தங்கச்சி... நோ வொரிஸ் ;)

நாகை சிவா said...

////செல்வன் said...

பாலாஜி

கட்டுரை நல்லா வந்திருக்கு...தொடருங்கள். //
மிக்க நன்றி அண்ணா...

//
(பாரிஸ் விமான நிலையத்தில் ஆங்கிலம் பேசமாட்டார்கள் என்பது உண்மையா?)//
ஓரளவு பேசுவார்கள். நான் அதிகமா யாரிடமும் பேசவில்லை. தேவையும் ஏற்படவில்லை. Flight Details எல்லாம் தெளிவாக ஆங்கிலத்தில் தான் சொன்னார்கள்...//

ஏர்போர்டில் ஹெல்ப் டேஸ்க்ல இருப்பவர்கள் மட்டும் தான் ஆங்கிலத்தில் பதில் சொல்லுவார்கள். மற்றவர்கள் அவ்வளவாக பேச மாட்டார்கள். ஏர்போட்டிற்க்கு வெளியில் பெரிய பிரச்சனை. ரொம்பவே சொற்பமானவர்கள் தான் பேசுகிறார்கள். பஸ், டாக்ஸி எல்லாம் ரொம்பவே கஷ்டம்...

cheena (சீனா) said...

சரியான இடத்திலே தொடரும். ம்ம்ம்ம்ம் - என்ன பண்றது - காத்திருக்க வேண்டியது தான்

அபி அப்பா said...

அப்புடி போடு! பின்ன என்ன ஆச்சு, செல்வி ச்சிரியல் மாதிரி சுறு சுறுன்னு போகுதே!!!

துளசி கோபால் said...

வெட்டி,

50 டாலர் வவுச்சர் கிடைச்சதா?

நம்ம ஸீட் முன்னாடி இருக்கும் டீவி வேலை செய்யலைன்னு சொல்லி, அவுங்க அதைச் சரி பண்ணமுடியாமப் போனதுக்கு வருத்தம் தெரிவிச்சு, ஒரு 50 டாலர் கொடுத்தாங்க.
எல்லாம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்லெதான்.

மொக்கைப்படங்கள் பார்க்காம இருந்தால் 50 வருமானம் நல்லா இருக்குல்லெ?

cheena (சீனா) said...

50 டாலர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்லே தராங்களா - தெரியாமப் போச்சே

G.Ragavan said...

பாரீஸ் ஏர்ப்போர்ட்டை மறக்கவே முடியாதுப்பா. பெருசுன்னா பெருசு..அவ்ளோ பெருசு. என்னோட லக்கேஜ் வராம...நான் அங்குட்டும் இங்குட்டும் ஓடி..அப்பப்பா....ரொம்பப் பெரிய ஏர்ப்போர்ட். மேல இருந்து பாத்தா கொழாய் மாதிரி இருக்கும்.

அங்கயும் போய் வலைப்பதிவுதான் எழுதுனியா....ஒன்னயப் பாத்து ஒருத்தர் கவிஞர்னும் கேட்டுட்டாரா...ஒன்னும் சொல்றதுக்கில்லை. வெட்டி புகழ் பாரீஸ் வரை பறக்குது.

நாகை சிவா said...

////ஏர் ஃபிரான்ஸில் எப்பவும் போல் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அழகாக இருந்தார்கள். எங்க இருந்து தான் பிடிக்கிறானுங்னு தெரியல. //

இதனை நான் வன்மையா கண்டிக்கிறேன். இதுவரை நாலு தடாவ இந்த வண்டில போயிருக்கேன். ஒரு தடவ கூட நல்ல ஃபிகர்ஸ் வரவே இல்ல... நீங்க வரும்போது மட்டும் அழகானவங்க வந்தாங்களா??? :)))//

இதை நான் வழிமொழிகிறேன்...

நானும் நாலு தபா போய் இருக்கேன்... :(

மங்களூர் சிவா said...

//
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//தமிழ் பேசறவங்கனு முகத்துலயே நல்லா எழுதி ஒட்டியிருந்தது. வந்தவுடனே என்னுடன் பேச ஆரம்பித்தாள்...
//

வாழ்த்துக்கள் பாலாஜி!
//
repeattu...

சிவக்குமரன் said...

இதோட அடுத்த பகுதியை கண்டுபிடிக்கிறது எப்பிடி?