நாங்க பெங்களூர் வந்தவுடன் புரிந்து கொண்ட விஷயம் நம்மைத்தவிர (தமிழர்களை) எல்லாரும் நல்லா இங்கிலீஸ் பேசுறானுங்க (ஆந்திராக்காரர்கள் நம்மைவிட மோசம்). நம்ம ஊர் பொண்ணுங்களும் பட்டையைக் கிளப்புறாங்க. (இதுக்கு தான் கடலை போடும் போது இங்கிலீஸ்ல பேசறாங்கனு புரிஞ்சிது).
எங்க கூட வந்த ஒருத்தனுக்கு இங்கிலீஸ்ல பேசனா வேலை கிடைத்துவிடும்னு நம்பிக்கை. நம்ம முதல் ரவுண்ட் கிளியர் பண்ணாதான இண்டர்வியூ. அதுக்கு முதல்ல தயார் பண்ணுவோம்னு நான் சொன்னன். அவன் என் பேச்சைக் கேக்காம "Call Center Training"ல 5000 குடுத்து சேர்ந்தான்.
முதல் வாரம் அவர்கள் எடுத்தது Basic Grammer (Tense, Verb, Noun, Adjective...). நம்ம எல்லாம் அதை எட்டாவதுல படித்து இருப்போம். இரண்டாவது வாரம் ஒரு தலைப்பை கொடுத்து 10 நிமிடம் பேச சொன்னார்கள். மூன்றாவது வாரம் GD.கடைசி வாரம் திடீரென்று தலைப்பை கொடுத்து பேச சொல்வார்கள்.இந்த Trainingக்கு எதற்கு 5000?
இதை நாங்களே ரூம்ல செய்யலாம்னு யோசிச்சி பண்ண ஆரம்பித்தோம்.
முடிந்தவரை ஒருவருக்கொருவர் இங்கிலீஸ்லயே பேசிக் கொண்டோம் (இது பயங்கர ஜோக்காக இருக்கும்). தினமும் ஒருவர் மற்றவர்களுக்கு தலைப்பை குடுத்து பேச ஆரம்பித்தோம்.முதலில் மிகவும் சுலபமான தலைப்பை குடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவனுக்கு நான் சுலபமான தலைப்பு என்று குடுத்தது அவனுக்கு கடினமாக தோன்ற பதிலுக்கு அவன் அடுத்தவனுக்கு கடினமான தலைப்பை குடுக்க... நல்லா சூடு பிடிக்க ஆரம்பித்தது.
கண்ணாடியைப் பார்த்து பேசிப்பழகுவது என் நண்பன் ஒருவன் சொன்ன அறிவுரை. அது எங்கள் அனைவருக்கும் பயன்பட்டது. 2 மாசத்துல எங்களுக்கே நம்பிக்கை வர ஆரம்பித்தது.
நான் சந்தித்த நபர்களில் பெரும்பாலும் எங்களை போலவே ஆங்கிலம் பேச தயங்குபவர்கள் அதிகம். அவர்களுக்கு நான் சொன்னதெல்லாம் இதுதான். ஆங்கிலம் என்பது நம் தாய் மொழியல்ல. அது நம் அறிவின் அளவுகோலும் அல்ல. அதில் நாம் பண்டிதர்களாக வேண்டிய தேவையுமில்லை. ஓரளவிற்கு திக்காமல் திணராமல் நாம் சொல்ல நினைத்ததை சொன்னாலே போதும்.
தினமும் "The Hindu" editorial page சத்தம்போட்டு படிக்கவும். தினமும் குறைந்தது 1-2 மணி நேரம் ஆங்கில செய்தித்தாள் படிக்கவும், GD அல்லது தலைப்பைக் கொடுத்துப் பேச பயன்படுத்திக் கொள்ளலாம். தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்துக்கொண்டு அதை எப்படியும் தினமும் பயன்படுத்தவும்.
பேசுவதற்கு ஆள் இல்லை என்றால் Airtel/Hutch customer careக்கு போன் செய்து பேசவும். என் பக்கத்து ரூம்ல இருப்பவன் இதை தான் செய்வான். அவனுடைய கேள்விகள் எதுலயும் logic இருக்காது. இருந்தாலும் அவன் தயங்காமல் முப்பது நிமிடம் பேசுவான். (eg. Is Airtel better than Hutch, Y there is no signal in Electronic City?, which is the better plan in Airtel....)
யார் கிண்டல் செய்தாலும் வருத்தப்படாதீர்கள். கிண்டல் செய்ற எந்த நாயும் சுண்டல் கூட வாங்கி தரமாட்டானுங்கனு மனதிற்குள் சொல்லிக்கொள்ளவும் :-).
தயவு செய்து பணத்தை "Call Center training"க்கு குடுத்து வீணாக்காதீர்கள். எந்த மொழியையும் நமக்குள் யாரும் திணிக்க முடியாது, பழக பழக தானாக வந்துவிடும்...
தொடரும்....
6 comments:
\\யார் கிண்டல் செய்தாலும் வருத்தப்படாதீர்கள். கிண்டல் செய்ற எந்த நாயும் சுண்டல் கூட வாங்கி தரமாட்டானுங்கனு மனதிற்குள் சொல்லிக்கொள்ளவும் :-).\\
சரியாச்சொல்லிருக்கீங்க. உதவி செய்யறவங்கள விட குத்தம் சொல்லறவங்கதான நிறைய பேர்
It is a very useful topic.Thank u
"பேசுவதற்கு ஆள் இல்லை என்றால் Airtel/Hutch customer careக்கு போன் செய்து பேசவும்."
Idhu 100 percent true. Naan ippo kooda bore adikara tiathula ellam customer care'ku thaan call pannuven. Idhellam velai thedurappo aana velai kedachadhum, hutch/airtel kooda icici cust.care'yum sethukalaam..credit card pathi doubt doubt'a kekalaam. enna naan solradhu?
நல்லாயிருந்தது.நீங்க வெட்டியாயிருந்தா.......
நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....
nalla thodar vetti.. will help many ppl.. Good Luck !!
"யார் கிண்டல் செய்தாலும் வருத்தப்படாதீர்கள். கிண்டல் செய்ற எந்த நாயும் சுண்டல் கூட வாங்கி தரமாட்டானுங்கனு மனதிற்குள் சொல்லிக்கொள்ளவும் :-)."
ரொம்ப ரசிச்சேன்...இதை வாழ்க்கையில் கூட பின்பற்றலாம்.
Post a Comment