இந்த தொடர் மூலம் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரில வேலை தேடுவது எப்படினு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதலாம்னு இருக்கிறேன்.
ஆங்கிலம் அதிகமா பயன்படுத்துவேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்குமாக.
சாப்ட்வேர் இண்டஸ்ட்ரில வேலை வாங்குவதற்கு கடின உழைப்பைவிட புத்திசாலித்தனமான அணுகுமுறையே போதும். (We need to do Smart Work, no need for Hard work). புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை :-).
சில தவறான புரிதல்கள்: (இதெல்லாம் நாங்க படிக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தது)
1) இண்டஸ்ட்ரில புதுசா வர டெக்னாலஜி எல்லாம் தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்.
2) ஜாவா தெரிஞ்சா தான் வேலை வாங்கலாம்.
3) Resume அதிக பக்கம் இருக்கணும். Area of Interest நிறைய இருக்கணும்.
4) Quants, analytical, Verbal எல்லாம் GRE, GMAT, CAT படிப்பவர்களுக்கு தான்.
5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.
6) முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.
7) அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குதான் வேலை சுலபமா கிடைக்கும்.
8) தினமும் எல்லா companyக்கும் போய் Resume கொடுக்க வேண்டும்.
(இன்னும் நிறைய இருந்தது. எல்லாம் மறந்து போச்சு. ஞாபகம் இருப்பவர்கள் சொன்னா நல்லா இருக்கும்)
இது எல்லாம் முட்டாள்தனம்னு வேலை தேடும்போது தான் தெரிந்தது.
நான் BE முடித்தது 2003ல். அந்த வருடம் கோவைல PSG, CIT, GCT தவிற மத்த காலேஜ்ல எல்லாம் Campus Placement ரொம்ப கம்மி. சொல்லப் போனால் எங்க காலேஜ்ல எல்லாம் Placementஏ இல்லை. சரி வேலை தேடி எங்கு போகலாம்னு யோசிக்கும் போது சென்னை அல்லது பெங்களூர்னு முடிவு பண்ணோம்.
பெங்களூர்ல தான் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரிஸ் அதிகம் இருக்கு, அதானால அங்கயே போகலாம்னு முடிவு செய்து அங்கே சென்றோம்.
அந்த நாள்ல Openings கம்மியா இருந்ததால ஒரு சிலர் எல்லாம் வேலை தேடாம சொந்த ஊரிலே விவசாயம் மற்றும் சொந்த பிஸினஸ் பார்க்க சென்று விட்டனர்.
மொதல்ல போன எங்களுக்கு வேலை கிடைக்க 6-10 மாசமானது. அதற்கு பிறகு எல்லா companyயும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆள் எடுக்க ஆரம்பித்தன.
ஊருக்கு போனவர்கள் எல்லாம் விஷயம் தெரிந்து பெங்களூர் வந்தனர்.
எங்க ரூம் வேடந்தாங்கல் மாதிரி, வேலைத் தேடி வருபவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் அடுத்த batch வரும் (பொதுவாக வேலை கிடைப்பவர்கள் hyderabad, Noida, Chennai, மைசூர் சென்று விடுவார்கள்) . எப்பொதும் வேலை தேடி வருபவர்கள் ஒரு 3-5 பேர் இருப்பார்கள்.
நான் பெங்களூர்ல இருந்த வரையில் 20-30 பேருக்கு மேல் எங்க ரூம்ல தங்கி வேலை தேடி நல்ல பணியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த அனுபவத்தை வைத்து தான் இந்த தொடரை எழுதுகிறேன். இதுல எனக்கு தெரிந்த வரையில் practicalலாக எழுதுகிறேன்.
7 comments:
நல்ல முயற்சி!
மீண்டும் வாழ்த்துக்கள்!
பதிவு நன்றாக இருந்தது.....
அற்புதமான subject....
தொடர்ந்து எழுதுங்கள்.....!!!!!
//பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :-)//
இந்த பதிவ மட்டும் ஆராயலாமா சார்?
//5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.
//
Somwwhat this is true. Lot of my friends who coming as fresher recommend to read this books to clear the aptitude test.
Clearing next level interview , it all depends their capability.
என்ட்ரீய விட ரீ என்ட்ரீ அமர்க்களமா இருக்கு
அனைத்தையும் ஒரெ பதிவா போட மாட்டீங்களான்னு என் நண்பன் இதைப் படிச்சிட்டு கேட்டான்...அந்த அளவுக்கு யதார்த்தமா இருக்குது...நல்ல முயற்சி தொடருங்கள்.
//நிலவு நண்பன் said...
அனைத்தையும் ஒரெ பதிவா போட மாட்டீங்களான்னு என் நண்பன் இதைப் படிச்சிட்டு கேட்டான்...அந்த அளவுக்கு யதார்த்தமா இருக்குது...நல்ல முயற்சி தொடருங்கள்.//
இங்க இருக்குங்க.. படிச்சி பார்க்க சொல்லுங்க ...
Post a Comment