தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, September 03, 2006

வேட்டையாடு விளையாடு

எல்லாரும் விமர்சனம் எழுதி முடிச்சதுக்கு அப்பறம் உனக்கு எதுக்குனு நீங்க நினைக்கலாம்...

நான் விமர்சனம் எழுத போறதில்ல... இந்த படத்துக்கு எப்படி போனேன்னு எழுத போறேன்...

அப்படி என்னடா இத பத்தி எழுதற அளவுக்கு ஸ்பெஷல்னு கேக்கறீங்களா??? இருக்கு... ஏன்னா நான் போனது உங்க எல்லோருக்கும் தெரிந்த ஒரு வலைப்பதிவரோட ;)

நான் ஒரு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் இருந்த ரூம்ல, ரூம்மேட் ஒருத்தர் கார் வெச்சிருந்தார். அவர் தெலுகுக்காரர், அதனால அவர் கூட வாராவாரம் பாஸ்டன் போய் தெலுகு படம் பார்த்துட்டு இருந்தோம்.

இப்ப ரூம்ல இருக்கற 2 பேர்கிட்டயும் கார் இல்ல (சீக்கிரம் வாங்கனும்)... இப்ப பாத்து "வேட்டையாடு விளையாடு" பாஸ்டன்ல ரிலீஸ் ஆச்சு. என்னடா கமல் படம் தியேட்டர்ல பாக்க முடியலையேனு ஒரு வருத்தம் வேற...

என் ரூம் மேட்... (அதுதான் உங்க எல்லாருக்கும் தெரியுமே!!! தனா தான்) எப்படி படத்துக்கு போகலாம்னு பிளான் போட்டுட்டு இருந்தான். மொத்தம் 2 டிரெயின் பிடிக்கனும். 2 இடத்துல டேக்ஸி பிடிக்கனும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் போக வேண்டாம்... டவுன்லோட் பண்ணி பாத்துக்கலாம்னு நான் சொல்லிட்டேன்.

அந்த நேரத்துல நம்ம வலைப்பதிவர் ஒருவரிடமிருந்து மெயில் வந்துச்சு... "Can u join us for the movie???"னு.

'எங்களிடம் கார் இல்லை. அதனால் என்னால் வர முடியாது என்றே நினைக்கிறேன்'னு சொல்லி நான் பதில் சொல்லிவிட்டேன்.

'நீங்கள் லோவலில் தானே தங்கியிருக்கிறீர்கள். நான் போகும் வழியில் உங்களை பிக்கப் செய்து கொள்கிறேன். இந்த நம்பருக்கு கால் செய்யவும்'னு சொல்லி மெயில் வந்தது.

'ஆஹா... உலகத்துல இவ்வளவு நல்லவங்க கூட இருக்காங்களா?'னு ஒரு சந்தோஷம்... உடனே கால் செய்தேன்.

இரவு 9:30 காட்சிக்கு செல்லலாம் என்று முடிவானது. என் ரூம் மேட்டையும் அழைத்து வரலாமா? என்று நான் கேட்டதற்கு... 'தாராளமாக.. கூப்பிட்டு வாருங்கள்' என்று சொன்னார்.

தனாவிடம் நான் இந்த விஷயத்தை சொன்னவுடன், அவனுக்கு தயக்கம்.
"யாருனே தெரியாதவங்களை எதுக்குடா கஷ்டப்படுத்தற???"னு கேட்டான்.

"டேய் அவராதான்டா கேட்டாரு. அதுவும் இல்லாம இந்தியால இருக்கறவங்க எல்லாம் அடிக்கடி மீட் பண்ணிக்கறாங்க... எனக்கும் அந்த மாதிரி யாரையாவது பாக்கனும் ஆசையாயிருக்கு... அதனாலதான் சரின்னு சொல்லிட்டேன். உனக்கும் சேத்து சொல்லியிருக்கேன். வர இல்ல"

"வரேன் ஆனா ஒரு கண்டிஷன்... இந்த ஆரிய வந்தேறி, பின்னூட்டம், பின்னூட்ட கயமைத்தனம் இந்த மாதிரியெல்லாம் பேச கூடாது ஓகேவா???"

"சரி பேச மாட்டேன்"

8 மணிக்கு லோவல் டிரெயின் ஸ்டேஷனில் சந்தித்தோம். அங்கிருந்து அவருடைய காரில் படத்திற்கு சென்றோம்.

பொதுவாக பேச்சு சினிமா, வலையுலகம் சுற்றியே இருந்தது. கோழியின் அட்டகாசங்களை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமென்று சொன்னார். நானும் சரி அடுத்த பாகத்தை சீக்கிரம் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

நான் இங்கு வந்து பார்த்த தெலுகு படங்களை பற்றியும், நயகரா பயணம்,ஃப்ளோரிடா பயணம், டிஸ்கவரி விண்கலம் (Discovery Shuttle Launch) பார்த்தையெல்லாம் பற்றியும் எழுத சொன்னார். நானும் கண்டிப்பாக எழுதுவதாக சொல்லியிருக்கிறேன். (இப்போது கூடவே யு.எஸ் ஓப்பன் பார்த்ததை பற்றியும் ஒரு பதிவிடலாம் என்று உள்ளேன்)

படம் பார்த்துவிட்டு வரும் போது படத்தை பற்றி விசாரித்தார். நானும் ஏதோ என் அறிவுக்கு எட்டிய வரை சொன்னேன். அவருடைய கருத்தையும் சொன்னார். பிறகு நாங்கள் வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 1:30 ஆகிவிட்டது.

காலையில் நான் எழுந்து பார்த்த போது அவருடைய விமர்சனம் தமிழ் மணத்தில் இருந்தது. அதை தனாவிடம் காட்டிய போது அவன் சொன்னது
"நேத்து பேசும்போது இவ்வளவு நுணுக்கமா இவர் பாத்துருப்பாருனு நான் சத்தியமா நினைக்கலடா... நீ சொன்ன மாதிரி அவர் தனி ஆள் இல்லதான் போலிருக்கு"

சரி நீங்களும் படிச்சு சொல்லுங்க அவன் சொன்னது உண்மையானு!!! வேட்டையாடு விளையாடு

25 comments:

Boston Bala said...

நன்றி வெட்டி... :-D)

Boston Bala said...

----யு.எஸ் ஓப்பன் பார்த்ததை பற்றியும் ஒரு பதிவிடலாம் ----

அகஸிக்கு ஓய்வு கொடுத்த ஆட்டமா!?

நாமக்கல் சிபி said...

//நன்றி வெட்டி... :-D) //

நான் சொல்ல வேண்டியதை நீங்க சொல்றீங்க!!!

//அகஸிக்கு ஓய்வு கொடுத்த ஆட்டமா!? //

இல்ல அதை பார்க்க முடியல... அந்த நாள் இரவு நடந்த

Maria Sharapova , Russia, vs. Elena Likhovtseva , Russia

மற்றும்

James Blake (USA) Vs
Carlos Moya (ESP)

கால்கரி சிவா said...

//இல்ல அதை பார்க்க முடியல... அந்த நாள் இரவு நடந்த

Maria Sharapova , Russia, vs. Elena Likhovtseva , Russia
//

அதானே ... இதை நல்லா பாத்துட்டு அடுத்த மாட்சில் தூங்கியிருப்பீர்கள்.

நல்லா இருங்க சாமி நல்லா இருங்க

G.Ragavan said...

ஓ! பாஸ்டன் பாலாவோட படத்துக்குப் போனீங்களா! சூப்பர். எப்படியோ படம் பாத்தாச்சு....நான் இன்னும் பாக்கலை...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நாமக்கல் சிபி said...

//அதானே ... இதை நல்லா பாத்துட்டு அடுத்த மாட்சில் தூங்கியிருப்பீர்கள்.

நல்லா இருங்க சாமி நல்லா இருங்க //

அகாஸி மேட்ச் காலைல நடந்துச்சு... ஷேரபோவா மேட்ச் நைட்.. நாங்க போறதுக்குள்ள மேட்ச் முடிஞ்சிடுச்சு...

Even Federer was playing that day... but we didnt have entry ticket for that stadium :-(

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...
ஓ! பாஸ்டன் பாலாவோட படத்துக்குப் போனீங்களா! சூப்பர். எப்படியோ படம் பாத்தாச்சு....//
கரெக்ட்...

//நான் இன்னும் பாக்கலை...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
உங்க பேர வெச்சி கமல் நடிச்சி இருக்காரு இன்னும் பாக்கலையா???
PVR இல்லனா பாலாஜில ஓடும்... சீக்கிரம் போங்க!!!

கப்பி | Kappi said...

//இப்போது கூடவே யு.எஸ் ஓப்பன் பார்த்ததை பற்றியும் ஒரு பதிவிடலாம் என்று உள்ளேன்//

இது ஓப்பன் பண்ணி பல வருஷம் ஆச்சே..தியேட்டர்ல நியூஸ் ரீல்ல பார்த்தீங்களா? :D

G.Ragavan said...

// //நான் இன்னும் பாக்கலை...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
உங்க பேர வெச்சி கமல் நடிச்சி இருக்காரு இன்னும் பாக்கலையா???
PVR இல்லனா பாலாஜில ஓடும்... சீக்கிரம் போங்க!!! //

ஓடுது ஓடுது...ஓடாம இருக்கு....நாங்க ஆஃப் ஷோருல இருக்கேய்யா....வேலையோ வேலை....இன்னைக்கு திருமால்சிவனை வேற ஒங்க நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். அப்படியே பாலசிங்கத்தை ஒங்க நாட்டுல இருந்து திரும்பக் கூப்பிட்டுக்கிறேன். திருவருட் செல்வர்ல வர்ர மாதிரி "அரசனை அடிமையாக்கி சிறுமியை அரசியாக்கி இந்த நொடியில் இப்படி ஒரு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறான்"னு வசனந்தான் பேசனும்.

நாமக்கல் சிபி said...

//ஓடுது ஓடுது...ஓடாம இருக்கு....நாங்க ஆஃப் ஷோருல இருக்கேய்யா....வேலையோ வேலை....//
சரி... மேனேஜர்னா சும்மாவா???

//இன்னைக்கு திருமால்சிவனை வேற ஒங்க நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்.//
அவன் ஏற்கனவே வந்து சோதனை மேல் சோதனைனு பாடிட்டு இருந்தான். திரும்ப வரானா??? பாத்துக்கலாம்


//"அரசனை அடிமையாக்கி சிறுமியை அரசியாக்கி இந்த நொடியில் இப்படி ஒரு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறான்"னு வசனந்தான் பேசனும்.
//
நம்ம மேல கை வெக்கமா இருந்தா சரிதான் ;)

நாமக்கல் சிபி said...

//இது ஓப்பன் பண்ணி பல வருஷம் ஆச்சே..தியேட்டர்ல நியூஸ் ரீல்ல பார்த்தீங்களா? :D //

கப்பி,
ஷேரபோவாவ உன்னை விட்டுட்டு பாத்துட்டன்னு வயிறு எரியுதுனு தெரியும்... 911க்கு கால் பண்ணி தீயனைப்பு படையை வர சொல்லு ;)

கப்பி | Kappi said...

//கப்பி,
ஷேரபோவாவ உன்னை விட்டுட்டு பாத்துட்டன்னு வயிறு எரியுதுனு தெரியும்... 911க்கு கால் பண்ணி தீயனைப்பு படையை வர சொல்லு ;)
//

நான் சொன்னது வேற US ;)

ஷரபோவா வருவா போவா..அதெல்லாம் மாயா ;))
அந்த மாயா டிவிலயும் தெரியும் ;)

Unknown said...

நான் இன்னும் பாக்கலை...exams..
:-(((

நாமக்கல் சிபி said...

//நான் சொன்னது வேற US ;)
//
அததான் அம்மா வந்து க்ளோஸ் பண்ணிட்டாங்களே... இப்ப ஐயா மறுபடியும் ஓப்பன் பண்ணாறா???

//
ஷரபோவா வருவா போவா..அதெல்லாம் மாயா ;))
அந்த மாயா டிவிலயும் தெரியும் ;)
//
கப்பி,
டிவில பாக்கறதும் நேர்ல பாக்கறதும் ஒன்னா???

என்னப்பா பெரிய பெரிய தத்துவம் எல்லாம் பேசற???

நாமக்கல் சிபி said...

//செல்வன் said...
நான் இன்னும் பாக்கலை...exams..
:-(((
//
ஃபீல் பண்ணாதீங்க... பரிட்சை முடிஞ்சதும் DVD பிரிண்ட்ல பாத்துக்கலாம் ;)

கதிர் said...

நான் தியேட்டருக்கு போன நேரம் டிக்கட்டே கிடைக்கல. உடனே பேக்கடிக்காம மறுநாள் ஆட்டைக்கு
3 டிக்கெட் எடுத்துட்டேன். மறுநாள்தான் படத்தை பார்த்தேன். நம்ம சீட்டுக்கு பக்கத்தில இருந்த
மலையாளி கேட்டாரு. ஆமா இந்தாளுக்கு எவ்வளவு வயசு இருக்கும்னு?

ஒரு 55 வயசு இருக்கும் சேட்டா அப்படின்னேன்.

வாய பொளந்துகிட்டு பாக்குறார்!!!!

நாமக்கல் சிபி said...

//தம்பி said...
நான் தியேட்டருக்கு போன நேரம் டிக்கட்டே கிடைக்கல. உடனே பேக்கடிக்காம மறுநாள் ஆட்டைக்கு
3 டிக்கெட் எடுத்துட்டேன். மறுநாள்தான் படத்தை பார்த்தேன். //
அது வீரனுக்கு அழகு...
பொறுத்தார் படம் பார்ப்பார்னு சொல்லாம சொல்லிட்டீங்க

//
நம்ம சீட்டுக்கு பக்கத்தில இருந்த
மலையாளி கேட்டாரு. ஆமா இந்தாளுக்கு எவ்வளவு வயசு இருக்கும்னு?

ஒரு 55 வயசு இருக்கும் சேட்டா அப்படின்னேன்.

வாய பொளந்துகிட்டு பாக்குறார்!!!!
//
55 வயசு இருக்காது. 50 இருக்கும்னு நினைக்கிறேன்

கதிர் said...

//55 வயசு இருக்காது. 50 இருக்கும்னு நினைக்கிறேன்//

அந்த மலையாளி, கமலுக்கு 40 வயசு இருக்கும்ணு நினைச்சாராம்!!

நாமக்கல் சிபி said...

//அந்த மலையாளி, கமலுக்கு 40 வயசு இருக்கும்ணு நினைச்சாராம்!! //

பாத்தா அப்படிதான் இருக்காரு ;)

கதிர் said...

அந்த மலையாளி, கமலுக்கு 40 வயசு இருக்கும்ணு நினைச்சாராம்!! //

//பாத்தா அப்படிதான் இருக்காரு ;)//

நக்கலா? நானும் அதைத்தான் சொல்றேன்.

நம்ம வூட்டுப்பக்கம் போயி பாருங்க! ஒரு குட்டி நியாண்டி அடிச்சிருக்கேன்!

நாமக்கல் சிபி said...

//நக்கலா? நானும் அதைத்தான் சொல்றேன்.
//
நீ சொன்னா நான் சொல்ல கூடாதா???

//
நம்ம வூட்டுப்பக்கம் போயி பாருங்க! ஒரு குட்டி நியாண்டி அடிச்சிருக்கேன்!
//
இதோ வந்து கொண்டே இரூக்கிறேன்

வடுவூர் குமார் said...

அதென்னவோ அந்த கடைசி வரிகளை படிக்கும் போது அது போஸ்டன் பாலாவாகத்தான் இருக்கும் என தோன்றியது.ஏன் தோன்றியது என்றெல்லாம் தெரியாது.
"நேத்து பேசும் போது இவ்வளவு நுணுக்கமாக"-இப்படியிருப்பவர்கள் நான்கு வரி எழுதினாலும் அதனுள்ளும் பல விஷயங்களை அடக்கத்தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

கார்த்திக் பிரபு said...

adhu sari thalai padam padam eppadi iruku?

bala anna pdatahil sujathvaoda nailan kayirai use panni irupadhi sonnar..aanala vikatan vimarsanthil ondrum seidhi illai..and vikatan vimarsanm patheengala?/ mattamana vimarsanam..40 mark romba kammai
sachinku 42 paootadhu niyabama!!

நாமக்கல் சிபி said...

//வடுவூர் குமார் said...
அதென்னவோ அந்த கடைசி வரிகளை படிக்கும் போது அது போஸ்டன் பாலாவாகத்தான் இருக்கும் என தோன்றியது.ஏன் தோன்றியது என்றெல்லாம் தெரியாது.//

இதுக்கு பேரு தான் வடுவூர் குமார் இன்ஸ்டிங்ட் ;)

//
"நேத்து பேசும் போது இவ்வளவு நுணுக்கமாக"-இப்படியிருப்பவர்கள் நான்கு வரி எழுதினாலும் அதனுள்ளும் பல விஷயங்களை அடக்கத்தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
//
சரியாக சொன்னீர்கள்.

நாமக்கல் சிபி said...

கார்த்திக் பிரபு said...
//adhu sari thalai padam padam eppadi iruku?
//
என்னை கேட்டால் தாராளமாக 1 முறை பார்க்கலாம். காக்க காக்கவோட ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். படத்தில் இளமை இல்லை :-(