--------------------------------------1-------------------------------------------
ஈஸிஆர் ரோட்டின் இருளை கிழித்துக் கொண்டு சென்னையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த சிகப்பு நிற மாருதி எஸ்டீம்.
வழக்கத்தைவிட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பாண்டியிலிருந்து சென்னை வரும் சொகுசு பேருந்துகளே பெரும்பாலும் அந்நேரத்தில் பார்க்க முடிந்தது.
வேகமாக சென்று கொண்டிருந்த அந்த எஸ்டீம், தன் வேகத்தை குறைத்து சாலையின் ஓரத்தில் நின்றது. காரின் ஜன்னல் திறந்தது...
"என்னங்க இந்த நேரத்திலும் லிஃப்டா???" காரிலிருந்து கேட்டவருக்கு சுமார் முப்பத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது.
"ஆமாங்க... கொஞ்சம் அவசரமா கோயம்பேடு போகனும். நீங்க சிட்டிக்குள்ள இறக்கிவிட்டுட்டீங்கனா நான் டேக்ஸி பிடிச்சி போயிக்கறேன்"
"நான் அண்ணா நகர்தான் போறேன்... அப்படியே உங்கள கோயம்பேடுல இறக்கி விட்டுடறன். ஏறுங்க!!!"
காருக்குள் ஏறிய பெண்ணிற்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது. அந்த காலத்து காஞ்சனாவை நியாபகப்படுத்தினாள்.
"என்னங்க இந்த நேரத்துல இப்படி தனியா இந்த மாதிரி இடத்துல நின்னுக்கிட்டு இருக்கீங்களே.. அப்படி என்ன அவசரம். காலைல போகக்கூடாதா?"
"இல்லைங்க சேலத்துல இருக்கிற அப்பாக்கு உடம்பு சரியில்ல. நெஞ்சுவலினு போன் வந்துச்சு... சரி எப்படியும் ஏதாவது பஸ் பிடிச்சி போயிடலாம்னு புறப்பட்டுட்டேன்"
"பரவாயில்லைங்க இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் தைரியமா இருக்கீங்க"
"இல்லைனா பொழைக்க முடியாதுங்களே"
"அதுவும் சரிதான்... நீங்க என்ன பண்றீங்க?"
"நான் எம்.எஸ்.ஸி மைக்ரோபயலஜி படிச்சிருக்கேன். இங்க திருவான்மியூர்ல இருக்குற அன்னை ஹாஸ்பிட்டல்ல லேப் டெக்னீஷியனா இருக்கிறேன்"
"ஓ!!! அப்ப நிறைய இரத்தம் பாப்பீங்க போல இருக்கே!!!"
"ஹிம்... இரத்தம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்..."
....
காரில் ஒரு இனம் புரியாத நிசப்தம் நிலவியது.
--------------------------------------2-------------------------------------------
"என்னங்க இப்படி பக்கத்துல இருக்குற பிரெண்ட் வீட்டுக்கு போறன்னு அக்காட்ட சொல்லிட்டு இப்ப எங்கயோ போயிட்டு இருக்கீங்க???"
"கொஞ்சம் பேசாம அமைதியா வா"
"சரி. நம்ம இப்ப எங்க போறோம்???"
"ஊட்டி"
"என்ன ஊட்டியா??? என்னங்க இப்படி பண்றீங்க"
"பின்ன டூ-வீலர்ல ஊட்டி போறோம்னு சொன்னா உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா??? அதனாலதான் பிரெண்ட் வீட்ல லன்ச்க்குன்னு சொல்லி கூப்பிட்டு வந்துருக்கேன். சாயந்திரம் 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிடலாம்... அமைதியா வா"
"இருந்தாலும் நீங்க பண்றது தப்பு.. ஃபிரெண்ட் வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டு எங்க மாமாகிட்ட வண்டி வாங்கிட்டு வந்து இப்படி ஊட்டி போனாம்னு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க"
"இங்க பாரு... நான் காலேஜ் படிக்கும் போதே பிரெண்ட்ஸ் கூட நிறைய தடவை டூ-வீலர்ல ஊட்டி போயிருக்கேன். அப்பவே அவன் அவன் கேர்ள் பிரெண்ட்ஸோட வருவாங்க. நான் மட்டும் எந்த பொண்ணையும் ஏத்தாம தனியா வருவேன். அப்பவே மனசுல தீர்மானிச்சுக்கிட்டேன். கால்யாணம் ஆனவுடனே கண்டிப்பா என் பொண்டாட்டிய வண்டில கூப்பிட்டு வருவேன்னு. இப்பவே 6 மாசம் லேட். நல்ல வேளை உங்க அக்கா வீடு கோயம்பத்தூர்ல இருக்கு"
"இருந்தாலும் யாராவது பாத்து மாமாகிட்ட சொல்லிட்டா"
"அதெல்லாம் யாரும் பாக்க மாட்டாங்க. தெரிஞ்சாலும் உங்க மாமா எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. நான் என் பொண்டாட்டிய தான கூப்பிட்டு போறேன். இந்த மாதிரி பேசாம சந்தோஷமா எதாவது பேசிட்டு வா"
"நீங்க நிஜமாலுமே எந்த பொண்ணையும் கூப்பிட்டு போகலையா???"
"பார்த்தியா!!! இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் சந்தேக புத்தி போகவே போகாது"
--------------------------------------3-------------------------------------------
"உங்க ரெக்கார்ட பாத்தா நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு"
"டாக்டர்... நீங்க சரியா புரிஞ்சிக்க மாட்றீங்க"
"இல்ல. நீங்க சொல்றது எனக்கு புரியுது. எனக்கு என்னுமோ நீங்க நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு.எதுக்கும் நான் என் சீனியர் டாக்டர்கிட்ட கன்ஸெல்ட் பண்ணி சொல்றன். அவர் ஒரு கான்ஃபரன்ஸ்க்கு டெல்லி போயிருக்கார். நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வாங்க... நான் அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிடறேன். அவர் டெஸ்ட் பண்ணா கரெக்டா இருக்கும்னு நான் ஃபீல் பண்றேன்"
"ஓகே டாக்டர். தேங்க்ஸ்"
"ஓகே. அடுத்த வாரம் பாக்கலாம்"
(தொடரும்...)
பாகம்-2 பாகம்-3
20 comments:
இந்த முறை க்ரைமா??
ம்ம்..நடத்துங்க :))
எத்தனை எபிசோட்? சொல்வீங்களா? இல்ல அதுவும் சஸ்பென்சா? :)
நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க.எத்தனை எபிசோட்ல முடியுதுன்னு பாக்கலாம்.
ஊட்டின்னதும் மலரும் நினைவுகள் வந்துடுச்சு:))
கப்பி,
புதுசா எதாவது முயற்சி பண்ணலாம்னுதான் ;)
இன்னும் 1-2ல முடிஞ்சிடும்... போட்டிக்கு என்பதால் பெருசாக வளர்க்க திட்டமில்லை ;))
நன்றி செல்வன்.
தொடர் கதை போல் எழுதா உத்தேசமில்லை. அடுத்த பாகத்தில் முடிந்துவிடும்
//ஊட்டின்னதும் மலரும் நினைவுகள் வந்துடுச்சு:))//
என்ன இருந்தாலும் நம்ம ஏரியா இல்லயா ;)
Hi,
Its going good...
Where is the next part?
Thx a lot
Will post soon ;)
வாங்க உங்களைத் தான் எதிர்பார்த்திட்ருந்தேன்...க்ரைமா கலக்கல் தான்..அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
எல்லாம் உங்களை நம்பி எழுதறதுதான்...
ஏற்கனவே நிறைய நல்ல படைப்புக்கள் வந்திருக்கின்றன... நம்ம ஏதாவது வித்தியாசமா கொடுக்க வேண்டாமா ;)
vettipayal,
can you make the alignment to be left aligned instead of justified. Because of this, your blog is not displayed correctly in Firefox.
Thanks in advance.
e.ko.
PS: Good beginning. Awaiting next part.
PPS: Sorry for the englispees comment. :)
Koths,
I have made the change.
Pls let me know whether u can view it in Firefox now.
Thx for the comment
வித்தியாசமான திகில் தொடரோடு வந்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்... கடைசியில எதுவும் காமெடியா முடிச்சிர மாட்டீங்களே!
ஆவலுடன் காத்திருக்கிறேன்!
ராசுக்குட்டி said...
//
வித்தியாசமான திகில் தொடரோடு வந்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்... //
எல்லாம் ஒரு முயற்சிதான் ;)
//கடைசியில எதுவும் காமெடியா முடிச்சிர மாட்டீங்களே!//
இல்லங்க... நீங்க எல்லாம் காமெடி பண்ணாம இருந்தா சரிதான்
//ஆவலுடன் காத்திருக்கிறேன்!//
மிக்க நன்றி... அடுத்த பாகத்தில் முடித்து விடுகிறேன்
நடத்துங்க... நல்லா இருக்கு...
பாபாஜி,
ஆஹ்ஹா தொடர்கதை வேறயா!!
ம்ம் கலக்குங்க! ராஜேஷ்குமார் நாவல் அதிகம் படிப்பீங்களோ! அவர் உங்க ஊர்தானே?
உதய்,
மிக்க நன்றி
தம்பி,
தொடர்கதையெல்லாம் இல்ல... ரொம்ப பெருசா இருந்த படிக்க முடியாதேனு பிரிச்சி போடறேன்.
ஒரு காலத்துல தினமும் ஒரு நாவல் படிப்பேன்... ராஜேஷ் குமார் நாவல்ல வர விவேக்-ரூபாலா ரொம்ப பிடிக்கும். அப்பறம் தமிழ்ல கிரைம் நாவல் படிக்கறதயே நிருத்திவிட்டேன்...
ராஜேஷ் குமார பாக்கனும்னு ஒரு காலத்துல ரொம்ப ஆர்வமா இருந்தேன். பாக்க முடியல... முயற்சியும் பண்ணல :(
Hi,
Pirivu ....B'lore-la irrukka palapaerooda life ippa ippadi thaan poikittu irrukku...
romba nalla ezhuthee irruntheenga...yedho yen pakkathula irrukkura yen friend-oda kaadhai mathiriyae irrundhuchu...nalla writing skills..
Ithuvum super-ah aaramichirukkkeenga..awaitin for the next part..
Naan oru beginner thaan,So comments il yedhum pilai irrunthal..Manikkavum...
Raji said...
//
Hi,
Pirivu ....B'lore-la irrukka palapaerooda life ippa ippadi thaan poikittu irrukku...
romba nalla ezhuthee irruntheenga...yedho yen pakkathula irrukkura yen friend-oda kaadhai mathiriyae irrundhuchu...nalla writing skills..
//
மிக்க நன்றி.
அப்பறம் என் பேர் பிரிவு இல்லைங்கோ!!!
//
Ithuvum super-ah aaramichirukkkeenga..awaitin for the next part..
//
கதை முடிஞ்சிடுச்சிங்க!!! லிங் கதைக்கு கீழ இருக்கும் பாருங்க!!!
//Naan oru beginner thaan,So comments il yedhum pilai irrunthal..Manikkavum... //
நானும் புதுசுதாங்க!!! பிழையெல்லாம் எதுவும் இல்ல. போட்டு தாக்குங்க ;)
வெட்டி,
உங்க எண் 43-க்கு மாறியிருக்கிறது!?
Boston Bala said...
//வெட்டி,
உங்க எண் 43-க்கு மாறியிருக்கிறது!?
//
ஓ நல்ல வேளை சொன்னீங்க!!! தகவலுக்கு நன்றி...
Post a Comment