தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, July 26, 2006

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II

நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.

காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.

ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!

கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.

ரா.ரா: யார் யாரு???

கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.

கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட...

ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???

கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???
....

2 நிமிடம் கழித்து

கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:

கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.

ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?

கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.

ஜி.பாலையா: ஹாஹாஹா

கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.

காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்...

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ, நியூ யார்க்ல IBMல கூப்டாகோ.... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...

கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...

(வாழைப்பழ ஜோக் அடுத்த பாகத்தில்)....

27 comments:

ஜயராமன் said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

ரசித்துப்படித்து சிரித்தேன்.

நீங்கள் கம்ப்யூட்டர் கம்பனியில் வேலை செய்கிறீர்கள் போலிருக்கு. உங்கள் சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு இன்னும் ருசிக்கும்.

தி.மோ காமெடிக்கு இணையாக கவுண்டரின் இந்த காமெடி காட்சிகளும் உருவாகி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நன்றி

நாமக்கல் சிபி said...

ஜயராமன்,
மிக்க நன்றி.

ஆம் நான் இருக்கும் துறைக்கு தகுந்த மாதிரி சிந்திச்சதுல வந்ததுதான் இந்த ஐடியா.

கவுண்டரின் இந்த காமெடியாலதான் இந்த படம் 300 நாள் ஓடிச்சி.

Vaikunth said...

:)))
//ஐ-கதவு // நல்ல தமிழாக்கம் :)

அது சரி யாரும் பழய சாப்டுவேருக்கு பேரிச்சம்பழம் குடுக்கலயா?
கவுண்டரும் செந்திலும் டை கட்டி கோடிங் செய்வதாக நினைத்தால் :))

நாமக்கல் சிபி said...

lord labakkudoss,
நன்றி.

ஆமாம்...இருந்தாலும் நாங்க பில்ட்-அப் எல்லாம் கொடுக்கமாட்டோம்.

Off-shoreல இருக்கும் போது onsite பற்றி நாங்க இப்படித்தான் சொல்லொட்டு இருப்போம். இங்க வந்தாதான் கஷ்டம் புரியுது. இக்கரைக்கு அக்கரை பச்சை.

நாமக்கல் சிபி said...

வைக்,
////ஐ-கதவு // நல்ல தமிழாக்கம் :)
//
வேற வழியில்லை :-))

//அது சரி யாரும் பழய சாப்டுவேருக்கு பேரிச்சம்பழம் குடுக்கலயா?
//
அந்த அளவுக்கு இன்னும் நாம டெவலப் ஆகல. அதுவும் இல்லாம இதுவே ரொம்ப பெரிசா இருக்கற மாதிரி தோனுது.

//கவுண்டரும் செந்திலும் டை கட்டி கோடிங் செய்வதாக நினைத்தால் :)) //
கவுண்டரை பிராஜக்ட் மேனஜெராக நினைத்தாலே :-)))தான் வருது.

நாமக்கல் சிபி said...

சரளாக்கா,
//என்னை வைத்து கதை எழுதிய வெட்டி பயலை மென்மையாக கண்டிக்கிறேன்:-)
//

நீங்களா இருக்கறதால மென்மையா கண்டிக்கறீங்க, இதே கவுண்டரா இருந்தா "எவண்டா அவன் பேரிக்கா மண்டையன் என்னைப் பத்தி பதிவு போடறது"ன்னு கேட்ருப்பாரு :-)

Anonymous said...

Hi Vetti,
This post is too good

expecting Vazhapazham joke

-Ramesh

Anonymous said...

யாரது பேரிக்கா மண்டையர் என்னைப்பத்தி பதிவு போடறது?

(திட்ட மனசு வரலையேப்பா பாலாஜி:-))

நாமக்கல் சிபி said...

$elvan,
இது என்னது இது? கவுண்டர் பேர்ல நீங்க போட்டிருக்கீங்க?

அப்பறம் பதிவு எப்படினு ஒரு வார்த்தை கூட சொல்லல???

Unknown said...

அதர் ஆப்ஷனை பயன்படுத்தி நான் தான் பின்னூட்டம் இட்டேன் பாலாஜி.கண்டுபிடிப்பீங்களான்னு பார்த்தேன்.:-))

கதை நல்ல சிரிப்பா போகுது.சாப்ட்வேர் உலகில் கரகாட்டத்தை புகுத்தி சொல்லிருக்கீங்க.வாழைப்பழத்தை எப்படி சொல்லுவீங்கன்னு தெரியலை.ரெண்டு டிஸ்க் இருந்துச்சு.அதுல ஒண்ணு இதா இருக்கு..இன்னொண்ணு எங்கேன்னு சொல்லுவீங்களா?:-))

பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் ஜோக்கையும் மறந்துடாதீங்க.சந்தடி சாக்கில் உள்ளே புகுத்திடுங்க:-)

நாமக்கல் சிபி said...

$elvan,
கவுண்டமணி பேரு மேல மவுஸ் வெச்சாலே holyox காண்பிச்சிடுது...

வாழைப்பழம் ஜொக் கொஞ்சம் டெக்னிக்கலா இருக்கும்...நாளைக்கு போட்டுடறேன்.

ஈயம் பித்தளை எப்படியாவது கொண்டுவந்தடுறேன்.

Syam said...

ROTFL...சத்தியமா சிரிப்ப அடக்க முடியல.. :-)

நாமக்கல் சிபி said...

syam,
நல்லா சிரிங்க...அதுதான் நமக்கு வேண்டும்...

Anonymous said...

பின்னீட்டீங்க. வா.ப-வை எதிர் நோக்குகின்றேன்.

நாமக்கல் சிபி said...

பாலாஜி-பாரி,
நன்றி. இன்று வேலை அதிகமாக இருந்ததால் பதிவிட முடியவில்லை. சீக்கிரம் போடுகிறேன்...
தொடர்ந்து படித்து கருத்தை சொல்லவும்

Anu said...

haa haa haa
really..nice.

நாமக்கல் சிபி said...

அனிதா,
நன்றி...தொடர்ந்து படிக்கவும்

கைப்புள்ள said...

இந்தப் பதிவையும் இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்களையும் படிக்கும் போது வாய்விட்டு சிரிக்க முடிந்தது. நன்றாக இருந்தது. தொடரட்டும் கவுண்டர், செந்தில், சரளா டீமின் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் பணி.
:)

நாமக்கல் சிபி said...

கைப்புள்ள,
சங்க தலைவர் வந்து பாராட்டும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

பணி தொடரும்... :-)

G.Ragavan said...

ம்ம்ம்...கலக்கல் வெட்டிப்பயல். கலக்கல்.

அதுலயும் அந்த நாராயண மூர்த்தி சுதா மூர்த்தி ஜோக்....ஹா ஹா ஹா

onsite உக்காந்தாலே ஒரு இதுதான் இல்ல....அதுலயும் lead roleனா கேக்கவே வேண்டாம்.

நாமக்கல் சிபி said...

ராகவன்,
//ம்ம்ம்...கலக்கல் வெட்டிப்பயல். கலக்கல்.
//
மிக்க நன்றி.

//onsite உக்காந்தாலே ஒரு இதுதான் இல்ல....அதுலயும் lead roleனா கேக்கவே வேண்டாம்.//
இக்கரைக்கு அக்கரை பச்சை. வேலை செய்வதைவிட வேலை வாங்குவது கஷ்டமே!!!

அதுவும் நேரில் பார்க்காமல் தொலைபேசியில் விளக்கி வேலை வாங்குவதென்றால் சொல்லவும் வேண்டுமா? தங்களுக்கு தெரியாதா?

நாகை சிவா said...

ரொம்ப நல்லா இருக்கு வெட்டி!
ROFTL

குமரன் (Kumaran) said...

:-))))

நாமக்கல் சிபி said...

நாகை சிவா, குமரன்,
மிக்க நன்றி...

Anonymous said...

very good.Iam a L.board in computers.but I enjoyed the whole.
Keepitup.
pamei.

cheena (சீனா) said...

கரகாட்டக்காரன் படம் பாத்த மாதிரியே இருக்கு - மெயிண்டைன் யாரு பண்றது சூப்பர் ஜோக்கு - கவுண்டரோட ஸ்பெசாலிட்டி ஜோகெ அதுதான்.

ம்ம்ம் நல்லதொரு நகைச்சுவை - வாழ்த்துகள்

Anonymous said...

This is too too good to skip without commenting

Hats off balaji !!!!!!