பேய் படம் பார்க்கறதுனு முடிவு எடுத்ததுக்கு அப்பறம் லாஜிக் பார்க்கக் கூடாது. பேய் டீவில எப்படி வருது, கரண்ட் போனதுக்கு அப்பறம் எப்படி டீவி தெரியும், மாதவன் ஃபோட்டோ மட்டும் ஏன் கோணலா தெரியுது, நாய் ஏன் வீட்டுக்குள்ள வரலை இப்படி எல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. இந்த மாதிரி படத்தை எல்லாம் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.
எங்க ஏரியால யாவரும் நலம் வரலை. 13B தான். இங்கிலிஷ் சப் டைட்டிலோட பார்த்தாச்சு. உங்களுக்கு அட்ரனலின் சுரக்கறது பிடிக்கும்னா இந்த படம் நிச்சயம் பிடிக்கும். பல இடங்களில் உங்களுக்கு அட்ரனலின் சுரப்பது நிச்சயம். அனைத்து பேய் படத்திலும் இருக்கும் பழிவாங்கல் தான் கதை என்றாலும் அதைப் பிடித்த விதம் அருமை. படத்தின் முதல் நாயகன் PC ஸ்ரீராம் தான். கேமராவை எங்க எங்க வெச்சி எடுத்திருக்காருனு யோசிக்கறதுக்குள்ள அடுத்த ஆச்சரியத்துக்கு எடுத்துட்டு போயிடறாரு.
அடுத்து எல்லாப் பேய் படத்துக்கும் பலம் இசை. ம்யூட் பண்ணி பார்த்தா நிறைய பேய் படம் சிரிப்பு படமாகிடும். இந்த படத்துலயும் பின்னனி இசை பெரிய பலம். நிறைய காட்சிகளில் நமக்கு பயத்தை ஏற்படுத்த இந்த இசை முக்கியமான பணியை செய்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி பண்ணாம சில இடங்களில் பின்னனி இசை இல்லாம அமைதி காத்து நமக்கு நம்ம இதய துடிப்பைக் கேட்க வைத்ததற்கு இசை அமைப்பாளரை நிச்சயம் பாராட்டி ஆகணும்.
இது பேய் படம்னாலும் எந்த ஒரு இடத்திலும் முகம் ஃபுல்லா பவுடர் பூசியோ இல்லை உருவம் மோகன் மாதிரி சந்தனம் பூசியோ பயமுறுத்த முயற்சிக்கவில்லை. அங்க நடக்கற ஒவ்வொரு நிகழ்ச்சியும் மாதவன் முகத்துல ஏற்படுத்துற கிலிக்கு குறையாம நமக்கும் ஏற்படுத்துற காட்சி அமைப்புகளுக்காக இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
படத்தோட கதையை எங்கயும் சொல்லி உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு அருமையான அனுபவத்தை கெடுக்கக் கூடாதுனு தான் எந்த காட்சியையும் சொல்லலை. அட்ரனலின் சுரக்கறதை ரசிக்கிற ஆளா நீங்க இருந்தா இந்த படத்தை தவறாம தியேட்டர்ல போய் பாருங்க. நிச்சயம் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். ராத்திரி ஷோக்கு தனியா போயிடாதீங்க.
படத்துல சில பல குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல த்ரில்லர் கொடுத்ததுக்காக அதை எல்லாம் கண்டுக்காம விட்டுடலாம்.
14 comments:
நீங்க இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் பாக்கனுமானு யேசிக்கனும்...அப்ப நான் தான் முதல்லே!!!!!
// ஹர்ஷினி அம்மா - said...
நீங்க இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் பாக்கனுமானு யேசிக்கனும்...அப்ப நான் தான் முதல்லே!!!!!//
வாங்க வாங்க...
நீங்க தான் முதல்ல.
பேய் படம் பாக்கறதுக்கு பயமா இருந்தா நிச்சயம் பார்க்காதீங்க :-)
படம் நல்லா இருந்துச்சு
கை கொடுங்க பாலாஜி.
படம் பார்த்ததும் என் எண்ணங்களும் இதுவேதான். PC க்கு ஒரு சலாம். பின்னணியில ஹாரிஸ் செய்யும் தவற இவரு செய்யாம இருந்ததே நல்லா இருக்கு.
//Boston Bala said...
படம் நல்லா இருந்துச்சு
10:37 PM//
நீங்களும் பார்த்துட்டீங்களா தல.. சூப்பர் :-)
//வடகரை வேலன் said...
கை கொடுங்க பாலாஜி.
படம் பார்த்ததும் என் எண்ணங்களும் இதுவேதான். PC க்கு ஒரு சலாம். பின்னணியில ஹாரிஸ் செய்யும் தவற இவரு செய்யாம இருந்ததே நல்லா இருக்கு.//
வாவ்...
நீங்களும் இதை ரசிச்சீங்களா? சூப்பர்...
போன வாரம் தான் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல திகில் படம்.
இந்த மாதிரி படத்தை எல்லாம் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.//
எல்லாத்துக்குமா? நான் மொக்கைகளுக்கு மட்டும் தான் இந்த சப்டைட்டில் பொருந்தும்னு நினைச்சேன். jus for fun...
:)))
//உருவம் மோகன் மாதிரி சந்தனம் பூசியோ பயமுறுத்த முயற்சிக்கவில்லை//
பூசாமலே... சரி நான் ஒன்னும் சொல்ல வரல! மி த ஸ்கேப்!!!!:)
P.C ஸ்ரீ... Rocking...
//Thamizhmaangani said...
//உருவம் மோகன் மாதிரி சந்தனம் பூசியோ பயமுறுத்த முயற்சிக்கவில்லை//
பூசாமலே... சரி நான் ஒன்னும் சொல்ல வரல! மி த ஸ்கேப்!!!!:)
//
ஆமாங்க மேக் அப் இல்லாமலே பயமுறுத்தி இருக்காங்க ;)
//வண்ணத்துபூச்சியார் said...
P.C ஸ்ரீ... Rocking...
//
Very true
naanum paathutten…chance less movie!!!
// Divyapriya said...
naanum paathutten…chance less movie!!!//
சூப்பர்.. பயமா இல்லையா?
Post a Comment