இந்த விருதை சில மாதத்துக்கு முன்னாடி தங்கச்சி தமிழினி கொடுத்த பொழுது, நன்றிமா... கொஞ்ச நாள் கழிச்சி இதை தொடருகிறேனு சொல்லிட்டேன். முதல் காரணம், அந்த விட்ஜெட். ஏனோ இந்த மாதிரி விட்ஜெட் போட்டுக்கறதுல எனக்கு விருப்பம் இல்லை.
சர்வேசனோட விட்ஜட்டே அவர் கொடுத்த நூறு டாலருக்கு மரியாதை கொடுத்து தான் போட்டு வெச்சிருக்கேன். அதை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் எப்படி இருந்த நீ, இப்படி ஆகிட்டயேனு ஒரு கஷ்டம் வரும். 2006ல ஆறு மாசம் எழுதன அளவுக்கு கிரியேட்டிவா அதுக்கு அப்பறம் நான் எழுதல. அப்பவும் என்னை விட நல்லா எழுதின பல பேர் அவுங்க பேரை போட்டில இருந்து நீக்க சொல்லிட்டாங்க :-)
சரி இப்ப எதுக்கு இந்த எஸ்டீடீ எல்லாம்னு கேக்கறீங்களா? இந்த பட்டாம்பூச்சி விருதுல இருந்து நான் எஸ்கேப் ஆக முயற்சி செஞ்சதுக்கு இது தான் காரணம். அப்பறம் எப்படியும் எல்லாரும் எல்லாருக்கும் விருதை கொடுத்து எல்லார் வலைப்பதிவுலயும் தேவையில்லாம விட்ஜெட்டா இருக்கும்.
இதை சொல்லும் போது பத்தாவதுல எங்க எஸ்டீடீ வாத்தியார் சொன்னது தான் ஞாபகம் வருது. அரசியல் மீட்டீங் பத்தி சொன்னவரு, இந்த பன்னாடை அந்த பன்னாடைக்கு பன்னாடை போத்தும், பதிலுக்கு அந்த பன்னாடை இந்த பன்னாடைக்கு பன்னாடை போத்தும். இது தான் அரசியல்.
அப்பறம் பட்டாம்பூச்சி விருது முடிஞ்சி, தும்பி, ஈ, காக்கா, குருவி (இது நம்ம கார்க்கி ரிசர்வ் பண்ணிருப்பாருனு நினைக்கிறேன்) இப்படி பல விருதுகள் வர ஆரம்பிச்சிடும். அப்பறம் அதையும் எடுத்து டெம்ப்ளேட்ல போட்டு படிக்கிறவங்களை டார்ச்சர் பண்ணனுமா?
அதனால விருது கொடுத்த தங்கச்சி தமிழினி, அண்ணன் கைப்ஸ், நண்பர் ஆ! இதழ்கள் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அப்பறம் இதை என் டெம்ப்ளேட்ல சைட்ல போடாததுக்கு என்ன மன்னிச்சிடுங்க.
இதுக்கு மூணு பேரை மாட்டிவிடணுமாம் (அதெல்லாம் நமக்கு ரொம்ப பிடிக்கும்). கொஞ்சம் யோசிச்சி பார்த்தா, மூணு பேருக்கு கொடுக்கறதை விட, என் மூணு பதிவை விட ஒரு பதிவை நீஈஈஈஈஈஈஈஈளமா எழுதற ஒருத்தருக்கு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அது "Coolest blog I ever know " இல்லை "Lengthiest blog I ever know "
அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே...நீங்க இதை வெச்சி ஒரு பதிவு போடுங்க.
6 comments:
ஆகா ஆகா - எனக்கும் வந்திருக்கு - இதே சிந்தனை தான் எனக்கும் - அதுக்குள்ளே கரப்பான் பூச்சி விருது வேற வந்தாச்சாம் - யாரோ குசும்பனாமுல்ல - ஆரம்பிச்சு வச்சுட்டாரு - ம்ம்ம்ம்ம் - பாப்போம்
நான் எப்படியும் பதிவு போட்டாகணும் - இல்லன்னா கொடுத்தவங்கள அவமானப்படுத்தியதா வதந்தி கெளம்பிடிம்
//cheena (சீனா) said...
ஆகா ஆகா - எனக்கும் வந்திருக்கு - இதே சிந்தனை தான் எனக்கும் - அதுக்குள்ளே கரப்பான் பூச்சி விருது வேற வந்தாச்சாம் - யாரோ குசும்பனாமுல்ல - ஆரம்பிச்சு வச்சுட்டாரு - ம்ம்ம்ம்ம் - பாப்போம்
//
அது குசும்பன் இல்லை. அண்ணாச்சி :-)
//
நான் எப்படியும் பதிவு போட்டாகணும் - இல்லன்னா கொடுத்தவங்கள அவமானப்படுத்தியதா வதந்தி கெளம்பிடிம்//
ஹா ஹா ஹா :-))
தொடரா இத கொடுக்கிறதுல ஒரு அர்த்தமும் இல்லைதான். ஆனால் பொருத்தமா கொடுக்கணும்ன்றத பத்திதான் நானும் எழுதியிருந்தேன். மற்றபடி நீங்க அந்த விட்ஜெட்ட உங்க பதிவில வைக்கணும்னு ஒரு கட்டாயமும் இல்லை. அதனால அதையும் என் பதிவில நான் போடல.
ஆனால் கண்டிப்பாக நீங்களும், சந்தேகமே இல்லாம “the coolest blog i ever know". அதனால இத just ஒரு token of appreciationஆ எடுத்துக்கோங்க. All the best and keep rocking...
:)
//அப்பறம் பட்டாம்பூச்சி விருது முடிஞ்சி, தும்பி, ஈ, காக்கா, குருவி//
:))
//ஆ! இதழ்கள் said...

:)//
தலைவா,
மிக்க நன்றி. இதை நிச்சயம் சந்தோஷமா எடுத்துக்கறேன். நம்மலயும் மதிக்கறாங்களேங்கற சந்தோஷமே பொதும். அதுவும் நீங்க எல்லா பதிவுக்கும் வந்து ஆதரவு கொடுக்கறது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் தான்.
நான் விட்ஜெட்ல போடறது தான் வேண்டாம்னு சொன்னேன். எல்லாரும் போட்டா நல்லா இருக்குமானு ஒரு கஷ்டம். அவ்வளவு தான்.
மத்தபடி உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. இன்னும் பொறுப்பா எழுதனும்னு ஒருவித பயமும் ஏற்படுது.
தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி :-)
// Divyapriya said...
//அப்பறம் பட்டாம்பூச்சி விருது முடிஞ்சி, தும்பி, ஈ, காக்கா, குருவி//
:))//
ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்கமா :-)
Post a Comment