13B படம் பார்த்ததுக்கு அப்பறம் இந்த 13 நம்பர் பத்தியே சிந்தனை ஓடிட்டு இருந்தது.
எங்க ஆபிஸ் கட்டடம் 13 ஃபிளோர். ஆனா 13க்கு பதிலா 14 போட்டிருப்பாங்க. லிப்ட்ல 12க்கு அப்பறம் 14 தான் இருக்கும். போன வாரம் மதியம் சாப்பிட்டு வரும் போது என் டீம் லீட் கூடவே வந்தாரு. அவர் இந்த 13 கான்செப்ட்ல தீவர நம்பிக்கை வெச்சிருக்கறவரு. 13ம் தேதி வெள்ளிக்கிழமை வந்துச்சுனா, அன்னைக்கு எதுவும் வேலை செய்யாதுனு பரிபூர்ணமா நம்புவாரு. அதுவும் மதியம் 2 மணிக்கு மேல எந்த வேலையும் ஆரம்பிக்க வேண்டாம்னு சொல்லிடுவாரு. இது நமக்கு சாதகமா இருக்கேனு விட்டுடுவேன்.
லிப்ட்ல வரும் போது இதைப் பத்தி பேச ஆரம்பிச்சேன். ”ஏன் ரோஜர் இந்த 12க்கு அப்பறம் 14 போட்டிருக்கீங்களே. ஏன் அப்படினு கேட்டேன்”
உடனே அவர், “பேய் லிப்ட்ல ஏறுச்சுனா 13ம் நம்பரைத் தான் தேடும். அப்படித் தேடி, அது இல்லைனா ஏமாந்து போயிடும்” அப்படினு சொன்னாரு.
உடனே நான், “பேய் லிப்ட்ல வராம படிக்கட்டுல வந்துச்சுனா என்ன பண்ணுவீங்கனு” கேட்டேன்.
”ஒரு ஒரு ஃப்ளோர்லயும் படிக்கட்ல ஏறும் போது கதவுக்கு முன்னாடி ஃப்ளோர் நம்பர் போட்டிருக்கும். அங்கயும் 12க்கு அப்பறம் 14 தான். அதனால மேல கீழனு மாறி, மாறி ஏறி, இறங்கி ஏமாந்து போயிடும்”னு சொன்னாரு.
விடுவோமா நாம. “பேய்க்கு இந்த நம்பர் சிஸ்டம் தெரியாம, மம்மி பேய் மாதிரி இருந்தா என்ன பண்ணுவீங்க. இல்லைனா ரோமன் நம்பர் மட்டும் தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க”னு கேட்டேன். மனுஷன் அப்படியே ஷாக் ஆகிட்டாரு.
அப்பறம் ஒரு வழியா சமாளிச்சி, “அந்த பேய் எல்லாம் ஈஜிப்ட்ல தான் இருக்கும். இங்க வெறும் அமெரிக்க பேய் மட்டும் தான் இருக்கும்”னு சொன்னாரு.
”அப்படினா அந்த பேய்க்கு ஏற்கனவே தெரியுமில்லை. 13வது ஃப்ளோரைத் தான் இவனுங்க ஏமாத்தி நம்பர் மாத்தி வெச்சிருக்காங்கனு. அப்ப ஈசியா அந்த ஃப்ளோருக்கு போயிடுமே”னு சொன்னேன்.
“புரியலை”
“இப்ப ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்களே நாளைக்கு செத்து பேயாகறீங்கனு வெச்சிக்கோங்க. அப்ப உங்களுக்குனு இந்த பில்டிங்ல 13வது ஃபிளோர் ஒதுக்கி வெச்சா, உங்களுக்கு 14தான் உண்மையிலே 13னு தெரியுமில்லை. அப்பறம் கரெக்டா வந்துட மாட்டீங்க” அப்படினு சொன்னேன். மனுஷன் ஜெர்க்காகிட்டாரு.
“அடப்பாவி. இதுக்கு என்னைய சாகடிச்சி பேயாக்கிட்டியே. சரி உங்க ஊர்ல இந்த பேய் எல்லாம் எப்படி சமாளிப்பீங்க” அப்படினு கேட்டாரு.
”அப்படி கேளுங்க. இந்த மாதிரி வீட்டுக்குள்ள இல்லை பில்டிங் உள்ள வரக்கூடாதுனா, முன்னாடி வேப்பிலையைக் கட்டணும்”
“வாட் இஸ் தட்”
“அது ஒரு மரத்துல இலை. அதுல லேடி காட் (உம்மாச்சி) இருப்பாங்க. அதை சொருகி வெச்சா பேய் வராது”
“வாவ். திஸ் இஸ் சூப்பர்”
“இது என்ன. இதை விட இன்னும் சூப்பரா எல்லாம் இருக்கு. கைல தாயுத்து கட்டினா கூட பேய் வராது. ஆனா அதுல ஒரு பிரச்சனை இருக்கு”
“என்ன பிரச்சனை”
“அந்த பேயே ஒரு சூப்பர் ஃபிகரா வந்து, ஒரு டான்ஸ் போட்டு, தாயத்தை கழிட்டிடும்”
“ரியலி?”
“இல்லை பெருச்சாளி. எவண்டா இவன். எதை சொன்னாலும் நம்பறான். பேயை பார்க்கறதுக்கும் சில டெக்னிக்ஸ் இருக்கு. தெரியுமா?”
“அது என்ன டெக்னிக்?”
“கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”
“யா யா. தட் இஸ் ட்ரூ”
பல நாடுகள்ல, பல பேய்கள் இருந்தாலும், எல்லாரும் ஒத்துக்கறது இந்த ஒரு பேயை தான்.
சரி சின்ன வயசுல பேய் எப்ப எப்ப நம்ம பின்னாடி வரும்னு சொன்ன சம்பவங்கள்.
1. மதியம் பனிரெண்டு மணிக்கோ, ராத்திரி பனிரெண்டு மணிக்கோ தனியா நடந்து போனா வரும்.
2. சட்டில கறி சோறு எடுத்துட்டு தனியா போனா பின்னாடி வந்து கேக்கும்.
3. பொண்ணுங்க மல்லைகைப் பூ வெச்சிட்டு போனா பின்னாடி வரும்.
4. ராத்திரி சுடுகாட்டுல போய் முட்டையை உடைச்சா, பின்னாடி பொடனியிலே தட்டும். (அங்க போய் எதுக்கு முட்டையை உடைக்கணும்னு தெரியல)
5. ஞாயிறு சாயந்தரம் ராகுகாலத்துல சுடுகாட்டு பக்கமோ, ஆத்து பக்கமோ போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.
6. பேய் பிடிச்சவங்க முடியை எடுத்து ஆலமரத்துலயோ, அரச மரத்துலயோ ஆணி வெச்சி அடிச்சி வெச்சிருப்பாங்க. அதை எடுத்த அந்த ஆவி நம்மல பிடிச்சிக்கும்.
7. கறி சோறு சாப்பிட்டு ராத்திரி தனியா நடந்து போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.
8. பேய் ஓட்டும் போது அங்க போய் நின்னு சிரிச்சா, அந்த பேய் நம்மல வந்து பிடிச்சிக்கும்.
9. சிலுவைப் போடலனா ரத்தக்காட்டேரி வரும்.
10. வயசுப்பசங்க பின்னாடி மோகினிப் பேய் வரும். அது வரது பூ வாசனை, கொலுசு சத்ததுல தெரிஞ்சிக்கலாம் (அது பின்னாடி பசங்க போகாம இருந்தா சரி)
11. இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும். (ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தா அப்படினு புத்திசாலித்தனமா கேள்வி கேக்காதீங்க. உங்களுக்கு தான் முதல்லயே சொல்லிட்டனே.)
62 comments:
பாவம் உங்ககிட்ட மாட்டிக்கிட்டிருக்கிற அந்த பேய்:)
////அப்படினா அந்த பேய்க்கு ஏற்கனவே தெரியுமில்லை. 13வது ஃப்ளோரைத் தான் இவனுங்க ஏமாத்தி நம்பர் மாத்தி வெச்சிருக்காங்கனு. அப்ப ஈசியா அந்த ஃப்ளோருக்கு போயிடுமே”னு சொன்னேன்/
பின்னே நாமளாம் யாரு? இங்கிலீஸ்காரனுக்கே டெரரரிசம் சொல்லிதருவோம்ல :))))
//இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும்//
ஆஹா
தெரியத்தனமா வந்து மாட்டிக்கிட்டேனோ!
//வயசுப்பசங்க பின்னாடி மோகினிப் பேய் வரும். அது வரது பூ வாசனை, கொலுசு சத்ததுல தெரிஞ்சிக்கலாம் //
பாஸ்!
இது சுத்த பொய்
அனேகமா லவ் பண்ணுறவங்கள தான் இப்படி சொல்லி ஏமாத்தியிருப்பாங்களோன்னு தோணுது :))))(லவ் பண்றப்ப மோகினி கேரக்டர் எல்லாம் சுபமா போயி அப்புறம் பிசாசு கேரக்டர்)
//வித்யா said...
பாவம் உங்ககிட்ட மாட்டிக்கிட்டிருக்கிற அந்த பேய்:)
//
ஆஹா !
ஊரிலிருக்கும் அண்ணி ஆஜர் ஆக வேண்டிக்கிறேன் :)))
//“கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”
“யா யா. தட் இஸ் ட்ரூ”///
அம்மணி பக்கத்திலே இல்லைன்னுதானே இப்பிடியெல்லாம் சொல்லிருக்கே.... :)))
//வித்யா said...
பாவம் உங்ககிட்ட மாட்டிக்கிட்டிருக்கிற அந்த பேய்:)//
LOL
ROTFL :D
//பாவம் உங்ககிட்ட மாட்டிக்கிட்டிருக்கிற அந்த பேய்:)//
இதுக்கு ஒரு பெரிய repeat :)
//ரியலி?”
“இல்லை பெருச்சாளி. //
:))))))))
ஏன்ன்ன்ன்ன் ? "வெட்டிபயல்" என்ற பேய் கிட்ட அவர் மாட்டிக்கிட்டாரோ? :))
வெட்டிடீ...
பொம்மாயீஈஈஈஈஈஈஈ பாத்துட்டீங்களா..?
அதுல ஆம்பள பேய் கூட வருது.. :))
ஜாலியா இருந்துச்சு! :)
பாலாஜி,
எனக்கு பேய் பயமெல்லாம் இல்ல. பழகிப்போச்சு; ஹி ஹி ஆனா ஒரு மரியாதை இருக்கு.
கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்//
அண்ணா ஏன் இப்படி:((((
ஆமா அண்ணி இந்த போஸ்ட்ட படிச்சாங்களா????????
அந்த பேயே ஒரு சூப்பர் ஃபிகரா வந்து, ஒரு டான்ஸ் போட்டு, தாயத்தை கழிட்டிடும்//
நல்லா சிரிச்சேன்:))
இல்லை பெருச்சாளி. எவண்டா இவன். எதை சொன்னாலும் நம்பறான்
//
இன்னிக்கி இவர் தலை நல்லா உருளுது போல!!
//“கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”
“யா யா. தட் இஸ் ட்ரூ”
பல நாடுகள்ல, பல பேய்கள் இருந்தாலும், எல்லாரும் ஒத்துக்கறது இந்த ஒரு பேயை தான்.//
உங்களுக்கு ரொம்பத்தான் தெகிரியம்
:))
//இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும்//
எவ்வளவோ பார்த்துட்டோம்.....
இதைப் பார்க்க மாட்டோமா.....
:)))
oru payamthan.
:)
Cheers
Christo
This is bharat....
I'm waiting for your AYAN review......
Post it ASAP....
பொண்ணுங்க மல்லைகைப் பூ வெச்சிட்டு போனா பின்னாடி வரும்
nejamava
நல்லவேளை நான் பின்னூட்டம் போட்டுட்டேன்
///இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும்.///
பதிவ படிச்சதுக்கு இம்மாம் பெரிய தண்டனையா??
இதுக்கு எதுனா தாயத்து கிடைக்குமா??
இப்பதான் ”யாவரும் நலமா” பாத்தேன், இப்ப எல்லாம் பேய் மனுசனை எல்லாம் பிடிக்கறது இல்லை டிவி,மொபைல் இப்படிதான் அதுக்கு பிடிக்குதாம்... அடுத்ததா ஒரு லேப்டாப் தேடிட்டு இருக்காம்... பாத்துக்குங்க!!!!!
/”கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”/
இதையே சொல்லி எத்தனை நாளைக்கு தான் சமளிப்பீங்களோ
// வித்யா said...
பாவம் உங்ககிட்ட மாட்டிக்கிட்டிருக்கிற அந்த பேய்:)//
பதிவைப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது :-)
//ஆயில்யன் said...
////அப்படினா அந்த பேய்க்கு ஏற்கனவே தெரியுமில்லை. 13வது ஃப்ளோரைத் தான் இவனுங்க ஏமாத்தி நம்பர் மாத்தி வெச்சிருக்காங்கனு. அப்ப ஈசியா அந்த ஃப்ளோருக்கு போயிடுமே”னு சொன்னேன்/
பின்னே நாமளாம் யாரு? இங்கிலீஸ்காரனுக்கே டெரரரிசம் சொல்லிதருவோம்ல :))))
1:34 AM//
ஆயில்ஸ்,
அதானே... கேள்வி கேட்டு ட்டெர்ரரைக் கிளப்பறது தான் நமக்கு கை வந்த கலையாச்சே :-)
:)) நல்ல காமெடி..
பயந்து பின்னூட்டம் போட்டுட்டேன்..இதுல பதிமூணாவது கமெண்ட் போட்டவங்க யாரு? பூர்ணிமாவா?
// ஆயில்யன் said...
//இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும்//
ஆஹா
தெரியத்தனமா வந்து மாட்டிக்கிட்டேனோ!//
எப்படி பின்னூட்டம் போட வெச்சேன் பார்த்தீங்களா? எப்படி என் ராஜதந்திரம் :-)
// ஆயில்யன் said...
//வயசுப்பசங்க பின்னாடி மோகினிப் பேய் வரும். அது வரது பூ வாசனை, கொலுசு சத்ததுல தெரிஞ்சிக்கலாம் //
பாஸ்!
இது சுத்த பொய்
அனேகமா லவ் பண்ணுறவங்கள தான் இப்படி சொல்லி ஏமாத்தியிருப்பாங்களோன்னு தோணுது :))))(லவ் பண்றப்ப மோகினி கேரக்டர் எல்லாம் சுபமா போயி அப்புறம் பிசாசு கேரக்டர்)//
இது கிராமத்து பக்கம் சொல்றது... ஆனா அப்படி எந்த மோகினி பேயும் இது வரைக்கும் வந்ததில்லைனு நான் உண்மையை ஒத்துக்கிட்டு தான் ஆகணும் ;)
//இராம்/Raam said...
//“கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”
“யா யா. தட் இஸ் ட்ரூ”///
அம்மணி பக்கத்திலே இல்லைன்னுதானே இப்பிடியெல்லாம் சொல்லிருக்கே.... :)))
2:02 AM//
இல்லை இல்லை...
பதிவைப் படிக்க இண்டர்நெட் கனெக்ஷன் இல்லைங்கற தைரியத்துல தான் ;)
// Divyapriya said...
ROTFL :D
//
நன்றிமா
//
//பாவம் உங்ககிட்ட மாட்டிக்கிட்டிருக்கிற அந்த பேய்:)//
இதுக்கு ஒரு பெரிய repeat :)//
ஓ நோ!!!
//கவிதா | Kavitha said...
//ரியலி?”
“இல்லை பெருச்சாளி. //
:))))))))
ஏன்ன்ன்ன்ன் ? "வெட்டிபயல்" என்ற பேய் கிட்ட அவர் மாட்டிக்கிட்டாரோ? :))
//
நம்ம கிளப்பின டெர்ரர்ல அவர் அப்படி நினைச்சிருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை :-)
//கவிதா | Kavitha said...
வெட்டிடீ...
பொம்மாயீஈஈஈஈஈஈஈ பாத்துட்டீங்களா..?
அதுல ஆம்பள பேய் கூட வருது.. :))//
பார்த்தாச்சே!!!
ஆயிரம் பொம்பளை பேய் வந்தா ஒரு ஆம்பிளை பேய் வருது :-)
//ஆகாய நதி said...
ஜாலியா இருந்துச்சு! :)//
மிக்க நன்றி ஆகாய நதி :-)
//வடகரை வேலன் said...
பாலாஜி,
எனக்கு பேய் பயமெல்லாம் இல்ல. பழகிப்போச்சு; ஹி ஹி ஆனா ஒரு மரியாதை இருக்கு.
//
அண்ணே,
நீங்க பெரிய தைரியசாலி தான் :-)
அனுபவம் பேசுது :-)
//Poornima Saravana kumar said...
கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்//
அண்ணா ஏன் இப்படி:((((
ஆமா அண்ணி இந்த போஸ்ட்ட படிச்சாங்களா????????//
அண்ணி ஊருக்கு போறாங்கனு சொன்னனே நியாபகம் இல்லையா? :-)
//Poornima Saravana kumar said...
அந்த பேயே ஒரு சூப்பர் ஃபிகரா வந்து, ஒரு டான்ஸ் போட்டு, தாயத்தை கழிட்டிடும்//
நல்லா சிரிச்சேன்:))//
நன்றி நன்றி :-)
// Poornima Saravana kumar said...
இல்லை பெருச்சாளி. எவண்டா இவன். எதை சொன்னாலும் நம்பறான்
//
இன்னிக்கி இவர் தலை நல்லா உருளுது போல!!//
ஏதோ நம்மால முடிஞ்சது :-)
வெள்ளை ஆடை, விரித்த கூந்தல், கை நிறைய கண்ணாடி வளையல் (நிச்சயமாக வெள்ளை), முழம் முழமாக மல்லிகைப்பூ, 'ஜல் ஜல்' கொலுசு, பின்னணியில் பொங்கும் வெள்ளைப் புகை--> இதெல்லாம் இல்லைன்னா 'பேய்'ன்னு ஒத்துக்கவே முடியாது.. [-x
ஆஹா... நல்லவேளை நானும் பின் போட்டுட்டேன்....
நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய .....
//பாவம் உங்ககிட்ட மாட்டிக்கிட்டிருக்கிற அந்த பேய்:)//
:)) Ithaan post hijack nu solvaaingalo??
post super vetti.. back to 2006 formaa? :))
/இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும்//
ஆஹா
தெரியத்தனமா வந்து மாட்டிக்கிட்டேனோ!
//ஊரிலிருக்கும் அண்ணி ஆஜர் ஆக வேண்டிக்கிறேன் :)))//
I 2nd in.. he he...
சும்மா... வீட்ல வைப் இல்லாட்டி தான் நிறய பேருக்கு தைரியம் வருது , இப்டி எல்லாம் எழுத... யாராவது அண்ணிக்கு கோல் எடுங்கோ (call)...
அந்த பேயே ஒரு சூப்பர் ஃபிகரா வந்து, ஒரு டான்ஸ் போட்டு, தாயத்தை கழிட்டிடும்//
நல்லா சிரிச்சேன்:)) me too
//எவண்டா இவன். எதை சொன்னாலும் நம்பறான்//
லீடர் எந்த ஊர் ஆள்?
///”கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”///
இத கொஞ்சம் ரிப்பீட் பண்ணுங்க அண்ணிய பக்கத்தில வச்சுட்டு... அடுத்த நாள் "தலைப்புச் செய்தி" நீங்க தான் அண்ண.. டொன் வொரி..
////அப்படினா அந்த பேய்க்கு ஏற்கனவே தெரியுமில்லை. 13வது ஃப்ளோரைத் தான் இவனுங்க ஏமாத்தி நம்பர் மாத்தி வெச்சிருக்காங்கனு. அப்ப ஈசியா அந்த ஃப்ளோருக்கு போயிடுமே”னு சொன்னேன்//
ஓ....வெய்ட் எ மினிட்... நீங்க தான் அந்த ரூம் போட்டு யோசிக்கிற ஆளா..
என் கசின் டென்சனாயிட்டான்...நொய் நொய்னு அழுதிட்டு இருந்தவ திடீர்னு பேய் பிடிச்ச மாதிரி சிரிச்சா அவனுக்கு எப்டி இருக்கும்... பாவம்... அவனுக்கு வேற தமிழ் தெரியாது... வேற மொழி ஆளை அவங்க அம்மா கல்யாணம் பண்ணிட்டதால.. அவனுக்கு நான் இத டிரான்ஸ்லேட் பண்ணி சொல்லி முடிக்க முதல் வயிறு வலி தொடங்கிட்டு... அவ்ளோ சிரிச்சேண்ணா.. ரொம்ப தாங்க்ஸ் வெட்டிண்ணா....
//கறி சோறு சாப்பிட்டு ராத்திரி தனியா நடந்து போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.//
நைட்ல, மரங்கள் எல்லாம் சுவாசிக்கும்.. அதனால, நிறய காபன்டை ஒக்சைட் காத்துல (atmosphere) இருக்கும்.. வேற கெட்ட வாயுக்களும் (வாயு - gas) நைட்ல இருக்கும்.. அதனால தான் நைட்ல, சாப்பாடு கொண்டு போக வேண்டாம்னு சொல்லுவாங்க... அப்டியும் கொண்டு போனா, கரித்துண்டு (charcoal) மேல வச்சு கொண்டு போக சொல்லுவாங்க.. அது சயனைட் வாயுவைக்கூட அப்சோர்ப் (absorb) பண்ணுமாம்... அத சொன்ன எங்க ஆளுங்க எங்க கேப்பாங்க.. சோ பேய்னு வெருட்ட(மிரட்ட) வேண்டியது தான்..
மன்னிக்க வேணும்.. சாதரணமா பேசுறதுனா உங்க பாசை வரும்.. மத்த படி கொஞ்சம் எங்க பாசை தான் வருது.. We use "மெல்ல" to say slowly but, நீங்க "மொள்ள" use பண்ணுவீங்க.. அது வேற prob...
மத்ததுக்கும் ஏதும் explanations இருக்கும்.. யாருக்காவது தெரியுமா?
//Kathir said...
//“கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”
“யா யா. தட் இஸ் ட்ரூ”
பல நாடுகள்ல, பல பேய்கள் இருந்தாலும், எல்லாரும் ஒத்துக்கறது இந்த ஒரு பேயை தான்.//
உங்களுக்கு ரொம்பத்தான் தெகிரியம்
:))//
ஹி ஹி ஹி...
வீட்டு அம்மணி இல்லைனா இப்படி தான் பயங்கர தைரியம் வந்துடும் :-)
//Kathir said...
//இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும்//
எவ்வளவோ பார்த்துட்டோம்.....
இதைப் பார்க்க மாட்டோமா.....
:)))//
:))
//Anonymous said...
oru payamthan.
:)
Cheers
Christo//
கல்யாணம் ஆனா தானா சரி ஆகிடும் :-)
//Anonymous said...
This is bharat....
I'm waiting for your AYAN review......
Post it ASAP....//
தல,
ரிவியூ எழுதற அளவுக்கு எல்லாம் படம் இல்லை. செம்ம மசாலா படம். மசாலா படம் பிடிக்கும்னா பாருங்க.
//gayathri said...
பொண்ணுங்க மல்லைகைப் பூ வெச்சிட்டு போனா பின்னாடி வரும்
nejamava//
ஆமா... ஆனா அந்த பேய் ஆம்பளை பேயா இருக்கும் :-)
//தீப்பெட்டி said...
நல்லவேளை நான் பின்னூட்டம் போட்டுட்டேன்//
இனிமே நீங்க தைரியமா இருக்கலாம் பாஸ் :-)
//உருப்புடாதது_அணிமா said...
///இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும்.///
பதிவ படிச்சதுக்கு இம்மாம் பெரிய தண்டனையா??
இதுக்கு எதுனா தாயத்து கிடைக்குமா??//
கிடைக்கும்.. கொஞ்சம் செலவு அதிகமா ஆகும். பரவாயில்லையா? :-)
//ஹர்ஷினி அம்மா - said...
இப்பதான் ”யாவரும் நலமா” பாத்தேன், இப்ப எல்லாம் பேய் மனுசனை எல்லாம் பிடிக்கறது இல்லை டிவி,மொபைல் இப்படிதான் அதுக்கு பிடிக்குதாம்... அடுத்ததா ஒரு லேப்டாப் தேடிட்டு இருக்காம்... பாத்துக்குங்க!!!!!
//
கல்யாணம் ஆகிடுச்சி இல்லை. இனிமே சமாளிச்சிடலாம் :-)
//
/”கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”/
இதையே சொல்லி எத்தனை நாளைக்கு தான் சமளிப்பீங்களோ//
:-))
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
:)) நல்ல காமெடி..
//
மிக்க நன்றி :-)
//பயந்து பின்னூட்டம் போட்டுட்டேன்..இதுல பதிமூணாவது கமெண்ட் போட்டவங்க யாரு? பூர்ணிமாவா?//
ஆஹா... இப்படி தங்கச்சியை பயப்படுத்தலாமா?
இந்தியால இந்த 13 கான்செப்ட் எல்லாம் ஒத்துவராது :-)
எங்களுக்கே அல்வாவா?
//
11. இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும்.
//
பாஸ்.... என்னதிது கொரளிவித்தை எல்லாம் காட்ட ஆரம்பிச்சுடீங்க?
வெட்டிப்பயல் said...
//Poornima Saravana kumar said...
கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்//
அண்ணா ஏன் இப்படி:((((
ஆமா அண்ணி இந்த போஸ்ட்ட படிச்சாங்களா????????//
அண்ணி ஊருக்கு போறாங்கனு சொன்னனே நியாபகம் இல்லையா? :-)
//
இருங்க இருங்க அண்ணிக்கு ஒரு போனப் போட்டு உங்களை நல்லா மாட்டி விடறேன்:)

13Bல க்ளைமாக்ஸ்ல சொல்றது உண்மை தான் போல :-)
அது சரி.. உங்க டீம் லீட் பேரும் ரோஜர் தானா?? தலைப்பும் அவரைப்பற்றி தானே??
/
வடகரை வேலன் said...
பாலாஜி,
எனக்கு பேய் பயமெல்லாம் இல்ல. பழகிப்போச்சு; ஹி ஹி ஆனா ஒரு மரியாதை இருக்கு.
/
ரிப்பீட்ட்ட்டு
/
வாழவந்தான் said...
//
11. இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும்.
//
பாஸ்.... என்னதிது கொரளிவித்தை எல்லாம் காட்ட ஆரம்பிச்சுடீங்க?
/
ROTFL
:)))))))))))
பேய் பிடிக்கும்னு பயந்து போய் நெறைய கமெண்ட் வந்திருக்குப்பா...
நம்ம ஊர்ல பேய்க்கு பயப்படறவங்க நிறைய பேர் இருக்காங்க போல.. :-)
யப்பா.. எப்பிடி எல்லாம் சொல்லி தப்பிக்க வேண்டி இருக்கு, நான் எஸ்கேப். இன்னிக்கு நைட் எனக்கு பேய் பிடிக்காது. ;-)
Post a Comment