சங்கமம் போட்டிக்கு கதை எழுதறதுக்கு செலவிட்ட நேரத்தை விட புத்தகம் வாங்கறதுக்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டியதா போச்சு. என் கதைக்கு குறைவா மார்க் போட்ட பாவத்துக்கு (ஹி ஹி) பாபாவையும் பிரிச்சி மேஞ்சாச்சு. நமக்கு தெரிஞ்ச எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், அகிலன், சுஜாதா, பாலகுமாரன். அதுவும் சுஜாதா, பாலகுமாரன் கதை போன நவம்பர்ல இந்தியா வந்தப்ப தான் படிச்சேன். அதனால இந்த முறை 1250க்கு என்ன புத்தகம் வாங்கறதுனு தெரியல. சரினு uyirmmai.com ல போய் சுஜாதாவோட குறுநாவல்கள் எல்லாம் செலக்ட் பண்ணேன். அப்பறம் இன்னும் ரெண்டு சுஜாதா புக். பார்த்தா 1250 தாண்டிடுச்சி.
எழுத்துலகுல எப்பவும் நமக்கு வழிகாட்டி (ஹி ஹி. தமிழ்ல எப்படி எழுதறதுனே அவர் தான் எனக்கு சொல்லி கொடுத்தாரு) பாபா தானே. அதான் அவருக்கு லிஸ்ட்டை அனுப்பினேன். அவர் அப்படியே ரிஜக்ட் பண்ணிட்டாரு. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன் (மறைவாய் சொன்ன கதைகள்), ஆதவன், அ.முத்துலிங்கம் (உண்மை கலந்த நாட்குறிப்புகள்) இப்படி கலவையா வாங்க சொன்னாரு. ஜெயமோகன் எல்லாம் புரியாத மாதிரி எழுதுவாரு (நான் கடவுள் பார்த்த எஃபக்ட்) அப்படினு நான் சொன்னவுடனே, அப்படியெல்லாம் இல்லை. படிச்சா நிச்சயம் புரியும். அதனால தவற விடாதேனு சொன்னாரு.
அப்பறம், இதை எல்லாம் நல்லா ஆராய்ச்சி பண்ணிட்டு, கிழக்கு பதிப்பகத்துல என்ன இருக்குதுனு பார்க்கலாம்னு போனேன்.
இந்திரா பார்த்தசாரதி பேர் முதல்ல இருந்தது. நான் கேள்விப்பட்டது குருதிப்புனல் மட்டும் தான். அதுவும் கமல் நடிச்சதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு கேள்விப்பட்டதால ஞாபகம் இருக்கு. வேற எதுவும் தெரியலை. அதனால அதை மட்டும் செலக்ட் பண்ணேன். அப்பறம் பா.ராகவனோட என் பெயர் எஸ்கோபர், நிலமெல்லாம் ரத்தம் செலக்ட் பண்ணேன். அடுத்து இரா.முருகனோட அரசூர் வம்சம், மூன்று விரல், இரா.முருகன் சிறுகதைகள் செலக்ட் பண்ணி அவர்ட்ட கருத்து கேட்டு அனுப்பியிருந்தேன். முன்னாடி அனுப்பன லிஸ்ட்க்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை. இருந்தாலும் அவர் அதைப் பத்தியெல்லாம் எதுவும் சொல்லாம, எல்லாமே நல்ல புத்தகம் தான். தாராளமா வாங்கலாம்னு சொன்னாரு. அரசூர் வம்சம் மட்டும் எடுத்தவுடனே படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம்னு சொன்னாரு.
நாம அப்பவும் விடுவோமா, கடைசியா அவருக்கு ஃபோன் போட்டே பேச ஆரம்பிச்சிட்டேன். அப்படி பேசி கடைசியா கொண்டு வந்த லிஸ்ட் தான் இது.
Ashokamithran -
தண்ணீர் - http://nhm.in/shop/978-81-8368-087-5.html
கரைந்த நிழல்கள் - http://nhm.in/shop/978-81-8368-082-0.html
18வது அட்சக்கோடு - http://nhm.in/shop/978-81-8368-102-5.html
மானசரோவர் - http://nhm.in/shop/978-81-8368-107-0.html
Indira Parthasarathy
வேர்ப்பற்று - http://nhm.in/shop/978-81-8368-152-0.html
சுதந்தர பூமி - http://nhm.in/shop/978-81-8368-121-6.html
தந்திர பூமி - http://nhm.in/shop/978-81-8368-129-2.html
குருதிப்புனல் - http://nhm.in/shop/978-81-8368-072-1.html
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன - http://nhm.in/shop/978-81-8368-137-7.html
Aadhavan
இரவுக்கு முன்பு வருவது மாலை - http://nhm.in/shop/978-81-8368-019-6.html
Devan
ஸ்ரீமான் சுதர்சனம் - http://nhm.in/shop/978-81-8368-303-6.html
ராஜத்தின் மனோரதம் - http://nhm.in/shop/978-81-8368-314-2.html
வாங்கணும்னு லிஸ்ட் போட்டு வாங்காம விட்டதெல்லாம் சொந்த காசுல வாங்கிட வேண்டியது தான். ஆனா முதல்ல வாங்கினதை எல்லாம் படிக்கணும். வீட்டுக்கு எல்லா புத்தகங்களும் வந்துடுச்சாம்.
முக்கியமான விஷயம். இந்த பரிசை தர Oviam Hosting நிறுவனர் கணேஷ் சந்திரா ரொம்ப அக்கறையோட பேசினாரு. அவரும் நிறைய ஆப்ஷன்ஸ் சொன்னாரு. நான் புத்தகம் பாக்கற சமயத்துல Anyindian.com வேலை செய்யலை. எல்லா புத்தகங்களையும் தூக்கிட்டாங்க. (இப்ப மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி). அதனால உயிர்மை, கிழக்கு பதிப்பகம் இப்படி பிரிச்சி வாங்கிக்கறதுனா கூட ஓகே தானு சொல்லி 25$ கிப்ட் கார்ட் கொடுத்துட்டாரு. பக்கா ஜெண்டில் மேன்.
அப்பறம் கிழக்கு பதிப்பகம் பத்தியும் சொல்லி ஆகணும். ஆர்டர் பண்ணவுடனே ஆர்டர் ஸ்டேடஸ் பத்தி மெயில் அனுப்பினாங்க. அதே மாதிரி புத்தகத்தை அனுப்புன உடனே ஒரு மெயில். அதே மாதிரி ஒரு புத்தகத்தோட விலை அதிகமா இருந்ததுனு மீதி காசையும் அனுப்பிட்டாங்க. ஆனா உயிர்மைல அதுக்கு ரெண்டு வாரம் முன்னாடி ரெண்டு புத்தகம் ஆர்டர் பண்ணினேன். என்ன ஆச்சுனே தெரியல. மெயில் அனுப்பி கேட்கணும். சுஜாதாவோட திரைக்கதை எழுதுவது எப்படி? புத்தகம் தான். அடுத்து சினிமா இண்டஸ்ட்ரி தான் நம்ம டார்கெட் :-)
இனிமே புத்தகம் கிடைக்கலனு கடை கடையா ஏறி இறங்கறதுக்கு பதிலா அழகா இப்படி ஆன்லைன்லயே ஆர்டர் பண்ணிடலாம். மூணே நாள்ல வீட்டுக்கு வந்துடும்.
கடைசியா வழக்கம் போல எல்லாருக்கும் நன்றியை சொல்லிடுவோம். போட்டி நடத்தின சங்கமம், பரிசு கொடுத்த oviam hosting, கதைக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த வாசகர்கள், நடுவர்கள், புத்தகங்களை தேர்ந்தெடுக்க உதவிய பாபா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
7 comments:
குருதிப்புனலை விட சுதந்திர பூமியை மிகவும் ரசித்தேன்.
மூன்று விரலும் சூப்பர், ஆனா ஃபைனல் லிஸ்ட்ல மிஸ்ஸிங்.
போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.
தல, என்பெயர் எஸ்கோபர் படிச்சு பாருங்க..
அப்புறம் ரா.முருகனை தவறாம படிங்க..
ஒரு மூத்த பதிவர் எனக்கு அவரை இப்படித்தான் அறிமுகம் செய்தார் “நம் தலைமுறைக்கு அவர் தான் சுஜாதா”
போட்டியில் வென்றதற்க்கு வாழ்த்துகள்
'சுஜாதாவின் திரைகதை எழுதுவது எப்படி' புத்தகத்தை போன வாரம் தான் வாங்கினேன். சும்மா ஒரு ஆர்வம் என்ன தான் இருக்குன்னு பாக்கலாம்னு வாங்கினது :)
நமக்கெல்லாம் இந்திரா சௌந்தராஜன் டைப் புக் தான் பிடிக்குது. ஆனா சுஜாதா தன பேவரைட் .
நான் எப்பவுமே புத்தகம் வாங்குவது www.udumalai.com இல் தான். பிரச்சனை இல்லாத தளம்
வாழ்த்துக்கள்ணே! அடுத்த போட்டிக்கு எண்ட்ரி அனுப்பியாச்சா?
ஒவ்வொண்ணா படிச்சுட்டு புத்தகப் பதிவாப் போட்டு தாக்குங்க :)
ஒரு எளுத்தாளரோட எல்லா புத்தகத்தையும் ஒரே மூச்சில் படிக்காதீர்கள். ஒரு புத்தகம் இவரோடது, ஒரு புத்தகம் அவரோடதுன்னு மாத்தி மாத்திப் படிங்க.
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
Post a Comment