வழக்கமா எல்லாக் கதைப் போட்டிகளிலும் கலந்து வெற்றிகரமா தோத்து நன்றி சொல்லுவேன். அப்ப எல்லாம் நிச்சயம் நம்ம கதை ஜெயிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனா இந்த முறை வித்தியாசமா இந்தக் கதை நிச்சயம் ஜெயிக்காதுனு தான் நினைச்சேன். போட்டிக்கு வேற ஒரு கதை எழுதலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.
கடைசி நாள் வெள்ளிக்கிழமை எப்படியும் எழுதிடனும்னு நினைச்சிட்டு இருந்தேன். கடைசியா பார்த்தா வெள்ளி மதியம் போட்டிக்கு சமர்ப்பிக்கும் நேரம் முடியும்னு இருந்ததை நான் கவனிக்கல. தமிழ்மணம், தேன்கூடு எல்லாம் ESTல தான் சொல்லுவாங்க. இது ISTல இருந்ததை கவனிக்காம விட்டுட்டேன். என் தப்பு தான்.
ஓட்டெடுப்புலயும் நமக்கு பெருசா வராதுனு தெரியும். நடுவர்களுக்கும் நமக்கும் ராசியே இருக்காது. எல்லாம் ஜெயிச்சி வந்து ஒரு தடவை எழுத்துப் பிழை நிறைய இருக்குனு மார்க் குறைச்சி தோத்து போனேன் :-). அதனால இந்த முறையும் அப்படி ஏதாவது நடக்கும்னு நினைச்சேன். பாபா வேற அதுக்கு ஏத்த மாதிரி விமர்சனம் எழுதி கும்மாங்குத்து குத்திட்டாரு. எப்பவும் என் கதைக்கு அவர் சொல்ற அதே கமெண்ட். முடிக்க தெரியாத பாரதிராஜா கதை மாதிரி இருக்கு.
இப்படி நான் நினைச்சதுக்கு எல்லாம் எதிரா நடந்து மக்கள் ஓட்டெடுப்புல சுமாரா மார்க் வாங்கி, நடுவர்கள் தீர்ப்புல நல்ல மதிப்பெண்ணோட கல்லூரிப் பயணம் இனிதே முடிந்தது.
என் கதைல காதலர்கள் பிரியறதும், சில பல சாவுகள் வரதும் தடுக்க முடியாத ஒண்ணா மாறிடுச்சி. வீட்டு அம்மணிக்கிட்ட இதுக்கு எல்லாம் நல்லா திட்டு வாங்கறது வேற. கொலை செய்வது எப்படினு ஒரு கதைல ஒரு பாட்டியை கத்தியால குத்தி கொல்ற மாதிரி ஒரு சீன் இருக்கு. அதை சொல்லி சொல்லி தினமும் எனக்கு திட்டு தான். பாவம் அந்த பாட்டி என்ன பண்ணுச்சு, அதை போய் கொல்ற மாதிரி எழுதறீங்களேனு. என்ன பண்றது. வேற மாதிரி இனிமே எழுத முயற்சி செய்யறேனு சொல்லிருக்கேன்.
அப்படி மத்த கதைல காதலர்கள் பிரியும் போதோ, சாகும் போதோ கொஞ்சம் கூட எனக்கு கஷ்டம் இருக்காது. சிரிச்சிக்கிட்டே எழுதிடுவேன். கதை எப்பவுமே மனசுல இருந்து வராது. அறிவு சொல்றதை தான் கேட்பேன் (யார் அந்த அறிவுனு கேக்கப்படாது). மனசும் கஷ்டப்படாது. ஆனா இந்தக் கதை எழுதும் போது என்னனு தெரியல. கடைசியா கண்ணுல இருந்து தானா தண்ணி வந்துச்சு. ஏதோ மனசே பாரமா ஆகிடுச்சி. இவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேனு இருந்துச்சு.
கதையை எழுதி ஜி.ராக்கிட்ட அனுப்பினா, டோட்டல் டேமேஜ் பண்ணிட்டாரு. அப்பறம் நிறைய இடத்துல எடிட் பண்ண சொல்லி சொன்னாரு. திரும்ப ஒரு நாலைஞ்சி தடவைப் படிச்சி பார்த்து எடிட் பண்ணேன். அப்பறம் ராயல் அண்ணா படிச்சிட்டு, நீ சொல்ற ஃபீலிங் எதுவுமே வரலப்பா. நீ அதை சரியான வார்த்தைல வடிக்கலைனு சொல்லிட்டாரு. நான் மறுபடி படிச்சி பார்த்தாலும் எனக்கு அந்த வலி இருந்துச்சு. எப்பவும் படிச்சி சொல்ற என் ஃபிரெண்ட் தனாக்கு அனுப்பினேன். அவன் நல்லா இருக்குனு சொன்னான். கொஞ்சம் நம்பிக்கை. இருந்தாலும் நான் மனசுல நினைச்ச அளவுக்கு சொல்லலைனு நினைக்கிறேன். படிச்சிட்டு மனசு பாரமாகற அளவுக்கு ஒரு அன்னோன்யத்தை ஏற்படுத்த தவறிட்டேனு நினைக்கிறேன்.
சரி, ஒரு கதைக்கு இவ்வளவு பெரிய கதையானு கேட்காதீங்க. சும்மா சொல்லணும்னு தோனுச்சு.
இது நிஜமா சொல்லணும்னு தோனுச்சு...
ஓட்டு போட்டவர்களுக்கும், நடுவர்களுக்கும், போட்டியை நடத்திய சங்கமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கலந்து கொண்ட அனைவருக்கு என் நன்றிகள். போட்டினா நூறு தடவை தோக்கறதும், ஒரு தடவை ஜெயிக்கறதும் தான் நம்மல மாதிரி வீரனுக்கு அழகு.
இது வரை படிக்க தவறியவர்கள் இங்கே சொடுக்கவும்
49 comments:
வாழ்த்துக்கள் பாலாஜி
//வடகரை வேலன் said...
வாழ்த்துக்கள் பாலாஜி//
மிக்க நன்றிண்ணா...
கதை எப்படினு சொன்னா நல்லா இருக்கும் :-)
வாழ்த்துக்கள் அண்ணே:)
//வித்யா said...
வாழ்த்துக்கள் அண்ணே:)
//
ரொம்ப நன்றி தங்கச்சி...
வாழ்த்துக்கள் பாஸ் :)))
வாழ்த்துகள் தல..
வாழ்த்துக்கள் !!!
உங்களுக்கு வாழ்த்தை வலைச்சரத்துலயே சொல்லியாச்சு தல..வாழ்த்துக்கள்..
//மிக்க நன்றிண்ணா...
கதை எப்படினு சொன்னா நல்லா இருக்கும் :-)//
உங்க பதிவோட வார்த்தைகள்தான் தல.. நல்லா இருந்துச்சுன்னு சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது..ஹஹஹா
YOU DESERVE MORE!
வாழ்த்துகள் பாலாஜி! :)
தொடர்ந்து கலக்குங்க தல.
வெட்டிப்பயல்,
வாழ்த்துக்கள்.முதல் முயற்சி?.நன்றாக
எழுதுகிறீர்கள்.இன்னும் கூட சிறிதாக
எழுத வேண்டும்.சில அற்புதமான வரிகள் இருக்கிற்து.
நல்லா பெரிய தலை வாழை இலைப் போட்டு விட்டுஒரு டம்ளர் மோர் கொடுத்து ”இவ்வளவுதாங்க”என்று அனுப்பி விட்டீர்கள்.சப் என்று ஆகி விட்டது.
குறைகள்:
கல்லூரி பயணம்” ரொம்ப நீ............................ண்டப்ப்யணம்.Heavy reporting instead of
storying.
சின்னதாக எழுதுங்கள்.
எடுப்பு,தொடுப்பு,முடிப்பு அளவாக வைத்துக் கொண்டால் எங்கேயோ போய் விடுவீர்கள்.
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் பாலாஜி.
வாழ்த்துக்கள்
// ஆயில்யன் said...
வாழ்த்துக்கள் பாஸ் :)))//
நன்றி ஆயில்ஸ் :-)
// கார்க்கி said...
வாழ்த்துகள் தல..
1:15 AM//
நன்றிப்பா... அடுத்த போட்டி இன்னும் பலமா இருக்கும்னு நம்பறேன் :-)
//
alwaysdrmz said...
வாழ்த்துக்கள் !!!//
மிக்க நன்றி நண்பா!
// narsim said...
உங்களுக்கு வாழ்த்தை வலைச்சரத்துலயே சொல்லியாச்சு தல..வாழ்த்துக்கள்..//
நன்றி பாஸ்...
நான் நடுவரா இருந்தா உங்களுது தான் ஜெயிச்சிருக்கும் :-)
வாழ்த்துகள்... வெட்டி
//போட்டினா நூறு தடவை தோக்கறதும், ஒரு தடவை ஜெயிக்கறதும் தான் நம்மல மாதிரி வீரனுக்கு அழகு.//
இத அடுத்த அஜித் படத்துக்கு பஞ் டயலாக்கா வைக்கலாமே!:)
வாழ்த்துக்கள் பாலாஜி காரு :-)
வாழ்த்துக்கள் வெட்டி சார்...
வாழ்த்துக்கள் பாலாஜி....
:))
வாழ்த்துக்கள் வெட்டி.
//முதல் முயற்சி?.நன்றாக
எழுதுகிறீர்கள்//
ரவிசங்கர் அண்ணாச்சி.. பதிவுலகத்துக்கு புதுசுங்களா?
வாழ்த்துக்கள் வெட்டி.
கதையும் சூப்பர், Making of story கூட சூப்பர்.
// narsim said...
//மிக்க நன்றிண்ணா...
கதை எப்படினு சொன்னா நல்லா இருக்கும் :-)//
உங்க பதிவோட வார்த்தைகள்தான் தல.. நல்லா இருந்துச்சுன்னு சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது..ஹஹஹா//
தல,
நல்லா இருந்துச்சுனு சொன்னா இந்த கேள்வியே வந்திருக்காதே :-)
வெறும் வாழ்த்துகள் மட்டும் தானே சொன்னாரு :-)
//பரிசல்காரன் said...
YOU DESERVE MORE!//
மிக்க நன்றி தல... உங்க பின்னூட்டம் ரொம்ப நம்பிக்கை கொடுக்குது :-)
//Sridhar Narayanan said...
வாழ்த்துகள் பாலாஜி! :)
தொடர்ந்து கலக்குங்க தல.//
மிக்க நன்றி தல...
இந்தியா போன போது உங்களோட இந்த பின்னூட்டம் தான் மனசுலயே இருந்தது.
//பதிவு எழுதுவது குறைந்தாலும் பத்திரிகைகளில் எழுத முயற்சி செய்யவும். கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.//
தொடர்ந்து ஆதரவு கொடுப்பதற்கு நன்றி :-)
//கே.ரவிஷங்கர் said...
வெட்டிப்பயல்,
வாழ்த்துக்கள்.முதல் முயற்சி?.//
தொடர் முயற்சி ரவிஷங்கர்.
//நன்றாக
எழுதுகிறீர்கள்.இன்னும் கூட சிறிதாக
எழுத வேண்டும்.சில அற்புதமான வரிகள் இருக்கிற்து.
நல்லா பெரிய தலை வாழை இலைப் போட்டு விட்டுஒரு டம்ளர் மோர் கொடுத்து ”இவ்வளவுதாங்க”என்று அனுப்பி விட்டீர்கள்.சப் என்று ஆகி விட்டது.
//
அடுத்த முறை சரி செய்ய முயற்சி செய்கிறேன் பாஸ்.
//குறைகள்:
கல்லூரி பயணம்” ரொம்ப நீ............................ண்டப்ப்யணம்.Heavy reporting instead of
storying.
சின்னதாக எழுதுங்கள்.
எடுப்பு,தொடுப்பு,முடிப்பு அளவாக வைத்துக் கொண்டால் எங்கேயோ போய் விடுவீர்கள்.
//
தங்களோட வெளிப்படையான கருத்திற்கு மிக்க நன்றி ரவி... நிச்சயம் முயற்சி செய்கிறேன்.
//
வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி பாஸ் :-)
//உள்ளத்தில் இருந்து.. said...
வாழ்த்துக்கள் பாலாஜி.//
மிக்க நன்றி உள்ளத்தில் இருந்து :-)
//மகா said...
வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றி மகா :-)
//அறிவிலி said...
வாழ்த்துகள்... வெட்டி
10:46 AM//
மிக்க நன்றி அறிவிலி :-)
// Thamizhmaangani said...
//போட்டினா நூறு தடவை தோக்கறதும், ஒரு தடவை ஜெயிக்கறதும் தான் நம்மல மாதிரி வீரனுக்கு அழகு.//
இத அடுத்த அஜித் படத்துக்கு பஞ் டயலாக்கா வைக்கலாமே!:)//
அஜித்துக்கு நம்ம கதை எழுதும் போது வெச்சிடுவோம்...
//மதுரையம்பதி said...
வாழ்த்துக்கள் பாலாஜி காரு :-)//
மிக்க நன்றி மதுரையம்பதி :-)
//கார்த்தி said...
வாழ்த்துக்கள் வெட்டி சார்...
//
மிக்க நன்றி கார்த்தி.
// Kathir said...
வாழ்த்துக்கள் பாலாஜி....
:))//
மிக்க நன்றி கதிர் :-)
// ILA said...
வாழ்த்துக்கள் வெட்டி.//
மிக்க நன்றி இளா :-)
// மணிகண்டன் said...
வாழ்த்துக்கள் வெட்டி.
கதையும் சூப்பர், Making of story கூட சூப்பர்//
பாராட்டிற்கு மிக்க நன்றி மணிகண்டன் :-)
vaazhthukkal annaa...
வாழ்த்துகள் பாலாஜி!
வாழ்த்துக்கள் பாலாஜி!
நல்லா இரு!
:)
வாழ்த்துகள்.... என் அண்ணன் தான் உங்க வளைப்பூவை அறிமுகம் செய்தான் அன்றில் இருந்து உங்க எலுத்துக்கு ரசிகை நான்.
// Divyapriya said...
vaazhthukkal annaa...//
மிக்க நன்றி தங்கச்சி :-)
//
ராசுக்குட்டி said...
வாழ்த்துகள் பாலாஜி!//
மிக்க நன்றி ராசுக்குட்டி :-)
//
ச்சின்னப் பையன் said...
வாழ்த்துக்கள் பாலாஜி!//
மிக்க நன்றி ச்சி.பை அண்ணே :-)
//நாகை சிவா said...
நல்லா இரு!
:)//
நன்றி புலி :-)
//ஹர்ஷினி அம்மா - said...
வாழ்த்துகள்.... என் அண்ணன் தான் உங்க வளைப்பூவை அறிமுகம் செய்தான் அன்றில் இருந்து உங்க எலுத்துக்கு ரசிகை நான்.//
உங்க அண்ணனுக்கு என் நன்றியை சொல்லிடுங்க ஹர்ஷினி அம்மா.
தங்களுக்கும் என் நன்றி :-)
வாழ்த்துகள் வெட்டி! அடுத்த போட்டியிலும் இதே போல் கலக்கவும்.
Post a Comment