தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, September 03, 2008

ஆடு புலி ஆட்டம் - 19

என்னடா இவ்வளவு சீக்கிரமா எழுந்து வெளிய போயிட்டு இருக்கோம்னு பாக்கறீங்களா? நான் நேத்து ராத்திரி அந்த போன் பேச்சை கேட்டதுக்கு அப்பறம் தூங்கவேயில்லை. படுத்தும் ஏதேதோ சிந்தனை ஓடிட்டே இருக்குது. அதான் ஆறு மணிக்கெல்லாம் அசோக்கை எழுப்பிட்டேன். ஒரு டீ குடிச்சிட்டு வந்தா நல்லா யோசிக்கலாம்னு அவன் தான் சொன்னான். அதான் போயிட்டு இருக்கோம். அதுவும் இந்த பெங்களூர் குளூருக்கு இதமா இருக்கும்.

ஒரு வழியா டீ குடிச்சிட்டு வந்தாச்சுங்க. அசோக் அதை மறுபடியும் கேட்டுட்டு இருக்கான். கேட்டு முடிச்சிட்டான் போல. கொஞ்சம் இருங்க அசோக் ஏதோ பேச வரான்.

"என்ன வெற்றியும் தினேஷும் தானா?"

"ஆமாம் அசோக். அப்படி தான் தெரியுது."

"சரி இப்ப என்ன பண்ணலாம்? இந்த ஆடியோ ஃபைலோட போலிஸ்கிட்ட போயிடலாமா? வெற்றி அவன் ஊருக்கு போறதுக்குள்ள பிடிச்சிடுவாங்க"

"இல்லை. எனக்கு அது சரியாப்படல. எனக்கு ஒரு ஐடியா இருக்கு"

"சொல்லு"

"அவன் பேசும் போது ஏதோ ஒரு CDயை பத்தி பேசினான். அதை பத்தி தினேஷுக்கும் தெரியாதுனு சொன்னான். அதே மாதிரி அது யார் கைலயாவது மாட்டினா கூண்டோட எல்லாரும் மாட்டிக்குவோம்னு சொன்னான்"

"கரெக்ட். அதுல என்ன இருக்கும்னு ஏதாவது கெஸ் பண்ணியா?"

"அதுல என்ன இருக்கும்னு என்னால தெளிவா சொல்ல முடியல. ஆனா அது ஒரு CD இல்லை. நிறைய CD. அதுவும் அந்த CDல தினேஷ்க்கு தான் பிரச்சனைனும் சொன்னான். அதை வெச்சி பொண்ணுங்களை இன்னும் மிரட்டி லம்பா காசு வாங்கலாம்னு சொன்னான்"

"அப்ப அந்த CDயை நாம வாங்கிட்டா அதை வெச்சி சுலபமா அவனுங்களை மாட்டி விட்டுடலாம்"

"கரெக்ட். அதுவுமில்லாம நாம எல்லாம் இதுல சம்பந்தப்பட்டிருக்கோம்னு போலிஸுக்கு சொல்லாமலே அவனுங்களை மாட்டிவிடலாம்"

"ஏன். நாம போலிஸுக்கு போனா என்ன?"

"நாம போனா நமக்கும் பெரிய பிரச்சனை. அப்பறம் வினோதினி அக்காக்கும் பிரச்சனை வரும். வேற வழியில்லைனா நாம அதை பண்ணி தான் ஆகனும். ஆனா இந்த மாதிரி CD கிடைச்சா அதை நாம போலிஸுக்கு நம்ம பேர் சொல்லாமலே அனுப்பினாக்கூட போதும்"

"குட். நானும் பயந்துக்கிட்டே இருந்தேன். சரி அந்த CDயை எப்படி வாங்கறது?"

"வேற வழியில்லை Caller ID spoofing யூஸ் பண்ணி தான் ஆகனும்"

"டேய் R&D ப்ராஜக்ட் எல்லாத்தையும் யூஸ் பண்ண சொல்றீயேடா"

"என்னுமோ நீங்களே கண்டுபிடிச்ச மாதிரி பேசறீங்களேடா. இதுக்கு எல்லாம் எவ்வளவு சர்வீஸ் ப்ரவைடர்ஸ் இருக்காங்கனு தெரியுமில்ல. ஏதோ VOIP யூஸ் பண்ணாம செல்ஃபோன்லயே சாப்ட்வேர் மூலமா பண்ற மாதிரி நீங்க கஸ்டமைஸ் பண்ணிருக்கீங்க. ஞாபகம் வெச்சிக்கோ"

"சரி. இப்ப நமக்கு எதுக்கு அது?"

"வெற்றி செல் ஃபோன்ல இருந்து பண்ற மாதிரி பண்ணா தான் இதை சுலபமா சாதிக்க முடியும். இப்ப அந்த சாப்ட்வேர் யூஸ் பண்ணா நான் வெற்றி ஃபோன்ல இருந்து பண்ற மாதிரி போகும். அந்த குமார் வெற்றி தான் பண்றானு நினைச்சிக்குவான். வெற்றி மாதிரியே நான் பேசிடறேன். "

"சரி. அவன்கிட்ட என்ன பேச போற?"

"அதை நாளைக்கு பார்த்துக்கோ. அதுக்குள்ள உன் செல்ஃபோன்ல அந்த சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணி இன்னைக்கு முழுசா டெஸ்ட் பண்ணிடலாம். நான் வெற்றி மாதிரி பேச இன்னும் கொஞ்சம் ப்ராக்டீஸ் எடுத்துக்கறேன்"

"சரி ஓகே"

........


என்னடா கொஞ்சம் டென்ஷனா இருக்கேனு பாக்கறீங்களா? செல்ஃபோன்ல Caller ID Spoofing நல்லா வேளை செய்யுது. நிறைய டெஸ்டிங் செஞ்சி பார்த்தாச்சு. நானும் வெற்றி மாதிரி நல்லா பேசி பழகிட்டேன். ஆனா இப்ப எதிர்ல இருக்கறவன் என்ன பேசினாலும் பேசி சமாளிக்கனும். ராத்திரி முழுசா வெற்றி செல்ஃபோனுக்கும் பண்ணி பார்த்துட்டேன். அது Not Reachable Areaல தான் இருக்கு. நான் பேசி அவனுக்கு சந்தேகம் வந்தாலும் அவன் உடனே பண்ண முடியாது. இருங்க அசோக் அந்த குமாருக்கு டயல் பண்ணி கொடுக்கறான். ரிங் போக ஆரம்பிச்சிடுச்சி.

"சொல்லு வெற்றி. என்ன ஊருக்கு பத்திரமா போயிட்டயா?"

"பத்திரமா போயிட்டேன் குமார். ஒரு முக்கியமான விஷயம். அது தான் ஃபோன் பண்ணேன்"

"சொல்லு"

"நேத்து உன்னை எல்லா CDயும் காப்பி போட சொன்னனே. அதை போட்டு வெச்சிட்டயா?"

"இல்லையே"

"சரி. அதுல ரெண்டாவது CDயை மட்டும் உடனே காப்பி போடனும்"

"ரெண்டாவதுனா யாரு? அந்த திருச்சி பொண்ணா? பேருக்கூட சசிரேகாவோ என்னுமோ"

"ஆமாம். அதே தான். அந்த பொண்ணுக்கு இப்ப பேசினா சுளையா லட்சக்கணக்குல கறந்துடலாம். அந்த CDயை எடுத்து ஒரு காப்பி போட்டுட்டு போய் தினேஷ்கிட்ட கொடு. அவன் பேசிக்குவான்"

"தினேஷ்கிட்டயா? அவனுக்கு இதை பார்த்தா நம்மல ஒழிச்சி கட்டிட மாட்டானா?"

"பயப்படாத. மீதி எல்லாம் நம்மக்கிட்ட தான் இருக்கு. நான் சொல்றதை கேளு. மீதி எல்லாம் நான் நேர்ல வந்து சொல்றேன். மத்த CDயை எல்லாம் பத்திரமா ஒளிச்சி வெச்சிடு. சரியா?"

"சரி"

"அப்பறம். சொல்ல மறந்துட்டேன். அந்த CDல இங்கிலீஷ்ல நான் சொல்றதை எழுதி கொண்டு போய் கொடு. அப்ப தான் இன்ஸ்டிடியூட்ல யாருக்கும் சந்தேகம் வராது"

"இன்ஸ்டிடியூட்லயா கொண்டு போய் கொடுக்கறது?"

"ஆமாம். நேரமில்லை. அந்த பொண்ணு சீக்கிரம் பெங்களூரைவிட்டு போயிடும். அதான். சரி நான் சொல்றதை ஒரு பேப்பர்ல எழுதிக்கோ. அப்பறம் அந்த பையனை அதை CDல எழுத சொல்லி கொண்டு போய் கொடு"

"சரி"

"ஓ ஆர் ஏ சி எல் இ. திரும்ப சொல்லு"

"ஓ ஆர் ஏ சி எல் இ"

"சரி. நான் நாளைக்கு உனக்கு ஃபோன் பண்றேன். அது வரைக்கும் நீ பண்ணாத. நான் வெளிய போறேன். அங்க என்னால இதை பத்தி பேச

முடியாது. தினேஷ் இதை எல்லாம் பாத்துக்குவான்."

"சரி வெற்றி"

"நான் வெச்சிடறேன்.அப்பறம் பார்க்கலாம்"

"சரி"

ஆண்டவா. ஒரு வழியா பேசி முடிச்சிட்டேங்க. நாங்க திட்டம் போட்ட மாதிரி எல்லாம் நல்ல படியா நடக்கனும். இது வரைக்கும் எல்லாம் சரியா நடக்குது. இது மட்டும் நடக்கலனா இவ்வளவு பண்ணது வேஸ்ட். சரி இப்ப உடனே இன்ஸ்டிடியூட் கிளம்பனும்.

ஒரு வழியா இன்ஸ்டிடியூட் வந்து சேர்ந்தாச்சிங்க. நித்யா நான் ஃபோன் பேசறதுக்கு முன்னாடியே இன்ஸ்டிடியூட் வந்துட்டா. யாராவது தினேஷ்கிட்ட CD கொடுத்தா அவளை போய் வாங்கி வைக்க சொன்னேன். இன்னும் வரலைனு சொல்லிட்டா. இனிமே தான் வருவாங்க போல.

இருங்க யாரோ ஒருத்தன் வரான். அவனை தினேஷ் பார்த்ததும் டென்ஷனா வெளிய போறாரு. அவனை முறைச்சிக்கிட்டே போறாரு. அவன் அந்த CD கவரை ஏதோ சொல்லி கொடுத்துட்டு வேகமா போயிட்டான். அனேகமா "வெற்றி கொடுக்க சொன்னா"னு சொல்லியிருப்பான்.

இருங்க ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சி வாங்கிட்டு வரேன்.

தினேஷ் அந்த CDயை பார்த்துட்டு குழப்பமாவே இருக்கான். இருங்க போய் பேசறேன். அதுக்கெதுக்கு கூட நித்யாவும்னு யோசிக்கறீங்களா? பொண்ணுங்க முன்னாடி எல்லாரும் நல்லவனா தான் இருப்பாங்க. இருங்க அவன் பக்கத்துல போயாச்சு

"சார்"

"என்னப்பா?"

"வெற்றி சார்கிட்ட ஆரக்கிள் CD கேட்டிருந்தோம். புதுசா எழுதி தரேனு சொல்லியிருந்தாரு. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணி உங்ககிட்ட கொடுத்திருக்கேன். வாங்கிக்கோங்கனு சொன்னாரு"

தினேஷ் எங்களை சந்தேகமா பார்க்கிறானு அவன் கண்ணுல தெரியுது...

(ஆட்டம் தொடரும்...)

46 comments:

Divya said...

first aa????////

Divya said...

post padichutu varein.....:))

இவன் said...

நான்தான் 1stஆ?? இருங்க வாசிச்சிட்டு வாரேன்

Rajkumar said...

Naan first illaiyaa? :-(

Ok, Me the Thirdu!!!

இவன் said...

ஆஹா திவ்யா முந்திகிட்டாங்களே..... ங்ண்ணா கதை சூப்பரா போகுதுங்கண்ணா... அப்ப்டியே அடுத்த பாகத்தையும் இன்னைக்கே முடிஞ்சா போட்டுடுங்க... ஹி ஹி ஹி

வெட்டிப்பயல் said...

//Divya said...

first aa????////

ஆமாம்மா.... நீ தான் முதல் :)

வெட்டிப்பயல் said...

// Divya said...

post padichutu varein.....:))//

கதை ஓகேவா போகுதா?

வெட்டிப்பயல் said...

//இவன் said...

நான்தான் 1stஆ?? இருங்க வாசிச்சிட்டு வாரேன்//

நீங்க ரெண்டாவது... படிச்சி கதை எப்படி போகுதுனு சொல்லுங்க :)

வெட்டிப்பயல் said...

//Rajkumar said...

Naan first illaiyaa? :-(

Ok, Me the Thirdu!!!//

ஆமாம் ராஜ்குமார்... நீங்க தான் மூணாவது... படிச்சி சொல்லுங்க :)

வெட்டிப்பயல் said...

// இவன் said...

ஆஹா திவ்யா முந்திகிட்டாங்களே..... ங்ண்ணா கதை சூப்பரா போகுதுங்கண்ணா... அப்ப்டியே அடுத்த பாகத்தையும் இன்னைக்கே முடிஞ்சா போட்டுடுங்க... ஹி ஹி ஹி//

நீங்க தான் முதல்ல கருத்து சொல்லியிருக்கீங்க :)

இப்பவே மணி 1:40 AM :)

மங்களூர் சிவா said...

okies
கலக்கல்!

Anonymous said...

kadhai sama thrillinga pogudhu..indha maadhiri suspense koduthu thodarum pottuteengale !!

Dinesh ku kandipa sandhegam vandhrukumnu nenaikaren..namma hero epdi manage panna poraarnu theriliye :-)

adutha pagudhi dhaan kadaisiyaa ??

Janani

இவன் said...

//நீங்க தான் முதல்ல கருத்து சொல்லியிருக்கீங்க :)

இப்பவே மணி 1:40 AM :)//


சரி அடுத்த பகுதி எப்போ???

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

okies
கலக்கல்!//

மிக்க நன்றி சிவா :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

kadhai sama thrillinga pogudhu..indha maadhiri suspense koduthu thodarum pottuteengale !!

Dinesh ku kandipa sandhegam vandhrukumnu nenaikaren..namma hero epdi manage panna poraarnu theriliye :-)

adutha pagudhi dhaan kadaisiyaa ??

Janani//

மிக்க நன்றி ஜனனி...

அடுத்த பகுதியோட முடியும்னு நினைக்கிறேன். தேவைப்பட்டால் இன்னொரு பகுதி போகலாம் :)

வெட்டிப்பயல் said...

//இவன் said...

//நீங்க தான் முதல்ல கருத்து சொல்லியிருக்கீங்க :)

இப்பவே மணி 1:40 AM :)//

சரி அடுத்த பகுதி எப்போ???//

நாளை :)

Unknown said...

சூப்பரா போகுது வெட்டி, சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்க...

விஜய் ஆனந்த் said...

ஜூப்பரப்பு!!!!

இன்னும் 2 பகுதிகள்ல கதை முடியுதா??? அப்போ அடுத்ததுல வில்லன்களை மாட்டி வுட்டுட்டு கடைசி பகுதில உங்க ஸ்டைல் ரொமான்ஸ் + காமெடிதானே????

siva gnanamji(#18100882083107547329) said...

இதுவரையில், பாவப்பட்ட ஆட்டின் ஆட்டம்........
புலியின் ரியாக்க்ஷன் எப்டி இருக்கும்?

Anonymous said...

very thrilling
we had bad experience with training centres in Bangalore ,but not like in ur story
they asked 3 months salary...
they will collect that amount once u placed

this is for people,who are not going to put fake
I dont know what will be for people with fake

I got an offer through them
BUt luckily ,my marriage got fixed and i came here

In our batch total 12 students
5 girls and 7 boys
2 girls including me , said we dont need a job, we didnt pay
already we paid a huge fees(50k i paid for that course)
4 boys and one gal got on their own
one gal(say x)and 3 boys got through them and paid that amount
(that gal got an offer of 14k and she paid 42k+3k(party exp))
still they know where this 4 are working
I always wonder, how they r maintaining database
they have mail contacts too

I heard through X that they will help for job switch over too........

i done this course @ 2004

Rajan said...

eppadinga ungalaala ithellaam mudiyuthu?
Crime writerslaam engeyaavathu odi poi olinjikonga.....

திவாண்ணா said...

skating on thin ice!

Anonymous said...

Hi,

indha CD ellam veliya vitta andha ponnunga life kettu pogadha? ivangalum maataama eppadi? enakku onnum puriyalai. waiting for next episode...

Regards,
Nandakumar G.

Anonymous said...

Thala ....Technicala poonthu vilayadreeinga.....interesting....eagerly waiting for the climax...

Week end oor suthinatha patthi oru kalakkal pathivu podungalen

MSK / Saravana said...

அமர்க்களம் போங்க..

திரைப்படமா கூட எடுக்கலாம் இந்த கதையை..

வெட்டிப்பயல் said...

// Raja said...

சூப்பரா போகுது வெட்டி, சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்க...//

மிக்க நன்றி...
இன்னைக்கு போட்டுடறேன் ராஜா :)

வெட்டிப்பயல் said...

// விஜய் ஆனந்த் said...

ஜூப்பரப்பு!!!!

இன்னும் 2 பகுதிகள்ல கதை முடியுதா??? அப்போ அடுத்ததுல வில்லன்களை மாட்டி வுட்டுட்டு கடைசி பகுதில உங்க ஸ்டைல் ரொமான்ஸ் + காமெடிதானே????//

விஜய் ஆனந்த்,
சூப்பர்... ஆனா எது எப்படி நடக்குதுங்கறது தான் முக்கியம் :)

வெட்டிப்பயல் said...

// siva gnanamji(#18100882083107547329) said...

இதுவரையில், பாவப்பட்ட ஆட்டின் ஆட்டம்........
புலியின் ரியாக்க்ஷன் எப்டி இருக்கும்?//

பாக்கலாம்... புலி என்ன ரியாக்ட் பண்ணுதுனு :)

Anonymous said...

mr. vetti!!! vettiya office'la code adikratha vittutu please olungaaa urupudiyaaa adutha paagatha ezhuthi mudichu seekiram veliyudunga.. tension thaanga mudiyellah..

ivan
vetti rasigar peravai
chicago

Divya said...

\\// Divya said...

post padichutu varein.....:))//

கதை ஓகேவா போகுதா?\\

கதை ஓகேவா போகுதாவா?????? கதை சூப்பரு த்ரிலிங்கா போகுதுண்ணா!!

[நேத்து நைட் ஃப்ர்ஸ்ட் கமெண்ட் போட்டுட்டு பதிவை படிச்சுட்டு , லேட் ஆகிடுச்சுன்னு கமெண்ட் போடாமா போய்ட்டேன்...ஸாரி அண்ணா:(]

Divya said...

\தினேஷ் எங்களை சந்தேகமா பார்க்கிறானு அவன் கண்ணுல தெரியுது...\\

தினேஷ் சுதாரிச்சுட்டான்னா.....வம்பாச்சே:(

பசங்க மாட்டிக்க்காம இருக்கனும்....திக் திக் னு இருக்கு:(

Divya said...

க்ரைம் நாவல் ரேஞ்சுக்கு போய்ட்டு இருக்கு ....தொடருங்க அண்ணா, நெக்ஸ்ட் பார்ட்டுக்காக வெயிட்டீங்க:))

வெட்டிப்பயல் said...

/ Anonymous said...

very thrilling
we had bad experience with training centres in Bangalore ,but not like in ur story
they asked 3 months salary...
they will collect that amount once u placed

this is for people,who are not going to put fake
I dont know what will be for people with fake

I got an offer through them
BUt luckily ,my marriage got fixed and i came here

In our batch total 12 students
5 girls and 7 boys
2 girls including me , said we dont need a job, we didnt pay
already we paid a huge fees(50k i paid for that course)
4 boys and one gal got on their own
one gal(say x)and 3 boys got through them and paid that amount
(that gal got an offer of 14k and she paid 42k+3k(party exp))
still they know where this 4 are working
I always wonder, how they r maintaining database
they have mail contacts too

I heard through X that they will help for job switch over too........

i done this course @ 2004//

இதே மாதிரி கொடுமையை எங்க பசங்களும் அனுபவிச்சிருக்காங்க :(

வெட்டிப்பயல் said...

//Rajan said...

eppadinga ungalaala ithellaam mudiyuthu?
Crime writerslaam engeyaavathu odi poi olinjikonga.....//

ஆஹா... நாம எல்லாம் சும்மா பொழுது போகறதுக்கு எழுதறவங்கங்க...

இருந்தாலும் பாராட்டுக்கு மிக்க நன்றி :)

வெட்டிப்பயல் said...

//திவா said...

skating on thin ice!//

ஹிம்ம்ம்ம்

வெட்டிப்பயல் said...

//Hi,

indha CD ellam veliya vitta andha ponnunga life kettu pogadha? ivangalum maataama eppadi? enakku onnum puriyalai. waiting for next episode...

Regards,
Nandakumar G.//

இந்த CDல என்ன இருக்குனு நமக்கு தெரியும்... அவுங்களுக்கு தெரியுமா? :)

Anonymous said...

yes vetti
I passed out in 2002
we struggled hard to get placed
for that reason only we joined in some training centres...
Mostly 90% of my classmates did Mainframe course @ chennai ,Nugambakkam
Myself did RTOS @ Bangalore :)....(
thala vidhi yarai vitathu...electronics sidenu buildup)..These training centres utilised people like these to earn money

வெட்டிப்பயல் said...

//Anbu said...

Thala ....Technicala poonthu vilayadreeinga.....interesting....eagerly waiting for the climax...

Week end oor suthinatha patthi oru kalakkal pathivu podungalen//

டெக்னிக்கலா? ஆஹா...

அதான் சீக்கிரம் முடியப்போகுதே :)

ஊர் சுத்தினது தானே... எழுதிட்டா போச்சு :)

வெட்டிப்பயல் said...

//Saravana Kumar MSK said...

அமர்க்களம் போங்க..

திரைப்படமா கூட எடுக்கலாம் இந்த கதையை..//

நீங்க தயாரிக்க ரெடினா நான் இயக்க ரெடி :)

வெட்டிப்பயல் said...

// LOLLU said...

mr. vetti!!! vettiya office'la code adikratha vittutu please olungaaa urupudiyaaa adutha paagatha ezhuthi mudichu seekiram veliyudunga.. tension thaanga mudiyellah..

ivan
vetti rasigar peravai
chicago//

ஆஹா...

அநியாய ஆணியா இருக்குங்க... இதுக்கு பதில் சொல்றதுக்கே மூணு மணி நேரமாகிடுச்சே பாருங்க :)

வெட்டிப்பயல் said...

//Divya said...

\\// Divya said...

post padichutu varein.....:))//

கதை ஓகேவா போகுதா?\\

கதை ஓகேவா போகுதாவா?????? கதை சூப்பரு த்ரிலிங்கா போகுதுண்ணா!!
//
ரொம்ப டாங்கிஸ்மா...

// [நேத்து நைட் ஃப்ர்ஸ்ட் கமெண்ட் போட்டுட்டு பதிவை படிச்சுட்டு , லேட் ஆகிடுச்சுன்னு கமெண்ட் போடாமா போய்ட்டேன்...ஸாரி அண்ணா:(]//

இதுல என்னமா இருக்கு...

வெட்டிப்பயல் said...

// Divya said...

\தினேஷ் எங்களை சந்தேகமா பார்க்கிறானு அவன் கண்ணுல தெரியுது...\\

தினேஷ் சுதாரிச்சுட்டான்னா.....வம்பாச்சே:(

பசங்க மாட்டிக்க்காம இருக்கனும்....திக் திக் னு இருக்கு:(//

அதான்... பார்க்கலாம். என்ன நடக்குதுனு...

வெட்டிப்பயல் said...

//Divya said...

க்ரைம் நாவல் ரேஞ்சுக்கு போய்ட்டு இருக்கு ....தொடருங்க அண்ணா, நெக்ஸ்ட் பார்ட்டுக்காக வெயிட்டீங்க:))//

நெக்ஸ்ட் பார்ட்ல முடியும்னு நினைக்கிறேன்.. பார்க்கலாம்மா...

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

yes vetti
I passed out in 2002
we struggled hard to get placed
for that reason only we joined in some training centres...
Mostly 90% of my classmates did Mainframe course @ chennai ,Nugambakkam
Myself did RTOS @ Bangalore :)....(
thala vidhi yarai vitathu...electronics sidenu buildup)..These training centres utilised people like these to earn money//

ஆமாம் நண்பரே. என் நண்பன் கூட RTOS தான் பண்ணான். இன்ஸ்டிடியூட் பேர்கூட Cranesனு நினைக்கிறேன் :)

யாத்ரீகன் said...

Vetti.. i thought just now the story is getting to heatenup .. ipo poi 1 or 2 parts-la mudinjirum-nu solreengaley :-( i thought it'l go to another 9/10 parts..

வெட்டிப்பயல் said...

// யாத்ரீகன் said...

Vetti.. i thought just now the story is getting to heatenup .. ipo poi 1 or 2 parts-la mudinjirum-nu solreengaley :-( i thought it'l go to another 9/10 parts..//

யாத்ரீகன்,
கதையை இழுக்கனும்னு ஆசையில்லை... மக்கள் எப்படா முடியும்னு நினைக்கறதுக்குள்ளயே முடிக்கனும்னு ஆசைப்பட்டேன்.. ஒத்து வரும்னு நினைக்கிறேன் :)

இதுக்கு அப்பறம் ஒரு அட்டகாசமான தொடர் கதை இருக்கு.. முற்றிலும் வித்யாசமான அப்படினு தாராளமா போடலாம் :)