தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, August 16, 2006

கோழியின் அட்டகாசங்கள் - 4

ஒரு வழியாக டிகிரி முடிச்சி கோழி பெங்களூர் வந்து சேர்ந்தான்.

கோழியும், OPயும் பிரௌசிங் சென்டர் சென்று வந்தார்கள்.

OP: டேய், இன்னைக்கு பிரௌசிங் சென்டர்ல கோழி என்ன பண்ணான் தெரியுமா???

நான்: என்ன பண்ணான்?

கோழி: டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லை... இவன் கதைவிடறான்.

OP: இல்லை இல்லை உண்மைதான். கோழி தனியா ஒரு கேபின்ல உட்கார்ந்து பிரௌசிங் பண்ணிட்டு இருந்தான். சரி தனியா என்ன பண்றான்னு எட்டிப் பார்த்த CD-ROMஓட உள்ளே, வெளியே விளையாடிட்டு இருந்தான். டேய் கோழி என்னடா பண்றனு கேட்டேன். அதுக்கு "Click here to get a free DVD"னு ஒரு லிங் இருந்துச்சி, அதை கிளிக் பண்ணிட்டு DVD வரும்னு CD - ROMல செக் பண்ணிட்டு இருந்தான்.

கோழி: டேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஏண்டா DVD போய் CD - ROMல வருமா??? DVD ROMஆ இருந்தா வந்திருக்கும்.

OP: கேளுடா!!! DVD ROMஆ இருந்தா வந்திருக்குமாம் :-)... இதை சொல்லிதான் நான் அவனை சமாதானப்படுத்திக் கூப்பிட்டு வந்தேன்....

ஒரு வாரத்திற்குள் கோழி C படிக்க ஆரம்பித்துவிட்டான்.

Swap two numbers... இதை கோழிக்கு OP சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தான்.

OP: a, b, c மூணு வேரியபுல்ஸ் (Variables)
இப்ப என்ன பண்ணனுமா a ல இருக்கற வேல்யூ b க்கு வரணும். ஒகே வா?

கோழி: ஹிம்... ஓகே

OP:
இது தான் லாஜிக்.
c=a;
a=b;
b=c;
புரியுதா???

கோழி திருதிருன்னு முழிச்சிட்டு இருந்ததை பார்த்த இருமி சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சான்.

இருமி: டேய் கோழி, உன் 2 கையை நீட்டு.

கோழி கையை நீட்டினான்.

இருமி ரெண்டு கையிலும் 2 பந்தை கொடுத்து...

இருமி: இப்ப இந்த கைல இருக்கிற பந்து அந்த கைக்கு வரணும்... அந்த கைல இருக்கிற பந்து இந்த கைக்கு வரணும். எப்படி மாத்துவ?

கோழி: அப்படியே மாத்திக்க வேண்டியதுதான்... (கோழி ரெண்டு கைல இருக்கற பந்தையும் அப்படியே மாத்திக்கிட்டான்)

இருமி: அப்படியெல்லாம் மாத்தக் கூடாது. இரு... இப்ப உன்னோட இந்த கை- i , அந்த கை - j, என்னொட இந்த கை - K... இப்ப உன் கை-i ல இருக்கிற பந்தை என் கை-K க்கு மாத்து. அப்பறம் உன் கை-j ல இருக்கிற பந்தை i-க்கு மாத்து...
இப்ப என் கை-K ல இருக்கிற இந்த பந்தை உன் கை-jக்கு மாத்து...
இப்ப பந்து ரெண்டும் மாறிடுச்சா???

கோழி: ஆமாம்டா....

இருமி: இப்ப புரியுதா....

கோழி: உம்ம்ம்.. புரிஞ்சிடுச்சி

கோழி போய் பெட்ல படுத்துட்டு மேல விட்டத்தைப் பார்த்து யோசிச்சிக்கிட்டு இருந்தான்.

இருமி: OP!!! கோழி ரொம்ப யோசிச்சிக்கிட்டு இருக்கான். எனக்கு அவனுக்கு புரிஞ்சிதானு தெரியல...

10 நிமிஷம் கழிச்சி கோழி வெளில வந்தான்...

கோழி: OP பரதேசி நாயே.... a,b,c ன்னு சொன்னா யாருக்காவது புரியுமா??? இனிமேவாது i, j, kனு சொல்லிக் கொடு... புரிஞ்சிதா???

:-))))))

அட்டகாசங்கள் தொடரும்...

11 comments:

Syam said...

அதான OP க்கு ஒன்னுமே தெரியல...C சொல்லி குடுக்கனும்னா i,j,k வெச்சு சொல்லி தராம கோழிய தப்புசொன்னா எப்படி :-)

நாமக்கல் சிபி said...

Syam said...
//அதான OP க்கு ஒன்னுமே தெரியல...C சொல்லி குடுக்கனும்னா i,j,k வெச்சு சொல்லி தராம கோழிய தப்புசொன்னா எப்படி :-) //
கோழிக்கு சொல்லி கொடுக்க நீங்க தான் சரியான ஆள்னு நினைக்கிறேன் :-))

கதிர் said...

ஹா ஹா ஹா!!:-)

Unknown said...

பாலாஜி

கோல்டி பதிவும் இதுவும் படித்தேன்.மிகவும் தேர்ந்த எழுத்தாளராக நீங்கள் உருவாகி வருவது தெரிகிறது.மிகவும் சுவையாக,அருமையாக எழுதுகிறீர்கள்.

அன்புடன்
செல்வன்

நாமக்கல் சிபி said...

தம்பி,
நல்லா சிரிங்க... அதுதான் நமக்கும் வேணும் :-)

நாமக்கல் சிபி said...

செல்வன் said...
//
பாலாஜி

கோல்டி பதிவும் இதுவும் படித்தேன்.மிகவும் தேர்ந்த எழுத்தாளராக நீங்கள் உருவாகி வருவது தெரிகிறது.மிகவும் சுவையாக,அருமையாக எழுதுகிறீர்கள்.

அன்புடன்
செல்வன்
//

செல்வன்,
மிக்க நன்றி.

நானே உங்ககிட்ட பதிவ படிச்சிங்களானு கேக்கலாம்னு இருந்தேன், சரி எப்படியும் நைட்டுக்குள்ள படிச்சிடுவீங்கனு ஒரு நம்பிக்கை இருந்தது. இப்ப தான் ஒரு சந்தோஷம்...

Anonymous said...

It's realy good.... ha..ha..ha.. :)))))
Karvendan

Unknown said...

ஆமா அந்த கோழி இப்ப என்ன பன்றாரு? நீங்க் அடிச்ச கூத்துக்கு நொந்து 65 ஆயிருப்பாரே?

:))
:)))
:))))
:)))))
:))))))))))))))))))

நாமக்கல் சிபி said...

Karvendan,
நல்லா சிரிங்க...

மகேந்திரன்.பெ said...
//ஆமா அந்த கோழி இப்ப என்ன பன்றாரு? நீங்க் அடிச்ச கூத்துக்கு நொந்து 65 ஆயிருப்பாரே?//
அடுத்த பகுதியில கோழியைப் பத்தி முழு விவரத்தையும் சொல்லிடறேன்... இந்த பதிவோட நோக்கமும் அதுல வரும்

G.Ragavan said...

என்னது இது கோழியோட றெக்கையெல்லாம் பிரிச்சி மஞ்சத் தடவியாச்சு போல...அடுத்து அறுத்து கொழம்புலதான் போடனும் போல.

நாமக்கல் சிபி said...

G.Ragavan said...
//என்னது இது கோழியோட றெக்கையெல்லாம் பிரிச்சி மஞ்சத் தடவியாச்சு போல...அடுத்து அறுத்து கொழம்புலதான் போடனும் போல. //
அடுத்த பதிவுல தெரியும்.. பாருங்க