பதிவு எழுதி எவ்வளவு நாளாச்சு. பதிவு எழுதாம சும்மா இருக்கறதும் ஒரு சுகம் தான்.
போன வருடம் இறுதியில் என் வலைப்பதிவில் ஏதோ வைரஸ் பிரச்சனை. பார்த்தால் தமிலிஷ் லிங் கொடுத்திருந்ததால் என்று தெரிந்தது. அப்படியே டெம்ப்ளேட் மாற்றி விட்டுவிட்டேன்.
ப்ராஜக்ட் முடிந்து இந்தியா சென்று இரண்டு மாதங்களாக இணையப் பக்கம் வராமல் இருந்தேன். அந்த நேரத்தில் vettipaiyal.com, vvsangam.com வலைத்தளங்களுக்கான ரினிவல் மெயில்கள் வந்திருக்கின்றன. அதைத் தவற விட்டுவிட்டேன். அதனால் மறுபடியும் ப்ளாகருக்கே வந்துவிட்டேன்.
மார்ச் முதல் வாரத்தில் மறுபடியும் ஆன் சைட் வந்துவிட்டேன். இந்த முறை ரோட் ஐலாண்ட் என்னும் மாநிலம். அமெரிக்காவில் மிக சிறிய மாநிலம் அது தான். வீட்டின் மிக அருகிலே கடற்கரை. ஆனால் குளிர்காலமாக இருந்ததால் அதிகமாக செல்ல முடியவில்லை.
பிறகு வேலை மாற்றம். ஆறரை ஆண்டுகளாக வேலைப் பார்த்த நிறுவனத்தில் இருந்து சில சொந்த காரணங்களுக்காக வேலை மாற வேண்டி வந்தது. மிகவும் கடினமான முடிவுதான். நிறைய சிந்தனைகளுக்குப் பிறகு மாறினேன்.
தற்பொழுது நியூ யார்க்கில் வேலை. தினமும் மதியம் வெளியே தான் சாப்பிடுகிறேன். சப், பீசா ஏதாவது வாங்கி எடுத்துக் கொண்டு, சுதந்திர தேவி சிலைக்கு செல்லும் படகு சவாரிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து குளிர்ந்த காற்றையையும், கடல் அலையையும் ரசித்த படி சாப்பிட்டு வருகிறேன்.
தினமும் இரண்டு மணி நேரப் பேருந்து பயணம். அது தான் கடினமாக இருக்கிறது.
இரண்டு முறை பதிவர் ஸ்ரீதர் நாராயணனை சந்தித்தேன். அருமையான கதைக்களன்களுடன் கதைகளைச் சொன்னார். எப்பொழுது எழுதுவார் என்று காத்திருக்கிறேன்.
நானும் ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். எங்கே என் கதையை நானே காப்பி அடிக்கிறேன் என்று யாராவது பிரச்சனை செய்வார்களோ என்று பயத்தால் நிறுத்திவிட்டேன். பயம் தெளிந்தவுடன் அதை எழுதி முடித்து பதிவிடுகிறேன்.
மேலும் அறிவு ஜீவி சமூகத்திற்கு அடியேனின் வேண்டுகோள். என் பதிவு என்னைப் போன்ற மொக்கைகளுக்காகத் தான். இலக்கியம் வேண்டுமென்றால் பிராஜக்ட் மதுரையில் (http://projectmadurai.org/) நிறைய இருக்கிறது. எடுத்து படித்துக் கொள்ளவும்.
27 comments:
Welcome back Vetti... Last paragraph is superb, much needed for today's tamil blog world. :)))
//படகு சவாரிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து குளிர்ந்த காற்றையையும், கடல் அலையையும் ரசித்த படி சாப்பிட்டு வருகிறேன்.//
வெயில் 100 டிகிரிக்கு தாக்குகிறது தல. சம்மருக்கு ஆபிசுக்குள்ளேயே லஞ்ச் சாப்பிடவும் :)
//அதை எழுதி முடித்து பதிவிடுகிறேன்//
சீக்கிரம் எழுதுங்க. அட்வான்ஸ் வாழ்த்துகள்.
Welcome back vetti.
Could have given the link to Koodal instead of ProjectMadurai. :-)
pOgattum vidunga. nINga thodarnthu ezhuthunaa pOdhum. :-)
கடைசி பத்தி எதுக்குன்னு தெரியாது. கூடலைப் பத்தி பேசி 'சொ.செ.சூ' வைச்சுக்கலைன்னு நம்பறேன். :-)
eager to read more mokkais
வாங்க வாங்க
வாங்க வாங்க பாலாஜி! அந்த கதையை இன்னுமா எழுதி முடிக்கலை? சீக்கிரம் எழுதுங்க. மத்தபடி குட்டிபாப்பா நலம் எல்லாம் எப்படிப்பா? புது வேலை எப்படி? எல்லாம் விலாவாரியா எழுதினா தேவலை!
Welcome back Balaji, enga Wall-street la office-a ? Naan Midtown la irukken.
உள்ளேன் ஐயா! :)
இனி கதை மட்டும்தானா?
வாங்க பாஸ்..வாங்க..
புது வேலை..புது இடம்...
வாழ்க்கையில சில மாற்றங்கள் அவசியம்தான்...
// ஸ்ரீதர் நாராயணன் said...
//படகு சவாரிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து குளிர்ந்த காற்றையையும், கடல் அலையையும் ரசித்த படி சாப்பிட்டு வருகிறேன்.//
வெயில் 100 டிகிரிக்கு தாக்குகிறது தல. சம்மருக்கு ஆபிசுக்குள்ளேயே லஞ்ச் சாப்பிடவும் :)
//
பார்க்ல வெயில் எல்லாம் தெரியாது பாஸ் :)
//
//அதை எழுதி முடித்து பதிவிடுகிறேன்//
சீக்கிரம் எழுதுங்க. அட்வான்ஸ் வாழ்த்துகள்//
நன்றி பாஸ் :-)
//வெண்பூ said...
Welcome back Vetti... Last paragraph is superb, much needed for today's tamil blog world. :)))
//
அதனால தான முன்னெச்சறிக்கையா போட்டுட்டோம் :-)
நன்றி வெண்பூ
//உண்மை said...
Welcome back vetti.
12:06 PM//
நன்றி உண்மை :-)
//குமரன் (Kumaran) said...
Could have given the link to Koodal instead of ProjectMadurai. :-)
pOgattum vidunga. nINga thodarnthu ezhuthunaa pOdhum. :-)
12:31 PM//
அதுல இருக்குற உள்குத்து உங்களுக்கு புரியலை ;)
உங்க கதைக்கு நேத்து ஒரு பின்னூட்டம் போட்டேன். பார்த்தீங்களா?
// ராம்ஜி_யாஹூ said...
eager to read more mokkais
//
நிச்சயம். அது தானே நாம எழுதுவோம் ;)
// வினையூக்கி said...
வாங்க வாங்க
//
வந்துட்டோம். ஜெனி கதைகள் எல்லாம் இன்னும் தொடருதா பாஸ்? :)
// அபி அப்பா said...
வாங்க வாங்க பாலாஜி! அந்த கதையை இன்னுமா எழுதி முடிக்கலை? சீக்கிரம் எழுதுங்க. மத்தபடி குட்டிபாப்பா நலம் எல்லாம் எப்படிப்பா? புது வேலை எப்படி? எல்லாம் விலாவாரியா எழுதினா தேவலை!
2:09 PM//
எந்த கதைண்ணா? அனைவரும் நலம் :)
//Guna said...
Welcome back Balaji, enga Wall-street la office-a ? Naan Midtown la irukken.//
நான் டவுண் டவுன். Water + Broad St :)
ஆயில்ஸ், பட்டாப்பட்டி,
பின்னூட்டத்திற்கு நன்றி. மாற்றம் மட்டும் தானே மாறதது :-)
வெல்கம் பேக் வெட்டி...
கிழே ஒரு கேப்சன் இருக்குமே காணல :))
//வந்துட்டோம். ஜெனி கதைகள் எல்லாம் இன்னும் தொடருதா பாஸ்? : //
ஜெனிக்குப்பின்னர் ரம்யா வந்து, அதன் பின்ன அம்மு வந்து கதைகள் வெள்ளிவிழாவைக் கொண்டாடப்போகின்றன !! நீங்கள் தான் அந்தப்பக்கமே வருவதில்லை
//சரவணகுமரன் said...
வெல்கம் பேக் வெட்டி...
//
மிக்க நன்றி பாஸ் :-)
//மின்னுது மின்னல் said...
கிழே ஒரு கேப்சன் இருக்குமே காணல :))
//
மறுபடியும் போட்டுடுவோம் மின்னலு :-)
// வினையூக்கி said...
//வந்துட்டோம். ஜெனி கதைகள் எல்லாம் இன்னும் தொடருதா பாஸ்? : //
ஜெனிக்குப்பின்னர் ரம்யா வந்து, அதன் பின்ன அம்மு வந்து கதைகள் வெள்ளிவிழாவைக் கொண்டாடப்போகின்றன !! நீங்கள் தான் அந்தப்பக்கமே வருவதில்லை
//
சாரி பாஸ். இனிமே அடிக்கடி வரேன் :-)
புது வேலைக்கு வாழ்த்துக்கள் பாலாஜி.
வேலை கிடைச்சதும் சொல்லுவீங்கன்னு நெனச்சேன், இளா சொல்லித்தான் தெரியும்.
புது இடத்தில பிஸியா இருப்பீங்கன்னுத் தெரியும், முடியும்போது பேசுங்க...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//sriram said...

Sorry Boss. நான் உங்களுக்கு சொல்லிட்டேனு நினைச்சேன். யாருக்கு சொன்னேன் யாருக்கு சொல்லலைனே சரியா நினைவு இல்லை. இளாவும் இதே தான் கேட்டாரு. இந்தப் பதிவு பார்த்து.
நான் சொல்லிட்டேனு நினைச்சேன்.
ஏதோ குழப்ப நிலைலயே இருக்கேனு நினைக்கிறேன் :(
Post a Comment