“நல்லா பண்ணிருக்கேன்டா. அடுத்த வாரத்துல HR கால் இருக்கும்னு சொல்லிருக்காங்க”
“சூப்பர்டா. அப்ப இன்னைக்கு ட்ரீட் தாந்னு சொல்லு” இது ஹரி.
“எல்லாம் கன்ஃபார்ம் ஆகட்டும். பெரிய ட்ரீட்டே வெச்சிடலாம்” சொல்லிவிட்டு ஷீ ஷாக்ஸை கழட்டிவிட்டு உள்ளே சென்றேன்.
வெளியே கதவை யாரோ வேகமாகத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்டது.
பக்கத்து அறையில் தங்கியிருக்கும் கார்த்திக் அண்ணா. வேகமாக என்னிடம் வந்தவர், “வாட்ச் எங்க?”
நான் கழட்டிக் கொண்டே, “நீங்க காலை-ல்ல தூங்கிட்டு இருந்தீங்க. நான் கோயான் அண்ணாக்கிட்ட சொல்லிட்டு.....” சொல்லிக் கொண்டே அவர் கையில் வாட்சைக் கொடுத்தேன். அதை வாங்கிப் பாக்கட்டில் வைத்துக் கொண்டார். திடீரென்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.
”தா$ளிங்களா........இனிமே அண்ணே நொண்ணேனு எவனாவது ரூம் பக்கம் வந்தீங்க அவ்வளவு தான்” சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டான்.
ராஜாவும், ஹரியும் வேகமாக என்னை நோக்கி எழுந்து வந்தனர். நான் கன்னத்தில் கை வைத்து நின்று கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. என்னை அறியாமல் என் கண்ணீல் இருந்து நீர் வந்து கொண்டிருந்தது.
“டேய்....என்னடா நடந்தது? அவருடைய வாட்சை நீ ஏன்டா எடுத்துட்டு போன? என்னோடது எடுத்துட்டு போயிருக்கலாமே” ஹரி.
“டேய் காலை-ல்ல டை வாங்கலாம்னு போனேன்டா. டை பக்கத்துல வாட்ச் இருந்தது. கோயன் அண்ணா-துனு நினைச்சி எடுத்துட்டு போயிட்டேன். அவர்ட சொல்லிட்டு தாண்டா எடுத்துட்டு போனேன். அதுக்காக இப்படியா அறையுவாங்க? எல்லாம் MNCல மாசம் அறுபதாயிரம் வேலை வாங்கற திமிர் அவனுக்கு. எனக்கு வேலை இல்ல-ல்ல? அதான்”
என்னை மீறி சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தேன். அழக்கூடாது என்று நினைக்க நினைக்க விம்மல் அதிகமானதே தவிர குறையவில்லை. வேகமாக ரூமிற்குள் நுழைந்து கதவை மூடி, தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.
கொஞ்சம் என்னைத் தனியா விடுங்க-ன்னு நான் சொன்னவுடன் கதவைத் தட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மறுபடியும் கதவு தட்டும் சத்தம். எழுந்து கதவைத் திறந்தேன். கார்த்திக் தான்.
“கொஞ்சம் என் கூட வா”
“உங்க வாட்ச் எடுத்ததுக்கு சாரி. இப்ப நீங்க கொஞ்சம் வெளிய போறீங்களா?”
“டேய் தெரியாம அடிச்சிட்டேன். சாரி. இப்ப என்ன உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா?”
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்க கிளம்புங்க”
“முதல்ல நீ வா” என் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தார். நானும் அவருடன் சென்றேன்.
வெளியே சென்று அவர் வண்டியை எடுத்தார்.
“வா. வந்து உட்காரு” எங்கே என்று கேட்காமல் ஏறி உட்கார்ந்தேன்.
நேராக மஞ்சுநாதா பாரில் வண்டியை நிறுத்தினார்.
உள்ளே ஏசி ஹாலிற்கு சென்று அமர்ந்தோம். நல்ல கூட்டமாக இருந்தது.
உடனே கையில் ஒரு பேப்பருடன் ஆர்டர் எடுக்க ஒருவர் வந்துவிட்டார்.
“என்ன சாப்பிடற? பீரா, ஹாட்டா?”
“எனக்கு எதுவும் வேண்டாம்.”
“சும்மா சொல்லுடா. நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்-ல்ல? சொல்லு”
“கிங் ஃபிஷர்”
“ஒரு கிங் ஃபிஷர், RC லார்ஜ்”
”சைட் டிஷ் சார்” ஆர்டர் எடுப்பவர்.
“சிக்கன் லாலி பாப், அப்பறம் சிக்கன் கபாப்”
“ஓக்கே சார்”
நான் இரண்டு பீர் அடிப்பதற்குள் அவர் நான்கு லார்ஜ் முடித்திருந்தார். போகும் பொழுது எப்படியும் நான் தான் வண்டியை ஓட்ட வேண்டி இருக்கும் போல.
திடீரென்று எழுந்து பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்து டேபிள் மேல் வைத்தார்.
அவருடைய வாட்ச்.
“நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டி பார்த்திருக்கியா? உன் பேர் என்ன? மறந்துட்டேன். சாரி”
“வினோத்”
“ஹ்ம்ம். வினோத். நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டிப் பார்த்திருக்கியா?”
“தெரியல. நான் கவனிச்சது இல்லை. சாரி.”
“இதை யார் கொடுத்தா தெரியுமா வினோத்?”
எப்படியும் ஏதாவது ஒரு பொண்ணு தான்.
“தமிழ். என் தமிழரசி. யூ நோ ஷி இஸ் குயின் ஆஃப் தமிழ். Do you know that?"
இன்னைக்கு நான் மாட்டினேனா? என் நேரமே சரியில்லை. என்ன கதை சொல்லப் போறானோ?
“நான் இதை ஏன் கைல கட்ட மாட்றேன் தெரியுமா? This is a damn leather watch man. இதை தினமும் கைல கட்டினா பிஞ்சு போயிடும். I should have taken a metal strap. I made a very big mistake. அப்ப தெரிஞ்சிருந்தா லெதர் எடுத்திருக்க மாட்டேன். இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் அவள்ட பேசியே இருந்திருக்க மாட்டேனே. இல்லையில்லை. இப்ப நான் படற கஷ்டத்தை விட அப்ப அதிகமா சந்தோஷமா இருந்தேன். So I was right”
இந்த மாதிரி லவ் ஃபெயிலியர் கேஸுங்க கூட மட்டும் தப்பித் தவறி தண்ணி அடிக்க உட்காரக் கூடாது. அதுவும் தண்ணி அடிச்சா எப்படி தான் இங்கிலிஷ் வருதோ தெரியலை.
"இந்த வாட்ச் அவளோட முதல் மாச சம்பளத்துல எனக்கு வாங்கி கொடுத்தது.
you know what, we were just friends at that time. We believed so. You never know when you start loving someone. Love at first sight எல்லாம் கௌதம் மேனன் படத்துல தான்.
நான் செல் ஃபோன் வாங்கனத்துக்கு அப்பறம் வாட்ச் கட்டறதை நிறுத்திட்டேன். ஒரே விஷயத்துக்கு எதுக்கு ரெண்டு பொருள்-ன்னு. இதை அவள்ட சொன்னேன். அவ ஒத்துக்கல. நான் ஆசையா வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியானு கேட்டா? எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. வாங்கிட்டேன்.
You know one thing, பொண்ணுங்க எதை நினைச்சாலும் சாதிச்சிடுவாங்க. They have that power. You cant stop them. Are you in Love?”
"இல்லை. எனக்கு பொண்ணுங்க ஃபிரண்ட்ஸ் கூட கிடையாது. நான் காலேஜ்ல கூட பொண்ணுங்ககிட்ட பேச மாட்டேன்”
“நானும் அப்படி தான் விஜய். விஜய் தானே?
“வினோத்”
“சாரி. வினோத். நானும் காலேஜ்ல எந்த பொண்ணுக்கிட்டயும் பேசனது இல்லை. தமிழ் தான் ஃபர்ஸ்ட். ஆல்சோ லாஸ்ட். அவள் என் ஃபிரெண்ட் பாஸ்கீயோட கஸினோட ஃபிரெண்ட். அவன் கஸின் கிருத்திகாவும், தமிழும் உங்களை மாதிரி தான் இங்க வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருந்தாங்க.
பாஸ்கியும் நானும் அவுங்களுக்கு வேலை தேட ஹெல்ப் பண்ணோம். அப்ப தான் தமிழ் எனக்கு பழக்கமானா. அவளுக்கு Data Structuresல ஏதாவது சந்தேகம்னா என்னைக் கூப்பிடுவா. DSல ஆரம்பிச்சி, கல்கி, சுஜாதா, இளையராஜா, சச்சின் அப்படி நிறைய பேசனோம். ரொம்ப போர் அடிக்கறேனா?”
“இல்லை. இல்லை. சொல்லுங்க”
“காலைல ஆபிஸ் போனவுடனே. வேக வேகமா வேலையை முடிச்சிடுவேன். அவளுக்கு ஃபோன் பண்ணனும்னு ஆசையா இருக்கும். ஆனா எதுக்காக ஃபோன் பண்ணனு சொல்றதுக்கு ஒரு காரணம் வேணுமேனு தயக்கமா இருக்கும். அப்படியே யாஹீ, கூகுள் ஃபிரெஷர்ஸ் குரூப்ல தேடி ஏதாவது ஓப்பனிங்க் இருக்கானு பார்ப்பேன். அதையே காரணமா வெச்சி ஃபோன் பண்ணுவேன். அது அப்படியே ரெண்டு, மூணு மணி நேரம் போகும்.
“இல்லை. இல்லை. சொல்லுங்க”
“காலைல ஆபிஸ் போனவுடனே. வேக வேகமா வேலையை முடிச்சிடுவேன். அவளுக்கு ஃபோன் பண்ணனும்னு ஆசையா இருக்கும். ஆனா எதுக்காக ஃபோன் பண்ணனு சொல்றதுக்கு ஒரு காரணம் வேணுமேனு தயக்கமா இருக்கும். அப்படியே யாஹீ, கூகுள் ஃபிரெஷர்ஸ் குரூப்ல தேடி ஏதாவது ஓப்பனிங்க் இருக்கானு பார்ப்பேன். அதையே காரணமா வெச்சி ஃபோன் பண்ணுவேன். அது அப்படியே ரெண்டு, மூணு மணி நேரம் போகும்.
கொஞ்ச நாள்ல கிருத்திகாக்கு வேலை கிடைச்சி சென்னைப் போயிட்டா. தமிழ்க்கு என்ன பண்றதுனு தெரியல. சென்னைப் போகலாம்னு யோசிச்சா. அப்பறம் பொண்ணுங்க தங்கற PGல தங்கலாம்னு முடிவு பண்ணிட்டா. அவள் PG போறதுக்கு நான் போய் கொஞ்சம் உதவி செஞ்சேன்.
அதுக்கு அப்பறம் வீக் எண்ட் ஆனா ரெண்டு பேரும் மீட் பண்ண ஆரம்பிச்சோம். Forum, Garuda Mall அப்பறம் கோரமங்களால ஒரு பார்க். அங்க உட்கார்ந்து கொஞ்ச நேரம் அவளுக்கு DS, Quants எல்லாம் சொல்லிக் கொடுப்பேன். அப்பறம் அங்க இருந்து Forum போவோம். இன்னொரு பீர் சாப்பிடறயா? பேரர்...........”
“இல்லை வேண்டாம்”
“சும்மா சாப்பிடு. இல்லை கிளம்பலாமா?”
“இல்லை நீங்க சொல்லுங்க”
“வீக் எண்ட்னு இல்லாம சில சமயம் அவள் போர் அடிக்குதுனு சொன்னா, வீக் டேஸ் ஈவனிங் கூட கிளம்பி போவேன். அதுக்காக அவ பசங்க கூட சுத்தறவனு நினைச்சிக்காத. அவ என்னைத் தவிர வேற எந்த பையன்கிட்டயும் பேசி நான் பார்த்தது இல்லை. அவளுக்கும் அந்த ஆச்சரியம். எப்படி என் கூட மட்டும் இவ்வளவு க்ளோஸ் ஆனானு.
ஒரு வீக் எண்ட் ரெண்டு பேரும் வழக்கம் போல பார்க்ல உட்கார்ந்திருதோம். அந்த திங்கக்கிழமை அவளுக்கு ஒரு இண்டர்வியூ இருந்தது. அதுக்காக சொல்லிக் கொடுத்திட்டு இருந்தேன். திடீர்னு ஒரு கூட்டம்.
நெத்தில சிவப்புக் கலர்ல திலகம் மாதிரி வெச்சிட்டு. அங்க நாலஞ்சி couples இருந்தோம். மொத்தமா சுத்தி வளைச்சிட்டாங்க. மொத்தமா எல்லா கப்பில்ஸையும் ஒண்ணா சேர்த்துட்டாங்க.
ஒவ்வொருத்தவங்களையாக் கூப்பிட்டு ராக்கி இல்லை தாலி - ரெண்டுல ஒண்ணு எடுத்து கட்டுங்கனு மிரட்டினாங்க. எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியல. நாங்க மூணாவதா நின்னுட்டு இருந்தோம். எல்லாம் கன்னடால கெட்ட வார்த்தைல திட்டிட்டு இருந்தானுங்க. எங்களுக்கு முன்னாடி இருந்த ரெண்டு பேரும் வேகமா ராக்கி கட்டிட்டு போயிட்டாங்க. இப்ப நாங்க.
என்ன செய்யறதுனு தெரியல.தமிழ் ரொம்ப பயந்து போய் இருந்தா. புலியைப் பார்த்தா மான் கண்ணு மிரட்சில எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா? அவ கண்ணும் அப்படி தான் இருந்தது. அவ பயப்படறது கூட அழகு தான். அந்த இடத்திலயும் என்னை மீறி நான் அதை ரசிச்சிட்டு இருந்தேன்.”
ஒரு நிமிடம் நிறுத்தினார்.
“அவ ராக்கி எடுக்கல. எனக்கு என்ன பண்ணறதுனு தெரியல”
“என்ன பண்ணீங்க?”
“We are friends. We are studying here. அப்படினு கைல வெச்சிருக்க புக்கை காட்டினேன். புக்கை மூடாம, கைல பேனா திறந்து இருந்ததைப் பார்த்து நம்பி விட்டுட்டாங்க. ஆனா ஏதோ கன்னடத்துல திட்டினாங்க. வேகவேகமா அந்த இடத்துல இருந்து பைக்கை எடுத்துட்டு போய் அவளை PG ல விட்டேன்.
வீட்டுக்கு போனதும் பார்த்தா அவள்ட இருந்து மெசேஜ், Thanks னு ஒரே வார்த்தைல. எதுக்கு சொன்னானு புரியலை. அதை நான் தான் சொல்லிருக்கணும். அவ ராக்கி கட்டாததுக்கு. அது ஒரு சாதாரண கயிறு தான்.
அப்படிப் பார்த்தா தாலி கூட சாதாரண கயிறு தான். அந்த கயிறுல நாம வைக்கிற நம்பிக்கை தான் மேட்டர். இல்லையா?”
“ஆமாம்”
“சரி. நேரமாச்சு. கிளம்பலாமா?”
“இன்னும் கதை முடியலையே.”
“கதையா? இது கதை இல்லை வினோத். This is my life. I think you are not getting it”
“சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்படி mean பண்ணல. அப்பறம் என்ன ஆச்சு?”
“ஒரு வழியா அந்த இண்டர்வியூ அவ க்ளீயர் பண்ணிட்டா. ஒரு மாசத்துல வேலைல சேர்ந்தா. அப்பறம் ஃபோன் பேசறது ஓரளவு குறைஞ்சது. இருந்தாலும் வீக் எண்ட்ல மீட் பண்ணிக்குவோம். ஷாப்பிங் எல்லாம் சேர்ந்து தான் பண்ணுவோம். முதல் மாச சம்பளத்துல வீட்ல எல்லாருக்கும் துணி வாங்கி கொடுத்தா.
“ஆமாம்”
“சரி. நேரமாச்சு. கிளம்பலாமா?”
“இன்னும் கதை முடியலையே.”
“கதையா? இது கதை இல்லை வினோத். This is my life. I think you are not getting it”
“சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்படி mean பண்ணல. அப்பறம் என்ன ஆச்சு?”
“ஒரு வழியா அந்த இண்டர்வியூ அவ க்ளீயர் பண்ணிட்டா. ஒரு மாசத்துல வேலைல சேர்ந்தா. அப்பறம் ஃபோன் பேசறது ஓரளவு குறைஞ்சது. இருந்தாலும் வீக் எண்ட்ல மீட் பண்ணிக்குவோம். ஷாப்பிங் எல்லாம் சேர்ந்து தான் பண்ணுவோம். முதல் மாச சம்பளத்துல வீட்ல எல்லாருக்கும் துணி வாங்கி கொடுத்தா.
எனக்கு மட்டும் வாட்ச். இந்த வாட்ச் தான். நான் வேண்டாம்னு சொன்னாலும் வாங்கி கொடுத்தா. பின்னாடி அதுக்கு அவளே ஒரு காரணம் சொன்னா. துணி வாங்கி கொடுத்தா எப்பவாது தான் போடுவோம். அதே வாட்ச்னா தினமும் கட்டறது. ஒரு நாளைக்கு பல தடவை அதைப் பார்ப்போம். அப்ப எல்லாம் எனக்கு அவ ஞாபகம் வரணும்னு யோசிச்சி வாங்கிக் கொடுத்தாளாம்.
அப்ப எனக்கு அது புரியல. ஏதோ நன்றி கடனுக்கு வாங்கித் தரானு நினைச்சிட்டேன். அவ ஞாபகமா இப்ப என்கிட்ட இருக்கறதும் அந்த வாட்ச் தான். லெதர் ஸ்டராப்னு நான் கைல கட்டறது இல்லை. அதுவும் அந்த வாட்ச்
என்னைப் பொருத்த வரைக்கும் என்னுடைய தமிழ் தான்.
என்னைப் பொருத்த வரைக்கும் என்னுடைய தமிழ் தான்.
I can't even imagine someone wearing this watch.
அப்படி நான் பார்த்துப் பார்த்து வெச்சிருக்கற வாட்சை நீ கைல கட்டிட்டுப் போன-ன்னு தான் எனக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சி. கோபத்துல உன்னை அடிச்சிட்டேன். ஐ ஆம் சாரி”
“இல்லை நான் தான் சொல்லணும். எனக்குத் தெரியாது. ஐ ஆம் சாரி. நீங்க அவுங்களுக்கு ப்ரபோஸ் பண்ணலீயா?”
”ப்ரப்போஸ்? ஐ லவ் யூனு நாங்க வார்த்தைல சொல்லணுமா? ஐ லவ் யூங்கறது ஜஸ்ட் வார்த்தை கிடையாது. உங்க அம்மாட்ட என்னைக்காவது நான் கோபமா இருக்கேன், சோகமா இருக்கேனு சொல்லிருக்கியா வினோத்?”
“இல்லை. என்னுடைய முகத்தையும் ரியாக்ஷனையும் பார்த்து அவுங்களா புரிஞ்சிக்குவாங்க”
“காதலும் அப்படித்தானே? நான் உன்னை காதலிக்கிறேனு சொல்லணுமா? அது தானா புரிஞ்சிக்கறது தானே. பொண்ணுங்க மனசைப் புரிஞ்சிக்க முடியாது, கஷ்டம். கடலை விட ஆழம்னு சொல்றது எல்லாம் சுத்த ஹம்பக்.
அவுங்கக் கண்ணைப் பார்த்து பேசினாலே போதும். தானாப் புரிஞ்சிடும். அவளுடைய வார்த்தையைகள் மட்டும் இல்லை, அவ மௌனம் பேசற மொழியும் எனக்குப் புரியும். அவளுக்கும் தான்.
We were simply made for each other. But we were not gifted enough to share our lives.
தமிழோட அப்பாக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சி. என்ன-ன்னு பார்த்தா லிவர்ல கான்சராம். ரொம்ப நாள் தாங்க மாட்டார்னு சொல்லிட்டாங்க. அவளுக்கு உடனே கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்துட்டாங்க. அப்பா இந்த நிலைமைல இருக்கும் போது எப்படி என்னைப் பத்தி சொல்றதுனு அவளுக்குப் புரியலை.
இருந்தாலும் அப்பா எப்படியும் அவளைப் புரிஞ்சிப்பாருனு தைரியமா சொல்லிருக்கா. அந்த மாதிரி ஒரு நிலைமை எந்த அப்பாவுக்கும் வரக் கூடாது. எந்த அப்பாவும் தன் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு தான் பார்ப்பாங்க. தமிழ் எடுத்த முடிவு சரியா, தப்பானு சிந்திக்கக் கூட அவருக்கு நேரமில்லை. இருந்தாலும் அவர் சொன்னதைத் தமிழ் என்கிட்ட சொன்னதும் எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல”
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.
“தமிழ், இன்னும் நான் எத்தனை நாள் இருப்பேனு தெரியலை. ஒரு வாரம் தாங்குவனானு கூட நிச்சயம் இல்லை. நான் இருக்கும் பொழுது நீ காதல் கல்யாணம் பண்ணிட்டா எல்லாரும் என்னைக் கேலி பேசுவாங்க. குறை சொல்லுவாங்க. அதை நான் நிச்சயம் தாங்கிக்குவேன்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.
“தமிழ், இன்னும் நான் எத்தனை நாள் இருப்பேனு தெரியலை. ஒரு வாரம் தாங்குவனானு கூட நிச்சயம் இல்லை. நான் இருக்கும் பொழுது நீ காதல் கல்யாணம் பண்ணிட்டா எல்லாரும் என்னைக் கேலி பேசுவாங்க. குறை சொல்லுவாங்க. அதை நான் நிச்சயம் தாங்கிக்குவேன்.
நான் போனதுக்கு அப்பறம்னா எல்லாரும் உன் அம்மாவைத் தானம்மா சொல்லுவாங்க. நாம இன்னும் டவுன்ல தானே இருக்கோம்? நான் போனதுக்கு அப்பறம் நம்ம சொந்தக்காரவங்களோட உதவி நம்ம குடும்பத்துக்கு நிச்சயம் தேவை. நம்ம சொந்தத்துல யாரையாவது நீ கல்யாணம் பண்ணிட்டா நம்ம குடும்பத்துக்கு நான் போனதுக்கு அப்பறமும் சப்போர்ட் கிடைக்கும். அது நிச்சயம் நமக்கு வேணும்னு நான் ஆசைப்படறேன்.
உங்க அம்மாவைத் தனியா நிக்க வெச்சிடாதம்மானு சொல்லிட்டாரு. அவளுடைய மாமா பசங்கள்ல ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவுங்க அப்பா ஆசைப்பட்டாறாம். நானும் அது தான் சரினு சொல்லிட்டேன்”
“நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்ணே”
“நான் காத்திருந்து என்ன பிரயோஜனம்? அவுங்க அப்பா உயிரோட இருக்கும் போழுதே கல்யாணம் பண்ணனும்னு ஒரே வாரத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. அவ கடைசியா என்கிட்ட ஃபோன்ல பேசினது இது தான்...................அன்னைக்கு பார்க்ல நான் ராக்கி கட்டாததைப் புரிஞ்சிட்டு நீங்க தாலி கட்டிருக்கலாமே கார்த்திக்-ன்னு கேட்டா.
இப்படி எல்லாம் நடக்கும்னு அன்னைக்கு எனக்கு தெரியாம போச்சே!”
”சார், டைம் ஆச்சு. பார் க்ளோஸ் பண்ண போறோம். பார்சல் எதாவது வேணுமா?”
“இல்லைங்க நாங்க கிளம்பறோம்” நான் தான் சொன்னேன்.
ஒரு வழியாக அவரை உட்கார வைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அவரை ரூமிற்கு அழைத்து சென்று படுக்க வைத்து கதவை மூடி விட்டு வந்தேன்.
வாட்சைப் பாக்கெட்லயே வெச்சிருக்காரே. திரும்பிப் படுக்கும் போது உடைஞ்சிடப் போகுதுனு மறுபடியும் அவர் படுக்கை அறைக்கு சென்றேன். அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் தலையணைக்கு பக்கத்தில் இன்னொரு தலையணை மேல் வாட்ச் இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதாக ஏனோ என் மனதில் பட்டது.
”சார், டைம் ஆச்சு. பார் க்ளோஸ் பண்ண போறோம். பார்சல் எதாவது வேணுமா?”
“இல்லைங்க நாங்க கிளம்பறோம்” நான் தான் சொன்னேன்.
ஒரு வழியாக அவரை உட்கார வைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அவரை ரூமிற்கு அழைத்து சென்று படுக்க வைத்து கதவை மூடி விட்டு வந்தேன்.
வாட்சைப் பாக்கெட்லயே வெச்சிருக்காரே. திரும்பிப் படுக்கும் போது உடைஞ்சிடப் போகுதுனு மறுபடியும் அவர் படுக்கை அறைக்கு சென்றேன். அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் தலையணைக்கு பக்கத்தில் இன்னொரு தலையணை மேல் வாட்ச் இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதாக ஏனோ என் மனதில் பட்டது.
24 comments:
welcome back...
வழக்கமான டயலாக் எல்லாம் அதிகமா இல்லாம முயற்சி செய்திருக்கிறேன். பிடித்திருந்தால் சொல்லவும். பிடிக்கலைனாலும் சொல்லலாம் ;)
காதலெந்திரம் - தலைப்பு நல்லா இருக்கு. வழக்கமான டயலாக் அதிகம்
இல்ல தான், ஆனா இருக்க டயலாக் எல்லாம் ரெம்ப நீளமா இருக்கு.
அது சரி, தண்ணி அடிச்சுட்டு உளறுபவன், அளந்தா பேசுவான்? :-)
"“இன்னும் கதை முடியலையே.”
இங்கும் ஒரு அறை விழுந்து இருக்க வேண்டும். :-)
நல்ல மறுதொடக்கம். இன்னும் நிறைய எழுதுங்கள்.
//கார்த்தி said...
welcome back...//
ரொம்ப நன்றிப்பா. வலைப்பதிவு பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு. இனிமே அடிக்கடி வரேன் :-)
//செந்தில் நாதன் Senthil Nathan said...
காதலெந்திரம் - தலைப்பு நல்லா இருக்கு. வழக்கமான டயலாக் அதிகம்
இல்ல தான், ஆனா இருக்க டயலாக் எல்லாம் ரெம்ப நீளமா இருக்கு.
அது சரி, தண்ணி அடிச்சுட்டு உளறுபவன், அளந்தா பேசுவான்? :-)
"“இன்னும் கதை முடியலையே.”
இங்கும் ஒரு அறை விழுந்து இருக்க வேண்டும். :-)
நல்ல மறுதொடக்கம். இன்னும் நிறைய எழுதுங்கள்//
நீளமாக இருப்பதற்கான காரணம், இது ரெண்டு பேர் பேசற மாதிரி கதை இல்லை. ஒருவர் மற்றவருக்கு தன்னுடைய வாழ்க்கையை விவரிக்கிறார். அதனால தான்.
கதையை வேகமாக படித்து கருத்து சொன்னதற்கு நன்றி பாஸ் :-)
நல்லாருந்திச்சி ராஜா.. அவருக்கு வாட்ச்.. நிறைய பேருக்கு இது மாதிரி நிறைய்ய விஷயங்கள்.. நான் கூட இந்த மாதிரி 10 அயிட்டங்கள் வெச்சிருக்கேன்.. காதல்ங்கிறது சிறுகதையில்லை.. தொடர்கதை.. சீரியல்.. சமயத்தில்.. “இவருக்கு பதிலாக அவர்” -னு மாத்திமாத்திப் போயிட்டேயிருக்கும்.. ஆனால் காதல் மட்டும் அழிவதில்லை.. இப்பத்தான் முதல் லார்ஜ் உள்ளாறப் போச்சி :)
//Seemachu said...
நல்லாருந்திச்சி ராஜா.. அவருக்கு வாட்ச்.. நிறைய பேருக்கு இது மாதிரி நிறைய்ய விஷயங்கள்.. நான் கூட இந்த மாதிரி 10 அயிட்டங்கள் வெச்சிருக்கேன்.. காதல்ங்கிறது சிறுகதையில்லை.. தொடர்கதை.. சீரியல்.. சமயத்தில்.. “இவருக்கு பதிலாக அவர்” -னு மாத்திமாத்திப் போயிட்டேயிருக்கும்.. ஆனால் காதல் மட்டும் அழிவதில்லை.. இப்பத்தான் முதல் லார்ஜ் உள்ளாறப் போச்சி :)
10:49 PM//
சீமாச்சு அண்ணா,
மிக்க நன்றி. உங்க பின்னூட்டம் பார்த்தாலே செண்டிமெண்டா ஒரு ஃபீலிங். என்னுடைய முதல் கதைக்கு நீங்க போட்ட பின்னூட்டம் நினைவுக்கு வந்துடுது :)
சாரி வெட்டி.. இன்னும் அதிகமா உன்கிட்டேர்ந்து எதிர்பார்க்கிறேன்.. காதலை டிசைன் டிசைனா சொல்றதுல நீ கில்லாடிதான்... ஆனா கதிர் பட ரேஞ்சுல போகுதோன்னு தோணுது. இது என்னோட கருத்து மாத்திரமே..
(சொல்லிட்டேன்...)
வழக்கமான வார்த்தைகள் இல்லாவிட்டாலும், பாணி அதேபோல் இருந்ததாக ஒரு பிரமை. தங்களின் முந்தைய கதைகளை படிக்காமல் இதைப் படித்திருந்தால் பிரெஷ் ஆக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்
wow happy that ur back :-)
one more story dat leaves a pain even after d story is over...liked it :-)
//சென்ஷி said...
சாரி வெட்டி.. இன்னும் அதிகமா உன்கிட்டேர்ந்து எதிர்பார்க்கிறேன்.. காதலை டிசைன் டிசைனா சொல்றதுல நீ கில்லாடிதான்... ஆனா கதிர் பட ரேஞ்சுல போகுதோன்னு தோணுது. இது என்னோட கருத்து மாத்திரமே..
(சொல்லிட்டேன்...)
//
நன்றி சென்ஷி... இனிமே ஜாக்கிரதையா இருக்கேன் :)
//முரளிகண்ணன் said...
வழக்கமான வார்த்தைகள் இல்லாவிட்டாலும், பாணி அதேபோல் இருந்ததாக ஒரு பிரமை. தங்களின் முந்தைய கதைகளை படிக்காமல் இதைப் படித்திருந்தால் பிரெஷ் ஆக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்
//
வாவ். மு.க. வாங்க வாங்க... பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.
இனிமே கொஞ்சம் பார்த்து எழுதறேன். முடிந்த வரை நோ லவ் ஸ்டோரி :)
//vaishnavi jai said...
wow happy that ur back :-)
one more story dat leaves a pain even after d story is over...liked it :-)
//
Thanks a lot Vaishnavi... Didnt get much response.. still its fine :-)
நீங்களும் எங்க தாத்தாவும் ஒன்னு.
ரென்டு பெரும் சூப்பரா கதை சொல்லுவீங்க..
ஹாய் வெட்டி,
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, இதுமாதிரி கதை எனக்கு பிடிக்காம போனாதான் ஆச்சர்யம். :-))
தொடருங்கள்
நல்லா இருக்குண்ணா :)
Welcome back :)
Welcome back sir :)
Liked it.. But expecting feel good story from u.. :)
//அவர் தலையணைக்கு பக்கத்தில் இன்னொரு தலையணை மேல் வாட்ச் இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதாக ஏனோ என் மனதில் பட்டது. //
ஆஹா , கவித்துவமான ஒரு முடிவு !! நல்லா இருந்தது !!
ரொம்ப நாளாச்சி நீங்க ஒரு காதல் கதை எழுதி!! ..இனிமேல் இவ்ளோ பெரிய பிரேக் வேண்டாம் பாலாஜி ..!! கீப் ரைடிங் ..!!
it's a very good love story,which could happen in everybody's life and remembers them when they read this type of stories.
nnnnnn i can remember my own past.
Bajji, thanks for giving those wonderful memories.
-baski
யப்பா ரொம்ப நாள் கழிச்சு வந்து படிக்கிறேன் போல :(
நிறைய காதல் முடிவுகள் நிர்பந்தத்திலேயே சாகடிக்கப்பட்டிருக்கு போல...!
//கதை இன்னும் முடியலயே//
டைமிங்க் டயலாக் சிச்சுவேஷனுக்கு செட் ஆகாம அடி வாங்கின டென்சனோட இருக்கிற எவனுக்குமே அப்படித்தான் ஃபீல் இருக்கும் !
இன்னும் தொடருங்கள் பாஸ் ! :)
its ok
Welcome back...nalla kadhai...
Enanga idhu tamil padam cliche madhiri iruku
Post a Comment