முதலில் வசந்த குமாருடன் எனக்கு ஏற்பட்ட நட்பைப் பத்தி சொல்லிவிடுவது நல்லது. சிறில் அலெக்ஸ் நடத்திய அறிவியல் சிறுகதை போட்டியில், தவறான புரிதல் காரணமாக எனக்கும் வசந்திற்குமிடைய சிறிய மனக்கசப்பு ஏற்பட்டது.
”அறிவியல்னா வானத்துல இருந்து ஏலியன் வரதும், டைம் மிஷினும்னு தான் நினைக்கற இடத்துல நான் என்ன பண்றது :-)
வெள்ளக்காரன் சொல்றது தான் அறிவியல்னு வானத்தை பார்த்துட்டு ஏலியன் எப்ப வருவானு யோசிட்டு இருக்கவங்களுக்கும், டைம் மிஷின்ல ஏறி போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களும் என்னை மன்னிப்பீர்களாக :-))”
இப்படி நான் சொல்லப் போக, அது அப்படியே வளர்ந்து சண்டையாகி, சமாதானமாகி, நட்பாகி விட்டது :)
வசந்த் போட்டியில் வென்ற பிறகு, அவருடைய கல்லூரி நண்பர்கள் குழுவிற்கு அதை தெரியப்படுத்தியிருக்கிறார். அந்த குழுவில் என் அறை தோழனும் இருந்தான். அவன் மிக மகிழ்ச்சியாக சொல்லும் போது தான் எனக்கு வசந்த் அவனுடைய கல்லூரி நண்பர் என்பது தெரிந்தது. என் அறைத் தோழனுக்கு வலையுலக போட்டி, சண்டை எதுவும் தெரியாது :). அதைக் கேள்விப்பட்டதும், ”வசந்த் சண்டை போட்டானா? நம்பவே முடியல” என்று சொன்னான். ஏன்னா நான் சண்டை போடறது ரொம்ப சாதாரண விஷயம்.
அப்பறம் வசந்தோட பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். சிறுகதைகள் எழுதவும், சிறுகதைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் மிகவும் விருப்பமுள்ளவர். உரையாடல் போட்டிக்கு அவர் செய்த பணி குறிப்பிடத்தக்கது. சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள் இதை நிச்சயம் ஒரு முறை படித்துப் பார்ப்பது நல்லது.
விருதிற்கு நன்றி வசந்த்.
இனி, இந்த விருதை நான் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். இது தான் மிகவும் கடினமான பணியாக கருதுகிறேன். வெறும் பெயரளவிலோ, நட்பிற்காகவோ இதை நான் செய்ய விரும்பவில்லை. சுவாரஸ்யப் பதிவர்கள் என்பதை, சுவாரஸ்யமாக பதிவு எழுதுபவர்கள் என்று எடுத்து கொள்கிறேன். அதாவது எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை சுவாரஸ்யமாக கொடுப்பவர்கள் என்ற கணக்கில் எழுத துவங்குகிறேன். இதில் ஒரு சிலருக்கு ஏற்கனவே விருது கிடைத்திருக்கலாம். இருந்தாலும் இன்றைய நிலையில் என் மனதில் தோன்றும் சுவாரஸ்யமான எழுதுபவர்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். இதை விருது என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது பாராட்டு என்று எடுத்துக் கொண்டாலும் சரி. Just a token of appreciation. விருப்பப்பட்டால் நீங்கள் இதை தொடரலாம்.
டுபுக்கு -
எழுதும் எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாக எழுதுபவர். நகைச்சுவை இவருடைய களம். இயல்பான நகைச்சுவையில் பின்னு பெடலுடுப்பவர். இவருடைய பதிவுகளைப் படித்து தான் நான் எழுத துவங்கினேன். பதிவர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ நையாண்டி செய்வது அவ்வளவு கடினமானது இல்லை. ஏனென்றால் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் ஏற்கனவே நம் மனதில் இருக்கும். ஆனால் இவர் பதிவுகளில் அப்படி இருக்காது. எதார்த்தமாக வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், நபர்களையும் வைத்து நகைச்சுவையில் புகுந்து விளையாடுவார். என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஜொள்ளித் திரிந்த காலம், நாமதேவரும் கைப்பிடி சுண்டலும், நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு.
வெறும் நகைச்சுவைக்காக மட்டும் இவரை சொல்லவில்லை, இவருடைய கதைகளில் இருக்கும் சோகமும் எனக்கு பிடிக்கும். மிகவும் பிடித்த கதை, சாமியாண்டி.
கப்பி பய -
மாதத்திற்கு நான்கு பதிவாவது எழுதிவிட வேண்டும் என்று எந்த கணக்கும் வைத்துக் கொள்ளாத பதிவர். எழுத விஷயம் இருக்கும் போது எழுதுவார். மற்ற சமயங்களில் அமைதி காப்பார். நகைச்சுவை, சிறுகதை, பயணக்குறிப்பு, விமர்சனம் என்று ரவுண்டு கட்டி அடிப்பவர். இதில் எதுவும் சுமார் என்று கூட சொல்ல முடியாது. அனைத்தும் தரமானதாக இருக்கும். ”கப்பி மாதிரி வித்தியாசமான களம் எடுத்து முயற்சி செய்யிப்பா” என்று போன மாதம் கூட ஒரு நண்பர் எனக்கு அறிவுரை கூறினார். அப்படி எழுத முடியாததால தான் நான் வெட்டியா இருக்கேனு சொல்லி எஸ் ஆகிட்டேன்.
கப்பியோட குறிப்பிட்ட எந்த பதிவும் நான் கொடுக்கவில்லை. முழு வலைப்பதிவையும் நீங்கள் மேயலாம்.
லக்கி லுக்
கப்பியோட குறிப்பிட்ட எந்த பதிவும் நான் கொடுக்கவில்லை. முழு வலைப்பதிவையும் நீங்கள் மேயலாம்.
லக்கி லுக்
லக்கி லுக் சிறுகதைகள் மட்டும் என்னை அவ்வளவாக கவர்வதில்லை. மற்ற படி அவர் எழுதும் அத்தனைப் பதிவுகளும் சர வெடி தான். அரசியல் பதிவாகட்டும், மொக்கைப் படங்களுக்கு அவர் எழுதும் விமர்சனங்களாகட்டும், எதிர் பதிவுகளாகட்டும், புத்தக விமர்சனமாகட்டும், நகைச்சுவைப் பதிவுகளாகட்டும் எதிலும் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது. அது மட்டும் இல்லாமல் லக்கியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவர் மேல் மற்றவர்கள் குறை சொல்லும் போது அவருடைய பதிவுகளில் விஸ்வரூபம் எடுப்பார்.
போலிப் பிரச்சனை போது அவர் அந்த பிரச்சனைகளில் தலையிடாமல் அட்டகாசமான பதிவுகளை கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது மட்டும் அவர் அந்த பதிவுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டிருந்தால் இந்நேரம் லக்கி லுக், யுவ கிருஷ்ணாவாக மாறியிருப்பாரா என்பதே சந்தேகம். புதிய பதிவர்களும், பிரபல பதிவர்களும் லக்கியிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடமிது. பிரச்சனையின் பொழுது அதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை விட தரமான பதிவுகள் கொடுப்பதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.
பினாத்தல் சுரேஷ்
பினாத்தல் சுரேஷ்
கிரியேட்டிவிட்டி கிங். மார்கெட்டிங் துறையில் இருந்தால் எங்கோ சென்றிருப்பார். அவ்வளவு கிரியேட்டிவிட்டி. இவருடைய ஒரு சில பதிவுகளை புரிந்து கொள்ளவே நமக்கு கொஞ்சம் கிரியேட்டிவிட்டி வேண்டும். இல்லை முன்னெச்செரிக்கை வேண்டும். நகைச்சுவை, சிறுகதை இரண்டிலும் இவர் கில்லி. பினாத்தலாருடைய சிறுகதைகளைவிட அவருடைய அவருடைய நகைச்சுவைப் பதிவுகளும், மூளைக்கு வேலை கொடுக்கும் பதிவுகளும் எனக்கு பிடிக்கும். அவருடைய ஃபிளாஷ் பதிவுகளும், தமிழ் மணத்தில் பிரபங்களில் பதிவும் எனக்கு மிகவும் பிடித்தவை.
இவரை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாமானு தெரியலை... இருந்தாலும் இவருடைய வலைப்பதிவை நான் தொடர்ந்து படிக்கிறேன். அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என்.சொக்கன்
இவரை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாமானு தெரியலை... இருந்தாலும் இவருடைய வலைப்பதிவை நான் தொடர்ந்து படிக்கிறேன். அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என்.சொக்கன்
வலையில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது சொக்கனின் எழுத்துக்கள். Blog - Digital Diary போல பயன்படுத்துபவர். அவருடைய அனுபவங்களை அவர் அழகாக சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவருடைய எழுத்தில் கொஞ்சம் கூட போலித்தனம் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய ஒரு பதிவைப் படித்தாலும் தொடர்ந்து அத்தனைப் பதிவுகளையும் படிக்க வைக்கும் எழுத்துக்களைப் பார்க்க முடியும்.
25 comments:
kai nanaichaachu
//பிரச்சனையின் பொழுது அதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை விட தரமான பதிவுகள் கொடுப்பதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.//
அது!
வாழ்த்துக்கள்..உங்களுக்கும் அனைவருக்கும்..வசந்திற்கு ஸ்பெஷல்..
வாழ்த்துகள் பாலாஜி.
டுபுக்கு, கப்பி பய, என்.சொக்கன் இவர்கள் பதிவை முதல் முறையாகப் படித்தேன். எல்லாமே மிக சுவாரஸ்யமா இருக்கு.
அனுஜன்யா
//யாசவி said...
kai nanaichaachu
//
நன்றி யாசவி!!!
//பரிசல்காரன் said...
//பிரச்சனையின் பொழுது அதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை விட தரமான பதிவுகள் கொடுப்பதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.//
அது!
//
பரிசல் சொன்னா சரி தான் :)
//நர்சிம் said...
வாழ்த்துக்கள்..உங்களுக்கும் அனைவருக்கும்..வசந்திற்கு ஸ்பெஷல்..
//
வாங்க கார்ப்பரேட் கவிஜரே!!!
வாழ்த்திற்கு நன்றி :)
//அனுஜன்யா said...
வாழ்த்துகள் பாலாஜி.
டுபுக்கு, கப்பி பய, என்.சொக்கன் இவர்கள் பதிவை முதல் முறையாகப் படித்தேன். எல்லாமே மிக சுவாரஸ்யமா இருக்கு.
அனுஜன்யா
//
ஜென்யாஜி,
டுபுக்கு, கப்பி இருவரும் சமீப காலமாக அதிகம் எழுதுவதில்லை. சொக்கன் தமிழ் மணத்தில் இல்லை. அதனால் நீங்கள் தவறவிட்டிருக்கலாம். டுபுக்கு அவர்களின் பழைய பதிவுகளை படித்து பார்க்கவும். அவரும் வலையுலக சூப்பர் ஸ்டார் தான் :)
வாழ்த்துக்கள்ங்ணா!! :)
நான் மற்றவர்களை படித்துப் பார்க்கிறேன்.
//பிரச்சனையின் பொழுது அதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை விட தரமான பதிவுகள் கொடுப்பதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.//
சூப்பரா சொன்னீங்க!
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்ண்ணா
//நான் சமீப காலமாக எழுதும் பதிவுகளில் சுவாரஸ்யமாக இருப்பவை மிக சில தான் என்பது எனக்கும் தெரியும்//
content அதிகமாய்டுச்சில்ல? அதான் :) அதுவும் மூத்த பதிவர்ன்னா கொஞ்சம் சீரியஸான விஷயம் தான் எழுதனும் :)
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க்க்க நன்றி வெட்டி. ஆனா இது அழுகுண்ணி ஆட்டம் ...நான் உங்களுக்கு அல்ரெடி குடுக்கனும்ன்னு இருதேன்...சோ இந்த கள்ளாட்டைய ஒத்துக்க முடியாது...நீங்க முந்திக்கிட்டீங்க...சே...இதுலயும் லேட்டு நான்.....
ungluku thirumanam aagi kuzhandhai pirandhadhu ellama rindhu romba sandhoshama irukku! vazhthukkal balaji! ivlo anadhuku apramum vetti payalave irukingla? thangsa konjam koopidunga.. :)
அறிமுகத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
//Karthik said...
வாழ்த்துக்கள்ங்ணா!! :)
நான் மற்றவர்களை படித்துப் பார்க்கிறேன்.
//
கார்த்திக்,
நிச்சயம் நான் சொன்னவங்க எல்லார் பதிவையும் படித்துப் பார்க்கவும். உனக்கு நிச்சயம் உதவும். இரண்டு பதிவுகளாவது படித்துப் பார்க்கவும். பிடிக்கவில்லை என்றால் தொடர வேண்டாம்.
ஆனால் இவர்களிடமிருந்து நீ கற்றுக் கொள்ள நிறைய பாடம் இருக்கிறது. உன்னிடம் நிறைய நாங்கள் எதிர்பார்க்கிறோம் :)
//மங்களூர் சிவா said...
//பிரச்சனையின் பொழுது அதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை விட தரமான பதிவுகள் கொடுப்பதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.//
சூப்பரா சொன்னீங்க!
வாழ்த்துக்கள்.
//
டாங்ஸ்ண்ணே!!! :)
//Divyapriya said...
வாழ்த்துகள்ண்ணா
//
ரொம்ப நன்றிமா :)
//
//நான் சமீப காலமாக எழுதும் பதிவுகளில் சுவாரஸ்யமாக இருப்பவை மிக சில தான் என்பது எனக்கும் தெரியும்//
content அதிகமாய்டுச்சில்ல? அதான் :) அதுவும் மூத்த பதிவர்ன்னா கொஞ்சம் சீரியஸான விஷயம் தான் எழுதனும் :)
//
Content எல்லாம் அதிகமாகலம்மா. ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு போடும் போது இதை விட நல்லா எழுதியது போல ஒரு எண்ணம்.
முன்ன எந்த பயமும் இல்லை. இப்ப நல்ல பதிவு கொடுக்கணும்னு ஒரு பயம் இருக்கு. அது தான் பிரச்சனை :)
//Dubukku said...
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க்க்க நன்றி வெட்டி. ஆனா இது அழுகுண்ணி ஆட்டம் ...நான் உங்களுக்கு அல்ரெடி குடுக்கனும்ன்னு இருதேன்...சோ இந்த கள்ளாட்டைய ஒத்துக்க முடியாது...நீங்க முந்திக்கிட்டீங்க...சே...இதுலயும் லேட்டு நான்.....
//
தலைவா,
நீங்க எனக்கு விருது கொடுக்கறதை விட மாசத்துல இரண்டு பதிவு கொடுத்தா நாங்க சந்தோஷப்படுவோம். நல்ல நகைச்சுவை எழுத்து மிகவும் குறைவு. பரிசல் மாதிரி ஒரு சிலர் தான் எழுதறாங்க.
நீங்க ஃபார்ம்க்கு வந்தா நிறைய நல்ல பதிவுகள் வரும் என்பது என் நம்பிக்கை :)
// Porkodi (பொற்கொடி) said...
ungluku thirumanam aagi kuzhandhai pirandhadhu ellama rindhu romba sandhoshama irukku! vazhthukkal balaji! ivlo anadhuku apramum vetti payalave irukingla? thangsa konjam koopidunga.. :)
//
ஆஹா... எத்தனை வருஷத்துக்கு பிறகு???
எப்படி இருக்கீங்க பொற்கொடி?
தங்க்ஸ் இந்தியால இருக்காங்க. சீக்கிரமே இங்க வந்திடுவாங்க. அப்பறம் எங்க நாம வெட்டியா இருக்குறது? :)
//nchokkan said...
அறிமுகத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
//
வாங்க தலைவா.
இப்ப எழுதற மாதிரியே தொடர்ந்து எழுதனா ரொம்ப சந்தோஷப்படுவோம். உங்க சீனியர்ஸ் மாதிரி வாசகர் கடிதத்தை எல்லாம் வலையேற்றாமல், “முருகா, முருகா” மாதிரி பதிவுகள் போட்டா, என் லிஸ்ட்ல எப்பவுமே நீங்க டாப்பு தான் :)
//நிச்சயம் நான் சொன்னவங்க எல்லார் பதிவையும் படித்துப் பார்க்கவும். உனக்கு நிச்சயம் உதவும். இரண்டு பதிவுகளாவது படித்துப் பார்க்கவும். பிடிக்கவில்லை என்றால் தொடர வேண்டாம்.//
பாலாஜி அண்ணா,
நிச்சயம் படித்து பார்க்கிறேன். கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி. :)
//ஆனால் இவர்களிடமிருந்து நீ கற்றுக் கொள்ள நிறைய பாடம் இருக்கிறது. உன்னிடம் நிறைய நாங்கள் எதிர்பார்க்கிறோம் :)//
உங்கள் அன்புக்கு மறுபடி நன்றி. நல்ல பதிவுகள் தர முயற்சிக்கிறேன்.
//உங்க சீனியர்ஸ் மாதிரி வாசகர் கடிதத்தை எல்லாம் வலையேற்றாமல்//
சத்தியமா நான் அதைச் செய்யமாட்டேன். என் பதிவிலதான் பின்னூட்டப் பெட்டி திறந்திருக்கே ;)
இன்னொரு முக்கியமான காரணம் (காதைக் கிட்ட கொண்டுவாங்க, ரகசியம்) : எனக்கு யாரும் வாசகர் கடிதமெல்லாம் எழுதறதில்லை ;)
//“முருகா, முருகா” மாதிரி பதிவுகள் போட்டா//
:)))) அந்தமாதிரி காமெடிகளுக்கு நம்ம வாழ்க்கையில பஞ்சம் ஏது? எழுதிட்டாப் போச்சு ;)
- என். சொக்கன்,
பெங்களூர்.
////ஆனால் இவர்களிடமிருந்து நீ கற்றுக் கொள்ள நிறைய பாடம் இருக்கிறது. உன்னிடம் நிறைய நாங்கள் எதிர்பார்க்கிறோம் :)//
உங்கள் அன்புக்கு மறுபடி நன்றி. நல்ல பதிவுகள் தர முயற்சிக்கிறேன்.
//
இப்ப எழுதற மாதிரியே தொடர்ந்து எழுதுப்பா... ப்ளாகர்ஸ் பத்தி அதிகம் எழுதாத. உன்னை சுற்றி நடக்கும் சுவையான சம்பவத்தை எழுதினாலே போதும் :)
// nchokkan said...
//உங்க சீனியர்ஸ் மாதிரி வாசகர் கடிதத்தை எல்லாம் வலையேற்றாமல்//
சத்தியமா நான் அதைச் செய்யமாட்டேன். என் பதிவிலதான் பின்னூட்டப் பெட்டி திறந்திருக்கே ;)
இன்னொரு முக்கியமான காரணம் (காதைக் கிட்ட கொண்டுவாங்க, ரகசியம்) : எனக்கு யாரும் வாசகர் கடிதமெல்லாம் எழுதறதில்லை ;)//
ஆஹா... வாசகர் கடிதம் பதிவுல போடணும்னா வாசகர் கடிதம் வரணும்னு உங்களுக்கு யார் சொன்னா? அவ்வளவு பச்சப்புள்ளையா நீங்க? வெளுத்ததெல்லாம் பாலு பொங்கனதெல்லாம் பீருனு நம்புவீங்க போல :)
//
//“முருகா, முருகா” மாதிரி பதிவுகள் போட்டா//
:)))) அந்தமாதிரி காமெடிகளுக்கு நம்ம வாழ்க்கையில பஞ்சம் ஏது? எழுதிட்டாப் போச்சு ;)
- என். சொக்கன்,
பெங்களூர்.
//
எழுதுங்க எழுதுங்க... படிக்க நாங்க இருக்கோம் :)
naan nalla irukken! thirupi oru innings podalaam nu vandhen, neenga dubukku ellam adikkadi postunga naan vandhu adichu vilasaren.. (comments sonnenga :D)
Post a Comment