தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, July 07, 2009

பாட்ஷா - வலையுலக விமர்சனங்கள்!!!

சூப்பர் ஸ்டார் நடித்த ”பாட்ஷா” படம் வரும் போது தமிழ்ல நிச்சயம் வலைப்பதிவு யாரும் எழுதிருக்க மாட்டாங்க. அதனால பாட்ஷா படம் இன்னைக்கு சூழ்நிலைக்கு வந்திருந்தா இல்லைனா அன்னைக்கு இந்த அளவுக்கு நாம எல்லாம் இருந்திருந்தா நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் விமர்சனம் எழுதிருப்பாங்கனு ஒரு கற்பனை.

ஏர்சிம் :

பாட்ஷா ‍..
தவறு செய்பவர்களை தண்டிப்பவருக்கு பாட்ஷா, கஷ்டப்படும் ஆட்டோக்காரர்களுக்கு மாணிக்கம். இது தான் முதல் முடிச்சு.

மாணிக்கம் ஏன் பாட்ஷாவாக மாறினான்? அவனுக்கு மட்டன் பிரியாணி கிடைக்காததினாலா? அப்படியே மட்டன் பிரியாணி கிடைத்தாலும் அதில் லெக் பீஸ் கிடைக்காததாலா? அவன் மறுபடி மாணிக்கமான பின்பு அந்த பாட்ஷாத்தனம் என்ன செய்யும்? இது இரண்டாவது முடிச்சி...

இந்த இரண்டு முடிச்சிக்களுக்கு இடையில் இருக்கும் நூலில் ஆட்டோக்காரர்களின் வாழ்க்கையையும் ஆட்டோவையும் தொங்கவிடுகிறது திரைக்கதை....

குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.

வைத்தியக்காரன் :

ஏர்சிம், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இதுதான் சிறந்தது என்று அடித்து சொல்லலாம்.

'பாட்ஷா' படத்தினுள் இன்னொரு படம் நுணுக்கமாக இருக்கிறது. பிளாஷ் பேக்கிற்குள் ஒரு ஃபிளாஷ் பேக். அதன் அடியை அழகாக பிடித்து இழுத்திருக்கிறீர்கள்.

படம் முழுக்கவே எதிர்மறைகளால் ஆனவைதான். உதாரணமாக, மாணிக்கம், ‍ பாட்ஷா; (இரண்டையும் சேர்த்தால் "மாணிக் பாட்ஷா" அது தான் படத்தோட கதை)

படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் மாணிக்கத்தை முதலில் காட்ட மாட்டார்கள். பூசணிக்காயைத் தான் காட்டுவார்கள். அது ஒரு குறியீடு. ஆனால் பாம்பேயில் நேராக பாட்ஷாவைக் காட்டுவார்கள். அதாவது இங்கு மட்டும் தான் அவன் பாட்ஷா. அவனை அவனாகவே ஏற்கிறார்கள்.

மொத்தத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒரு அர்த்தம், குறியீடு இருக்கிறது.

சாரி ஏர்சிம். பின்னூட்டம் பதிவை விட நீண்டுவிட்டது.

................................................

சாதுஷா :

பாட்ஷா அண்ணன்களின் காவியம்.

"தங்கச்சிக்கு அண்ணன்னா எனக்கு அண்ணன். எனக்கு அண்ணன்னா உங்களுக்கு அண்ணன். உங்களுக்கு அண்ணன்னா ஊருக்கெல்லாம் அண்ணன். அண்ணன்டா...". நடுமண்டைல பலமான இரும்பு கம்பியால ”நச்சு”னு அடிச்ச மாதிரி இருந்தது இந்த வசனம். தங்கச்சி இருக்குற அண்ணன்களுக்கு தெரியும் அதன் வலிமை.

இது நட்புக்கான படமா? இல்லை. பழிவாங்கும் படமா? இல்லை. அப்பா செண்டிமெண்ட் படமா? இல்லை. பின்ன?

"வள்ளி", சில ஆண்டுகளுக்கு முன் வந்து சினிமா பார்ப்பவர்களின் கண்ணில் காலை விட்டு ஆட்டியது. பீரு தன்னுடைய விமர்சனத்தில் அதை "மொக்கைகளின் காவியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இது ஏன் அண்ணன்களின் காவியம்?

எத்தனை வித அண்ணன்கள். தங்கைகளை, ரம்பையும் ஊர்வசியும் மாதிரி செம சைட்டுடானு ஆனந்த்ராஜ் சொல்லும் போது தலை குனிந்து நிற்கும் ஒரு அண்ணன். அதைக் கேட்டு கோபம் கொள்ளும் ஒரு அண்ணன். தம்பியை தடுத்து நிறுத்தும் ஒரு அண்ணன்.

விஜயக்குமாருக்கு டாட்டராக இருக்கும் யுவராணியை, நீ கண்டிப்பா டாட்டர் ஆகறனு, டாக்டருக்கும் டாட்டருக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அப்பாவி அண்ணன். தங்கை ஃபெயிலானதும் அவளை வெறுப்பேற்றி வாசலில் ஆரத்தி எடுக்கும் ஒரு அண்ணன். தன் தங்கை ஒரு டுபுக்கு மண்டையனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் திருமணத்தை நடத்தி வைக்க போராடும் ஒரு அண்ணன். இப்படி அண்ணன்களில் பல பரிமாணங்கள்.

கஜேந்திரா எடுத்த சுரேஷ் கிருஷ்ணாவா? அடப்போங்கடா. இவரைப் போயி இத்தனை நாளா பாபா, ஆளவந்தானு எடுக்க வைச்சிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.

குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.

வராதகவுண்டன்:
நக்மா, யுவராணி என்ற இரண்டு அழகு தேவதைகள் பற்றி எழுதாத சாதுஷாவுக்கு கண்டனங்கள்.

....................................................................

காவி.மன்னன் :

பாட்ஷாவும் பார்ப்பனர்களின் சனாதன மதமும்

பழிக்கு பழி, நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. பழிக்கு பழியும், நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். பிறகு அந்த மாவில் இட்லி, தோசை என்று சுடுவார்கள். ச்சே. ஒரு ஃப்ளோல அப்படியே வந்துடுச்சி. இப்ப பாயிண்டை பிடிக்கிறேன்.

இந்துவாக இருப்பவன் அப்பாவியாகவும், நேர்மையாளனாகவும், பரோபகாரியாகவும் இருப்பது போல் காட்டியுள்ளார்கள். அதே நபர் முஸ்லீமாக மாறும் போது கொலை செய்பவராகவும், கொடுரமாக ஒரு கிருஸ்துவனின் கையில் கத்தியால் குத்துவதைப் போலவும் காட்டியுள்ளார்கள். அங்கே கூட ஒரு இந்துவின் கையில் கத்தியைக் குத்தவில்லை. பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடும் இந்துக்களை சென்று காப்பாற்றுகிறார். அதே போல் முஸ்லிமாக இருக்கும் அன்வர் பாட்ஷாவைக் கொல்கிறார்கள். இந்துவாக இருக்கும் மாணிக்கத்தை விட்டு விடுகிறார்கள்.

வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை.

முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது கிருஸ்துவர்கள் என்பதாகவே காட்டப்படுகிறது. அதே போல் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களாக காட்டப்படுகிறது. இது சனாதன மதத்தைப் பின்பற்றும் இந்துக்களின் பொறாமையே காரணம்.

குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.

fer0z 9@ndhi :

இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்துக்களின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு மதத்தினரைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.

...............

புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரன் விமர்சனம் எல்லாம் போடணும்னு பார்த்தேன். பதிவு ஏற்கனவே ரொம்ப பெருசாகிடுச்சி. பதிவு பிடிச்சிருந்தா சொல்லுங்க. அடுத்து நிறைய படத்துக்கு இப்படி விமர்சனம் பார்க்கலாம்.

68 comments:

Sridhar V said...

:))))

இந்த மாதிரி கலாய்க்கதான் நிறைய படிக்கனும் போல. சில பேரு புரியுது சிலது புரியல. கொஞ்சம் டச் விட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன் எனக்கு. :)

நம்ம கவுண்டரும் எழுதுவாரா? அட்லீஸ்ட் அவர் ஒரு பின்னூட்டமாவது போடுவாரா?

ஆனந்தன் said...

எப்படி இப்படி எல்லாம்

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
:))))
//
டாங்கிஸ் :)

ரொம்ப நேரமா யாருமே எதுவுமே சொல்லலையேனு பார்த்துட்டு இருந்தேன் :)

//
இந்த மாதிரி கலாய்க்கதான் நிறைய படிக்கனும் போல. சில பேரு புரியுது சிலது புரியல. கொஞ்சம் டச் விட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன் எனக்கு. :)
//
முதல் பதிவு வைத்தியக்காரன் பின்னூட்டம் குறியீடு எல்லாம் படிச்சா எந்த பதிவுனு தெரியும். மீதி ரெண்டும் மிக சமீபத்திய பதிவுகள் தான் :)

//நம்ம கவுண்டரும் எழுதுவாரா? அட்லீஸ்ட் அவர் ஒரு பின்னூட்டமாவது போடுவாரா?
//
கவுண்டர் சீக்கிரம் வருவார்.. நிறைய டெவில் ஷோ பாக்கி இருக்குது :)

வெட்டிப்பயல் said...

//
ஆனந்தன் said...
எப்படி இப்படி எல்லாம்

//

எல்லாம் அப்படியே சும்மா வரது தான் :)

Anonymous said...

ithu sanathana. unmayakave irukku. eninum pathivu arumai

சீமாச்சு.. said...

//வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை//

இதே மாதிரி கருத்துக்களுடன் விமர்சனம் எழுதும் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார்.. அவர் பெயர் கோவியில் ஆரம்பித்து கண்ணனில் முடியும்.. உங்களால் கண்டுபிடிக்க முடியாதென்று எனக்குத் தெரியுமே !!

சீமாச்சு.. said...

அடி தூள் கெளப்பிட்டீங்க !!

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
ithu sanathana. unmayakave irukku. eninum pathivu arumai

//

நன்றி பாஸ்...

கோவி.கண்ணன் said...

பாலாஜி,

ஏன் கொலவெறி ! :)

இருந்தாலும் என் பதிவுகளை படிக்கிறீர்கள் என்கிற மேசேஜ் இதில சொல்லாமல் இருக்கு.

உங்க அப்ரோச் எனக்கு புடிச்சிருக்கு !
:))))))

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
ithu sanathana. unmayakave irukku. eninum pathivu arumai

//

நன்றி பாஸ்...

ஜெகதீசன் said...

:)))))

வெட்டிப்பயல் said...

//Seemachu said...
//வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை//

இதே மாதிரி கருத்துக்களுடன் விமர்சனம் எழுதும் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார்.. அவர் பெயர் கோவியில் ஆரம்பித்து கண்ணனில் முடியும்.. உங்களால் கண்டுபிடிக்க முடியாதென்று எனக்குத் தெரியுமே !!

//

நிஜமாவா சொல்றீங்க.. கேட்கவே ஆச்சரியமா இருக்கு :)

நீங்க இவ்வளவு கஷ்டமா க்ளூ கொடுத்தா எப்படி கண்டுபிடிப்போம் :)

வெட்டிப்பயல் said...

// Seemachu said...
அடி தூள் கெளப்பிட்டீங்க !!

//

நன்றி தல :)

Anonymous said...

சூப்பர்.உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

வெட்டிப்பயல் said...

// கோவி.கண்ணன் said...
பாலாஜி,

ஏன் கொலவெறி ! :)

இருந்தாலும் என் பதிவுகளை படிக்கிறீர்கள் என்கிற மேசேஜ் இதில சொல்லாமல் இருக்கு.

உங்க அப்ரோச் எனக்கு புடிச்சிருக்கு !
:))))))
//

சினிமா பத்தின பதிவுனா மிஸ் பண்ணுவோமா தல?

அதுவும் வலையுலக சீனியர் நீங்க. எப்படி மிஸ் பண்ணுவோம் ;)

எப்படியும் சீரியஸா எடுத்துக்க மாட்டீங்கனு உரிமைல தான் தைரியமா பதிவு போட்டாச்சு ;)

வெட்டிப்பயல் said...

//ஜெகதீசன் said...
:)))))
//

டாங்கிஸ் ஜெகதீசன் :)

கோவி.கண்ணன் said...

முன்பு விமர்சனங்கள் எழுதும் போது "இது பேரு விமர்சனமா ?...கதை எழுதி வச்சிருக்கிங்க" என்று பின்னூட்டம் வரும்.

இப்ப அப்படி வருவதில்லை. விதிகள் காலத்தால் மாறும்.

உங்கள் நகைச்சுவை உணர்வை ரசித்தேன்.

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
சூப்பர்.உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

11:03 PM
//

ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை பாஸ்... முடிந்த அளவு எழுத முயற்சி செய்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...
முன்பு விமர்சனங்கள் எழுதும் போது "இது பேரு விமர்சனமா ?...கதை எழுதி வச்சிருக்கிங்க" என்று பின்னூட்டம் வரும்.

இப்ப அப்படி வருவதில்லை. விதிகள் காலத்தால் மாறும்.

உங்கள் நகைச்சுவை உணர்வை ரசித்தேன்.
//

எப்படி எழுதினாலும் ஏதாவது சொல்லிட்டு தான் இருப்பாங்கனு உங்களுக்கு தெரியாதா என்ன? ;)

முரளிகண்ணன் said...

கலக்கல் வெட்டி.

வந்தியத்தேவன் said...

கலக்கலான பதிவு சிரிப்பு பைத்தியக்காரனின் சாரி வைத்தியக்காரனின் பின்னூட்டம் பல கதைகளைச் சொல்கின்றது. மாபிள் மங்கரின் விமர்சனத்தையும் எழுதியிருக்கலாம்.

வராதகவுண்டனின் பின்னூட்டம் இன்னொரு பதிவிலும் படித்த ஞாபகம் :)

Unknown said...

அட... பதிவு போட ஐடியா இல்லாமல் இருந்தேன்... ஒரு நல்ல ஐடியா... Blogger காலத்துக்கு முந்திய படங்களுக்கு இனிமே விமர்சனம் போடப்போறேன்... நீங்க எடுத்துக் குடுத்தபடி பாட்ஷாவிலேயே தொடங்கலாம்

சென்ஷி said...

கலக்குறே வெட்டி...

செம்மயா சிரிச்சுட்டேன்ப்பா.. :)))

அடுத்தடுத்த விமர்சனப்பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்!

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
கலக்கல் வெட்டி.
//

மிக்க நன்றி முக... எல்லாம் நீங்க கொடுக்குற உற்சாகம் தான் :)

வெட்டிப்பயல் said...

//வந்தியத்தேவன் said...
கலக்கலான பதிவு சிரிப்பு பைத்தியக்காரனின் சாரி வைத்தியக்காரனின் பின்னூட்டம் பல கதைகளைச் சொல்கின்றது. மாபிள் மங்கரின் விமர்சனத்தையும் எழுதியிருக்கலாம்.
//
அதுவும் எழுதலாம்னு நினைச்சேன். ஆனா அவர் எல்லா படத்துக்கும் எழுதறார். அதனால எழுதறது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அடுத்து எழுதிடுவோம் ;)

//
வராதகவுண்டனின் பின்னூட்டம் இன்னொரு பதிவிலும் படித்த ஞாபகம் :)
//

ஓ! சூப்பர்...

வராதகவுண்டன் தான் மக்களுக்கு புரியுமானு ஒரு சந்தேகம் இருந்தது. அதை நீங்க வந்து தீர்த்து வெச்சிட்டீங்க... மிக்க நன்றி ’வந்தி’யத்’தேவன்’ :)

வெட்டிப்பயல் said...

//Keith Kumarasamy said...
அட... பதிவு போட ஐடியா இல்லாமல் இருந்தேன்... ஒரு நல்ல ஐடியா... Blogger காலத்துக்கு முந்திய படங்களுக்கு இனிமே விமர்சனம் போடப்போறேன்... நீங்க எடுத்துக் குடுத்தபடி பாட்ஷாவிலேயே தொடங்கலாம்
//

வாங்க பாஸ்...

வலைப்பதிவுல எழுதறதுக்கு மேட்டருக்கா குறைச்சல்... இப்படி பல விஷயங்கள் இருக்குதே...

அடிச்சி ஆடுங்க.. ஆல் தி பெஸ்ட்டு :)

வெட்டிப்பயல் said...

//சென்ஷி said...
கலக்குறே வெட்டி...

செம்மயா சிரிச்சுட்டேன்ப்பா.. :)))

அடுத்தடுத்த விமர்சனப்பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்!
//

சூப்பர் சென்ஷி... நீ ஆதரவு கொடுத்தனா சரி தான்... பட்டையைக் கிளப்பிடலாம் ;)

அடுத்து அன்பே சிவம் எழுதிடுவோமா?

வந்தியத்தேவன் said...

//வெட்டிப்பயல் said...

அடுத்து அன்பே சிவம் எழுதிடுவோமா?//

ஆஹா பிரிச்சுமேய நல்ல படம். நிறைய பின்நவீனத்துவங்கள் எல்லாம் எழுதலாம்.

மங்களூர் சிவா said...

//வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை//

ROTFL
:)))))))))))

Sanjai Gandhi said...

யய்யா.. சாமி.. இப்புடியா மனுஷங்கள வாச்சி பண்ணுவீங்க? நானும் கருத்து சொல்றேன்னு ஒரு கமெண்டு போடறது ஒரு குத்தமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :((

பாதுஷா மற்றும் காவி.கண்ணன் கலக்கலோ கலக்கல்.. :)))

கலக்கறேள் மாமனாரே.. :))

Sanjai Gandhi said...

வராதகவுண்டர் யாரு மாம்ஸ்?

Sanjai Gandhi said...

//கவுண்டர் சீக்கிரம் வருவார்.. நிறைய டெவில் ஷோ பாக்கி இருக்குது :)//

கொஞ்சம் பார்த்து சீக்கிரம் கருணை காட்டுங்க சாமியோவ்..

Sanjai Gandhi said...

//நிஜமாவா சொல்றீங்க.. கேட்கவே ஆச்சரியமா இருக்கு :)

நீங்க இவ்வளவு கஷ்டமா க்ளூ கொடுத்தா எப்படி கண்டுபிடிப்போம் :)//

கொய்யால.. :)))))))))))

Sanjai Gandhi said...

//நன்றி ’வந்தி’யத்’தேவன்’ :)//

ஓ.. இவரா அவரு? :)))))

♫சோம்பேறி♫ said...

ஹைய்யோ.. ஹைய்யோ.. செம காமெடிங்கோ..

புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரனுடன் நிறுத்திக் கொள்ளாமல், லொள்ளைத் தொடரவும்..

பினாத்தல் சுரேஷ் said...

பாட்ஷா: படம் நன்றாக இருக்கிறதென்று என் தமிழ் நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.. ஆனால் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த “மன குடி மாறிப்பொய்யேவு” படத்தில் இருந்து பல காட்சிகள் சுடப்பட்டிருக்கின்றன. ஒரு முறை பார்க்கலாம் - ஆனால் தெலுங்குப்படத்தை 100 முறை பார்க்கலாம். (கொட்டிப்பயல்)

கார்க்கிபவா said...

கிகிகி

ஜெகதீசன் said...

//
வராதகவுண்டன் தான் மக்களுக்கு புரியுமானு ஒரு சந்தேகம் இருந்தது. அதை நீங்க வந்து தீர்த்து வெச்சிட்டீங்க... மிக்க நன்றி ’வந்தி’யத்’தேவன்’ :)
//
ஓ.... இவரு தான் அவரா?
:)

சரவணகுமரன் said...

Super... :-)

பாசகி said...

ஹி ஹி :)

கோபிநாத் said...

தூள் ;)

Anonymous said...

அடிச்சி தொம்சம் பண்ணீட்டிங்க பாலாஜி.

நல்ல கவனிப்பு.

பரிசல்காரன் said...

வைத்தியக்காரனின் பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுவிட்டது.

தோழமையுடன்
-பரிசல்காரன்

நர்சிம் said...

கலக்கல் நண்பா.கலாய்த்தல்னா இது.குசும்பன் போட்டி பலமாக இருக்கு தலைவா உங்களுக்கு...

நர்சிம் said...

காவி கலக்கல்

ALIF AHAMED said...

:)))

::))))))

ஹய்ய்யோ ஹய்ய்யோ :)

இரா. வசந்த குமார். said...

புது வித டெவில்ஷோ பாட்ஷாவிலிருந்து ஆரம்பிக்கின்றதா...? கலக்குங்க வெட்டிஜி...!

கவுண்டருக்கு நம்ம பதிவர்களை அறிமுகம் செஞ்சு வெய்யுங்க..! ஷோ களைகட்டும்.

நாகை சிவா said...

அட்ரா சக்கை, அட்ரா சக்கை.

கலக்கல் வெட்டி!

வெட்டிப்பயல் said...

//வந்தியத்தேவன் said...
//வெட்டிப்பயல் said...

அடுத்து அன்பே சிவம் எழுதிடுவோமா?//

ஆஹா பிரிச்சுமேய நல்ல படம். நிறைய பின்நவீனத்துவங்கள் எல்லாம் எழுதலாம்.
//

ஆமாம் தல...

ஆனா காலைல கழிவறையில் சிந்திக்கும் போது இன்னும் ரெண்டு மூணு படங்கள் அதுக்கு முன்னாடி எழுதணும்னு முடிவு பண்ணியாச்சு. முதல் படம் நரசிம்மா ;)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
//வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை//

ROTFL
:)))))))))))
//

Dankees Sivanne :)

வெட்டிப்பயல் said...

//$anjaiGandh! said...
யய்யா.. சாமி.. இப்புடியா மனுஷங்கள வாச்சி பண்ணுவீங்க? நானும் கருத்து சொல்றேன்னு ஒரு கமெண்டு போடறது ஒரு குத்தமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :((

பாதுஷா மற்றும் காவி.கண்ணன் கலக்கலோ கலக்கல்.. :)))

கலக்கறேள் மாமனாரே.. :))

//

மாப்ஸ்,
ரத்த பூமில நிண்ணு வேடிக்கைப் பாக்கறதே தப்பு. நீ அங்க நிண்ணு சவுண்ட் விட்டா வாச்சு பண்ணாமலா இருப்பாங்க ;)

வெட்டிப்பயல் said...

// $anjaiGandh! said...
//கவுண்டர் சீக்கிரம் வருவார்.. நிறைய டெவில் ஷோ பாக்கி இருக்குது :)//

கொஞ்சம் பார்த்து சீக்கிரம் கருணை காட்டுங்க சாமியோவ்..
//

அப்ப முதல்ல மாப்ஸ்க்கு ஒரு டெவில் ஷோ போட்டுடுவோமா? ;)

வெட்டிப்பயல் said...

//சோம்பேறி♫ said...
ஹைய்யோ.. ஹைய்யோ.. செம காமெடிங்கோ..

புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரனுடன் நிறுத்திக் கொள்ளாமல், லொள்ளைத் தொடரவும்..
//

நிச்சயமா பாஸ்.. நீங்க தொடர்ந்து காமெடியில் கலக்கவும் :)

வெட்டிப்பயல் said...

//பினாத்தல் சுரேஷ் said...
பாட்ஷா: படம் நன்றாக இருக்கிறதென்று என் தமிழ் நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.. ஆனால் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த “மன குடி மாறிப்பொய்யேவு” படத்தில் இருந்து பல காட்சிகள் சுடப்பட்டிருக்கின்றன. ஒரு முறை பார்க்கலாம் - ஆனால் தெலுங்குப்படத்தை 100 முறை பார்க்கலாம். (கொட்டிப்பயல்)
//

ஆக்சுவலா பாட்ஷா மாதிரி தான் இந்திரா படம் எடுத்தாங்க. அது சூப்பர் டூப்பர் ஹிட்... ஆனா ஃபிளாஷ் பேக் எல்லாம் வேற. ஒரு நானூறு ஐநூறு பேரை சிருகாரு வெட்டி சாய்ப்பாரு.. இந்திரசேனா ரெட்டி :)

வெட்டிப்பயல் said...

//கார்க்கி said...
கிகிகி
//

Dankees Kaarki :)

வெட்டிப்பயல் said...

//ஜெகதீசன் said...
//
வராதகவுண்டன் தான் மக்களுக்கு புரியுமானு ஒரு சந்தேகம் இருந்தது. அதை நீங்க வந்து தீர்த்து வெச்சிட்டீங்க... மிக்க நன்றி ’வந்தி’யத்’தேவன்’ :)
//
ஓ.... இவரு தான் அவரா?
:)
//

he he he :)

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
Super... :-)
//

//பாசகி said...
ஹி ஹி :)
//

//கோபிநாத் said...
தூள் ;)

//

நன்றி! நன்றி! நன்றி!

வெட்டிப்பயல் said...

//வடகரை வேலன் said...
அடிச்சி தொம்சம் பண்ணீட்டிங்க பாலாஜி.

நல்ல கவனிப்பு.
//

நன்றி அண்ணாச்சி.. எல்லாம் ஒரு முயற்சி தான் :)

வெட்டிப்பயல் said...

//பரிசல்காரன் said...
வைத்தியக்காரனின் பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுவிட்டது.

தோழமையுடன்
-பரிசல்காரன்
//

வாங்க நட்சத்திரமே :)

ஆஹா.. அது அங்க இல்லையே.. இருந்தாலும் நான் விட்டிருக்க கூடாது தான் :)

வெட்டிப்பயல் said...

//நர்சிம் said...
கலக்கல் நண்பா.கலாய்த்தல்னா இது.குசும்பன் போட்டி பலமாக இருக்கு தலைவா உங்களுக்கு...
//

வாங்க கார்ப்ரேட் கம்பரே...

நன்றி நன்றி

இருந்தாலும் குசும்பன் கூட யாரும் போட்டி போட முடியாது. அவருக்கு நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாமே குசும்பு தான் ;)

வெட்டிப்பயல் said...

//மின்னுது மின்னல் said...
:)))

::))))))

ஹய்ய்யோ ஹய்ய்யோ :)
//

Dankees Minnal :)

வெட்டிப்பயல் said...

//இரா. வசந்த குமார். said...
புது வித டெவில்ஷோ பாட்ஷாவிலிருந்து ஆரம்பிக்கின்றதா...? கலக்குங்க வெட்டிஜி...!

கவுண்டருக்கு நம்ம பதிவர்களை அறிமுகம் செஞ்சு வெய்யுங்க..! ஷோ களைகட்டும்//

நன்றி வசந்த்...

டெவில் ஷோ அளவுக்கு எல்லாம் கலாய்க்கலையே... இது சும்மா ஒரு முயற்சி தான்.. நல்லா போச்சுனா நிறைய கொண்டு வரலாம்.

நிறைய பதிவர்கள் அதிகமா பழக்கம் இல்லாததால கொஞ்சம் பயந்து தான் எழுத வேண்டியதா இருக்கு...

இப்ப தால் லைட்டா ஆரம்பிச்சிருக்கோம். நர்சிம், பரிசல், கார்க்கி எல்லாம் வந்திருக்காங்க. அப்படியே வளைச்சி போட்டுட வேண்டியது தான் ;)

வெட்டிப்பயல் said...

// நாகை சிவா said...
அட்ரா சக்கை, அட்ரா சக்கை.

கலக்கல் வெட்டி!

7:37 AM//

டாங்கிஸ் புலி :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நானும் படித்துவிட்டேன்..,

குறை ஒன்றும் இல்லை !!! said...

Kavundar : Atra Sakka .. Atra Sakka

வெட்டிப்பயல் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
நானும் படித்துவிட்டேன்..,
//

ந‌ன்றி சுரேஷ் :)

//குறை ஒன்றும் இல்லை !!! said...
Kavundar : Atra Sakka .. Atra Sakka
//

Danks Boss :)

ஊர்சுற்றி said...

நல்லா இருக்குங்க. இதேமாதிரி தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

சிவக்குமரன் said...

இத இன்னிக்கு(14ஜூன்2021) படிச்சாலும், சரியாதான் இருக்கு.