தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, October 21, 2008

விடைபெறுகிறேன் நண்பர்களே!!!

ஒரு வழியா 2006 பிப்ரவரில ஆரம்பிச்ச ஆன்சைட் வாழ்க்கை இப்ப முடிவுக்கு வர போகுது. இங்க வந்ததுல ஒரு சில நல்லது நடந்தது. அதுல முக்கியமானது ப்ளாக் ஆரம்பிச்சி, உலமெங்கும் நண்பர்களை பெற்றது. 2006ல எழுதன அளவுக்கு ஆர்வமா அதுக்கு அப்பறம் எழுதல. இருந்தாலும் இந்த வலைப்பதிவு நண்பர்களோட இருக்குற தொடர்பு அப்படியே தான் இருக்குது.

இனிமே தொடர்ந்து எழுத முடியுமானு தெரியல. அடுத்த மூணு மாசம் பெங்களூர்ல நண்பர்களோட இருக்க போறேன். அதுக்கு பிறகு எங்கனு தெரியல. சென்னை வரலாம்னு ப்ளான். ஒரு வேளை மறுபடியும் ஆன்சைட்டாகவும் இருக்கலாம். நிச்சயமா சொல்ல முடியாது.

எப்படியும் அடுத்த மூணு மாசத்துக்கு வீக் எண்ட் எல்லாம் சென்னை தான். வலைப்பதிவர்களை எல்லாம் சந்திக்க முடியுமானு தெரியல. ஆனா ஃபோன் பண்ணா கண்டிப்பா பேச நேரமிருக்கும். ஆனா பேர் சொல்லாம பேசி மண்டை காய விட்றாதீங்கப்பா. எப்படியாவது ஃபோன் நம்பரை எல்லாருக்கும் அப்டேட் செய்கிறேன். (பெங்களூர்ல தமிழ் காலர் ட்யூன் வைக்க முடியுமா? ஃபோன் நம்பர் கேட்டு கால் பண்ணி பார்த்து அடிக்க மாட்டானுங்களே? )

பெங்களூர்ல நண்பர்கள் வீட்ல கம்ப்யூட்டரே இல்லை. கேட்டா டீவியும், DVD ப்ளேயரும் இருக்குனு சொல்றானுங்க. ஏன்னா காலேஜ்ல கம்ப்யூட்டர் வெறும் படம் பார்க்கவும், பாட்டு கேட்கவும் மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆபிஸ்ல க்ளைண்ட் நெட்வொர்க்ல வேற எதையும் அக்ஸஸ் பண்ண முடியாது. அதனால இனிமே பர்சனல் மெயில் செக் பண்றது கூட கஷ்டம் தான்.

எழுத நிறைய விஷயம் கிடைச்சாலும் எழுத முடியாது. இத தான் வெள்ளக்காரன் ஸ்டோன் சீ நோ டாக், டாக் சீ நோ ஸ்டோனு சொல்லிருக்கான்.

ஆசை ஆசையா பார்த்து பார்த்து வாங்கன பொருட்களை எல்லாம் பாதி ரேட்டுக்கு விக்கறது கஷ்டமா இருக்கு (5.1 Speaker விக்கறதுக்கு கடைசி வரைக்கும் மனசே வரலை. வாங்கறவனுக்கு பயங்கர சந்தோஷம்). இருந்தாலும் நாடோடி வாழ்க்கைனா இதெல்லாம் ஜகஜம்னு எடுத்துட்டு போக வேண்டியது தானு மனசை தேத்திக்கிட்டேன். இன்னும் பேக்கிங் வேலை இருக்கு. ஆணியும் ரொம்ப அதிகம். ஃபேர் வெல் பார்ட்டிகளும் நிறைய இருக்குது. இனிமே ப்ளாக் பக்கம் வர முடியுமானு தெரியல.

இத்தனை நாள் தொடர்ந்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி.

நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் மீண்டும் வந்து உங்களை தொல்லை செய்வேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

பாஸ்டனிலிருந்து சனிக்கிழமை கிளம்புகிறேன். தீபாவளி அன்று இந்தியாவில் இருப்பேன். அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!!!

84 comments:

கப்பி | Kappi said...

//5.1 Speaker விக்கறதுக்கு கடைசி வரைக்கும் மனசே வரலை//

விக்கறதுக்கு மனசு வரலைனா ஓசில எனக்கு கொடுத்துடுங்க..உங்களுக்காக இந்த தியாகம் கூட செய்ய மாட்டேனா :)))

வாழ்த்துகள்!! என்சாய் மாடி :)

ILA (a) இளா said...

நல்ல படியா போய்ட்டு மூணு மாசத்திலோ அதுக்கு அதிகமானாலும் வா பாலாஜி!

((சரியான அர்த்தத்துல படிக்கனும்..))

வெட்டிப்பயல் said...

//கப்பி | Kappi said...
//5.1 Speaker விக்கறதுக்கு கடைசி வரைக்கும் மனசே வரலை//

விக்கறதுக்கு மனசு வரலைனா ஓசில எனக்கு கொடுத்துடுங்க..உங்களுக்காக இந்த தியாகம் கூட செய்ய மாட்டேனா :)))

வாழ்த்துகள்!! என்சாய் மாடி :)
//

கப்பி,
ஏற்கனவே கொடுத்தாச்சு. முன்னாடியே சொல்லியிருந்தா கொடுத்திருப்பனே.

நீயும் இங்க இருந்து சீக்கிரம் பொட்டி கட்டப்போற ஆள் தானே. அப்பறம் உனக்கு எதுக்கு இதெல்லாம் ;)

வெட்டிப்பயல் said...

// ILA said...
நல்ல படியா போய்ட்டு மூணு மாசத்திலோ அதுக்கு அதிகமானாலும் வா பாலாஜி!

((சரியான அர்த்தத்துல படிக்கனும்..))
//

நீங்க எத்தனை மீனிங்ல சொல்றீங்கனு தெரியல.. இருந்தாலும் நல்ல அர்த்தத்துல புரிஞ்சிக்கிறேன்...

மிக்க நன்றி அண்ணே :)

Natty said...

வெட்டி...நீங்களாவது எல்லாத்தையும் பாதி விலையில வித்தீங்க..... நான் போன வருடம் கிளம்பியப்போ எல்லாம் இலவசமாக கொடுத்துட்டு வந்தேன்... ;) நாடோடி வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்னா ;)

... நம்ம ஊருக்கு போனா, ப்ளாக் எழுதுறத விட நிறைய உருப்படியான வேலையெல்லாம் கூட செய்யலாம்.... தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.. ;)

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள் பாலாஜி. மனைவிக்கும் என் வாழ்த்துக்கள். குழந்தை பிறந்த பின் இன்னும் பதிவுப்பக்கம் வர நேரம் இருக்காது என்றாலும் முடியும் போது எழுதுங்கள்.

நாகராஜன் said...

தலை தீபாவளி வாழ்த்துக்கள் பாலாஜி. நேரம் கிடைக்கும் போது தவறாமல் கண்ணில் பட்ட, காதில் கேட்ட விஷயங்களை பதிவு பண்ணுங்கள்.

சின்னப் பையன் said...

இனிய பயணமாக வாழ்த்துக்கள் வெட்டி... 'ப்ரமோஷன்' விஷயத்தை அப்டேட் பண்ணுங்க... தீபாவளி நல்வாழ்த்துக்கள்... நெக்ஸ்ட் இந்தியாவிலே மீட் பண்ணுவோம்.... :-))

இலவசக்கொத்தனார் said...

இந்த மாதிரி அல்வா எல்லாம் குடுக்காம இங்க இருந்து சகாய விலையில் ஒரு மடிக்கணினி வாங்கிட்டுப் போகலாமுல்ல.

அப்புறம் அங்க போயி இந்தப் பக்கமெல்லாம் வராம இருந்திராதீங்கப்பூ. வீட்டுல விசேஷமெல்லாம் கரெக்ட்டா அப்டேட் செய்யணும் புரிஞ்சுதா.

வெட்டிப்பயல் said...

//Natty said...
வெட்டி...நீங்களாவது எல்லாத்தையும் பாதி விலையில வித்தீங்க..... நான் போன வருடம் கிளம்பியப்போ எல்லாம் இலவசமாக கொடுத்துட்டு வந்தேன்... ;) நாடோடி வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்னா ;)
//
நான் எல்லாத்தையும் வாங்கி ஒரு வருஷம் கூட ஆகல. ஸ்பீக்கர் மே மாசம் கடைசி வாரத்துல வாங்கனது :(

//... நம்ம ஊருக்கு போனா, ப்ளாக் எழுதுறத விட நிறைய உருப்படியான வேலையெல்லாம் கூட செய்யலாம்.... தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.. ;)

3:45 PM
//

ஆமாம். உண்மை தான்... நிறைய படிக்கலாம். நண்பர்களும் அதிகம். சொந்தக்காரங்களும் அதிகம். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலே நேரம் போவது தெரியாது.

தங்களுக்கும் என் வாழ்த்துகள்...

Sundar Padmanaban said...

போன தடவை பாத்துட்டு மறுபடியும் சந்திக்கவே இல்லை. இணையப் பக்கம் அடிக்கடி வராததால பேச்சிலர்ஸ்ஸா பாத்தவங்க பேச்சு-இலரா (கல்யாணமானதும்) ஆனதுகூட தெரிய மாட்டேங்குது! :(

பரவாயில்லை. ஊருக்கு நல்லபடியா போய்ட்டு இன்னொரு ப்ராஜக்ட்டுக்கு வாங்க. பயணம் இனிதாக அமையட்டும்.

வாழ்த்துகள்!

siva gnanamji(#18100882083107547329) said...

நல்வரவு பாலாஜி!
இனி நிறைய எழுதுவீங்கனு
எதிர்பார்க்கலாமா?

Anonymous said...

// ஆபிஸ்ல க்ளைண்ட் நெட்வொர்க்ல வேற எதையும் அக்ஸஸ் பண்ண முடியாது. அதனால இனிமே பர்சனல் மெயில் செக் பண்றது கூட கஷ்டம் தான்.//

அப்போ நீங்க இனிமேல் வெட்டிபய இல்லன்னு சொல்லுங்க

வெட்டிப்பயல் said...

// பத்மா அர்விந்த் said...
வாழ்த்துக்கள் பாலாஜி. மனைவிக்கும் என் வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி டாக்டர்.

// குழந்தை பிறந்த பின் இன்னும் பதிவுப்பக்கம் வர நேரம் இருக்காது என்றாலும் முடியும் போது எழுதுங்கள்.
//
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் டாக்டர்.

வாழ்த்திற்கு நன்றி.

வெட்டிப்பயல் said...

// ராசுக்குட்டி said...
தலை தீபாவளி வாழ்த்துக்கள் பாலாஜி. நேரம் கிடைக்கும் போது தவறாமல் கண்ணில் பட்ட, காதில் கேட்ட விஷயங்களை பதிவு பண்ணுங்கள்.
//

மிக்க நன்றி ராசுக்குட்டி.. நிச்சயம் முயற்சி செய்கிறேன்.

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
இனிய பயணமாக வாழ்த்துக்கள் வெட்டி... 'ப்ரமோஷன்' விஷயத்தை அப்டேட் பண்ணுங்க... தீபாவளி நல்வாழ்த்துக்கள்... நெக்ஸ்ட் இந்தியாவிலே மீட் பண்ணுவோம்.... :-))
//

மிக்க நன்றி ச்சின்னப் பையன்.. நிச்சயம் மீட் பண்ணுவோம் :)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...
இந்த மாதிரி அல்வா எல்லாம் குடுக்காம இங்க இருந்து சகாய விலையில் ஒரு மடிக்கணினி வாங்கிட்டுப் போகலாமுல்ல.
//
வாங்கிட்டு போறேன் கொத்ஸ். ஆனா பசங்க ரூம்ல புது லேப் டாப் கொண்டு போய் வெச்சா அதை பிரிச்சி மேய்ஞ்சிடுவானுங்க. யாரையும் எதுவும் சொல்ல முடியாது. நிலைமையை பார்த்துட்டு தான் எடுத்துட்டு போக முடியும்.

//
அப்புறம் அங்க போயி இந்தப் பக்கமெல்லாம் வராம இருந்திராதீங்கப்பூ. வீட்டுல விசேஷமெல்லாம் கரெக்ட்டா அப்டேட் செய்யணும் புரிஞ்சுதா.
//
அதை கண்டிப்பா செய்யறேன். சென்னைல இண்டர்நெட் இருக்கு. ஆனா பதிவு எல்லாம் போட்டு கும்மியடிக்க முடியாது. முக்கியமான விஷயங்களை மட்டும் தெரியப்படுத்தலாம் :)

வெட்டிப்பயல் said...

//வற்றாயிருப்பு சுந்தர் said...
போன தடவை பாத்துட்டு மறுபடியும் சந்திக்கவே இல்லை. இணையப் பக்கம் அடிக்கடி வராததால பேச்சிலர்ஸ்ஸா பாத்தவங்க பேச்சு-இலரா (கல்யாணமானதும்) ஆனதுகூட தெரிய மாட்டேங்குது! :(
//
:)))

அது நடந்து 11 மாசத்துக்கு மேல ஆகுது. (நவ 15 2007)

//
பரவாயில்லை. ஊருக்கு நல்லபடியா போய்ட்டு இன்னொரு ப்ராஜக்ட்டுக்கு வாங்க. பயணம் இனிதாக அமையட்டும்.

வாழ்த்துகள்!
//
மிக்க நன்றி சுந்தர்... எப்பவாது வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம் :)

வெட்டிப்பயல் said...

//siva gnanamji(#18100882083107547329) said...
நல்வரவு பாலாஜி!
இனி நிறைய எழுதுவீங்கனு
எதிர்பார்க்கலாமா?
//

ஆஹா..

இதுவே கடைசி பதிவாகவும் இருக்கலாம்னு நான் பதிவு போட்டா... இப்படி கேக்கறீங்களே.

இனிமே பதிவு எழுதுவும் ரொம்ப கஷ்டம்...

வெட்டிப்பயல் said...

//பக்கி லுக் ... said...
// ஆபிஸ்ல க்ளைண்ட் நெட்வொர்க்ல வேற எதையும் அக்ஸஸ் பண்ண முடியாது. அதனால இனிமே பர்சனல் மெயில் செக் பண்றது கூட கஷ்டம் தான்.//

அப்போ நீங்க இனிமேல் வெட்டிபய இல்லன்னு சொல்லுங்க
//

மறுபடியும் வந்தாலும் வெட்டிப்பய தான் ;)

MSK / Saravana said...

இப்படியெல்லாம் சொல்லிட்டு "எஸ்" ஆக கூடாது.. பொது வாழ்க்கைக்கு வந்த பின், திரும்பி போகுதல் செல்லாது..செல்லாது..

நேரம் கிடைக்கும் போது எழுதுங்க.. உங்களிடம் அருமையான ஒரு எழுத்து திறமை இருக்கும் போது, ஏதாவது காரணம் காட்டி எழுதாம இருக்காதீங்க..

கண்டிப்பா எழுதனும்.. அண்ணிய கேட்டதா சொல்லுங்க.. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

G.Ragavan said...

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாலாஜி. நல்லபடியா ஊர் சென்று சிறப்போடு வாழ்க.

வலைப்பூ பக்கம் வராம இருந்துறாத... அப்பப்பக் கண்டுக்க... நானும் கொஞ்சம் நல்லவந்தான். :D

எல்லாம் இறைவனருளால் நல்லபடி நடக்கும். வாழ்க. வளர்க.

வெட்டிப்பயல் said...

// Saravana Kumar MSK said...
இப்படியெல்லாம் சொல்லிட்டு "எஸ்" ஆக கூடாது.. பொது வாழ்க்கைக்கு வந்த பின், திரும்பி போகுதல் செல்லாது..செல்லாது..
//
:))

//
நேரம் கிடைக்கும் போது எழுதுங்க.. உங்களிடம் அருமையான ஒரு எழுத்து திறமை இருக்கும் போது, ஏதாவது காரணம் காட்டி எழுதாம இருக்காதீங்க..
//
கண்டிப்பா எழுதாமலே போயிட மாட்டேன். அடுத்து ரெண்டு ப்ராஜக்ட் இருக்கு. நேரம் கிடைக்கும் போது எழுதுவேன். ஆனா ப்ளாக்ல போட முடியுமானு தெரியல. தொடர்ந்து இந்த மாதிரி எழுத முடியுமானு தெரியல. எழுத வாய்ப்பிருந்தா, தினமும் கூட எழுதுவேன். இன்னைக்கு நிலைமைக்கு நண்பர்களோட பேசும் போது சொல்றதை பார்த்தா ரொம்ப நாள் எழுத முடியாதுனு தான் நினைக்கிறேன்.

//
கண்டிப்பா எழுதனும்.. அண்ணிய கேட்டதா சொல்லுங்க.. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
//
மிக்க நன்றிப்பா.. உனக்கும் என் மனமுவந்த தீபாவளி வாழ்த்துகள்!!!

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாலாஜி. நல்லபடியா ஊர் சென்று சிறப்போடு வாழ்க.

வலைப்பூ பக்கம் வராம இருந்துறாத... அப்பப்பக் கண்டுக்க... நானும் கொஞ்சம் நல்லவந்தான். :D

எல்லாம் இறைவனருளால் நல்லபடி நடக்கும். வாழ்க. வளர்க.
//

மிக்க நன்றி ஜி.ரா...

நீங்க நல்லவர்னு எல்லாருக்கும் தெரியும். வலைப்பதிவுல இல்லைனாலும் எப்படியும் ஈ-மெயில்ல டச்ல இருக்கத்தானே போகிறோம்.

ரெண்டு பேருக்குமே அபிசியல் மெயில் ஐடி கூட தெரியும். அப்பறம் என்ன? :)

நசரேயன் said...

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள். சீக்கிரமா பெங்களுர் ல பதிவர் சந்திப்பு நடத்திடலாம் :)

முத்துகுமரன் said...

வாழ்த்துகள் வெட்டி!

வரும் நாட்களை இனிமையாக அனுபவியுங்கள் :-)

Unknown said...

பாலாஜி,

கடைசிவரை நாம சந்திக்க முடியாமலே போயிருச்சேப்பா..சரி,சீக்கிரம் ஆன்சைட் வாங்கிகிட்டு மறுபடி இங்க வந்து சேருங்க.

இந்தியாவில் உங்க முயற்சிகள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.

I will miss you my friend.Good luck and God bless you.

வெட்டிப்பயல் said...

//நசரேயன் said...
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள். சீக்கிரமா பெங்களுர் ல பதிவர் சந்திப்பு நடத்திடலாம் :)
//
மிக்க நன்றி நசரேயன்...

நிச்சயமா :)

வெட்டிப்பயல் said...

//முத்துகுமரன் said...
வாழ்த்துகள் வெட்டி!

வரும் நாட்களை இனிமையாக அனுபவியுங்கள் :-)
//

மிக்க நன்றி முத்துகுமரன்...

வெட்டிப்பயல் said...

// செல்வன் said...
பாலாஜி,

கடைசிவரை நாம சந்திக்க முடியாமலே போயிருச்சேப்பா..சரி,சீக்கிரம் ஆன்சைட் வாங்கிகிட்டு மறுபடி இங்க வந்து சேருங்க.

இந்தியாவில் உங்க முயற்சிகள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.

I will miss you my friend.Good luck and God bless you.
//

ஆமாம்ணே... சந்திக்கவே முடியாம போயிடுச்சி... நான் என் பேரை முதல்ல சொன்னதே உங்ககிட்ட தான். முதல்ல என் பேர்ல பின்னூட்டம் போட்டதும் உங்க பதிவுக்கு தான்...

அந்த நாள் ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே...

நிச்சயம் திரும்ப வரும் போது சந்திப்போம். இல்லைனா எப்படியும் கோவைல தான் நான் செட்டில் ஆவேன். அப்ப சந்திக்கலாம் :))

நசரேயன் said...

/*நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் மீண்டும் வந்து உங்களை தொல்லை செய்வேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்*/
கண்டிப்பாக நீங்க எழுதனுன்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Divya said...

Have a safe journey & a blessed stay in India!!

Keep in touch anna:))))

குமரன் (Kumaran) said...

பாலாஜி,

இந்த ரெண்டு வருடத்தில உங்க எழுத்துகள்ல எத்தனையோ படிச்சு இரசிச்சிருந்தாலும் நீங்க உள்ள வர்றப்ப அதிரடியா வந்தீங்களே, அதை மறக்கவே முடியாது.

மறந்துறாதீங்க.

வாழ்த்துகள்.

அன்பன்,
குமரன்.

திவாண்ணா said...

இந்தியாவுக்கு நல்வரவு! போன் நம்பர் மெயிலுங்க!

அரை பிளேடு said...

Wishing you all the best Balaji !

Sridhar V said...

பாலாஜி,

இந்தியா திரும்புவதற்கு வாழ்த்துகள். உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் பதிவை விட்டுப் போயிற மாட்டீங்க. பழக்கதோஷம் அவ்வளவு சுலபமா விட்டுடாதே :-)

தொடர்ந்து எழுதுங்க. உங்க கௌண்டர் பதிவுகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கு. :-) பதிவு எழுதுவது குறைந்தாலும் பத்திரிகைகளில் எழுத முயற்சி செய்யவும். கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

SurveySan said...

why this big build up? you sound like you are going to somalia or rwanda.

there is no reason to stop blogging for 'no PC' reasons. sounds silly to me.

office'la email padikkara nerathula, oru padhivu podayya.
OR add other 'vettis' like us to your blog and email us your post and we will post for ya ;)

ensoy madi!

பூச்சாண்டியார் said...

வாழ்த்துகள்.. தொடர்ந்து எழுதி எங்களை குஷி படுத்தவும்..

sriram said...

hi
Good Luck, we and Boston would be waiting for your return, Call me at 781 363 9168 before you leave if time permits, I live in Quincy
regards
Sriram, Quincy MA USA

வெட்டிப்பயல் said...

//நசரேயன் said...
/*நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் மீண்டும் வந்து உங்களை தொல்லை செய்வேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்*/
கண்டிப்பாக நீங்க எழுதனுன்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

//

நிச்சயம் நசரேயன்...

வெட்டிப்பயல் said...

//divya said...
Have a safe journey & a blessed stay in India!!

Keep in touch anna:))))//

மிக்க நன்றிமா...

கண்டிப்பாக...

தொடர்ந்து எழுதவும்...

வெட்டிப்பயல் said...

//குமரன் (kumaran) said...
பாலாஜி,

இந்த ரெண்டு வருடத்தில உங்க எழுத்துகள்ல எத்தனையோ படிச்சு இரசிச்சிருந்தாலும் நீங்க உள்ள வர்றப்ப அதிரடியா வந்தீங்களே, அதை மறக்கவே முடியாது.

மறந்துறாதீங்க.

வாழ்த்துகள்.

அன்பன்,
குமரன்//

அதை மறக்க முடியுமா குமரன். ”திராவிடன் என்பவன் யார்?”னு கேட்டு ஒரு மணி நேரத்துல ஐம்பது பின்னூட்டம். அப்ப நிறைய பேர் நீ சீக்கிரம் காணம போயிடுவனு சொன்னாங்க. ரெண்டு வருஷம் ப்ளாகிங்ல இருக்கேன். அப்படி சொன்னவங்க தான் இப்ப காணாம போயிட்டாங்க :)

நீங்க தொடர்ந்து தந்த ஆதரவிற்கு நன்றி :)

வெட்டிப்பயல் said...

// திவா said...
இந்தியாவுக்கு நல்வரவு! போன் நம்பர் மெயிலுங்க!//

கண்டிப்பா :)

வெட்டிப்பயல் said...

//அரை பிளேடு said...
Wishing you all the best Balaji !//

மிக்க நன்றி தலைவா... நீங்க நேரம் கிடைக்கும் போது எழுதவும். உங்களோட ரசிகர்கள் நிறைய பேர் காத்துட்டு இருக்கோம் :)

வெட்டிப்பயல் said...

//sridhar narayanan said...
பாலாஜி,

இந்தியா திரும்புவதற்கு வாழ்த்துகள். உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் பதிவை விட்டுப் போயிற மாட்டீங்க. பழக்கதோஷம் அவ்வளவு சுலபமா விட்டுடாதே :-)

தொடர்ந்து எழுதுங்க. உங்க கௌண்டர் பதிவுகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கு. :-) பதிவு எழுதுவது குறைந்தாலும் பத்திரிகைகளில் எழுத முயற்சி செய்யவும். கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

//

மிக்க நன்றி தல...

எனக்கு அக்ஸஸ் இருந்தா என்னால எழுத முடியாம இருக்காது. இந்தியால இருந்து வந்த பிராஜக்ட்க்கு வந்த நண்பன் சொன்னது ODCல வேற எந்த சைட்டையும் அக்ஸஸ் பண்ண முடியாது. அதனால நீ ஆபிஸ் நேரத்துல ப்ளாக் பார்க்க முடியாதுனு.

அதே மாதிரி வீட்டுலயும் அக்ஸஸ் இருக்காது. போய் ஆராய்ச்சி பண்ணி பார்க்கறேன்.

சான்ஸ் கிடைச்சா 2006ல எழுதன மாதிரி கண்டபடி எழுதுவேன். ஏன்னா மேட்டர் நிறைய கிடைக்கும். கண்டிப்பா நீங்களே படிச்சி பாராட்டற மாதிரி சில கதைகளை எழுதுவேன் :)

வெட்டிப்பயல் said...

//surveysan said...
why this big build up? you sound like you are going to somalia or rwanda.

there is no reason to stop blogging for 'no PC' reasons. sounds silly to me.
//
நான் எழுத மாட்டேனு சொல்லலை. எழுத முடியாம போக வாய்ப்பிருக்குனு சொல்றேன். பார்க்கலாம்...

//office'la email padikkara nerathula, oru padhivu podayya.
OR add other 'vettis' like us to your blog and email us your post and we will post for ya ;)

ensoy madi!//

தமிழ்ல எழுத முடிஞ்சா கண்டிப்பா இந்த மாதிரி யாருக்காவது அனுப்பி நிறைய பதிவு போடறேன்...

வெட்டிப்பயல் said...

//sriram said...
hi
Good Luck, we and Boston would be waiting for your return, Call me at 781 363 9168 before you leave if time permits, I live in Quincy
regards
Sriram, Quincy MA USA//

இப்ப நேரமாகிடுச்சே... நாளைக்கு கூப்பிடறேன் ஸ்ரீராம்... வாழ்த்திற்கு நன்றி :)

பரிசல்காரன் said...

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே..

சீக்கிரமா வாங்க.

உங்கள் சேவை வலையுலகுக்குத் தேவை.

(கதையல்ல நிஜம்..!)

SP.VR. SUBBIAH said...

////நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் மீண்டும் வந்து உங்களை தொல்லை செய்வேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
பாஸ்டனிலிருந்து சனிக்கிழமை கிளம்புகிறேன். தீபாவளி அன்று இந்தியாவில் இருப்பேன். அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!!!////

இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம். மூன்று மாதங்கள் கழித்து ஒரு மடிக் கணினி வித் நெட் கனெக்சன் வாங்கிவிடுங்கள்.பிறகு சந்திப்போம். தீபாவள் வாழ்த்துக்கள் பாலாஜி!

புருனோ Bruno said...

சென்னை செண்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் தான் நம்ம ஜாகை.

எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கலாம்

98421 11725

வெட்டிப்பயல் said...

//பரிசல்காரன் said...
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே..

சீக்கிரமா வாங்க.

உங்கள் சேவை வலையுலகுக்குத் தேவை.

(கதையல்ல நிஜம்..!)

//

தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் பத்திரிக்கை ஆசிரியரே :)

எப்படியும் மாசத்துக்கு ஒரு முறையாவது கோவை வருவேன். நிச்சயம் சந்திக்கலாம் :)

நீங்க எந்த சேவையை சொல்றீங்கனு தெரியல... உங்க ஏரியால எல்லாம் சந்தகைனு தானே சொல்லுவீங்க :)

வெட்டிப்பயல் said...

//sp.vr. subbiah said...
////நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் மீண்டும் வந்து உங்களை தொல்லை செய்வேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
பாஸ்டனிலிருந்து சனிக்கிழமை கிளம்புகிறேன். தீபாவளி அன்று இந்தியாவில் இருப்பேன். அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!!!////

இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம். மூன்று மாதங்கள் கழித்து ஒரு மடிக் கணினி வித் நெட் கனெக்சன் வாங்கிவிடுங்கள்.பிறகு சந்திப்போம். தீபாவள் வாழ்த்துக்கள் பாலாஜி!//

மடிக்கணினி வாங்கியாச்சி வாத்தியார் ஐயா. ஆனா பெங்களூர் கொண்டு போக முடியுமானு தெரியல...

பார்க்கலாம் :)

வெட்டிப்பயல் said...

//புருனோ bruno said...
சென்னை செண்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் தான் நம்ம ஜாகை.

எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கலாம்
//

நிச்சயமா கூப்பிடறேன் டாக்டர்... உங்களை ஏற்கனவே இரண்டு முறை அழைத்திருக்கிறேன். காலைல ஒரு ஆறரை மணி வாக்குல... வாள மீனுக்கும் பாட்டு ரிங் டோன் கேட்டுட்டு இருந்துச்சு. நீங்க எடுக்கல. நீங்க பிஸினு விட்டுட்டேன்.

வந்ததும் நிச்சயம் கூப்பிடறேன்...

Anonymous said...

என்னிடம் கொஞ்சம் ஓஞ்ச வாயப்பயமும், ஒரு ஓட்டை கொம்பியூட்டரும் பெங்களூரில் இருக்கிறது...

எங்க வீட்டுக்கு வந்தால் ஒரு மணி நேர பிரவுசிங் அனுமதிக்கிறேன்...

மெளலி (மதுரையம்பதி) said...

நல்வரவு பாலாஜி. :)

//பெங்களூர்ல தமிழ் காலர் ட்யூன் வைக்க முடியுமா? //

கண்டிப்பாக முடியும். நம்ம ராகவ் கூட தமிழ் பாட்டுத்தான் வச்சுருக்கார். ஷைல்ஸ் அக்கா தமிழ்/கன்னடா அப்பப மாத்திக்குவாங்க :)

ஜிரா சொன்னது போல, நானும் கூட கெட்டவன் இல்லீங்க....போன் நம்பர் குடுத்தா பேசுவேன். பெங்களூரில் இருப்பதால் நேரில் சந்திக்கலாம். :)

ஆமாம், இங்கே எந்த ஏரியால தங்கப் போகிறீர்கள்?

எலக்ட்ரானிக் ஸிட்டி ஆப்பிஸ் தானே?.

முரளிகண்ணன் said...

சென்னை உங்களை மகிழ்வோடு அழைக்கிறது

Divyapriya said...

happy journey and happy thalai diwali anna...

thodarndhu eludhunga...apdi ellaam posukkunnu bye sollidaadheenga :(

SurveySan said...

////நான் எழுத மாட்டேனு சொல்லலை. எழுத முடியாம போக வாய்ப்பிருக்குனு சொல்றேன். பார்க்கலாம்...////

dasavatharam dialogue maadhiri irukku ;)

have fun.

hope one day, i can write a similar 'return2india' post ;)

கைப்புள்ள said...

Bon Voyage Balaji. Naanum Chennaikku weekend traveller dhaan. Chennaiyil oru weekendil sandhippom. Weekdaysil mudindhal Bangaloreil sandhippom.

All the Best.

புருனோ Bruno said...

//நீங்க எடுக்கல. நீங்க பிஸினு விட்டுட்டேன். //

அறுவை அரங்கில் இருந்தால் எடுக்க முடியாது

Anonymous said...

Dear Vetti,

Happy Diwali,

Convey our greetings to every one at home.

Cheers
Christo

மங்களூர் சிவா said...

வெல்கம், வெல்கம்
நல்வரவு பாலாஜி!

பெங்களூர் வந்துட்டு போன் பண்ணுங்க!

கோவி.கண்ணன் said...

எங்கும், என்றும் மகிழ்வோடு இருக்க வாழ்த்துக்கள் !

பொய்யன் said...

வெட்டிப்பயல் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. என்ன செய்றது. ஓக்கே என்ஜாய். நான் கூட 77வது பதிவுக்கு அப்றம் விலகிடலாம்னு இருக்கேன். டயர்டா இருக்கு. எக்மோரில் என் நிறுவன கேரேஜை இடித்து பெரிய இடமாக கட்டுகிறேன். சென்னை வரும் தமிழ்ப் பதிவர்கள் அங்கு இலவசமாக தங்கிக் கொள்ளலாம். உங்களையும் வரவேற்கிறேன். ஆஸ்திரேலியன் ஒயின் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம். வாழ்த்துக்கள்.

Kavinaya said...

இந்தியால இருந்து எழுத முடியாதுன்னா எப்படி? :) நிச்சயமா நேரமும் வாய்ப்பும் வாய்க்கும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்!

MyFriend said...

இனிதே பயணம் அமைய வாழ்த்துக்கள் அண்ணா :-)

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...
என்னிடம் கொஞ்சம் ஓஞ்ச வாயப்பயமும், ஒரு ஓட்டை கொம்பியூட்டரும் பெங்களூரில் இருக்கிறது...

எங்க வீட்டுக்கு வந்தால் ஒரு மணி நேர பிரவுசிங் அனுமதிக்கிறேன்...//

ஹா ஹா ஹா...

நான் மாரத்தல்லில தங்க போறேன்... அங்க இருந்து உங்க வீடு பக்கமா?

rapp said...

:(:(:(

rapp said...

திரும்பி நீங்கள் ஆன்சைட்டில் செல்ல வேண்டுமென வாழ்த்துகிறேன்(அப்போ திரும்ப பிளாக் எழுதுவீங்கல்ல)

ஜே கே | J K said...

பயணம் இனியதாக அமையட்டும்.

இந்தியா திரும்பறத்துக்கு வாழ்த்துகள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

உண்மைத்தமிழன் said...

வாங்க.. வாங்க..

சென்னைக்கு வந்தா அவசியம் சந்திக்கணும்.. சந்திப்போம்..

கையோட லேப்டாப் ஒண்ணை கொண்டு வரலாமே.. கையடக்க இணையக் கருவிகள் சொற்ப கட்டணத்தில் கிடைக்கின்றன.. கவலை வேண்டாம்..

வெட்டிப்பயல் said...

// மதுரையம்பதி said...
நல்வரவு பாலாஜி. :)
//
மிக்க நன்றி மதுரையம்பதி ஐயா...

//
//பெங்களூர்ல தமிழ் காலர் ட்யூன் வைக்க முடியுமா? //

கண்டிப்பாக முடியும். நம்ம ராகவ் கூட தமிழ் பாட்டுத்தான் வச்சுருக்கார். ஷைல்ஸ் அக்கா தமிழ்/கன்னடா அப்பப மாத்திக்குவாங்க :)
//
அப்ப நம்மலும் வெச்சிட வேண்டியது தான்... பாட்டு தான் யோசிக்கனும் :)

//ஜிரா சொன்னது போல, நானும் கூட கெட்டவன் இல்லீங்க....போன் நம்பர் குடுத்தா பேசுவேன். பெங்களூரில் இருப்பதால் நேரில் சந்திக்கலாம். :)
//
நிச்சயமா சந்திக்கலாம் :)

//ஆமாம், இங்கே எந்த ஏரியால தங்கப் போகிறீர்கள்?
//
மாரத்தல்லி

//எலக்ட்ரானிக் ஸிட்டி ஆப்பிஸ் தானே?.
//
ஆமாம் :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
சென்னை உங்களை மகிழ்வோடு அழைக்கிறது
//

மிக்க நன்றி முக... உங்களை நிச்சயம் சந்திக்கும்படி பாபா சொல்லியிருக்காரு :)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
happy journey and happy thalai diwali anna...
//
ரொம்ப நன்றிமா...
உனக்கும் என் வாழ்த்துகள்!!!

//
thodarndhu eludhunga...apdi ellaam posukkunnu bye sollidaadheenga :(
//
முயற்சி செய்யறேன்மா...

வெட்டிப்பயல் said...

//SurveySan said...
////நான் எழுத மாட்டேனு சொல்லலை. எழுத முடியாம போக வாய்ப்பிருக்குனு சொல்றேன். பார்க்கலாம்...////

dasavatharam dialogue maadhiri irukku ;)

have fun.

hope one day, i can write a similar 'return2india' post ;)
//

ஹா ஹா ஹா :)

நீங்க வெக்கேஷனுக்கு வேணா வருவீங்க :)

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...
Bon Voyage Balaji. Naanum Chennaikku weekend traveller dhaan. Chennaiyil oru weekendil sandhippom. Weekdaysil mudindhal Bangaloreil sandhippom.

All the Best.
//

அண்ணே,
அப்படினா ட்ரெயின்லயே சந்திக்கலாமே :)

வெட்டிப்பயல் said...

// புருனோ Bruno said...
//நீங்க எடுக்கல. நீங்க பிஸினு விட்டுட்டேன். //

அறுவை அரங்கில் இருந்தால் எடுக்க முடியாது
//

ஓ... அப்ப அறுவை அரங்கில இருந்தீங்களா? நல்ல வேளை மறுபடி மறுபடி கூப்பிட்டு தொல்லை பண்ணல :)

இந்தியா வந்தவுடன் கூப்பிடறேன் டாக்டர் :)

தமிழினி..... said...

I will miss u so much vetti...Blore DC vandha kandippa sandhippom...!
Vaazhthukkal.!

gayathri said...

ennaga வெட்டிப்பயல் dewali aniku chennila irupenganu solli irukenga naliku than dewali enna chennai vantegala.

neenga nenachingana unga pathiva thodaralam pa
weekely onetime ethachi broswing center poi kuda unga pathiva eluthalam

etho enaku thonatha sonnen avalavuthan pa

மன்மதக்குஞ்சு said...

சமீப காலமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். அதற்க்குள் நீங்கள் பதிவுலகத்தை விட்டு விலகுவது வருத்தத்தை அளித்தாலும் நல்வாழ்த்துக்கள்.
சங்கர்லால்

மன்மதக்குஞ்சு said...

தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தொடரட்டும்.

தமிழன்-கறுப்பி... said...

:(

தமிழன்-கறுப்பி... said...

test 1

தமிழன்-கறுப்பி... said...

அப்ப மறுபடி ஆரம்பிச்சாச்சா...