தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, October 07, 2008

முட்டாப்பய

"சிவா நேத்து ஈவனிங் திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதான் நீ அவார்ட் வாங்கும் போது வர முடியல. எங்க அந்த அவார்டை கொஞ்சம் காட்டு". ஆர்வமாக வாங்கி பார்த்தாள் நித்யா.

அதை கொடுத்துவிட்டு எதை பற்றியும் சிந்திக்காமல் தன் கணினியில் முழுகினான் சிவா.

Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது.

"ஏய் சொல்ல மறந்துட்டேன். Congrats." சொல்லிவிட்டு அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் ஏமாற்றமாக தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் நித்யா.

"Congrats சொன்னா ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல தெரியல. இவனுக்கெல்லாம் ஒரு அவார்ட்" மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு மேனஜர் சிவாவை கான்ஃபரன்ஸ் ரூமிற்கு அழைத்து சென்றார்.

"சிவா, நீ டெவலப் பண்ண டூல் இனிமே கம்பெனில இருக்கற எல்லாருக்கும் பயன்பட போகுது. உனக்கு இங்க நல்ல ஸ்கோப் இருக்கு"

"தேங்க்ஸ் சரவ்"

"ஆனா நீ டீம்ல யார்கிட்டயும் சரியா பேச மாட்றனு எல்லாரும் ஃபீல் பண்றாங்க. நானும் நீ டீம்ல மிங்கிலாகி பார்த்ததேயில்லை"

" "

"நீ ப்ரில்லியண்ட்தான். ஆனா இந்த மாதிரி கம்பெனில ப்ரில்லியண்டா இருக்கறதைவிட நல்ல டீம் வொர்க்கரா இருக்கனும். இது உன் கெரியரை
கெடுத்துடக்கூடாதுனு தான் உன்னை தனியா கூப்பிட்டு சொல்றேன். உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட சொல்லு. ஐ வில் ட்ரை டு கெட் இட் ரிசால்வ்ட்"

" "

"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"

"அப்படியெல்லாம் இல்லை சரவ்"

"எல்லாம் நீ நடந்துக்கறதுல தான் இருக்கு. சரி. இனிமே டீம்ல எல்லார்கிட்டயும் சகஜமா பழகு. அப்பறமா பேசலாம்"

வெளியே வந்தவுடன் தன் இடத்திற்கு சென்று அமைதியாக வேலையை செய்ய துவங்கினான்.

9 மணி பஸ் பிடித்து கொரமங்களா சென்று சேரும் போது மணி 11 ஆகியிருந்தது. பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர்

செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்.

அந்த ஒரு படுக்கையறை மட்டும் கொண்ட வீட்டில் சிவா தனியே தங்கியிருந்தான். பெங்களூரிலிருக்கும் கட்டட பொறியாளர்களுக்கு ஜன்னல், ஷெல்ப் எல்லாம் என்ன என்றே தெரியாது என்பதை அந்த வீடும் நிருபித்திருந்தது. உடை மாற்றிவிட்டு படுக்கைக்கு சென்றான் சிவா.

அவனுக்கு அவன் மேனஜரிடம் பேசியதே நினைவில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"

"நீ புத்திசாலியா இருக்கறதால...நீ புத்திசாலியா இருக்கறதால"

"ஏன்டா உன் மண்டைல இருக்கறது என்ன மூளையா இல்லை களி மண்ணா? ஒரு தடவையாது பாஸாகறயா? எப்படிடா நீ ஒம்போதாம் க்ளாஸ் வரைக்கும் பாஸான?"

அமைதியாக நின்று கொண்டிருந்தான் சிவா.

"சரி கைய நீட்டு"

கையை நீட்டினான். கணக்கு வாத்தியார் சுப்பிரமணி அடித்த அடியில் அந்த பிரம்பு உடைந்து போனது.

"டேய் கோபாலு, போய் ஸ்டாஃப் ரூம்ல இன்னொரு பெரம்பு இருக்கும் அதை எடுத்துட்டு வா. இதுக்கெல்லாம் இவ்வளவு அடி வாங்கனாலும் உறைக்காது. நம்ம கைதான் வலிக்கும்"

கோபால் வேகமாக ஓடி போய் புது பிரம்பை கொண்டு வந்தான்.

ஃபெயிலானவர்கள் ஒவ்வொருவராக அடி வாங்கி கொண்டிருந்தனர்.

"என்னமா கவிதா. நல்லா படிக்கிற பொண்ணு நீ. நீ போய் ஃபெயிலாயிருக்க. என்ன ஆச்சு?"

அமைதியாக தலையை குனிந்த படி நின்றிருந்தாள் கவிதா.

"சரி கையை நீட்டு. இந்த தடவை அடி வாங்கினா தான் அடுத்த முறை நல்லா படிப்ப"

அவள் பயந்து கொண்டே கையை நீட்டினாள்.

"வர வர மாமியா கழுத போல ஆனாளாம். என்ன?" சொல்லி கொண்டே அடித்தார்.

" "

"வர வர மாமியா கழுத போல ஆனாளாம்"

அவள் அழுது கொண்டே அமர்ந்தாள்.

அடுத்த நாள்.

ஆங்கில வகுப்பு

"மெமரி போயம்ஸ் எல்லாம் மூணு தடவை எழுதிட்டு வர சொன்னேனே. எல்லாம் நோட் எடுத்து வைங்க.
எழுதாதவங்க ஒழுங்கு மரியாதையா வெளிய வந்து முட்டி போட்டு எழுதிட்டு உள்ள வாங்க"

முதல் ஆளாக சிவா எழுந்து சென்றான்.

"அதான நீ எல்லாம் எங்க உருப்பட போற. உங்க அப்பா கூட கட்சில சேர்ந்துடு. இந்த பள்ளிக்கூடமாவது உருப்படும்"

முறைத்து கொண்டே சென்றான் சிவா.

"என்னடா முறைக்கிற? ஒழுங்கா போய் முட்டி போடு"

வகுப்பிலிருந்து ஒரு பதினைந்து மாணவர்கள் எழுந்து சென்றனர். கவிதா எழுந்து செல்வதை பார்த்தவுடன் ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஏம்மா கவிதா, நேத்து நான் மெமரி போயம்ஸ் எழுதிட்டு வர சொன்னேன் தானே?"

"ஆமா சார்" மெல்லிய குரலில் சொன்னாள் கவிதா.

"அப்ப ஏன் எழுதிட்டு வரல? உடம்பு ஏதாவது சரியில்லையா?"

அமைதியாக இருந்தாள்.

"ஏம்மா ஃபர்ஸ்ட் ரேங் எடுக்கற பொண்ணு. நீயே இப்படி இருக்கலாமா? சரி எல்லாரும் உள்ள போய் உக்காருங்க. நாளைக்கு எழுதிட்டு வாங்க"

அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். மதிய உணவு வேளையின் போது அழுது கொண்டிருந்தாள் கவிதா. சிவாவிற்கு கவிதா அழுவதை பார்த்து பிடிக்காமல் நேராக அவளிடம் சென்றான்.

"ஏய் இப்ப என்ன ஆச்சுனு இப்படி அழுவற? அவர் தான் முட்டி போட வேணாம்னு சொல்லிட்டார் இல்லை"

"நான் ஒண்ணும் அதுக்கு அழுவல"

"பின்ன? நேத்து அடி வாங்கனதுக்கா? எங்க கையை காட்டு"

அவள் கை சிவந்திருந்தது.

"ஏன் இப்பல்லாம் ஒழுங்கா படிக்க மாட்ற? நல்லா தானே படிச்சிட்டு இருந்த? அத்தை ஏதாவது வேலை செய்ய சொல்லி திட்றாங்களா? இல்லை அந்த கிழவி ஏதாவது சொல்லுதா?"

அவன் கிழவி என்று குறிப்பிட்டது அவன் பாட்டியைத்தான். கவிதா சிவாவின் தாய் மாமன் மகள்.

அவனை சுட்டெரிப்பது போல முறைத்தாள்.

"சரி முறைக்காத. ஒழுங்கா சொல்லு. ஃபெயிலாயிடுவனு சொல்லியிருந்தா, அந்த பேப்பர் கட்டையே சுட்டுட்டு வந்திருப்பேன். நீதான் சொல்லாம விட்டுட்ட. நேத்து உன்னை அடிச்சப்பவே அந்தாள ரெண்டுல ஒண்ணு பார்த்திருப்பேன். அப்பறம் விஷயம் அப்பாக்கிட்ட போயிடும்னு தான் விட்டுட்டேன்"

அவள் அழுது கொண்டே இருந்தாள்.

"இப்ப சொல்றயா இல்லையா?"

"என்னைவிட நீ எத்தனை வருஷம் பெரியவன்?"

"ரெண்டு வருஷம். ஏன் இப்ப அதுக்கு என்ன?"

"ஒழுங்கா படிக்காம நீ ஏற்கனவே ரெண்டு வருஷம் பெயிலாயிட்ட. இப்ப நீ படிக்கற லட்சணத்துக்கு எப்படியும் பாஸாக மாட்ட. நான் நல்லா படிச்சா எங்க அப்பா எனக்கு படிச்ச மாப்பிள்ளையா பார்த்து கட்டி கொடுத்துடுவாறோனு பயமா இருக்கு. அதான் நானும் படிக்காம ஃபெயிலாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

"எனக்கு கட்டி கொடுக்காமவிட்டுடுவாறா என் மாமன். அவ்வளவு தான். உன்னைய தூக்கிட்டு போயாவது கட்டிக்க மாட்டேன்"

"தூக்குவ தூக்குவ" கண்ணை துடைத்து கொண்டே கேலியாக அவள் சொன்னது அவனை என்னமோ பண்ணியது.

"பார்த்துக்கிட்டே இரு. உன்னைய மட்டும் கட்டிகொடுக்க மாட்டேனு சொன்னா எங்க ஆளுங்களோட வீடு புகுறனா இல்லையானு"

"இவ்வளவு பண்றதுக்கு ஒழுங்கா படிச்சி பாஸாகறனு சொல்லலாம் இல்லை"

"ஏய். இதுக்கெல்லாம் படிக்க முடியாது. நான் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டு இருக்கேன். நீ என்னுமோ கஷ்டப்பட்டு படினு சொல்ற. அதெல்லாம் ஆகற விஷயமா? இந்த பழப்பசங்க தான் படிப்பானுங்க. நாங்க எல்லாம் வீரனுங்க. சூப்பர் ஸ்டார் மாதிரி படிக்காத மேதைங்க. புரியுதா?"

"என்னுமோ பண்ணு. ஆனா நீ பாஸாகற வரைக்கும் நானும் பாஸாக மாட்டேன். நீ வாங்குற அடியை நானும் வாங்கனும். இப்பல இருந்தே நான் உன் பொண்டாட்டியா பழகிக்கிறேன்."

"ஏய். நீ அடி வாங்கறத பார்த்துட்டு என்னால இருக்க முடியாது. உன்னை எந்த வாத்தியாவது அடிச்சானா அவனுக்கு அன்னைக்கு பூச தான். நீயே முடிவு பண்ணிக்கோ"

"இங்க பாரு, நான் பர்ஸ்ட் ரேங் எடுக்கும் போது செகண்ட் ரேங் எடுக்கற பையனோட பேரை என் பேர் பின்னாடி சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல. நீ எப்படியும் எனக்கு அடுத்தோ எனக்கு முன்னாடியோ வர போறதில்லை. அதான் உன் இடத்துக்கு நான் வரேன். ஆனா அடி வாங்கும் போது தான் உயிர் போகற மாதிரி வலிக்குது. உனக்கும் அப்படித்தானே வலிக்கும்னு நினைக்கும்போது உன் வலியை அனுபவிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு"

அவன் எதுவும் பேசாமல் அவனிடத்திற்கு போய் அமர்ந்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் கவிதா 4 முறை அடி வாங்கினாள். இரண்டு முறை வகுப்பிற்கு வெளியே முட்டி போட்டு கொண்டிருந்தாள்.

அதன் பிறகு சிவாவின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தன. அடுத்து நடந்த மாத தேர்வில் சிவா பாஸ் மார்க் எடுத்திருந்தான். ஏதோ சூழ்ச்சி நடந்திருக்குமென ஆசிரியர்களும், சில மாணவர்களும் நினைத்து கொண்டனர்.

ஒரு ஞாயிறு மாலை அவன் கணக்கு ஆசிரியர் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்றான்.

"என்னப்பா? யாரு வேணும்"

"இது கணக்கு வாதியார் சுப்பிரமணியம் வீடு தானே?"

"ஆமாம். நீ யாருப்பா?"

"நான் அவர் ஸ்டுடண்ட் மேடம். சார் இருக்காரா?"

"இருக்காருப்பா. உள்ள வா.
என்னங்க இங்க உங்களை பார்க்க உங்க ஸ்டுடண்ட் யாரோ வந்திருக்காங்க பாருங்க" சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

"வாப்பா. என்ன விஷயம்? வீடு தேடி வந்திருக்க?"

"சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"

"சரி உள்ளே வா". தனியாக அவனை ஒரு அறைக்குள் அழைத்து சென்று அவனை அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தார்.

"சொல்லுப்பா. என்ன பிரச்சனை?"

"சார். எங்க அப்பா கட்சி, அரசியல்னு இருந்துட்டாரு. எனக்கும் சின்ன வயசுல இருந்து யாரும் படிக்கனும்னு பெருசா சொன்னதில்லை. நான் ஃபெயிலானப்ப கூட அதை கேட்டுட்டு அங்க இருந்த எல்லாரும், எந்த வாத்திடா உன்னை ஃபெயிலாக்கனது. சொல்லு. அடிச்சி பாஸாக்க வைச்சிடறோம்னு தான் சொன்னாங்க. தவிர, என்னை படினு யாரும் சொன்னதில்லை. எனக்கு படிக்கனும்னு பெருசா தோனனதுமில்லை. ஆனா இப்ப திடீர்னு படிக்கனும்னு ஆசை வந்துடுச்சி சார். நானும் எவ்வளவோ கஷ்டப்பட்டு போன பரிட்சைக்கு படிச்சேன், ஆனா என்னால பாஸ் மார்க் மேல வாங்க முடியல சார். படிச்சது எல்லாம் பரிட்சைல மறந்து போகுது சார். எனக்கும் கணக்குல 100 மார்க் வாங்கனும், க்ளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கனும்னு ஆசையா இருக்கு சார். நீங்க தான் உதவி செய்யனும்"

அவனை ஆச்சரியமாக பார்த்தார் சுப்பிரமணியம்.

"நீ இப்படி பேசும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. வாழ்க்கைல எந்த ஒரு விஷயத்துல வெற்றி பெறதுக்கு இந்த விஷயங்கள் தான் முக்கியம். அது ஆர்வம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி. இது இருந்தா தானா ஜெயிக்கலாம். சரி, போன வருஷம் நடந்த உலக கோப்பைல பாகிஸ்தானோட அதிக ரன் அடிச்சது யாரு?"

"சித்து சார்... 93 ரன் அடிச்சாரு"

"ரஜினியை ராபின் ஹூட்னு எந்த படத்துல சொல்லுவாங்க?"

"நான் சிகப்பு மனிதன் சார்"

"பாரு. இதெல்லாம் உனக்கு எப்படி நியாபகமிருக்கு?"

" "

"எல்லாத்துக்கும் ஆர்வம் தான் காரணம். அப்பறம் அதை நினைச்சிட்டே கொஞ்ச நேரம் இருக்கறது. சித்து 93 எடுத்து அவுட் ஆனப்ப இன்னும் 7 அடிச்சிருக்கலாமேனு கொஞ்ச நேரம் முழுக்க மனசுல இருக்கும். ரஜினி படமும் அப்படிதான். அப்படி யாராவது இருந்து இந்த சமூகத்தை திருத்தினா எப்படி இருக்கும்னு இருக்கும். இப்படி ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டதுக்கப்பறம் அதை பத்தி மனசு கொஞ்ச நேரம் சிந்திச்சா அது அவ்வளவு சீக்கிரம் மறக்காது.

அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"

அவர் பேசுவதை ஆர்வமாக அவன் கேட்டு கொண்டிருந்தான். நன்றாக படிக்க வேண்டும் என்ற வெறி அவன் கண்களில் தெரிந்ததை அவர் கவனித்தார். இவன் இவ்வளவு மாறியதற்கு காரணத்தை அவர் அறியவில்லை.

சிவாவின் நடத்தையில் பெரும் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. அவன் கண் எப்பொழுதும் சிவந்தேயிருந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் முன் அவன் முகம் கழுவி வந்தான். அவன் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து கொள்வதை பார்த்த நண்பர்களுக்கு அவன் ராத்திரி அதிகமாக தூங்குவதில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அடுத்து நடந்த ஒவ்வொரு தேர்விலும் அவன் படிப்படியாக முன்னேறி கொண்டே வந்தான்.

கவிதாவிற்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளும் அவனுடன் போட்டி போட்டு படிக்க ஆரம்பித்தாள். அவளை சில பாடங்களில் அவன் முந்தியதும், அனைவருக்கும் முன் பதில் சொல்லியதும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி அவன் வீட்டுக்கு சென்று அத்தையிடம் அவன் படிக்க ஆரம்பித்ததை சொல்லி சந்தோஷப்பட்டாள். அவன் அம்மாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

"எங்க இவனும் இவுங்க அப்பா மாதிரியே ஆயிடுவானோனு பயந்துட்டு இருந்தேன். நல்ல வேளைம்மா இவன் படிக்க ஆரம்பிச்சிட்டான். இந்த வருஷம் மட்டும் இவன் பாசாயிட்டா நம்ம கொலதெய்வத்துக்கு கடாவெட்டி பொங்க வைக்கறேனு வேண்டிக்கிட்டிருக்கேன்"

"அத்தை அவர் படிக்கறத பார்த்தா ஸ்டேட் ரேங் எடுத்துடுவாரோனு எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீங்க என்னனா பாசானா போதும்னு வேண்டிக்கிட்டிருக்கீங்க"

"என்னுமோ நல்லா படிச்சா சரிதான்"

ஒரு வழியாக பத்தாவது தேர்வை நல்ல படியாக எழுதி முடித்தனர் சிவாவும், கவிதாவும். சிவா பெரும்பாலும் கணக்கு வாத்தியார் சுப்பிரமணி வீட்டிலே தங்கி படித்தான். கணக்கில் கண்டிப்பாக நூத்துக்கு நூறு வாங்குவான் என நம்பினார் சுப்பிரமணி.

"சார் தந்தி வந்திருக்கு" போஸ்ட்மேன் சொல்லியதை கேட்டதும் கவிதாவும் அவள் அம்மாவும் பயந்தே விட்டனர்.

கவிதாவின் அப்பா தந்தியை வாங்கி பார்த்தார். மிகவும் சந்தோஷமாக கவிதாவை அழைத்தார்.

"கவிதா இந்த நம்பர் நம்ம சிவாதானு கொஞ்சம் சொல்லு 973654673"

"ஆமாம்பா. மாமாது தான். ஏன்ப்பா? என்னாச்சு?"

"இது உன் நம்பர் தானே 973654662"

"ஆமாம்பா. ஏன்? சீக்கிரம் சொல்லுங்கப்பா"

"நீ 482 மார்க் வாங்கியிருக்கம்மா. நம்ம சிவா 481 மார்க் வாங்கியிருக்கான். அனேகமா டிஸ்ட்ரிக்ட்ல முதல் மார்க் நீ தானு நினைக்கிறேன். என் ஃபிரெண்ட் மெட்ராஸ்ல இருந்து பார்த்து தந்தியடிச்சிருக்கான். இரு நான் போய் சிவாட்ட சொல்லிட்டு வந்திடறேன். என் தங்கச்சி கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா"

கவிதாவால் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் பெயருக்கு பின்னால் அவன் பெயர் திருமண பத்திரிக்கைக்கு முன் தினசரி பத்திரிக்கையில் வர போவதை நினைத்து சந்தோஷப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.

"அப்பா, அத்தைட்ட நான் போய் சொல்லிட்டு வந்திடறேன்பா. ப்ளீஸ்பா"

மகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளை சைக்கிளில் அனுப்பி வைத்தார். சந்தோஷமாக சைக்களில் வேகமாக மிதித்து வந்தாள் கவிதா.

................

"டேய் சிவா கடைசியா ஒரு தடவை அவளை பார்த்துட்டு வந்துடுடா. அவ கண்ணு உன்னை தான் தேடுதுனு நினைக்கிறேன்" சிவாவின் அம்மா அழுது கொண்டே சொன்னார்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே உணர்ச்சியற்று நின்று கொண்டிருந்தான் சிவா. அனைவரும் எவ்வளவு சொல்லியும் அவன் கடைசி வரை கவிதாவை சென்று பார்க்கவில்லை. அவள் மேல் வண்டியேற்றிவிட்டு சென்ற அந்த கார் டிரைவரை எப்படியும் கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து சில நாட்களில் அதையும் விட்டுவிட்டான்.

..............

"கவிதா உன் பேரை தவிர யார் பேருக்கும் பின்னால என் பேரு வரவிடாம இது வரைக்கும் பார்த்துட்டு இருக்கேன். கவிதா உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா"

"ஆண்டவா நான் மறுபடியும் முட்டாளாவே ஆயிடறேன். எனக்கு என் கவிதாவை மட்டும் திருப்பி தா. நான் முட்டாளாவே இருந்துடறேன்... நான் முட்டாளாவே இருந்துடறேன். எனக்கு எந்த அவார்டும் வேண்டாம். கவிதாவை மட்டும் கொடு. ப்ளீஸ்"

வழக்கம் போல் அவன் தலையணை முழுதும் கண்ணீரால் ஈரமாகியிருந்தது...

46 comments:

வெங்கட்ராமன் said...

வழக்கம் போல கலக்கீட்டீங்க. .

சோகமாக்கிப்புட்டீங்களே. .

உங்க கவண்டர் பதிவு எதாவது ஒன்ன படிச்சா சரியா போயிடும்.

Ŝ₤Ω..™ said...

என்னமோ தெரியல முடிக்கும் போது, என் கண்களில் நீர்கோர்த்து கொண்டு நிற்கிறது..

சரவணகுமரன் said...

கதை சூப்பர்.

ஆனா, தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி படம் பார்த்த எபெக்ட். நடுவுல, உங்க பாணி காமெடி கதைகளையும் எழுதுங்க... :-)

வெண்பூ said...

நல்ல கதை வெட்டி..

//அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா//

அருமையான வரிகள்.. பெரும்பாலும் நாம் சந்தோஷம் என்று நினைப்பதை அடுத்தவரின் சந்தோஷத்திற்காக விட்டுவிடுகிறோம் என்பதே உண்மை.

அழுத்தமான கனமான முடிவு.. பாராட்டுக்கள்.

ஒரு விசயம்.. உங்கள் கதைகள் ஒரு மாதிரி ஸ்டீரியோடைப்பாகி வருவது போல் இருக்கிறது, நிறைய சோகம் கலந்து.. ஜாலியா ஒரு கதை கொடுங்களேன்..

Raman Kutty said...

மிக நல்ல முயற்சி. நல்ல முடிச்சு. கதை படிக்கிற உணர்வே இல்லாம ஏதோ அனுபவத்தைச் சொல்ற மாதிரி இருந்தது.

தமிழினி..... said...

//""Read", "Recall" "Revise". " //
இது ரொம்ப நல்ல டிப் தல....
நல்ல கதை என்றாலும் சோகம் கொஞ்சம் தூக்கல்... :)))

rapp said...

சூப்பர், ஆனா ஊருக்குப் போறீங்கல்ல, அப்போ ஜாலியான பதிவுகலாத்தானே போடணும்

rapp said...

இது மீள்பதிவுதானே, நான் ஏற்கனவே இந்தக் கதையை படிச்சிருக்கேன்

இவன் said...

ஏன்யா இப்படி இவ்வளவு சோகமாவா முடிக்கனும்... அனேகமா உங்க கதைகள் 2 வருஷத்துக்கு முன்னமே படிச்சதா இருக்கும்... இது படிச்சதா ஞாபகம் இல்ல... கதையோட்டம் சூப்பர்... முடிவுதான் கொஞ்சம் அதிகப்படியான சோகம்....

http://urupudaathathu.blogspot.com/ said...

இது எங்கயோ படிச்சா மாதிரியே இருக்கு??
மீள்பதிவா??

Anonymous said...

Blogger Ŝ₤Ω..™ said...

என்னமோ தெரியல முடிக்கும் போது, என் கண்களில் நீர்கோர்த்து கொண்டு நிற்கிறது..

************
NAANUM IPPADITHAN ........ :-((((((((

இனியா said...

good one..


http://www.thamizhiniyan.blogspot.com/

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...
வழக்கம் போல கலக்கீட்டீங்க. .

சோகமாக்கிப்புட்டீங்களே. .

உங்க கவண்டர் பதிவு எதாவது ஒன்ன படிச்சா சரியா போயிடும்.
//

சொல்லிட்டீங்கல்ல இன்னைக்கு ஒண்ணு எழுதிடுவோம் :)

ரொம்ப நாளா ஒண்ணு எழுதனும்னு யோசிச்சிட்டு இருக்கேன் :)

வெட்டிப்பயல் said...

//Ŝ₤Ω..™ said...
என்னமோ தெரியல முடிக்கும் போது, என் கண்களில் நீர்கோர்த்து கொண்டு நிற்கிறது..
//

ஹும்ம்ம்...

ஆமா உங்க பேரு என்ன?

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
கதை சூப்பர்.

ஆனா, தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி படம் பார்த்த எபெக்ட். நடுவுல, உங்க பாணி காமெடி கதைகளையும் எழுதுங்க... :-)
//

இது எல்லாம் பழைய பதிவு சரவணகுமரன். ஆணி அதிகம். அதனால எல்லாம் மறுபதிப்பு :)

சந்தோஷமா ஏதாவது எழுதலாம்னு தான் ப்ளான். அதனால தான் சோகமான கதைகளை எடுத்து போட்டுட்டு இருக்கேன் :)

வெட்டிப்பயல் said...

//வெண்பூ said...
நல்ல கதை வெட்டி..

//அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா//

அருமையான வரிகள்.. பெரும்பாலும் நாம் சந்தோஷம் என்று நினைப்பதை அடுத்தவரின் சந்தோஷத்திற்காக விட்டுவிடுகிறோம் என்பதே உண்மை.

அழுத்தமான கனமான முடிவு.. பாராட்டுக்கள்.
//

மிக்க நன்றி வெண்பூ :)

//
ஒரு விசயம்.. உங்கள் கதைகள் ஒரு மாதிரி ஸ்டீரியோடைப்பாகி வருவது போல் இருக்கிறது, நிறைய சோகம் கலந்து.. ஜாலியா ஒரு கதை கொடுங்களேன்..
//

ரெண்டு கதையும் ஒரு வருட இடைவேளைல எழுதனது. நிறைய ஜாலியான கதைகளும் இருக்கே. இருங்க லிங் எடுத்து கொடுக்கறேன் :)

http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_17.html

தொடர்கதை எல்லாமே ஜாலியான கதை தான் :)

வெட்டிப்பயல் said...

//raman- Pages said...
மிக நல்ல முயற்சி. நல்ல முடிச்சு. கதை படிக்கிற உணர்வே இல்லாம ஏதோ அனுபவத்தைச் சொல்ற மாதிரி இருந்தது.
//

மிக்க நன்றி ராமன்...

ஆனா இது அனுபவமில்லை :)

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...
//""Read", "Recall" "Revise". " //
இது ரொம்ப நல்ல டிப் தல....
நல்ல கதை என்றாலும் சோகம் கொஞ்சம் தூக்கல்... :)))
//

Its all in the game :)

வெட்டிப்பயல் said...

//rapp said...
சூப்பர், ஆனா ஊருக்குப் போறீங்கல்ல, அப்போ ஜாலியான பதிவுகலாத்தானே போடணும்
//

அதுக்கு தான் Base Create பண்ணிட்டு இருக்கேன். இது மறுபதிப்பு தானே :)

வெட்டிப்பயல் said...

//இவன் said...
ஏன்யா இப்படி இவ்வளவு சோகமாவா முடிக்கனும்... அனேகமா உங்க கதைகள் 2 வருஷத்துக்கு முன்னமே படிச்சதா இருக்கும்... இது படிச்சதா ஞாபகம் இல்ல... கதையோட்டம் சூப்பர்... முடிவுதான் கொஞ்சம் அதிகப்படியான சோகம்....
//

இது போன வருஷம் எழுதனதுங்க... மிஸ் பண்ணிருப்பீங்க :)

வெட்டிப்பயல் said...

//உருப்புடாதது_அணிமா said...
இது எங்கயோ படிச்சா மாதிரியே இருக்கு??
மீள்பதிவா??
//

ஆமாங்க :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
Blogger Ŝ₤Ω..™ said...

என்னமோ தெரியல முடிக்கும் போது, என் கண்களில் நீர்கோர்த்து கொண்டு நிற்கிறது..

************
NAANUM IPPADITHAN ........ :-((((((((
//

ஹும்ம்ம்ம் :)

வெட்டிப்பயல் said...

//இனியா said...
good one..


http://www.thamizhiniyan.blogspot.com/
//

மிக்க நன்றி இனியா :)

Nimal said...

கதை சூப்பர்....!
ஆனாலும் கடைசில சோகமாக்கீட்டீங்க...

நிலாக்காலம் said...

மறுபடி பீலிங்ஸ்.. :(((((

G.Ragavan said...

ஏலேய்... என்னல இது! கதையா இதுன்னேன். கதையாம்ல கத. பெரிய கதை. சந்தோசமா முடிக்கத் தெரியாதோ... எப்படில ரெண்டு பேரையும் பிரிச்ச.. ஐயோ எனக்கு மனசே கேக்கலையே... இனிமே ஒங்கதையப் படிச்சா..என்னன்னு கேளு. கதையாம் கத.

Sathiya said...

அருமையான கதை, ஆனா இதை நீங்க ஏற்கனவே பதித்தது தானே?

Kavinaya said...

சூப்பர் கதைங்க!

Ŝ₤Ω..™ said...

செந்தில்..

parameswary namebley said...

கண்டிப்பா சொல்லித்தான் ஆகனும்..
கதை நல்ல எழுதிறீங்க..
இன்னும் நிறைய எழுதுங்க..
வாழ்த்துகள்..

நிர்வாகி (Admin) said...

உங்கள் பதிவுகள் அதிகம் படித்ததில்லை. உங்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. ஆனாலும் ஒரு கேள்வி. நிறைய தெலுகு படம் பார்பீங்களோ? குறைந்தது விக்ரமன் படம்?! :-)

சும்மா தமாசு... கோபிக்க வேணாம். சரியா?

பட்டிக்காட்டான் said...

அருமையா இருக்கு சார். இன்னிக்கு தான் உங்க வலை பக்கமே வந்தேன். கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்...

வெட்டிப்பயல் said...

//நிமல்-NiMaL said...
கதை சூப்பர்....!
ஆனாலும் கடைசில சோகமாக்கீட்டீங்க...
//

மிக்க நன்றி நிமல்...

வெட்டிப்பயல் said...

//நிலாக்காலம் said...
மறுபடி பீலிங்ஸ்.. :(((((
//

நோ பீலிங்ஸ் நோ பீலிங்ஸ் :)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...
ஏலேய்... என்னல இது! கதையா இதுன்னேன். கதையாம்ல கத. பெரிய கதை. சந்தோசமா முடிக்கத் தெரியாதோ... எப்படில ரெண்டு பேரையும் பிரிச்ச.. ஐயோ எனக்கு மனசே கேக்கலையே... இனிமே ஒங்கதையப் படிச்சா..என்னன்னு கேளு. கதையாம் கத.
//

ஜிரா,
சந்தோஷமா ஒரு கதை எழுதுங்களேன். எனக்கும் ஜாலியான ஒரு கதை படிக்கனும்னு ஆசை :)

வெட்டிப்பயல் said...

// Sathiya said...
அருமையான கதை, ஆனா இதை நீங்க ஏற்கனவே பதித்தது தானே?
//

ஆமாம் சத்யா. இது மறுபதிப்பு தான் :)

வெட்டிப்பயல் said...

//கவிநயா said...
சூப்பர் கதைங்க!
//

மிக்க நன்றி கவிநயா :)

வெட்டிப்பயல் said...

//Ŝ₤Ω..™ said...
செந்தில்..
//

மிக்க நன்றி செந்தில் :)

வெட்டிப்பயல் said...

//parameswary namebley said...
கண்டிப்பா சொல்லித்தான் ஆகனும்..
கதை நல்ல எழுதிறீங்க..
இன்னும் நிறைய எழுதுங்க..
வாழ்த்துகள்..
//

மிக்க நன்றி பரமேஸ்வரி :)

வெட்டிப்பயல் said...

//அட பேரா முக்கியம்? said...
உங்கள் பதிவுகள் அதிகம் படித்ததில்லை. உங்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. ஆனாலும் ஒரு கேள்வி. நிறைய தெலுகு படம் பார்பீங்களோ? குறைந்தது விக்ரமன் படம்?! :-)
//
ரெண்டுக்குமே பதில் ஆமாம்... ஆனா ரெண்டுக்கும் வித்தியாசம் ரொம்ப அதிகம். விக்ரமன் படத்துல எல்லாருமே நல்லவங்க. தெலுகு படத்துல ஒரு படுபயங்கரமான வில்லன் இருப்பான். ஹீரோ (NTR, பாலைய்யா, சிரு) எல்லாரும் விதவிதமான ஆயிதத்துல கொலை செய்வாங்க :)

//
சும்மா தமாசு... கோபிக்க வேணாம். சரியா?
//

இதுல கோபிக்க என்ன இருக்கு நண்பரே :)

வெட்டிப்பயல் said...

// பட்டிக்காட்டான் said...
அருமையா இருக்கு சார். இன்னிக்கு தான் உங்க வலை பக்கமே வந்தேன். கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்...
//

மிக்க நன்றி பட்டிக்காட்டான் :)

நிர்வாகி (Admin) said...

/*
ரெண்டுக்குமே பதில் ஆமாம்... ஆனா ரெண்டுக்கும் வித்தியாசம் ரொம்ப அதிகம். விக்ரமன் படத்துல எல்லாருமே ......
*/

அடடா..
வெ.பயலே(ரே)
ரொம்ப நல்லவன்(ருப்பா) நீ(ங்க).

ஜோக் சொன்னா சிரிக்கணும். விளக்கம் கொடுக்கக் கூடாது.

என் மனசாட்சியின் குரல்:
சரீஈஈ..
தப்பு நம்ம பக்கமும் இருக்குல்ல. ஜோக்குன்னு சொன்னாத்தான் தெரியுதுன்னா, மத்தவங்க என்ன பண்ணுவாங்க. விடு, விடு..

வெட்டிப்பயல் said...

//அட பேரா முக்கியம்? said...
/*
ரெண்டுக்குமே பதில் ஆமாம்... ஆனா ரெண்டுக்கும் வித்தியாசம் ரொம்ப அதிகம். விக்ரமன் படத்துல எல்லாருமே ......
*/

அடடா..
வெ.பயலே(ரே)
ரொம்ப நல்லவன்(ருப்பா) நீ(ங்க).

ஜோக் சொன்னா சிரிக்கணும். விளக்கம் கொடுக்கக் கூடாது.

என் மனசாட்சியின் குரல்:
சரீஈஈ..
தப்பு நம்ம பக்கமும் இருக்குல்ல. ஜோக்குன்னு சொன்னாத்தான் தெரியுதுன்னா, மத்தவங்க என்ன பண்ணுவாங்க. விடு, விடு..
//

விக்ரமன் படம் அதிகமா பார்ப்பீங்களோ :)

Anonymous said...

it was not a usual story,just brings u r spirit up.continue writing

Anonymous said...

என்னங்க இது?? முதல் தடவையா உங்க கதை படிக்கிறேன்....கண் ல தண்ணி வர வச்சுடிங்களே.... but great writing...congrats...
-tamil

வாழவந்தான் said...

வாழ்க்கைல சில விஷயங்களுக்கு பேக்டிராகிங்கு இல்லாதது வருத்தம்தான்!!