மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்
சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.
நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.
வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.
நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.
வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.
நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.
வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.
நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.
வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.
நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.
வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.
நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து
வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?
நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.
வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.
நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.
வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.
நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.
வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.
நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?
வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.
நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.
வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.
நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.
வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.
நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.
வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.
நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?
வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.
நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.
வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.
நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.
வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.
நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.
வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.
நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?
வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா
நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.
வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.
நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.
வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்
நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்...
139 comments:
மீ த பர்ஸ்டா???
\\மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?
\\
:))) ஹா ஹா ஹா இது நல்லா இருக்கே
\\ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.
\\
சூப்பர் இது யாரு வீட்ல நடக்குது??
ஹை!! நாந்தான் பஷ்டு... சூப்பர் காமெடி...
காமெடி சூப்பர்னு சொல்றதுலே வெக்கப்படலே, வேதனைப்படலே, அவமானப்படலே - சந்தோஷப்படறேண்டா கண்ணா!!!!
// Ramya Ramani said...
மீ த பர்ஸ்டா???//
ஆமாம் தங்கச்சி.. நீங்க தான் ஃபர்ஸ்ட்டு :-)
// Ramya Ramani said...
\\மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?
\\
:))) ஹா ஹா ஹா இது நல்லா இருக்கே
//
ஏன் நல்லா இருக்காது???
பசங்க கண்டிஷன் தான் கஷ்டம் :-(
//
\\ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.
\\
சூப்பர் இது யாரு வீட்ல நடக்குது??//
//
பதிவ படிச்சா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது :-)
//ச்சின்னப் பையன் said...
ஹை!! நாந்தான் பஷ்டு... சூப்பர் காமெடி...//
நீங்க செகண்டுங்கண்ணா... ஒண்ணு பெருசா ரெண்டு பெருசா ;)
ultimate :))))
//ச்சின்னப் பையன் said...
காமெடி சூப்பர்னு சொல்றதுலே வெக்கப்படலே, வேதனைப்படலே, அவமானப்படலே - சந்தோஷப்படறேண்டா கண்ணா!!!!//
ண்ணா... நீங்க சொன்னா சரி தாங்கண்ணா...
http://www.behindwoods.com/tamil-movie-news-1/apr-08-01/manal-kayiru-04-08.html
but your version is nice
//பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.//
நல்லா இருக்கு :-)))))
பாக்குறதுக்கு நாகார்ஜுனா மாதிரியும், பேசறதுல பவண் கல்யாண் மாதிரியும், டேலண்டுல மஹேஷ் பாபு மாதிரியும் இருந்தா ஓக்கேவா?
//Anonymous said...
http://www.behindwoods.com/tamil-movie-news-1/apr-08-01/manal-kayiru-04-08.html
but your version is nice//
இப்ப தான் படிச்சி பார்த்தேன்.. இது நம்ம புதுகை தென்றல் அக்கா சொன்னதுக்கப்பறம் வந்த யோசனை. அதை தான் நான் பதிவு ஆரம்பத்திலேயே சொன்னேன்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே...
//kappi said...
ultimate :))))//
எப்பா.. கப்பி வாய்ல இருந்து பாராட்டு வாங்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு...
நன்றிப்பா...
நல்லா சிரிச்சேன் பாலாஜி. நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கேன்.
ஏன் அண்ணாச்சி வயத்துல புளியை கரைக்கறீங்க.... :-ஸ்
// Anonymous said...
//பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.//
நல்லா இருக்கு :-)))))
பாக்குறதுக்கு நாகார்ஜுனா மாதிரியும், பேசறதுல பவண் கல்யாண் மாதிரியும், டேலண்டுல மஹேஷ் பாபு மாதிரியும் இருந்தா ஓக்கேவா?//
இது டபுல் ஓகேவாச்சே... ரவி தேஜா மாதிரி பேசனா இன்னும் சூப்பர் ;)
//குமரன் (Kumaran) said...
நல்லா சிரிச்சேன் பாலாஜி. நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கேன்.//
ரொம்ப நன்றி குமரன்...ரெண்டுக்குமே...
//மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். //
மாப்பிள்ளை. தங்கச்சி கண்ணுக்கு நீங்க எப்படி தெரியுறீங்கன்னு கேட்டுச் சொல்லுங்களேன்.
இங்கே உங்க அக்கா என்ன சொல்றாங்கன்னா கேக்குறீங்க. ஒன்னும் சொல்லலை. "போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு'ன்னு பாட இல்ல செய்றாங்க. :-(
கடைசி கண்டிஷன் சூப்பர்!
//CVR said...
ஏன் அண்ணாச்சி வயத்துல புளியை கரைக்கறீங்க.... :-ஸ்//
தல,
உங்களுக்கு என்ன கவலை??? உங்களுக்கு தான் க்யூ கட்டி நிக்கறாங்களே...
நான் படம் டைரக்ட் பண்ணா நீங்க தான் ஹீரோ... இது எப்பவோ போட்ட டீல்... மறந்துடாதீங்க...
குமரன் (Kumaran) said...
//மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். //
மாப்பிள்ளை. தங்கச்சி கண்ணுக்கு நீங்க எப்படி தெரியுறீங்கன்னு கேட்டுச் சொல்லுங்களேன்.
//
பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)
// இங்கே உங்க அக்கா என்ன சொல்றாங்கன்னா கேக்குறீங்க. ஒன்னும் சொல்லலை. "போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு'ன்னு பாட இல்ல செய்றாங்க. :-(//
Y Blood??? Same Blood :-))
//நிஜமா நல்லவன் said...
கடைசி கண்டிஷன் சூப்பர்!//
நீங்க நிஜமா நல்லவர் தான் ;)
சான்ஸே இல்லை......பதிவு சூப்பருங்கண்ணா:)))
\\வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?
நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.\\
வரிக்கு வரி சிரிப்பு வெடி வைச்சிருக்கிறீங்க:))
\மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?\\
ROTFL:))
//Divya said...
சான்ஸே இல்லை......பதிவு சூப்பருங்கண்ணா:)))//
ரொம்ப நன்றி தங்கச்சி...
// Divya said...
\\வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?
நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.\\
வரிக்கு வரி சிரிப்பு வெடி வைச்சிருக்கிறீங்க:))//
ஏதோ முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்றது தான்...
\\முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க.\\
:))))டைமிங் ஹுமர் டாப்பு!!!
சூப்பர் காமெடி போஸ்ட், கலக்கல்ஸ்:)))
// Divya said...
\மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?\\
ROTFL:))//
பாத்துமா.. அடிபட்டுட போகுது...
அடுத்து கமல் காமெடி படம் எடுத்தா அதுக்கு நீங்கதான் வசனம்.
சான்ஸே இல்லை கிரேஸிக்கு
பாலாஜி
அந்த நாரதர் நாயுடுவா நீ தான்-பா என் மனக் கண்ணுக்குத் தெரியிற!
காலைக் காட்டுப்பா ராசா!
நீயே நாரதர்! நீயே நாயுடு!
:-)))
சரி அது என்னாப்பா அது Linked List?
இப்பிடி லிஸ்ட்டு போட்டா தான் லிங்க் ஆவாங்களா?
ரொம்ப நேரம் சிரிச்சேன் பாலாஜி!
வீட்டுக்குப் போன் போட்டு, இதை படிச்சிக் காட்டப் போறேன்! :-)
//ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும்,//
வன்மையாக கண்டிக்கிறேன்.
"டாக்டர் விஜய்" சும்மா வெறும் விஜய் என்று போட்டு எங்களை வெறுப்பேத்துறிங்களா ?
//முரளிகண்ணன் said...
அடுத்து கமல் காமெடி படம் எடுத்தா அதுக்கு நீங்கதான் வசனம்.
சான்ஸே இல்லை கிரேஸிக்கு//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளப்படுத்திடறாங்கப்பா...
மிக்க நன்றி முரளிகண்ணன்...
//சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்//
அடிங்க!
வேற வினையே வேணாம்!
வித்யா எப்படி ஒங்களைக் கொல்லாம வுட்டா?
வித்யா பாய் ஃபிரெண்ட்ஸ் கூட பேசலாம்! ஆனா அந்த நேரத்துல பையன் கேர்ள் ஃபிரெண்ட்ஸ் கிட்ட எப்படிப் பேசலாம்? அநியாயம் இல்லையா?
செப்பண்டி நாரதர் நாயுடு! செப்பண்டி!
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பாலாஜி
அந்த நாரதர் நாயுடுவா நீ தான்-பா என் மனக் கண்ணுக்குத் தெரியிற!
காலைக் காட்டுப்பா ராசா!
நீயே நாரதர்! நீயே நாயுடு!
:-)))//
நாராயணா! நாராயணா!!!
//
சரி அது என்னாப்பா அது Linked List?
இப்பிடி லிஸ்ட்டு போட்டா தான் லிங்க் ஆவாங்களா?
//
அதே அதே...
// ரொம்ப நேரம் சிரிச்சேன் பாலாஜி!
வீட்டுக்குப் போன் போட்டு, இதை படிச்சிக் காட்டப் போறேன்! :-)//
இப்படி என் இமேஜை டோட்டல் டேமேஜ் பண்ணி வெச்சிடுங்க. வீட்டு பக்கம் நான் போனா என்னை நக்கலா பார்த்து சிரிக்க போறாங்க :-)
//Divya said...
\\முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க.\\
:))))டைமிங் ஹுமர் டாப்பு!!!
சூப்பர் காமெடி போஸ்ட், கலக்கல்ஸ்:)))//
ரொம்ப நன்றிமா...
//கோவி.கண்ணன் said...
//ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும்,//
வன்மையாக கண்டிக்கிறேன்.
"டாக்டர் விஜய்" சும்மா வெறும் விஜய் என்று போட்டு எங்களை வெறுப்பேத்துறிங்களா ?//
நானாவது விஜய்னு எழுதனேன்.. நீங்க "வெறும் விஜய்"னு எழுதி விஜய கேவலப்படுத்திட்டீங்க... "டாக்டர் விஜய்"னு எழுதி டாக்டருங்க எல்லாரையும் வெறுப்பேத்திட்டீங்க :-)))
ஒரே கல்லுல ரெண்டு மாங்காயா?
//வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.//
நீங்க போட்ற கண்டிஷனுக்கு, விஜயும், அஜித்துமா கிடைச்சாங்க?! :-) நல்ல comparison.
//மாப்பிள்ளை. தங்கச்சி கண்ணுக்கு நீங்க எப்படி தெரியுறீங்கன்னு கேட்டுச் சொல்லுங்களேன்.
//
//பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)//
குமரன்
அவரு பாவம் அனுபவிக்கறாரு! நீங்க எதுக்கு ஆராயறீங்க? :-))
தங்கச்சி கண்ணுக்கு எப்படித் தெரியிறாரு-ன்னு தெரியுமா?
ரெமோவும் இல்ல!
சுமோவும் இல்ல!!
ஃபைன்டிங் நிமோ! :-))
மீன் வறுவல் டேஸ்ட்டா இருக்கும்! அதுவும் நிமோ-ன்னா சொல்லவே வேனாம்!
பாலாஜி..
நீங்க பேசாம ஐ டி. வேலையே விட்டுட்டு..சினிமாவுக்கு வசனம் (நகைசுவை) எழுத போகலாம்..என்னய்யா !!! .. உங்க கையிலே இத்தனை திறமையா ?? ஒன்னும் சொல்ல வரல்ல..சூப்பரோ சூப்பர்..போ..அதீத கற்பனை வளம்..
பாலாஜி
நீங்க வ.வா சிங்கம் தானே?
எதுக்கு புளி எல்லாம் கரைக்கறீங்க?:-)
//PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது.//
எந்த PG ராசா ஆறு வருசம்?
நான் பதிவைப் படிச்சிட்டு அனுபவிச்சிக்கிட்டே இருக்கேன்! ஆராயலை! :-))
//நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது//
ஆனா வரும் போது டிபன் கேரியர்-ல அடுக்கடுக்கா என்ன வேணும்னாலும் கட்டி எடுத்துக்கிட்டு வரலாம்! ஐ டோண்ட் மைண்ட்!
பை தி வே! மாப்பிள்ளை சனிக்கிழமை அன்னிக்கு வெரதம் இருந்தா அதுக்கு எக்ஸ்ட்ரா மார்க்! :-))
(சனிக்கிழமை விரதம் இருக்கும் மாப்பிள்ளைகள் அடியேனை மன்னிப்பார்களாக! :-))
Friend veetuku dinnerku vanthiruken... so intha kelviku mattum answer
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது.//
எந்த PG ராசா ஆறு வருசம்?
நான் பதிவைப் படிச்சிட்டு அனுபவிச்சிக்கிட்டே இருக்கேன்! ஆராயலை! :-))
//
UG = 3 years.
MCA (PG) = 3 years...
Pirinjithaa???
செம காமெடிங்க... ஆனா அந்த கடைசியா பழிவாங்குவது தான் டாப்... :))))))
ஹா ஹா ஹா பாலாஜி..செம காமெடி பதிவு..
அசத்திட்டீங்க போங்க..
உங்க போன பதிவு எனக்கு மின்னஞ்சலில் வந்தது (ஆனா உங்க சுட்டி அல்லது பெயர் இல்லாம :( )
இதுவும் வரும் என்று நினைக்கிறேன் கலக்குங்க..
:-))))))) vetti i was expecting atleast 2/3 parts in this series
வெட்டி எனக்கென்னமோ இந்த நாயுடுவைப் பார்த்தா நம்ம கே ஆர் எஸ் ஞாபகம் வருது!!
அப்புறம் அது என்னய்யா அபச குணம்? ரஜினி வந்து பொண்ணுங்களை என்னென்னமோ சொல்லுவாரே அதுல ஒண்ணா?
இதுதாண்டா 50?!!
//தமிழரசன் said...
//வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.//
நீங்க போட்ற கண்டிஷனுக்கு, விஜயும், அஜித்துமா கிடைச்சாங்க?! :-) நல்ல comparison.//
பொது வாழ்க்கைனு வந்துட்டா.. இதெல்லாம் சகஜம் தானே ;)
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//மாப்பிள்ளை. தங்கச்சி கண்ணுக்கு நீங்க எப்படி தெரியுறீங்கன்னு கேட்டுச் சொல்லுங்களேன்.
//
//பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)//
குமரன்
அவரு பாவம் அனுபவிக்கறாரு! நீங்க எதுக்கு ஆராயறீங்க? :-))
தங்கச்சி கண்ணுக்கு எப்படித் தெரியிறாரு-ன்னு தெரியுமா?
ரெமோவும் இல்ல!
சுமோவும் இல்ல!!
ஃபைன்டிங் நிமோ! :-))
மீன் வறுவல் டேஸ்ட்டா இருக்கும்! அதுவும் நிமோ-ன்னா சொல்லவே வேனாம்!//
ஏன் இந்த கொலை வெறி... மீன் சாப்பிட வைக்கறதுக்குள்ளயே இங்க பாதி உயிர் போச்சு. இதுல நீமோ, கீமோனு சொன்னா அவ்வளவு தான்...
மீன் ஃப்ரை நேத்து சாப்பிட்டேன்... சூப்பரா இருந்துச்சு...
//கீ - வென் said...
பாலாஜி..
நீங்க பேசாம ஐ டி. வேலையே விட்டுட்டு..சினிமாவுக்கு வசனம் (நகைசுவை) எழுத போகலாம்..என்னய்யா !!! .. உங்க கையிலே இத்தனை திறமையா ?? ஒன்னும் சொல்ல வரல்ல..சூப்பரோ சூப்பர்..போ..அதீத கற்பனை வளம்..//
கீ-வென்,
உங்க பாசத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி... ஆனா சினிமா எல்லாம் பெரிய கடல்... நாம (என்னைய நானே மரியாதையா சொல்லிக்கிட்டேன்) எல்லாம் குட்டைல மீன் பிடிக்க தான் லாயக்கி :-))
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பாலாஜி
நீங்க வ.வா சிங்கம் தானே?
எதுக்கு புளி எல்லாம் கரைக்கறீங்க?:-)//
புளி கொழம்பு செய்யனும்னா புளிய கரைச்சி தான் ஆகனும் ;)
//தமிழ் பிரியன் said...
செம காமெடிங்க... ஆனா அந்த கடைசியா பழிவாங்குவது தான் டாப்... :))))))//
மிக்க நன்றி தமிழ் பிரியன்...
//கிரி said...
ஹா ஹா ஹா பாலாஜி..செம காமெடி பதிவு..
அசத்திட்டீங்க போங்க..
உங்க போன பதிவு எனக்கு மின்னஞ்சலில் வந்தது (ஆனா உங்க சுட்டி அல்லது பெயர் இல்லாம :( )
//
இது ரொம்ப நாளா நடக்கறது தானே... மக்கள் ரசிச்சா சரி தான் :-)
//
இதுவும் வரும் என்று நினைக்கிறேன் கலக்குங்க..//
வந்தா சந்தோஷம் தான் :-)
//யாத்திரீகன் said...
:-))))))) vetti i was expecting atleast 2/3 parts in this series//
யாத்திரீகன்,
நானும் அதை தான் யோசிச்சேன். ஆனா ஏற்கனவே நிறைய தொடர் எழுத வேண்டியது இருக்கு. அதான் தோடர் வேண்டாம்னு விட்டுட்டேன்...
//இலவசக்கொத்தனார் said...
வெட்டி எனக்கென்னமோ இந்த நாயுடுவைப் பார்த்தா நம்ம கே ஆர் எஸ் ஞாபகம் வருது!!//
உங்களுக்குமா??? ;)
//இலவசக்கொத்தனார் said...
அப்புறம் அது என்னய்யா அபச குணம்? ரஜினி வந்து பொண்ணுங்களை என்னென்னமோ சொல்லுவாரே அதுல ஒண்ணா?//
அது சாத்வீகம் கொத்ஸ் ;)
//இலவசக்கொத்தனார் said...
இதுதாண்டா 50?!!//
தெலுகு டப்பிங் படம் மாதிரி சொல்றீங்களே கொத்ஸ் :-)
//விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.//
ஒரே டைம்ல அம்புட்டு பய புள்ளைங்களுக்கும் அடிச்சிப்ப்போட்டுட்டீங்களே :))))
//ஆயில்யன் said...
//விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.//
ஒரே டைம்ல அம்புட்டு பய புள்ளைங்களுக்கும் அடிச்சிப்ப்போட்டுட்டீங்களே :))))//
எல்லாமே நம்ம பய புள்ளைக தானே... இருக்கட்டும் :-)
செம காமெடியா இருக்கு வெட்டி...
//பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.
நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?
//
ROTFL...செம கலக்கல் வெட்டி...போட்டு தாக்கி இருக்கீங்க... :-)
//Sen22 said...
செம காமெடியா இருக்கு வெட்டி...//
மிக்க நன்றி செந்தில்...
வரிக்கு வரி கலக்கல்... :-)
// Syam said...
//பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.
நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?
//
ROTFL...செம கலக்கல் வெட்டி...போட்டு தாக்கி இருக்கீங்க... :-)//
மிக்க நன்றி நாட்ஸ் :-)
அருமை! இதோட இரண்டாவது பாகம் வருமா?
மணல்கயிறே எத்தனை தடவை பாத்தாலும் அலுக்காத படம்.. இந்த புதுப்படமும் அதே மாதிரி இருக்கும் போல... நல்லா இருக்கு.. மீதி கதைக்கான ஸ்கிரிப்ட் ரெடியா..
கலக்கல் post வெட்டி
Simply Super. Athukulla 3 forward maila vandhuduchu..:-) (with your name)
unga post ellame mail forwarda varuthu.. ennoda friends kitta ellam source intha blog thaan niraya thadavai sollirukken.. intha postum oru roundu varum.. kalakkal post..
ஆஹா நான் எப்படி நேத்தைக்கு மிஸ் பண்ணேன். செம கலக்கல். இப்படி ஒரு சூப்பர் பதிவு போட்டதுக்காக நீங்களும் ச்சின்னபையன் சாரோட சேர்ந்து முதல் பரிசை பகிர்ந்துக்கங்க. முதல் பரிசு என்னன்னா கானல்நீர், பழனி, திருப்பதி, குருவி முதலிய படங்களின் dvdக்கள் தான். இது விசு சாரின் படம் என்பதால் என்னோட ஸ்பெஷல் பரிசு ஒன்னையும் தரேன். அதென்னன்னா, விசு சாரின் வா மகளே வா படத்தோட dvd. என்னங்க, ஆனந்த அதிர்ச்சியில பேச்சு மூச்சில்லாம நிக்கறீங்களா?
//சரவணகுமரன் said...
வரிக்கு வரி கலக்கல்... :-)//
மிக்க நன்றி சரவணகுமரன்
// Sathiya said...
அருமை! இதோட இரண்டாவது பாகம் வருமா?//
இப்பொழுதைக்கு அந்த ஐடியா இல்லை.. பார்க்கலாம் :-)
// கயல்விழி முத்துலெட்சுமி said...
மணல்கயிறே எத்தனை தடவை பாத்தாலும் அலுக்காத படம்.. இந்த புதுப்படமும் அதே மாதிரி இருக்கும் போல... நல்லா இருக்கு.. மீதி கதைக்கான ஸ்கிரிப்ட் ரெடியா..//
மிக்க நன்றி அக்கா...
மீதி கதையா??? அது ரொம்ப கஷ்டமாச்சே.. கொஞ்ச நாள் கழிச்சி முயற்சி பண்ணலாம் :-)
புதுப் பதிவு போட்டிருக்கேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க.
// இவன் said...
கலக்கல் post வெட்டி//
மிக்க நன்றி இவன்...
// Thiyagarajan said...
Simply Super. Athukulla 3 forward maila vandhuduchu..:-) (with your name)//
மிக்க நன்றி...
யார் இந்த விளையாட்டை ஆரம்பிக்கறாங்கனே தெரியல... ஆனா பேரோட வரது கொஞ்சம் சந்தோஷம் தான் :-)
//mgnithi said...
unga post ellame mail forwarda varuthu.. ennoda friends kitta ellam source intha blog thaan niraya thadavai sollirukken.. intha postum oru roundu varum.. kalakkal post..//
நமக்கு மட்டும் வர மாட்டீங்குது...
இதுல ஏதோ உள்நாட்டு சதி இருக்குமோ :-)
//mgnithi said...
unga post ellame mail forwarda varuthu.. ennoda friends kitta ellam source intha blog thaan niraya thadavai sollirukken.. intha postum oru roundu varum.. kalakkal post..//
அப்பறம் எல்லாருக்கும் நம்ம பதிவோட முகவரி சொல்றதுக்கு ரொம்ப நன்றி :-)
//rapp said...
ஆஹா நான் எப்படி நேத்தைக்கு மிஸ் பண்ணேன். செம கலக்கல். இப்படி ஒரு சூப்பர் பதிவு போட்டதுக்காக நீங்களும் ச்சின்னபையன் சாரோட சேர்ந்து முதல் பரிசை பகிர்ந்துக்கங்க. முதல் பரிசு என்னன்னா கானல்நீர், பழனி, திருப்பதி, குருவி முதலிய படங்களின் dvdக்கள் தான். இது விசு சாரின் படம் என்பதால் என்னோட ஸ்பெஷல் பரிசு ஒன்னையும் தரேன். அதென்னன்னா, விசு சாரின் வா மகளே வா படத்தோட dvd. என்னங்க, ஆனந்த அதிர்ச்சியில பேச்சு மூச்சில்லாம நிக்கறீங்களா?//
நாங்க எல்லாம் யாருக்கு யோரோ படத்தையே நாலு அஞ்சு தடவை பார்த்து விமர்சனம் எழுதனவங்க... எங்களுக்கேவா ;)
// rapp said...
புதுப் பதிவு போட்டிருக்கேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க.//
சூப்பரா எழுதி இருக்கீங்க.. அங்கயும் ஒரு கமெண்ட் பொட்டுட்டேன் :-)
ஹா ஹா ஹா... சூப்பரப்பு... கலக்கிட்டே ராசா.... :)
//இராம்/Raam said...
ஹா ஹா ஹா... சூப்பரப்பு... கலக்கிட்டே ராசா.... :)//
ரொம்ப டாங்கிஸ் ராயலண்ணா :-)
இதை இதைத்தான் விசுசார் கிட்ட
எதிர் பார்த்தேன் வெட்டி.
விசு சார் ஸ்கிரிப்ட், டயலாக் எல்லாம் ரெடி. ரொம்ப சிரமப்படாம படம் எடுத்திடலாம். சீக்கிரம் ஆக்ஷன் சொல்லுங்க சார்.
:)))))))))))
total rotfl...sirichi sirichi vai valikuthu :D
என் பின்னூட்டம் எங்கே?????????????
Arumaiyana imagination..... Nanum oru Tamilannu peruma padrennda kanna... :))
இந்த படத்துல வரும் காது கேக்காத மாமனார் கேரக்டர் யாருக்குன்னு சொன்னா நல்லா இருக்கும் பாலாஜி.
ர.மாதவி
வேறென்ன புதுசா சொல்லப் போறேன்? சூப்பர் சிரிப்புங்க! :)
//ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.//
ரொம்ப ரசிச்சேன் :))
//புதுகைத் தென்றல் said...
இதை இதைத்தான் விசுசார் கிட்ட
எதிர் பார்த்தேன் வெட்டி.
விசு சார் ஸ்கிரிப்ட், டயலாக் எல்லாம் ரெடி. ரொம்ப சிரமப்படாம படம் எடுத்திடலாம். சீக்கிரம் ஆக்ஷன் சொல்லுங்க சார்.
:)))))))))))//
ரொம்ப நன்றி புதுகைத் தென்றல் அக்கா.. எங்க நான் சொதப்பிட்டனோனு பயந்துட்டே இருந்தேன் :-)
// gils said...
total rotfl...sirichi sirichi vai valikuthu :D//
மிக்க நன்றி Gils :-)
//புதுகைத் தென்றல் said...
என் பின்னூட்டம் எங்கே?????????????//
மேல இருக்கே ;)
//Anonymous said...
Arumaiyana imagination..... //
மிக்க நன்றி...
//Nanum oru Tamilannu peruma padrennda kanna... :))//
நானும் உங்களை நெனச்சி பெருமை படறேன் ;)
//Anonymous said...
இந்த படத்துல வரும் காது கேக்காத மாமனார் கேரக்டர் யாருக்குன்னு சொன்னா நல்லா இருக்கும் பாலாஜி.
ர.மாதவி//
அதுக்கு நம்ம பட்டாபி பாஸ்கரை போட்டுடலாம் ;)
//கவிநயா said...
வேறென்ன புதுசா சொல்லப் போறேன்? சூப்பர் சிரிப்புங்க! :)
//ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.//
ரொம்ப ரசிச்சேன் :))//
மிக்க நன்றி கவிநயா :-)
அலோ
உங்க போஸ்ட்டுக்கு எதிர் போஸ்ட் போட்டா, எட்டிப் பாக்கணும்!
எட்டிப் பாக்காம என்ன வெட்டி முறிக்கறீங்க?
ஒரு ஃபோன் போட்டாச்சும் எட்டிப் பாருங்க வெட்டி! :-)
வித்யா-விக்ரம் உங்கள ரொம்ப விசாரிச்சதா சொல்லச் சொன்னாய்ங்க!
மீ தி 100?
அச்சோ...இது தாண்டீ 100-ன்னு போடணும்னு நெனச்சேன்!
சரி, இது தாண்டீ 101!
அட இத எப்படி 'மிஸ்' பண்ணேன்..!
அண்ணே கலக்கிட்டிங்க :))
அண்ணே உங்களுக்கு இந்த துறையில இருக்கிற பொண்ணுங்க மேல ஏதும் கோபம் இல்லையே...:)
ஏகப்பட்ட பாதிப்பு இருக்கும் போல...
கலக்கல் பாலாஜி. மணல் கயிறு படத்தை விடவும் கலக்கல் கட்டளைகள். :-)
இப்பிடியே குடும்பம் ஒரு கதம்பம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, வீடு மனைவி மக்கள், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ஆகிய படங்களையும் ரீமேக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :-)
come and visit my blog pls!!!u have a surprise over there!!!
-Srividhya(tamizhini)
ரேம்போ நல்ல கற்பனை மற்றும் சூப்பர் காமடி. வாழ்த்துக்கள்
திரைகதை நல்லா இருக்கு, பேசாம நிங்களே நடிச்சி படம் எடுதுராலமே ?
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அலோ
உங்க போஸ்ட்டுக்கு எதிர் போஸ்ட் போட்டா, எட்டிப் பாக்கணும்!
எட்டிப் பாக்காம என்ன வெட்டி முறிக்கறீங்க?//
ஆணி ரொம்ப அதிகமாயிடுச்சு :-(
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஒரு ஃபோன் போட்டாச்சும் எட்டிப் பாருங்க வெட்டி! :-)
வித்யா-விக்ரம் உங்கள ரொம்ப விசாரிச்சதா சொல்லச் சொன்னாய்ங்க!//
உங்க விக்ரம் சுத்த மொக்கை.. எங்க வித்யாக்கு அந்த மாதிரி பையனை எல்லாம் பிடிக்காது ;)
ஆனா நீங்க தானே நாரதர் நாயுடு... வழக்கம் போல ஏதாவது பொய் சொல்லி ஏமாத்துவீங்க ;)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மீ தி 100?//
அதுல என்ன சந்தேகம்??? ;)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அச்சோ...இது தாண்டீ 100-ன்னு போடணும்னு நெனச்சேன்!
சரி, இது தாண்டீ 101!//
வேணும்னா 200க்கு முயற்சி பண்றீங்களா? ;)
//தமிழன்... said...
அண்ணே கலக்கிட்டிங்க :))//
மிக்க நன்றி தமிழன் :-)
// தமிழன்... said...
அண்ணே உங்களுக்கு இந்த துறையில இருக்கிற பொண்ணுங்க மேல ஏதும் கோபம் இல்லையே...:)//
பொண்ணுங்க எந்த துறைல இருந்தாலும் நமக்கு கோபமில்லப்பா ;)
//தமிழன்... said...
ஏகப்பட்ட பாதிப்பு இருக்கும் போல...//
பதிவ பார்த்தா அப்படியா தெரியுது ;)
//G.Ragavan said...
கலக்கல் பாலாஜி. மணல் கயிறு படத்தை விடவும் கலக்கல் கட்டளைகள். :-)
//
ரொம்ப டாங்கிஸ் ஜி.ரா...
//
இப்பிடியே குடும்பம் ஒரு கதம்பம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, வீடு மனைவி மக்கள், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ஆகிய படங்களையும் ரீமேக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :-)//
நம்ம ஆரம்பிச்சி வெச்சாச்சி.. மக்கள் பார்த்துக்கட்டும்.. அது தான் இப்ப ஒரு தொடரா வந்துட்டு இருக்கே :-)
//தமிழினி..... said...
come and visit my blog pls!!!u have a surprise over there!!!
-Srividhya(tamizhini)//
அவார்ட் எல்லாம் கொடுத்திருக்கீங்க.. ப்ளாக்ல லிங் எல்லாம் பண்ணியிருக்கீங்க. ரொம்ப நன்றிங்கக்கோவ்...
//G Priya said...
ரேம்போ நல்ல கற்பனை மற்றும் சூப்பர் காமடி. வாழ்த்துக்கள்//
ஆஹா... அது ரேம்போ இல்லைங்க.. ரெமோ :-)
வாழ்த்திற்கு மிக்க நன்றி
//போக்கிரி பையன் said...
திரைகதை நல்லா இருக்கு, பேசாம நிங்களே நடிச்சி படம் எடுதுராலமே ?//
நீங்க ப்ரொட்யூஸ் பண்ணா நான் நடிக்காமலா போயிடுவேன் ;)
Too excellent!!! Visu dialogs are 101% on the bulls eye :)))
நல்ல காமெடி யான பதிவு...இருந்தாலும் வித்யா னு என் பேர போட்டு இப்படி தாகிருக்க வேண்டாம்....
சூப்பரே
LOL.
எந்த ஊரில் இந்த கண்டிஷன் எல்லாம் போடறாங்க? சாப்ட்வேர் மாப்பிள்ளைகள் பண்ணும் அழும்புகளையும் பத்தியும் கொஞ்சம் பதிவெழுதுங்களேன்? நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுத வேண்டி இருக்கும்.
:) :)
Came here via PrabuKarthik's link. A gud one! Eppadi thaan Ulladhai ullapadi ivlo clearaa solla mudiyudho?
// Boston Bala said...
Too excellent!!! Visu dialogs are 101% on the bulls eye :)))//
Thx a lot Baba :-)
//தமிழினி..... said...
நல்ல காமெடி யான பதிவு...//
மிக்க நன்றி :-)
//இருந்தாலும் வித்யா னு என் பேர போட்டு இப்படி தாகிருக்க வேண்டாம்....//
போன பதிவுல அட்வைஸ் கொடுத்த பொண்ணு பேரையே வெச்சிட்டேன் :-)
நீங்க இப்படி எல்லாம் கண்டிஷன் போட்டுடாதீங்க :-)
//சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
சூப்பரே//
மிக்க நன்றி :-)
//கயல்விழி said...
LOL.
எந்த ஊரில் இந்த கண்டிஷன் எல்லாம் போடறாங்க? சாப்ட்வேர் மாப்பிள்ளைகள் பண்ணும் அழும்புகளையும் பத்தியும் கொஞ்சம் பதிவெழுதுங்களேன்? நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுத வேண்டி இருக்கும்.
:) :)//
கயல்விழி அக்கா,
KRS இதை பத்தி ஒரு பதிவு போட்டிருக்காரே...
//Fathima said...
Came here via PrabuKarthik's link. A gud one! Eppadi thaan Ulladhai ullapadi ivlo clearaa solla mudiyudho?//
மிக்க நன்றி...
இப்படி எல்லாம் கண்டிஷன் போட்டா பசங்க எல்லாம் கவலைக்கிடமான நிலைல தான் இருப்பாங்க :-)
சினிமாவில் இப்போது விசு இல்லாக் குறையை நீக்கியுள்ளது போல் உள்லது.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
kalakkals
nice one :)
வேற மொழில டப்பிங் எல்லாம் பண்ணி forward வருது..
கலக்கீட்டீங்க போங்க...
அடுத்தது எப்போ ???
A conversation abt the process of selecting a software bridegroom….
Enjoy reading….
Vidhya: hey! What is the matter you have called up all of a sudden?
Nithya : do u remember that my parents gave my horoscope, to search for a
suitable match, to many people? So many horoscopes of the groom has come..
In that 4-5 seems to match.. I don't know which one to select, I am
confused because of it.
Vidhya: what is the confusion about?
Nithya : horoscopes of many software engineers have come. It seems now a
days, the software guys are wanting to marry girls in the other field.
That's I why I don't know whom I must select among this. You are a
software engineer na pls give me some suggestion .
vidhya : not a problem at all. So tell me the position that each one
holds.
nithya : first is a manager.
vidhya : manager ?? Then he will showcast himself that he is busy always.
But he will not do anything properly. He will get u 1 kg of rice and ask
you to prepare for the whole area say a village. He will get you mutton
and ask you to prepare chicken 65. Even if you protest telling you can't
make it, he'll not accept. He will tell you to work hard day and night to
prepare it. He will also tell he'll provide you with the night cab. Even
if you ask how can I prepare chicken 65 out of it by sitting day and night
he will not accept.
nithya : ohh..so dangerous he is!! Then I must escape. Next is a test
engineer .
vidhya : he is more dangerous than the other person. Whatever you do he
will correctly tell only the fault in it. Even if you try to surprise him
with 10 variety of food, he will tell the item which does not have salt in
it. If you ask him "will you not at least tell that it is good", he will
reply back saying it is your duty to make it good so why must I tell that.
He is sooo good …
.
Nithya : then a NO to him also. Next is the performance test engineer .
vidhya : he is another specimen.. even if everything is good, he will ask
why did it take this much time. If you take 10 minutes to make a coffee,
he will question you asking why you have taken 10 min for a coffee which
can be done within 5 min. Even if you say that he is talking about the
instant coffee while you have made the filter coffee, he will not accept.
The same will be with all the work you do. You must not think about this
person if you want to do make up in your life !!!
Nithya : then! you mean to say that we should not marry software guys??
Vidhya : who said like that?? In software there is one more group. They
are called the developers group . How much ever you hit them they will
bear.
Nithya : then tell about them.
Vidhya : you don't have to do anything. They will do everything
themselves. If we sit back and just boost them it is enough. But the
problem with them is- they will say "I know it" whatever you ask them.
Even that is ok. They will bear how much ever you hit them but the
condition is you must keep saying "you are too good" after hitting them
every time.
Nithya : this is superb. Then we must search for this kind of a groom….
//விஜய் said...
சினிமாவில் இப்போது விசு இல்லாக் குறையை நீக்கியுள்ளது போல் உள்லது.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com//
மிக்க நன்றி விஜய் :-)
//Dubukku said...
kalakkals
nice one :)//
மிக்க நன்றி தலைவா...
எல்லாம் உங்க ஆசி தான் :-)
//வழிப்போக்கன் said...
வேற மொழில டப்பிங் எல்லாம் பண்ணி forward வருது..
கலக்கீட்டீங்க போங்க...
அடுத்தது எப்போ ???//
அட்டகாசமா மொழி பெயர்த்திருக்காங்க...
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தலைவா...
vetti...
have a look on this...
http://charuonline.com/july08/ponnu.html
Post a Comment