தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, June 23, 2008

கவுண்டரும் நடிகர்களின் டைரக்டர் அவதாரமும்

வீட்டைவிட்டு வெளிய வந்தே பல நாட்கள் ஆன கடுப்பில் யாருக்கும் தெரியாமல் செந்திலுக்கு போன் போட்டு வர சொல்லி, வெளியே சாப்பிட கிளம்புகிறார் கவுண்டர். பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் ஓரமாக ஒரு டேபிளில் உட்கார்ந்து ஆர்டர் செய்கிறார்கள் இருவரும்.

க: என்னடா மண்டையா எப்படி இருக்க?

செ: என் நிலைமை ட்ராவிட் மாதிரி ஆகிடுச்சுண்ணே. கங்குலிக்கிட்ட திட்டு வாங்கிட்டே இருந்தப்பவாது பரவாயில்லை. இப்ப தோனி வந்தவுடனே டீம்லயே சேர்த்துக்க மாட்றாங்க. அந்த மாதிரி உங்ககிட்ட மிதி வாங்கிகிட்டாவது நடிச்சிட்டு இருந்தேன். இப்ப நீங்க இல்லாம என் நிலைமையை பார்த்தீங்களாண்ணே.

க: சரி விடு. பீல் பண்ணாத.

பக்கத்து டேபிலில் இருந்து கேட்ட குரல்கள் மிகவும் பரிட்சையமாக தெரிந்ததால் திரும்பி பார்க்கிறார்கள். கோடம்பாக்கமே அங்கே ஆஜராகி இருந்ததை பார்த்து ஜெர்க்காகிறார்கள்.

க: ஹாய் ஹீரோஸ். என்ன இங்க எல்லாருமே சேர்ந்து வட்ட மேஜை மாநாடு நடத்திட்டு இருக்கீங்க? ஹிந்தி படம் மாதிரி எல்லாரும் சேர்ந்து ஒரே படத்துல நடிக்க போறீங்களா?

விஜய்: ண்ணா. வாங்கண்ணா. பார்த்து ரொம்ப நாளாச்சி. ரொம்ப இளைச்சி போயிருக்கீங்க. ரெண்டு பாட்டில் குலுகோஸ் ஏத்தினா பழைய படி ஜம்முனு ஆகிடுவீங்கண்ணா.

க: டேய் வயசானவனுக்கும் உடம்பு சரியில்லாதவனுக்கும் வித்தியாசம் தெரியாதவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தான் பாரு. அவனை
சொல்லனும்டா. நான் இங்க இருந்தா ரணகளம் ஆகிடும். நான் கிளம்பறேன்.

விஜய்: ண்ணா. என்னங்கண்ணா இப்படி சொல்லிட்டீங்க? நாங்க இங்க ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கோம்ணா. நீங்க தான் எங்களை எல்லாம் நல்லா வழி நடத்தணும்.

க: சரி. ஹெல்ப்னு கேட்டுட்டா நாம எல்லாம் கர்ணன் மாதிரி. மேட்டரை சொல்லு

விஜய்: ண்ணா. S.J சூர்யால ஆரம்பிச்சி கரு.பழனியப்பன் வரைக்கும் நடிக்க வந்துட்டாங்க. போற போக்குல தமிழ்நாட்ல எங்களை எல்லாம் வெச்சி டைரக்ட் பண்ண ஆளே இல்லாம போயிடும் போலிருக்கு. அதுக்கு தான் ஒரு முடிவெடுக்கணும்னு இங்க கூடியிருக்கோம்.

க: ஒரு விதத்துல தமிழ் நாட்டு மக்கள் தப்பிச்சிட்டாங்கனு சந்தோஷப்பட்டாலும் அந்த கலர் மண்டையன் எல்லாம் நடிக்கறதை பார்க்கறது அவுங்களுக்கு தண்டனை தான். சரி, அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க. ஹாலிவுட் டைரக்டர்ஸை யாரையாவது இம்போர்ட் பண்ண போறீங்களா?

விஜய்: ண்ணா. என்னங்கண்ணா இப்படி சொல்றீங்க. அவுங்களுக்கு எல்லாம் திருப்பாச்சி மாதிரி சூப்பர் படம் எடுக்க தெரியுமா? அதான் நாங்களே படம் டைரக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.

க: டேய் குருவி மண்டையா. நீ நடிச்சாலே மக்கள் தாங்க மாட்டாங்க. நீ டைரக்ட் பண்ணா எப்படிடா தாங்குவாங்க? கதையை எங்க இருந்து பிடிப்ப?

விஜய்: என்னங்கண்ணா. இதுக்கூட தெரியாம இருக்கீங்க. இதுக்கூட யோசிக்காமலா முடிவெடுப்பேன். போன வாரமே பழைய தெலுகு படமெல்லாம் பார்த்தேன். 'டாக்டர்' NTR நடிச்ச "ராமுடு பீமுடு"வை ரீ மேக் பண்ணலாம்னு இருக்கேன்ணா. படம் கண்டிப்பா கில்லி மாதிரி ஓடும்னா.

க: அதான்னே. ரீமேக் படத்தை எந்த டைரக்டர் டைரக்ட் பண்ணா என்ன? அது என்னடா கில்லி மண்டையா அதுல அப்படி ஒரு சூப்பர் கதை?

விஜய்: ண்ணா. தமிழ்நாட்ல அப்படி ஒரு கதையோட எந்த படமும் இது வரைக்கும் வந்ததில்லை. அப்படி ஒரு கதை.

செந்தில் : அண்ணே. அந்த கதையை கொஞ்சம் சொல்ல சொல்லுங்கண்ணே. எனக்கு கேக்கணும்னு ஆசையா இருக்கு.

கவுண்டர்: டேய் அவிஞ்ச மண்டையா அவனுக்கு அவன் படத்து கதையே தெரியாது. இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான். அதுக்கே அவனுக்கு டபுல் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கணும். இவன் சொல்றானு கதையை கேக்கனும்னு சொல்றீயே.

செந்தில்: அண்ணே. நாம கதைல ஏதாவது சேஞ்ச் பண்ணி அப்படியே ஒரு சீன்ல நுழைஞ்சிடலாம்ணே.

கவுண்டர்: சரி விடு. ஏம்பா டாக்டர் மண்டையா. குழந்த புள்ள ஆசைப்படுது இல்லை. அப்படியே அந்த கதையை கொஞ்சம் சொல்லேன்.

விஜய் : ண்ணா. இதுல ஹீரோ டபுல் ஆக்ட்ண்ணா. ரெட்டை பிறவிங்க. ஒருத்தர் அக்கா வீட்ல பணக்கரணா, கோழையா வளர்றாரு. இன்னொருத்தர் பாட்டிக்கிட்ட வீரமா வளர்றார். கோழையா வளர்றவர் அவுங்க மாமாக்கிட்ட பயங்கரமா அடி வாங்கிட்டு வீட்டை விட்டு வெளியேறிடறாரு. அதுக்கு அப்பறம் ஆள் மாறாட்டம். அதுல பாருங்களேன், அந்த வீரமா இருக்கறவர் அவுங்க மாமாவை சவுக்கால அடிப்பாரு பாருங்க. அப்படி இருக்கும். இதுல இன்னொரு ஸ்பேஷாலிட்டி என்னன்னா வீரமா இருக்கறவருக்கு குத்து பாட்டுண்ணா, கோழையா இருக்கறவருக்கு மெலடி பாட்டுண்ணா. தமிழ் நாடே அலற போகுது பாருங்கண்ணா.

கவுண்டர்: டேய் போக்கிரி மண்டையா, இந்த படம் வந்து தமிழ் நாடே அலறிடுச்சிடா. நான் ஆணையிட்டால்னு MGR பாடின பாட்டை இன்னைக்கும் எல்லா எலக்ஷனுக்கும் போட்டுட்டு தான்டா இருக்காங்க.

விஜய்: ஆஹா. இதை MGR ஏற்கனவே நடிச்சிட்டாரா? அப்ப நான் என்ன பண்ண?

கவுண்டர்: நீ வேணா 'டாக்டர்' ராஜசேகர் நடிச்ச "இது தான்டா போலிஸ்" படத்தை ரீ-மேக் பண்ணு.

விஜய்: ண்ணா. சூப்பருங்கண்ணா. அவரும் டாக்டர் நானும் டாக்டர். அட்டகாசமா ப்ரஃபஷன் மேட்ச் ஆகுங்கண்ணா. இன்னைக்கே DVD வாங்கிடறேண்ணா.

சொல்லிவிட்டு விஜய் அங்கிருந்து எஸ் ஆகிறார்.

கவுண்டர் அடுத்த நபரை பார்க்கிறார்.

கவுண்டர்: ஏன்டா இந்த மெட்ராஸ் வெயில்ல கருப்பு கோர்ட், கருப்பு கண்ணாடி போட்டுட்டு வந்திருக்க?

அஜித்: ஏ! நா இந்த கர்ப்பு கலர் கன்னாடியும் கோர்ட்டும் போட்டு நட்ச்சா தான் படம் ஓடுது. அதான் இப்படி வந்துருக்கேன்.

கவுண்டர்: டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. அது சரி நீ என்னா படம் டைரக்ட் பண்ண போற?

அஜித்: ஏ நான் தன் இ ஆள் இல்ல. முன்னூறு அசிஸ்டண்ட் டைரக்டர்களின் மூச்சு

கவுண்டர்: நீ பேசறது ஒரு பேச்சு. இதுல நீ மூன்னூறு பேரோட மூச்சா? உதை வாங்கறதுக்கு முன்னாடி ஓடிப்போ.

அஜித்: நான் முழுச்சிட்டேன். இதோ வரேன்.

சொல்லிவிட்டு எஸ் ஆகிறார்.

கவுண்டர்: அடப்பாவி. அப்ப இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான் பேசிட்டு இருந்தியா?

செந்தில்: அண்ணே. அவர் முப்பது படம் தூங்கிட்டே நடிச்சிருக்காரு. இப்ப தான் அட்டகாசம் படத்துல எழுந்திரிச்சாரு.

கவுண்டர் : டேய் ஆஃப் பாயில் மண்டையா. அது பஞ்ச் டையிலாக்காம்.

அடுத்து கவுண்டர் கண்ணில் சிக்குகிறார் ஜெயம் ரவி.

கவுண்டர்: டேய் வளர்ந்து கெட்டவனே. நீ என்னடா இங்க பண்ணிட்டு இருக்க.

ஜெ.ரவி: இவுங்க பண்ற வித்தியாசத்தையே எங்க குடும்பத்துல நாங்க வித்தியாசமா பண்ண போறோம்?

கவுண்டர்: அப்படி என்னடா வித்யாசமா பண்ண போறீங்க? சொந்தமா கதை எழுதி நடிக்க போறீங்களா?

ஜெ.ரவி: அதெல்லாம் வித்யாசமாண்ணா? நாங்க அதைவிட வித்யாசமா பண்ண போறோம். அதாவது ஒரு நல்ல தெலுகு படத்தை ரீ மேக் பண்ண போறோம்.

கவுண்டர்: டேய் ரீ-மேக் மண்டையா என்னை டென்ஷனாக்காத.

ஜெ.ரவி: நான் இன்னும் சொல்லியே முடிக்கலைண்ணா. இதுல வித்யாசம் என்னன்னா, படத்தை நான் டைரக்ட் பண்ணறேன். எங்க அண்ணன் ஹீரோவா நடிக்கிறார். இன்னும் நல்ல படம் எதுவும் வராததால நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம். எப்படி எங்க வித்தியாசம்?

சொல்லிவிட்டு ஒரு பக்க புருவத்தை மட்டும் உயர்த்தி காட்டுகிறார்.

கவுண்டர்: டேய் ஒழுங்கா ஓடிப்போயிடு. இந்த பக்கமே வராத.

அவர் அருகிலிருக்கு தனுஷை பார்க்கிறார் கவுண்டர்.

கவுண்டர் : ஏன்டா நீயும் உங்க அண்ணனை நடிக்க வெச்சி படம் எடுக்க போறியா? வேணாம்டா தமிழ் நாட்டு மக்கள் பாவம்டா. விட்டுடுங்கடா.

தனுஷ் : இல்லைங்கண்ணா. நான் தான் ஹீரோவா நடிக்க போறேன். கதை ரெடி. படத்துக்கான டைட்டில் தான் யோசிச்சிட்டு இருக்கேன்.

கவுண்டர்: ஓ. இந்த சின்ன உடம்புக்குள்ள இவ்வளவு திறமையிருக்கா. எங்க கதை சொல்லு பார்ப்போம். நான் வேணா டைட்டில் சொல்றேன்.

தனுஷ் : ரெண்டு அரியர் வெச்ச ஒரு பையன் இருக்கான். அவனுக்கு தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு. வேலை தேடாம தறுதலையா சுத்திட்டு இருக்கான். அவுங்க அப்பா எப்பவுமே அவனை தண்ட சோறுனுதான் திட்டிட்டு இருப்பாரு. திடீர்னு ஒரு நாள் அப்பாக்கும் மகனுக்கும் பிரச்சனையாகிடுது. உடனே மகன் பொறுப்பாகி வேலை தேடி வேலைல சேர்ந்திடறான். அப்படியே அவன் டாவடிக்கிற பொண்ணும் செட் ஆகிடுது. அப்படியே ஒரு குத்து பாட்டு. ரெண்டு ஃபைட்டு. இதுக்கு டைட்டில் என்ன வைக்கலாம்னு தெரியல. படிக்காதவன், அண்ணாமலை, தளபதி, பாட்ஷா இதுல ஏதாவது ஒண்ணு வைக்கலாம்னு இருக்கேன்.

கவுண்டர் : "பாபா"னு வை படம் பிச்சிக்கிட்டு ஓடும். டேய் ஓணான் மண்டையா ஒரே படத்து கதையை வெச்சிக்கிட்டு பேர் மட்டும் மாத்தி போட்டு மக்களை ஏமாத்தலாம்னு பார்க்காதீங்கடா. திருந்துங்கடா...

சொல்லிவிட்டு கவுண்டர் திரும்பி பார்க்கிறார். எல்லாரும் அந்த இடத்திலிருந்து எஸ் ஆகியிருந்தார்கள்.

83 comments:

Anonymous said...

Hi Vetti,
Back to Form?!.Gud!
~Cheran

அபி அப்பா said...

பாலாஜி! உங்களை அடிச்சுக்க கவுண்டர் பதிவுக்கு ஆளே இல்லைப்பா! சூப்ப்பர்!!!"குருவி" மண்டையன் சூப்பரோ சூப்பர்:-)))

SP.VR. SUBBIAH said...

////இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான்.////

இப்படி எல்லாம் நடந்திருக்கா?
எப்படிசாமி அதையெல்லாம் பார்த்தீங்க?

நவநீத்(அ)கிருஷ்ணன் said...

:-)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

Hi Vetti,
Back to Form?!.Gud!
~Cheran//

Hi Cheran,
Thanks a lot...

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

பாலாஜி! உங்களை அடிச்சுக்க கவுண்டர் பதிவுக்கு ஆளே இல்லைப்பா! சூப்ப்பர்!!!"குருவி" மண்டையன் சூப்பரோ சூப்பர்:-)))//

அண்ணே,
ரொம்ப நன்றி.. எங்க பதிவு ரொம்ப மோசமோனு நினைச்சி பயந்துட்டே இருந்தேன். உடனே உங்க பின்னூட்டம் :-)

வெட்டிப்பயல் said...

// SP.VR. SUBBIAH said...

////இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான்.////

இப்படி எல்லாம் நடந்திருக்கா?
எப்படிசாமி அதையெல்லாம் பார்த்தீங்க?//

வாத்தியார்,
அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை.


ரெண்டு படத்துக்கும் ஒரே கதை. நம்ம டாக்டர் அப்படி தான் பண்ணியிருப்பார்னு ஒரு நம்பிக்கை (கற்பனை) ;)

ச்சின்னப் பையன் said...

:-))))))

ச்சின்னப் பையன் said...

//டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. //

இது சூப்பர்.. தல, தலயையே கலாச்சிட்டீங்க...

SathyaPriyan said...

//
ஏன்டா நீயும் உங்க அண்ணனை நடிக்க வெச்சி படம் எடுக்க போறியா? வேணும்னா உங்க அண்ணனை கண்ணு தெரியாத பிச்சைக்காரன் மாதிரி நடிக்க வை. கலெக்ஷன் நல்லா இருக்கும்.
//
வெட்டி நீங்கள் இதனை தவிர்த்திருக்கலாமே. ஒருவரின் உடல் குறைபாடுகளை கேலி செய்வது தவறு மட்டும் அல்ல அநாகரீகமும் கூட இல்லையா?

நீங்கள் அப்படியெல்லாம் செய்பவர் அல்ல என்று உங்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும் என்றாலும் உங்கள் பதிவில் அதனை பார்த்தது சிறிது வேதனையாக இருந்தது.

முடிந்தால் அதனை நீக்கி விடுங்களேன்.

நீங்கள் என்னை தவறாக நினைக்க மாட்டீர்கள் என்பதால் சொல்லுகிறேன்.

உங்களை இது காயப்படித்தி இருந்தால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்.

வெட்டிப்பயல் said...

//நவநீத்(அ)கிருஷ்ணன் said...

:-)//

நவநீத்,
மிக்க நன்றி :-)

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...

:-))))))//

:-)

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...

//டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. //

இது சூப்பர்.. தல, தலயையே கலாச்சிட்டீங்க...//

தலய கம்மியா தான் கலாய்ச்சிருக்கோம். மீதியெல்லாம் அவருக்கு வெச்சிருக்கற டெவில் ஷோல இருக்கு ;)

வெட்டிப்பயல் said...

சத்யப்பிரியன்,
அதை எடுத்தாச்சு. காமெடிக்காகத்தான் அப்படி எழுதினேன். நீங்க சொன்னது சரியெனப்பட்டதால் அதை மாற்றிவிட்டேன்.

கருத்திற்கு நன்றி :-)

SathyaPriyan said...

//
வெட்டிப்பயல் said...
சத்யப்பிரியன்,
அதை எடுத்தாச்சு. காமெடிக்காகத்தான் அப்படி எழுதினேன். நீங்க சொன்னது சரியெனப்பட்டதால் அதை மாற்றிவிட்டேன்.

கருத்திற்கு நன்றி :-)
//
நன்றி வெட்டி. நானும் நீங்கள் என்பதால் தான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற உரிமையில் அதனை சொன்னேன்.

சும்மா குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் பேருக்கு forward ஆகப்போகும் பதிவல்லவா. யாரும் புண்பட்டு விடக் கூடாதே.

யாத்திரீகன் said...

:-) enjoyed the Vijay-GoundBell part :-)))

Sridhar Narayanan said...

//இப்ப தான் அட்டகாசம் படத்துல எழுந்திரிச்சாரு.//

அட்டகாசம் எல்லாம் பழசாச்சே. பில்லாலதான் தல நடந்துகிட்டே இருந்தாரே :-))

நம்ம சிம்புவை விட்டுட்டிங்களே :-)

வெட்டிப்பயல் said...

//நன்றி வெட்டி. நானும் நீங்கள் என்பதால் தான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற உரிமையில் அதனை சொன்னேன்.
//
உங்களுக்கு இல்லாத உரிமையா? தாராளமா சொல்லலாம் :-)

//
சும்மா குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் பேருக்கு forward ஆகப்போகும் பதிவல்லவா. யாரும் புண்பட்டு விடக் கூடாதே.//
ஆஹா..

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளப்படுத்திடறாங்களே!

இன்னுமா இந்த ஊர் நம்மல நம்பிட்டு இருக்கு ;)

வெட்டிப்பயல் said...

//யாத்திரீகன் said...

:-) enjoyed the Vijay-GoundBell part :-)))//

ரசித்ததை தெரிவித்ததற்கு மிக்க நன்றி யாத்திரீகன்...

வெட்டிப்பயல் said...

// Sridhar Narayanan said...

//இப்ப தான் அட்டகாசம் படத்துல எழுந்திரிச்சாரு.//

அட்டகாசம் எல்லாம் பழசாச்சே. பில்லாலதான் தல நடந்துகிட்டே இருந்தாரே :-))
//
ஸ்ரீதர்,
அட்டகாசம் படத்து அட்வர்டைஸ்மண்ட்ல தான் தல சொல்லுவார். எழுந்திரிச்சிட்டேன். தோ வரேனு...

அப்ப தான் தோனுச்சி. அடப்பாவி நீ இத்தனை நாள் தூங்கிட்டு இருக்கனு தெரிஞ்சிருந்தா நிறைய தயாரிப்பாளர்கள் தப்பிச்சிருப்பாங்களேனு.

//
நம்ம சிம்புவை விட்டுட்டிங்களே :-)//

அவருக்கு பதிலா தான் தனுஷ் ;) (No Double meaning.. only single meaning ;))

நெல்லை காந்த் said...

Supperru Vetti

Vetti Returns....

Sridhar Narayanan said...

சூப்பர். பெரிய ரிஸர்ச்சே பண்ணியிருக்கீங்கப் போல :-).

உங்களை எப்படி 'வெட்டிப் பயல்'னு சொல்றது. 'வெ(ரை)ட்டிப் பயல்'னு வேணா சொல்லலாம். :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//டேய் அவிஞ்ச மண்டையா அவனுக்கு அவன் படத்து கதையே தெரியாது. இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான்//

:-)))

இதுக்காகவே உங்களுக்கும் ஒரு டாக்டர் பட்டம் தரலாம் டாக்டர் வெட்டி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஹாலிவுட் டைரக்டர்ஸை யாரையாவது இம்போர்ட் பண்ண போறீங்களா?//

இது யோசனை!
யாரங்கே, இன்னுமா டாக்டர் பட்டம் கொடுக்கலை எங்க வெட்டிக்கு?

ஆனாலும்...
ஆயிரம் வெளிநாட்டுத் தங்கம் வந்தாலும் ஒரு உள்நாட்டுச் சிங்கம், KSR-ஐ யாரும் அடிச்சிக்க முடியாது! உலக நாயகனுக்குத் தெரிஞ்சது உங்களுக்குத் தெரியாமப் போச்சே பாலாஜி! :-)

இவன் said...

//டேய் வயசானவனுக்கும் உடம்பு சரியில்லாதவனுக்கும் வித்தியாசம் தெரியாதவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தான் பாரு. அவனை
சொல்லனும்டா. நான் இங்க இருந்தா ரணகளம் ஆகிடும். நான் கிளம்பறேன்.//
அய்யோ அந்த பட்டத்த திருப்பி வாங்குங்கடா அப்பவாவது இந்த குருவி மண்டையன் ஒழுங்கா நடிப்பான்

//அவுங்களுக்கு எல்லாம் திருப்பாச்சி மாதிரி சூப்பர் படம் எடுக்க தெரியுமா? அதான் நாங்களே படம் டைரக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.//
அதுசரி ஏண்டா அரிவா மண்டையா அந்த "சிவக்காசி" "ஆதி""அழகியதமிழ்மகன்" எல்லாத்தயும் விட்டுட்ட

//டேய் குருவி மண்டையா. நீ நடிச்சாலே மக்கள் தாங்க மாட்டாங்க. நீ டைரக்ட் பண்ணா எப்படிடா தாங்குவாங்க? கதையை எங்க இருந்து பிடிப்ப?//
இப்படியெல்லாம் உண்மைய publicல சொல்லக்கூடாது

//போன வாரமே பழைய தெலுகு படமெல்லாம் பார்த்தேன். 'டாக்டர்' NTR நடிச்ச "ராமுடு பீமுடு"வை ரீ மேக் பண்ணலாம்னு இருக்கேன்ணா. படம் கண்டிப்பா கில்லி மாதிரி ஓடும்னா.//
டேய் மண்டையா இவ்வளவு அடிவாங்கியும் நீ இன்னமும்
திருந்தலையா??

//இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான்.//
அட்ப்பாவி அப்போ S.J.சூர்யா கதை சொன்னநேரம் சங்கவியையா பார்த்துட்டு இருந்தா??

//ஏ! நா இந்த கர்ப்பு கலர் கன்னாடியும் கோர்ட்டும் போட்டு நட்ச்சா தான் படம் ஓடுது. அதான் இப்படி வந்துருக்கேன்.//
அடப்பாவி கண்ணுதெரியாத ஒருத்தன் கோர்ட் போட்டு நடிக்கிறான் என்னு போனது தப்பா போட்ச்சுதோ??

//எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற.//
உஷ் public, public.... publicல உண்மையெல்லாம் சொல்லக்கூடாது

//நீ பேசறது ஒரு பேச்சு. இதுல நீ மூன்னூறு பேரோட மூச்சா? உதை வாங்கறதுக்கு முன்னாடி ஓடிப்போ.//
டேய் அஜித் மண்டையா முதல "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" பார்த்து தமிழ்ப்படிடா

//அடப்பாவி. அப்ப இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான் பேசிட்டு இருந்தியா?
//
உன்னையெல்லாம் நம்பி அந்த producer பணம் போட்டானே அவனை சொல்லனும்??

//படத்தை நான் டைரக்ட் பண்ணறேன். எங்க அண்ணன் ஹீரோவா நடிக்கிறார். இன்னும் நல்ல படம் எதுவும் வராததால நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம். எப்படி எங்க வித்தியாசம்?//
நீ நடிக்குறதே கொடுமை அதில உங்கண்ணன் வேறயா?? தமிழ்மக்கள் தாங்க மாட்டாங்கடா டேய்....

//ரெண்டு அரியர் வெச்ச ஒரு பையன் இருக்கான். அவனுக்கு தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு. வேலை தேடாம தறுதலையா சுத்திட்டு இருக்கான். அவுங்க அப்பா எப்பவுமே அவனை தண்ட சோறுனுதான் திட்டிட்டு இருப்பாரு. திடீர்னு ஒரு நாள் அப்பாக்கும் மகனுக்கும் பிரச்சனையாகிடுது. உடனே மகன் பொறுப்பாகி வேலை தேடி வேலைல சேர்ந்திடறான். அப்படியே அவன் டாவடிக்கிற பொண்ணும் செட் ஆகிடுது. அப்படியே ஒரு குத்து பாட்டு. ரெண்டு ஃபைட்டு.//
ஏண்டா மண்ட்டையா அப்படியே "திவ்யா திவ்யா" என்னு ஒரு பாட்டையும் போட்டு நல்ல போயிடும் நீங்க திருந்தவேமாட்டீங்களாடா??

//படிக்காதவன், அண்ணாமலை, தளபதி, பாட்ஷா// கொஞ்சமாவது ரஜினிய விடுடா உனக்கு மாமாவா வந்த பாவத்துக்கு அந்தாள் இன்னும் என்னேன்ன கொடுமைய அனுபவிக்கனுமோ??

Sridhar Narayanan said...

//இதுக்காகவே உங்களுக்கும் ஒரு டாக்டர் பட்டம் தரலாம் டாக்டர் வெட்டி!//

கேள்விக் கேட்டு 3 நாளாச்சு. மூச்சு பேச்சே காணோம்.

இங்க வெட்டியோடு உக்காந்து 'வெட்டி' ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கீங்க. உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்திடலாம். :-))

என் கேள்விக்கு என்ன பதில்?

வெட்டிப்பயல் said...

//நெல்லை காந்த் said...

Supperru Vetti

Vetti Returns....//

நன்றி நெல்லைகாந்த்...

வெட்டிப்பயல் said...

// Sridhar Narayanan said...

சூப்பர். பெரிய ரிஸர்ச்சே பண்ணியிருக்கீங்கப் போல :-).//
இது ஆறு மாசத்துக்கு முன்னாடி எழுத வேண்டிய போஸ்ட்... ரொம்ப நாளா மனசுல நிக்குது. அதான் :-)

போன வாரம் எழுதி வைச்சு சேமிக்காம விட்டுட்டேன். மறுபடியும் இன்னைக்கு டைப் பண்ணும் போது பழசைவிட கொஞ்சம் நல்லா வந்தது :-)

//
உங்களை எப்படி 'வெட்டிப் பயல்'னு சொல்றது. 'வெ(ரை)ட்டிப் பயல்'னு வேணா சொல்லலாம். :-)//

அண்ணனுக்கு போட்டியா வருவீங்க போல. சீக்கிரம் வலைப்பதிவு தொடங்குங்க :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//டேய் அவிஞ்ச மண்டையா அவனுக்கு அவன் படத்து கதையே தெரியாது. இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான்//

:-)))

இதுக்காகவே உங்களுக்கும் ஒரு டாக்டர் பட்டம் தரலாம் டாக்டர் வெட்டி!//

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்ததுக்கு அப்பறம் அந்த பட்டத்தோட மதிப்பே குறைஞ்சிடுச்சாம்.

நமக்கு வேணா "சர்" பட்டம் கொடுக்க சொல்லலாம் ;)

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஹாலிவுட் டைரக்டர்ஸை யாரையாவது இம்போர்ட் பண்ண போறீங்களா?//

இது யோசனை!
யாரங்கே, இன்னுமா டாக்டர் பட்டம் கொடுக்கலை எங்க வெட்டிக்கு?

ஆனாலும்...
ஆயிரம் வெளிநாட்டுத் தங்கம் வந்தாலும் ஒரு உள்நாட்டுச் சிங்கம், KSR-ஐ யாரும் அடிச்சிக்க முடியாது! உலக நாயகனுக்குத் தெரிஞ்சது உங்களுக்குத் தெரியாமப் போச்சே பாலாஜி! :-)//

உலக நாயகன் மாதிரி செங்கல்பட்டுக்கு அந்த பக்கம் இருக்கற மக்களுக்கு படம் எடுத்தா உங்களை கேக்கலாம். நம்ம இளைய தளபதி அதுக்கு இந்த பக்கம் இருக்கறவங்களுக்கு எடுக்கறவராச்சே ;)

வெட்டிப்பயல் said...

//உனக்கு மாமாவா வந்த பாவத்துக்கு அந்தாள் இன்னும் என்னேன்ன கொடுமைய அனுபவிக்கனுமோ??//

////போன வாரமே பழைய தெலுகு படமெல்லாம் பார்த்தேன். 'டாக்டர்' NTR நடிச்ச "ராமுடு பீமுடு"வை ரீ மேக் பண்ணலாம்னு இருக்கேன்ணா. படம் கண்டிப்பா கில்லி மாதிரி ஓடும்னா.//
டேய் மண்டையா இவ்வளவு அடிவாங்கியும் நீ இன்னமும்
திருந்தலையா??//

சூப்பர்.. இதை படிச்சிட்டு சத்தம் போட்டு சிரித்தேன் :-)

கோவி.கண்ணன் said...

//கவுண்டர்: டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. அது சரி நீ என்னா படம் டைரக்ட் பண்ண போற?//


:)

பாலாஜி,

கலக்கல்...எஸ்ஜே சூர்யா, பேரரசு அடுத்த பாகத்தில் வருகிறார்களா ?

keyven said...

கவுண்டர் கிட்டத்தட்ட ரிட்டயர் ஆனாலும்.. அவரோட ஸ்டைல் ஐ ஞயாபகம் படுத்திகிட்டே இருக்கீங்க.. சூப்பர் !!

இன்னம் கொஞ்சம் கவுண்டர் ஸ்டைல் "வசை" களை கத்துக்குணும் நீங்க.. என்னோட ப்ளோக் க்கு வாங்க.. சொல்லி தரேன்..:))

முரளிகண்ணன் said...

சிரிச்சு சிரிச்சு அய்யோ எங்கேயோ போயிட்டீங்க

பினாத்தல் சுரேஷ் said...

எல்லாரும் எஸ் ஆகிவிட்ட மகிழ்ச்சியில் கவுண்டர் திரும்பினால் அங்கே ஒரு உருவம் தெரிகிறது.

டேய் கோமுட்டித் தலையா.. வாடா நாம ஓடிறலாம்.

ஏண்ணே.. நம்மளைப்பாத்துதானே எல்லாரும் ஓடுவாங்க..

நான்கூட நம்மைப் பாத்துதான் ஓடுறாங்கன்னுதான் நெனைச்சுகிட்டிருந்தேன்.. தோ வரான் பாரு.. இவனைப்பாத்துதான் எல்லாரும் எஸ் ஆயிருக்காங்க..

உருவம் செல்போனில் பேசிக்கொண்டே வருகிறது..

எஸ் டீ.. சொன்னாக் கேளுடீ.. எனக்குப் பொய் பேசத் தெரியாதுடீ.. எனக்கு நடிக்கத் தெரியாதுடீ.. எனக்கு டைரக்ட் பண்ணத் தெரியாதுடீ..

பாரு.. எல்லாத்தையும் ஒத்துக்கிட்டே எல்லாத்தையும் பண்ணுது பாரு..

ஏன்ணே தெரியாட்டி இந்த வேலையெல்லாம் பண்ணனும்?

அதுவே சொல்லும் பாரு..

வேணாண்டி.. நான் ரொம்ப நல்லவன், வல்லவன், கெட்டவன்..

ஆமாம்.. அழிஞ்சு போனவன்.. ஒழிஞ்சு போனவன்.. உருப்படாத போனவன்..

மத்தவனுங்க எல்லாம் இன்னிக்கு டைரக்ட் பண்ண வராங்க.. எனக்கு 25 வருஷமா டைரக்ஷன் லே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு தெரியுமா? எங்க அப்பா எனக்க்கு.. தாங்க முடியாமல் கண்ணீர் வருகிறது அந்த உருவத்துக்கு..

ஆமாண்ணே.. இப்பதாண்ணே புரியுது நீங்க ஏன் எஸ் ஆவச் சொன்னீங்கன்னு.. வாங்கண்ணே ஓடிறலாம்!

வெட்டிப்பயல் said...

//:)

பாலாஜி,

கலக்கல்...எஸ்ஜே சூர்யா, பேரரசு அடுத்த பாகத்தில் வருகிறார்களா ?//

கோவி,
அவுங்க எல்லாருக்கும் ஏற்கனவே சுளுக்கெடுத்தாச்சே...

இங்கே சொடுக்கவும்

வெட்டிப்பயல் said...

//keyven said...

கவுண்டர் கிட்டத்தட்ட ரிட்டயர் ஆனாலும்.. அவரோட ஸ்டைல் ஐ ஞயாபகம் படுத்திகிட்டே இருக்கீங்க.. சூப்பர் !!

இன்னம் கொஞ்சம் கவுண்டர் ஸ்டைல் "வசை" களை கத்துக்குணும் நீங்க.. என்னோட ப்ளோக் க்கு வாங்க.. சொல்லி தரேன்..:))//

உங்க ப்ளாக் லிங் தரவும். உங்க ப்ரொஃபைல பப்ளிக் வியூ பண்ற ஆப்ஷன் வைக்கல போல

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...

சிரிச்சு சிரிச்சு அய்யோ எங்கேயோ போயிட்டீங்க//

மிக்க நன்றி முரளிகண்ணன்

வெட்டிப்பயல் said...

பி.சுரேஷ்,
சூப்பர்... பதிவு பெருசா போச்சேனு தான் சிம்புவை விட்டேன். நீங்க அதை சூப்பரா முடிச்சிட்டீங்க :-)

Syam said...

//சும்மா குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் பேருக்கு forward ஆகப்போகும் பதிவல்லவா. யாரும் புண்பட்டு விடக் கூடாதே//

romba sari.... :-)

Syam said...

//நம்ம சிம்புவை விட்டுட்டிங்களே :-)//

avanukku thaniya oru post podanum :-)

Anonymous said...

your post is hilarious

- Kumar, Chennai

Anonymous said...

Superappu.

Cheers
Christo

Udhayakumar said...

சொம்பு மட்டும் மிஸ்ஸிங்... ஓ, அவரு ஏற்கனவே டயரடக்கர் ஆகிட்டாருல்ல???

கிரி said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

நம்ம கவுண்டர் கவுண்டர் தாங்க..

பாலாஜி ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. செம காமெடி போங்க.

அடிக்கடி எழுதுங்க இந்த மாதிரி, கவுண்டர் படித்தாலே தன்னை மறந்து சிரித்துக்கொண்டு இருப்பார், எவனோ நமக்கு தெரியாம நம்ம ஸ்கிரிப்ட் ஐ திருடிட்டானோன்னு...:-)))))))))

Sen22 said...

//Hi Vetti,
Back to Form?!.Gud!//

Back to full form..ன்னு சொல்லுங்கண்ணா..


Superuuu Vetti,

Sathiya said...

//டேய் அவிஞ்ச மண்டையா அவனுக்கு அவன் படத்து கதையே தெரியாது. இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான்//
:))) இதான் கலக்கல்! இந்த மாதிரியான உங்க எல்லா பதிவுலையும் நீங்க முதல்ல கலாய்க்கிறது டாக்டர் விஜய தான். அவர் தான் உங்களுக்கு லக்கியா;)

Thamizhmaangani said...

வெட்டிப்பயலே, u r gr8!! ரொம்ப நாளா இருந்த பல் வலி போய் இந்த பதிவ படிச்சுட்டு எனக்கு வயித்து வலி வந்துடுச்சு!! ரொம்பப சூப்பர்ர்!!

// நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற.//

விழுந்து விழுந்து சிரிச்சு.. அடிப்பட்டு போச்சுதுங்கோ!!

ராஜ நடராஜன் said...

சாப்பாட்டுக்கு மணி அடிச்சிட்டாங்க!வந்து ரசிக்கிறேன்.

மங்களூர் சிவா said...

kalakkal vetti
:))

PPattian : புபட்டியன் said...

நெறைய பேரு பின்னூட்டிட்டாங்க.. அதனால

:)))))))))))))))))))))

கை நனைச்சுட்டேன், துடைக்க துண்டு குடுங்க..

வெட்டிப்பயல் said...

// Syam said...

//சும்மா குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் பேருக்கு forward ஆகப்போகும் பதிவல்லவா. யாரும் புண்பட்டு விடக் கூடாதே//

romba sari.... :-)//

நாட்டாமை,
ஏன் இந்த கொலை வெறி?

வெட்டிப்பயல் said...

// Syam said...

//நம்ம சிம்புவை விட்டுட்டிங்களே :-)//

avanukku thaniya oru post podanum :-)//

நாட்டாமை,
அவனுக்கு ஏற்கனவே ஒரு பதிவு போட்டாச்சு.. மறுபடியும் ஒண்ணு போடுவோம் ;)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

your post is hilarious

- Kumar, Chennai//

Thx a lot Kumar...

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Superappu.

Cheers
Christo//

Dankis Christo :-)

வெட்டிப்பயல் said...

//Udhayakumar said...

சொம்பு மட்டும் மிஸ்ஸிங்... ஓ, அவரு ஏற்கனவே டயரடக்கர் ஆகிட்டாருல்ல???//

உதய் சரியா சொன்னீங்க...

வெட்டிப்பயல் said...

//கிரி said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

நம்ம கவுண்டர் கவுண்டர் தாங்க..
//
அதே அதே...

// பாலாஜி ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. செம காமெடி போங்க.//
ரொம்ப டாங்ஸ் :-)

//
அடிக்கடி எழுதுங்க இந்த மாதிரி, கவுண்டர் படித்தாலே தன்னை மறந்து சிரித்துக்கொண்டு இருப்பார், எவனோ நமக்கு தெரியாம நம்ம ஸ்கிரிப்ட் ஐ திருடிட்டானோன்னு...:-)))))))))//

நம்மல அவர் சிரிக்க வைச்சார். அவரை நாம சிரிக்க வைச்சா அதை விட வேற என்ன சந்தோஷம் வேணும் :-)

இராம்/Raam said...

நல்லாயிருக்குப்பா....... :))


சில இடங்களிலே ஸ்பெல்லிங் மிஸ்டேக் கொஞ்சம் இருக்கு...


அப்புறம் இதை படிச்சாவது நம்ம சூறாவளி எலக்கியவியாதிக்கு சிரிப்பு வந்துச்சான்னு கேட்டு சொல்லுப்பா.... :)))

வெட்டிப்பயல் said...

// Sen22 said...

//Hi Vetti,
Back to Form?!.Gud!//

Back to full form..ன்னு சொல்லுங்கண்ணா..


Superuuu Vetti,//

ரொம்ப டாங்ஸ் செந்தில்...

வெட்டிப்பயல் said...

//Sathiya said...

//டேய் அவிஞ்ச மண்டையா அவனுக்கு அவன் படத்து கதையே தெரியாது. இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான்//
:))) இதான் கலக்கல்! இந்த மாதிரியான உங்க எல்லா பதிவுலையும் நீங்க முதல்ல கலாய்க்கிறது டாக்டர் விஜய தான். அவர் தான் உங்களுக்கு லக்கியா;)//

சத்தியா,
விஜய், சொம்பு, S.J.Surya, மொக்கையன் பேரரசு இவுங்களை எல்லாம் கலாய்க்கறதுனா நமக்கு ஃப்லோ தானா வந்துடும். அதனால இவுங்களை யாரையாவது வெச்சி தான் ஆரம்பிக்கனும் இல்லை முடிக்கணும் ;)

வெட்டிப்பயல் said...

//Thamizhmaangani said...

வெட்டிப்பயலே, u r gr8!! ரொம்ப நாளா இருந்த பல் வலி போய் இந்த பதிவ படிச்சுட்டு எனக்கு வயித்து வலி வந்துடுச்சு!! ரொம்பப சூப்பர்ர்!!
//
டாக்டர் விஜய் பேரை படிச்சவுடனே உங்க பல் வலி போயிடுச்சினு ஒரு அறிக்கை விடுங்க... எல்லா பத்திரிக்கைலயும் இடம் பிடிச்சிடலாம் ;)


//
// நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற.//

விழுந்து விழுந்து சிரிச்சு.. அடிப்பட்டு போச்சுதுங்கோ!!//

தலயை பத்தி படிச்சிட்டு தலைல அடிப்பட்டுடுச்சா?

வேணும்னா நம்ம டாக்டர் விஜயை போய் பாருங்க ;)

வெட்டிப்பயல் said...

//ராஜ நடராஜன் said...

சாப்பாட்டுக்கு மணி அடிச்சிட்டாங்க!வந்து ரசிக்கிறேன்.//

இன்னுமா சாப்பிட்டு இருக்கீங்க... என்னங்க தொடர்ந்து 24 மணி நேரம் சாப்பிட்டு ஏதாவது கின்னஸ் சாதனை புரிய போறீங்களா? ;)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

kalakkal vetti
:))//

டாங்ஸ் சிவா :-)

வெட்டிப்பயல் said...

//PPattian : புபட்டியன் said...

நெறைய பேரு பின்னூட்டிட்டாங்க.. அதனால

:)))))))))))))))))))))

கை நனைச்சுட்டேன், துடைக்க துண்டு குடுங்க..//

வேட்டிய உருவற இடத்துல துண்டை கேக்கறீங்களே. உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு. இப்படி சொல்லலாம்னு பார்த்தா எல்லாரும் என்னை மரியாதை தெரியாத பயல்னு திட்டுவாங்க. அதனால

கை நினைச்சா நீங்களே (உங்க) கர்சீப் வெச்சி தொடைச்சிக்க வேண்டி தான் ;)

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

நல்லாயிருக்குப்பா....... :))
//

நன்றி ராயலண்ணா...
ஆணி ரொம்ப அதிகம் போல :-)

// சில இடங்களிலே ஸ்பெல்லிங் மிஸ்டேக் கொஞ்சம் இருக்கு...//
சொன்னீங்கனா சரி பண்ணிக்குவேன்.

// அப்புறம் இதை படிச்சாவது நம்ம சூறாவளி எலக்கியவியாதிக்கு சிரிப்பு வந்துச்சான்னு கேட்டு சொல்லுப்பா.... :)))//
நம்ம எதுக்கு மத்தவங்ககிட்ட போய் தனியா கேக்கணும்? இங்க மக்கள் இத்தனை பேர் சொன்னது போதாதா?

நமக்கு எலக்கியம் சுட்டு போட்டாக்கூட வராது :-)

அபி அப்பா said...

\\நமக்கு எலக்கியம் சுட்டு போட்டாக்கூட வராது :-)\\

எழுதிதான் பாருங்கப்பூ!!! சுட்டு போட்டுடுவோமாக்கும்!!! செம கடுப்புல இருக்கோம்ல:-)))

Anonymous said...

பாலாஜி,
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் பக்கம் வந்தேன்.. கலக்கி வச்சிருக்க! எப்பவும் போல கவுண்டர் பதிவு சூப்பர்!!

-கணேஷ் (SF)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

\\நமக்கு எலக்கியம் சுட்டு போட்டாக்கூட வராது :-)\\

எழுதிதான் பாருங்கப்பூ!!! சுட்டு போட்டுடுவோமாக்கும்!!! செம கடுப்புல இருக்கோம்ல:-)))//

ஏன்? என்னாச்சு???

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

பாலாஜி,
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் பக்கம் வந்தேன்.. கலக்கி வச்சிருக்க! எப்பவும் போல கவுண்டர் பதிவு சூப்பர்!!

-கணேஷ் (SF)//

ரொம்ப நன்றி கணேஷ்..

நானும் ரொம்ப நாளைக்கு அப்பறம் தான் எழுதறேன் ;)

SanJai said...

//கவுண்டர்: டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற.//

வாச்சி பண்ணிடே இருப்பீங்களோ? :))

மொத்த பதிவும் செம கலக்கல் பாலாஜி.. சிரிச்சி சிரிச்சி கண்ணீர் வந்துடிச்சி.. :)))

வெட்டிப்பயல் said...

// SanJai said...

//கவுண்டர்: டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற.//

வாச்சி பண்ணிடே இருப்பீங்களோ? :))
//
காசு கொடுத்த படம் பார்க்கறோம். அதை கூட கவனிக்கலனா எப்படி?

// மொத்த பதிவும் செம கலக்கல் பாலாஜி.. சிரிச்சி சிரிச்சி கண்ணீர் வந்துடிச்சி.. :)))//
சீக்கிரம் தொடச்சிடுங்க.ஆம்பிள பசங்க அழறது யாருக்கும் தெரியக்கூடாது. அப்ப தான் சிங்கம் எப்பவாது அழுது பார்த்திருக்கீங்களானு டயலாம் விடலாம் ;)

Anonymous said...

கவுண்டர்: டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. அது சரி நீ என்னா படம் டைரக்ட் பண்ண போற?

>> Very good, arumaiyaana kalaaipu

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

கவுண்டர்: டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. அது சரி நீ என்னா படம் டைரக்ட் பண்ண போற?

>> Very good, arumaiyaana kalaaipu//

மிக்க நன்றி :-)

ஜீவன் said...

அருமை !!
கவுண்டர் கண்ணுல நீங்க மாட்டியிருந்தீங்கன்னா, அவருக்கு மார்க்கெட் டே போயிருக்காது போல..

நிஜமா நல்லவன் said...

///ச்சின்னப் பையன் said...
//டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. //

இது சூப்பர்.. தல, தலயையே கலாச்சிட்டீங்க...///

ரிப்பீட்டேய்....!

பரிசல்காரன் said...

//நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. //

:-))))))))))))))

கீ - வென் said...

//வெட்டிப்பயல் said...

உங்க ப்ளாக் லிங் தரவும். உங்க ப்ரொஃபைல பப்ளிக் வியூ பண்ற ஆப்ஷன் வைக்கல போல
//

ஊப்ஸ்.. மன்னிக்கணும்.. என்னோட ப்ளோக் : http://keysven.blogspot.com.. வந்துட்டு போங்க..

குமரன் (Kumaran) said...

இன்னைக்குத் தான் படிச்சேன் பாலாஜி. Back to Form தான். :-)

வெட்டிப்பயல் said...

//ஜீவன் said...

அருமை !!
கவுண்டர் கண்ணுல நீங்க மாட்டியிருந்தீங்கன்னா, அவருக்கு மார்க்கெட் டே போயிருக்காது போல..//

அவருக்கு சரக்கு தீர்ந்து ஃபீல்டை விட்டு போகலீங்க.. வயசாயிடுச்சி.. அதான் :-)

வெட்டிப்பயல் said...

//நிஜமா நல்லவன் said...

///ச்சின்னப் பையன் said...
//டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. //

இது சூப்பர்.. தல, தலயையே கலாச்சிட்டீங்க...///

ரிப்பீட்டேய்....!//

நன்றி நி.ந :-)

வெட்டிப்பயல் said...

// பரிசல்காரன் said...

//நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. //

:-))))))))))))))//

நன்றி பரிசல்காரன்...

முதல் தடவையா வரீங்க போல :-)

வெட்டிப்பயல் said...

//கீ - வென் said...

//வெட்டிப்பயல் said...

உங்க ப்ளாக் லிங் தரவும். உங்க ப்ரொஃபைல பப்ளிக் வியூ பண்ற ஆப்ஷன் வைக்கல போல//

ஊப்ஸ்.. மன்னிக்கணும்.. என்னோட ப்ளோக் : http://keysven.blogspot.com.. வந்துட்டு போங்க..//

இதோ வரேன் :-)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

இன்னைக்குத் தான் படிச்சேன் பாலாஜி. Back to Form தான். :-)//

மிக்க நன்றி குமரன் :-)