தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, February 04, 2008

பனி விழும் மலர் வனம் - 2

என்னங்க இப்படி அநியாயமா நம்மள நடுசீட்ல உக்கார வெச்சிட்டாங்க. இன்னும் அஞ்சு மணி நேரம் இந்த சீட்ல உக்கார்ந்துட்டு போகனும். அதுவும் அந்த பக்கம் கொஞ்சம் நிறைய இடம் விட்டு. ஏன்னா இந்த காலத்துல பசங்களை எவனும் நம்ப மாட்றானுங்க. அதனால தான். ரொம்ப புழுக்கமா இருக்குற மாதிரி இருக்குது இல்லைங்க. இருங்க வரேன்

"அண்ணே! அந்த ஜன்னலை கொஞ்சம் திறங்களேன். வண்டி புறப்பட்டதுக்கப்பறம் மூடிக்கலாம்"

"நானும் தொறக்க முயற்சி செஞ்சேன்பா. முடியல. நீ வேணா முயற்சி செஞ்சி பாரேன்"

"கொஞ்சம் நகருங்க"

...

"அதான் சொன்னேன் இல்லை தம்பி. என்னால தொறக்க முடியலைனு. பாத்தீங்களா. உங்களாலையும் முடியல"

ச் சே!!! இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லைங்க. அந்த ஜன்னலை தொறக்க முடியலைங்கறது கூட பிரச்சனையில்லைங்க. என்னால தொறக்க முடியலைனு அவர் சொன்னவுடனே அந்த பொண்ணு "களு"க்குனு சிர்ச்சதுதான் அசிங்கமா போயிடுச்சி. இதுக்கு கூடவாங்க சிரிப்பாங்க.

"தம்பி திருண்ணாமலையேவா?"

"இல்லைங்க. பக்கத்துல திருக்கோயிலூருங்க. திருண்ணாமலை போய் மாறி போகனும்"

"இன்னைக்கு பௌர்ணமியாச்சே! பஸ்ல இடம் கிடைக்குமா?"

"மணி இப்ப 8 தானே ஆகுது. பன்னெண்டு, ஒரு மணிக்கெல்லாம் பஸ் திருண்ணாமலைக்கு போயிடும். நாலு அஞ்சு மணிக்கு தான் எல்லாம் கிரிவலம் சுத்தி முடிப்பாங்க. அதனால ஸ்பெஷல் பஸ்ல அட்டகாசமா உக்கார்ந்துட்டே போயிடலாங்க"

"அதுவும் சரிதான். தம்பி பெங்களூர்ல என்ன பண்றீங்க?"

ஆஹா... ஆரம்பிச்சிட்டாங்கய்யா. என்ன சொல்லலாம்? இதுக்கு முன்னாடி ஒருத்தர்கிட்ட இப்படி தாங்க கூகுல்ல வேலை செய்யறேனு சொன்னேன். அதுக்கு அவர் அங்க என்ன தம்பி பண்றீங்கனு கேட்டாரு. நானும் என்ன சொல்றதுனு தெரியாம, கம்யூட்டர்ல ஏதாவது தேடறவங்களுக்கு கண்டு பிடிச்சி கொடுக்கறதுனு சொன்னேன். உடனே அவர் பக்கத்துல உக்கார்ந்திருந்த அந்த பாட்டி, "தம்பி! என் சுருக்கு பைய ஒரு வாரமா காணோம். கொஞ்சம் கண்டு பிடிச்சி கொடு"னு கேட்டுட்டாங்க. இந்த தடவை மறுபடியும் நல்லவனா மாறிட வேண்டியது தான்.

"நான் இங்க வேலை தேடிட்டு இருக்கேங்க"

"என்ன படிச்சிருக்கீங்க தம்பி"

"நான் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படிச்சிருக்கேங்க. ஆறு மாசமா வேலை தேடிட்டு இருக்கேன்"

"இங்க தான் அந்த படிப்புக்கு நிறைய வேலை இருக்குனு சொல்றாங்களே?"

"அதெல்லாம் சும்மாங்க. அதுக்கும் நிறைய இருக்கு. முக்கியமா நல்ல காலேஜ்ல படிச்சா கேம்பஸ்லயே வேலைக்கு சேர்ந்திருக்கலாம். நான் சுமாராதான் படிச்சேன். அதான் கொஞ்சம் லேட்டாகுது"

"கவலைப்படாத தம்பி. பௌர்ணமி அன்னைக்கு மலைல கால் வெக்கற இல்லை. சீக்கிரமே வேலை கிடைக்கும்"

"சரிங்க. ரொம்ப நன்றி"

என்னங்க. இவர் எதுவும் அதிகமா பேச மாட்றாரு. இதுக்கு முன்னாடி வந்தவங்க நிறைய பேர் அவுங்க சொந்தக்கார பசங்க இங்க வேலை செய்யறதை பத்தி எல்லாம் கதை அளந்து விட்டுட்டு இருப்பாங்க. முக்கியமா அவுங்க பேசறது கம்பெனி பேரு, சம்பளம் அவ்வளவு தான்.

"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?"

என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்...

மனதில் தோன்றிய குறள்
கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்

(கடலை வறுக்கப்படும்...)

25 comments:

இலவசக்கொத்தனார் said...

இது என்ன மாசம் ஒரு பகுதியா? கொஞ்சம் வெரசா போடுப்பா.

அப்புறம் அந்த குறளில் தலை தட்டல் இருக்கு... ஆரம்பிக்கட்டுமா? :))

வெட்டிப்பயல் said...

// இலவசக்கொத்தனார் said...

இது என்ன மாசம் ஒரு பகுதியா? கொஞ்சம் வெரசா போடுப்பா.
//
தலைவா,
போன வாரம் முழுக்க Production Issueனு கொன்னுட்டானுங்க... இனிமே சீக்கிரம் போடறேன்... இதுவே போன வாரத்துக்கான பகுதி தான்... இந்த வாரத்துக்கானது சீக்கிரமே வரும் :-)

//
அப்புறம் அந்த குறளில் தலை தட்டல் இருக்கு... ஆரம்பிக்கட்டுமா? :))//
இதையே நச்சுனு சொல்லுங்க.. பொருள் மாறாம.. மாத்திடலாம் ;)

மெளலி (மதுரையம்பதி) said...

கடலை தொடரட்டும்..... :-)

Divya said...

சீக்கிரம் கடலை அடுத்த பகுதியில் வறுக்க ஆரம்பிங்க வெட்டி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதுவும் அந்த பக்கம் கொஞ்சம் நிறைய இடம் விட்டு. ஏன்னா இந்த காலத்துல பசங்களை எவனும் நம்ப மாட்றானுங்க//

ஒங்கள கூடவா பாலாஜி? :-)

//தம்பி! என் சுருக்கு பைய ஒரு வாரமா காணோம். கொஞ்சம் கண்டு பிடிச்சி கொடு//

யாரு கண்டா? கூகூள் மேப்ஸ்-ல லிங்க் பண்ணாலும் பண்ணிடலாம்!
பாலாஜி, இந்தப் பதிவை கூகுளூக்கு அனுப்பி, காப்புரிமை அக்ரீமென்ட் போட்டுக்குங்க! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்//

ஆகா...
வர்ணனை எல்லாம் ஒன்னும் கெடையாதா? (எனக்காக இல்லை, நம்ம வாசகர்களுக்காகத் தேன்! :-)

KARTHIK said...

//என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்...//

ஆரம்பிங்க ஆரம்பிங்க

இப்போ தான் கத நல்லா போகுது

Sathiya said...

இத்துனூண்டு தானா? மெகா சீரியலே இத விட கொஞ்சம் ஜாஸ்தியா போடுவாங்களே? நீங்க அதையும் மிஞ்சிட்டீங்க...ஆனா சுவரஸ்யமா கொண்டு போறீங்க;)

இராம்/Raam said...

அடுத்த பாகம் எப்போ????? :)

கப்பி | Kappi said...

ம்ம்..நடக்கட்டும்..நடக்கட்டும் :))

குமரன் (Kumaran) said...

எனக்கு ஏற்கனவே தீயற வாசனை வந்தது. இன்னும் வறுக்கவே தொடங்கலையா?

Anonymous said...

Superappu ...

G.Ragavan said...

அதாகப்பட்டது அதாகப்பட்டது...பஸ்சுல பக்கத்து சீட்டுல உக்காரப்பட்டதுல இருந்து கடலை வெள்ளாமை விளைச்சல்ல தொடங்குச்சுன்னுல்ல சொல்லனும். தழைச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்புச் சத்தெல்லாம் நல்லா போட்டு மகசூல் பிரமாதமா இருக்கனுமே. நீங்க எழுதுறீங்க. அப்ப நல்ல மகசூலாத்தான் இருக்கும். :)

CVR said...

//
மனதில் தோன்றிய குறள்
கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்
///
அண்ணி இருக்கும்போதே இம்புட்டு தெகிரியமா உங்க மேட்டரு எல்லாம் அவுத்து விடுறிங்க??
கலக்குங்க!! :-P
//(கடலை வறுக்கப்படும்...)///
ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல!! ;)

வெட்டிப்பயல் said...

//மதுரையம்பதி said...

கடலை தொடரட்டும்..... :-)//

மிக்க நன்றி...

முடிஞ்சா இன்னைக்கு ராத்திரியே போட்டுடலாம் ;)

வெட்டிப்பயல் said...

//Divya said...

சீக்கிரம் கடலை அடுத்த பகுதியில் வறுக்க ஆரம்பிங்க வெட்டி!//

ஆஹா... இது என்ன கூத்து...
கடலை வறுக்க போறது வெட்டி இல்லை ரவி ஷங்கர் ;)

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அதுவும் அந்த பக்கம் கொஞ்சம் நிறைய இடம் விட்டு. ஏன்னா இந்த காலத்துல பசங்களை எவனும் நம்ப மாட்றானுங்க//

ஒங்கள கூடவா பாலாஜி? :-)//

என்னைய இல்லைங்க.. ரவி ஷங்கரை ;)

//தம்பி! என் சுருக்கு பைய ஒரு வாரமா காணோம். கொஞ்சம் கண்டு பிடிச்சி கொடு//

யாரு கண்டா? கூகூள் மேப்ஸ்-ல லிங்க் பண்ணாலும் பண்ணிடலாம்!
பாலாஜி, இந்தப் பதிவை கூகுளூக்கு அனுப்பி, காப்புரிமை அக்ரீமென்ட் போட்டுக்குங்க! :-))//

வெட்டிப்பயல் said...

////தம்பி! என் சுருக்கு பைய ஒரு வாரமா காணோம். கொஞ்சம் கண்டு பிடிச்சி கொடு//

யாரு கண்டா? கூகூள் மேப்ஸ்-ல லிங்க் பண்ணாலும் பண்ணிடலாம்!
பாலாஜி, இந்தப் பதிவை கூகுளூக்கு அனுப்பி, காப்புரிமை அக்ரீமென்ட் போட்டுக்குங்க! :-))//

இதெல்லாம் ரவி ஷங்கர் செய்ய வேண்டிய வேலை ;)

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்//

ஆகா...
வர்ணனை எல்லாம் ஒன்னும் கெடையாதா? (எனக்காக இல்லை, நம்ம வாசகர்களுக்காகத் தேன்! :-)//

பொறுமையா வரும் ;)

வெட்டிப்பயல் said...

// karthik said...

//என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்...//

ஆரம்பிங்க ஆரம்பிங்க

இப்போ தான் கத நல்லா போகுது//

நன்றி... சீக்கிரமே அடுத்த பகுதி வரும் ;)

வெட்டிப்பயல் said...

//Sathiya said...

இத்துனூண்டு தானா? மெகா சீரியலே இத விட கொஞ்சம் ஜாஸ்தியா போடுவாங்களே? நீங்க அதையும் மிஞ்சிட்டீங்க...ஆனா சுவரஸ்யமா கொண்டு போறீங்க;)//
அவ்வளவு சிறுசாவா போயிடுச்சு... அப்ப அடுத்த பகுதியில சரி பண்ணிடலாம் ;)

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

அடுத்த பாகம் எப்போ????? :)//

சீக்கிரம் போடறேங்கண்ணா.. ஆணி ரொம்ப அதிகம் :-(

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

ம்ம்..நடக்கட்டும்..நடக்கட்டும் :))//

சீக்கிரம் நடக்கும் ;)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

எனக்கு ஏற்கனவே தீயற வாசனை வந்தது. இன்னும் வறுக்கவே தொடங்கலையா?//

தொடங்கன மாதிரி எனக்கு தெரியல... உங்களுக்கு வந்தா நான் பொறுப்பில்லை :-)

cheena (சீனா) said...

ஃப்ரெஷ்ஷரா , வேலை தேடுறீங்களா - ஓஒ கடல ரெடிய்யாகுது - ஓக்க்கே ஒக்க்கே - மாலதி பாரதி ஸ்வீட்டி - அவங்கவங்க அவங்கவங்களுக்குப் பிடிச்சவங்க கூட கடல வறுக்கலாமுங்க.ரவிக்கு - ரவி ஷங்கருக்கு ஒண்ணும் ஆட்சேபனை இருக்காதுங்க. வெயிட்டீங்ஸ்