தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, January 25, 2008

பனி விழும் மலர் வனம் - 1

அப்பாடா ஒரு வழியா மெஜெஸ்டிக் வந்து சேர்ந்தாச்சுங்க. இந்த பெங்களூர் ட்ராபிக் ஜாம் இருக்கே. கொடுமைலயும் கொடுமைங்க. MGரோட்ல இருக்குற எங்க ஆபிஸ்ல இருந்து மெஜெஸ்டிக் வந்து சேரதுக்குள்ள எங்க ஊர்ல இருந்து கடலூர்க்கே போயிடலாங்க. ஓ எங்க ஊர் என்னனே உங்களுக்கு சொல்லலை இல்லை. எங்க ஊர் பேரு திருக்கோவிலூர்ங்க. திருவண்ணாமலைல இருந்து அரை மணி நேரத்துல போயிடலாம்.

இப்ப கூட திருவண்ணாமலை பஸ் தான் பிடிக்க போறேன். இன்னைக்கு வேற பௌர்ணமியா போயிடுச்சி. பஸ்ல எப்படியும் சீட் கிடைக்கறது கஷ்டம் தான். அதான் மடிவாலா போகாம நேரா மெஜெஸ்டிக்கே வந்துட்டேன். மெஜெஸ்டிக் பஸ் ஸ்டாண்ட்ல கொஞ்சம் கஷ்டப்பட்டா சீட் பிடிச்சிடலாம்.

மெஜெஸ்டிக்ல உள்ள நுழைஞ்சதும் முதல்ல ஒரு காபி குடிச்சிடறது நம்ம பழக்கங்க. அதுவும் அந்த கேத்தோஸ் காபிதாங்க நம்ம ஃபெவரைட். அஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு சூப்பரான காபி நம்ம ஊர்ல கிடைக்காதுங்க. இருங்க ஒரு காபி குடிச்சிட்டு வந்திடறேன்.

காபி வழக்கம் போல சூப்பரா இருந்துச்சுங்க. அதுவும் நமக்கு ஏத்த மாதிரி ஸ்டராங்கா, சக்கரை கொஞ்சம் கம்மியா. சுருக்கமா சொன்னா நம்ம கொயம்பத்தூர் அண்ணபூர்ணா காபி மாதிரி. சரி காபி புராணத்த நிறுத்துவோம். நான் அதை பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருப்பேன்.

இவ்வளவு நேரம் பேசிட்டே இருக்கோம். என் பேரை சொல்லல பாருங்க. என் பேரு... ஐயோ அங்க வர பஸ் திருவண்ணாமலை பஸ் மாதிரி தெரியுது. இருங்க முதல்ல பஸ்ல போய் இடம் பிடிப்போம்.

ஆஹா... அந்த பஸ்ல உக்கார இடமில்லைங்க. அதான் இந்த பஸ்ல ஏறிட்டேன். அஞ்சு மணி நேரம் நின்னுட்டு போக முடியாது இல்லையா? இந்த மூணு பேர் உக்கார சீட்ல உக்காரவே எனக்கு பிடிக்காது. இருந்தாலும் வேற வழியில்லாததால உக்கார்ந்துக்கிட்டேங்க. அடுத்து யாராவது வந்தா நடு சீட்ல உக்கார சொல்லனும். ஜன்னல் சீட்ல இருக்கற அந்த ஆளை எப்படியும் நகர சொல்ல முடியாது. நடுல உக்கார்ந்து போறதை விட வேற கொடுமை இல்லை. அதான் இப்படி ஓரமாவே ஒட்டிட்டு உக்கார்ந்து இருக்கேன்.

என்னங்க இவ்வளவு பேசியும் என் பேரை சொல்ல நேரமில்லை பாருங்க. நான் தாங்க ரவி. ரவி ஷங்கர். இந்த ட்ராபிக் ஜாம் ஊர்ல தான் கூகுள்ல வேலை செய்யறேன். அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸ்ல நானும் என் எதிரி மாலதியும் செலக்ட் ஆனோம். அவ MS பண்ண போயிட்டா. நான் மூணு வருஷமா அங்க தான் குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

நான் நல்ல பையங்க. ஆனா அப்பப்ப கொஞ்சம் பொய் மட்டும் சொல்லுவேன். அதுல முக்கியமான ஒண்ணு பஸ்ல போகும் பக்கத்துல இருக்குற யார் கேட்டாலும் வேலை தேடிட்டு இருக்கறனு சொல்றது. கொஞ்சம் நல்லா கல கலனு போகும். நிறைய பேர் அட்வைஸ் கொடுப்பாங்க. அட்டகாசமான டிப்ஸ் எல்லாம் கொடுப்பாங்க. நானும் நல்ல பையனா கேட்டுக்குவேன். ஏன்னா வேலைக்கு போறனு சொன்னா சம்பளத்தை பத்தி தான் அதிகம் பேசுவாங்க. அதான் இப்படி.

இன்னைக்கு யாரும் சிக்க மாட்டாங்க போல. சரி பார்க்கலாம். எப்படியும் பக்கத்துல ஒரு ஆள் வருவான் இல்லை.

ஆஹா... என்னங்க அந்த பொண்ணு நம்ம பக்கத்துல வந்து நிக்குது. இடத்தை மாத்த சொல்ல போறாங்களா? திரு திருனு முழிச்சிட்டு நிக்குது.அநேகமா நகுந்து உக்கார சொல்லுதுனு நினைக்கிறேன்...

நடு சீட்டுக்கு போக வெச்சிட்டாளே!!! என்னை நடு சீட்ல உக்கார வெச்ச அவளுக்கு இருக்குங்க ஆப்பு...

(தொடரும்...)

38 comments:

மதுரையம்பதி said...

நல்ல ஆரம்பம்.....எத்தனை வருடங்கள் முன் பெங்களூரில் இருந்தீங்க பாலாஜி?. ஏன்னா,

இப்போ இருக்கற டிராபிக் ஜாம்-ல நீங்க மெஜஸ்டிக்-ல இருந்து ஹோசுர் போகவே 3 மணிநேரம் ஆகுது. :-)

கைப்புள்ள said...

//நடு சீட்டுக்கு போக வெச்சிட்டாளே!!! என்னை நடு சீட்ல உக்கார வெச்ச அவளுக்கு இருக்குங்க ஆப்பு...//

ஆரம்பமே அசத்தலா இருக்கு...கண்டினியூமா
:)

கார்த்திக் பிரபு said...

thaliava nalama , valaki epapdi iruku , pudhu mappilai :)

marupadi aarambichachaa vaalga vaalga

தேவ் | Dev said...

பாலாஜி ஆரம்பம் அசத்தலா இருக்கு கதைச் சொல்லுற பாணியும் வித்தியாசமாவே இருக்கு கன்டினியூ

SweetJuliet said...

yes ...athuvum MG road la eppo metro works poituerukku...so heavy traffic....inch inch aa than nagara mudiyum......
Hi ...balajimano...de-lurking for d past 4 months...
also regular reader...
.....kathaioda...arambam super....
waiting for the next....

கோபிநாத் said...

ஆரம்பம் அருமை ;)

அருட்பெருங்கோ said...

நாயகன் அறிமுகத்துலயே முதல் பாகம் முழுக்கப் போயிடுச்சா?
ம்ம்ம்… அப்போ அடுத்தப்பாகத்துல நாயகியப் பத்தி சொல்லுவீங்கதான? ;-)

J K said...

வித்தியாசமா கத சொல்றீங்க. நல்லாயிருக்கு...

வாழ்த்துக்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஹலோ ரவிசங்கரு...
சாரி பாலாஜி...
நீ வரிக்கு வரி, பத்திக்குப் பத்தி..."ங்க" போட்டு பேசறத இப்ப தான்யா மொத மொதல்லா பாக்குறேன், கேக்குறேன்!
எப்போத்திலிருந்து இம்புட்டு மரியாதை கொடுக்குற புள்ளையா மாறுன நீயி? :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸ்ல நானும் என் எதிரி மாலதியும் செலக்ட் ஆனோம். அவ MS பண்ண போயிட்டா//

நல்லாத் தெரியுமா?
அவ பேரு மாலதியா? பாரதியா? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நடு சீட்டுக்கு போக வெச்சிட்டாளே!!! என்னை நடு சீட்ல உக்கார வெச்ச அவளுக்கு இருக்குங்க ஆப்பு...//

வித்தியாசமான ஆரம்பம்!
அடுத்த ஆப்பு...சாரி...ஐ மீன் அடுத்த பாகம் எப்போ?

CVR said...

Like everybody said,i liked the way you narrrated,placing the reader right in the middle of action!!

கொல்ட்டி தூறல் மாதிரி நாலு வாரம் மூட் அவுட் ஆகற மாதிரி மட்டும் முடிச்சிராதீங்க அண்ணாச்சி!!
அவ்வளவுதான் சொல்ல தோனுது!! :-)

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!
கலக்குங்க!! :-)

கப்பி பய said...

அப்படியே டாப் கியர்ல போட்டு தாக்குங்க :))கேஆரெஸ் தல,

//எப்போத்திலிருந்து இம்புட்டு மரியாதை கொடுக்குற புள்ளையா மாறுன நீயி? :-)))//

என்ன இப்படி தெரியாத மாதிரி கேட்கறீங்க :))

நவீன் ப்ரகாஷ் said...

பாலாஜி
கதை சொல்லும் விதம் மிக அழகு !! எதிர்பார்ப்பை அதிகப்படுதுகிறது !! :)))

வெட்டிப்பயல் said...

//மதுரையம்பதி said...

நல்ல ஆரம்பம்.....எத்தனை வருடங்கள் முன் பெங்களூரில் இருந்தீங்க பாலாஜி?. ஏன்னா,

இப்போ இருக்கற டிராபிக் ஜாம்-ல நீங்க மெஜஸ்டிக்-ல இருந்து ஹோசுர் போகவே 3 மணிநேரம் ஆகுது. :-)//

நான் 2003ல இருந்து 2006 தை மாசம் வரைக்கும் இருந்தேங்க :-)

வெட்டிப்பயல் said...

// கைப்புள்ள said...

//நடு சீட்டுக்கு போக வெச்சிட்டாளே!!! என்னை நடு சீட்ல உக்கார வெச்ச அவளுக்கு இருக்குங்க ஆப்பு...//

ஆரம்பமே அசத்தலா இருக்கு...கண்டினியூமா
:)//

டாங்க்ஸ் தல :-)
பட்டையை கிளப்பிடுவோம்...

வெட்டிப்பயல் said...

//கார்த்திக் பிரபு said...

thaliava nalama , valaki epapdi iruku , pudhu mappilai :)

marupadi aarambichachaa vaalga vaalga//

நல்லா இருக்கேன்பா... நீ எப்படி இருக்க?

சும்மா ஒரு சின்ன முயற்சி தான் :-)

வெட்டிப்பயல் said...

//தேவ் | Dev said...

பாலாஜி ஆரம்பம் அசத்தலா இருக்கு கதைச் சொல்லுற பாணியும் வித்தியாசமாவே இருக்கு கன்டினியூ//

ரொம்ப நன்றிண்ணா!!! எல்லாம் நீங்க கொடுக்குற ஊக்கம் தான் :-)

வெட்டிப்பயல் said...

//SweetJuliet said...

yes ...athuvum MG road la eppo metro works poituerukku...so heavy traffic....inch inch aa than nagara mudiyum......
Hi ...balajimano...de-lurking for d past 4 months...
also regular reader...
.....kathaioda...arambam super....
waiting for the next....//

ரொம்ப நன்றிங்க... சீக்கிரம் போடறேன்.

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

ஆரம்பம் அருமை ;)//

ரொம்ப நன்றி கோபி :-)

வெட்டிப்பயல் said...

//அருட்பெருங்கோ said...

நாயகன் அறிமுகத்துலயே முதல் பாகம் முழுக்கப் போயிடுச்சா?
ம்ம்ம்… அப்போ அடுத்தப்பாகத்துல நாயகியப் பத்தி சொல்லுவீங்கதான? ;-)//

நச் நாயகன் சொன்னா தட்ட முடியுமா??? சொல்லிட வேண்டியது தான் :-)

வெட்டிப்பயல் said...

// J K said...

வித்தியாசமா கத சொல்றீங்க. நல்லாயிருக்கு...

வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி...
பார்க்கலாம் அடுத்த பாகம் எப்படி போகுதுனு :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஹலோ ரவிசங்கரு...
சாரி பாலாஜி...
நீ வரிக்கு வரி, பத்திக்குப் பத்தி..."ங்க" போட்டு பேசறத இப்ப தான்யா மொத மொதல்லா பாக்குறேன், கேக்குறேன்!
எப்போத்திலிருந்து இம்புட்டு மரியாதை கொடுக்குற புள்ளையா மாறுன நீயி? :-)))//

நாங்க காலேஜ் படிச்சது கொங்கு நாட்ல தான்... "ங்க" போட்டு தான் எப்பவும் பேசுவோம் ;)

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸ்ல நானும் என் எதிரி மாலதியும் செலக்ட் ஆனோம். அவ MS பண்ண போயிட்டா//

நல்லாத் தெரியுமா?
அவ பேரு மாலதியா? பாரதியா? :-)//

பூனைக்குட்டி வெளியே வருது ;)

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நடு சீட்டுக்கு போக வெச்சிட்டாளே!!! என்னை நடு சீட்ல உக்கார வெச்ச அவளுக்கு இருக்குங்க ஆப்பு...//

வித்தியாசமான ஆரம்பம்!
அடுத்த ஆப்பு...சாரி...ஐ மீன் அடுத்த பாகம் எப்போ?//

சீக்கிரமே வரும்...

வெட்டிப்பயல் said...

//CVR said...

Like everybody said,i liked the way you narrrated,placing the reader right in the middle of action!!

கொல்ட்டி தூறல் மாதிரி நாலு வாரம் மூட் அவுட் ஆகற மாதிரி மட்டும் முடிச்சிராதீங்க அண்ணாச்சி!!
அவ்வளவுதான் சொல்ல தோனுது!! :-)

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!
கலக்குங்க!! :-)//

ரொம்ப நன்றி அண்ணாச்சி...

நேத்து ஒரே பகுதில எழுதி முடிச்சிடலாம்னு பார்த்தேன் ஆனா ஒரு நண்பர் வேணாம் தொடர் கதையா எழுதுங்க அப்ப தான் சோகமா முடிக்க மாட்டீங்கனு சொன்னாரு... பார்க்கலாம் எப்படி போகுதுனு :-)

இலவசக்கொத்தனார் said...

நான் போட்ட பின்னூட்டத்தைக் காணுமே... என்னமோ எழுதினேனே,மறந்து போச்சே....

சரி. இப்போதைக்கு ...

//ஆரம்பமே அசத்தலா இருக்கு...கண்டினியூமா
:)//

ரிப்பீட்டேய்....

வெட்டிப்பயல் said...

// கப்பி பய said...

அப்படியே டாப் கியர்ல போட்டு தாக்குங்க :))
//
டாங்ஸ் கப்பி...

//

கேஆரெஸ் தல,

//எப்போத்திலிருந்து இம்புட்டு மரியாதை கொடுக்குற புள்ளையா மாறுன நீயி? :-)))//

என்ன இப்படி தெரியாத மாதிரி கேட்கறீங்க :))//

எனக்கே தெரியாதேப்பா!!!

வெட்டிப்பயல் said...

//நவீன் ப்ரகாஷ் said...

பாலாஜி
கதை சொல்லும் விதம் மிக அழகு !! எதிர்பார்ப்பை அதிகப்படுதுகிறது !! :)))//

ரொம்ப நன்றி நவீன்...

G.Ragavan said...

ரவி ஷங்கர்னு பேர் இருந்தாலே குசும்பு கூத்தாடுங்குறது சரியாத்தான் இருக்கு. இப்பிடி வம்பு பண்றானே.

கதைய நல்லா தொடங்கீருக்கீங்க. என்ன சொல்லப் போறீங்கன்னு ஆவலாக் காத்திருக்கேன்.

குமரன் (Kumaran) said...

இங்கேயும் திருக்கோவிலூரா? அடப் போங்கப்பா. அந்த ஊரு பேரைப் படிச்சுப் படிச்சு போரடிக்குது. இன்னொரு தடவை ரவி 'ஷ'ங்கர் அந்த ஊரு பேரச் சொன்னான்னா கொலை தான் விழும்.

ரவி 'ஷ'ங்கர்னாலே பொய் தானா சொல்லணும். ஹும் என்ன பண்றது. யத் பாவம் தத் பவதி - எதை நினைக்கிறார்களோ அதே ஆகிறார்கள் - இந்த ரவி 'ஷ'ங்கர் பொய்யர்களிலேயே பெரிய பொய்யனை இல்ல நினைச்சுக்கிட்டே இருக்காரு.

நீங்க தொடருங்க பாலாஜி உங்க ஆப்பை. எப்படியோ நான் தப்பிச்சேன். இராகவனும் தப்பிச்சார்.

இரவிசங்கர். அது பாரதி இல்லை. நித்யா. இல்லை இல்லை ஸ்வீட்டி.

Zia said...

nice start :)))

aruna said...

நல்லா எழுதியிருக்கிறீங்க!ரொம்ப இயல்பா பேசறா மாதிரி எழுதிறீங்க!
அன்புடன் அருணா

Poonai kutty said...

Kalakkureenga vetti.. Unga narration appadiaye Namma Hero pakkathu le ukkanthu paakkura mathiri irukku. Bus le inime ennallam nadakka pokuthunnu therinchikka waiting.. Seekiram adutha part publish pannirunga..

நிவிஷா..... said...

Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க writing style is nice.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா

karthik said...

nallarukku

cheena (சீனா) said...

ரவி, இரண்டாம் பகுதி படிச்சிட்டு இங்கே வந்தேன். நல்லாருக்குப்ப்பா உன் பஸ் பயணம். திருவண்ணாமலை உனக்கு நெனச்சது நடக்க அருள் புரியும். பாப்ப்ப்போம் - படிப்போம்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

படிச்சாச்சு. 3ஆம் பாகம் முடிச்சிட்டு முதல் பாகத்துல இருந்து தொடங்கலாமேனு இங்கெ வந்தேன்.