தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, December 06, 2007

கமு... கபி

நவம்பர் 5
காலை 7 : அலாரம் ஸ்னூஸ் செய்யப்படுகிறது. 8 மணி வரை இது தொடர்கிறது.

டிசம்பர் 5
காலை 7: அலாரம் ஆஃப் செய்யப்படுகிறது. எழுந்திரிச்சி பல்லு விளக்கி ஃபேஸ் வாஷ் பண்ணிக்கோங்க. காஃபி போட்டு வரேன்
7:15: சுட சுட அருமையான காஃபி வருகிறது. அதை குடித்து கொண்டே புலி, தேவ் அண்ணா, ராயலிடம் சேட் நடந்து கொண்டிருந்தது.

நவம்பர் 5:
காலை 8: ஆபிஸிக்கு நேரமாச்சு. சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பனும். கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடலாமா இல்லை பிரெட் ஜாம் சாப்பிடலாமா? நேத்து தான் பிரெட் ஜாம் சாப்பிட்டோம். இன்னைக்கு கார்ன் ஃபிளேக்ஸ்.

டிசம்பர் 5
காலை 7:45: பொறுமையாக குளிச்சிட்டு வரலாம். நேத்து தோசை சாப்பிட்டாச்சு. இன்னைக்கு இட்லி ஓகே.
8:30: சூடான இட்லி, வெங்காயச்சட்னி.

நவம்பர் 5
காலை 10: இந்தியால 8:30 ஆச்சு. ஃபோன் பண்ணனும். IP போனுக்கு இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

டிசம்பர் 5
காலை 9:15 : ஆபிஸ் வந்துட்டேன். மதியம் சாப்பாட்டுக்கா? ஏதாவது காய் போட்டு சாம்பார் வெச்சி உருளைக்கிழங்கு வறுத்துடு. எங்க அம்மா செஞ்ச மாதிரி செய்யி. ஞாபகம் இருக்கு இல்லை. ஏதாவது சந்தேகம்னா அம்மாக்கு ஃபோன் பண்ணி கேட்டுக்கோ. மதியம் 1 மணிக்கு வீட்ல இருப்பேன்.

காலை 10: சரி. வேலை செய்யலாம்.
அப்படியே தமிழ்மணம் பார்த்தும் மாசக்கணக்காச்சு. அதுவும் இல்லாம நாம ஒரு முன்னாள் வலைப்பதிவராயிட்டோம். அதை சரி செய்யலாம்.

நவம்பர் 5:
மதியம் 12:30: எல்லாம் எனக்காக வெயிட் பண்றாங்க. நான் சாப்பிட போகனும். ஃபோன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. முதல் நாள் இரவு செய்த சாப்பாடு மைக்ரோ வேவில் சூடு செய்யப்பட்டு உள்ளே இறங்குகிறது.

டிசம்பர் 5:
மதியம் 12:30: மக்களே! நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டு வந்திடறேன். நீங்க கண்டினியூ பண்ணுங்க.

மதியம் 1: சுட சுட சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு வறுவல் எல்லாம் வயிற்றுக்குள் இறங்குகிறது. கொஞ்சம் கொஞ்சம் எங்க அம்மா செய்யற மாதிரி தான் இருக்கு. ஆனா ஏதோ மிஸ்ஸாகுது. எதுக்கும் இன்னைக்கு ராத்திரி ஃபோன் பண்ணும் போது கேட்டுக்கோ.

நவம்பர் 5:
மதியம் 2: வேலை செய்யலாம். போர் அடிக்குது.

டிசம்பர் 5:
மதியம் 2: வெளிய பனி ரொம்ப அதிகமா இருக்கு. பேசாம Working From Home போட்டுக்கலாம்.

நவம்பர் 5:
மாலை 5: இப்ப வீட்டுக்கு போய் என்ன பண்ண? இன்னும் கொஞ்ச நேரம் வேலை செய்யலாம்.

டிசம்பர் 5:
மாலை 5: சரி. மணியாச்சி. நான் நெட்வொர்க்ல இருந்து டிஸ்கனெக்ட் பண்ணிடறேன்.

நவம்பர் 5:
மாலை 7: சரி இப்ப பாத்திரம் விலக்கினாத்தான் 9 மணிக்கு சாப்பிட முடியும். அப்படியே Videoduniyaல படம் பார்த்துட்டே பாத்திரம் விலக்கலாம்.

டிசம்பர் 5:
மாலை 7: இன்னைக்கு சாப்பத்திக்கு தக்காளி கொத்ஸி பண்ணிடு. நேத்து மாதிரியே பட்டாணி குருமா எல்லாம் வேணாம்.

நவம்பர் 5:
இரவு 9: இராத்திரி சுட சுட சாதம் சாப்பிடற சுகமே சுகம் தான். அதுவும் ஐயா சமையலை அடிச்சிக்க ஆளே இல்லை.

டிசம்பர் 5:
இரவு 9: சாப்பாத்தி நல்லா இருக்கு. தக்காளி கொத்ஸி எங்க அம்மா வேற மாதிரி செய்வாங்க. இப்ப ஃபோன் பண்ணி கேட்டுக்கலாம்...

நவம்பர் 5:
இரவு 10: பெங்களூர் ஆபிஸிலிருந்து ஆஃப் ஷோர் கால் - இன்னைக்கு இது தான் வேலை. ஏதாவது சந்தேகமிருந்தா எப்ப வேணா ஃபோன் பண்ணுங்க.

டிசம்பர் 5:
இரவு 10: பெங்களூர் ஆபிஸிலிருந்து ஆஃப் ஷோர் கால் - இன்னைக்கு இது தான் வேலை. ஏதாவது சந்தேகமிருந்தா இப்பவே கேட்டுக்கோங்க. இதுக்கு மேல ஃபோன் பண்ணா ஃபோன் Switch off ஆகியிருக்கும்...

46 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கொஞ்சம் கொஞ்சம் எங்க அம்மா செய்யற மாதிரி தான் இருக்கு.
ஆனா ஏதோ மிஸ்ஸாகுது. எதுக்கும் இன்னைக்கு ராத்திரி ஃபோன் பண்ணும் போது கேட்டுக்கோ//

மூஞ்சியில் வெந்நீர் வந்து விழுது.....
அலறி அடிச்சி எழிஞ்சிக்கிட்டார் மாப்ளே!
ச்ச்ச்ச்சே...நவம்பர் 5-டிசம்பர் 5 அத்தனையும் கனவா? :-))))

வெல்கம் பேக் வெட்டி!!!!!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதுவும் ஐயா சமையலை அடிச்சிக்க ஆளே இல்லை.
//
Ayya samaiyalai saapida aale illai-nnu thaane solla vantheenga? typo thaane? :-)

//இன்னைக்கு சாப்பத்திக்கு தக்காளி கொத்ஸி பண்ணிடு. நேத்து மாதிரியே பட்டாணி குருமா எல்லாம் வேணாம்.
//
Ithellam too much!

Pathivula....ore oru unmai!
Ungala kaalaiyil 7:00 manikku ellam ezhupidaraanga enbathu thaan!
Seri innikki kaaliyil 7:00 clock ezhunthu, enna samaiyal senjittu oppice vantheenga? :-))

சிவபாலன் said...

Best Wishes!

Have great Married Life!

G.Ragavan said...

:)))))))))))))))))

வாங்க வாங்க திரும்ப வாங்க. நேரமிருக்குறப்போ பதிவு போடுங்க.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/12/blog-post.html

:)))))))))))))))))

வாங்க வாங்க திரும்ப வாங்க. நேரமிருக்குறப்போ பதிவு போடுங்க.

இலவசக்கொத்தனார் said...

வாங்க மாப்பிள்ளை வாங்க!! வந்து என்ன செய்யணுமோ செய்யுங்க.

அட பதிவு போடுங்க ரெகுலரான்னு சொல்ல வந்தேன்!
:))

கப்பி | Kappi said...

வாங்க மாப்ள :))

உண்மை said...

Welcome back and Best Wishes.

Boston Bala said...

கலக்கல் போஸ்ட் :))

காமென்ட் போடலாம்னு வந்தால் கேயாரெஸ் நெத்தியடி அடிச்சிருக்கார்.

ILA (a) இளா said...

நவம்பர் 5:
KRS போன் பண்றார் எடுத்து பேசியே
ஆகனும், குளிரா இருந்தா என்னா?

டிசம்பர் 5:
அந்தாளுக்கு வேற வேலை இல்லே.. நேரங்காலம் தெரியாம..

பொன்ஸ்~~Poorna said...

//இதுக்கு மேல ஃபோன் பண்ணா ஃபோன் Switch off ஆகியிருக்கும்...//
வாழ்த்துக்கள்.. இப்படியே தொடரட்டும்.. நடுவுல மிஸ்ஸாகி மறுபடி ராத்திரிபூரா கான்பரன்ஸ் கால் scheduleஉக்கு போய்டாதீங்க.. எங்க டேமேஜரெல்லாம் பார்க்கிறதுனால சொல்றேன் :)

துளசி கோபால் said...

எனக்கு சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை ஒரே ஒரு பழமொழியைத் தவிர!

புதுத் துடைப்பம் நல்லாப் பெருக்கும்

CVR said...

கமு...
கபி(1 மாதத்துக்கு பின்)....
கபி(1 வருடத்துக்கு பின்)

என்று ஒரு பதிவை அடுத்த வருடம் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!!!(உண்மையை போடனும் சொல்லிட்டேன்)
Enjoy it while it lasts!!
ஹஹஹா!!


மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! அண்ணிக்கும் எங்க சார்பா ஒரு வணக்கத்தை சொல்லிடுங்க!! :-)

என்சாய் மாடி!!! B-)

Unknown said...

Welcome to the club of married men:-)))

கல்யாணமாகி 15 நாளிலேயே பாச்சிலர் வாழ்வை நினைச்சு நோஸ்டால்ஜிக் ஆயிட்டீங்களா?இன்னும் நாள் எங்கே பொழுதெங்கே:-))

TBCD said...

ஹி ! ஹி ! ஹி !
வீட்டுக்கு வீடு வாசப்படி...
இந்த அம்மா சமையல் ராகம் தான் எல்லா பெண்களுக்கும் பிடிக்காத ராகமின்னு நினைக்கிறேன்..ஆனா, ஒருத்தர் விடாம எல்லாரும் பாடிடுறாங்க போல...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ILA(a)இளா said...
நவம்பர் 5:
KRS போன் பண்றார் எடுத்து பேசியே
ஆகனும், குளிரா இருந்தா என்னா?
டிசம்பர் 5:
அந்தாளுக்கு வேற வேலை இல்லே.. நேரங்காலம் தெரியாம..//

அலோ விவசாயி...
அவசரத்துல மாத்தி அடிச்சிட்டீங்களா? இந்தாங்க...

நவம்பர் 5:
அந்தாளுக்கு வேற வேலை இல்லே.. நேரங்காலம் தெரியாம

டிசம்பர் 5:
KRS அண்ணா போன் பண்றார். எடுத்து பேசுங்க! என்ன பெருசா "வெட்டி" முறிக்கறீங்க?
இப்படி கேட்டாங்களாம் தங்கச்சி! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

லோவெல் மாநிலச் செய்திகள்:
சற்றுமுன் கிடைத்த தகவலின் படி:

கமு-கபி யில் சொல்லப்பட்ட சமையல் சமாச்சாரம் எல்லாம் உண்மை! உண்மை!! உண்மை!!!

ஆனா அதை எல்லாம் வெட்டி என்னமோ அதி"காரமா" வாங்கனதா பில்டப்பு கொடுக்கறாரு!
ஆனா அது எல்லாம் அவருக்கு அன்போடு செஞ்சிக் கொடுக்கப்பட்டது!

அதை ஆசைதீரச் சாப்பிட்டு....
வெட்டிக்கு ஒரே நாளில் ஒன்னரை கிலோ எடை கூடி இருப்பதாக,
லாரி எடை மேடையில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன! :-))

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கொஞ்சம் கொஞ்சம் எங்க அம்மா செய்யற மாதிரி தான் இருக்கு.
ஆனா ஏதோ மிஸ்ஸாகுது. எதுக்கும் இன்னைக்கு ராத்திரி ஃபோன் பண்ணும் போது கேட்டுக்கோ//

மூஞ்சியில் வெந்நீர் வந்து விழுது.....
அலறி அடிச்சி எழிஞ்சிக்கிட்டார் மாப்ளே!
ச்ச்ச்ச்சே...நவம்பர் 5-டிசம்பர் 5 அத்தனையும் கனவா? :-))))
//
கனவா???
ஹி ஹி ஹி...

அப்படியே நினைச்சிக்கோங்க. இல்லைனா இங்க வயிறு வலிக்க போகுது ;)

//
வெல்கம் பேக் வெட்டி!!!!!!!
//
மிக்க நன்றி

அரை பிளேடு said...

//சிங்கம் சிங்களா மட்டும் வராது.. Marriedஆவும் வரும் ;)
//

வெல்கம் பேக் :)))

ILA (a) இளா said...

எல்லாரையும் நல்ல படியா வெச்சுக்க ஆண்டவா..

Anonymous said...

அண்ணா வந்துட்டீங்களா..அண்ணி எப்படி இருக்காங்க?அண்ணிதான் உங்களுக்கு சமைச்சு போடுறாங்களா இல்லை நீங்க அண்ணிக்கு சமைச்சு போடுறீங்களா?KRS அண்ணாதான் சொன்னார்,நீங்கதான் வீட்டில் சமையல் என்று :P
எப்படியோ அண்ணியை நல்ல பார்த்துக்கோங்க.வாழ்த்துக்கள் அண்ணா.

மங்களூர் சிவா said...

//
கலக்கல் போஸ்ட் :))

காமென்ட் போடலாம்னு வந்தால் கேயாரெஸ் நெத்தியடி அடிச்சிருக்கார்.
//
:-)))))))

Unknown said...

மாப்பி WELCOME TO THE REAL WORLD :-)

G3 said...

வாங்க புது மாப்பிள்ளை. Welcome back :))

பதிவுல எல்லாமே ஒன் சைட் டயலாக்காவே இருக்கே.. அவங்களோட ரிப்ளையும் போட்டிருந்தா கரெக்டா இருந்திருக்குமே :))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க புதுமாப்பிள்ளை....ஆக நீங்க சமையல் செய்யறதில்லைங்கறீங்க..

நாகை சிவா said...

ராசா!

இது எல்லாம் நம்புற மாதிரி இல்லையே. வெளி வேஷம் போடுற மாதிரி இருக்கே....

உன்னை சோதனை எலியாக வீட்டுல பாப்பதாக தானே கேள்வி! நீ உல்டாவா அடிக்குற?

இராம்/Raam said...

வெட்டிக்காரு,

Welcome back.. :)

அடியெல்லாம் வாங்கினதை போஸ்ட்'லே போடலை??? ;)

Anonymous said...

ரெகுலர் டச் இல்லை. பதிவின் நீளத்தாலோ என்னமோ பயங்கர கடி :-(

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அதுவும் ஐயா சமையலை அடிச்சிக்க ஆளே இல்லை.
//
Ayya samaiyalai saapida aale illai-nnu thaane solla vantheenga? typo thaane? :-)
//
அன்னைக்கு நல்லா இல்லை நல்லா இல்லைனு சொல்லியே நாலு ரவுண்ட் சாப்பிட்டீங்களே மறந்துடுச்சா? ;)

//
//இன்னைக்கு சாப்பத்திக்கு தக்காளி கொத்ஸி பண்ணிடு. நேத்து மாதிரியே பட்டாணி குருமா எல்லாம் வேணாம்.
//
Ithellam too much!

Pathivula....ore oru unmai!
Ungala kaalaiyil 7:00 manikku ellam ezhupidaraanga enbathu thaan!
Seri innikki kaaliyil 7:00 clock ezhunthu, enna samaiyal senjittu oppice vantheenga? :-))//

ஹி ஹி ஹி...
இப்படியே நினைச்சிட்டு இருங்க ;)

Unknown said...

மீண்டும் வருக வெட்டிப்பயல்… சாரி… வெட்டி ஆள்!!! :-)

வெட்டிப்பயல் said...

//சிவபாலன் said...

Best Wishes!

Have great Married Life!//

மிக்க நன்றி சிபா...

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

:)))))))))))))))))

வாங்க வாங்க திரும்ப வாங்க. நேரமிருக்குறப்போ பதிவு போடுங்க.//

கண்டிப்பா ;)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

வாங்க மாப்பிள்ளை வாங்க!! வந்து என்ன செய்யணுமோ செய்யுங்க.

அட பதிவு போடுங்க ரெகுலரான்னு சொல்ல வந்தேன்!
:))//

கொத்ஸ்,
மிக்க நன்றி...

எப்பவுமே ட்ரிபுல் மீனிங்ல தான் பேசனும்னு முடிவோட இருக்கீங்க ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

வாங்க மாப்ள :))//

வந்துட்டோம் KTM ;)

ramachandranusha(உஷா) said...

என்னமோபா, நல்லா இருந்தா சரி.

சிவிஆர்,
அடுத்த வருட கடைசியிலும் வெட்டி இதே போலதான் பதிவு போடுவார். காரணம் திருமதி.வெட்டி
பதிவை மேற்பார்வை பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க இல்லே ;-)

துளசி,
சொல்றதுதான் சொல்றீங்க, வாக்குவம் கிளீனர் என்று ஸ்டைலா சொல்லக்கூடாதா? ஆறுமாசம்
காரண்டி பீரீயட் உண்டு இல்லே :-))))

pudugaithendral said...

//எனக்கு சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை ஒரே ஒரு பழமொழியைத் தவிர!

புதுத் துடைப்பம் நல்லாப் பெருக்கும்//

வாழ்த்துக்கள். ரிப்பீட்டேய்

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

Welcome back and Best Wishes.

4:56 PM//

மிக்க நன்றி உண்மை...

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

கலக்கல் போஸ்ட் :))
//
மிக்க நன்றி பாபா

// காமென்ட் போடலாம்னு வந்தால் கேயாரெஸ் நெத்தியடி அடிச்சிருக்கார்.//
Grrrrr

அபி அப்பா said...

துளசி ரீச்சர் !!!! சொன்னதுக்கு ரிபீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

Unknown said...

ஆச அறுவது நாள்...மோகம் முப்பது நாள் :)

தொளசி டீச்சர் மாதிரி நாங்களும் பீதியக் கெளப்புவம்ல?

எப்பிடியோ...கொஞ்ச நாளைக்கு நல்ல சோறு சாப்பிட வழி கெடச்சுருக்கு! சீக்கிரம், மத்த புது மாப்பிளைங்களுக்கு எங்க பக்கத்துல உக்காந்து 'ஆசி' சொல்ல வாழ்த்துக்கள்!!

பினாத்தல் சுரேஷ் said...

உஷா Said:

அடுத்த வருட கடைசியிலும் வெட்டி இதே போலதான் பதிவு போடுவார். காரணம் திருமதி.வெட்டி
பதிவை மேற்பார்வை பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க இல்லே ;-)


எனக்கென்னவோ இந்தப்பதிவே மேர்பார்வையில வந்ததுதானோன்னு தோணுது,

உண்மை said...

// புதுத் துடைப்பம் நல்லாப் பெருக்கும்//


இதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன் !

Divya said...

Welcome back !

\\ஏதாவது காய் போட்டு சாம்பார் வெச்சி உருளைக்கிழங்கு வறுத்துடு. எங்க அம்மா செஞ்ச மாதிரி செய்யி. ஞாபகம் இருக்கு இல்லை.\\

அண்ணிக்கு, daily menu கொடுத்துட்டுத்தான் ஆஃபீஸ் போறீங்கப்போலிருக்கு!

Sathiya said...

ஆகா மொத்தத்துல நீங்க என்ன சொல்ல வரீங்க? கமு பெஸ்டா, கபி பெஸ்டா? பயப்படாம உண்மைய சொல்லுங்க;)

Anonymous said...

மனைவியிடம் உங்க அம்மா புராணம் பாடுவதை நிறுத்தவும் ..........உங்க நல்லதுக்கு சொல்றேன்

முத்துகுமரன் said...

புதுமாப்பிள்ளைக்கு வரவேற்புகள்.

வீட்டுச் சாப்பாட்டின் சுகமே சுகம்தான். அதற்கு பங்கம் வராமால் பார்த்து கொள்ளுங்கள் :-)