தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, March 28, 2007

கொல்ட்டி - சில திடுக்கிடும் உண்மைகள்

ஒரு சில விஷயங்களை ரொம்ப நாள் மறைக்க முடியாது... எப்படியும் உண்மை வெளிய வந்துடும்.

கொல்ட்டி - நான் முதல்ல எழுதுன கதை இது தான். அது எல்லாருக்கும் பிடிச்சி போனதுக்கான காரணம் என்னனு ஈஸியா சொல்லிடலாம். ஏன்னா அது நீங்க நினைக்கிற மாதிரி கதையல்ல... ஆமாம் அது நிஜமாக நடந்ததுதான்.

இத ஒரு சிலர் கண்டு பிடிச்சிருப்பீங்க. ஆனா இதுல நீங்க கண்டுபிடிக்காத ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. இது உங்க எல்லாருக்கும் ஆச்சரியமாக்கூட இருக்கலாம். ஆனா இது தான் உண்மை... இளகிய மனசு இருக்கவங்க இதுக்கு மேல படிக்காதீங்க. நான் சீரியஸா சொல்றேன்.

கதை தெரியாதவங்க அதை ஒரு தடவை படிச்சிடுங்க
. இல்லைனா இது புரியாது...

கதைல நாயகன் தெலுகு எழுத படிக்க கத்துக்கறான். அதுக்கப்பறம் என்ன ஆகறான்? நீங்க எல்லாம் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. அவன் தெலுகு படம் பார்த்து தமிழ்ல ரிவியூ எழுதறானு. ஆனா அது தான் இல்லை. ஏன் யாரும் அவுட் ஆப்ஃ தி பாக்ஸ் திங் பண்ண மாட்றீங்க???

Sometimes Truth Really is Stranger Than Fiction

ஏன் அந்த பையன் தெலுகு பையனா இருந்து அந்த பொண்ணு தமிழ் பொண்ணா இருந்திருக்ககூடாது. அந்த பையன் ஏன் தமிழ் எழுத, படிக்க கத்திருந்திருக்கூடாது. ஏன் அந்த பையனே தமிழ்ல ப்ளாக் ஆரம்பிச்சி உங்க கூட ஒருத்தனா எழுதிட்டு இருக்க கூடாது?

ஆமாம். அது தான் உண்மை.

நான் தமிழ் எழுத படிக்க கத்துக்கிட்டு ரெண்டு வருஷம் கூட ஆகலை.

ஒரு பதினெட்டு மாசம் தான் இருக்கும். அவள் (பேர் வேண்டாமே) என்னைவிட்டு போனாலும் அவள் பேசிய அந்த மொழியை மறக்க கூடாது என்று பல வகைகளில் கற்று கொள்ள ஆரம்பித்தேன். அந்த ஆர்வத்தில் தான் தமிழ் வலைப்பூக்கள் அறிமுகமும். எழுத்து கூட்டி படிப்பதற்குள் பல மணி நேரமாகியது.

என் ரூமேட் தனா தமிழ் தெரிந்த பையன். அவன் தான் எனக்கு ஓரளவு எழுத்து பிழையில்லாமல் அடிக்க சொல்லி கொடுத்தான். நான் முதலில் பெங்களூரிலிருக்கும் போது பேப்பரில் எழுதுவேன். அந்த கையெழுத்து எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என்பது நான் சொல்லி தெரிய தேவையில்லை. ஒரு வேளை நான் கைப்பட எழுதியிருந்தால் கண்டுபிடித்திருப்பீர்கள்.

பல நேரங்களில் நான் தவறு செய்வது "ள/ல", "ற/ர", "ண/ன" வில் தான். அதை முதலில் அவன் ஒரு முறை படித்து திருத்துவான். பிறகு அருமை தம்பி கப்பி ஒரு முறை பார்ப்பார். இதற்கு பிறகே பதிவிடுவேன். அப்படியும் சில சமயங்களில் எழுத்து பிழை இருந்துவிடும். இருந்தாலும் இன்று வரை யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. (லகுட பாண்டிகளா! எழுத்து பிழையை சொல்லவில்லை... நான் ஆந்திரா என்பதை)

என் ப்ளாகை அவள் ஒரு முறையாவது பார்த்திருப்பாளா என்று தெரியவில்லை. பல நேரங்களில் நான் எழுதியது ஃபார்வேர்டில் வரும் போது அது அவள் படித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து சந்தோஷ(வருத்த)ப்பட்டிருக்கிறேன். சர்வேசன் அவர்களின் சிறந்த வலைப்பதிவர் விருது வாங்கிய அன்றே அனைவரிடமும் சொல்லலாம் என்று பார்த்தேன். ஆனா எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாமே என்று விட்டுவிட்டேன்.

இப்ப உங்களிடம் மறைப்பது மனதிற்கு கஷ்டமாக இருப்பதால் உண்மையை சொல்லிவிட்டேன். இதை தமிழ் மணத்தில் எந்த பிரிவில் சேர்ப்பது? சோகம் என்று ஒரு பிரிவிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இனி என் கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்...

பி.கு: இதை நீங்கள் நம்புவதை பொறுத்தே என் வருங்காலம் பற்றிய முக்கிய தீர்மானமிருக்கும். இதையும் நீங்க உண்மைனு நினைச்சா நான் அடுத்து அரசியல்ல இறங்கலாம்னு இருக்கேன். எத சொன்னாலும் நம்பறாங்கடா இவுங்க ரொம்பஅஅஅ நல்லவங்கடா...

147 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

me firstuu?

சென்ஷி said...

அடப்பாவி... உன்னை எந்த லிஸ்ட்ல சேக்கறதுன்னே தெரியல.

//ஒரு சில விஷயங்களை ரொம்ப நாள் மறைக்க முடியாது... எப்படியும் உண்மை வெளிய வந்துடும்.//

எப்படில்லாம் ஏமாத்துறாங்கய்யா...:))

சென்ஷி

.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க தெலுங்கர்தான் என்பதை நீங்க ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்திருக்கிறீர்கள்..

ஆனால், இதுல என்ன கொடுமைன்னா, நான் உங்க கிட்ட சப்டைட்டில் எழுதி கொடுக்க சொன்னா நீங்க 2-3 டெலுங்கு படம் பார்த்து கத்துக்கோன்னு அனுப்பிட்டீங்களே..

இந்த மாதிரி நான் ஒரு தெலுங்கு பையனை காதலித்தாலாவது தெலுங்கு கத்துக்க சான்ஸ் இருக்கு. ;-)

அபி அப்பா said...

வெட்டி தம்பி! உன் கால காட்டுப்பா தொட்டு கும்பிக்கிறேன்...சே சே கும்பிட்டுகிறேன். 2 வருஷம் முன்ன கத்துகிட்டு தப்பில்லாம எழுதும் நீங்க எங்கே நான் எங்கே( கொத்ஸ் வலது காது, கீதா மேடம் இடது காது...விடுங்க வலிக்குது:-))

Anonymous said...

Hey great guy,
ppl like me who remain the blog reading community shall take courage from you;
u r more tamil than many of us.
hats off,
navin

Rasigan said...

ada paaavi... nee enna solra... unmaiya... poiya.... unnoda thodar kadhai mathiriye oru hook vachu blog pottu irrukka.... irrundhalum ok... kadhal thovi ellam oru mattera... ellarukkum nadakarathuthan... ennoda 'friend' Nepolean kitta poi oru naal pesina ellam seriya poidum okva...

உங்கள் நண்பன் said...

வெட்டி நீ சொல்லுவது உண்மையா?பொய்யா?னு தெரியலை ஆனா மனது கஷ்டமா இருக்கு, உன் கொல்டி பதிவை படித்துவிட்டு அந்தப் பெண்ணிற்காக வருத்தப் பட்டவர்களில் நானும் ஒருவன் ,வருத்தப் பட வேண்டியது அவங்களுக்கு அல்ல உனக்குத்தான் என்று படிக்கும்போதே உன்மீதும் வருத்தம் வந்தது,

//இப்ப உங்களிடம் மறைப்பது மனதிற்கு கஷ்டமாக இருப்பதால் உண்மையை சொல்லிவிட்டேன். இதை தமிழ் மணத்தில் எந்த பிரிவில் சேர்ப்பது? சோகம் என்று ஒரு பிரிவிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.///

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//எத சொன்னாலும் நம்பறாங்கடா இவுங்க ரொம்பஅஅஅ நல்லவங்கடா...
//

அடப் பாவி அவனா நீயி? கவுத்தீட்டானே மச்சான்,

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

ayya, ithu unmaya poiya??? appa kanna kattuthe!
sari software mozhila

if (TRUE){
printf("wow! man u have really achieved something, atleast you have taken positives out of this incident and moved on");
printf("still unbelievable, considering you seem to know some good GK on tamilnadu as well");
}
if (FALSE) {
printf("Dammit you have real good imagination and know how to hook your audience.);
}

Rasigan said...

Nee sollama ponalum... regulara un bloga padikaravanga kandu pudichuduvanga adhu ellame poinu... endha telugu paiyan... MGR SIVAJI ellam pudikkumnu solluvan.... Junk fellow.. i was really sad till i read that last paragraph...

தேவ் | Dev said...

வெட்டி எனக்கு ஒரு எம்.எல்.ஏ சீட்.. விருத்தாச்சல்ம் சீட் போதும்ப்பா

Rasigan said...

vetti... oru matter solla marandhutten.. unnoda "thural" kadhai romba populara ayiduchu.. oru forwardla ennaku vandhadhu...

கார்த்திக் பிரபு said...

gi eluda onnum kidaikalaya??

Anonymous said...

இதுல எது உண்மை எது பொய்ன்னு ஒண்ணும் புரியல்ல....என்னமோ போங்க.....நல்லா எழுதறீங்க தமிழில்....அது போதும்...நீங்க உண்மையான தெலுங்கா இருந்து தமிழ் இந்த அளவில் எழுதுகிறீர்கள் என்றால் இங்குள்ள தமிழ் வாழ்க கும்பல் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அதாவது அவர்கள் உங்களை போல எத்தனை பிற மொழிகள் கற்கிறார்கள், அல்லது பிறரை கற்க விடுகிறார்கள் என்று. ஆனால் அவர்கள் பின்வரும் ஏதோ ஒரு சால்ஜாப்பு சொல்வார்கள்.

நாங்கள் பார்த்த/பார்க்கும் பெண்கள் தமிழ்தான், ஆகவே இந்த பிரச்சனை இல்லை (அ) நாங்கள் பெண்களுக்காக கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம்

முத்துலெட்சுமி said...

படிச்சிட்டே வரும் போதே எதோ
மனசுக்குள்ளே இடறிக்கிட்டே
இருந்துச்சு ...ஒன்னும் சரியில்லயேன்னு
பி.கு. பார்த்ததும் அப்பாடான்னு
எதயும் சந்தேகக்கண்ணோட பார்க்கற பழக்கம் நம்மள காப்பத்திருச்சுப்பான்னு.

ஆனா பாவம் அபி அப்பா மாதிரி
சில வெள்ளை உள்ளங்கள் இருக்கும் வரை நீங்க எம்.எல்.ஏ என்ன அதுக்கும்
மேல என்ன வேணாலும் ஆகலாம்.

[ஆனா இப்படி பதிவு போட்டது முதல் கதை
உங்க கதை இல்லன்னு நிரூப்பிக்க முயற்சி யோ]

Boston Bala said...

மனம் திறந்து உண்மையை ஒப்புக் கொள்வதற்கு நிறைய தைரியம் வேண்டும்... வாழ்த்துகள் வெட்டி ;)

---எனக்கு ஒரு எம்.எல்.ஏ சீட்.. விருத்தாச்சல்ம் சீட் போதும்ப்பா---

எனக்கு ராஜ்ய சபா போதும் :D

CVR said...

கவலை படாதீங்க வெட்டி!!
உங்க மனசில இருக்கர ஆதங்கத்தை வெளியில்கொட்டி விட்டீர்கள்.
சும்மா பேருக்கு கடைசி வரியில் டிஸ்கி மாதிரி ஏதோ போட்டிருக்கீங்க. ஆனா என் கண் கலங்கிட்டதுனால என்னக்கு அது சரியா தெரியல,நானும் அதை பெருசா எடுத்துக்கலை. உங்க வலை உலக நண்பர்களும் இதே போன்று உண்மையை உணர்வார்கள் என நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்!! :-)

மு.கார்த்திகேயன் said...

வெட்டி, நமக்கும் இந்த முதல்வர் போஸ்டை கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்..

மு.கார்த்திகேயன் said...

உண்மை கதையா.. அடடே.. கடசில வச்ச பஞ்ச பாத்தா தலையில மிளகாய் தான் போல :-)

Dubukku said...

நீங்க கொல்ட்டி இல்லன்ங்கிறத இல்லைங்கிறீங்க அதானே? :))
எ.எல்.ஏ சீட் தாராளாம குடுக்கலாம்

இராம் said...

//பி.கு: இதை நீங்கள் நம்புவதை பொறுத்தே என் வருங்காலம் பற்றிய முக்கிய தீர்மானமிருக்கும். இதையும் நீங்க உண்மைனு நினைச்சா நான் அடுத்து அரசியல்ல இறங்கலாம்னு இருக்கேன். எத சொன்னாலும் நம்பறாங்கடா இவுங்க ரொம்பஅஅஅ நல்லவங்கடா... ///

இந்த பொய்புரட்டு செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

ஏலேய், இங்கே பெங்களூரூலே நீ இருக்கிறப்போ பிராண்டின பாய்கூட இன்னும் சாட்சிக்கு இருக்குலே... :)

Sumathi said...

ஹாய் வெட்டி,

ஆஹா...ஏற்கெனவே காயற வெய்யில்ல மனுசன் மண்ட காஞ்சி போயி கிடக்கான், இதுல நீங்க வேற உங்க பங்குக்கு பிச்சுக்கோன்னு சொல்றீங்களே.... இது உங்களுக்கே நியாயமா? தர்மமா?

உண்மை said...

சூப்பர் அல்வா :)

- உண்மை

தம்பி said...

எலேய்,

என்ன நீ புதுகரடி விட்டுகிட்டு இருக்க...
அப்ப நீயி கள்ளக்குறிச்சிய அஞ்சாப்பு வரைக்கும் படிச்சேன்னு சொன்னது, கடலூர் புனித வளனார் ஸ்கூல்ல பன்னெண்டாப்பு வரைக்கும் படிச்சது அம்புட்டும் பீலாவா? இல்ல அங்க தமிழே சொல்லித்தரலயா?

என்னய்யா நடக்குது இங்க...

தம்பி said...

சீக்கிரம் பதில் சொல்லு மேன்..

Syam said...

உங்களுக்குள்ல கொல்டினு ஒரு அன்னியன் ஒளிஞ்சு இருக்கான்...அவன் தான் ரெமோ மாதிரி வந்து இந்த சித்து வேலை எல்லாம் பண்ணிட்டு போறதுன்னு நினைக்கறேன்...:-)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

எலேய்,

என்ன நீ புதுகரடி விட்டுகிட்டு இருக்க...
அப்ப நீயி கள்ளக்குறிச்சிய அஞ்சாப்பு வரைக்கும் படிச்சேன்னு சொன்னது, கடலூர் புனித வளனார் ஸ்கூல்ல பன்னெண்டாப்பு வரைக்கும் படிச்சது அம்புட்டும் பீலாவா? இல்ல அங்க தமிழே சொல்லித்தரலயா?

என்னய்யா நடக்குது இங்க... //

ஏன் இதோட நிறுத்திட்ட???

வீட்டு அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் கொடுக்க வேண்டியது தானே???

அது தான் கதைனு கடைசியா உள்குத்து வெச்சிருக்கனே புரியலையா???

நீ சொன்னதுலயும் தப்பு இருக்கு.
ஆறாவது வரை கள்ளக்குறிச்சி
பதினோராவது வரை கடலூர்
பனிரெண்டாவது ராசிபுரம் SRV :-)

இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லாம் சொன்னா உன் மேல பரிதாபப்பட்டு இனிமே கிண்டல் பண்ண மாட்டோமுன்னு எழுத ஆரம்பிச்சே. உனக்கே தாங்காம டிஸ்கி போட்டு அரசியல் பண்ணற. இதெல்லாம் ஒரு பொழப்பு.

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் அது என்ன பாபா குடுத்த சுட்டியில் தெலுகு கொல்டி அப்படின்னு? மலையாள கன்னட துளு கொல்டி எல்லாம் கூட இருக்கா என்ன?

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லாம் சொன்னா உன் மேல பரிதாபப்பட்டு இனிமே கிண்டல் பண்ண மாட்டோமுன்னு எழுத ஆரம்பிச்சே. உனக்கே தாங்காம டிஸ்கி போட்டு அரசியல் பண்ணற. இதெல்லாம் ஒரு பொழப்பு. //

கொத்ஸ்,
நான் சொன்னா நீங்க ஓட்றத நிறுத்த போறீங்களா என்ன?

இது சும்மா ஜாலிக்காக போட்டது!!!

இதுவே ஒரு கதை படிச்ச எஃபக்ட கொடுக்குமே ;)

ஆனா இதுல இருக்கற ஒரு மேட்டர் மட்டும் உண்மை...

தம்பி said...

//இப்படி எல்லாம் சொன்னா உன் மேல பரிதாபப்பட்டு இனிமே கிண்டல் பண்ண மாட்டோமுன்னு எழுத ஆரம்பிச்சே. உனக்கே தாங்காம டிஸ்கி போட்டு அரசியல் பண்ணற. இதெல்லாம் ஒரு பொழப்பு.//

அப்படி போடு அருவாள!
கொத்ஸ் இதத்தான் நான் சொல்லணுமின்னு நினைத்தேன்.

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//இப்படி எல்லாம் சொன்னா உன் மேல பரிதாபப்பட்டு இனிமே கிண்டல் பண்ண மாட்டோமுன்னு எழுத ஆரம்பிச்சே. உனக்கே தாங்காம டிஸ்கி போட்டு அரசியல் பண்ணற. இதெல்லாம் ஒரு பொழப்பு.//

அப்படி போடு அருவாள!
கொத்ஸ் இதத்தான் நான் சொல்லணுமின்னு நினைத்தேன். //

நீ ஏன்டீ நினைக்க மாட்ட???

நீ திருக்கோவிலூர்ல கிரிக்கெட் விளையாடிட்டு எங்க பெரியம்மா தண்ணி வாங்கி குடிச்சதெல்லாம் எனக்கு தெரியாதா?

என் ஸ்கூல் சீனியர்ஸ் இங்க எத்தனை பேர் இருக்காங்க??? (கடலூர் புனித வளனார்ல படிச்சவங்க இங்க ப்ளாக்ல எத்தனை பேர் இருக்காங்கனு தெரியுமா???)

என் ப்ராஜெக்ட் மேனஜரே தமிழ் வலைப்பூவின் சொல்லின் செல்வர்.

இந்த நிலைமைல நான் எப்படி பொய்யெல்லாம் சொல்ல முடியும். இது சும்மா ஜாலிக்காக எழுதனது :-)

எனக்கு அரசியல் புரியாது அரசியல் தெரியாது :-)

தம்பி said...

//எனக்கு அரசியல் புரியாது அரசியல் தெரியாது :-)//

என்னவோ முதலமைச்சர் சீட்ட உனக்கு ஒதுக்கி வெச்சி வாங்க உக்காருங்கன்னு சொன்ன மாதிரி ஓவரா பீல் குடுக்கற...

ஆந்திராவில நீங்க என்ன செஞ்சிகிட்டு இருந்திங்க??

நீங்க எழுதற ஸ்டைல பாத்தா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கத்துகிட்டமாதிரி தெரியலயே.

இந்த நக்கலல்லாம் பாத்தா நீ தமிழ்நாட்டுல ஏதோ தென்னாற்காடு மாவட்டத்துல வளர்ந்த ஆளு மாதிரி இருக்குதே

உண்மைய சொல்லுங்க வெட்டி
உண்மைய சொல்லுங்க

குழலி / Kuzhali said...

//என் ஸ்கூல் சீனியர்ஸ் இங்க எத்தனை பேர் இருக்காங்க??? (கடலூர் புனித வளனார்ல படிச்சவங்க இங்க ப்ளாக்ல எத்தனை பேர் இருக்காங்கனு தெரியுமா???)
//
வெட்டிப்பயல்
குழலி
அருள்குமார்
பொட்டீக்கடை சத்யா
அப்புறம் வேறு யார் யாருப்பா புனித வளனார் ப்ராடெக்ட்டு??

வெட்டிப்பயல் said...

//குழலி / Kuzhali said...

//என் ஸ்கூல் சீனியர்ஸ் இங்க எத்தனை பேர் இருக்காங்க??? (கடலூர் புனித வளனார்ல படிச்சவங்க இங்க ப்ளாக்ல எத்தனை பேர் இருக்காங்கனு தெரியுமா???)
//
வெட்டிப்பயல்
குழலி
அருள்குமார்
பொட்டீக்கடை சத்யா
அப்புறம் வேறு யார் யாருப்பா புனித வளனார் ப்ராடெக்ட்டு?? //

தலைவா,
முதல் முறையா நம்ம ப்ளாக் பக்கம் வந்திருக்கீங்க... ரொம்ப மகிழ்ச்சி.

நம்ம தலைவர் செந்தழல் ரவிய விட்டுட்டீங்க :-)

Kovai Mani - கோவை மணி said...

எத்தனை அப்பாவிங்க தமிழ்மணத்தில் இருக்காங்கனு பின்னூட்டத்தை பார்த்தா தெரியுது :)))

அப்படியே கட்சி ஆரம்பிச்சீங்கன்னா கோவை தொகுதி எனக்குத்தான், சரியா?

செல்வன் said...

தலைவா,

அதாவது என்னதான் தெலுங்கு, மலையாளம் என்று சொன்னாலும் பெயருக்கு கடைசியில் வரும் "ன்" காட்டிக் கொடுத்து விடுகிறதே?என்ன செய்ய?:)))

பாலாஜி மனோகருகாரு என்று பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்:)))

தம்பி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

me firstuu? //

(*^&%#&%$#@8

எந்நேரத்திலயும் விழிப்போட இருக்காங்களா இந்த ப்ரெண்டு...

நாகை சிவா said...

வெட்டி!

உனக்குள்ள இப்படி ஒரு சோகம் இருப்பது எனக்கு தெரியாம போச்சே...........

:-((((((((((((

நான் இன்னிக்கு மூட் அவுட்....

என்கிட்ட இது வரைக்கும் நீ சொல்லாம மறைச்சிட்டியே இந்த விசயத்தை....

பரவாயில்ல வெட்டி.... இப்பவும் ஒன்னும் ஆகல... அந்த பொண்ணு அட்ரஸ் இருந்தா கொடு... அட்ரஸ் இல்லாட்டியும் பரவாயில்லை, மெயில் ஐடி, போன் நம்பர், மொபைல் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை நம்பர் எதாச்சும் ஒன்னு கொடு, நான் போய் பேசி முடிச்சு வைக்குறேன்.

நாகை சிவா said...

வெட்டி

எனக்கு ஒரே ஒரு டவுட்...

அது எப்படி உன் பதிவுக்கு வரவங்க மட்டும் இப்படி

அன்னிக்கு 330 சொன்ன, அதுக்கு ஒரு கூட்டம்.

இப்ப இங்க பாரு!

//இந்த மாதிரி நான் ஒரு தெலுங்கு பையனை காதலித்தாலாவது தெலுங்கு கத்துக்க சான்ஸ் இருக்கு. ;-) //

// 2 வருஷம் முன்ன கத்துகிட்டு தப்பில்லாம எழுதும் நீங்க எங்கே நான் எங்கே//

//u r more tamil than many of us.//

நாகை சிவா said...

//(*^&%#&%$#@8

எந்நேரத்திலயும் விழிப்போட இருக்காங்களா இந்த ப்ரெண்டு... //

அதுக்கு ஏன்ய்யா கெட்ட வார்த்தையில் திட்டுற....பாத்து இருய்யா அவங்க 420 ய்யா...

பெத்த ராயுடு said...

இன்னும் நாலு நாளு இருக்கேப்பா!.
இப்பவே இந்தக் கூத்தா?

Arunkumar said...

neenga solradhula oru dakaaltiz enakku first rendu para padichappaye therinjadhu.. adhu naala nera disci irukkanu theditten :P

nalla yosikkireeru vetti :P

LOL @ syam;s comment :)

உண்மை said...

//
இன்னும் நாலு நாளு இருக்கேப்பா!.
இப்பவே இந்தக் கூத்தா?

//

இன்னிக்கே இவ்வளவு அல்வான்னா, 1ம்தேதி எவ்வளவு குடுக்ப்பாறோ ?

- உண்மை

வெட்டிப்பயல் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

me firstuu? //

கலக்கறீங்க தோழி!!!

வெட்டிப்பயல் said...

// சென்ஷி said...

அடப்பாவி... உன்னை எந்த லிஸ்ட்ல சேக்கறதுன்னே தெரியல.
//
நாட்ல நல்லவங்களுக்குனு ஒரு சின்ன லிஸ்ட் இருக்காமே. அதுல சேர்த்துக்கோ!!!

// //ஒரு சில விஷயங்களை ரொம்ப நாள் மறைக்க முடியாது... எப்படியும் உண்மை வெளிய வந்துடும்.//

எப்படில்லாம் ஏமாத்துறாங்கய்யா...:))

சென்ஷி //

பொது வாழ்க்கைனு வந்துட்டா இதெல்லாம் ஜகஜம் சென்ஷி ;)

வெட்டிப்பயல் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க தெலுங்கர்தான் என்பதை நீங்க ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்திருக்கிறீர்கள்..

ஆனால், இதுல என்ன கொடுமைன்னா, நான் உங்க கிட்ட சப்டைட்டில் எழுதி கொடுக்க சொன்னா நீங்க 2-3 டெலுங்கு படம் பார்த்து கத்துக்கோன்னு அனுப்பிட்டீங்களே..

இந்த மாதிரி நான் ஒரு தெலுங்கு பையனை காதலித்தாலாவது தெலுங்கு கத்துக்க சான்ஸ் இருக்கு. ;-) //

ஏய் My Frienduuu,
முதல் பின்னூட்டம் தான் படிக்காம போட்ட ஒத்துக்கிட்டேன்.. இது பாதி படிச்சிட்டு போட்டிருக்கயா???

பின் குறிப்பு படிக்கலையா???

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

வெட்டி தம்பி! உன் கால காட்டுப்பா தொட்டு கும்பிக்கிறேன்...சே சே கும்பிட்டுகிறேன். 2 வருஷம் முன்ன கத்துகிட்டு தப்பில்லாம எழுதும் நீங்க எங்கே நான் எங்கே( கொத்ஸ் வலது காது, கீதா மேடம் இடது காது...விடுங்க வலிக்குது:-)) //

அபி அப்பா,
வேணாம் அப்பறம் நான் அழுதுடுவேன்!!!

உங்கள விட ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல நான் ரொம்ப மோசம். தேன் கூடு போட்டில எனக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குனு ஒரு தடவை பரிசு கொடுக்கல... அதிகமா பாதிக்கப்பட்டவன் நான் தான் :-((((

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

Hey great guy,
ppl like me who remain the blog reading community shall take courage from you;
u r more tamil than many of us.
hats off,
navin //

Hi Navin,
I am really sorry...
This post is just for fun and whatever I have said is not completely true...

But one thing for sure is true.. that my mother tongue is Telugu. But I dont know to speak since I studied in hostel from my childhood and I really didnt bother to learn Telugu.

But I can understand that language...

வெட்டிப்பயல் said...

// Rasigan said...

ada paaavi... nee enna solra... unmaiya... poiya.... unnoda thodar kadhai mathiriye oru hook vachu blog pottu irrukka.... irrundhalum ok... kadhal thovi ellam oru mattera... ellarukkum nadakarathuthan... ennoda 'friend' Nepolean kitta poi oru naal pesina ellam seriya poidum okva... //

ரசிகன்,
இது சும்மா டகால்டி போஸ்ட் :-)

காதலாவது தோல்வியாவது??? இருந்தாலும் நீ சொன்னதால இன்னைக்கு நெப்போலியன்ட பேசிடறேன்... (அப்பாடா ஒரு காரணம் கிடைச்சிடுச்சி)

வெட்டிப்பயல் said...

//உங்கள் நண்பன் said...

வெட்டி நீ சொல்லுவது உண்மையா?பொய்யா?னு தெரியலை ஆனா மனது கஷ்டமா இருக்கு, உன் கொல்டி பதிவை படித்துவிட்டு அந்தப் பெண்ணிற்காக வருத்தப் பட்டவர்களில் நானும் ஒருவன் ,வருத்தப் பட வேண்டியது அவங்களுக்கு அல்ல உனக்குத்தான் என்று படிக்கும்போதே உன்மீதும் வருத்தம் வந்தது,
//
சரவணா,
என்னப்பா பண்றது. வாழ்க்கைனா இன்பம்/துன்பம், நல்லது/கெட்டது, இரவு/பகல் எல்லாம் சேர்ந்து தான் இருக்கும். என்ன செய்ய???

இதுவும் கடந்து போகும்னு தான் வாழ வேண்டி இருக்கு...

// //இப்ப உங்களிடம் மறைப்பது மனதிற்கு கஷ்டமாக இருப்பதால் உண்மையை சொல்லிவிட்டேன். இதை தமிழ் மணத்தில் எந்த பிரிவில் சேர்ப்பது? சோகம் என்று ஒரு பிரிவிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.///

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//
அழக்கூடாது செல்லம்... கண்ணை துடைச்சிக்கோ!!!

// //எத சொன்னாலும் நம்பறாங்கடா இவுங்க ரொம்பஅஅஅ நல்லவங்கடா...
//

அடப் பாவி அவனா நீயி? கவுத்தீட்டானே மச்சான்,

அன்புடன்...
சரவணன். //
நோ பீலிங்ஸ்...

இன்னும் நாலு நாள்ல உனக்குனு ஒரு நாள் வருது இல்லை அதுக்கான ட்ரெயினிங் தான் இது ;-)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

ayya, ithu unmaya poiya??? appa kanna kattuthe!
sari software mozhila

if (TRUE){
printf("wow! man u have really achieved something, atleast you have taken positives out of this incident and moved on");
printf("still unbelievable, considering you seem to know some good GK on tamilnadu as well");
}
if (FALSE) {
printf("Dammit you have real good imagination and know how to hook your audience.);
} //

கலக்கிட்டியே நண்பா!!!

இது நிஜமல்ல...கதை (பொய்னு நான் டைப் கூட பண்ண மாட்டேன். அவ்வளவு நல்லவன்)

வெட்டிப்பயல் said...

// Rasigan said...

Nee sollama ponalum... regulara un bloga padikaravanga kandu pudichuduvanga adhu ellame poinu... endha telugu paiyan... MGR SIVAJI ellam pudikkumnu solluvan.... Junk fellow.. i was really sad till i read that last paragraph... //

Sorry Rasigan... Really sorry...

ஒரு வெரைட்டி கொடுக்கலாமேனு தான் இப்படி ட்ரை பண்ணேன்...

அதே போஸ்ட்ல காந்த ராவ், NTR, ANR பேர் எல்லாம் சொல்லியிருக்கேன்... கீழே பின்னூட்டத்தில ;)

Boston Bala said...

---பாபா குடுத்த சுட்டியில் தெலுகு கொல்டி---

:))

கோபிநாத் said...

எல...நல்லா கீண்டியிருக்க அல்வவை ;-)))

கோபிநாத் said...

\\
எனக்கு அரசியல் புரியாது அரசியல் தெரியாது :-)\\

அட்ரா....அட்ரா....
எப்பா சாமி....ரீல் அந்து போச்சு....போதும் நிறுத்து உன் அரசியல் விளையாட்டை ;-))

தம்பி said...

//"கொல்ட்டி - சில திடுக்கிடும் உண்மைகள்" //

என்ன இது குங்குமம் வாங்கி விட்டீர்களா ரேஞ்சுக்கு ஓவர் அலப்பறைய குடுத்துகிட்டு இருக்கயே என்னா விஷயம்??

தம்பி said...

//இது நிஜமல்ல...கதை (பொய்னு நான் டைப் கூட பண்ண மாட்டேன். அவ்வளவு நல்லவன்) //

நீதான... யெப்பா சாமி
நீ ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா

என்ன மேன் அந்து போற அளவுக்கு ரீல்கள வாரி எறைச்சி போடற

உனக்கு பொய் சொல்ல தெரியாதா... அப்ப இவ்வளவு நாளா உசுக்குசுரா பழகிட்டு இருந்த புலிகிட்ட கூட உணமைய சொல்லலியே.. ஏன்
ஏன்
ஏன்

நாகை சிவா said...

ராசா, இந்த "பதிவுலையும்" எனக்கு நீ பதில் சொல்லாம விட்டேன் வை...

அப்பால உன்ன எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணிக்குறேன்....

தம்பி said...

அநியாயமா அத்தன கமெண்டையிம் நிறுத்தி வைத்திருக்கும் வெட்டிப்பயல் ஆமா இனிமே என்னத்துக்கு அந்த பேரு, கொல்டிப்பயலுக்கு கோபியின் சார்பாக அவரது கண்டனங்கள்.

கோபிநாத் said...

\நாகை சிவா said...
வெட்டி!

உனக்குள்ள இப்படி ஒரு சோகம் இருப்பது எனக்கு தெரியாம போச்சே...........

:-((((((((((((

நான் இன்னிக்கு மூட் அவுட்....\\

வெட்டி இதுக்கு எவ்வளவு சொலவு ஆச்சு ;-)))

நாகை சிவா said...

அப்படியே எனக்கும் ஒரு சீட், ராஜ்ய சபாவில்....

ஜெயிக்க வச்சு, மினிஸ்டர் போஸ்ட்டும், அப்பால பிரதமர், ஜனாதிபதி ஆவது எல்லாம் என் தனிப்பட்ட திறமை...

தம்பி said...

//பி.கு: இதை நீங்கள் நம்புவதை பொறுத்தே என் வருங்காலம் பற்றிய முக்கிய தீர்மானமிருக்கும். இதையும் நீங்க உண்மைனு நினைச்சா நான் அடுத்து அரசியல்ல இறங்கலாம்னு இருக்கேன். எத சொன்னாலும் நம்பறாங்கடா இவுங்க ரொம்பஅஅஅ நல்லவங்கடா... //

இந்த பி.கு வ படிச்சும் பின்னூட்டத்துல வந்து குமுறி இருக்காங்களே அய்யா அவங்கள நெனச்சிதான் எனக்கு அழுகாச்சியா வருது.

Shreya said...

hello Chellam!!
KANDA NAAL MUDAL nee POI solluraya?
Ivar 18 masathila tamil MOZHI kathukuvaram , AZHAGEYA THEE yodu DUET paduvaaram,DAYA nd night tamil practise pannuvaraam!!! Comments vaanguvathukku 1000 vazhigal irruku atharkaga intha punithamana kadal+tamil use pannathey---EX LOVER!!

SurveySan said...

வெட்டிகாரு,
இதிலென்னய்யா சோகமு?
ஊரு வுட்டு ஊரு வந்து, எளுதற்தலே ஒரு தப்பும் இல்ல நைனா.
நெஜமே செப்பிந்தி.

நானும் அச‌லூறுன்னு சொன்னா என‌க்கும் 60 பின்னூட்டும் கெடைக்குமா?

Shreya said...

konjam originality use pannakoodatha ..athu enna "blog endral anubavikannum arayakoodathunu"
pammal k sambandam Dialogue?

Syam said...

ஒரு ஒருத்தரா வெளில வராங்க...இப்போ தான் X லவ்வர் வந்து இருக்காங்க...இனி Y லவ்வர் வந்து என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் :-)

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நீங்க தெலுங்கர்தான் என்பதை நீங்க ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்திருக்கிறீர்கள்..\\

அய்யய்யோ.....என்ன கொடுமை இது சரவணா....
எல சீக்கிரம் பதிலை சொல்லு.....ஒரே குஷ்டமப்பா....ச்சீச்சீ....குழப்பமப்பா இந்த பதிவுல ;-(

கோபிநாத் said...

\\தம்பி said...
//இது நிஜமல்ல...கதை (பொய்னு நான் டைப் கூட பண்ண மாட்டேன். அவ்வளவு நல்லவன்) //

நீதான... யெப்பா சாமி
நீ ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா

என்ன மேன் அந்து போற அளவுக்கு ரீல்கள வாரி எறைச்சி போடற

உனக்கு பொய் சொல்ல தெரியாதா... அப்ப இவ்வளவு நாளா உசுக்குசுரா பழகிட்டு இருந்த புலிகிட்ட கூட உணமைய சொல்லலியே.. ஏன்
ஏன்
ஏன்\\

ஏன்?
ஏன்?

பாவம் அந்த பச்ச புள்ளைய போயி ஏமாத்திட்டியே :-((

கோபிநாத் said...

\\ Shreya said...
hello Chellam!!
KANDA NAAL MUDAL nee POI solluraya?
Ivar 18 masathila tamil MOZHI kathukuvaram , AZHAGEYA THEE yodu DUET paduvaaram,DAYA nd night tamil practise pannuvaraam!!! Comments vaanguvathukku 1000 vazhigal irruku atharkaga intha punithamana kadal+tamil use pannathey---EX LOVER!!\\\

மக்களே....இங்கே பாருங்கள் இவரின் லீலைகளை.....இதுக்கு மேலையும் உண்மைய சொல்லல.....அப்புறம் நான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-)))

Rasigan said...

//
vetti said::

Sorry Rasigan... Really sorry...
//

ok unna mannikkanumna.. 'iru dhuruvam' mudivu sollitta unnai mannikalam... illati mudiyadhu... enna solra???

வெட்டிப்பயல் said...

//தேவ் | Dev said...

வெட்டி எனக்கு ஒரு எம்.எல்.ஏ சீட்.. விருத்தாச்சல்ம் சீட் போதும்ப்பா //

அது எங்க ஏரியா தான்...
Gaptainஅ தூக்கிடுவோம்னு சொல்றீங்களா???

சரி... உங்களுக்கு விருத்தாச்சலம் :-)

G3 said...

April maasam aarambikkaradhukku munnadiyae indha ragalaiya.. adutha 1 maasathukku unga bloga konjam ushara thaan padikkanum pola irukku ;-)

Shreya said...

SNEGEDHANE!! Snegedhane !! Ragasiya Snegedhane !!
Poduva yaaravathu comment adicha , nengal PULI madri paaiveergal!!
Endraiku yen POTTI PAMBHU pol adangivitteergall!!!!

----anbudan POTTI

வெட்டிப்பயல் said...

// Rasigan said...

vetti... oru matter solla marandhutten.. unnoda "thural" kadhai romba populara ayiduchu.. oru forwardla ennaku vandhadhu... //

அந்த கதை எனக்கும் 4-5 முறை வந்திருக்கு...

ஆனா அந்த மாதிரி கதை எழுதி மாச கணக்குல ஆகுது :-(((((((((

வெட்டிப்பயல் said...

//கார்த்திக் பிரபு said...

gi eluda onnum kidaikalaya?? //

அடப்பாவி எவ்வளவு கஷ்டப்பட்டு ஏப்ரல் மாசத்துக்கு முன்னோட்டமா இத போட்டா நீ என்னனா நாக்குல பல்ல போட்டு பேசிட்டயே...

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

இதுல எது உண்மை எது பொய்ன்னு ஒண்ணும் புரியல்ல....என்னமோ போங்க.....நல்லா எழுதறீங்க தமிழில்....அது போதும்...நீங்க உண்மையான தெலுங்கா இருந்து தமிழ் இந்த அளவில் எழுதுகிறீர்கள் என்றால் இங்குள்ள தமிழ் வாழ்க கும்பல் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அதாவது அவர்கள் உங்களை போல எத்தனை பிற மொழிகள் கற்கிறார்கள், அல்லது பிறரை கற்க விடுகிறார்கள் என்று. ஆனால் அவர்கள் பின்வரும் ஏதோ ஒரு சால்ஜாப்பு சொல்வார்கள்.

நாங்கள் பார்த்த/பார்க்கும் பெண்கள் தமிழ்தான், ஆகவே இந்த பிரச்சனை இல்லை (அ) நாங்கள் பெண்களுக்காக கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம் //

இது சும்மா ஜாலிக்காக எழுதனதுங்க... ஆனா உண்மையிலும் என் மதர் டங் தெலுகு தான்... ஆனா எனக்கு பேச வராது.

நான் LKG ல இருந்து தமிழ் படிச்சி தான் வந்திருக்கேன்...

வெட்டிப்பயல் said...

// முத்துலெட்சுமி said...

படிச்சிட்டே வரும் போதே எதோ
மனசுக்குள்ளே இடறிக்கிட்டே
இருந்துச்சு ...ஒன்னும் சரியில்லயேன்னு
பி.கு. பார்த்ததும் அப்பாடான்னு
எதயும் சந்தேகக்கண்ணோட பார்க்கற பழக்கம் நம்மள காப்பத்திருச்சுப்பான்னு.
//
இதுக்கு தான்கா உங்கள மாதிரி அறிவாளிங்க வேணும்னு சொல்றது ;)

//
ஆனா பாவம் அபி அப்பா மாதிரி
சில வெள்ளை உள்ளங்கள் இருக்கும் வரை நீங்க எம்.எல்.ஏ என்ன அதுக்கும்
மேல என்ன வேணாலும் ஆகலாம்.
//
அவர் ரொம்ப ரொம்ப நல்லவரு...

//
[ஆனா இப்படி பதிவு போட்டது முதல் கதை
உங்க கதை இல்லன்னு நிரூப்பிக்க முயற்சி யோ] //
அமாங்கா... எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்றாங்க. அதுக்கு தான் இப்படி நக்கல் போஸ்ட் :-)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

மனம் திறந்து உண்மையை ஒப்புக் கொள்வதற்கு நிறைய தைரியம் வேண்டும்... வாழ்த்துகள் வெட்டி ;)
//

ஏன் இந்த கொல வெறி??? ;)

//
---எனக்கு ஒரு எம்.எல்.ஏ சீட்.. விருத்தாச்சல்ம் சீட் போதும்ப்பா---

எனக்கு ராஜ்ய சபா போதும் :D //

பாபா,
இது டூ மச்... ராஜ்ய சபால ஒரு சீட் கேட்டா பரவாயில்லை... ராஜ்ய சபாவே வேணும்னா என்ன பண்ண???

வெட்டிப்பயல் said...

//CVR said...

கவலை படாதீங்க வெட்டி!!
உங்க மனசில இருக்கர ஆதங்கத்தை வெளியில்கொட்டி விட்டீர்கள்.
சும்மா பேருக்கு கடைசி வரியில் டிஸ்கி மாதிரி ஏதோ போட்டிருக்கீங்க. ஆனா என் கண் கலங்கிட்டதுனால என்னக்கு அது சரியா தெரியல,நானும் அதை பெருசா எடுத்துக்கலை. உங்க வலை உலக நண்பர்களும் இதே போன்று உண்மையை உணர்வார்கள் என நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்!! :-) //

வாங்க காதல் ஆராய்ச்சியாளரே!!!

உங்கள மாதிரி ஆளுங்களால தான் Gaptain எல்லாம் அரசியலுக்கு அசால்டா வராரு :-)

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

வெட்டி, நமக்கும் இந்த முதல்வர் போஸ்டை கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்.. //

உங்களுக்கு இல்லாததா...
யூ ஆர் தி முதலமைச்சர்...

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

உண்மை கதையா.. அடடே.. கடசில வச்ச பஞ்ச பாத்தா தலையில மிளகாய் தான் போல :-) //

ஏதோ நம்மால முடிஞ்சது...

வெட்டிப்பயல் said...

// Dubukku said...

நீங்க கொல்ட்டி இல்லன்ங்கிறத இல்லைங்கிறீங்க அதானே? :))
எ.எல்.ஏ சீட் தாராளாம குடுக்கலாம் //

குருவே!!!
எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்ட பாடம் தான் :-)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

//பி.கு: இதை நீங்கள் நம்புவதை பொறுத்தே என் வருங்காலம் பற்றிய முக்கிய தீர்மானமிருக்கும். இதையும் நீங்க உண்மைனு நினைச்சா நான் அடுத்து அரசியல்ல இறங்கலாம்னு இருக்கேன். எத சொன்னாலும் நம்பறாங்கடா இவுங்க ரொம்பஅஅஅ நல்லவங்கடா... ///

இந்த பொய்புரட்டு செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

ஏலேய், இங்கே பெங்களூரூலே நீ இருக்கிறப்போ பிராண்டின பாய்கூட இன்னும் சாட்சிக்கு இருக்குலே... :) //

மக்களே!!!
இதுக்கு நான் என்ன சொல்ல???

ராமண்ணே,
நான் பெங்களூர்ல பாய்ல படுக்க மாட்டேன்... பெட் தான் :-)

வெட்டிப்பயல் said...

// Sumathi said...

ஹாய் வெட்டி,

ஆஹா...ஏற்கெனவே காயற வெய்யில்ல மனுசன் மண்ட காஞ்சி போயி கிடக்கான், இதுல நீங்க வேற உங்க பங்குக்கு பிச்சுக்கோன்னு சொல்றீங்களே.... இது உங்களுக்கே நியாயமா? தர்மமா? //

அக்கா,
என்ன இருந்தாலும் இன்னும் மூணு நாள் தானே இருக்கு.. உங்களை எல்லாம் எந்த நிலைமைக்கும் தயார் செய்ய வேண்டியது என் கடமை இல்லையா???

அதுக்கு தான் ;)

வெட்டிப்பயல் said...

//Syam said...

உங்களுக்குள்ல கொல்டினு ஒரு அன்னியன் ஒளிஞ்சு இருக்கான்...அவன் தான் ரெமோ மாதிரி வந்து இந்த சித்து வேலை எல்லாம் பண்ணிட்டு போறதுன்னு நினைக்கறேன்...:-) //

நாட்டாமை,
அது அந்நியனில்லை.. அப்பரச்சித்துடு (தெலுகுல) :-)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//எனக்கு அரசியல் புரியாது அரசியல் தெரியாது :-)//

என்னவோ முதலமைச்சர் சீட்ட உனக்கு ஒதுக்கி வெச்சி வாங்க உக்காருங்கன்னு சொன்ன மாதிரி ஓவரா பீல் குடுக்கற...

ஆந்திராவில நீங்க என்ன செஞ்சிகிட்டு இருந்திங்க??

நீங்க எழுதற ஸ்டைல பாத்தா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கத்துகிட்டமாதிரி தெரியலயே.

இந்த நக்கலல்லாம் பாத்தா நீ தமிழ்நாட்டுல ஏதோ தென்னாற்காடு மாவட்டத்துல வளர்ந்த ஆளு மாதிரி இருக்குதே

உண்மைய சொல்லுங்க வெட்டி
உண்மைய சொல்லுங்க //

எலேய்,
என் பக்கத்து ஊர்ல இருந்து வந்துட்டு ஒனக்கு கேள்வி கேக்குதாடீ???

நான் என்ன பாட்ஷாவா??? என் பேரு பாலாஜி எனக்கு இன்னோரு பேரு இருக்கு "இந்திர சேனா ரெட்டி"னு கதை விடறதுக்கு ...

Simply Senthil said...

வெட்டி,

இந்த கதை பொய் என்றால், கொல்ட்டி கதை உண்மை என்று அர்த்தமாகிறது அல்லவா?

Simply Senthil said...

வெட்டி,

இந்த கதை பொய் என்றால், கொல்ட்டி கதை உண்மை என்று அர்த்தமாகிறது அல்லவா?

வெட்டிப்பயல் said...

//Kovai Mani - கோவை மணி said...

எத்தனை அப்பாவிங்க தமிழ்மணத்தில் இருக்காங்கனு பின்னூட்டத்தை பார்த்தா தெரியுது :)))
//
பின்னூட்டத்த இல்லை..
பதிவ பார்த்தானு சொல்லனும் (என்னை தானே சொல்றீங்க???)

// அப்படியே கட்சி ஆரம்பிச்சீங்கன்னா கோவை தொகுதி எனக்குத்தான், சரியா? //
செல்வன் அண்ணன் கேக்கலைனா உங்களுக்குத்தான் :-)

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...

தலைவா,

அதாவது என்னதான் தெலுங்கு, மலையாளம் என்று சொன்னாலும் பெயருக்கு கடைசியில் வரும் "ன்" காட்டிக் கொடுத்து விடுகிறதே?என்ன செய்ய?:)))

பாலாஜி மனோகருகாரு என்று பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்:))) //

தலைவா,
நீங்க ஈஸியா கண்டு பிடிச்சிட்டீங்க... என்ன பண்ண??

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

வெட்டி!

உனக்குள்ள இப்படி ஒரு சோகம் இருப்பது எனக்கு தெரியாம போச்சே...........

:-((((((((((((

நான் இன்னிக்கு மூட் அவுட்....

என்கிட்ட இது வரைக்கும் நீ சொல்லாம மறைச்சிட்டியே இந்த விசயத்தை....

பரவாயில்ல வெட்டி.... இப்பவும் ஒன்னும் ஆகல... அந்த பொண்ணு அட்ரஸ் இருந்தா கொடு... அட்ரஸ் இல்லாட்டியும் பரவாயில்லை, மெயில் ஐடி, போன் நம்பர், மொபைல் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை நம்பர் எதாச்சும் ஒன்னு கொடு, நான் போய் பேசி முடிச்சு வைக்குறேன். //

புலி,
நீயுமா இத நம்பற???

வாட் ய சேம்...

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

வெட்டி

எனக்கு ஒரே ஒரு டவுட்...

அது எப்படி உன் பதிவுக்கு வரவங்க மட்டும் இப்படி

அன்னிக்கு 330 சொன்ன, அதுக்கு ஒரு கூட்டம்.

இப்ப இங்க பாரு!

//இந்த மாதிரி நான் ஒரு தெலுங்கு பையனை காதலித்தாலாவது தெலுங்கு கத்துக்க சான்ஸ் இருக்கு. ;-) //

// 2 வருஷம் முன்ன கத்துகிட்டு தப்பில்லாம எழுதும் நீங்க எங்கே நான் எங்கே//

//u r more tamil than many of us.// //

புலி,
எல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா... எதுவும் சொல்லாதே!!!

வெட்டிப்பயல் said...

// பெத்த ராயுடு said...

இன்னும் நாலு நாளு இருக்கேப்பா!.
இப்பவே இந்தக் கூத்தா? //

ஏதோ நம்மால முடிஞ்சது...இப்பவே ஆரம்பிச்சி வெச்சாச்சி...

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

neenga solradhula oru dakaaltiz enakku first rendu para padichappaye therinjadhu.. adhu naala nera disci irukkanu theditten :P

nalla yosikkireeru vetti :P

LOL @ syam;s comment :) //

அருண்,
டகால்டியா இருந்தாலும் அதை படிச்சா ஃபீலிங் வரும்... நம்ம புலியே என்னமா ஃபீல் பண்ணிருக்கு பாரு...

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

//
இன்னும் நாலு நாளு இருக்கேப்பா!.
இப்பவே இந்தக் கூத்தா?

//

இன்னிக்கே இவ்வளவு அல்வான்னா, 1ம்தேதி எவ்வளவு குடுக்ப்பாறோ ?

- உண்மை //

அது அப்ப தான் தெரியும்...

இப்பவே உத்திரவாதமெல்லாம் கொடுக்க முடியாது ;)

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

\\
எனக்கு அரசியல் புரியாது அரசியல் தெரியாது :-)\\

அட்ரா....அட்ரா....
எப்பா சாமி....ரீல் அந்து போச்சு....போதும் நிறுத்து உன் அரசியல் விளையாட்டை ;-)) //

இது அரசியல் இல்லப்பா... ஆதங்கம்...

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//"கொல்ட்டி - சில திடுக்கிடும் உண்மைகள்" //

என்ன இது குங்குமம் வாங்கி விட்டீர்களா ரேஞ்சுக்கு ஓவர் அலப்பறைய குடுத்துகிட்டு இருக்கயே என்னா விஷயம்?? //

அடப்பாவி,
என்ன விஷயம்னு தெரியாமத்தான் முன்னாடி ரெண்டு கமெண்ட் போட்டியா???

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//இது நிஜமல்ல...கதை (பொய்னு நான் டைப் கூட பண்ண மாட்டேன். அவ்வளவு நல்லவன்) //

நீதான... யெப்பா சாமி
நீ ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா

என்ன மேன் அந்து போற அளவுக்கு ரீல்கள வாரி எறைச்சி போடற

உனக்கு பொய் சொல்ல தெரியாதா... அப்ப இவ்வளவு நாளா உசுக்குசுரா பழகிட்டு இருந்த புலிகிட்ட கூட உணமைய சொல்லலியே.. ஏன்
ஏன்
ஏன் //

புலிக்கு நான் சொல்லி தான் தெரியனும்னு இல்லை...

நீ இந்த நாரதர் வேலைக்கு எல்லாம் முயற்சி செய்யாதே!!! உனக்கு ஆப்பு தான் :-)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

ராசா, இந்த "பதிவுலையும்" எனக்கு நீ பதில் சொல்லாம விட்டேன் வை...

அப்பால உன்ன எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணிக்குறேன்.... //

புலி,
உனக்கு பதில் சொல்லாம போவேனா???

பதில் சொல்லியாச்சு ;)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

அநியாயமா அத்தன கமெண்டையிம் நிறுத்தி வைத்திருக்கும் வெட்டிப்பயல் ஆமா இனிமே என்னத்துக்கு அந்த பேரு, கொல்டிப்பயலுக்கு கோபியின் சார்பாக அவரது கண்டனங்கள். //

பண்ணியாச்சி!!! பண்ணியாச்சி

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

\நாகை சிவா said...
வெட்டி!

உனக்குள்ள இப்படி ஒரு சோகம் இருப்பது எனக்கு தெரியாம போச்சே...........

:-((((((((((((

நான் இன்னிக்கு மூட் அவுட்....\\

வெட்டி இதுக்கு எவ்வளவு சொலவு ஆச்சு ;-))) //

ஏன்??? re-imburse பண்ண போறியா???

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

அப்படியே எனக்கும் ஒரு சீட், ராஜ்ய சபாவில்....

ஜெயிக்க வச்சு, மினிஸ்டர் போஸ்ட்டும், அப்பால பிரதமர், ஜனாதிபதி ஆவது எல்லாம் என் தனிப்பட்ட திறமை... //

புலி,
அடுத்த ஐ.நா சபை தலைவரே நீ தான் :-)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//பி.கு: இதை நீங்கள் நம்புவதை பொறுத்தே என் வருங்காலம் பற்றிய முக்கிய தீர்மானமிருக்கும். இதையும் நீங்க உண்மைனு நினைச்சா நான் அடுத்து அரசியல்ல இறங்கலாம்னு இருக்கேன். எத சொன்னாலும் நம்பறாங்கடா இவுங்க ரொம்பஅஅஅ நல்லவங்கடா... //

இந்த பி.கு வ படிச்சும் பின்னூட்டத்துல வந்து குமுறி இருக்காங்களே அய்யா அவங்கள நெனச்சிதான் எனக்கு அழுகாச்சியா வருது. //

அவுங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கஅஅஅஅஅ

வெட்டிப்பயல் said...

// Shreya said...

hello Chellam!!
KANDA NAAL MUDAL nee POI solluraya?
Ivar 18 masathila tamil MOZHI kathukuvaram , AZHAGEYA THEE yodu DUET paduvaaram,DAYA nd night tamil practise pannuvaraam!!! Comments vaanguvathukku 1000 vazhigal irruku atharkaga intha punithamana kadal+tamil use pannathey---EX LOVER!! //

ஷ்ரயா அக்கா,
முதல்ல அந்த கதை படிங்க. அப்பறம் கமெண்ட் போடுங்க...

அதுல இருக்குற காதல் நான் பல பேருக்கு நடுவுல பார்த்த காதல்... சொல்லாமலே பிரியும் காதல். சொன்னவனுக்கு இருக்கற வலிய விட அது அதிகம்...

அத படிச்சிட்டு வந்து சண்டை போடுங்க... நான் எங்கயும் போக மாட்டேன்... I am the waiting ;)

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

வெட்டிகாரு,
இதிலென்னய்யா சோகமு?
ஊரு வுட்டு ஊரு வந்து, எளுதற்தலே ஒரு தப்பும் இல்ல நைனா.
நெஜமே செப்பிந்தி.

நானும் அச‌லூறுன்னு சொன்னா என‌க்கும் 60 பின்னூட்டும் கெடைக்குமா? //

பின் குறிப்பு படிக்கலையா???

வெட்டிப்பயல் said...

// Shreya said...

konjam originality use pannakoodatha ..athu enna "blog endral anubavikannum arayakoodathunu"
pammal k sambandam Dialogue? //

ஆமாங்க... அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி... அதனால போட்டுட்டேன்...

வெட்டிப்பயல் said...

//Syam said...

ஒரு ஒருத்தரா வெளில வராங்க...இப்போ தான் X லவ்வர் வந்து இருக்காங்க...இனி Y லவ்வர் வந்து என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் :-) //

நாட்டாமை,
ஒவ்வொருத்தரா வரட்டும்... பார்த்துக்கலாம் :-)

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நீங்க தெலுங்கர்தான் என்பதை நீங்க ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்திருக்கிறீர்கள்..\\

அய்யய்யோ.....என்ன கொடுமை இது சரவணா....
எல சீக்கிரம் பதிலை சொல்லு.....ஒரே குஷ்டமப்பா....ச்சீச்சீ....குழப்பமப்பா இந்த பதிவுல ;-( //

அது தாம்பா என் மதர் டங் தெலுகு. அதை தான் சொல்றாங்க... But I was born and brought up in TN...

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

\\தம்பி said...
//இது நிஜமல்ல...கதை (பொய்னு நான் டைப் கூட பண்ண மாட்டேன். அவ்வளவு நல்லவன்) //

நீதான... யெப்பா சாமி
நீ ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா

என்ன மேன் அந்து போற அளவுக்கு ரீல்கள வாரி எறைச்சி போடற

உனக்கு பொய் சொல்ல தெரியாதா... அப்ப இவ்வளவு நாளா உசுக்குசுரா பழகிட்டு இருந்த புலிகிட்ட கூட உணமைய சொல்லலியே.. ஏன்
ஏன்
ஏன்\\

ஏன்?
ஏன்?

பாவம் அந்த பச்ச புள்ளைய போயி ஏமாத்திட்டியே :-(( //

எலேய்,
இந்த நாரதர் வேலை எல்லாம் ஆகாது... அவ்வளவு தான் சொல்லிட்டேன்.

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

\\ Shreya said...
hello Chellam!!
KANDA NAAL MUDAL nee POI solluraya?
Ivar 18 masathila tamil MOZHI kathukuvaram , AZHAGEYA THEE yodu DUET paduvaaram,DAYA nd night tamil practise pannuvaraam!!! Comments vaanguvathukku 1000 vazhigal irruku atharkaga intha punithamana kadal+tamil use pannathey---EX LOVER!!\\\

மக்களே....இங்கே பாருங்கள் இவரின் லீலைகளை.....இதுக்கு மேலையும் உண்மைய சொல்லல.....அப்புறம் நான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-))) //

எலேய்,
இது வேற யாரோ ஒருத்தவங்களோட X-Lover...

ஏன்யா பீதிய கிளப்பறீங்க???

வெட்டிப்பயல் said...

// Rasigan said...

//
vetti said::

Sorry Rasigan... Really sorry...
//

ok unna mannikkanumna.. 'iru dhuruvam' mudivu sollitta unnai mannikalam... illati mudiyadhu... enna solra??? //

நீங்க சொல்லிட்டீங்க இல்ல...
சீக்கிரம் போட்டுடறேன்... இன்னைக்கு இந்த பதிவுக்கு பதில் சொல்லியே போயிடுச்சி :-))

வெட்டிப்பயல் said...

//G3 said...

April maasam aarambikkaradhukku munnadiyae indha ragalaiya.. adutha 1 maasathukku unga bloga konjam ushara thaan padikkanum pola irukku ;-) //

ஏதோ நம்மால முடிஞ்சதுக்கா...

வேற யார்கிட்டயும் நீங்க ஏமாற மாட்டீங்க இல்லை... எல்லாம் நம்ம ட்ரைனிங் தான் :-)

வெட்டிப்பயல் said...

// Shreya said...

SNEGEDHANE!! Snegedhane !! Ragasiya Snegedhane !!
Poduva yaaravathu comment adicha , nengal PULI madri paaiveergal!!
Endraiku yen POTTI PAMBHU pol adangivitteergall!!!!

----anbudan POTTI //

Sreyakka,
புலி இல்லைங்க நாங்க... நாங்க சிங்கம் :-)

புலி சூடான்ல இருக்கு...

இன்னைக்கு பொட்டி தட்ற வேலை அதிகம். அதனால கொஞ்சம் லேட்டாகிடுச்சி...

இப்பவும் மணி 1:30 :-(((

சரி பதில் சொல்லலைனா ஃபீல் பண்ணுவீங்களேனு உக்கார்ந்து பதில் சொல்லிட்டு இருக்கேன் :-)

வெட்டிப்பயல் said...

//Simply Senthil said...

வெட்டி,

இந்த கதை பொய் என்றால், கொல்ட்டி கதை உண்மை என்று அர்த்தமாகிறது அல்லவா? //

செந்திலு,
They are not mutually exclusive events.. They are independent events :-)

ராஜி said...

Padichaa anubavikkanum aarayakoodadhunu solli irukkeenga...

So unga sirukadhai inaikku thaan padichaen..Touchings...
Adhooda thodar kadhai adha vida touchings ....
Hats off to u if u have learnt Tamil in a short span or else hats of to ur imagination....Ipdi yosikkarathukkum thani thiramai venum pa...

Padipaanga unga blog aa avanga(paeyar vendamae)....

Anonymous said...

எப்படி இருக்கீங்க?

உங்களை பிரிஞ்சு நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு உங்களுக்கு தெரியுமோ தெரியாதோனு நினைச்சேன். ஆனா நீங்களும் என் அளவுக்கு கஷ்டப்படறீங்கன்னு இப்பதான் தெரியுது. Really I missed you a lot dear.

அப்ப திணறி திணறி நீங்க தமிழ் பேசினப்ப எனக்கு சந்தோஷமா இருக்கும். எனக்காக பேச கத்துக்கிட்டு இருக்கீங்கனு. ஆனா இப்ப நீங்க இவ்வளவு அழகா கதை எழுதி 2006 சிறந்த பதிவரா ஆனத பக்கத்துல இருந்து சந்தோஷமா பாக்க முடியாம போயிடுச்சேன்னு தினம் தினம் நான் அழுதுட்டு இருக்கேன்.

உங்களை மறக்க முடியாம நான் அழுது அடம் பண்ணி கல்யாணத்த நிறுத்திட்டேன். உங்க செல் நம்பர நீங்க மாத்திட்டதால உங்களை contact பண்ண முடியாம போயிடுச்சு. என்னைக்காவது நீங்க call பண்ணுவீங்கன்னு இன்னும் என் நம்பரை மாத்தாம வச்சிருக்கேன். உங்களை பாக்காம இங்க செத்துக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் வாங்க பாவா(இப்படி கூப்பிட்டாதானே உங்களுக்கு பிடிக்கும்).

-- சுமா

உண்மை said...

//
எப்படி இருக்கீங்க?

உங்களை பிரிஞ்சு ...............

....சீக்கிரம் வாங்க பாவா(இப்படி கூப்பிட்டாதானே உங்களுக்கு பிடிக்கும்).

-- சுமா
//

How many more you got ?
I am of the confused ....... escapuuuuuu !

நாகை சிவா said...

//புலி,
நீயுமா இத நம்பற???

வாட் ய சேம்... //

ஹுக்கும் மேல் படிச்சு நீ கமெண்ட் போடு பிரச்சனை இல்ல, அப்படி கீழ உள்ளதையும் படிச்சுட்டு நம்பர் கொடுப்பேனு பாத்தா, நீ எனக்கு லட்டு தயார் பண்ணுற... உன்ன...

நாகை சிவா said...

//புலிக்கு நான் சொல்லி தான் தெரியனும்னு இல்லை...//

இது... இது....

தம்பி அப்படி ஒரமா போய் நில்லு....

நாகை சிவா said...

//என்னைக்காவது நீங்க call பண்ணுவீங்கன்னு இன்னும் என் நம்பரை மாத்தாம வச்சிருக்கேன். //

இந்த நம்பர தான் நானும் இரண்டு நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன், கொடுக்க மாட்டேன் அடம் பண்ணுறான்.

நாகை சிவா said...

//அய்யய்யோ இதெல்லாம் புரியாத பச்ச புள்ளயாவே இருக்கேனே...

ஆராச்சும் காப்பாத்துங்களேன் //

பச்ச புள்ளயாவா, இதுக்கு தான் அடிக்கடி கீரை சாப்பிடக் கூடாதுனு சொல்லுறது.... கேட்டா தானே. பீட் ரூட் சாப்பிடுங்க, கலர் மாற சான்ஸ் இருக்கு.

வெட்டிப்பயல் said...

// ராஜி said...

Padichaa anubavikkanum aarayakoodadhunu solli irukkeenga...

So unga sirukadhai inaikku thaan padichaen..Touchings...
Adhooda thodar kadhai adha vida touchings ....
//
ரொம்ப

// Hats off to u if u have learnt Tamil in a short span or else hats of to ur imagination....Ipdi yosikkarathukkum thani thiramai venum pa...

Padipaanga unga blog aa avanga(paeyar vendamae).... //
ஏங்க நீங்க வேற!!!
அதெல்லாம் கதை...

நான் சின்ன வயசுல இருந்து தமிழ் தான் பேசறேன் :-)

நாகை சிவா said...

போன கமெண்ட் மாறி வந்துடுச்சு...

நாகை சிவா said...

//என் மதர் டங் தெலுகு.//

அப்ப உன் பாதர் டங் மலையாளமா?

-L-L-D-a-s-u said...

யோவ் வெட்டி , கதையைப் படித்து உருகி , அப்புறம் உம் சொந்தக்கதையைப் படிக்கும்போது ,காதலுக்கு இப்படியொரு சக்தியிருக்கான்னு நினைத்து , டி.ஆர் ரேன்ஞ்சுக்கு நிஜ்ஜ்ஜமாகவே கண்கலங்கி , பி.கு. வைப் பார்த்தால் ...........;அடப்பாவி ...

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

எப்படி இருக்கீங்க?

உங்களை பிரிஞ்சு நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு உங்களுக்கு தெரியுமோ தெரியாதோனு நினைச்சேன். ஆனா நீங்களும் என் அளவுக்கு கஷ்டப்படறீங்கன்னு இப்பதான் தெரியுது. Really I missed you a lot dear.

அப்ப திணறி திணறி நீங்க தமிழ் பேசினப்ப எனக்கு சந்தோஷமா இருக்கும். எனக்காக பேச கத்துக்கிட்டு இருக்கீங்கனு. ஆனா இப்ப நீங்க இவ்வளவு அழகா கதை எழுதி 2006 சிறந்த பதிவரா ஆனத பக்கத்துல இருந்து சந்தோஷமா பாக்க முடியாம போயிடுச்சேன்னு தினம் தினம் நான் அழுதுட்டு இருக்கேன்.

உங்களை மறக்க முடியாம நான் அழுது அடம் பண்ணி கல்யாணத்த நிறுத்திட்டேன். உங்க செல் நம்பர நீங்க மாத்திட்டதால உங்களை contact பண்ண முடியாம போயிடுச்சு. என்னைக்காவது நீங்க call பண்ணுவீங்கன்னு இன்னும் என் நம்பரை மாத்தாம வச்சிருக்கேன். உங்களை பாக்காம இங்க செத்துக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் வாங்க பாவா(இப்படி கூப்பிட்டாதானே உங்களுக்கு பிடிக்கும்).

-- சுமா

5:16 AM //

அடப்பாவிகளா!!!
உங்க அலும்பலுக்கு ஒரு அளவேயில்லையா???

சரி சுமா, உன் போன் நம்பர் இப்ப என்கிட்ட இல்லை சீக்கிரம் அனுப்பு...

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

//
எப்படி இருக்கீங்க?

உங்களை பிரிஞ்சு ...............

....சீக்கிரம் வாங்க பாவா(இப்படி கூப்பிட்டாதானே உங்களுக்கு பிடிக்கும்).

-- சுமா
//

How many more you got ?
I am of the confused ....... escapuuuuuu ! //

எலேய் உண்மை!!!

நானே confused...

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//புலி,
நீயுமா இத நம்பற???

வாட் ய சேம்... //

ஹுக்கும் மேல் படிச்சு நீ கமெண்ட் போடு பிரச்சனை இல்ல, அப்படி கீழ உள்ளதையும் படிச்சுட்டு நம்பர் கொடுப்பேனு பாத்தா, நீ எனக்கு லட்டு தயார் பண்ணுற... உன்ன... //

புலி,
அந்த நம்பர் தொலைஞ்சி போச்சி... என் செல் போன் இந்தியாவிலே விட்டுட்டு வந்துட்டேன்... அதனால நம்பர் இல்லை...

சுமாவே வந்து கொடுக்கும்.. எல்லாரும் போன் பண்ணுவோம்.

எலேய் யாராவது இதுதான் சான்சுனு ராமண்ணே நம்பர் கொடுத்துடாதீங்க :-)

பாவம் அவரு...

இராம் said...

//எலேய் யாராவது இதுதான் சான்சுனு ராமண்ணே நம்பர் கொடுத்துடாதீங்க :-)

பாவம் அவரு... //

ஏலேய் எந்தலையே எதுக்குய்யா இங்க உருண்டுறீங்க...???? ஏற்கெனவே நைட் 11 மணிக்கு போன் பண்ணி நான் பேய் பேசுறேன்னு நக்கல் பண்ணிட்டு திரியுறாய்ங்கே??? இதிலே இது வேறயா?? :)

சந்தோஷ் aka Santhosh said...

//ஆனா இதுல இருக்கற ஒரு மேட்டர் மட்டும் உண்மை...//
யப்பா நீ நல்லவனா இல்ல கெட்டவனா?

//எனக்கு அரசியல் புரியாது அரசியல் தெரியாது :-)//
ஆகா வெட்டி ரெடிஆயிட்டான்பா ரெடி ஆயிட்டான்.

//இது நிஜமல்ல...கதை (பொய்னு நான் டைப் கூட பண்ண மாட்டேன். அவ்வளவு நல்லவன்) //
ஆகா அவ்வுளவு நல்லவனா நீயி

Sumathi said...

ஹாய் கொல்டி,

நாலு நாளைக்கு முன்னாடியே இவ்வளவு கொலை வெறி ஏறிப் போச்ச்சே..!!! அடுத்த வாரம் என்னாகப் போகுதோ...!!!!

இம்சை அரசி said...

ஹலோ கொல்டி பாலாஜி!!! சாரி ஃபார் த லேட். ஏன்யா வர வர உன் அலம்பலுக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு....

அதெல்லாம் இருக்கட்டும் அந்த comment போட்டிருக்கற புள்ள ஆருன்னு உண்மைய சொல்லிடு

இம்சை அரசி said...

// ஏலேய் எந்தலையே எதுக்குய்யா இங்க உருண்டுறீங்க...???? ஏற்கெனவே நைட் 11 மணிக்கு போன் பண்ணி நான் பேய் பேசுறேன்னு நக்கல் பண்ணிட்டு திரியுறாய்ங்கே??? இதிலே இது வேறயா?? :)
//

இதுல ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே...

இம்சை அரசி said...

// //அய்யய்யோ இதெல்லாம் புரியாத பச்ச புள்ளயாவே இருக்கேனே...

ஆராச்சும் காப்பாத்துங்களேன் //

பச்ச புள்ளயாவா, இதுக்கு தான் அடிக்கடி கீரை சாப்பிடக் கூடாதுனு சொல்லுறது.... கேட்டா தானே. பீட் ரூட் சாப்பிடுங்க, கலர் மாற சான்ஸ் இருக்கு.
//

என்ன புலி நீ செஞ்ச சிக்கன சாப்பிட்டு உனக்கு மூளையே கொழம்பிடுச்சா??? அங்க கும்மில போடறத இங்க போட்டு வச்சிருக்க!!!

Sun said...

பின்னூட்ட ரவுசு சூப்பர். படிச்சி நாளெல்லாம் சிரிச்சிட்டிருந்தேன்

ஜி said...

யோவ் வெட்டி... நீ தெலுங்கு படம் விமர்சனம் எழுதும்போதே நெனச்சேன்..

கொல்டிகாருவா நீ... அப்போ எக்கச்சக்க வரதட்சணை கெடக்கும். நல்லா இரி... எனக்கும் ஏதாச்சும் கொல்டி சர்டிஃபிகெட் ஏற்பாடு பண்ணுப்பா..

ஜி said...

//உண்மைய சொல்லுங்க வெட்டி
உண்மைய சொல்லுங்க //

வெட்டியா? கொல்டியா?

ஜி said...

//தேன் கூடு போட்டில எனக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குனு ஒரு தடவை பரிசு கொடுக்கல... அதிகமா பாதிக்கப்பட்டவன் நான் தான் :-(((( //

என்னப்பா வெட்டி, எங்கள்தெல்லாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால, தேன் கூடு போட்டிக்கே போகல...

ஜி said...

ஏன்யா வெட்டி, கதை எழுதி ரொம்ப நாளாட்சி. அதுனால வெளம்பரம் கொடுக்கலாம் இப்படி ஒரு பதிவா.. நல்ல்லா இரிவே...

இராம் said...

// ஏலேய் எந்தலையே எதுக்குய்யா இங்க உருண்டுறீங்க...???? ஏற்கெனவே நைட் 11 மணிக்கு போன் பண்ணி நான் பேய் பேசுறேன்னு நக்கல் பண்ணிட்டு திரியுறாய்ங்கே??? இதிலே இது வேறயா?? :)
//

இதுல ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே...//

இம்சை,

எதுவும் உள்குத்தெல்லாம் இல்லிங்க... நான் ரொம்ப சின்னபையன்னு நீங்க ஏற்கெனவே சொல்லிருக்கீங்க??? அதுதான் அன்னிக்கு அந்த நைட்'லே வந்த போன்கால் பார்த்து பயந்துட்டேன்:(

அதிலே பேசின குரலை கேட்டு இன்னும் பயந்துட்டேன், நான் வேற பேய் கிட்டெயெல்லாம் முன்னபின்ன பேசுனதெல்லாம் இல்லிங்க.... குரலை கேட்டு பே'ன்னு வேற கத்திட்டேன்.. :(

நீங்க ஒருநாள் எனக்கு போன் பண்ணுங்க..... அதுவும் பகலிலே பண்ணுங்க... நானும் சிலகுரலை கேட்டு பயற்சி எடுத்துக்கிட்டேனா? நைட் வர்ற அந்த பேய்குரலுக்கு பயப்பட மாட்டேன்'லே.... :)

இராம் said...

//
அதெல்லாம் இருக்கட்டும் அந்த comment போட்டிருக்கற புள்ள ஆருன்னு உண்மைய சொல்லிடு//

இம்சையக்கோவ்,

இந்த கொல்டி(வெட்டி)பய சட்டையை பிடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டேன்கிறான்.... நீங்களாவது கேளுங்க...

அந்த சுமா எங்க இருக்குன்னு?? :)

இராம் said...

முக்கியமான கமெண்ட எதுக்கும் பதில் சொல்லாத வெட்டியை கன்னாபின்னாவென்று கண்டிக்கிறேன் :)

ஆதவன் said...

//எனக்கு அரசியல் புரியாது அரசியல் தெரியாது :-)//

//எனக்கு கவிதை பாடத் தெரியுமா?
தெரியாது!!!

இலக்கிய நயத்துடன் பேச தெரியுமா?
தெரியாது!!!

புத்திசாலித்தனமான கேள்விகளால் அடுத்தவர்களை விவாதத்தில் வெல்ல தெரியுமா?
தெரியாது

ஆனா... உங்க யார் மனசும் புண்படாத மாதிரி பேச தெரியும்!!!

அதுதான் நான் வேண்டுவதும்!!!
(Inspired from Iruvar - Ananthan's Speech)//

அரசியலுக்கு இது அத்திவாரமோ??
ஏதோ நடக்குது.... நடக்கட்டும் நடக்கடும்

veebee said...

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வெட்டி அவர்கள் வாழ்க

வெட்டிப்பயல் said...

//இராம் said...

//எலேய் யாராவது இதுதான் சான்சுனு ராமண்ணே நம்பர் கொடுத்துடாதீங்க :-)

பாவம் அவரு... //

ஏலேய் எந்தலையே எதுக்குய்யா இங்க உருண்டுறீங்க...???? ஏற்கெனவே நைட் 11 மணிக்கு போன் பண்ணி நான் பேய் பேசுறேன்னு நக்கல் பண்ணிட்டு திரியுறாய்ங்கே??? இதிலே இது வேறயா?? :) //

ஆன்லைன ஆவிகள்ல உங்க பேர் இருந்தா பேய் பண்ணாம வேற யார் பண்ணுவாங்க...

வெட்டிப்பயல் said...

//சந்தோஷ் aka Santhosh said...

//ஆனா இதுல இருக்கற ஒரு மேட்டர் மட்டும் உண்மை...//
யப்பா நீ நல்லவனா இல்ல கெட்டவனா?
//
ஹா ஹா ஹா...

//
//எனக்கு அரசியல் புரியாது அரசியல் தெரியாது :-)//
ஆகா வெட்டி ரெடிஆயிட்டான்பா ரெடி ஆயிட்டான்.
//
எங்க???

//
//இது நிஜமல்ல...கதை (பொய்னு நான் டைப் கூட பண்ண மாட்டேன். அவ்வளவு நல்லவன்) //
ஆகா அவ்வுளவு நல்லவனா நீயி //
ஆமாம்... இதுல என்ன சந்தேகம்???

nksenthil said...

Thambi,

Unnodaa Tamil paitruu ropathan polle..!!! Unnoda mother tongue telgu may be.. Appti mother tongue telgu ullavanga tamil nadill 30% malea ullanga.. Nangal tamilan thannu consider pannuketrom..

Vijaya Kanth
VaiKo
Arcot VeeraSamy
Many actor / VIP
Tamilans always consider anyone speaks/writes tamil as Tamilan in a broad mind.. Thats really advantage for someone non-tamilan to sabotage us too.. which is risk sometime.. But we appreciate others to learn and write in Tamil.. I bet, you should have read tamil from childhood that you might be hailing not from any citi.. because you are writing all the slangs of particular district too !!!!